Showing posts with label ஐபிஎல். Show all posts
Showing posts with label ஐபிஎல். Show all posts

Saturday, May 23, 2026

சென்னையை வெளியேற்றியது குஜராத்


 அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 66-வது லீக் ஆட்டம் நடைபெற்றது.சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்த்து விளையாடிய இதில் குஜராத் டைட்டன்ஸ் 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.  .

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  சென்னை கப்டன் ருதுராஜ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

குஜராத் அணிக்காக கப்டன் ஷுப்மன் கில்  , சாய் சுதர்ஷன் ஜோடி இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 125ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷுப்மன் கில், 37 பந்துகளில் 64 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களத்துக்கு வந்த பட்லர் உடன் இணைந்து 82 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் சாய் சுதர்ஷன்.

53 பந்துகளில் 84 ஓட்டங்கள் எடுத்து சாய் சுதர்ஷன் வெளியேறினார். ராகுல் தெவாட்டியா 0, வாஷிங்டன் சுந்தர் 7 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்கள் எடுத்தது குஜராத் அணி. ஜாஸ் பட்லர், 27 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

230 ஓட்டங்கள் என்ற இலக்கை சிஎஸ்கே விரட்டியது. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்தில்  ஓட்டம் எடுக்காமல் ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன். பவர்பிளே முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 58 ஓட்டங்கள் எடுத்தது சிஎஸ்கே. ருதுராஜ் கெய்க்வாட் 16, உர்வில் படேல் 0, மேத்யூ ஷார்ட் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த இன்னிங்ஸில் சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் உடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக மேத்யூ ஷார்ட் விளையாடினார்.

தொடர்ந்து சீரான இடைவெளியில் சிஎஸ்கே வீரர்கள் விக்கெட்டை இழந்தனர். கார்த்திக் சர்மா 19, ஷிவம் துபே 47 (17 பந்துகள்), அன்ஷுல் காம்போஜ் 19, பிரேவிஸ் 8, நூர் அகமது 1, ஸ்பென்சர் ஜான்சன் 0 ஓட்டங்கள் எடுத்தனர்.

13.4 ஓவர்களில்  சகல விக்கெற்களையும் இழந்த சென்னை 140 ஓட்டங்கள்  எடுத்தது.  இந்த தோல்வியின் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறி உள்ளது. இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய சிராஜ், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

தொடர்ந்து மூன்றாவது சீசனாக முதல் சுற்றோடு சிஎஸ்கே வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 சீசனில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு தொடர்ச்சியாக முதல் சுற்றோடு நடையை கட்டி வருகிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்கள் இந்த சீசனை முழுமையாகவும், பாதியிலும் விலகினர். நேதன் எல்லிஸ், கலீல் அகமது, ஆயுஷ் மாத்ரே, டோனி உள்ளிட்ட வீரர்கள் இந்த காய பட்டியலில் அடங்குவர்.

சாய் சுதர்சன் உடனடியாக தனது ஆட்ட வேகத்தை அதிகரிக்க, ஜிடி அணி 10வது ஓவரில் 100 ரன்களை எட்டியது. மேலும், சாய் சுதர்சனும் கில்லும் இணைந்து 10வது முறையாக மூன்று இலக்க ஓட்டங்களைக் கடந்தனர். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக 100-க்கும் மேற்பட்டஓட்டங்கள் பார்ட்னர்ஷிப்களை அமைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி , ஏபி டி வில்லியர்ஸ் ஜோடியை   சமப்படுத்தினர்.

 

 

Tuesday, May 19, 2026

ஜேமி ஓவர்டன் காயம்சென்னை அணிக்கு பாதிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஜேமி ஓவர்டனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதாகவும், மேலதிக பரிசோதனை   சிகிச்சை என்பனவற்றுக்காக  ஐக்கிய ராச்சியத்திற்குத் திரும்பியதாகவும் சி எஸ் கே  நிர்வாகம் புதன்கிழமை இரவு சமூக வலைதளங்களில் அறிவித்தது

சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது காயங்கள் நிறைந்த ஒரு பருவமாக அமைந்துள்ளது, மேலும் அந்த இங்கிலாந்து வீரர் அதன் சமீபத்திய பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்.

சமூக வலைதளப் பதிவில், 32 வயதான அவர் எவ்வளவு காலம் விளையாடாமல் இருப்பார் என்பது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. 

இந்த சீசனில்  துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தி, அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த ஓவர்டனுக்கு இது சிஎஸ்கே-வுக்கு ஒரு பெரும் பின்னடைவாகும்.   

Monday, May 18, 2026

10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அரிதான சம்பவம்

  .பி.எல் கிரிக்கெட் தொடரின் 55-வது லீக் போட்டி தரம்சாலா நகரில்  நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் ,பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தியது.

 இந்தப் போட்டியின் போது  நாணயச் சுழற்சியில்  வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. பஞ்சாப் அணிக்கு எதிராக பந்துவீசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி  ஒரு ஓவரை கூட சுழற்பந்து வீச்சாளரை வைத்து வீசாமல் 20 ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தே வீசியது. டெல்லி அணி சார்பாக மிட்சம் ஸ்டார்க், லுங்கி இங்கிடி, ஆகிப் நபி, முகேஷ் குமார், மாதவ் திவாரி ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தலா 4 ஓவர்கள் வீசினர். அக்சர் பட்டேல் இந்த போட்டியில் பந்து வீசவில்லை. இதன் மூலம் கடந்த 2016-ஆம் ஆண்டிற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு அணி மொத்தமாக 20 ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து வீசியது இதுவே முதல் முறையாக மாறியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத் அணி இப்படி ஒரு சாதனையை செய்து இருந்தது.

  ஐபிஎல் போட்டிகளில் இதுபோன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 20 ஓவர்களை வீசுவது 13வது முறையாக அரங்கேறியுள்ளது. அதோடு போட்டியின் இரண்டாம் பாதியில் பந்துவீசிய பஞ்சாப் அணியும் தாங்கள் வீசிய 19 ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தே வீசியது குறிப்பிடத்தக்கது

Saturday, April 25, 2026

மும்பையை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறியது சென்னை

 

ஐபிஎல் 2026 தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 103  ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.  வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில்  வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. சென்னை அணியிறன் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாகத் தொடங்கி 22 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் களம் புகுந்த சஞ்சு சாம்சன், மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

54 பந்துகளில் 101 ஓட்டங்கள் (10 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) விளாசிய அவர், இந்த சீசனில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார்.  ஐபிஎல்லில் சஞ்சுவின் 5 ஆவது சதமாகும் .வால்ட் பிரெவிஸ் , ஷிவம் துபே ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்க, சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 207  ஓட்டங்கள் எடுத்தது. 

208 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. பவர்பிளே முடிவில் அந்த அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. திலக் வர்மா (37) மற்றும் சூர்யகுமார் யாதவ் (20) ஜோடி சிறிது நேரம் போராடிய போதும், சென்னையின் சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹொசைன் தனது அசத்தல் பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பையின் வெற்றி கனவைத் தகர்த்தார்.

நூர் அகமது , ஜேமி ஓவர்டன் ஆக்கியோர்  தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில் மும்பை அணி 19 ஓவர்களில் 104 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.

இந்த அபார வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ரன் ரேட்டைப் பெருமளவு உயர்த்தியுள்ளதுடன், புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்

 

Sunday, April 19, 2026

10 ஓட்டங்களால் தோற்றது சென்னை


 ஐபிஎல் 2026 தொடரின் 27-வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10ஓட்டங்களால் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில்  வென்ற சென்னை கப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா மின்னல் வேகத் தொடக்கம் தந்து,   15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அவர் 22 பந்துகளில் 59 ஓட்டங்கள் (6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பிறகு ஹென்ரிச் கிளாசன் தனது அதிரடியைத் தொடர்ந்து 39 பந்துகளில் 59 ஓட்டங்கள் சேர்த்தார். சென்னை தரப்பில் ஜேமி ஓவர்டன் , அன்ஷுல் கம்போஜ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 194  ஓட்டங்கள் குவித்தது.

195  ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு ஆயுஷ் மாத்ரே 13 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்து அதிரடி காட்டினார்.  க‌ப்டன் ருதுராஜ் 19,சஞ்சு சாம்சன் 7 ,  மேத்யூ ஷார்ட் 34, சர்பராஸ் கான்  25  ஷிவம் துபே 21 ஜேமி ஓவர்டன் ஓட்டங்கள் எடுத்தனர். ஹைதராபாத் பவுலர் ஈஷான் மலிங்கவின் துல்லியமான பந்துவீச்சால் சென்னையின் வேகம் முடக்கப்பட்டது.

கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பிரபுல் ஹிங்கே வீசிய அந்த ஓவரில் சென்னை அணியால் 7  ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184  ஓட்டங்கள் எடுத்தது. ஹைதராபாத் தரப்பில் ஈஷான் மலிங்க 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.

  

Saturday, April 18, 2026

மும்பையை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது பஞ்சாப்

 

மும்பை வான்கடே மைதானத்தில்  நடந்த ஐபிஎல்  24-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது. குயின்டன் டி காக்  சதம்  அடித்தும் வெற்றி பெற முடியவில்லை  இந்தத் தோல்வியின் மூலம் மும்பை அணி தனது 4-வது தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற பஞ்சாப் கப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடியமும்பை  6 விக்கெற்களை இழஎது 195 ஓட்டங்கள் எடுத்தது. ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாடாத நிலையில், தொடக்க வீரராகக் களம் இறங்கிய குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடி 60 பந்துகளில் 112 ஓட்டங்கள் (8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவருக்குத் துணையாக நமன் திர் 50 ஓட்டங்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால், மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து  195 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

196 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு, தொடக்க வீரர்கள் பிரியான்ஷ் ஆர்யா (15) , கூப்பர் கான்னொலி (17) ஏமாற்றம் அளித்தாலும், அதன்பின் ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன் சிங் ,க‌ப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை பந்துவீச்சைச் சிதறடித்தனர். பிரப்சிம்ரன் சிங்  39 பந்துகளில் 2 சிக்ஸர்கள்   11 பவுண்டரிகளுடன் 80  ஓட்டங்கள் அடித்து  இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 66 ஓட்டங்கள் விளாசினார்.

பஞ்சாப் அணி 16.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்களை இழந்து  198 ஓட்டங்கள் எடுத்து இலக்கை எட்டியது. மும்பை தரப்பில் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் ஏதுமின்றி 41  ஓட்டங்களிக் கொடுத்தார். இம்பாக்ட் பிளேயராக வந்த அல்லாஹ் கஜன்பர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர் என்ற பெருமையை அர்ஷ்தீப் சிங்   பெற்றார்.

 

  

Saturday, April 11, 2026

ஐபிஎல் 26 சாதனைகளும், வேதனைகளும்


  

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில்  கடந்த வாரம் நடைபெற்ற போட்டிகளில் எட்டப்பட்ட புதிய சாதனைகளும், வேதனைகளும்.

நான்காவது முறையாக  ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்த டெல்லி 

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில்    தொடரின் 14-வது லீக் போட்டி டெல்லி ஜேட்லி மைதானத்தில்   குஜராத் டைட்டன்ஸ் ,டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

 இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி   ஒருஓட்ட‌ வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் டெல்லி அணி   முதலாவது தோல்வியை சந்தித்திருந்தது.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில்    தொடரின் 14-வது லீக் போட்டி டெல்லி ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ் ,டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற  போட்டியில் சாதனைகளின் விபரம்.

 இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 1 ஓட்ட‌ வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்று இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் டெல்லி அணி தங்களது முதலாவது தோல்வியை சந்தித்திருந்தது.

குஜராத்துக்கு எதிராக நடைபெற்ற  ப‌ரபரப்பான  போட்டியில் டெல்லி ஒரு ஓட்டத்தால் பரிதாபமாகத் தோல்வியடைந்தது.   முன்னரும்  மூன்று முறை ஒரு ஓட்டத்தால் டெல்லி  தோல்வியடைந்தது.

ஐ.பி.எல் போட்டிகளில் நான்காவது முறையாக ஒரு ஓட்ட‌ வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்த அணியாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓட்ட‌வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த டெல்லி அணி 2016 ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு  ஓட்டத்தால்  தோல்வியை சந்தித்திருந்தது. அதன்பின்னர் 2021 ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணிக்கெதிராக ஒரு  ஓட்டத்தால்  தோல்வியடைந்தது. 

நான்கு முறை ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை சந்தித்து அதிகமுறை ஐபிஎல் போட்டிகளில் ஒரு  ஓட்ட‌வித்தியாசத்தில் நான்கு முறை  தோல்வியை சந்தித்த அணி என்ற   மோசமான அணி எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்து 2 ஆவது வீரராக ஜாஸ் பட்லர்  சாதனை

 டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து யானது ஒரு ரன்   டெல்லி  கெபிடல்ஸ் அனி விளையாடியது.

போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக மூன்றாவது வீரராக களமிறங்கி விளையாடிய ஜாஸ் பட்லர் 27 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரிகள்,  5 சிக்ஸர்கள்  உட்பட 52 ஓட்டங்கள்  அடித்து ஆட்டமிழந்தார்.   இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் ஜாஸ் பட்லர் ஐ.பி.எல் போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவிற்கு அடுத்து இரண்டாவது வீரராக ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

 முதல் விக்கெட்டாக சாய் சுதர்சன் 12  ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறியதும் மூன்றாவது ஓவரில் பேதுடுப்பெடுத்தாடிய  ஜாஸ் பட்லர் பவர்பிளே ஓவர்களுக்குள் 5 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் துவக்க வீரர் அல்லாத ஒரு வீரர் பவர்பிளே ஓவர்களுக்குள் 5 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா பவர்பிளே ஓவர்களுக்குள் 6 சிக்ஸர்களை விளாசியிருந்த வேளையில் அவருக்கு அடுத்து தற்போது 5 சிக்ஸர்களை விளாசி இரண்டாவது இடத்தினை ஜாஸ் பட்லர் பிடித்துள்ளதுள்ளார்,

9  ஆண்டுகளின் பின்   வாஷிங்டன் சுந்தர் நிகழ்த்திய சாதனை

  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2017-ஆம் ஆண்டு அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் இதுவரை 69 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 558  ஓட்டங்கள் குவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் அவருக்கு இந்த ஆண்டு பிளேயிங் லெவனில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது நான்காவது வரிசையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி , 2 சிக்ஸர்கள் என 55 ஓட்டங்கள் குவித்து அசத்தியிருந்தார்.

இந்தப் போட்டியில்   வாஷிங்டன் சுந்தர் அடித்த அரை சதத்தின் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  9 ஆண்டுகளில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர்   டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். இதன்மூலம் அவரது 9 ஆண்டுகால ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில்  தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்துள்ள அவர் ஒருநாள் ,ரி20 போட்டியிலும் அரைசதம் அடித்துள்ளார்.

 

ரமணி

12/4/26

 

 

        

கடைசிப்பந்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது லக்னோ


  ஐபிஎல் சீசனின் 15-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ‘த்ரில் வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற லன்கோ முதலில் பந்து வீசியது.கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 4 க்கெட்டுகளை இழந்து  181  ஓட்டங்கள் எடுத்தது. கொல்கத்தா கப்டன் ரஹானே 41, ரகுவன்ஷி 45, கிரீன் 32, பவெல் 39  ஓட்டங்கள் எடுத்தனர்.

182  ஓட்டங்கள் என்ற இலக்கை   விரட்டிய லக்னோ 15.5 ஓவர்களில்  7 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்கள்  எடுத்து தடுமாறியது   மார்க்ரம் 22, மார்ஷ் 15, கப்டன் ரிஷப் பந்த் 10, நிக்கோலஸ் பூரன் 13, அப்துல் சமாத் 2, ஆயுஷ் படோனி 54, ஷமி 1 ஓட்டம்  எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி நான்கு ஓவரில் லக்னோ வெற்றிக்கு 54 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கானுடன்  இணைந்த   முகுல் சவுத்ரி அதிரடி காட்டினார். . கடைசி ஓவரில் லக்னோவுக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தில்  ஒரு ஓட்டம் எடுத்தார் ஆவேஷ். அடுத்த பந்தில் சிக்ஸர் விளாசினார் முகுல். 3, 4-வது பந்துகளில் ஓட்டம் எடுக்கபடவில்லி. 5-வது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தில் பை  ஓட்டத்தின்  மூலம் தனது அணியை வெற்றி பெற செய்தார்.

27 பந்துகளில் 54 ஓட்டங்கள்  எடுத்திருந்தார் முகுல். இதில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை அவர் அடித்தார்.. இந்த சீசனில் இது லக்னோ அணிக்கு 2-வது வெற்றியாக அமைந்துள்ளது. ஆட்ட நாயகன் விருதை முகுல் வென்றார். கொல்கத்தா அணி 4 ஆட்டங்களில் விளையாடி மூன்றில் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் உடன் அந்த அணி விளையாடிய லீக் ஆட்டம் மழை காரணமாக இரத்தானது.

அதிகம் அறியப்படாத முகுல் சௌத்ரியின் கடைசி நேர அதிரடி ஆட்டமான, 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54  ஓட்டங்கள், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக நம்பமுடியாத மூன்று விக்கெட் வெற்றியைப் பெற்றுத் கொடுத்தது. தந்தது .

   

Friday, April 10, 2026

ஒரு ஓட்டத்தால் டெல்லியிடம் தோற்றது குஜராத்


 ஐபிஎல் 2026 தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே 1  ஓட்ட  வித்தியாசத்தில் வீழ்த்தியகுஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற  டெல்லி கப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணியின் கே\ப்டன் சுப்மன் கில் 45 பந்துகளில் 70  ஓட்டங்களும் , ஜாஸ் பட்லர் 27 பந்துகளில் 52 ஓட்டங்களும் , வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 55  ஓட்டங்களும்  எடுத்தனர். இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 210  ஓட்டங்கள் என்ற வலுவான நிலையை  எட்டியது. டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

211 என்ற டினமான இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் நிதானமாக நின்று ஆடினார். அவர் 52 பந்துகளில் 11 பவுண்டரிகள் , 4 சிக்ஸர்களுடன் 92  ஓட்டங்கள் அடித்துஅணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார். பதும் நிசங்க 41  ஓட்டங்கள் எடுத்தார்.

ரஷித் கானின் அபாரமான பந்துவீச்சால் டெல்லி அணி  தொடர்ந்து விக்கெட்களை இழந்தது.    கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 12  ஓட்டங்கள் தேவைப்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனதால், டெல்லி அணி 1  ஓட்டவித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. குஜராத் தரப்பில் 4 ஓவர்களில்   17 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்

Thursday, April 9, 2026

மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான் முதலிடத்துக்கு முன்னேறியது

ஐபிஎல் 2026 தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. மழையினால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டி தலா 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

கெளகாத்தியில் நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற  மும்பை கப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 11 ஓவர்கள் மட்டுமே கொண்ட ஆட்டம் என்பதால், ராஜஸ்தான் தொடக்க வீரர்கள் முதல் பந்திலிருந்தே அதிரடியில் இறங்கினர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77  ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது பங்கிற்கு 14 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 39  ஓட்டங் கள் அடித்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து கு 150 ஓட்டங்கள்  எடுத்தது. மும்பை தரப்பில் அல்லா கசன்பர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

151  ஓட்டங் கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்குத் தொடக்கம் முதலே நெருக்கடி ஏற்பட்டது. ரோஹித் சர்மா (5) , சூர்யகுமார் யாதவ் (6) ஆகியோர் சொற்ப  ஓட்ட்டங்களில்  ஆட்டமிழந்த‌னர். ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (25) , நமன் தீர் (25) ஆகியோர் அதிரடியாக ஆட முயன்ற போதிலும், ராஜஸ்தான் பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. மும்பை அணி 11 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்கள் எடுத்து  தோல்வியடைந்தது.  ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா, நந்த்ரே பர்கர் ,ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் 2 தோல்விகளுடன் 7-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆட்டநாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார்.

  

மழையால் கைவிடப்பட்டது கொல்கத்தா பஞ்சாப் போட்டி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2026 லீக் ஆட்டம், விடாது பெய்த கனமழை காரணமாக  கைவிடப்பட்டது.

ஏடன் கார்டனில் நடைபெற்ற போட்டியில் நானயச் சுழற்சியில்  வெற்றி பெற்ற  கொல்கத்தா கப்டன் அஜிங்கியா ரஹானே முதலில்துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்.  பஞ்சாப் வேகப்பந்துவீச்சாளர் சேவியர் பார்ட்லெட் வீசிய இரண்டாவது ஓவரில், தொடக்க வீரர் ஃபின் ஆலன் (6) , கேமரூன் கிரீன் (4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கொல்கத்தா அணி 3.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 25  ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது. அப்போது கப்டன் ரஹானே 8 ஓட்டங்களுடனும், அங்க்ரிஷ் ரகுவன்ஷி 7  ஓட்டங்க‌ளுடனும் களத்தில் இருந்தனர்.

மழை நின்ற பிறகு மைதானத்தைச் சீரமைக்க ஊழியர்கள் கடுமையாகப் போராடினர். 5 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தை நடத்துவதற்கான கடைசி நேரமான 11:14 மணி வரை காத்திருந்தும், மைதானம் விளையாடத் தகுதியற்ற நிலையில் இருந்ததால் போட்டி இரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

ஐபிஎல் விதிகளின்படி, போட்டி இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையைச் சற்று உயர்த்தியுள்ளது.  இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யக் காத்திருந்த கொல்கத்தா அணிக்கு, இந்தப் புள்ளி ஒரு சிறிய ஆறுதலாக அமைந்துள்ளது.