Showing posts with label ஃபார்முலா 1. Show all posts
Showing posts with label ஃபார்முலா 1. Show all posts

Sunday, October 3, 2021

கட்டாரில் ஃபார்முலா 1 போட்டி நடத்த ஏற்பாடு

  ஃபார்முலா  1 எனும் கார் பந்தயப்போட்டி நவம்பர் மாத கட்டாரில் நடத்தபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  அல் கோரில் 2022 உலகக் கிண்ணப் போட்டி  தொடங்குவதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு நவம்பர் 21 ஆம் திக‌தி   ஃபார்முலா  1  10 ஆண்டு   ஒப்பந்தத்தில் கட்டார் கையெழுத்திட்டது.

கட்டார் கிராண்ட் பிரிக்ஸ் F1 அட்டவணையில் 22 பந்தயங்கள் நடைபெறும்.   2004 ஆம் ஆண்டு முதல் மோட்டோஜிபி நிகழ்வுகளுக்கு  கட்டார் அங்கீகாரம் பெற்றது.

"F1 உடனான ஒரு நீண்ட கால ஒப்பந்தத்தை உறுதி செய்யும் அதே வேளையில், நம் நாட்டில் ஒரு குறுகிய கால இடைவெளியில் ஒரு பந்தயத்தை நடத்தி, ஃபார்முலா 1 ஐ ஆதரிக்க முடிந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்," என்று   -மன்னை, கத்தார் மோட்டார் மற்றும்மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பு தலைவர் அப்துல்ரஹ்மான் அல் கூறினார்.

இதுபற்றி அவர்  மேலும் தெரிவிக்கையில்,

"இந்த அற்புதமான ஒப்பந்தம், அடுத்த பத்தாண்டுகளுக்கு கட்டார் ஃபார்முலா 1 மற்றும் மோட்டோஜிபி ஆகிய இருவற்றுக்கும் சொந்தமாக இருக்கும், இது உலகளாவிய மோட்டார்ஸ்போர்ட்டின் உச்ச நிகழ்வுகளாகும். எங்களிடம் பெருமைமிக்க மோட்டார்ஸ்போர்ட் வரலாறு உள்ளது, இது எங்களுக்கு அடுத்த அத்தியாயம். கட்டார் ஒரு F1 க்கான சிறந்த இலக்கு மற்றும் அனைத்து ஓட்டுநர்கள், குழுக்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களை விரைவில் வரவேற்க எதிர்பார்க்கிறோம் என்றார்.