Showing posts with label பெல்ஜியம். Show all posts
Showing posts with label பெல்ஜியம். Show all posts

Tuesday, June 18, 2024

ஸ்லோவாக்கியாவிடம் பெல்ஜியம் அதிர்ச்சித் தோல்வி


  ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் காட்டு குரூப் D இல் ஸ்லோவாக்கியாவிடம் பலம் வாய்ந்த  பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. வீடியோ மதிப்பாய்வு மூலம் இரண்டு ரொமேலு லுகாகு கோல்கள் நிராகரிக்கப்பட்டன.

ஸ்லோவாக்கியா ஏழாவது நிமிடத்தில் முன்னோக்கி இவான் ஷ்ரான்ஸ் ஒரு கோலை அடித்தார்.  62வது நிமிடத்தில்,  லுகாகுவின் முதல் 'கோல்' ஒரு வீடியோ மதிப்பாய்வில் ஆஃப்சைடு இருப்பதைக் கண்டறிந்து நிராகரிக்கப்பட்டது.

86வது  நிமிடத்தில் அடித்த கோல்  அடிக்க முன்னர் கையில் பட்டதால் நிராகரிக்கப்பட்டது. ஒரு போட்டியில் இரண்டு  கோல்கள் நிராகரிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கடந்த யூரோ கிண்ணப் போட்டியில்    லுகாகு ,  14 கோல்கள்  அடித்தார்.   பெல்ஜியத்திற்காக 85 கோல்களை அடித்துள்ளார் .

  டொமினிகோ டெடெஸ்கோவின் பயிற்சியின் கீழ் பெல்ஜியம் 15 ஆட்டங்களில் முதல் தோல்வியைச் சந்தித்தது. கொலோனில் சனிக்கிழமை மாலை நடைபெறும் ஆட்டத்தில் ருமேனியாவை எதிர்கொள்கிறது.

 

Tuesday, December 20, 2022

ஓய்வை அறிவித்த பெல்ஜியம் அணியின் கப்டன்


 ஐரோப்பிய நாடான பெல்ஜியம் உதைபந்தாட்ட அணியின் கப்டன் ஈடன் ஹஸார்டு [31] சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

 கடார்ரில் நடைபெற்றுவரும் 22வது உலகக் கிண்ண உதைபந்தாட்டத்  தொடரில் பெல்ஜியம் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. குரூப் எஃப்-இல் இடம்பெற்றிருந்த பெல்ஜியம், குரோஷியாவுடன் டிரா செய்தது. மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைச் சந்தித்தது. கனடாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் மட்டுமே 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சர்வதேசஉதைபந்தட்ட தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்து பெல்ஜியம் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியே.

முன்கள வீரரான ஈடன், 2008-ஆம் ஆண்டில் அணியில் சேர்ந்தார். இதுவரை 33 கோல்களை அடித்துள்ளார். 126 ஆட்டங்களில் அவர் தேசிய அணிக்காக விளையாடியிருக்கிறார்.   கடந்த உலகக் கிண்னத்தொ  தொடரில் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் ரஷ்யாவை வீழ்த்தியது இவரது தலைமையிலான பெல்ஜியம் அணி தான்.

இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "எனக்கு அடுத்த அணியை வழிநடத்த வீரர்கள் தயார்நிலையில் உள்ளனர். நான் எனது சர்வதேச கால்பந்து வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்திருக்கிறேன். உங்களது ஈடு இணையற்ற ஆதரவுக்காக நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். 2008-ஆம் ஆண்டு முதல் என் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு எனது நன்றி. உங்கள் அனைவரையும் நான் நிச்சயம் மிஸ் செய்வேன்" என்று   குறிப்பிட்டுள்ளார்.

செல்சீ கால்பந்து கிளப் அணியில் விளையாடியுள்ள ஈடன், இரு முறை ப்ரீமியர் லீக் மற்றும் ஐரோப்பா லீக் போட்டியில் அணியை வெற்றி பெற செய்ததில் பங்களித்திருக்கிறார். 2019 இல்  ரியல் மாட்ரிட் அணியில் விளையாடினார்.

 

Saturday, July 3, 2021

பெல்ஜியத்தை வீழ்த்தியது இத்தாலி பெனால்டியில் வென்றது ஸ்பெய்ன்

  

 

 

மியூனிக்கில் நடைபெற்ற யூரோ கிண்ண  கால்பந்து காலிறுதிப் போட்டியில்  2-1 என்ற கோல் கணக்கில் தரப்பட்டியலில்  முதல்  இடத்தில்  இருக்கும் பெல்ஜியத்தை வீழ்த்தி யூரோ 2020 அரையிறுதிக்கு முன்னேறியது இத்தாலி.

நிகோலோ பாரெல்லா 31வது நிமிடத்தில் ஒரு கோலையும் லாரென்சோ இன்சிக்னி 44வது நிமிடத்தில் வெற்றிக்கான 2வது கோலை அடிக்க பெல்ஜியம் அணியில் இடைவேளைக்கு சற்று முன் மேலதிக‌ நேரத்தில் நட்சத்திர வீரர் ரொமிலு லுகாகு பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.

பெல்ஜியம் அணியின் கோல்டன் தலைமுறை என அழைக்கப்படும் வீரர்களுக்கு இது பிரியாவிடை போட்டி என்றே இது கருதப்படுகிறது. கெவின் டி புரூய்ன், ரொமிலு லுகாகு, யூரி டைலிமான்ஸ், தோக்ரன் ஹசார்ட் இவரது சகோதரர் ஈடன் ஹசார்ட் ஆகியோர் அடுத்த யூரோ தொடரில் ஆடுவார்களா என்பது சந்தேகம். அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணப்  போட்டியில்  இவர்கள்  விளையாடுவார்கள்.

பெல்ஜியம் வீரர் ஈடன் ஹசார்டு காயத்தினால் வெளியேற இளம் வீரர் ஜெரமி டோக்கு களமிறங்கினார். பந்தை இத்தாலி கோல் பகுதிக்குள் பெனால்டி பகுதிக்கு அருகே இத்தாலியின் டை லாரென்சோ, மின்னல் ஆட்டம் ஆடிய ஜெரமி டோக்குவை தள்ளி விட்டார், இது பெல்ஜியத்துக்கு பெனால்டியைச் சாதகமாக்க போதுமான தள்ளலாக இருக்கவே, பெனால்டி கொடுக்கப் பட்டது. லுகாக்கு அதனை கோலாக மாற்றினார்.

இரண்டாவது பாதியிலும் இத்தாலியின் அபார ஆட்டம் தொடர்ந்தது. ஆனால் பெல்ஜியமும் சோடை போகவில்லை எதிர்த்தாக்குதல் தொடுத்தது. லுகாகு கோல் அடித்து விடுவேன் என்று தொடர்ந்து இத்தாலியை அச்சுறுத்தினார். 

சென்ட் பீட்டர்ஸ்பர்கில் நடைபெற்ற யூரோ தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

8வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஒரு கார்னர் கிக்கை   திசைத்திருப்பி விடும் முயற்சியில் சுவிட்சர்லாந்து வீரர் சகாரியா தங்கள் கோலுக்குள்ளேயே அடிக்க சேம்சைடு கோலினால் ஸ்பெயின் 1-0 என்று முன்னிலை பெற்றது.


 சுவிட்சர்லாந்து வீரர் ரிமோ ஃப்ராய்லருக்கு சிவப்பு காட்டப்பட்டு  வெளியேற சுவிஸ் அணி 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டது. 68வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின்   செட்ரான் ஷகீரி அபாரமாக ஒரு கோலை அடிக்க‌ முழு நேரத்தில் 1-1 என்று சமன் ஆகி கூடுதல் நேரத்துக்குச் சென்றது.

கூடுதல் நேரத்தில் ஸ்பெயினின் தாக்குதல் ஆட்டத்தில் சுமார் 12 கோல் முயற்சிகளை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் சோமர் அயராது தடுத்தார். ஸ்பெயினும் சில ஷாட்களை சொத்தையாக கோல் நோக்கி அடித்தனர். அல்லது வெளியே அடித்தனர். ஆனால் எம்பியும், டைவ் அடித்தும், பிரமாதமாகக் கணித்தும் சுவிஸ் கோல் கீப்பர் சோமர் ஒரு சுவராக அங்கு நிற்க ஸ்பெயினால்  கோல்  அடிக்க  முடியவில்லை.

பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் வீரர்கள் செர்ஜியோ பஸ்கெட்ஸ் மற்றும் ரோட்ரி ஆகியோர் பதற்றத்தில் கோல்களைத் தவற விட்டனர், ஒன்றை சோமர் அபாரமாகத் தடுக்க ஒரு ஷாட் கோல் போஸ்ட்டில் பட்டு திரும்பியது, ஆனால் ஸ்பெயின் அணியில் ஜெரார்ட் மொரீனோ, டேனி ஆல்மோ தங்கள் ஷூட்டை சரியாக கோலாக மாற்ற கடைசி ஷாட்டை மிகேல் ஆயர்சபால் கோலுக்குள் திணிக்க ஸ்பெயின் 3-1 என்று வெற்றி பெற்றது. மாறாக சுவிட்சர்லாந்தின் மேனுவெல் அகாஞ்சி மற்றும் ஃபேபியன் ஸ்கார் ஆகியோர் சொத்தையாக கோலை நோக்கி அடிக்க ஸ்பெயின் கோல் கீப்பர் உனய் சைமன் தடுத்தார், மற்றொரு இளம் வீரர், குழந்தை முக ரூபென் வார்கஸ் கோல் போஸ்டுக்கு மேலே அடித்து சொதப்பினார். ஒருவர் மட்டுமே கோல் அடிக்க 3-1 என்று ஸ்பெயின் போராடி வென்றது. 

பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் வீரர்கள் செர்ஜியோ பஸ்கெட்ஸ் மற்றும் ரோட்ரி ஆகியோர் பதற்றத்தில் கோல்களைத் தவற விட்டனர், ஒன்றை சோமர் அபாரமாகத் தடுக்க ஒரு ஷாட் கோல் போஸ்ட்டில் பட்டு திரும்பியது, ஆனால் ஸ்பெயின் அணியில் ஜெரார்ட் மொரீனோ, டேனி ஆல்மோ தங்கள் ஷூட்டை சரியாக கோலாக மாற்ற கடைசி ஷாட்டை மிகேல் ஆயர்சபால் கோலுக்குள் திணிக்க ஸ்பெயின் 3-1 என்று வெற்றி பெற்றது. மாறாக சுவிட்சர்லாந்தின் மேனுவெல் அகாஞ்சி மற்றும் ஃபேபியன் ஸ்கார் ஆகியோர் சொத்தையாக கோலை நோக்கி அடிக்க ஸ்பெயின் கோல் கீப்பர் உனய் சைமன் தடுத்தார், மற்றொரு இளம் வீரர், குழந்தை முக ரூபென் வார்கஸ் கோல் போஸ்டுக்கு மேலே அடித்து சொதப்பினார். ஒருவர் மட்டுமே கோல் அடிக்க 3-1 என்று ஸ்பெயின் போராடி வென்றது. 

Monday, June 28, 2021

செக். குடியரசு, பெல்ஜியம் வெற்றி போத்துகல் குரோஷியா தோல்வி

யூரோ2020  கிண்ண போட்டியில் செக். குடியரசும், பெல்ஜியமும் காலிறுதியில்  விளையாட தகுதி  பெற்றன. ரொனால்டோவின்  போத்துகலும், குரோஷியாவும்  தோல்வியடைந்து  வெளியேறின.

புடாபெஸ்ட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை2020 கிண்ணதொடரின் இறுதி -16 அணிகளுக்கு இடையேயான  சுற்றில்   சற்றும் எதிர்பாராத செக்.குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து காலிறுதிக்குள் நுழைந்தது.

செக்.குடியரசின் 2 கோல்களுமே இடைவேளைக்குப் பிறகுதான் அடிக்கப்பட்டன. 68வது நிமிடத்தில் டொமாஸ் ஹோல்ஸ் தலையால் முட்டி முதல் கோலை அடிக்க, 80வது நிமிடத்தில் பாட்ரிக் ஷிக் 2வது கோலை அடித்தார்.

ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் நெதர்லாந்து தடுப்பு மாவீரர் என்று கருதப்படும் மத்தைஸ் டெலித் பந்தை வேண்டுமென்றே கையால் பிடித்ததால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது நெதர்லாந்தின் வீழ்ச்சிக்குக் காரணமானது.

2014 உலகக் கிண்ணப் போட்டியில்  பங்கேற்ற பிறகு பெரிய உதைபந்தாட்டத்  தொடருக்குத் தகுதி பெற்ற நெதர்லாந்து நாக் அவுட் சுற்றில் பரிதாபமாக வெளியேறியது.ஆட்டத்தில் முதல் வாய்ப்பு செக். குடியரசுக்குத்தான் கிடைத்தது, 23வது நிமிடத்தில் அதன் டொமாஸ் சூசெக் டைவ் அடித்து தலையால் முட்டிய பந்து வெளியே சென்றது. 34வது நிமிடத்தில் இதைவிடவும் நல்ல கோல் வாய்ப்பு மீண்டும் செக். அணிக்குக் கிடைத்தது. ஆனால் மத்தைஸ் டெலித் திகைப்பூட்டும் விதத்தில் தடுத்தார். லூகாஸ் மசோபஸ்ட் அருகிலிருந்து அடித்த கோல் ஷாட்டை டெலித் அபாரமாகத் தடுத்தார்.

இடைவேளைக்கு முன்னதாக நெதர்லாந்து ஏறக்குறைய கோல் அடித்திருக்கும், மெம்பிஸ் டீப்பே அடித்த ஷாட் பாட்ரிக் வான் ஆன் ஹோல்ட்டிடம் வர அவர் இலக்கை தவற விட்டார்.

இடைவேளைக்கு பிறகு மீண்டும் நெதர்லாந்துக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, இம்முறை டோன்யெல் மலேனின் முயற்சியை செக். கோல் கீப்பர் வாக்லிக் முறியடித்தார். அதன் பிறகுதான் செக். குடியரசின் கோல் முயற்சியைத் தடுக்கும் நோக்கத்துடன் மத்தைஸ் டெலித் பந்தை கையால் பிடிக்க சிவப்பு அட்டை  காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். 2004க்குப் பிறகு நெதர்லாந்து வீரர் ஒருவர் சிவப்பு அட்டை  காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஸ்பெயின், செவில்லில் நடைபெற்ற யூரோ2020  இறுதி-16 அணிகள் நாக் அவுட் சுற்றுப் போட்டியில்  ஐரோப்பிய சாம்பியனான போத்துகலை, பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.போர்ச்சுகல் கடும் ஏமாற்றமடைந்தது, காரணம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடும் கடைசி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இது என்று கூறப்படுகிறது, மேலும் ரொனால்டோ 110 கோல்கள் அடித்து அதிக கோல்களுக்கான உலக சாதனையையும் நிகழ்த்த முடியாமல் போனது.

42வது நிமிடத்தில்  தோர்கன் ஹசார்டு அடித்த கோல்தான் பெல்ஜியத்தின் வெற்றி கோலாக அமைந்தது.முக்கியமான வீரர்களானகெவின் டி புருய்ன், ஈடன் ஹசார்டு ஆகியோர் காயமடைந்து வெளியேறினர்.

ஈடன் ஹசார்டு, கெவின் டி புருய்ன், ரொமிலு லுகாக்கு தான் பெல்ஜியத்தின் மும்மூர்த்திகள். ஆனால் இந்தப் போட்டியில் ஜென் வெர்ட்டோன்கன், ஆல்டர்வெய்ரல்ட், தாமஸ் வெர்மீலன் ஆகியோர் முன்னிலை பெற்றனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ படையை இவர்கள் கோல் அடிக்க முடியாமல் ஆட்கொண்டனர்.