Showing posts with label வழக்கு. Show all posts
Showing posts with label வழக்கு. Show all posts

Monday, August 23, 2021

கொடநாடு கொலை வழக்கால் கோபமடைந்த எடப்பாடி

 ஜெயலலிதாவின் அடையாளங்களில் ஒன்று கொடநாடு எட்டேட் பங்களா. ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக நீலகிரியில் உள்ள‌ கொடநாட்டுக்குச் சென்றால் சென்னையில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள் நிம்மதிப் பெரு மூச்சு  விடுவார்கள். ஜெயலலிதா மரணமடைந்த பின் னர் எடப்பாடி முதல்வராக இருந்தபோது கொடநாட்டில் கொலையும் கொள்ளையும் நடை பெற்றது.  அந்த  வழக்கின்  மறு விசாரணை எடப்பாடி பன்னீர்ச்செல்வத்தை அச்சப்பட  வைத்துள்ளது.

கொடநாடு  வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான சயந்தன், தனது  வாக்கு மூலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியின் பெயரைக் குறிப்பிட்டுள்ளதாக தகவல் ஒன்று  கசிந்துள்ளது.அந்த  வழக்கில் தன்னை சிக்க  வைக்க    ஸ்டாலினின் தலமையிலான  தமிழக அரசாங்கம் சதி செய்வதாக எடப்பாடியார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக  சட்டசபை தொடங்கியபோது கொடநாடு விவகாரத்தை விவாதமாக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  உறுப்பினர்கள் முயற்சித்தனர்.  தமிழக அரசு பொய்  வழக்கு போடுவதாக எழுதப்பட்ட பதாகைகளை சபையில்  தூக்கிப் பிடித்தனர். சட்டசபையின் நடவடிகையை  மீறிய  அவர்களின் செயலைக் கண்டித்த சபாநாயகர் அப்பாவு உடனடியாக அவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். அண்ணா  திராவிட  முன்னேற்றக் கழக  உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய  ஜனதாக் கட்சி  ஆகியவற்றின்  உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வெளியேறினர்.

மூன்று முறை முதலமைச்சராக கடமையாற்றிய ஓ.பன்னீர்ச்செல்வத்துக்கும்,  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கும் சட்டசபை நடவடிக்கைகள் அனைத்தும் நன்கு தெரியும். சபாநாயகரிடம்  முன் அனுமதி பெறாமல்  விவாதிக்க முயன்றதும் பதாகைகளை எடுத்துச் சென்ற‌தும் சட்டப்படி தவறு. தவிர, கொடநாட்டில் கொலை,கொள்ளை நடந்தபோது தமிழக  முதலமைச்சராக இருந்தவர்  எடப்பாடி பன்னீர்ச்செல்வம். ஜெயலலிதாவின் பங்களாவில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்து  தண்டனை பெற்றுக் கொடுத்திருக்க  வேண்டும்.  ஜெயலலிதாவின் ஆட்சி எனச்சொல்லி  அரியணையில் இருந்தவர்கள் மெத்தனமாக இருந்துவிட்டு  இப்போ அரசியல் பழிவாங்கல் என்கிறார்கள். எடப்பாடி முதலமைச்சராக இருந்த போதே குற்றவாளிகள் அவரின் பெயரைச் சொன்னார்கள். இப்போ  ஸ்டாலினின் அரசியல்  சூழ்ச்சியால்தான் தன‌து பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாக எடப்பாடி எடப்பாடி சொல்வதை அவரின் சகாக்கள் தலையாட்டி ஆமோதிக்கிறார்கள்.

2017-ம் ஆண்டு ஏபரல்  மாதம் 17 ஆம்திகதி நடைபெற்ற கொலை, கொள்ளை தொடர்பாக வாளையார் மனோஜ், சயான் உட்பட 10 பேரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். இவர்கள்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கின் விசாரணை நான்கு ஆண்டுகளாக ஊட்டியிலுள்ள நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளான சயான், வாளையார் மனோஜ் இருவரும்   இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது   குற்றம் சுமத்தி பேட்டியளித்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக சயான், வாளையார் மனோஜை ஆகிய இருவரும்  குண்டர் சட்டத்தில் கைது  செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டனர்.  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் இந்த இரண்டு பேருக்கும் நிபந்தனை பிணை வழங்கப்பட்டது.

டெஹெல்கா இணையதளத்தின் முன்னாள் ஆசிரியர் மத்தியூஸ் சாமுவேல், கொடநாடு பங்களா பற்றிய  ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்தார். கொடநாடு கொலை,கொள்ளை சம்பவத்துடன் அன்றைய முதலமைச்சர் எடப்பாடிக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். மத்தியூஸ்  சாமுவேலுக்கெதிராக  எடப்பாடியால்தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு அப்படியே உள்ளது. அரசு இயந்திரத்தின் மூலம் குற்றவாளிகளை முடக்கியதுபோல் பத்திரிகையாள‌ரை முடக்க முடியவில்லை. 

இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த வேண்டும் என சயான் தரப்பில் கோரப்பட்டிருந்த நிலையில், கூடுதல் விசாரணையை மேற்கொள்ள காவல்துறை முடிவு செய்தது. அதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள பழையை எஸ்.பி அலுவலகமான நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு அலுவகத்தில் பலத்த பாதுகாப்புடன்  சயானிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.

கொடநாடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை, இந்தக் குற்றச்சாட்டை சட்ட‌ப்படி சந்திக்கத் தயார்  என நேரடியாக எடப்பாடி சொல்லவில்லை. தமிழக அரசின் அரசியல் சதி எனத் தெரிவிக்கும் எடப்பாடி, சிபிஐ விசாரணையை கோரவில்லை. அல்லது இந்த  வழக்கை வேறு  மாநிலத்துக்கு மாற்றும்படி வேண்டுகோள் விடுக்கவில்லை.

கொடநாடு எஸ்டேட் பங்களாவைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து  வாசல்களிலும்  ஒன்றுக்கு  மேற்பட்ட காவலர்கள். 24 மணி நேர கண்காணிப்பு கமரா. இத்தனையையும் தாண்டி ஒரு நாள் அங்கு கொள்ளை நடை பெற்றது. ஒரு காவலர்   கொல்லப்பட்டார். இனொருவர்  காயமடைந்தார். கொள்ளையடிக்கப்பட்ட விபரம் எதுவும் உடனடியாகத் தெரியவரவில்லை. ஏராளமான பணம், நகை, வைரம்,தங்கக்கட்டி ,ஆவண‌ம் என பல  ஊகங்கள் ஊடகங்களில்  செய்தியாகின.

கொடநாடு கொள்ளையர்கள் பிடிபட்டதாக அறிவிக்கப்பட்டது. மூன்று கைக்கடிகாரங்கள், கிறிஸ்டல் பொம்மை என்பன கைபற்றப்பட்டன. பெரிய கொள்ளை என  வர்ணிக்கப்பட்ட சம்பவம் சிறு  கொள்ளையுடன் முடிவுபெற்றது. இது  அப்போதே பலத்த  சந்தேகத்தை ஏற்படுத்தியது.

கொடநாடு சம்பவம் நடைபெற்ற  சில‌  நாட்களில் அதன் சூத்திரதாரியான கனகராஜ் விபத்தில் மரண‌மானார்.  கனகராஜ் முன்னாள் முதல்வர்  பன்னீரின் ஊரைச் சேர்ந்தவர். அதே  நாள்    குடும்பத்துடன் சென்ற சயானின்   கார் மீது இன்னொரு  வாகனம்  மோதியதில் சயானின் மனைவியும், மகளும் பலியானார்கள். சயான் பலத்த காயங்களுடன் தப்பிவிட்டார்.கொடநாடு பங்களாவில் உள்ள கண்காணிப்பு கமராக்களை இயக்கும் தினேஷ்குமார் தற்கொலை செய்தார். கொடநாட்டில் கொலை,கொள்ளை நடந்த போது அங்குள்ள  கண்காணிப்பு கமராக்கள் அனைத்தும் செயலிழந்தன. கொடநாட்டு கொள்ளையின் போது  காயமடைந்த காவலாளி எங்கே  இருக்கிறார் எனத் தெரியவில்லை.

சினிமாப் படம் போன்ற மர்ம முடிச்சுகள் அனைத்தும் அவிழ்க்கப்பட வேண்டும் என  தேர்தல் பரப்புரையின் போது ஸ்டாலின் தெரிவித்தார். இதைத்தான் அரசியல் பழிவாங்கல்  என எடப்பாடி கூறுகிறார்.

தனது   ஆட்சிக்காலத்தில் அன்றைய  அமைச்சர்களின் முறைக்கேடுகள் பற்றிய  ஆவணங்களை   ஜெயலலிதா அங்கு பாதுகாப்பாக வைத்திருகலாம். அவை எல்லாம் கடத்தப்பட்டு  அழிப்பப்பட்டு விட்டன எனவும் சந்தேகம் உள்ளது. முறைப்படி விசாரணை நடந்தாலும்  அதை எப்படி இழுத்தடிப்பதென அரசியலாதிகள் நன்கு அறிந்து வைத்துள்ள‌னர்.

எடப்பாடியின் பெயர்  குற்ற‌வாளிகளின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால், அவர்  பதற்றமடைகிறார். ஜெயலலிதாவின்  கொடநாட்டில் நடந்த  சம்பவத்தின் உண்மைத்தன்மை தெரிய  வேண்டும் என்பது  அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்பு. தலைவர்கள் அதற்குதடையாக இருக்கிறார்கள்.

Sunday, August 15, 2021

ஸ்டாலினின் நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த அண்னா திராவிட முன்னேற்றக் கழகம்


 தமிழக அரசியலில் அரங்கேறிய இரண்டு சம்பவங்களால் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்  தலைவர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசின் நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குப் பதிவு என்பனவற்றால் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழத் தலைவர்கள் தம்மைப் பாதுகாக்க  வேண்டிய  நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக  நிதி அமைச்சர்  பழனிவேல் தியாகராஜன்  வெளியிட்ட  வெள்ளை அறிக்கையால் தமிழகத்தின் நிதி நிலமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புதிய  அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர், கஜானா காலியாகிவிட்டது எனச் சொல்வது வழமை முதலமைச்சர் ஸ்டாலின் அப்படிச்  சொல்ல விரும்பவில்லை. வெள்ளை அறிக்கையின் மூலம் கஜானா காலியாகிவிட்டதென்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளார்.

வெள்ளை அறிக்கை என்பது அரசின் வரவு செலவுகள் குறித்து வெளியிடப்படும் வெளிப்படையான அறிக்கை. உள்ளாட்சி, பொதுப்பணி, மின்சாரம் போக்குவரத்து என ஒவ்வொரு துறை சார்ந்து தனித்தனியாகவோ, அனைத்துத்துறை சார்ந்து ஒட்டுமொத்தமாகவோ இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். அதேபோல இந்த வெள்ளை அறிக்கை ஆண்டுக்கு ஒன்றோ ஒவ்வொரு ஆட்சிக் காலம் முடிந்த பின்போ வெளியிடப்படும். ஆனால், கடந்த 21 ஆண்டுகளாகப் பல காரணங்களுக்காக இந்த வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு அரசு வெளியிடாமல் இருந்தது. திராவிட  முன்னேற்றக் கழகஆட்சிக்காலத்தின் நிதி நிலை குறித்து அப்போதைய அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகஅரசின் நிதி அமைச்சர் பொன்னையன் வெளியிட்டதுதான் கடைசி வெள்ளை அறிக்கை


போக்கு வரத்து, மின்சாரம் ஆகிஇ  துறைகளில் ஊழல்,மோசடி நடைபெற்றுள்ளது. அரசுக்குச் சேர வேண்டிய  பணம் எங்கே போனது. அதைத் தேடிக்  கண்டு பிடித்து  மீட்க வேண்டும் என தமிழக  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். நிதி அமைச்சரின் வெள்ளை அறிக்கைபற்றிய விவாதம் ,விமர்சனம் என்பன விவாதப் பொருளாக மாறி சூடு பிடிப்பதற்கிடையில்  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின்  வீடு. அலுவலகம் ஆகியவற்றில்  இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியது

வேலுமணியின் சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், அவருடன் தொடர்புடையஒப்பந்தக்காரர்கள் ஆகியோரின் வீடுகள் அலுவலகங்கள் என்பனவும் சோதனைக்குத் தப்பவில்லை.  சென்னை, கோவை உள்ளிட்ட  சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர்  சோதனை செய்தனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில்  இலஞ்ச ஒழிப்புத் துறையினர்  சோதனை செய்தபோது, முதலில் என்னைத் தேடி வருவார்கள் என நினைத்ததாகத் தெரிவித்தார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே இப்படி ஒரு சம்பவம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா தொற்றினால் தமிழகம் அல்லல் பட்ட வேளையில் முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் சேவையே முக்கியம் எனக் கருதினார். அதனால், அதிரடி நடவடிக்கைக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை

தேர்தல் பிரசாரத்தின் போது ஊழல் செய்த  அன்றைய  அமைச்சர்கள் மீது ஸ்டாலின் சரமாரியாக குற்றம் சாட்டினார். அவர்களின்  ஊழல் பட்டியலுக்கு முக் கியத்துவம் கொடுத்தே ஸ்டாலின் பிரசாரம் செய்தார். வேலுமணியை ஊழல்மணி என அழைத்தார். இது ஸ்டாலினின் அரசியல் பழி வாங்கல் என அண்னா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் தெரிவித்தனர். தமிழக பாரதீய ஜனதா தலைவர்களும் ஸ்டாலினுக்கு எதிராகக் கருத்துச் சொல்லியுள்ளனர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி ஊழல் ஆட்சி என  அமித் ஷா முன்னர் தெரிவித்திருந்ததை அவர்கள்  மறந்து விட்டார்கள்.ஏனையஎதிர்க் கட்சித் தலைவர்கள்   வாயைத் திறக்காது நடப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ஸ்டாலின் முதலமைச்சராவதர்கு முன்னரே வேலுமணி மீது ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகஅமைப்புச் செயலாளர் பாரதியும், அறப்போர் இயக்கமும் கொடுத்த புகாரின் அடிப்படையில்  இலஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.  பாட்டாளி மக்கள் கட்சியும்  வேலுமணிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு சமர்ப்பித்துள்ளது.  இப்போது அண்ணா திராவிட முன்னாற்றக் கழகத்தின் தோழமைக் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறது

வேலுமணிக்கு எதிரான ஊழல் புகாரை 2017 ஆம் ஆண்டு ஆளுநரிடம் .பன்னீர்ச்செல்வம் கையளித்தார். இன்று  வேலுமணிக்கு ஆதரவாக .பன்னீர்ச்செல்வம் குரல் கொடுக்கிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியின் போது வேலுமணியின் ஊழல்களை ஆதாரத்துடன் பட்டியலிட்ட ஸ்டாலின் அதை தமிழக ஆளுநரிடம் கையளித்தார். அப்போது  வேலுமணியை விசாரணை செய்வதற்கு போதிய  ஆதாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.


முன்னாள் அமைச்சர் வியஜபாஸ்கரின்  வீட்டில்  இதே போல் சோதனை நடைபெற்ற போது எதுவித சலசலப்பும்  ஏற்படவில்லை. வேலுமணியின் வீட்டின் முன்னால் குவிந்த  தொண்டர்கள் பொலிஸாருடன் மல்லுக் கட்டினர். அவர்களுக்கு வேண்டிய  உணவு, குளிர்பானம் என்பன வழங்கப்பட்டன.

வேலுமணிக்கு எதிரான வழக்கை எதிர்கொள்வதற்காக வழக்கறிஞர் குழுவை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   அமைத்துள்ளது. வியஜபாஸ்கரை விட  வேலுமணி முக்கியமானவர் எனப்தை இது எடுத்த்க் காட்டுகிறது. இதேபோன்ற  சோதனைகள் தொடரும் என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   உணர்ந்துள்ளது.

எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்த போது தனது பதவியைப் பயன்படுத்தி உறவினர்கள் நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தங்களை அளித்தது தொடர்பான புகார் எழுந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து எஸ்.பி வேலுமணியிடம் விசாரணையும் நடத்தினர். முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பொறுப்பேற்றார். இவரது நிர்வாகத்தின் கீழ் தான் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் கோவை மாநகராட்சி ஆகியவை இருந்தன. எஸ்பி வேலுமணி 2014 முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கான ஒப்பந்தங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு முறைகேடாக தர அதிகாரத்தை பயன்படுத்தி உள்ளார். கோவை மாநகராட்சிக்கான அரசு ஒப்பந்தங்களையும் நெருக்கமானவர்களுக்கு தருவதற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை 464.02 கோடி ரூபாய் அளவிற்கு சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களும், 346.81 கோடி ரூபாய் மதிப்பிலான கோவை மாநகராட்சி ஒப்பந்தங்களும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு முறைகேடாக வழங்கியுள்ளார் என்பதே வேலுமணி மீதான குற்றச் சாட்டாகும்எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் என்பனவற்ரி நடைபெற்ற  அதிரடிச் சோதனை  ஆரம்பம் தான்  அடுத்து கே.டி.ராஜேந்திர பாலாஜி,சி.விஜயபாஸ்கர் - பி.தங்கமணி ஆகியோரின் பெயர்கள் இருப்பதாக த்கவல் கசிந்தது ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் வேலுமணி குறிவைக்கப்பட்டார்.

Saturday, October 11, 2014

தலைமை இல்லாது தடுமாறும் அ.தி.மு.க

வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்களினால் தமிழகத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சட்டத்தைப்பற்றி நன்கு அறிந்த தமிழக அமைச்சர்கள் இதனைக்கண்டும் காணாதிருக்கின்றனர். நீதிக்கு எதிராகப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அறிக்கை விட்டால் ஜெயலலிதாவை எதிர்பதாக அமைந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள்.


மத்திய மாநில அரசியல் தலைவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது இது போன்ற தொடர் போராட்டங்கள் நடைபெறவில்லை. மேல் முறையீட்டின் மூலம் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியினால்தான்ஜெயலிதாவுக்கு ண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அவரை உடடியாகபிணையில் விடுதலைசெய்யவேண்டும் என்று அண்ணா திராவிடமுன்னேற்றக்கத்தினர் குமுறுகிறார்கள்.ருணாநிதியின் அரசியல் ழிவாங்கல். காவிரிப்பிரச்சினையில்  குட்டு வைத்தஜெயலிதாவை ந்தர்ப்பம் பார்த்து ர்நாடம் ஞ்சித்துவிட்டது.பாரதீயதாக்கட்சியில் அரசியல் சித்து விளையாட்டு என்றரீதியில் அண்ணா திராவிடமுன்னேற்றக்கதினர் குற்றம் சாட்டுகின்றர்.






ஜெயலிதாவுக்கு எதிராக‌ 13 க்குகள் தாக்கல் செய்யப்பட்ட‌.ர் ரீவி க்கில் குற்றவாளியாகஅறிவிக்கப்பட்டார். அப்போது ந்தன்செயலில் மதர்மபுரியில் மூன்று மாணவிகள் ஸ்ஸுடன் சேர்த்து எரிக்கப்பட்டர்.டான்சி நிலபேரக்கில் எச்சரிக்கப்பட்டார். இரண்டு க்குகள் நிலுவையில் உள்ள‌. ஏனையக்குகளில் நிரராதிஎனவிடுதலை செய்யப்பட்டார்.சொத்துக்குவிப்பு க்கில் இருந்து ப்பமுடியாது என்பதை ஜெயலிதாஅறிந்திருந்தார். அதனால்தான் இந்தக்கை இழுத்தடித்தார்.

ருமானத்துக்கு அதிகமானம் எப்படி ந்தது என்பதைஜெயலிதா நிரூபிக்கவில்லை. சிகலா,இளசி,சுதாகன் ஆகியமூவருக்கும் எந்தவிதமானருமானமும் இல்லை. நிறுவங்கஆரம்பிப்பற்கானம் எங்கிருந்து கிடைத்தது என்பதைஅவர்களால் நிரூபிக்கமுடியவில்லை. ஜெயலிதாவின் து, உடல்நிலை, வி,அந்தஸ்து ஆகியற்றை காரம் காட்டி பிணைமனு கோரப்பட்டது. மாநிலமுதல்வர் இப்படி மோசடிசெய்தால் அவரின் கீழே உள்ளர்கள் செய்யமாட்டார்களா எனந்தேகம் எழுப்பியநீதிபதி பிணை ங்கறுத்துவிட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக்  த்தில் ஜெயலிதா ட்டும் தான் இப்படிச்செய்யலாம் ற்றர்கள் நினைத்துக்கூடப்பார்க்கமுடியாது  என்பது நீதிபதிக்குத்தெரியாது.


தீர்ப்பு ங்கப்படும் நாளன்று மிழமுதலமைச்சரான‌  ஜெயலிதா குற்றவாளிக்கூண்டில்   நின்றது  முதமைச்சர் விக்கு அவமானம். மிழத்துக்கு லைக்குனிவு. தொண்டர்கள் என்றபெயரில் மிழத்திலிருந்து சென்றர்கள்.நீதியைஅவதித்து விட்டர். ர்நாடபொலிஸாருடன் மிழஅமைச்சர்களும் ல்லுக்கட்டினர். மிழத்துக்கும் ர்நாடத்துக்கும் இடையேயானபிரச்சினையின் உச்சக்கட்டமாகஜெயலிதாவுக்கு ங்கப்பட்ட தீர்ப்பை அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தினர் பார்க்கின்றர்.


 அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தின் பெயரிலே அண்ணா இருக்கிறார்.தேர்தல் நெருங்கும் போது எம்.ஜி. ஆர் முன்னிலைப்படுத்தப்படுவார்.ன் செயல்களின் மெளனசாட்சியாகக் கொடியிலே அண்ணா ஒற்றை விரலைக்காட்டியடி இருக்கிறார். அண்ணா திராவிடமுன்னேற்றக்கம் என்றால் ஜெயலிதாதான் என்பதே இன்றையநிலை.அவரின் ண்ணசைவிலே தான் எல்லாம் டைபெறுகின்ற. க்குப்பின்  யார் லைவர் என்பதை லைவர்கள் சூசமாகத் தெரிவிப்பார்கள்.ஆனால் ஜெயலிதா அப்படி யாரையும் ழி த்தவில்லை. அதனால் அடுத்து என்னசெய்வது எனத்தெரியாமல் டுமாறுகிறது அண்ணா திராவிடமுன்னேற்றக் ம்.

ஜெயலிதாவைத் திருப்திப்படுத்தவேண்டும் என்றநோக்கிலே ம்பங்கள் டைபெறுகின்ற‌.ஜெயலிதாவுக்கு எதிரானதீர்ப்பு வெளியானதும் சிறைத்தண்டனை அதிகம் அபராதத்தொகை மிகமிகஅதிகம் என்றநிலை ரிடம் காணப்பட்டது. ஜெயலிதாவுக்குச் சார்பாகஇருந்தக்களின் நிலையை க்குச்சாதமாகப்பயன்படுத்தஅண்ணாதிராவிடமுன்னேற்றக் த்தினர்தறிவிட்டர். ஜெயலிதாவின் இடத்தை நிரப்பக்கூடியஆழுமை மிக்கஒருவர் அண்ணா திராவிடமுன்னேற்றக்கத்தில் இல்லை.
இதன் காரணமாக அடுத்து என்ன செய்வதெனத்தெரியாது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தடுமாறுகிறது. எதைச்செய்ய வேண்டும் எதைச்செய்யக்கூடாது என்ற விபரம் இல்லாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தடுமாறுகின்றனர்.

தமிழக முதலமைச்சராகச் சத்தியப்பிரமாணம் செய்த .பன்னீர்ச்செல்வம்,சிறையில் இருக்கும் குற்றவாளியிடம் ஆசிவேண்டிச்சென்றது. முதல்வர் பதவிக்கு இழுக்கு.அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் சிறை வாசலில் காத்திருந்து ஜெயலலிதாவின் மீதான தமது விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர்.

மாட்டுத்தீவன வழக்கில் 95 கோடி ரூபா ஊழல் செய்த லல்லுவுக்கு பிணைகொடுத்த நீதிமன்றம் வருமானத்துக்கு  அதிகமாக 66கோடிரூபா வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு பிணை கொடுக்கலாம் தானே என வாதிடுகிறார்கள். ரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் வுதாலாவின் பிணை இரத்துச்செய்யப்பட்டது ஜெயலிதாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.ஆசிரியநியத்தில்முறைகேடு செய்தகுற்றத்துக்காக  அவருக்கு 2003 ஆம் ஆண்டு 10 ருடசிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உடல் க்குறைபாட்டை காரம் காட்டி பிணை கோரினார். நீதிமன்றம் அவருக்கு பிணை ங்கியது. தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் அவர் ந்து கொண்டதால் பிணை இரத்துச்செய்யப்பட்டு டையும் டி உத்தவிடப்பட்டது. ஜெயலிதா பிணையில் வெளிவந்தாலும் பொது நிகழ்ச்சிகளிலோ ட்சிக் கூட்டங்களிலோ ந்து கொள்ளமுடியாது.


 ஜெயலிதாவுக்கு பிணைங்கஆட்சேபனை இல்லை என்று அரப்பு க்கறிஞர் கூறியும் நீதிபதி பிணை ங்கறுத்துவிட்டார். இது ஜெயலிதாவுக்கு பின்னடைவு. நீதிபதிக்கு எதிராகவும் நீதிமன்றத்துக்கு எதிராகவும் அண்ணா திராவிடமுன்னேற்றக் த்தினர் த்தும் போராட்டங்களை நீதித்துறை  அவதானித்து ருகிறது. மிழத்தில் டைபெறும் போராட்டங்களால் பொதுமக்கள்  பாதிப்படைந்துள்ளர். இதனால் அன்ணா திராவிடமுன்னேற்றக்கத்தின் எதிர்காலம் பாதிப்படையும் நிலை உள்ளது.இப்போதையஆட்சியை க்கவைக்க‌  வேண்டியமை  அண்ணா திராவிட முன்னேற்றக் த்தின் முன்னால் உள்ளது. இல்லையேல் லை தூக்கமுடியாதஅதபாதாளத்தில் ட்சி விழுந்து விடும்.