Showing posts with label அயர்லாந்து. Show all posts
Showing posts with label அயர்லாந்து. Show all posts

Monday, June 17, 2024

அடங்க மறுத்த அயர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்


 ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில்  3 விக்கெற்களால்  வெற்றி பெற்றது பாகிஸ்தான். சூப்பர் 8 க்குத் தகுதி பெறாத பாகிஸ்தான் ஆறுதல்  வெற்றிக்காகப் போராடியது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் பந்து வீசைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெட்த்தாடிய அயர்லாந்து 6.3 ஓவர்களில் 6 விக்கெகளை இழந்து 32  ஓட்டங்கள் எடுத்தது.   அயர்லாந்து 50 ஓட்டங்கலைத் தாண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் அப்போது கெரத் டிலானி அதிரடியாக விளையாடி அதிகபட்சமாக 31    அடுத்ததாக வந்த மார்க் அடைர் 15,  மெக்கார்த்தி 2  ஓட்டங்களில் ஆடமிழந்தனர்.

  அயர்லாந்து 100  ஓட்டங்களைத் தாண்டாது  என்று நம்பப்பட்டபோது.  கடைசி நேரத்தில் அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்ட ஜோஸ்வா லிட்டில் 22* (18) ஓட்டங்கள் குவித்தார். அவருடன் பெஞ்சமின் 5* (20) ஓட்டங்கள் எடுத்ததால் 20 ஓவரில் முழுமையாக தாக்குப் பிடித்த அயர்லாந்து  9  விக்கெற்களை இழந்து 106 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் சாகின் அப்ரிடி 3, இமாத் வாசிம் 3, முகமது அமீர் 2 விக்கெட்கள் எடுத்தனர்.

107 என்ற சுலபமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு  5 விக்கெற்களை இழந்து 57  ஓட்டங்கள் எடுத்து தோல்வியை  நோக்கிச் சென்றபோது  3வது இடத்தில் களமிறங்கிய கப்டன் பாபர் அசாம் நங்கூரமாக விளையாடினார். இருப்பினும் அவருடன் சேர்ந்து விளையாடிய அப்பாஸ் அப்ரிடி 17 ஓட்டங்ளுடன்  முக்கிய நேரத்தில் அவுட்டானார். அதனால் மீண்டும் வெற்றி கேள்விக்குறியான போது ஷாகின் அப்ரிடி 2 சிக்ஸருடன் 13* (5) ஓட்டங்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் பாபர் அசாம் 32* (34)  ஓட்டங்கள் எடுத்ததால் 18.5 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 111 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த உலகக் கிண்ணப் போட்டி  பாகிஸ்தானுக்கு வேதனையாகவும் ரணகளமாகவும் அமைந்தது என்றே சொல்லலாம். இருப்பினும் இப்போட்டியில் அடித்த 32*  ஓட்டங்களையும் சேர்த்து ரி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் கப்டனாக 549 ஓட்டங்கள் குவித்துள்ளார். ரிடி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ஓட்டங்கள் அடித்த  இந்தியாவின்கப்டன்    எம்எஸ் டோனி சாதனையை உடைத்த பாபர் அசாம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Sunday, April 9, 2023

வெளிநாட்டு மண்ணில் சதம் அடித்த முதல் அயர்லாந்து வீரர்



பங்களாதேஷுக்குச் சென்ற அயர்லாந்து  அணி,   ஒருநாள், ரி20 , டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் ரி20 தொடரை வங்காளதேச அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளும் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி   டாக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த அயர்லாந்து அணி சகல விக்கெற்களையும் இழந்து 214 ஓட்டங்கள் எடுத்தது.  முதல் இன்னிங்சை ஆடியபங்களாதேஷ்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ஓட்டங்கள் எடுத்தது.

இரண்டாவது 2வது இன்னிங்சில் ஆடி வரும் அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் கோம்மின்ஸ், மெக்கொல்லம்,க‌ப்டன் பால்பிரைன் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினாலும் ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் கூட்டணி சிறப்பாக ஆடியது. ஹாரி டெக்டர் 56 ஓட்டங்களில் வெளியேறினார்.

 லோர்கன் டக்கர் அபாரமாக ஆடினார்.தனி ஆளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 108 ஓட்டங்கள் அடித்தார்.  அயர்லாந்து அணிக்காக வெளிநாட்டு மண்ணில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை லோர்கன் டக்கர் படைத்துள்ளார்.  அயர்லாந்து அணி டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பிறகு தங்களால் முடிந்த அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது

அயர்லாந்து அணிக்காக 2வது டெஸ்ட் போட்டியில் ஆடும் ஆடும் லோர்கன் இதற்கு முன்பு ஆடிய டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து அசத்தியிருந்தார். 26 வயதே ஆன லோர்கன் டக்கர் தற்போது தான் ஆடிய 2வது டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். அயர்லாந்து அணிக்காக முதன்முதலாக சதம் அடித்த வீரர்  என்ற பெருமையை கெவின் ஓ ப்ரையன் தன்வசம் வைத்துள்ளார்.

 

Monday, March 13, 2023

பரிஸ் 2024 கிராமத்தில் ஏர் கண்டிஷனிங் வசதி இல்லை


 

  பிரான்ஸ் தலைநகரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் வசிக்கும் வாய்ப்பை எதிர்கொள்வதால், அயர்லாந்து தடகள வீரர்கள் பரிஸ் வெப்பத்திற்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஐரிஷ் செய்தித்தாள் தி 42 படி, அயர்லாந்தின் ஒலிம்பிக் கூட்டமைப்பு (ஓFஈ) விளையாட்டு வீரர்களை 2024 பாரிஸுக்கு முன் பயிற்சி தளங்களில் வெப்பமாக்க ஊக்குவிப்பதன் மூலம் பழக்கப்படுத்துகிறது .சுற்றுச்சூழல் முயற்சிகளின் ஒரு பகுதியாக விளையாட்டு வீரர்களின் அறைகளில் ஏர் கண்டிஷனிங் நிறுவ வேண்டாம் என்று பரிஸ் 2024 அமைப்பாளர்கள் தேர்வு செய்வதோடு இந்த நடவடிக்கை வந்துள்ளது.

கார்பன்-நடுநிலை விளையாட்டுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பிரெஞ்சு அதிகாரிகள், ஸெஇனெ-ஸைன்ட்-Dஎனிச் இல் உள்ள விளையாட்டு வீரர்களின் கிராமம் புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி குளிர்விக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.திட்டங்கள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன, ஆனால் பரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ அணுகுமுறையை ஆதரித்தார் மற்றும் குழுக்கள் தங்கள் சொந்த ஏர் கண்டிஷனிங்கிற்கு பணம் செலுத்தலாம் என்று பரிந்துரைகளை விமர்சித்தார்.

பரிஸ் 2024 ஒலிம்பிக்கில் கிட்டத்தட்ட 15,000 விளையாட்டு வீரர்கள் மற்றும் பிற ஊழியர்கள் கிராமத்தில் தங்க உள்ளனர்.சீன் நதிக்கு அடுத்துள்ள அதன் தளம் ஆற்றின் குளிர்ச்சியின் தாக்கத்திலிருந்தும் பயனடைகிறது என்று கூறப்படுகிறது.39 டிகிரி செல்சியஸ் வெப்ப அலையின் போது, கிராமத்தின் உட்புறம் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பராமரிக்க முடியும் என்று கூறப்படுகிறது.குளிரூட்டப்பட்ட கட்டிடத்துடன் ஒப்பிடும்போது கிராமத்தில் கார்பன் வெளியேற்றம் 45 சதவீதம் குறையும் என்று பிரெஞ்சு அதிகாரிகள் நம்புகின்றனர்.

Wednesday, February 22, 2023

வடிவேலை ஞாபகப்படுத்தும் அயர்லாந்து வீராங்கனை


 மகளிர் ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக    அயர்லாந்து விளையாடியபோது விக்கெர் கீப்பர் மேரி வால்ட்ரான், வித்தியாசமான ஹெல்மெட், ஹேர்ஸ்டைலுடன் விளையாடிய புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

கிறிக்கெற் விக்கெர்கீப்பர்கள் வழ்மையாக அணியும் தலைக் கவசத்துக்குப் பதிலாக அமெரிக்க  பேஃஸ்போல் வீரர்கள் பயன்படுத்தும் தலிக்கவசம் அணிந்திருந்தார்.  இதனால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர்.  கடந்தாண்டு  பாகிஸ்தானுக்கு எதிரான  போட்டியின்போதும்  மேரி வால்ட்ரான் தே தலைக் கவசத்தை அணிந்திருந்தார்,  வடிவேலின்  படத்துடன் மேரி வால்ட்ரானின் படத்தை இனைத்து மீம்ஸ்கள்  பதிவிடபப்டுகின்றன.

Tuesday, November 8, 2022

ரி20யில் சம்பியன்களை சிதறடித்த நெதர்லாந்து


 2024 ஆம் அண்டு நடைபெறும் ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் நேரடியாக விளையாடுவதற்கு நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.

 அமெரிக்கா , மேற்கு இந்தியத்தீவுகள் ஆகியவை இணைந்து 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் ரி20  உலகக்கிண்ணப் போட்டியை நடத்துகின்றன. அமெரிக்காவும்,  மேற்கு இந்தியாவும்   நேரடியாகத்   தகுதிபெற்றுள்ளன. அதேபோல், இந்தாண்டு நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணத் தொடரில் முதல்  8 இடங்களை பிடித்த அணிகளும் நேரடியாக தகுதி பெற்றன. மேலும், புள்ளிப்பட்டியல் அடிப்படையில், பங்களாதேஷ்,  ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிபெற்றன.

அமெரிக்கா,இந்தியா,இங்கிலாந்து,நியூசிலாந்து,பாகிஸ்தான்,அவுஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா,இலங்கை,நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ,பங்களாதேஷ் ஆகியன தகுதி பெற்றுள்ளன. இவை தவிர   அமெரிக்க தகுதி சுற்றில் ஒரு அணி, ஆப்பிரிக்க தகுதி சுற்றில் 2 அணிகள், ஆசிய தகுதி சுற்றில் 2 அணிகள், கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதி சுற்றில் ஒரு அணி, ஐரோப்பிய தகுதி சுற்றில் 2 அணிகள் என மொத்தம் மேலும்  8 அணிகளும் இதில் பங்கேற்க உள்ளன. இதையடுத்து வருகிற 2024 ரி20 உலகக் கிண்ணத் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க உள்ளன.

ரி20 உலகக்கிண்ண போட்டியில் அரையிறுதி வாய்ப்பை 99% உறுதி செய்த தென்னாப்பிரிக்காவை அதனுடைய கடைசிப் போட்டியில் எதிர்கொண்ட   நெதர்லாந்து யாருமே எதிர்பாராத வகையில் 13 ஓட்டங்ள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக் கிண்ணத்தில் இருந்து  வெளியேற்றி அதிர்ச்சியை கொடுத்தது. வரலாற்றில் காலம் காலமாக உலகக் கோப்பையில் இது போன்ற முக்கிய தருணங்களில் சொதப்பி வெளியேறும் தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒருமுறை தன்னைச் சோக்கர் என்பதை நிரூபித்து வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தாலும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது.

ஸிம்பாப்வேவிடம் ஒரு ஓட்டத்தால்  தோற்று அரை இறுதி வாய்ப்பையும் 90% நழுவ விட்டது. ஒரு கட்டத்தில் கதை முடிந்ததாக கருதப்பட்ட  பாகிஸ்தான்  அதற்கடுத்த 2 வெற்றிகளை பதிவு செய்த நிலையில் எதிர்பாராத விதமாக தென் ஆப்பிரிக்கா வெளியேறியதால் கடைசி போட்டியில்  பங்களாதேஷைத் தோற்கடித்து அதிர்ஷ்டத்துடன் அரையிறுதிக்கு தகுதி பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல நெதர்லாந்து மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும் வழியையும் ஏற்படுத்தி விட்டு நாடு திரும்பியுள்ளதால் அந்த அணிக்கு பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

சம்பியன் கிண்ணத்தைத்  கோப்பையை தக்க வைக்கும் அணியாக கருதப்பட்ட நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா ரன் ரேட் அடிப்படையில் நூலிழையில் அரை இறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறி அதிர்ச்சியை சந்தித்தது.

 

 

Thursday, November 3, 2022

அயர்லாந்து வீரரின் ஹட்ரிக் சாதனை


நியூசிலாந்துக்கு எதிராக அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் லிட்டில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹ ட்ரிக் சாதனை செய்துள்ளார்.யுள்ளார்.

நியூசிலாந்து இன்னிங்ஸின் 18வது ஓவரின் 2வது, மூன்றாவது, நான்காவது பந்துகளில் முறையே  கேன் வில்லியம்சன் (61  ), ஜேம்ஸ் நீஷம் (0), மிட்செல் சான்டர் (0) ஆகியோரை வீழ்த்தி அவர் ஹட்ரிக் விக்கெட்களை எடுத்துள்ளார்.

நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் எடுத்தது

Monday, October 31, 2022

2011 இல் நடந்தது 2022 இல் நடக்குது அதிசய ஒற்றுமை

2011ம் ஆண்டு ஓரியோ பிஸ்கட் அறிமுகப்படுத்தப்பட்ட போது, உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றது. இதே போல இந்தாண்டு ஓரியோவின் புதிய வடிவ பிஸ்கட்டை டோனி வெளியிட்டார். அப்போது அவர், இந்தாண்டு சில சுவாரஸ்யங்கள் நடக்கலாம் என சூசகமாக கூறியிருந்தார். அதே போலவே இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை  வென்றது. 

 2011ம் ஆண்டு இங்கிலாந்து அணியை முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அயர்லாந்து வீழ்த்தியிருந்தது. அப்போது இந்தியா சம்பியனானது. அதே போல இந்தாண்டு இங்கிலாந்து அணியை முதல் முறையாக ரி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து வீழ்த்தியுள்ளது. இதனால் இந்திய அணியின் பக்கம் கவனம் திரும்பியுள்ளது. 

 2011ம் ஆண்டு லீக் சுற்றில் இந்திய அணியை தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தியது  அந்த தொடரில் இந்தியா பெற்ற ஒரே ஒரு தோல்வி அதுதான். இதே போல தற்போதும், லீக் சுற்றில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிடம் தோற்றுள்ளது. அதுவும் முதல் தோல்வியாகும். இதனால் 2011ம் ஆண்டு நடந்த அதே சம்பவங்கள் மீண்டும் ரிப்பீட் ஆவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Wednesday, October 26, 2022

மழையால் இங்கிலாந்தை வென்றது அயர்லாந்து


 மெல்போர்னில் இன்று நடந்த போட்டியில்  குரூப்1 பிரிவில் உள்ள இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின மழையால் 45 நிமிட நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. ஆனால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. இங்கிலாந்து கப்டன் ஜாஸ்பட்லர் நாணயச் சுழற்சியில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அயர்லாந்து கப்டன் பல் பிரீனும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் ஓவரில் அயர்லாந்து அணியால் 3 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 2-வது ஓவர் வீசப்பட்ட போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 9 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது. மழை விட்டதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

 இங்கிலாந்து வீரர்கள் பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது. கப்டன் பல்பிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை சேர்த்தார். அயர்லாந்து அணி 19.2 ஓவரில் சகல விக்கெற்களையும் இழந்து  157    ஓட்டங்கள் எடுத்தது.  பால்பிரீன் அதிகபட்சமாக 47 பந்தில் 62 ஓட்டங்களும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), டக்கர் 27 பந்தில் 34 ஓட்டங்களும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்ர். இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட், லிவ்விங்ஸ்டோன்  ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், , சாம்கரண் 2 விக்கெட்களையும் ,பென்ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டையும்  கைப்பற்றினர்.

 158 ஓட்டங்கள் என்ற  இலக்குடன்  இங்கிலாந்து ஆடியது. க்ச்ப்டனும், தொடக்க வீரருமான பட்லர் முதல் ஓவரில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஓட்டங்கள் எடுத்தது.   மொய்ன் அலியுடன்    லிவிங்ஸ்டன் ஜோடி சேர்ந்தார். மொய்ன் அலி அதிரடியாக விளையாடி 12 பந்தில் 24 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார். அப்போது மழை குறுக்கிட்டது. இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதனால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 


Sunday, October 23, 2022

அயர்லாந்தை வென்றது இலங்கை

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அயர்ர்லாந்துக்கு எதிரான போட்டியில் 9விக்கெட்களால்  இலங்கை வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து  முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 128  ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை 15  ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 133  ஓட்டங்கள் எடுத்தது

அயர்லாந்தின் பலமான ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி ஆரம்பத்திலேயே பிரிந்தது.   ஆண்டி பால்பிரின் 1 (5) , இலங்கை மிடில் ஓவர்களில் டூக்கர் 10 (11), குர்ட்டிஸ் கேம்பர் 2 (4), ஜார்ஜ் டாக்ரெல் 14 (16), கெராத் டிலானி 9 (6) என முக்கிய  வீரர்கள்  சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.  அயர்லாந்துக்கு அதிகபட்சமாக ஹேரி டெக்டர் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 45 (42) ஓட்டங்களும் தொடக்க வீரர் பால் ஸ்டெர்லிங் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 34 (25) ஓட்டங்களும் எடுத்தனர்.  கட்டுக்கோப்பாக பந்து வீசிய இலங்கை சார்பில்  வணிந்து ஹசரங்கா   மஹீஸ் தீக்சனா ஆகிய சுழல் பந்து வீச்சு ஜோடி தலா 2 விக்கெட்டுகளை எடுத்து.

  இலங்கையில் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி அதிரடியாக விளையாடியது.   63 ஓட்டங்கள் எடுத்தபோது   டீ சில்வா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 31 (25) ஓட்டங்களுடன் வெளியேறினார்.  தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 5 பவுண்டரி 3 சிக்சருடன் அரை சதமடித்து 68* (43) ஓட்டங்கள் விளாசினார். அவருடன் பொறுப்பாக துடுப்பெடுத்தாடிய    சரித் அஸலங்கா   2 பவுண்டரியுடன் 31* (22) ஓட்டங்கள் எடுத்தார்.  15 ஓவரிலேயே 133/1  ஓட்டங்கள் குவித்த இலங்கை 9 விக்கெட் வித்தியாசத்தில்   வெற்றி பெற்றது.  குஷால் மென்டிஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Friday, September 17, 2021

நாய்க்கு விருது வழங்கிய ஐசிசி

ஐசிசி என்கிற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதாந்திர சிறந்த வீரர், வீராங்கனை விருதோடு மாதத்தின் சிறந்த நாய் என்ற ஒரு விருதையும் ஓகஸ்ட்டில் சேர்த்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆகஸ்ட் மாத சிறந்த வீரராக ஜோ ரூட் தேர்வு செய்யப்பட மகளிர் கிரிக்கெட்டில் அயர்லாந்தின் ஈமியர் ரிச்சர்ட்சன் தேர்வு செய்யப்பட்டார், ஆனால் இவர்களோடு புதிதாக ஒரு ஜீவனும் ஆகஸ்டின் சிறந்த கிண்ண அரையிறுதியில் மைதானத்திற்குள் ஓடிவந்த நாய்க்கும் சிறந்த நாய் விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போட்டியின் போது இந்த நாயின் பந்தைப்  பிடிக்கும்  முயற்சியை பாராட்டி இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அயர்லாந்து கிரிக்கெட்டில் இந்த நாய்தான் சிறந்த பீல்டர் என்று வர்ணிக்கப்பட்டது. மேலும் பிளேயர் ஆஃப் மொமண்ட் விருதையும் இந்த நாய் தட்டிச் சென்றது. ஐசிசி இந்த வணக்கத்துக்குரிய நாயின் புகைப்படத்தை  தன் அதிகார பூர்வ ட்விட்டரில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளது. இந்த மாதம் விருது கூடுதல் வீரருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ஐசிசி தற்பெருமையுடன் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நாயின் அசாத்தியமான ஓடும் திறன் என்று குறிப்பிட்டு ஐசிசி விதந்தோதியுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் ஐசிசி வெளியிட்டுள்ளது. பந்தை உண்மையில் அந்த நாய் பீல்டிங் செய்து அதிசயிக்க வைத்தது.

Wednesday, September 15, 2021

பந்துக்காக நாயை விரட்டிய வீராங்கனைகள்

 கிரிக்கெட் போட்டி நடக்கும் போது ரசிகர்கள் அத்துமீறி நுழைந்து வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்குவது,புகைப்படம் எடுப்பது, பேசுவது போன்ற சம்பவங்களைத்தான் இதுவரை கேட்டிருந்தோம். ஆனால், ஒரு நாய் உள்ளே புகுந்து பந்தை எடுத்துச்சென்ற வினோதமான சம்பவம் அயர்லாந்தில் நடந்துள்ளது.

பெல்பாஸ்ட் நகரில் அயர்லாந்து உள்நாட்டு மகளிர் ரி20 போட்டிகள் நடந்து வருகின்றன. பிரடி , சிஎஸ்என்ஐ அணிகளுக்கு இடையிலான அரையிறுதிஆட்டத்தின் போதே நாய் உள்ளேபுகுந்தது.

மழை காரணமாக ஆட்டம் தடைபட்டு டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 12 ஓவர்களில் 74 ஓட்டங்கள் எனும் இலக்கு சிஸ்என்ஐ  அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. சிஎஸ்என்ஐ அணி 6 விக்கெட் இழப்புக்கு 47 ஓட்டங்கள்சேர்த்திருந்தது. 21 பந்துகளில் 27 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இக்கட்டான கட்டத்தில் சிஎஸ்என்எல் அணி இருந்தது.

9 வது ஓவரை பிரெடி அணி பந்துவீச்சாளர் வீசினார், வீராங்கனை அபி லெக்கி துடுப்பெடுத்தாடினார்  செய்தார். 3-வது பந்தை வீசியபோது அபி லெக்கி பந்தை   தட்டிவிட்டு   ஓடினார்.

ள‌த் தடுப்பா ள‌ர் பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் ராச்செல் ஹெப்பர்னிடம் வீசினார். அப்போது  ஒரு நாய்க்குட்டி அவ்ருடன் சேர்ந்து  ஓடியது.  பந்தைப் பிடித்து விக்கெட் கீப்பர் ஹெப்பர்ன் ஸ்டெம்பில் அடிக்க முயன்றபோது பந்து தவறியது.

  அந்த நாய் பந்தைக் கவ்விக் கொண்டு மீண்டும் பார்வையாளர் மாடத்தை நோக்கி ஓடியது. இதைப் பார்த்த மைதானத்தில் இருந்த வீராங்கனைகள், பார்வையாளர்கள் அனைவரும் சிரித்தனர். வீராங்கனை ஒருவர் நாயைத் துரத்திச் சென்றார். நாயின் உரிமையாலரும் மைதான‌த்துக்குள்  ஓடினார். இன்னொரு வீராங்கனை நாயைப் பிடித்தார். நாயிடம் இருந்து பந்தை வாங்கி, வீராங்கனை ஒருவர் நாயை உரிமையாளரிடம் கொடுத்தார்.