Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts

Sunday, April 5, 2015

ஜென்டில்மேன் கேம்' என்ற பெருமையை இழக்கும் கிரிக்கெட் !


ஜென்டில்மேன் கேம் என்று அழைக்கப்படும் கிரிக்கெட் விளையாட்டில் சமீபகாலமாக நடைபெறும் விஷயங்கள் அதிர்ச்சியை தரும்விதத்தில்தான் உள்ளன.
கிரிக்கெட் வீரர்களும் இப்போதெல்லாம் ஜென்டிலமேன்களாக நடப்பதில்லை. களத்தில் வீரர்களுக்கிடையே நடக்கும் மோதல்கள் இதற்கு உதாரணம் . வீரர்கள் எவ்வழியோ அவ்வழியே ரசிகர்களும் செல்கின்றனர். தனது நாடு வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனம் ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதுமட்டுமல்ல தனக்கு பிடிப்பு இல்லாத நாட்டு அணியும் ஒருபோதும் வெற்றியடையக்கூடாது என்ற வெறுப்புணர்வு தலை தூக்க ஆரம்பித்துள்ளது.. நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மீது, பல நாடுகளை சேர்ந்த ரசிகர்கள் வெறுப்புணர்வை பகிரங்கமாக வெளிப்படுத்தியதை காண முடிந்தது. 
பாகிஸ்தான்,தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,மேற்கிந்தியத்தீவுகள், அயர்லாந்து.ஜிம்பாவ்வே ,வங்கதேசம் ஆகிய நாடுகளுடனான போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இரண்டு நாடுகளும் இந்தியாவை எதிர்த்து விளையாடி தோல்வியடைந்தன. தொடர்ந்து ஃபேஸ் புக், ட்விட்டர் போன்றவற்றில் இந்திய எதிர்ப்பையே பெரும்பாலும் காண முடிந்தது. பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்கள் மட்டுமல்ல இலங்கை ரசிகர்களும் இந்திய எதிர்ப்பாளர்கள் வரிசையில் இணைந்ததுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

இத்தனைக்கும் இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி, இலங்கையுடன் ஆடவில்லை. இந்தியாவுக்கு எதிராக ஆடி தோல்வியடைந்த காரணத்தினால் பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்கள் இந்தியாவுக்கு எதிராக திரும்பினர் என்று எடுத்துக் கொள்ளலாம்.. ஆனால் இவர்களுடன்  இலங்கை ரசிகர்களும் சேர்ந்தது ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ரோகித்சர்மா அவுட்டுக்கு 'நோபால்' கொடுத்த பாகிஸ்தான் நடுவர் அலிம் தாரையும் இவர்கள் விட்டு வைக்க வில்லை

இந்த பகையுணர்வின் வெளிப்பாடே ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றதை வெற்றி விழாவாக கொண்டாட வைத்துள்ளது.  தமது நாடு வெற்றி பெற்றதைப்போல் மகிழ்ந்தார்கள். அரை இறுதியுடன் இந்தியா வெளியேறியதும் தமக்கு ஆதரவு வழங்குமாறு நியூஸிலாந்து தலைவர் இந்திய ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார். இந்தியாவை எதிர்க்கும் ரசிகர்களுக்கு அது கோபத்தை உண்டாக்கியது. நியூஸிலாந்துக்கு எதிராக களமிறங்கினார்கள்.இந்திய ரசிகர்களிடம் ஆதரவு கேட்ட நியூஸிலாந்து சம்பியனாகக்கூடது எனவும் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே எப்போதும் அரசியல் முரண்பாடு உள்ளது. அதோடு இப்போது வங்கதேசத்துக்கும்  இந்தியாவுக்குமிடையேயான  பகைமையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் பகை இருந்தாலும், இந்தியா என்று வந்துவிட்டால் இரு நாடுகளும் கைகோர்த்து விடுகின்றன. 

இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்குமிடையேயான போட்டி உலக யுத்தம் போன்றதுதான். ஆஷஷ் கோப்பையை இழந்தால் அந்த நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது பத்திரிகைகளும் இரு நாட்டு வீரர்களையும் நார்நாராக கிழித்து விடுவார்கள்.

நியூஸிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான பகைமை வருடங்கள் பல கடந்தும் மறையவில்லை.

பகையுணர்வின் மொத்த உருவமாக மாறிநிற்கும் கிரிக்கெட்டை இனிமேல் ஜென்டில்மேன் விளையாட்டு என்று எப்படி சொல்வேன்...?

-வர்மா

Friday, April 3, 2015

கிரிக்கெற்றை எதிர்க்கும் ரசிகர்கள்

கனவான் விளையாட்டுஎன்ற மகுடத்துடன் உலகை வலம் வரும் கிரிக்கெற்றில் கனவான்கள் ஒரு சிலரே உள்ளனர். கிரிக்கெற் ரசிகர்கள் பலர் கனவன்கலாக இல்லை. தனது நாடு வெற்ரிபெற வேண்டும் என்ற வெறித்தனம் அவர்களிடம் உள்ளது.தனக்கு பிடிப்பு இல்லாத நாடு ஒருபோதும் வெற்ரியடையக்கூடது என்ற வெறுப்புணர்வு பல ரசிகர்களிடம் உள்ளது. நடந்து நுடிந்த உலகக்கிண்ணப்போட்டியில் இந்திய கிரிக்கெற் அணிமீது பல ரசிகர்கள் தமது வெறுப்புணர்வை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்கள்.

பாகிஸ்தான்,தென் ஆபிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,,மேற்கு இந்தியத்தீவுகள், அயர்லாந்து.சிம்பாவ்வே ,பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடனான போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியாவின் வெற்றி பல எதிரிகளை இந்தியாவுக்கு எதிராக உருவாக்கியது.பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய இரண்டு நாடுகளும் இந்தியாவை எதிர்த்து விளையாடி தோல்வியடைந்தன.அந்தநாட்டு ரசிகர்கள் இந்தியாவை எதிர்ப்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.ஆனால் இலங்கை ரசிகர்கள் இந்தியாவை எதிர்ப்பதற்கான வலுவான காரனம் எதுவும் இல்லை.

பகிஸ்தான்.பங்களாதேஷ்,இலங்கை ஆகிய நாட்டு ரசிகர்கள் இந்தியாவை வறுத்து எடுத்து விட்டனர். பேஷ் புக்,டுவிட்டர்,இளையதளம் ஆகியவற்றில் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். கோலியும், அனுஷ்கா சர்மாவும் மிக மோசமாக நையாண்டி பண்ணப்பட்டனர்.பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் நோ போல் கொடுத்த பாகிஸ்தானம்பயல் அலிம் தாகிரையும் இவர்கள் விட்டு வைக்க வில்லை.


அவுஸ்திராலியாவிடம் இந்தியா தோற்றதை வெற்றி விழாவாக கொண்டாடினார்கள்.தமது நாடு வெற்றி பெற்றதைப்போல்  மகிழ்ந்தார்கள்.அரை இறுதியுடன் இந்தியா வெளியேறியதும் தமக்கு ஆதரவு வழங்குமாறு நியூஸிலாந்து தலைவர் இந்திய ரசிகர்களுக்கு அழைப்பு  விடுத்து கடிதம் எழுதினார். இந்தியாவை எதிர்க்கும்ரசிகர்களுக்கு அது கோபத்தை உண்டாக்கியது. நியூஸிலாந்துக்கு எதிராக களமிறங்கினார்கள்.இந்திய ரசிகர்களிட்ம் ஆதரவு கேட்ட நியூஸிலாந்து சம்பியனாகக்கூடது  என விரும்பினார்கள்.
இந்தியா பாகிஸ்தான் ஆகிவற்றுக்கிடையே அரசியல் முரண்பாடு உள்ளது. பங்கலாதேசுக்கும் இந்தியவுக்கும் இடையேயான பகைமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.பாகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்ட பங்கலாதேஸுடன்  பகமை பாராட்டு கிறது பாகிஸ்தான்.பாகிஸ்தானும் பங்களாதேஸும் இந்தியாவை எதிரியாகவே பார்க்கின்றன.தமக்குள்ளே பகமை இருந்தாலும் இந்தியாவை  எதிர்க்கும் போது ஒன்றகின்றன. இலங்கை ரசிகர்களும் இந்தியாவுக்கு எதிராக இவர்களுடன் கைகோர்க்கின்றனர்.

இங்கிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையேயானபோட்டி உலக மகா யுத்தம் போன்றது. ஆஷஷ் கிண்ணத்தை இழந்தால் அந்த நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது பத்திரிகைகளும் நார்நாராக கிழித்து விடுவார்கள்.நியூஸிலாந்துக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையேயான பகைமை வருடங்கள் பல கடந்தும் மறையவில்லை.

பகைமைகளின் மொத்த உருவமான விளையாட்டை கனவான் விளையாட்டு என எப்படிக்கூறுவது?


http://www.vikatan.com/news/article.php?module=news&aid=44681&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1


Wednesday, February 3, 2010

விகடனில்என்கதை


குலதெய்வம்
சூரியன் உச்சிக்கு வந்துவிட்டான். பசியுடன் அலைந்த முதிய மீனுக்கு இரை கிடைக்கவில்லை. திடீரென நீரினுள் எழுந்த வித்தியாச அலையினால் எச்சரிக்கையான அந்த முதிய மீன் தனது இனத்தவரின் வருகை என்பதை புரிந்து கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. மிகச் சிறிய மீன்கள் முன்னே துள்ளிக் குதித்து வர, அதன் பின்னே பெரியதும் சிறியதுமான மீன்கள் அணிவகுத்து வந்தன. அதிக கூட்டமாக வரும் மீன்களைக் கண்ட முதிய மீன் ஆச்சரியத்துடன் பார்த்தது.
முதிய மீனை ஒரு பொருட்டாகக் கணக்கில் எடுக்காது மீன் கூட்டம் விலத்திக் கொண்டு விரைந்தது.
"ஏனப்பா என்ன ஏதாவது பிரச்னையா? சுனாமி வரப் போகுதா? எதற்காக இப்படிக் கூட்டமாக ஓடி வருகிறீர்கள்?" என்று முதிய மீன் கேட்டது.
"நாங்கள் பாதுகாப்பாக வாழப் போகின்றோம்," எனக் கூறிய சிறிய மீன், பெரிய மீன்களை முந்திக் கொண்டு சென்றது.
பாதுகாப்பாக உயிர் வாழ்வா?
எம்மையே பிடித்து விழுங்கத் துடிக்கும் பெரிய மீகள்கள், வலிமையான வலைகள்... இவற்றிடமிருந்து எப்படி நாம் உயிர் பிழைத்து பாதுகாப்பாக வாழ்வது எனச் சிந்தித்தபடி இரை தேடியது முதிய மீன்.
மீண்டும் ஒரு முறை நீரின் சலசலப்பு வித்தியாசமானதால் எச்சரிக்கையடைந்த முதிய மீன் உற்றுப் பார்த்தது. தன் இனத்தவரின் வரவினால் ஏற்பட்ட நீரின் மாற்றம் என்பதை உணர்ந்து நிம்மதியானது. முன்னர் வந்ததைவிட அதிக எண்ணிக்கையிலான மீன்கள், முதிய மீனைக் கடந்து சென்றன.
"எல்லோரும் எங்கே போகிறீர்கள்?" என்று முதிய மீன் கேட்டது.
"நாங்கள் பாதுகாப்பாக வாழப் போகின்றோம்," என்று கூறிய படி மீன்கள் வேகமாகச் சென்றன.
"நீ எதற்காக தனியே நிற்கிறாய்..? எங்களுடன் வந்தால் பாதுகாப்பாக உயிர் வாழலாம்," என்று முதிய மீனிடம் அதன் வயதை ஒத்த மீனொன்று அழைப்பு விடுத்தது.
"எங்கே ஐயா நாம் பாதுகாப்பாக வாழ்வது?" என்று முதிய மீன் கேட்டது.
"உனக்கு சங்கதி தெரியாதா?! குமரிக் கண்டத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ள நாட்டில் மீனை பாதுகாக்க சட்டம் போட்டிருக்கிறார்கள். அவர்களின் குலதெய்வம் மீனாம். ஆகையால், பாதுகாப்பு வலையம் அமைத்து மீனைப் பாதுகாக்கிறார்களாம்," என்றது புகலிடம் தேடிச் செல்லும் மீன்.
"அப்படியா... உண்மையாகவா?!" என்று ஆச்சரியத்துடன் கேட்டது, முதிய மீன்.
"பக்கத்து நாட்டுக்காரன் மீன் பிடித்தாலும், அந்த நாட்டுக்காரன் அடிக்கிறானாம்," என்று கூறியபடி பாதுகாப்பு வலையம் நோக்கி சென்றது அந்த மீன