Thursday, September 30, 2021

பிஎன்பி பரிபாஸ் டென்னிஸ்ஸில் ஜொகோவிச் இல்லை


  தெற்கு கலிபோர்னியா பாலைவனத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிஎன்பி பரிபாஸ் ஓபன் செட்டில் விளையாடப்போவதில்லை என   பெயர் நோவக் ஜோகோவிச் அறிவித்துள்ளார்.

 அவுஸ்திரேலிய, பிரஞ்சு, விம்பிள்டன் பட்டங்களை வென்ற ஜோகோஒவிச் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் தோல்விய்டைந்தார்.

 "  எனக்குப் பிடித்த  இந்தியன் வெல்ஸில் எனது ரசிகர்களைப் பார்க்கவும், பாலைவனத்தில் விளையாடவும் முடியாது, அதற்காக‌ நான் வருந்துகிறேன்,," என்று அவர் புதன்கிழமை ட்வீட் செய்தார்.

ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதிவரை நடைபெற  திட்டமிடப்பட்ட ஆண்கள் , பெண்கள் கலப்பு இரட்டையர் பஇரிவு போட்டி கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக  அடுத்த ஆன்டு மார்ச்சில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான ஆஷ் பார்ட்டியுடன் விளியாடப்போவதாக ஜோகோவிச் அறிவித்துள்ளார்.

ஐபிஎல்லில் விளையாடாமல் வெளியேறிய அர்ஜுன் டெண்டுல்கர்

மும்பை அணியின் வீரர்களில் ஒருவரான அர்ஜுன் டெண்டுல்கர் காயம் காரண‌மாக அணியில் இருந்து  வெளியேறியுள்ளார். ஐபிஎல் ஏலத்தின் போது அனைவரும் எதிர்பார்த்தது போல டெண்டுல்கரின் மகனான அர்ஜுனை மும்பை அணி வாங்கியது. இளம் வீரரான அர்ஜுன் டெண்டுல்கர் முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்ததாதல், அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது   ஆனால், விளையாடும் அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பெறவில்லை.

 இந்நிலையில், காயம் காரணமாக அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் இருந்து விலகியுள்ளதாகவும் அவருக்குப் பதில் மாற்று வீரராக சிமர்ஜீத் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். சிமர்ஜீத் சிங் இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "காயம் ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் இருந்து அர்ஜுன் டெண்டுல்கர் விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக சிமர்ஜீத் சிங் அணியில் சேர்க்கப்படுகிறார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான சிமர்ஜீத் சிங் ஐபிஎல் வழிகாட்டுதல்களின்படி கட்டாய தனிமைப்படுத்தும் காலத்திற்குப் பின்னர், மும்பை அணியுடன் பயிற்சியைத் தொடங்குவார்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிமர்ஜீத் சிங் டெல்லியை சேர்ந்த 23 வயதான சிமர்ஜீத் சிங் ஐபிஎல் தொடரில் ஆடுவது இதுவே முதல்முறையாகும். 

ஐபிஎல் தொடரில் இருந்து கிறிஸ் கெயில் விலகல்


    ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமரேட்ஸில் நடைபெற்று வருகிறது. அதில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி 4 வெற்றி, 7 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இனி வரும் அனைத்து போட்டிகளும் பஞ்சாப் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி, கரீபியன் பிரிமியர் லீக் தொடர், ஐபிஎல் தொடரில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்குள் (பயோ-பபுள்) இருந்துள்ளதால் மனரீதியில் புத்துணர்வு பெற முடிவு செய்துள்ளேன்.

மேலும், ரி20 உலகக் கிண்ணத் தொடரில் மேற்கு இந்தியத்தீவுகள்   அணிக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்த உள்ளேன். இதனால், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன் என்று கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார்.

டெல்லியை வீழ்த்தியதால் நம்பிக்கையுடன் இருக்கிறது கொல்கட்டா

ஷார்ஜாவில் நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் கொல்ட்டா நைட் ரைடர்ஸ் அபாரமாக ஆடி டெல்லி ப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது, இதன் மூலம் 10 புள்ளிகளுடன் கொல்ட்டாதா அணி 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.கொல்ட்டா அணி 5-வது வெற்றியை பெற்றது.

14-வது .பி.எல். கிரிக்கெட் தொடரில்  சார்ஜாவில் நடந்த 41-வது லீக் ஆட்டத்தில்   கொல்ட்டாதா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி ப்பிட்டல்சை எதிர்கொண்டது. டெல்லி அணியில் பிரித்வி ஷா நீக்கப்பட்டு ஸ்டீவன் சுமித் வாய்ப்பு பெற்றார். நாணயச் சுழற்சியில் ஜெயித்த கொல்ட்டாதா ப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவர் முடிவில்   9 விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் எடுத்தது. கொல்கட்டா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து  130 ஓட்டங்கள் கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

டெல்லி அணியில், ஷிகர் தவானும், ஸ்டீவன் சுமித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.    முதல் விக்கெட்டுக்கு 35 ஓட்டங்கள் எடுத்தனர். தவான் 24 ஓட்டங்கள் எடுத்தபோது பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்ததுடுப்பாட்ட வீரர்கள் வேகம் குறைந்த  மந்தமான  ஆடுகளத்தில் திணறினர். மறுசீரமைப்பு செய்யப்பட்ட இந்த சார்ஜா ஆடுகளத்தில் சுனில் நரினும், வருண் சக்ரவர்த்தியும் தங்களது சுழல் ஜாலத்தால் டெல்லியின் ஓட்ட வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர். நரினின் சுழலை கணிக்க முடியாமல் ஸ்ரேயாஸ் அய்யர் (1  ) விக்கெற்றைப் பறிகொடுத்தார். ஸ்டீவன் ஸ்மித்  39 ஓட்டங்கள் (34 பந்து, 4 பவுண்டரி) எடுத்த நிலையில் வெளியேறினார். மத்திய வரிசையில் ப்டன் ரிஷாப் பண்டை தவிர்த்து வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்கள் அடித்தது. 39 ஓட்டங்கள் எடுத்த  ரிஷாப் பண்ட்      கடைசி ஓவரில் ரன்-அவுட் ஆனார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரின், வெங்கடேஷ் அய்யர், லோக்கி பெர்குசன்  ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

127 என்ற இலகுவான வெற்றி இலக்குடன் களம் இறங்கிய கொல்கட்டா சுலபமாக வெற்றி பெறவில்லை. கொல்ட்டாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் வெங்கடேஷ் அய்யர் (14 ), சுப்மான் கில் (30 ) ஓரளவு நன்றாக ஆடினர். அதன் பிறகு திரிபாதி (9  ), ப்டன் மோர்கன் (0), தினேஷ் கார்த்திக் (12  ) ஆகியோரேமாற்றினார்கள்.  5 விக்கெற்களை இழந்து 96 ஓட்டங்களை இழந்து தவித்த நிலையில், நிதிஷ் ராணாவுடன், சுனில் நரின் இணைந்தார். 16-வது ஓவரில் ரபடாவின் பந்துவீச்சில் நரின் 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் ஓடவிட்டு நெருக்கடியை தணித்தார். நரின் 21 ஓட்டங்களில் (10 பந்து) ஆட்டமிழந்தார். இறுதியில் ராணா பந்தை பவுண்டரிக்கு விரட்டியடித்து வெற்றிக்கனியை பறித்தார்.

கொல்ட்டாதா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிதிஷ் ராணா 36 ஓட்டங்களுடன் (27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். டெல்லி தரப்பில் அவேஷ்கான் 3 விக்கெட்டும், அஸ்வின், ரபடா, நோர்டியா, லலித் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆல்-ரவுண்டராக அசத்திய சுனில் நரின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

11-வது ஆட்டத்தில் ஆடி 5-வது வெற்றியை ருசித்த கொல்கத்தா அணி அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. டெல்லி அணிக்கு இது 3-வது தோல்வியாகும். சென்னையுடன் முதலிடத்துக்கு போட்டியிட்ட டெல்லி பின் தங்கி விட்டது.


 

 

 

 

மக்ஸ்வெல்லின் அரைச் சதம் பட்டேலின் பந்து வீச்சால் வென்றது பெங்களூரு

  துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில்   ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு  அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. .நானயச்  சுழற்சியில்  வென்ற பெங்களூரு ப்டன் கோஹ்லி களத் தடுப்பைத் தேர்வு செய்தார்.  ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது

ராஜஸ்தான் அணிக்கு எவின் லீவிஸ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. ஜார்ஜ் கார்டன் வீசிய 4வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார் லீவிஸ். முதல் விக்கெட்டுக்கு 77 ஓட்டங்கள் சேர்த்த போது கிறிஸ்டியன் பந்தில் ஜெய்ஸ்வால் (31) ஆட்டமிழந்தார். ஹர்ஷல் படேல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய லீவிஸ், 31 பந்தில் அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய இவர், 37 பந்தில் 58 ஓட்டங்கள் குவித்தார்.

சகால் 'சுழலில்' மகிபால் லாம்ரர் (3), லிவிங்ஸ்டன் (6) சிக்கினர். ஷபாஸ் அகமது பந்தில் ப்டன் சஞ்சு சாம்சன் (19), ராகுல் டிவாட்டியா (2)  வெளியேறினர். ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் ரியான் பராக் (9), கிறிஸ் மோரிஸ் (14), சேட்டன் சக்காரியா (2) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது. கார்த்திக் தியாகி (1) ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு சார்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜஸ்தான் 170 ஓட்டங்கள் எடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் சாஹல்,படேல் ஆகியோரின் பந்து வீச்சுஓட்ட  எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியது.


150 எனும் வெற்ரி இலக்குடன் களம் இறங்கியது  பெங்களூரு. ப்டன் விராத் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 48 ஓட்டங்கள்  சேர்த்த போது முஷ்தபிஜுர் ரஹ்மான் பந்தில் படிக்கல் (22) விக்கெற்றைப் பறிகொடுத்தார்.. கோஹ்லி (25) 'ரன்-அவுட்' ஆனார். பின் இணைந்த ஸ்ரீகர் பரத், மேக்ஸ்வெல் ஜோடி பொறுப்பாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 69 ஓட்டங்கள் சேர்த்த போது முஷ்தபிஜுர் பந்தில் பரத் (44) ஆட்டமிழந்தார்.

 

மோரிஸ் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி விளாசிய மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார். ரியான் பராக் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டிவிலியர்ஸ் வெற்றியை உறுதி செய்தார். பெங்களூரு அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்கள்  எடுத்து வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் (50), டிவிலியர்ஸ் (4) ஆகியோர் ஆட்டமிழக்காமல்  இருந்தனர். ராஜஸ்தான் சார்பில் முஷ்தபிஜுர் 2 விக்கெட்களைவீழ்த்தினார்.

பெங்களூரு நிலை இதன் மூலம் 7 வெற்றிகளுடன் பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தை பிடித்து தனது நிலையை உறுதிப் படுத்தியுள்ளது. பெங்களூரு அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளன. இதில் எதாவது ஒரு போட்டியில் பெங்களூரு அணி வென்றால் கூட ப்ளே ஆப்-இல் அந்த அணியின் இடம் உறுதியாகும். பெங்களூரு அணியின் நெட் ரன்ரேட் -0.2 சற்று மோசமாக இருந்தாலும் கூட புள்ளிப் பட்டியலில் சிறப்பாக உள்ளதால் அந்த அணி எளிதில் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.


 ராஜஸ்தான் நிலை மறுபுறம் ராஜஸ்தான் அணி இப்போது இக்கட்டான நிலையில் உள்ளது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி, 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 7 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியுள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேடும் -0.468 என்று மிக மோசமாக உள்ளது. ராஜஸ்தான் அணி அடுத்து வரும் மூன்று போட்டிகளில் மிகப் பெரியளவில் வென்றால் மட்டுமே அடுத்துச் சுற்று குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியும். இது மட்டுமின்றி பிற ஆட்டத்தின் முடிவுகளும் ராஜஸ்தான் அணிக்குச் சாதகமாக அமைய வேண்டும். அப்போது தான் ப்ளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் அணியால் செல்ல முடியும்.

Wednesday, September 29, 2021

ஒலிம்பிக் ஐஸ் ஹொக்கியில் இருந்து சீனா விலக்கப்பட வாய்ப்புள்ளது

  பீஜிங்கில் அடுத்த ஆண்டு நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் ஐஸ் ஹொக்கி போட்டியில் இருந்து விலக்கப்படுவதை சீனா எதிர்கொள்கிறது.

"சீன  ஆண்கள் ஐஸ் ஹொக்கி அணியின் விளையாட்டுத் தரம் போதுமானதாக இல்லை. 15-0 என்ற கணக்கில் ஒரு அணி தோற்கடிக்கப்படுவதைப் பார்ப்பது யாருக்கும் நல்லது அல்ல, சீனாவுக்கோ அல்லது ஐஸ் ஹாக்கிக்கோ  அது உகந்ததல்ல"  என்று சர்வதேச ஐஸ் ஹொக்கி கூட்டமைப்பின் (ஐஐஎச்எஃப்) புதிய தலைவர் லூக் டார்டிஃப் திங்களன்று AFP இடம் கூறினார்.

ஹொக்கி அனியின் தரவரிசைப் பட்டியலில் சீனா 32 ஆவது இடத்தில் உள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் சீன  ஆண்கள் ஹொக்கி அணி எந்தப் போட்டிகளிலும் விளையாடவில்லை.

ஆனால் அவை உலகில் 32 வது இடத்தில் மட்டுமே உள்ளன மற்றும் 2019 முதல் எந்தப் போட்டிகளிலும் விளையாடவில்லை.கோல்ஃப் விளையாடிய ஹரி பொட்டர்' புகழ் டாம் ஃபெல்டன் காயமடைந்தார்


   "ஹரி பொட்டர்" திரைப்படங்களில் டிராகோ மால்ஃபோயின் கதாபாத்திரத்தில் நடித்த பிரிட்டிஷ் நடிகர் டாம் ஃபெல்டன் பிரபல கோல்ஃப்  ரைடர் கிண்ணப் போட்டியின்  போது  வியாழக்கிழமை  நடைபெற்ற ஒரு  ண்காட்சி போட்டியில் விளையாடும்போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 ஃபெல்டன் 18 வது ஓட்டையில் விளையாடியபோது கீழே விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகரைடர் கிண்ண  அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்கா, ஐரோப்பா  ஆகியவற்றுக்கிடையேயான ரைடர் கிண்ணப் போட்டியில்  தொடாம் ஃபெல்டன்   ஐரோப்பாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.


பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறியது மும்பை

.பி.எல் தொடரின் 42-வது போட்டியில் மும்பை இஎதியன்ஸும்,பஞ்சாப் கிங்ஸும்  நாணயச் சுழற்சியில் வென்ற  மும்பை அணி கப்டன் பபந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில்   6 விக்கெட்டுகளை இழந்துகு 135 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 136 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய    மும்பை இண்டியன்ஸ்  19 ஆவது  ஓவரில் 4 விக்கெற்களை இழந்து 137 ஓட்டங்கள் எடுத்து வெற்ரி பெற்றது.

  பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும் மந்தீப்பும் களமிறங்கினர். மந்தீப் 15 ஓட்டங்களிலும், அடுத்து களமிறங்கிய கெய்ல் ஒரு ஓட்டத்துடனும் வெலியேறினார். 21 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் கே.எல்.ராகுலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மார்க்ரம் மட்டும் நிதானமாக ஆடி 42 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ஓட்டங்கள்   எடுத்தது. 136 என்ற எளிய இலக்குடன்  மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் குயின்டன் டிகாக்கும் களமிறங்கினர்.

ரோஹித் சர்மா 8 ஓட்டங்ளில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். டிகாக்கும் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் திவாரி நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார். அவரும் 45 ஓட்டங்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, ஹர்திக் பாண்டியா, கைரன் பொல்லார்ட் இணை ஜோடி சேர்ந்தது.

 ஹர்திக் இந்தப் போட்டியில் அவரது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.30 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸ்ர்களுடன் 40 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மறுபுறம் பொல்லார்ட் 15 ஓட்டங்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. 136 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப்  மும்பை இண்டியன்ஸ் 137/4 என்று 19வது