Showing posts with label சென்னை கிறிக்கெற். Show all posts
Showing posts with label சென்னை கிறிக்கெற். Show all posts

Thursday, December 7, 2023

ஐபிஎல் ஏலத்தை நடத்தப்போகும் முதல் பெண் மல்லிகா சாகர்

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தை இந்தியாவை சேர்ந்த மல்லிகா சாகர் என்ற பெண்   நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் ஏலத்தை ரிச்சர்ட் மெட்லி, சாரு சர்மா, ஹூஜ் எட்மெடாஸ் உள்ளிட்டோர் நடத்தியுள்ளனர். அதிலும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹசரங்காவை ஏலம் விட்டபோது எட்மெடாஸ் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சாரு சர்மா ஏலத்தை நடத்தி கொடுத்தார்.

 கடந்த ஆண்டு ஏலத்தை எட்மெடாஸ் நடத்தினார். ஆனால் இம்முறை ஐபிஎல் ஏலதாரராக பெண் ஒருவரை ஐபிஎல் நிர்வாக குழு நியமித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு முதல் ப்ரோ கபடி லீக் ஏலத்தை நடத்தினார். . அதேபோல் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தையும் நடத்தியுள்ளார். 2001ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏல நிறுவனத்தில் தனது பயணத்தை தொடங்கிய அவர், ஐபிஎல் ஆடவர் தொடருக்கான ஏலத்தை நடத்தும்  முதல் பெண்ணாக சாதனை படைக்கவுள்ளார். 

Monday, October 4, 2021

சிக்ஸர் மழையால் மனம் கவர்ந்த நாயகர்கள்

ரி20  கிரிக்கெட் என்றாலே, சிக்ஸ‌ருக்குதான் அங்கே அதிக மதிப்பு. அதிக சிக்ஸ‌ர் அடிப்பவரே அங்கு தலைவன். ஐபிஎல் வரலாற்றை பொறுத்தளவில், முதல் ஓவரில் அதிக சிக்சர்கள் விளாசி   ஆரம்பித்து வைத்தது வீரேந்திர ஷேவாக் என்றால், கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றி பெறுவது டோனிதான். முதல் ஓவரில் சிக்ஸர் அடித்து ஒட்ட எண்ணிகையை உயர்த்தினாலும் கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றிக் கனியைப் பரிக்கும் வீரர்தான் மன‌தில் நிற்பார்

  கிறிஸ் கெயில், பொல்லார்ட், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற சிக்ஸர் மன்னர்கள் செய்யாத சாதனையை டோனி செய்துள்ளார்.

 ஒவ்வொரு ஓவரிலும் ஒரு வீரர் எத்தனை சிக்ஸ‌ர் விளாசுகிறார் என்று ஒரு கணக்கு வைத்துள்ளார்கள் புள்ளி விவரப் புலிகள்.

   வீரேந்திர ஷேவாக்,ம் கிறிஸ் கெயில் ஆகிய இருவரும் முதல் ஓவரிலேயே அதிக சிக்ஸ‌ர் அடித்தவர்கள். இதுவரை அவர்கள் 12 சிக்ஸ‌ர்கள் அடித்துள்ளனர். ஆட்டத்தின் முதல் பந்தையே சிக்ஸ‌ருக்கு அடிக்க வேண்டும் என்று நினைத்து ஆடுபவர் ஷேவாக். எனவேதான், கிறிஸ் கெயில் இத்தனை வருடம் ஆடியும், சேவாக் சாதனையை சமன் செய்ய முடிந்துள்ளது.

  அடுத்த ஒன்பது  ஓவர்களில் கிறிஸ் கெயில் ஆதிக்கம் செலுத்துகிறார். 2வது ஓவரில் 20 சிக்ஸ‌ர், 3வது ஓவரில் 32 சிக்ஸ‌ர், 4வது ஓவரில் 30, 5வது ஓவரில் 28, 6வது ஓவரில் 21, 7வது ஓவரில் 20, 8வது ஓவரில் 18, 9வது ஓவரில் 22 சிக்ஸ‌ர் என யாரும் எட்ட முடியாத இடத்தில் கிறிஸ் கெயில் இருக்கிறார். 10வது ஓவரில் 13 சிக்ஸ‌ர்கள் அடித்தது குட்டி தல சுரேஷ் ரெய்னா. கிறிஸ் கெயிலும் அதே அளவுக்கு அடித்துள்ளார். 11வது ஓவரில் 20 சிக்ஸ‌ர் அடித்து மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார் கெயில். ஆனால் 12வது ஓவரில் 17 சிக்ஸ‌ர்கள் அடித்து யூசுப் பதான் முதலிடம் பிடித்துள்ளார். 13வது ஓவரிலும் கெயில்தான் ஆதிக்கம். 24 சிக்ஸ‌ர்களை அந்த ஓவரில் இதுவரை அவர் அடித்துள்ளார். 14வது ஓவரில் கிங் கைரன் பொல்லார்ட்  18 சிக்ஸ‌ர்களை பறக்க விட்டுள்ளார். 15வது ஓவரும் அவருக்கே. 20 சிக்ஸ‌ர்கள் விளாசியுள்ளார்.   16வது ஓவரில் அதிரடி நாயகன் ஏபி டிவில்லியர்ஸ் 27 சிக்ஸ‌ர்களை அடித்துள்ளார்.17வது ஓவரில் கைரன் பொல்லார்ட் 29 சிக்ஸ‌ர்களை பறக்க விட்டு முதலிடம் பிடித்துள்ளார்.

 எஞ்சியிருப்பது 3 ஓவர்கள். அங்குதானே பினிஷருக்கு வேலை.    18வது ஓவரில் 34 சிக்ஸ‌ர்களை பறக்க விட்டு அசைக்க முடியாத உயரத்தில் உள்ளார் டோனி.   19வது ஓவரில் 34 சிக்ஸ‌ர்களுடன் மீண்டும் டிவில்லியர்ஸ் முன்னுக்கு வருகிறார்.

ஆனால் 20வது ஓவர், அதாவது கடைசி ஓவர், யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சிக்சர்களை பறக்க விட்டு சிக்ஸ‌ர் மன்னராக, உலகின் தலை சிறந்த பினிஷர் என்ற பெயருக்கு ஏற்ப வான வேடிக்கை காண்பித்துள்ளார் டோனி. 20வது ஓவரில்  டோனி அடித்த சிக்சர் எண்ணிக்கை 50. இதுவரை எந்த வீரரும் இவர் பக்கத்தில் நிற்க முடியவில்லை. கடைசி ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடுகிறார் தோனி. சமீப காலமாக அவர் தனது முந்தைய ஆட்டத்தை காண்பிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் இதுவரை அவர் படைத்த சாதனையை முறியடிக்க யார் வருவார் என்பதே இன்றைய  கேள்வி.