Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Sunday, February 16, 2025


 அவுஸ்திரேலியாவுக்கு எதிரான  இரண்டாவது ஒரு நாள்  போட்டியில் 174 ஓட்டங்களால்  வெற்றி பெற்ற இலங்கை  தொடரை  வென்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி  50 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 281 ஓட்டங்கள் எடுத்தது. 282 வெற்றி இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலியா 24.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 107 ஓட்டங்கள் எடுத்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பதும் நிசங்க 6  ஓட்டங்களுடன் வெளியேறினார். இரண்டாவது விக்கெற்றில் இணைந்த நிசான் மதுசங்க, குசல் மென்டிஸ் ஜோடி  ஆட்டத்தைக் கையில் எடுத்தது.நிசான் மதுசங்க 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தா, குசல்  மெண்டிஸுடன் இணந்த அசலங்க அதிரடியாக விளையாடினார்.   குசல் மெண்டிஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 5ஆவது சதத்தை பெற்றுள்ளார். குசல் மென்டிஸ் 101 ஓட்டங்கள் எடுத்தார். சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்கள் எடுத்தார்.

அவுஸ்திரேலியா 107  ஓட்டங்கள் எடுத்தது. ஸ்மித் அதிக பட்சமாக 29 ஓட்டங்கள் எடுத்தார்.வெல்லாலகே 4விக்கெற்களும், அசித பெர்னாண்டோ , வன் இந்து ஹசரங்கா ஆகியோர் தலா 3 விக்கெற்கலையும் எடுத்தனர். போட்டி நாயகன் விருது  குசல் மென்டிஸுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகனாக சரித் அசலங்கா தெரிவானார்.  

Sunday, February 2, 2025

டெஸ்ட்கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட ஸ்மித்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டி அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் புது சாதனை படைத்துள்ளார்.

கிறிக்கெற் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்பவர் ஸ்டீவ் ஸ்மித். இவர் இந்தியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலே 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், ஒரே ஒரு ஓட்டத்தால்   அந்த சாதனையைத் தவறவிட்டார்.ஸ்டீவ் ஸ்மித் ஒரு ஓட்டம் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டினார். க‌ப்டனாக இருக்கும்போது இந்த சாதனையை அவர் எட்டியிருப்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ஓட்டங்ளை எட்டிய 15வது வீரர் ஸ்மித் ஆவார். அவுஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம்  ஓட்டங்களை எட்டிய 4வது வீரர் ஸ்மித் ஆவார். இதற்கு முன்பு அலன் பார்டர், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங்  ஆகியோர்மட்டுமே இந்த சாதனையை எட்டியிருந்தனர்.

35 வயதான ஸ்மித் பாகிஸ்தானுக்கு எதிராக 2010ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தற்போது வரை 115 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஸ்மித் 4 இரட்டை சதங்கள், 34 சதங்கள், 42 அரைசதங்களுடன் 10 ஆயிரத்து 68 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 205 இன்னிங்ஸ்களில்  விளையாடிய‌ ஸ்மித்தின் அதிகபட்சமாக்  239 ஓட்டங்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் சராசரி 56.25 வைத்துள்ளார். பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்துக்குப் பின்னர் ஒரு வருட   தடையில் இருந்து மீண்டு வந்த ஸ்மித் சிறப்பாக ஆடி இந்த சாதனையைப் படைத்துள்ளார். ஸ்மித்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்மித் 165 ஒருநாள் போட்டியில் ஆடி 12 சதங்களும், 34 அரைசதங்களும் விளாசி 5 ஆயிரத்து 662 ரன்கள் எடுத்துள்ளார். 67 டி20 போட்டிகளில் ஆடி 1094 ரன்களும், 103 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 485 ரன்களும் எடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். அவர் 15 ஆயிரத்து 921 ஓட்டங்களுடன் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் இந்த டெஸ்ட் தொடரிேல யூனிஸ் கான், கவாஸ்கர்  ஆகியோரின் சாதனைகளை முறியடிப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது.

Saturday, December 7, 2024

உலக டெஸ்ட் சம்பியன் இறுதிப் போட்டியில் விளையாட முட்டிமோதும் ஐந்து நாடுகள்

உலக டெஸ்ட் சம்பியனைத்தீர்மானிக்கும்  போட்டிகள்  இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு  புள்ளிப் பட்டியலில் இருக்கும் முதல் ஐந்து நாடுகளானஇந்தியா,தென் ஆபிரிக்கா,அவுஸ்திரேலியா,இலங்கை,நியூஸிலாந்து  ஆகிய ஐந்து நாடுகள் முட்டி மோதுகின்றன.

  2023 - 25 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தனது கடைசி தொடரில் விளையாடி வருகிறது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் நான்கு போட்டிகள் மீதம் உள்ளன. இரண்டாவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறுகிறது

  அதே நேரத்தில் மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறுகின்றன.

 தென்னாபிரிக்கா -இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியும், நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் இதே நாட்களில் நடைபெறுகின்றன.

  இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா,நியூசிலாந்து ஆகிய அணிகள் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான பந்தயத்தில் உள்ளன. இதில் நியூசிலாந்து அணிக்கான வாய்ப்பு மிகவும் குறுகியதாக உள்ளது. எனினும், அந்த அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றால், பிற அணிகளின் வெற்றி தோல்விகளை வைத்து இறுதிப் போட்டிக்கு முன்னேற சிறிய வாய்ப்பு கிடைக்கக்கூடும்

 இலங்கை , தென்னாப்பிரிக்காஆகிய  அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கைக்கு வெற்றி அவசியமாகிறது. ஒருவேளை இலங்கை அணி இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் இருந்து விலக நேரிடும்.

மறுபுறம் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்      ஆஸ்திரேலியாவும் அதே நிலையில் உள்ளது. அவுஸ்திரேலியா இந்த தொடரில் குறைந்தது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் 90 சதவீதம் இறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதி செய்யலாம். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றால் 100 சதவீதம் இந்திய அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும்.

   இந்த வாரம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான வாரமாக மாறி உள்ளது. மேலும், இந்த மூன்று போட்டிகளில் தற்போதைய உலகின் நான்கு முன்னணி டெஸ்ட் விரர்களான  விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ,ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் விளையாட உள்ளனர்.

 எதிர்கால டெஸ்ட் நட்சத்திரங்களாக சுட்டிக் காட்டப்படும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), ஹாரி ப்ரூக் (இங்கிலாந்து), கமிந்து மென்டிஸ் (இலங்கை), ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (தென்னாப்பிரிக்கா) ஆகிய இளம் வீரர்களும் விளையாட உள்ளனர். எனவே, இந்த வாரம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைய உள்ளது.

 

ரமணி

8/12/24

Tuesday, October 1, 2024

களை கட்டப்போகும் மகளிர் ரி 20 உலகக்கிண்ணம்


   9வது .சி.சி. மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி  ஐக்கிய அரபு எமரேட்ஸில் உள்ள சார்ஜா, துபாய் ஆகிய மைதானங்களில்   ஒக்டோபர் 3ம் திகதி முதல் ஒக்டோபர் 20ம் திகதி வரை நடைபெற உள்ளது.

கடந்த மகளிர் ரி20 உலகக்  கிண்ண  இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா சம்பியன் பட்டம் பெற்றது. 10 அணிகள்   பி  என  இராண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப்   இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் , இலங்கை  .

குரூப் பி  இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்தியா,பங்களாதேஷ் , தென்னாப்பிரிக்கா  .

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை  அதிக முறை வென்ற நாடு என்ற பெருமையை அவுஸ்திரேலியா தன்வசம் வைத்துள்ளது. 8 முறை நடைபெற்றுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில்  அவுஸ்திரேலியா 6 முறை ம்பியன் பட்டம் வென்று  அசத்தியுள்ளது. இங்கிலாந்து, மேற்கு இந்தியா ஆகியன  தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளன.

Monday, June 17, 2024

வினோதமான உலக சாதனையுடன் இலங்கை வெற்றி

 செயின்ட் லூசிய நகரில்  நடந்த ரி20 உலகக்கிண்ணப் போட்டியில்  நெதர்லாந்தை எதிர்த்து விளையாடிய இலங்கை  38  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில்  வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசியது.   முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை   20 ஓவர்களில்  6 விக்கெற்களை இழந்து 201  ஓட்டங்கள் எடுத்தது அசலங்கா 46, குசால் மெண்டிஸ் 46 ஓட்டங்கள் எடுத்தனர்.   

 202 ஓட்டங்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே இலங்கை அணியின் நேர்த்தியான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறியது.   சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 16.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 118  ஓட்டங்கள் எடுத்தது.    அதிகபட்சமாக கப்டன் ஸ்காட்எட்வர்ட்ஸ் 31, மைக்கேல் லேவிட் 31 ஓட்டங்கள் எடுத்தனர். இலங்கை சார்பில்  நுவான் துசாரா 3, கப்டன் ஹசரங்கா 2, மதீஸா பதிரனா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை ரி20 உலகக் கோப்பையில் தங்களுடைய 2வது பெரிய வெற்றியை பதிவு செய்து அசத்தியது.   நிஷாங்கா 0, குசால் மெண்டிஸ் 46, கமிண்டு மெண்டிஸ் 17, டீ சில்வா 34, அசலங்கா 46, ஏஞ்சேலோ மேத்தியூஸ் 30*, ஹஸரங்கா 20* ஓட்டங்கள் எடுத்தனர். ஆனால் யாருமே 50 ஓட்டங்களைத் தாண்டி அரை சதமடிக்கவில்லை.ரி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அரை சதம் அடிக்காமலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற வினோதமான உலக சாதனையை இலங்கை சமன் செய்தது. -

 இதற்கு முன் இதே உலகக் கோப்பையில் பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவும் அரை சதம் கூட அடிக்காமல் 201/7 ஓட்டங்கள் குவித்து அந்த சாதனையை படைத்துள்ளது. அத்துடன் இந்த தொடரில் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்த இலங்கை 4 போட்டிகளின் முடிவில் 3 புள்ளிகளை பெற்றது.  குரூப் டி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்து தப்பிய இலங்கை 3வது இடத்தைப் பிடித்தது.      

Sunday, April 28, 2024

பரிஸ் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்ற நெட்ட சிங்க‌

"எனது ஒலிம்பிக் பதக்க இலக்கு 2024 அல்ல, ஆனால் 2028 அல்லது 2032 இல் ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே எனது கனவு" என்று இலங்கையின் பூப்பந்து வீரன் வீரன் நெட்டசிங்க [28] தெரிவித்தார்.

 ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 13 வரை பிரான்சில் 2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு நேரடியாக தகுதி பெற்ற முதல் இலங்கையர் ஆவார்.

 சர்வதேச  தர வரிசையில்  72வது இடத்தில் உள்ள நெட்டசிங்க, சீசன் முழுவதும் ஈர்க்கக்கூடிய 24,030 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று, இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி பெற்ற வீரர்களில் 32வது இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

  , தகுதிகாண் பட்டியலில் உள்ள இளைய வீரராக உள்ள , தனது அபார திறமையை வெளிப்படுத்தி, விளையாட்டில் எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறார்.

  த‌ந்தையான ரொஷான் தம்மிக்கவின் பயிற்சியில் நெட்டசிங்க  முன்னேற்ற மடைந்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் பின்னர் உலக தரவரிசையை 50 க்குக் கீழே குறைப்பதே அவரது பிரதான இலக்காகும்.     

ப‌ரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயாரிப்புகளுக்காக விளையாட்டு அமைச்சு 8.2 மில்லியன் ரூபாவை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.

Sunday, April 14, 2024

ஒலிம்பிக்கில் நான்கு போட்டிகளை இலங்கை இலக்கு வைத்துள்ளது


   பரிஸ் 2024  ஒலிம்பிக் போட்டிகளில் குறைந்தது நான்கு போட்டிகளில் பங்கேற்க இலங்கை தகுதி பெறும் என இலங்கை தடகளம்   தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ (ஓய்வு பெற்றவர்) தெரிவித்துள்ளார்   

பரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு தடகள நிகழ்வுகளுக்கான தகுதி காலம் ஜூன் 30 2023 முதல் ஜூன் 30 2024 வரை ஆகும், ஆனால் இலங்கை விளையாட்டு வீரர்கள் எவரும் தேவையான தரத்தை எட்டவில்லை. 

 2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை இலக்காகக் கொண்டு  அமைக்கப்பட்ட 36 உறுப்பினர்களைக் கொண்ட உயரடுக்கு தடகளக் குளம் தற்போது பயிற்சியில் உள்ளது.   

பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற யுபுன் அபேகோன் (100 மீ. ஆண்கள்), ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னா (800 மீ. பெண்கள்), ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தில்ஹானி லெகாம்ஜோ ( 4X400  மீ) உள்ளிட்ட உயரடுக்கு விளையாட்டு வீரர்கள் பங்கேற்கலாம் என இலங்கை தடகளம் நம்பிக்கை கொண்டுள்ளது. வரவிருக்கும் சர்வதேச தடகள நிகழ்வுகளில் ஆண்கள் ரிலே அணி தங்கள் செயல்திறனை மேம்படுத்த முடியும். 

இதற்கிடையில், நாசாவ் பஹாமாஸில் உள்ள தாமஸ் ராபின்சன் ஸ்டேடியத்தில் மே 4 முதல் 5 வரை நடைபெறும் IAAF உலக தடகள ரிலே சம்பியன்ஷிப், இறுதி ஒலிம்பிக் தகுதி ரிலே நிகழ்வாக இருக்கும். 

இலங்கை 4X400 மீற்றர் ஆடவர் தொடர் ஓட்ட அணியில் கலிங்க குமாரகே, அருண தர்ஷன, ராஜித ராஜகருணா, தினுக தேஷான் , பசிந்து கொடிகார ஆகியோர் இடம்பெறவுள்ளனர்

Monday, March 4, 2024

இந்திய அரசியலுக்காக பலிக்கடாவான சாந்தன்

இந்தியத் தேர்தல்களம்  மிகச் சூடாக மிகச் சூடாக  இருந்த காலகட்டத்தில் தேர்தல்பரப்புரைக்காக தமிழகத்துக்கு  விஜயம் செய்த முன்னாள்  பிரதமர் ராஜீவ் காந்தி குண்டு  வெடிப்பில் பலியான செய்தி உலகை அதிர்ச்சியடையச் செய்தது. தற்கொலைக் குண்டுதாரியால் ராஜீவ் காந்தி  படுகொலை செய்யப்பட்டார். அந்தக் குற்றப் பின்னனியில் விடுதலைப்பு புலிகள்  இருப்பதாக வெளியான செய்தியால்  இலங்கைத் தமிழர்கள்  நிலை குலைந்தனர்.  இந்தியாவின்  புலனாய்வாளர்கள்  குற்றவாளிகளைத் தேடி  வலை விரித்தார்கள்.

 அந்த வலையில் சிக்கிய சாந்தன்     உடல் நலக் குறைவால் கடந்த  புதன்கிழமை வைத்தியசாலையில் காலமானார். விசாரணை, கைது, தடுப்பு , மரணதண்டனை, விடுதலை என 1991 ஆம்  ஆண்டு  ஆரம்பமான  சிறை வாழ்க்கைக்கு இயற்கை முற்றுப்புள்ளி வைத்தது. மிகுந்த  போராட்டத்தின்  மத்தியில்   விடுதலை செய்யப்பட்ட  சாந்தனை இலங்கைக்கு அனுப்ப  இந்திய மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கவில்லை. காலம் தாழ்ந்து அனுமதி   கொடுக்கப்பட்டபோது  கோமா நிலையில் இருந்த சாந்தனுக்கு  எதுவுமே தெரியாது.

இந்திரா காந்தியைக் கொடூரமாகக் கொலை செய்த சீக்கியர்களை மன்னித்தவர்களால்,  ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை வெளியில் விட மனம்  இல்லை.  ராஜீவ்  கொலையில் சம்பந்தப்பட்டவர் என  குற்றம் சாட்டப்பட்ட  நளினியை சிறையில்  சந்தித்த   ராஜீவ் காந்தியின்  மகள்  பிரியங்கா சந்தித்து உரையாடினார். ராஜீவ் காந்தியின் குடும்பம் மன்னித்தது. ஆனால், இந்திய அரசியல்களம் அவர்களை மன்னிக்கவில்லை. கடைசி நேரத்திலாவது தாயின்  கையால் சாப்பிஅட  வேன்டும் ந்ன  சாந்தன் விரும்பினார். தாயாரும்  உணவுடன் காத்திருந்தார்.  சாந்தனின் உடல்தான  இலங்கைக்கு வந்துள்ளது.

ராஜீவ்  கொலைக் குற்றச் சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட எழு பேரின் விடுதலையும்  மிகுந்த  போராட்டத்தின்  மத்தியில்  நிறைவேறியது. தமிழகத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள்   நெடுமாறன், வைகோ போன்றவர்கள்  முழு முயற்சி செய்தனர்.  புகழ்  பெற்ற சட்டவல்லுநர்கள்  பணம் வாங்காமல்  ஆஜரானார்கள்.  நளினியின்  மரண தண்டனைகருணாநிதி காலத்தில் ஆயுள் தண்டனையானது.  ஏனைய ஆறு பேரின்  மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ப்பட்டது. ஆயுள்  தண்டனை காலம் 20  வருடங்களின்ன்  பின்னர் விடுதலை செய்யலாம் என்ற கோரிக்கை  நிராகரிக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றம், சிறப்பு விசாரணை என்று முட்டுக்கட்டை போடப்பட்டது. அன்றைய  முதலமைசரான  ஜெயலலிதா ஏழு பேரின் விடுதலையைக் கையில் எடுத்து அரசியலாகினார்.  மத்திய அரசு  தடுப்பணை போட்டது.

யார் இந்த சாந்தன்

1991ம் ஆண்டு மே 21ம் திகதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்  அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்திய பிரதமர் மரணம் என்பது உலகத்தையே உலுக்கும் ஒரு நிகழ்வாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ராஜீவ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக நளினி கைது செய்யப்ட்டார். இதே வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர்தான் சாந்தன்.

சுரேந்திர ராஜா என்று அழைக்கப்பட்ட இந்த சாந்தன் ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். இவர் இலங்கையில் பிறந்தவர். சாந்தன் விடுதலை புலிகள் அமைப்பின் உளவு பிரிவில் பணியாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படியில் 1991 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி சாந்தன்  கைது செய்யப்பட்டார்.

பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் மரண தண்டணை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 2022ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் இலங்கை தமிழரான சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த புதன் கிழமை  அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாந்தன் மறைவு குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான தேரணி ராஜன் கூறுகையில்,

"கல்லீரல் செயலிழப்பு காரணமாக அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த துறையின் தலைவரும், மருத்துவருமான பிரேம்குமார் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சித்தோம்.

அதன் காரணமாக பயாப்சி சோதனை மேற்கொள்ள முயன்றோம். அதற்கு சாந்தன் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து கிரிப்டோஜெனிக் சிரோசிஸ் பாதிப்பு காரணமாக சில சமயம் சுயநினைவு குறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். அதன் காரணமாக தீவிர கண்காணிப்பிள்ல இருந்தார். நேற்று இரவு அவரது உடல் நிலை கடும் பின்னடைவை சந்தித்து சுயநினைவை இழந்தார். இந்நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டது. சிபிஆர் சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்" என தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை குற்றவாளிகள் கைது, தண்டனை, விடுதலை

1991 மே 21  ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில்  கைது செய்யப்பட்ட 26 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 1998 ஜனவரி 28 ஆம் திகதி, 26 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கியது பூந்தமல்லி தடா நீதிமன்றம்.

அதனைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு மே 11 திகதி 26 பேரில் 19 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டது. 1999 அக்டோபர் 8 ஆம் திகதி தூக்கு தண்டனையை குறைக்கக் கோரிய சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 1999 அக்டோபர் 10ஆம் திகதி நால்வரும் ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினர். 1999 அக்டோபர் 29ஆம் திகதி அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார்.

1999 நவம்பர் 25 ஆம் திகதி ஆளுநரின் உத்தரவை ரத்து செய்து அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவு கொடுக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆனால் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை இரத்து செய்யப்படவில்லை.

2000 ஏப்ரல் 26ஆம் திகதி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூவரும் இந்திய ஜனாதிபதிக்குக்  கருணை மனு அனுப்பினர். அன்றைய ஜனாதிபதியான     கே.ஆர்.நாராயணன் அவருக்குப் பிறகு வந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோர் கருணை மனுக்களின் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டனர். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியான  பிரதீபா பாட்டீல் 2011 ஆகஸ்ட் 12ஆம் திகதி கருணை மனுக்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். அதன் விளைவாக தமிழ்நாட்டில் அதனைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்தது.

பின்னர் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவரும் சேர்ந்து, தாங்கள் அதிக வருடங்கள் சிறையில் கழித்துவிட்டோம் என்று, தூக்கு தண்டனையை இரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 2014 பிப்ரவரி 18ஆம் திகதி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையை இரத்து செய்து சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

2014 பிப்ரவரி 19ஆம் திகதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய கைதிகள் விடுதலை என ஜெயலலிதா அறிவித்திருந்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி சிபிஐ விசாரித்த வழக்குகளில் எடுக்கும் முடிவை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று கூறி, மத்திய அரசுக்கு தெரிவித்த போது, அப்போது இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி விடுதலைக்குத் தடை பெற்றது. பின்னர் நடைபெற்ற அந்த வழக்கில், 2015 டிசம்பர் 2  ஆம் திகதி மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவர்களை விடுவிக்க முடியாது என நீதிபதி இப்ராஹீம் கலிபுல்லா அமர்வு தீர்ப்பளித்தது.

2016 மார்ச் 2 ஆம்  திகதிபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. 2018 மார்ச் 6, 7 பேரை விடுவிப்பு தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பளித்தது. 2018 டிசம்பர் 6ஆம் திகதி 161 சட்ட விதிப்படி ஆளுநர் இறுதி முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அதிகாரம் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பேரறிவாளன் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் , ஜெயக்குமார் ஆகியோர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்களில் பேரறிவாளனைத் தவிர மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். வரலாற்றில் இடம்பிடித்த துயர சம்பவமான ராஜீவ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஏழு  பேரில், சாந்தன் சொந்த நாடு திரும்பாமலேயே உயிரிழந்துள்ளார்.

விடுதலை கோரிய   சாந்தனின் கடிதம்

திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில்   முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தபடி கடந்த ஆண்டு இலங்கை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்அந்த கடிதத்தில்,

"இலங்கை குடிமகனான நான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன். தற்போது நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். கடந்த 32 வருடங்களாக எனது தாயாரைப் பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன்நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பினேன். இலங்கையில் என் மீது வழக்கு இல்லை. தயவு செய்து எனது சிரமத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும் என கோரியிருந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சாந்தன் தரப்பில் வழக்கும் தொடரப்பட்டது. அதில், இலங்கையில் முதுமையில் இருக்கும் தாயாரை கவனித்துக்கொள்ள திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்ப கோரி மனு கொடுத்திருந்தேன். இம்மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் தம்மை இலங்கைக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என சாந்தன் கோரியிருந்தார்.

 இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்  இரண்டு  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், சாந்தன் இலங்கைக்கு செல்வதற்காக தற்காலிக பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் வழங்கி இருக்கிறது. இந்த ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுஆனால் மத்திய அரசு தரப்பிலோ, தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆவணங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆவணங்கள் கிடைத்த உடன் ஒரு வாரத்தில் சாந்தன் இலங்கைக்கு செல்வதற்கான உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 இந்த நிலையில்தான் சாந்தனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தனின் உடல் நிலையில் நேற்றைய தினம் பின்னடைவு ஏற்பட்டது. கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், பிற பாதிப்புகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சாந்தன் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் விரைவில் முன்பதிவு செய்யப்படும் என தகவல் வெளியானது. சாந்தன் இலங்கை செல்வதற்கான அனுமதி கடிதத்தை திருச்சி கலெக்டருக்கு மத்திய அரசு அனுப்பியது. இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் சாந்தன் அந்நாட்டுக்கு அனுப்பப்படுவார் என்ற நிலை உள்ளது. இப்படியான சூழலில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று உயிரிழந்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 32 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான பின்னர் சொந்த மண்ணான இலங்கைக்கு சென்று வசிக்க வேண்டும் என்று நினைத்த சாந்தனின் ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனது. அவரது உயிர் ராஜீவ்காந்தி மருத்துமனையில் பிரிந்து விட்டது.

விடுதலையான  பேரறிவாளனை  தமிழக  முதல்வர் கட்டி அணைத்தது விமர்சனத்துக்குள்ளானது. பேரறிவாளனின் வாக்குமூலம் என்ற ஒற்றை சாட்சியம்தான், ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எதிரான வலுவான சாட்சி. அதுதான் பேரறிவாளனை இப்போது தூக்குக் கொட்டடியில் துடிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த சி.பி.. அதிகாரி தியாகராஜன்,அந்த வாக்குமூலம் முழுமையாகப் பதிவாகவில்லை. பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலமும் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பேரறிவாளன் ஒரு நிரபராதி என்று  ஓய்வு பெற்ற பின்னர்  தெரிவித்துள்ளார். இது ஒரே  ஒரு உதாரணம்  இது போன்றபல தகவல்கள் ஆங்காங்கே  சந்தேகத்துடன்  இருக்கின்றன.

பேரறிவாளனின் தாய் நடத்திய போராட்டங்கள்  வெற்றி பெற்று அவர் விடுதலையானார். பேரறிவாளனின் தாய் மகிழ்ச்சியில் உச்சத்துக்குச் சென்றார்.   சாந்தனின் தாயார் நடத்திய  போராட்டங்கள் சமூக  வலைத் தளங்களில்  பதிவாகி இருந்தன  உரிய நடவடிக்கை  எடுக்கப்ப்டவில்லை. சாந்தன் உயிருடன்  இலங்கைக்கு வருவார் என  உணவுடன் காத்திருந்த தாயார் ஏமாற்றமடைந்துள்ளார்திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும்  மற்றைய மூவரையுமாவது  இந்தியா  ஊயிருடன் விடுதலை செய்யுமா என்ற கேள்வி  பலமாக எழுந்துள்ளது.

ரமணி