Showing posts with label தலிபான். Show all posts
Showing posts with label தலிபான். Show all posts

Wednesday, September 1, 2021

ஆப்கானை விட்டு அமெரிக்கா வெளியேறியதால் தலிபான்கள் கொண்டாட்டம்

ஆப்கானை  விட்டு  அமெரிக்கா  வெளியேறியதால்  தலிபான்கள்  கொண்டாட்டம்

* கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் 1.74 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்

* இந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா செலவிட்டது 417 இலட்சம் கோடி ரூபாய்

* ஆப்கானில் 2,461 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்

* அமெரிக்க இராணுவ ஒப்பந்ததாரர்களில் 3,846 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

* ஆப்கானிஸ்தான் இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளைச் சேர்ந்த 66 ஆயிரம் பேர் பலியாயினர்

* ஆப்கான் மக்களில் 47 ஆயிரத்து 245 பேர் பரிதாபமாக இறந்தனர்

அல்கொய்தா தலைவர்   ஒஸாமா பின்  லேடனைத்தேடி ஆப்கானிஸ்தானுக்குள்   நுழைந்த  அமெரிக்கா  இருபது   வருடங்களின்  பின்னர் அங்கிருந்து   வெளியேறியது. அமெரிக்காவின்  கடைசி  இராணுவ  வீரர்  வெளியேறியதும், தலிபான்கள்  துப்பாக்கியால் சுட்டு  தம்து  மகிழ்ச்சியைக்  கொண்டாடினர். இருபது  வருட  உழைப்பு  வெறும்  பத்து  நாட்களில்  தவிடு  பொடியாகியது.

காபூல்  விமானநிலையத்தை  விட்டு  அமெரிக்கா  வெளியேறியதும் தலிபான்கள்  காபூல்  விமானநிலையத்தைத்  தமது  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு  வந்தனர்.

காஃபூல் விமான நிலையத்தில் இருந்து கடைசி சி -17 விமானம்  காலை 6.56 க்கு வெளியேறியது.   ஆப்கானிஸ்தானில் இருந்து விலகுவதை  அமெரிக்கா நிறைவு செய்துள்ளது, அமெரிக்காவின் மிக நீண்ட போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க  இராணுவ வரலாற்றில் ஒரு அத்தியாயம்  மூடப்பட்டுவிட்டது. மிகப்பெரிய தோல்விகள், நிறைவேறாத வாக்குறுதிகள் கடைசி  நேரத்தில்  180 க்கும் மேற்பட்ட ஆப்கானியர்களும், 13 அமெரிக்க இராணுவத்தினரும் உயிர்களை இழந்த வெறித்தனமான இறுதி வெளியேற்றம்.

ஆப்கானில் இருந்து புறப்பட்ட அமெரிக்காவின் கடைசி விமானத்தில் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டோபர் டொனாஹே, ஆப்கனுக்கான பொறுப்பு துாதர் ராஸ் வில்சன்  ஆகியோர் கடைசி நபர்களாக ஏறினர்

கடந்த 15 நாட்களாக நடந்து வந்த மீட்பு நடவடிக்கைகளில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர், வெளிநாட்டவர், ஆப்கானிஸ்தானியர்களை மீட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. அதேபோல் நட்பு நாடுகளும், தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்டுள்ளன.

'ஆப்கானிஸ்தானுக்கு விடுதலை கிடைத்துள்ளது. விமான நிலையம் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அனைவருக்கும் பாதுகாப்பு, அமைதி உறுதி செய்யப்படும்,'' என, தலிபான் மூத்த தலைவர் ஹக்மத்துல்லா வாசிக் கூறியுள்ளார்.''அன்னிய படையெடுப்பு, ஆக்கிரமிப்பில் இருந்து நாடு விடுதலை பெற்றுள்ளது. இது உலக நாடுகளுக்கு ஒரு பாடம்,'' என, தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார்.

அமெரிக்க படைகள் விலக்கி கொள்ளப்பட்டு தலிபான் கட்டுப்பாட்டுக்குள் விமான நிலையம் வந்துள்ளது. ஆனாலும், நாட்டை விட்டு செல்வதற்காக நேற்றும் பலர் விமான நிலையம் அருகே காத்திருந்தனர். அமெரிக்கப்படை  விமான  நிலையத்தை  விட்டு  வெளியேறிய  பின்னர்  தலிபான்களின் முக்கிய  தலைவர்கள்  அங்கு   சென்று  பார்வையிட்டனர்.

ஆப்கானிஸ்தானை    விட்டு தப்பிக்க முயன்றவர்கள் விட்டுச் சென்ற பைகள், கிழிந்த துணிகள் என விமான நிலையமே குப்பை காடாக காட்சியளிக்கிறது. தவிர தப்பிச் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்தவர்களின் கார்களும், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தண்ணீர்ப்  போத்தல்கள்உணவுப் பொட்டலங்கள்  ஆகியவற்ருடன்  அமெரிக்கர்களுக்கு  உதவிய  நாய்களும் கைவிடப்பட்டுள்ளன.

   அமெரிக்கப்படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறும் முன்னர் தங்களின் தளவாடங்களை முழுமையாக எடுத்துச் செல்ல போதுமான நேரம் கிட்டவில்லை. இருப்பினும் தங்கள் நாட்டு இராணுவ தளவாடங்கள் தலிபான்கள் கைக்கு செல்வதை  அவர்கள் தவிர்த்துள்ளனர்.

 சினூக் ஹெலிகாப்டர்கள், ஹம்வீக்கள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு போன்றவற்றை நிரந்தரமாக செயலிழக்கச் செய்துவிட்டு தான் அமெரிக்க படையினர் வெளியேறியிருக்கின்றனர்.அமெரிக்க படையினர் வெளியேறிய பின்னர் காபூல் விமான நிலையத்தில் சினூக் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்கு செல்லும் தலிபான்கள் அவற்றை பார்வையிடும் வீடியோவை பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

 இதனிடையே இராணுவ தளவாடங்களை செயலிழக்கச் செய்தது குறித்து பேசியிருக்கும் அமெரிக்க ஜெனரல் கென்னத் மெக்கன்சி, “காபூல் விமான நிலையத்தில் இருக்கும் 73 ராணுவ விமானங்களை அமெரிக்க படையினர் செயலிழக்கச் செய்துவிட்டனர். இனி அவற்றை நிரந்தரமாக பயன்படுத்த முடியாது. அவை ஒருபோதும் பறக்காது. அவற்றை யாராலும் பறக்க வைக்கவும் முடியாது. இதே போல 27 ஹம்வீ வாகனங்களும், 74   கவச வாகனங்களும் நிரந்தரமாக பயன்படுத்த முடியாத வகையில் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன‌” என தெரிவித்தார்.கவச வாகனம் ஒன்று மட்டுமே 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடையது.

 மேலும் இந்த தளவாடங்களை வெடிக்க வைத்து செயலிழக்க வைப்பதை அமெரிக்க படையினர் தவிர்த்து விட்டனர். அப்படிச் செய்திருந்தால் விமான நிலையத்தையே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், பயணிகள் விமானங்களை அங்கு இயங்க வைக்கும் முயற்சியாக ராஜ தந்திர வகையில் அமெரிக்க படையினர் செயல்பட்டிருப்பதாக கென்னத் மெக்கன்சி குறிப்பிட்டார்

இதனிடையே காபூல் விமான நிலையத்தில் நிறுவியிருந்த  சி ‍ -ரம்ஸ் எனப்படும் ரொக்கெட் எதிர்ப்பு அமைப்பையும் அமெரிக்க படையினர் செயலிழக்க வைத்து எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாத வகையில் செய்திருக்கின்றனர். அமெரிக்க படையினர் வெளியேறுவதற்கு கடைசி நிமிடம் முன்பு வரை இந்த ரொக்கெட் எதிர்ப்பு அமைப்பு செயல்பாட்டில் இருந்துள்ளது. இந்த ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தான் .எஸ் அமைப்பினரின் தாக்குதல்களை சில மணி நேரங்கள் முன்பு வரை முறியடிப்பதில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தகுந்தது. அமெரிக்க ராணுவ தளவாடங்கள் செயல்படாத நிலையில் இருப்பதை அறிந்த தாலிபான்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விமான நிலையத்தை பராமரிக்க தேவையான   உபகரணங்களும்,தொழில்நுட்ப நிபுணர்களும் தலிபான்களிடம் இல்லை. கட்டார் அல்லது துருக்கியின் உதவியுடன்   மீளமைக்கப்படும்  என  தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கப்  படைகள்  கைவிட்டுச்  சென்ற  விமானங்களுக்குள்  சென்ற  தலிபான்கள் விமானிகளின்  இருக்கையில்  அமர்ந்து  இருக்கும் புகைப்படங்களை  வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க படைகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டுள்ள நிலையில் 200 அமெரிக்கர்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக கூறப்படுகிறது. விமான நிலையத்துக்கு வர முடியாமல் 200 அமெரிக்கர்களும், ஏராளமான ஆப்கானிஸ்தானியர்கள் சிக்கியுள்ளனர்.   காபூல் விமான நிலையம் திறக்கப்பட்டதும் அவர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என    அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கென் கூறியுள்ளார்.

 கடந்த இரண்டு வாரங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை மீட்டு வந்துள்ளோம். இன்னும் சில நாட்கள் அங்கு இருந்திருந்தால் அனைவரையும் மீட்டிருப்போம் எனவும்  அவர்  மேலும்  தெரிவித்தார்.

இதற்கிடையே அமெரிக்கர்களை சாலை மார்க்கமாக மீட்பது குறித்து ஆப்கானின் அண்டை நாடுகளுடனும், தலிபான்களுடனும் பேச்சி  வார்த்தை  நடைபெறுவதாகவும்  ,ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க  தூதரகம் கட்டாரின் தலை  நகர்  டோஹாவில் இருந்து செயற்படும்  எனத்  தெரிய  வருகிறது

அமெரிக்காவின் தோல்விகள் ஏராளம்   இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பதற்கும் ஆயுதங்களை தயார் செய்வதற்கும் அமெரிக்க பில்லியன் டொலர் செலவழித்த போதிலும், கிளர்ச்சியாளர்களை தடுத்து நிறுத்தக்கூடிய ஆப்கான் இராணுவத்தை உருவாக்க முடியவில்லை.

  தலிபான்கள் அரசாங்கத்தை முழுமையாகக் கைப்பற்றியதால் தொடர்ச்சியான பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு இருப்புக்களில் வைத்திருக்கும் பில்லியன் கணக்கானடொலர்களில் பெரும்பான்மையானவை இப்போது அமெரிக்காவில் பிடியில்  உள்ளன. நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் பல மாதங்களாக தங்கள் சம்பளத்தை பெறவில்லை என்று கூறுகின்றனர்.

மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளது.ஆயிரக்கணக்கானோர் மோசமான நிலையில் வாழ்கின்றனர். ஒரு பெரிய வறட்சி நாட்டின் உணவுப் பொருட்களை குறைத்து, அதன் இறக்குமதிகளை மேலும் முக்கியமாக்கி, மக்கள் பசியால் வாடும் அபாயத்தை அதிகரித்துள்ளது

இவற்றை எல்லாம் தலிபான்கள் எப்படிச்  சமாளிக்கப்போகிறார்கள். எந்த  நாட்டில்  இருந்து எப்படியான  உதவியை  எதிர்பார்கிறார்களென்பதை  அவர்கள்தான்  தெளிவுபடுத்த  வேண்டும்.

Tuesday, August 31, 2021

ஆப்கானின் வீழ்ச்சியும் தலிபான்களின் எழுச்சியும்

 அமெரிக்காவும் அதன்  நேச நாடுகளும்  ஆப்கானிஸ்தானின்  எழுச்சிக்காக  செய்தவை   அனைத்தையும்   தலிபான்கள்  இரண்டு  வாரங்களில்  தலைகீழாக  மாற்றி  விட்டனர்.   ஆப்கானிஸ்தானை  தலிபான்கள்  மீண்டும்  கைப்பற்றியதற்கு  பல  காரணங்கள்  முன் வைக்கப்ப‌டுகின்றன. ஆய்வாள‌ர்கள்  ஆளுக்கொரு  கருத்தை  முன்  வைக்கின்றனர். தாய்  நாட்டைப்  பாதுகாக்காது   தலைமரைவாகும் ஆப்கானிஸ்தான்  இராணுவம் என  அமெரிக்க  ஜனாதிபதி  ஜோ பிடன்  கண்டித்தார்.

அமெரிக்க  ஜனாதிபதி  ஜோ  பிடனின்   குற்றச்  சாட்டை  ஆப்கான்  இராணுவத்தின் 209 வது ஷாஹீன் படையின் செய்தித் தொடர்பாளராக இருந்த  கேணல்  ஹனிஃப் ரெசாய்  மறுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைமை, இராணுவ ஊழலின் பலவீனம் ஆகியவற்றால் தீவிரவாதிகளின் மீள் எழுச்சி பெற்றனர் என்று ஹனிஃப் ரெசாய், ஸ்கை நியூஸிடம் கூறினார்.   ஆனால்,  இரட்டை  வேடமிட்ட  பாகிஸ்தானால்தான் தலிபான்கள் எழுச்சி  பெற்றன‌ர்  பஞ்ஷீரில்  இருக்கும்  என   துணை  ஜனாதிபதி தெரிவித்தார்.

கேண‌ல் ஹனிஃப் ரெசாய் 209 வது ஷாஹீன் கார்ப்ஸின் செய்தித் தொடர்பாளராக இருந்தார், இது வடக்கு நகரமான மசார்-இ-ஷெரிஃபில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் இராணுவப் பிரிவாகும்.

இப்போது அவர் ஆப்கானிஸ்தானுக்கு வெளியே  அடையாளம்தெரியாத இடத்திலிருந்து ஸ்கை நியூஸுடன் தொலைபேசியில் உரையாடினார். அங்கு அவரும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாக உள்ளனர். அங்கு கூட தமக்கு  பாதுகாப்பு  இல்லை என்றார்.

20 வருடப் போரில் 66,000 ஆப்கானிஸ்தான் துருப்புக்களின் இறந்தனர். இது  அமெரிக்காவுக்குத் தெரியாதா என  அவர்  கேள்வி  எழுப்புகிறார். அவர் ஆகஸ்ட் 11 அன்று அப்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானியின் மசார்-இ-ஷெரீஃப் வருகைக்கு வடக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அன்று, அருகிலுள்ள குண்டூஸில், நூற்றுக்கணக்கான வீரர்கள் தலிபான்களிடம் சரணடைந்தனர். கர்னல் ரெசாய் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆப்கானிஸ்தானுக்கு வெளியே பதுங்கி உள்ளனர்மசார்-இ-ஷெரீப்பில், உள்ளூர் வல்லுநர்களான அட்டா முகமது நூர், அப்துல் ரஷித் தோஸ்தம் ஆகியோருடன்  கானி  ஒரு சந்திப்பை நடத்தினார். மூன்று நாட்களுக்குப் பிறகு, வடக்கு ஆப்கானிஸ்தானின் கடைசி நகர்ப்புற மசார்-இ-ஷெரீப் தலிபான்களிடம் வீழ்ந்தது.அடுத்த நாள் தலைநகர் காபூலும் தலிபான்களால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து  ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு ஓடிவிட்டார். அவரை  நம்பிய  மக்களையும், நாட்டையும் விட்டு  ஜனாதிபதி  வெளியேறியது  அவமானமானது.. "அஷ்ரப் கனிக்கு  ஆப்கானிஸ்தான் மக்களிடமோ அல்லது நாட்டிலோ ஆர்வம் இல்லை," என்று கேணல் ரெசாய் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் பணி தோல்விக்கு முக்கிய பங்களிப்பாளராக இல்லாவிட்டால் அரசியல் மற்றும் இராணுவ அளவில் உள்ளூர் ஊழல் மிக முக்கியமானதாக இருக்கும் என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் நீண்டகாலமாக எச்சரித்து வந்தன. சர்வதேசப் படைகள் திரும்பப் பெற்ற பின்னரும், அவர்கள் விட்டுச் சென்ற  சொத்துகள் முறையாக விற்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன, ஒரு சில தனிநபர்கள் அவற்றின்  வருமான‌த்தை அபகரித்தனர். "அரசியலிலும்  இராணுவத்திலும் மிக விரிவான ஊழல் இருந்தது," என்று அவர் கூறினார். நான் உட்கார்ந்து உங்களுக்கு உதாரணங்களைக் கொடுத்தால், பல, பல உதாரணங்கள் இருக்கும், எரிபொருள், உணவு, சம்பளம் பற்றிய விஷயங்களை நான் மேற்கோள் காட்ட முடியும் கேணல் ரெசாய் கூறினார். ஆப்கான்  மக்கள்  தலிபான்களின்  ஆட்சியை  விரும்பவில்லை  என     என  கேண‌ல் ரொசாய் உறுதியாகக் கூறினார்.

ஆப்கான் ஜனாதிபதியாக  தன்னை அறிவித்துக் கொண்டவரும் தாலிபான்களை எதிர்த்து கொரில்லா போரில் ஈடுபட்டவருமான அம்ருல்லா சலே  சி என் என்னுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பாகிஸ்தானின் தாலிபான்கள் ஆதரவு போக்கை வெகுவாகக் கண்டித்தார். ஆப்கானிஸ்தானின்  ஜனாதிபதி  நாட்டை விட்டு  தப்பி  ஓடியதால்  துணை ஜனாதிபதியான தான் தான் இப்பொ  ஆப்கானிஸ்தானின்  ஜனாதிபதி என அறிவித்துள்ளார் அம்ருல்லா சலே.

தலிபான்கள் ஒருபோதும் நெருக்கடியில் இருந்ததில்லை என்பது தெளிவு. பாகிஸ்தானை தங்கள் அடிப்படை ஆதரவாக வைத்துக் கொண்டுள்ளனர்.  . தலிபான்களின் பிடியில்தான் பாகிஸ்தானே உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் ஒத்துழைக்க அமெரிக்கா பணம் கொடுத்தது. ஆனால் அமெரிக்கா எவ்வளவு பணம் கொடுத்ததோ அந்த அளவுக்கு பயங்கரவாதத்துக்கும், தலிபான்களுக்கும் பாகிஸ்தான் ஆதரவளிக்கும் தைரியமும் வளர்ந்தது. எனவே அணு ஆயுத நாடானா பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்ததையோ ஆப்கானிஸ்தானின் மேற்கத்திய கூட்டணிக்கு எதிராக போர் மூண்டதைப் பற்றியோ பேசவே இல்லை.

டோகா பேச்சுவார்த்தைகள் தலிபான்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற மாட்டார்கள் என்பதை நியாயப்படுத்தியது. வாக்குறுதியை தூக்கி எறிந்து விட்டு உலக நாடுகளை முட்டாள்களாக்கி விட்டனர் தலிபான்கள். டோகா பேச்சுவார்த்தையின் நோக்கமே உலக நாடுகளின் கருத்தை பிரித்து வைத்து அமைதி பேச்சுவார்த்தையைப் பற்றி நம்பிக்கை ஏற்படுத்தத்தான், ஆனால் அப்படி ஒன்று இல்லை என்பதே அம்சருலாவின்  வாதம்.

தலிபான்கள்  ஆப்கானிஅக்  கைப்பற்ரியுள்ளனர்.  வெளிநாட்டுப்  படைகலும்  அவர்களுக்கு  உதவியவர்களில்  பலரும் ஆப்கானை  விட்டு  வெளியேறி  விட்டனர். ஆனால்,  நாட்டை  விட்டு  வெளியேற வழி இல்லாத  ஆப்கான்  மக்களுக்கு  ஆதரவு   யார்  என்பதே இன்றைய மிகப்  பெரும்  கேள்வி.  தலிபான்களின்  ஆட்சி  எப்படி  இருக்கும்  எனபது  அனைவரும்  அறிந்ததே. எதைச் செய்ய  மாட்டோம்  என  தலிபான்கள்  தெரிவித்தனரோ  அதனை கச்சிதமாக  செய்கிறார்கள்.

ஆப்கானின்  புதிய அரசாங்கத்தினுடைய‌ கொள்கைகள், வெளிநாட்டு  உறவுகள்  என்பனவே அதன்  எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்றன.

Saturday, August 28, 2021

கந்தக பூமியான காபூல் விமான நிலையம்

 ஆப்கானிஸ்தானில்  இருந்து படையினரும்  பொது  மக்களும்  வெளியேறும்  காபூல்  விமான  நிலையத்துக்கு  வெளியே அடுத்தடுத்து  தற்கொலைத்  தாக்குதல், குண்டு வெடிப்பு ,துப்பாக்கிப்  பிரயோகம்  என்பன  நடைபெற்றதால் 13  அமெரிக்க  விரர்கள் உட்பட   150 பேர்  கொல்லப்பட்டனர். 1500 க்கும்  மேற்பட்டோர்  காயமடைந்தனர். இறந்தவர்களில அமெரிக்காவின்  11 கடற்படையினர் மற்றும் ஒரு கடற்படை மருத்துவர் என்று அமெரிக்க அதிகாரிகள் ஆரம்பத்தில் கூறினர். மற்றொரு சேவை உறுப்பினர் மணிநேரங்களுக்குப் பிறகு இறந்தார்

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனைகளை இயக்கும் இத்தாலிய தொண்டு நிறுவனமான எமர்ஜென்சி, விமான நிலைய தாக்குதலில் குறைந்தது 60 நோயாளிகள் காயமடைந்ததாகவும், அவர்கள் வந்தபோது இறந்த 10 பேரைத் தவிர்த்துள்ளதாகவும் கூறியுள்ளது.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், விமான நிலைய அபே கேட்  நுழைவாயிலுக்கு அருகிலும்,, மற்றொன்று ஹோட்டலுக்கு சற்று தொலைவில் நடந்ததாகவும் தெரிவித்தார்.

தலிபான்களிலின்  பொறுப்பில்  ஆப்கானிஸ்தான் சென்ற பின்னர்  நடைபெற்ற  முதலாவது  தாக்குதலால் உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது. ஆப்கானில்  நிலைகொண்டிருந்த  படையினரும், ஆவ்ர்களுக்கு  உதவியவர்களும், தலிபான்களின்  ஆட்சியில்  அங்கு வாழ விரும்பாதவர்களும்  வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆப்கானை விட்டு  வெளியேறுவதற்கு  இன்னமும்  மூன்று  நாட்கள்  மட்டுமே  உள்ளது. அதற்கிடையில்ல் அங்குள்ள  அனைவரையும்  வெளியேற்றுவது  இயலாத  காரியம். அக்கல்க்கெடுவை  நீடிக்க  தலிபான்கள்  விரும்பவில்லை. தலிபான்கள்  உதவி   உதவ  வேன்டும் என  அமெரிக்க  ஜனாதிபதி  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காபூல்  விமானநிலையம்  தாக்கப்படலாம் என  அமெரிக்க  உளவுத்துறை  ஏற்கெனவே எச்சரிக்கை  விடுத்திருந்தது. விமானக்கள் அனைத்தும் மிக  பாதுகாப்பாக தரை  இறங்கி,  மெலெழுந்தன.  ஏவுகணை  மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற  அச்சம் நிலவியது. யாரும் எதிர் பாராத  வகையில்   தற்கொலைத் தாக்குதல், துப்பாக்கிப் பிரயோகம் என்பன நடந்துள்ளன. ஆப்கானிஸ்தான்  இப்போது  தலிபான்களின் கட்டுப்பாட்டில்  உள்ளது. ஆப்கானில் எதுவித  பயங்கரவாத  நடவடிக்கைக்கும் இடமளிக்கப்படமாட்டாது  என  தலிபான்கள்  உறுதியளித்திருந்தனர். இஸ்லாமிக் ஸ்டேட் குழு அதன் அமாக் செய்தி சேனலில் கொலைகளுக்கு பொறுப்பேற்றது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் அமைப்பு தலிபான்களை விட மிகவும் தீவிரமானது தலிபான்களுக்கும் ஐஎஸ் அமைப்புக்கும்  எட்டாப்பொருத்தம். அவர்களை  அடக்க  வேண்டிய  பொறுப்பு  தலிபான்களுக்கு  உள்ளது.

ஓகஸ்ட்  31  ஆம் திகதிக்கும்  பின்னரும்ம் அமெரிக்கப் படைகள்  ஆப்கானிஸ்தானி  இருக்க  வேன்டும். தலிபான்களுக்கும்  அம்ரிக்காவுக்கும் இடையில் முரண்பாடு  ஏற்பட  வேண்டுமென்ற  நோக்கத்திலும் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம். இந்தத் தாக்குதலை கடுமையாகக்  கண்டித்த அமெரிக்க  ஜனாதிபதி  ஜோ பிடன், தாக்குதல் நடத்தியவர்கலைத்  தேடி  அழிக்கப்போவதாக  சூழுரைத்துள்ளார்.

வெளியேற்றத்தை மேற்பார்வையிடும் அமெரிக்க ஜெனரல், இந்த தாக்குதல்கள்  வெளியேற்றுவதை   தடுக்காது என்றும், விமானங்கள் வெளியேறுவது தொடர்கிறது என்றும் கூறினார். அமெரிக்க மத்திய கட்டளையின் தலைவர் ஜெனரல் பிராங்க் மெக்கன்சி, விமான நிலையத்தில் அதிக அளவு பாதுகாப்பு இருப்பதாகவும், மாற்று வழிகள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார். ஏறக்குறைய 5,000 பேர்  காத்திருக்கின்றனர் என்றார்.

தாக்குதலினால் பொது மக்களை வெளியேற்றும் பணிகளை நிறுத்த மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இதனிடையே தாக்குதல் நடைபெற்றதும் உடனடியாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது அவர் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்கும், தாக்குதல் நடத்தியவர்கள் உரிய விலை கொடுக்க வேண்டி வரும் என்று தெரிவித்துள்ளார்.


இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி அமெரிக்க ராணுவத்திற்கு மொழிபெயர்ப்பு உதவி செய்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் இந்திய உளவு அமைப்புகளுக்கும் இது தாக்குதலில் ஈடுபட்டது ஐஎஸ் அமைப்புதான் என்ற தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிறகு காபூல் நகரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஐஎஸ்ஐஎஸ்-கே என அழைக்கப்படும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இந்த தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளனர். ஆனால் இதை உறுதி செய்ய இதுவரை ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஐஎஸ்ஐஎஸ்-கோரசன் என்பது சிரியா மற்றும் ஈராக்கில் தோன்றிய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் குழுவின் மற்றொரு பிரிவாகும். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய பகுதிகளில் இவை செயல்படுகின்றன. கே என்பதற்கு, "கோரசன்." என்பது பொருளாகும். இஸ்லாமிக் ஸ்டேட் கோராசன் மாகாணம் என்பது இதன் முழு அர்த்தம்.

மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதியை, அமெரிக்க ராணுவம், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக குண்டு வீசிக் கொலை செய்து, தன் சபதத்தை நிறைவேற்றியுள்ளது

 இது குறித்து அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர், ப்டன் பில் அர்பன் கூறியதாவது:காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி, ஆப்கனில் உள்ள நங்கர்ஹர் மாகாணத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக நடத்தப்பட்ட குண்டு வீச்சில் அந்த பயங்கரவாதி உயிரிழந்தான். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றார்.

அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையேயான போர்  முடிவுக்கு  வந்துள்ளது.ஆனால்,  அமெரிக்காவுக்கும்  வேறு  தீவிரவாத  குழுகளுக்கும் இடையேயான போர் தொடர்வதையே  காபூல்  தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளது. இப்படியான தாக்குதல்களைத்  தடுப்பதற்கு  தலிபான்கள்  அமெரிக்காவுடன்  இணைந்து  செயற்பட  வேண்டும். இல்லையேல். மீண்டும்  தலிபான்களுக்கு எதிராக  அமெரிக்கா  போராடும்  நிலை  ஏற்படும்.