Showing posts with label டெல்லி. Show all posts
Showing posts with label டெல்லி. Show all posts

Monday, May 18, 2026

10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அரிதான சம்பவம்

  ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 55-வது லீக் போட்டி தரம்சாலா நகரில்  நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் ,பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அசத்தியது.

 இந்தப் போட்டியின் போது  நாணயச் சுழற்சியில்  வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. பஞ்சாப் அணிக்கு எதிராக பந்துவீசிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி  ஒரு ஓவரை கூட சுழற்பந்து வீச்சாளரை வைத்து வீசாமல் 20 ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தே வீசியது. டெல்லி அணி சார்பாக மிட்சம் ஸ்டார்க், லுங்கி இங்கிடி, ஆகிப் நபி, முகேஷ் குமார், மாதவ் திவாரி ஆகிய ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே தலா 4 ஓவர்கள் வீசினர். அக்சர் பட்டேல் இந்த போட்டியில் பந்து வீசவில்லை. இதன் மூலம் கடந்த 2016-ஆம் ஆண்டிற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு அணி மொத்தமாக 20 ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து வீசியது இதுவே முதல் முறையாக மாறியுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் ஹைதராபாத் அணி இப்படி ஒரு சாதனையை செய்து இருந்தது.

  ஐபிஎல் போட்டிகளில் இதுபோன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 20 ஓவர்களை வீசுவது 13வது முறையாக அரங்கேறியுள்ளது. அதோடு போட்டியின் இரண்டாம் பாதியில் பந்துவீசிய பஞ்சாப் அணியும் தாங்கள் வீசிய 19 ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களை வைத்தே வீசியது குறிப்பிடத்தக்கது. 

Friday, April 10, 2026

ஒரு ஓட்டத்தால் டெல்லியிடம் தோற்றது குஜராத்


 ஐபிஎல் 2026 தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலேயே 1  ஓட்ட  வித்தியாசத்தில் வீழ்த்திய‌ குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வென்ற  டெல்லி கப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். குஜராத் அணியின் கே\ப்டன் சுப்மன் கில் 45 பந்துகளில் 70  ஓட்டங்களும் , ஜாஸ் பட்லர் 27 பந்துகளில் 52 ஓட்டங்களும் , வாஷிங்டன் சுந்தர் 32 பந்துகளில் 55  ஓட்டங்களும்  எடுத்தனர். இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 210  ஓட்டங்கள் என்ற வலுவான நிலையை  எட்டியது. டெல்லி தரப்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

211 என்ற க‌டினமான இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் நிதானமாக நின்று ஆடினார். அவர் 52 பந்துகளில் 11 பவுண்டரிகள் , 4 சிக்ஸர்களுடன் 92  ஓட்டங்கள் அடித்துஅணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார். பதும் நிசங்க 41  ஓட்டங்கள் எடுத்தார்.

ரஷித் கானின் அபாரமான பந்துவீச்சால் டெல்லி அணி  தொடர்ந்து விக்கெட்களை இழந்தது.    கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 12  ஓட்டங்கள் தேவைப்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் டெல்லி வீரர் குல்தீப் யாதவ் ரன் அவுட் ஆனதால், டெல்லி அணி 1  ஓட்ட‌ வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் இந்த சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. குஜராத் தரப்பில் 4 ஓவர்களில்   17 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஷித் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

Sunday, April 5, 2026

ரிஸ்வியில் அதிரடியால் மும்பையை வீழ்த்தியது டெல்லி


 

  

அதிரடியாக விளையாடுவதற்கு எளிதாக இல்லாத ஆடுகளத்தில் 163  ஓட்டங்களைத் துரத்தியபோது, ​​  51 பந்துகளில் 90  ஓட்டங்களை ரிஸ்வி  அடித்ததால் 18.1 ஓவர்களில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில்  டெல்லி கேபிடல்ஸ் அணி   வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லி  முதலில் பந்து வீசியது.

ரோஹித் சர்மாவிடன் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராகக் களம் இறங்கிய    ரிக்கல்டன் 9  ஒட்டங்களில் ஆட்டமிழந்தார்.   திலக் வர்மா  ஓட்டம்  எடுக்காமல் வெளியேறினார்.மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த ரோஹித், சூர்யகுமார் யாதவ் ஜோடி, 53  ஓட்டங்கள் சேர்த்தது. ரோஹித்,  35 , ரூதர்போர்ட் 5, சூர்யகுமார் யாதவ் 51, நமன் திர் 28  ஓட்டங்கள் எடுத்தனர்.  20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்த மும்பை 162 ஓட்டங்கள் எடுத்தது.ஹ‌ர்திக் பாண்டியாவிளையாடவில்லை. சூர்யகுமார் யாதவ் மும்பைக்கு கப்டனானார்.

163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களம் இறங்கியது.    ராகுல்  ஓட்டத்துடனும்,  நிதிஷ் ராணா  ஓட்டம் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.   மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த‌ பதும் நிசங்க , சமீர் ரிஸ்வி  ஜோடி  66  ஓட்டங்கள் அடித்து நம்பிக்கையளித்தது. . நிசங்க 44  ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மில்லர் , ரிஸ்வி ஜோடி  78 ஓட்டங்கள் எடுத்து மிரட்டியது.  51 பந்துகளில் 90ஓட்டங்கள் எடித்த ரிஸ்வி ஆட்டமிழந்தார்.

18.1 ஓவர்களில் 4 விக்கெட்களி இழந்த டெல்லி 164 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.மில்லர் 21 ஓட்டங்களுடனும் , ஸ்டப்ஸ் 3 ரன்களுடனும்  களத்தில் இருந்தனர்.

இந்த சீசனில் டெல்லி அணி விளையாடிய இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.   மூலம் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. ஆட்ட நாயகன் விருதை ரிஸ்வி வென்றார். 

Thursday, November 13, 2025

இந்தியாவை உலுக்கிய டெல்லியை குண்டு வெடிப்பு

இந்தியாவின் தலைநகரான டெல்லியில்  கடந்ததிங்கட்கிழமை நடந்த  கார் குண்டு வெடிப்பு ஒட்டு மொத்த இந்தியாவையும்  உலுக்கி உள்ளது. மக்கள் நெரிசலாக உள்ள செங்கோட்டை இந்தியாவின் அடையாளங்களில் ஒன்று.  பீகார் தேர்தலில் இந்தியாவின் கவனம் முழுவதும் இருந்த வேளையில்  தலைநகரில் குண்டு வெடித்துள்ளது.

  ரெட் போட் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே கார் குண்டு வெடித்தது என அறிவிக்கப்பட்டதால்  தற்கொலைத் தாக்குதலாக  இருக்குமோ என்ற‌  அச்சம் முதலில் ஏற்பட்டது. குண்டு வெடிப்பு,  தற்கொலைத் தாக்குதல் என்றால் அழிவு அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.ஆனால், 13  பேர் இறந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

வழமையான குண்டு வெடிப்புக்கான அடையாளம் எதுவும் அங்கே இல்லை. பாரியகுழி, சம்பவம் நடந்த இடத்தைச்  சுற்றி இருந்த  கார்கள், கட்டடங்க எவையும் அதிகம் பாதிக்கப்படவில்லை இது பெரிய ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் இது திட்டமிட்ட குண்டு  வெடிப்பு அல்ல என்று புலனாய்வாளர்கள் கருதுகிறார்கள். வெடிகுண்டுகளை இடமாற்றம் செய்யப்பட்ட போது ஏற்பட்ட விபத்தாக  இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.  குண்டு வெடித்தபோது நெரிசல் மிகுந்து இருந்ததால் கார் மெதுவாக நகர்ந்தது.  வீதியில் இருந்த  மேடு பள்ளம் காரணமாகவும்  குண்டு வெடித்திருக்கலாம் என வல்லுன‌ர்கள் கருதுகிறார்கள். பாதுகாப்பு, கெடுபிடி, சோதனைகள்  போன்றவற்றால் பதற்றத்தில் ஏற்பட்ட விபத்து என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.  சரியான முறையில் வெடிகுண்டு பொருத்தப்படாததனால் அதிக  சேதம் ஏற்படவில்லை.

காரைச்  செலுத்தியவர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்டரான உமர் நபி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.     மூன்று   நாட்களாக அவரது தொலசிபேசி இயங்கவில்லை. யாருடனும் தொடர்பில் இல்லாது தலை மறைவாக  இருந்தார்.

துரித கதியில் செயற்பட்ட இந்திய புலனாய்வுத்துறை பலரைக் கைது செய்தது. அதில் அதிகமானோர் டாக்டர்கள், சிலர் இளைஞர்கள்.

டெல்லித் தாக்குதலில் சூத்திரதாரியாகச் செயற்பட்டவர்கள் டாக்டர்கள் என்பதால் பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதில் ஒரு பெண் டாக்டரும் அடங்குகிறார். உயிரைக் காப்பாற்றும் டாக்டர்களே உயிரைக் குடிக்கும் பயங்கர்வாதிகளாகச் செயற்படுகிறார்கள்.

ஒபரெஷன் சிந்தூர் நடவடிக்கைகு பழிவங்குவதற்காக ஜெய்ஷ் - இ - முகமது   அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

  ஜெய்ஷ் - இ - முகமது   அமைப்புக்கு ஆதரவாக காஷ்மீரில்  பதாகைகள்  ஒட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய ஆதில் என்ற டாக்டர் உத்தரபிரதேசத்தில்  பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார்.

 அவரிடம் இருந்து 550 கிலோ வெடிபொருட்கள், ஏ.கே., - 56, ஏ.கே., - 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

   ஆதில் கொடுத்த தகவலின் பிரகாரம் ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையின் மருத்துவக் கல்லுாரி விரிவுரையாளர் முஸமில் கைது செய்யப்பட்டார். அவர் தங்கி இருந்த வீட்டில்  350 கிலோ, 'அமோனியம் நைட்ரேட்' வெடிபொருட்கள், துப்பாக்கிகள்  போன்ரவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

  இந்த ஆயுதங்களை கடத்துவதற்கு கார் கொடுத்து உதவிய   உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த மருத்துவ கல்லூரியில் புரோபஷராக பணியாற்றிய டாக்டர் ஷாகின் ஷாஹித் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது மகளிர் அமைப்பின் இந்தியப் பிரிவுக்கு தலைமை தாங்கி வந்ததாக கூறப்படும் நிலையில் அவரது பின்னணி பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.  இதில் தொடர்புடைய நான்காவது டாக்டரான உமர், கைது நடவடிக்கைகளால் தலைமறைவான நிலையில், வெடிபொருட்கள் நிரப்பிய காரை டில்லி செங்கோட்டைக்கு ஓட்டிச்சென்று வெடிக்க செய்துள்ளார்.

டாக்டர்களையும், இளைஞர்களை தீவிரவாத கொள்கைகளுக்குள் ஈர்த்ததாக கருதப்படும் ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் பகுதியை சேர்ந்த இமாம் இர்ஃபான் அகமது வாகா செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்யப்பட்டார்.

இவர் இதற்கு முன்பு ஸ்ரீநகரில் உள்ள அரசுக் மருத்துவக் கல்லூரியில் துணை மருத்துவ ஊழியராகவும்   பின்னர் நௌகாமில் இமாமாகவும் பணியாற்றியவர்.

இர்ஃபான் அகமது வாகாவின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ நிபுணர்கள் மற்றும் இளைஞர்களை தீவிரமயமாக்குவதில் (radicalising) இவர்கள் ஈடுபட்டதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி குண்டுவெடிப்புக்கு மூல காரணமான வெள்ளை நிற ஹூண்டாய் i20 கார் பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார் எங்கிருந்து ,எத்தனை மணிக்கு டெல்லி  சென்றது?, யார் யார் இந்த காரை வைத்திருந்தனர்? எப்படி இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு இந்த கார் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் குண்டு வெடித்த அன்று காலையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 2,900 கிலோ வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்களும், ஏகே 47 துப்பாக்கிகளும்  பறிமுதல் செய்யப்பட்டன.

 . இதனால்  பொலிஸாரின் தேடுதல் வேட்டையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக பயங்கரவாதிகள் வெடிபொருட்களை மாற்றும்போது எதிர்பாராதவிதமாக டெல்லி சிக்னல் அருகே நின்றபோது வெடித்து சிதறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

  டெல்லி குண்டுவெடிப்புக்கு காரணமாக கூறப்படும், 'ஹூண்டாய் ஐ -20' கார், ஹரியானா மாநிலம் பரிதாபாதில் இருந்து டெல்லிக்கு வந்தது என்பதை சிசிடிவி காட்சிகள் மூலமாக பொலிஸார் உறுதி செய்தனர். ஹரியானாவில் இருந்து புறப்பட்ட கார்  சம்பவம் நடந்த அன்று காலை 7:30 மணிக்கு இந்த கார்ஹரியானாவில் இருந்து  புறப்பட்டது.

 காலை 8:13 மணியளவில் டெல்லியின் நுழைவுவாயிலாக கருதப்படும் பதர்பூர் சுங்கச்சாவடி அருகே காணப்பட்டது. அங்கிருந்து காலை 8:20 மணியளவில் டெல்லி ஓக்ல தொழிற்பேட்டை அருகே உள்ள பெட் ரோல் நிலையத்தைக்  கடந்து சென்றது.

 மாலை 3:19 மணியளவில் டெல்லி செங்கோட்டை வளாகம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில்  சுமார் 3 மணி நேரம் வரை நிறுத்தப்பட்டிருந்தது. * இதன் பிறகு தான் அந்த கார் மாலை 6:22 மணியளவில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து டெல்லி செங்கோட்டை நோக்கிச் சென்றது.. அப்போது சரியாக மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள சிக்னலில் வந்த போது அந்த கார் வெடித்து சிதறியுள்ளது.

 ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவைச் சேர்ந்த 35 வயதான  உமர் முகமது என்பவர் தான் காரை  செலுத்தியவர் என  கண்காணிப்பு கமிரா காட்சிகள் மூலமாக தெரியவந்துள்ளது. இவர் சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பார் எனவும், சிதைந்த உடல் இவருடையதாகத்தான் இருக்கும் என சந்தேகித்துள்ள பொலிஸார் டிஎன்ஏ சோதனை செய்ய உத்தரவிட்டு இருக்கிறார்கள். உமர் முகமது பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்தவர் . ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களும் அங்குதான் பணியாற்றி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 டெல்லி குண்டு வெடிப்புக்கு காரணமான வெள்ளை நிற ஹுண்டாய் ஐ20 கார்  முதலில் 2014 ஆம் ஆண்டு பழைய குர்கானில் வசிக்கும் திலீப் என்பவரால் வாங்கப்பட்டது. ஏழு ஆண்டுகளின்  பின்னர்  அவர் காரை விற்று விட்டார்.

பலரிடம் கைமாறிய  இந்தக் கார்  சோனு என்ற முகவர் மூலம் ஃபரிதாபாத்தில் உள்ள தௌஃபிக்கிற்கு விற்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக கார் ஃபரிதாபாத்தில்தான் இருந்தது.

டெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிற‌தா என்ற‌ கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

கைதுசெய்யப்பட்ட பெண் மருத்துவர் ஷாஹீனிடம் புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியருகின்றன.

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது   அமைப்புடன் தொடர்புடைய ஷாஹீன், அந்த அமைப்பின் பெண் ஆள்சேர்ப்பு மற்றும் செயல்பாட்டு வலையமைப்பான ஜமாத்-உல்-மோமினீனின் கீழ் இந்தியாவில்  ஜெய்ஷ் இ முகமது பெண்கள் பிரிவை நிறுவி வழிநடத்தும் பணியில் அவர் ஈடுபட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்திய மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு என எதிர்க் கட்சிகள்  குற்றம் சாட்டுகின்றன.

காஷ்மீர், மணிப்பூர், டெல்லி, புல்வாமா, பஹல்காம் , தற்போது மீண்டும்  தலைநகர் டெல்லியில் குண்டு வெடித்துள்லது.பல இடங்களிலும் நடைபெற்றுள்ள

டெல்லிக் குண்டு வெடிப்பை தடுக்கத்  தவறியதற்கு யார் பொறுப்பு? நிர்வாகத்தின் எந்த இடத்தில் குறைபாடு உள்ளது? கடமையை செய்ய தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தானே மீண்டும் இப்படி நிகழ்வு அரங்கேறாமல் இருக்கும்? இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.

Wednesday, April 23, 2025

டில்லி வெற்றி வீழ்ந்தது லக்னோ

 லக்னோவில் நடைபெற்ற  ஐபிஎல் தொடரில்  லக்னோவை எத்ர்த்து விளையாடிய  டெல்லி 8 விக்கெற்களால் வெற்றி பெற்றது.கடந்த முறை போல, மீண்டும் நாணயச் சுழற்சியில் ' வென்ற டில்லி அணி கப்டன் அக்சர் படேல், வழக்கம் போல துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ  6 விக்கெற்களை இழந்து 156 ஓட்டங்கள் எடுத்தது. 17.5 ஓவர்களில்  2 விக்கெற்களை இழந்த டில்லி 161  ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

லக்னோ அணிக்கு மார்க்ரம், மிட்சல் மார்ஷ் ஜோடி துவக்கம் கொடுத்தது.

லக்னோ அணி 9 ஓவரில்  விக்கெற் இழப்பின்றி 82  ஓட்டங்கள் எடுத்தது.  சமீரா பந்தில் மார்க்ரம் 52, அ பூரன் 9,  அப்துல் சமத் 2 ,  மிட்சல் மார்ஷ் 45  ஓட்டங்கலில் ஆட்டமிழந்தனர்.

 20 வது ஓவரை முகேஷ் குமார் வீசினார். இதன் முதல் மூன்று பந்தில் படோனி 'ஹட்ரிக்' பவுண்டரி அடித்தார். 4வது பந்தில் படோனி 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.   அடுத்து வந்த ரிஷாப்பை, கடைசி பந்தில் 'டக்' அவுட்டானார்.

லக்னோ அணி 20 ஓவர்களில்  6 விக்கெட்டுக்கு 159  ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

மட்டும் எடுத்தது.  டில்லி சார்பில் முகேஷ் குமார்   4 விக்கெற்களை  சாய்த்தார்.

160  வெற்றி இலக்குடன் டெல்லி களம்  இறங்கியது. டில்லி அணிக்கு அபிஷேக் போரல், கருண் நாயர்   ஜோடி துவக்கம் கொடுத்தது. கருண் நாயர் 15  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.     பிஷ்னோய் பந்தை சிக்சருக்கு விரட்டிய அபிஷேக், 34 பந்தில் அரைசதம் எட்டினார். இவர் 51 ஓட்டங்கள் எடுத்தபோது  மார்க்ரம் சுழலில் அவுட்டானார்.

ராகுல், அபிஷேக் இணைந்து வேகமான ரன் குவிப்பை வெளிப்படுத்தியது. அக்சர் படேல், பிஷ்னோய் பந்துகளில் மாறி மாறி சிக்சர் அடிக்க, வெற்றியை வேகமாக நெருங்கியது டில்லி அணி. கடைசியில் ராகுல் சிக்சர் அடிக்க, டில்லி அணி 17.5 ஓவர்களி  2 விக்கெற்களை இழந்து 161 ஓட்டங்கள் எடுத்ததுடில்லி  மீண்டும் லக்னோவை வீழ்த்தியது. அரைசதம் அடித்த ராகுல் (57), அக்சர் படேல் (34)  ஆட்டமிழக்காமல்  இருந்தனர்.

கடந்த சீசனில் அணி உரிமையாளருடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக லக்னோ கேப்டன் ராகுல், அணியில் இருந்து வெளியேறினார். ஏலத்தில் டில்லி அணிக்கு சென்றார். விசாகப்பட்டனத்தில் இரு அணிகள் மோதிய போட்டி கடந்த மார்ச் 24ல் நடந்தது. தனிப்பட்ட காரணங்களுக்காக இதில் ராகுல் பங்கேற்கவில்லை. நேற்று முதன் முறையாக, லக்னோ அணியை எதிர்த்து ராகுல் களமிறங்கினார்.

இரண்டாவது 'ஸ்பின்னர்'

நடப்பு பிரிமியர் தொடரில் 'பவர்பிளே' ஓவருக்குள் (முதல் 6), மூன்று ஓவர்கள் பந்து வீசிய இரண்டாவது ஸ்பின்னர் ஆனார் டில்லி அணியின் அக்சர் படேல். இதற்கு முன் ஐதராபாத் அணிக்கு எதிராக தீக்சனா, இதுபோல பந்து வீசி இருந்தார்.

* இதேபோல முதல் 7 ஓவருக்குள் தனது 4 ஓவரை வீசி முடித்த இரண்டாவது ஸ்பின்னர் அக்சர் படேல். இதற்கு முன் 2015ல் ஷாபாஸ் நதீம் 4 ஓவர் வீசி இருந்தார்.

ஆறாவது அரைசதம்

லக்னோ அணி, நேற்று முதல் 6 ஓவர்களில் விக்கெற் இழப்பின்றி 51 ஓட்டங்கள் எடுத்தது. இத்தொடரில் 'பவர் பிளே' ஓவருக்குள் ஆறாவது முறையாக (9 போட்டி) இதுபோல 50 அல்லது அதற்கும் மேல்  ஓட்டங்கள்  எடுத்தது லக்னோ.

5 பந்து, 5  ஓட்டங்கள்

பிரிமியர் தொடரில் சிக்சர் மழை பொழிகிறார் நிக்கோலஸ் பூரன். ஆனால் டில்லி அணியின் மிட்சல் ஸ்டார்க்கிற்கு எதிராக தொடர்ந்து தடுமாறுகிறார். இவரது 5 பந்தில்  ஓட்டங்கள்  மட்டும் எடுத்த பூரன், மூன்று முறை அவுட்டாகியுள்ளார். தவிர 'ரி-20'ல் 6 இன்னிங்சில் 4 முறை பூரனை, ஸ்டார்க் அவுட்டாக்கியுள்ளார்.

113 இன்னிங்சிற்குப் பின்

லக்னோ அணி கப்டன் ரிஷாப் பன்ட், அறிமுக சீசனில் (2016) 2 முறை 7வது வீரராக களமிறங்கினார். அடுத்து 113 இன்னிங்சிற்குப் பின், நேற்று 7வது  வீரராக‌ வந்தார். 

 

 

Sunday, May 12, 2024

ஐபிஎல் 2024 சாதனைகள்

                                   சாதனை வீரர் சஞ்சு சாம்சன் 

சஞ்சு சாம்சனின்  தலைமையில் அசத்தி வரும் ராஜஸ்தான் கிட்டதட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது என்றே சொல்லலாம். மேலும் இந்த வருடம் இதுவரை விளையாடிய 11 போட்டியில் 471* ஓட்டங்கள் குவித்துள்ள சஞ்சு சாம்சன் அதிக ஓட்டங் கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தை பிடித்து ஆரஞ்சு தொப்பியை வெல்ல போட்டியிட்டு வருகிறார். மே 7ஆம் திகதி  டெல்லிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 222 ஓட்டங்களை துரத்திய ராஜஸ்தானுக்கு தனி ஒருவனாக 86 (46) ஓட்டங்கள் குவித்த அவர் முழுமூச்சுடன் வெற்றிக்கு போராடினார். அந்தப் போட்டியில் 6 சிக்ஸர்களை அடித்த சஞ்சு சாம்சன் இதுவரை தனது ஐபிஎல் கேரியரில் 159 இன்னிங்ஸில் 205* சிக்சர்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 200 சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் எம்எஸ் டோனியின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

 எம்.எஸ். டோனி, 165 இன்னிங்ஸில் 200 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அதே பட்டியலில் விராட் கோலி 180, ரோஹித் சர்மா 185, சுரேஷ் ரெய்னா 193 இன்னிங்ஸில் 200 சிக்ஸர்கள் அடித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும் டெல்லிக்கு எதிரான போட்டியும் சேர்த்து ராஜஸ்தான் அணிக்கு இதுவரை சஞ்சு சாம்சன் 56 போட்டிகளில் கப்டனாக செயல்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணிக்காக அதிக போட்டிகளில் கப்டனாக செயல்பட்ட வீரர் என்ற ஜாம்பவான் ஷேன் வார்னே சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் வார்னே 55 போட்டிகளில் ராஜஸ்தானின் கப்டனாக செயல்பட்டதே முந்தைய சாதனையாகும்.

டெல்லி, சென்னையை மிஞ்சி ஹைதராபாத்  சாதனை

லக்னோவுக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் 10 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.   முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ 20 ஓவர்களில் 4 விகெற்களை இழந்து 165  ஓட்டங்கள் எடுத்தது. ஹைதராபாத் விக்கெற் இழப்பு இன்றி  167  ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.

அபிஷேக் ஷர்மா 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 75* (28) ஓட்டங்கள் குவித்தார்.    டிராவிஸ் ஹெட் 8 பவுண்டரி 8 சிக்சருடன் 89* (30) ஓட்டங் கள் குவித்தார். அதனால்  45 நிமுடங்களில் 9.4 ஓவரிலேயே 167 ஓட்டங்கள் எடுத்த லக்னோ மிகவும் எளிதாக வெற்றி பெற்றது.   ஐபிஎல் வரலாற்றில் 150+ இலக்கை அதிவேகமாக வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற   புதிய வரலாறு படைத்துள்ளது

2008ஆம் ஆண்டு மும்பை அணிக்கு எதிராக 155 ஓட்டங்கள் இலக்கை டெக்கான் சார்ஜர்ஸ் அணி 12 ஓவரில் சேசிங் செய்ததே முந்தைய சாதனையாகும்.  இந்த வருடம் முழுவதுமே எதிரணிகளை கருணையின்றி அடித்து நொறுக்கி வரும் ஹைதராபாத் அணி மொத்தமாக 146* சிக்சர்கள் பறக்க விட்டுள்ளது.  ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற சென்னையின் சாதனையை உடைத்துள்ள ஹைதராபாத் புதிய சாதனை படைத்துள்ளது.

2018 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 145 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக 9.4 ஓவரிலேயே 167/0 ஓடங்கள் எடுத்த ஹைதராபாத் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் 10 ஓவரின் முடிவில் அதிகபட்ச  ஓட்டங் அடித்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை உடைத்தது. இதற்கு முன் இதே சீசனில் டெல்லிக்கு எதிராக முதல் 10 ஓவரில் ஹைதராபாத் 158/4 ஓட்டங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.