பெங்களூர்
சிறப்புநீதிமன்றத்தில்
ஜெயலலிதாவுக்கு
எதிராக நடைபெறும் வருமானத்துகு அதிகமாகச் சொத்துச்சேர்த்த வழக்கின் தீர்ப்பு ஜெயலலிதாவின் தலைவிதியை மட்டுமல்லாது தமிழகத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போகிறது. ஜெயலலிதா,அவரின் உடன்
பிறவாசகோதரி சசிகலா, இளவரசி,ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகர் ஆகியோருக்கு எதிராக 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி
சுப்பிரமணியன்
சுவாமியால் தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு 18 வருடங்களின் பின்னர் அறிவிக்கப்படப்போகிறது.
ஜெயலலிதா
குற்றவாளி என நீதிபதி தெரிவித்தால் ஜெயலலிதாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின்
தலைமைக்கு போட்டி ஏற்படும். அவர் நிரபபாராதிஎன விடுவிக்கப்பட்டால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாரிய சிக்கல்நிலை உண்டாகும்.
ஜெயலலிதாவுக்கு
எதிரான தீர்ப்பு எப்படி இருந்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தனக்குச் சார்பாகப் பிரசாரத்தை ஆரம்பித்துவிடும். குற்றவாளி எனத்தீர்ப்பளிக்கப்பட்டால்
திராவிட முன்னேற்றக்கழகத்தின்
அரசியல் பழிவாங்கல் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படும்.
நிரபராதி என்றால் வெற்றிக்கொண்டாட்டம்
விண்ணைத் தொட்டுவிடும்.ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த வழக்கு சுப்பிரமணியன் சுவாமியால் தாக்கல்செய்யப்பட்டதென்று
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொ ண்டர்களுக்குத் தெரியாது.
1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் முலமைச்சராக ஜெயலலிதா வீற்றிருந்தபோது வருமானத்துக்கு அதிக மாக சொத்துச் சேர்த்ததாக சுப்பிரமணியன் சுவாமி மனுத்தாக்கல் செய்தார் . அந்தமனு விஸ்வரூபமெடுத்து மாநிலம்தாண்டிய வழக்காக மாறியது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மாதம் ஒரு ரூபா சம்பளம் பெற்றார்.1991 ஆம் ஆண்டு 2 கோடியே ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபா சொத்து இருந்ததாக தெரிவித்தார். 1996 ஆம் ஆண்டு அவருடைய சொத்தின் மதிப்பு 66 கோடியாக அதிகரித்தது. இன்று அச்சொத்தின் மதிப்பு 2847 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
உடன்பிறவாச்
சகோதரி சசிகலா அவரது உறவினர் இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் பலமடங்கு அதிகரித்தன. ஜெயலலிதாவால் வளர்ப்பு மகனாக சுவீகரிக்கப்பட்ட
சுதாகரனுக்கு
100 கோடி ரூபா செலவில் திருமணம் நடைபெற்றது. இவை எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியின் மனுவில் குறிப்பிடப்பட்டன. 18வருடகால இடைவெளியில்
இந்திய நாடாளுமன்றத்துக்கு ஐந்துதேர்தல்கள் நடைபெற்றுள்ளன.தமிழக சட்டசபை மூன்று தேர்தல்களைச் சந்தித்தது. வலுவான ஆதாரங்களுடன் ஜெயலலிதாவுக்கு எதிராக மனுச்செய்த சுப்பிரமணியன் சுவாமி ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார்.அரசியலில் இதெல்லாம் சகஜம் என்பது ஜெயலலிதாவின் கொள்கை.
தமிழகத்திலும் பெங்களூரிலும் நடைபெற்ற இந்த வழக்கை தாமதப்படுத்துவதிலேயே
எதிரிகள் முனைப்பாக இருந்தனர். நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் கடுப்படைந்தனர். நீதிபதிகள் எதிரிகளை கடுமையாக எச்சரித்தனர். பெங்களூர் சிறப்புநீதி மன்றத்தில் நான்கு நீதிபதிகள் மாறிவிட்டனர். அரசதரப்பு வழக்கறிஞர் வெறுப்படைந்து வெளியேறிவிட்டார். உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகள் மாறிவிட்டனர். வழக்கிலே சம்பந்தப்பட்ட பல அதிகாரிகள் ஓய்வுபெற்றுவிட்டனர். வழக்கின்தீர்ப்பு வெளியாவதற்கு இப்போதுதான் நாள்குறிக்கப்பட்டுவிட்டது.
இந்தநிலையில்
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெறும் வழக்கில் அவர் நேரில்
ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.1991
ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டுவரை வருமானவரி தாக்கல் செய்யாத வழக்கில் சமாதானமாகப்போக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது
ஜெயலலிதாவின்
ஆதரவாளர்களும்
எதிரிகளும் தீர்ப்பின் நாளை திகிலுடன் எதிர்பார்த்துள்ளனர். நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் பதவி பறிக்கப்படும் சட்டம் அமுலில் உள்ளது.ஜெயலலிதா
குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் அவரது பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டுவிடும். இது
ஜெயலலிதாவுக்கு மட்டுமல்லாது தமிழகத்துக்கே அவமானமாகும். குற்றவளியாக அறிவிக்கப்பட்டதால்
லல்லு பிரசாத் உட்பட பல அரசியல் தலைவர்கள் பதவி இழந்தனர்.2001 ஆம் ஆண்டு பிளசன் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா
குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டபோது பன்னீர்ச்செல்வத்தை முதலமைச்சராக்கினார்.மேன்
முறையீடு செய்தபின்னர் ஜெயலலிதா முதல்வரானார். இப்போதைய சட்டத்தால் அப்படிச்செய்யமுடியாது.
மேன்முறையீடு செய்தாலும் நிரபராதி என தீர்ப்பு
வழங்கப்படும் வரை பதவி ஏற்கமுடியாது. 2001 ஆம் ஆண்டு ஜெயலலிதா குற்றவாளியாக
தீர்ப்பளிக்கப்பட்டபின்னர் தமிழகமே பற்றி எரிந்தது.தர்மபுரியில் பஸ்ஸுடன் சேர்த்து மூன்று மாணவிகள் கொளுத்தப்பட்டனர்.சிட்டி சிவில் கோர்ட் வளாகத்துக்கு மிக பெரிய அளவில் மக்கள் வந்து செல்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, குவாரி முறைகேடு வழக்குக்காக வந்தபோது பத்திரிகையாளர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டதால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டது. 150 பேர் மீது வழக்கு போட்டு சி.பி.ஐ விசாரித்து வருகிறது. என்றும் ஜெயலலிதா நீதிபதிக்கு சுட்டிக்காட்டி
உள்ளார்.என்றும் ஜெயலலிதா நீதிபதிக்கு சுட்டிக்காட்டி
உள்ளார்
20 ஆம்திகதியும்
நீதிமன்றமும் ராசியானது இல்லை என ஜெயலலிதா நினைக்கிறார்.ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக.நீதிமன்றத்தைமாற்ற நீதிபதி சம்மதம் தெரிவித்து 27 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 27
ஜெயலலிதாவுக்கு
ராசியான இலக்கம். தீர்ப்பு வழங்கப்படும் நாளன்று எதிரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்
என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தீர்ப்பு வழங்கப்படும் நாள் ஜெயலலிதாவின் ஆதரவாளர்களுக்கும் எதிரிகளுக்கும் மிகமுக்கியமான நாளாக அமையப்போகிறது.முதலமைச்சர் கனவில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர்கள்
சிலர் மிதக்கின்றனர். ஜெயலலிதா விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அவரது ஆதரவாளர்களின் விருப்பம்.