Saturday, March 27, 2021

ஒரே கட்சியின் இரண்டு அமைச்சர்கள் மோதும் கரூர்

தேர்தல் காலத்தில் முக்கிய‌ தலைவர்கள் போட்டியிடும் தொகுதியை விஐபி தொகுதி என்பார்கள். தமிழக சட்டசபைத் தேர்தலில் பல தொகுதிகள் விஐபி தொகுதிகளாக மாற்ற‌ம் பெற்றுள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் அனைவரையும் தோற்கடிக்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் சபதம் செய்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  இன்றைய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். விஜயபாஸ்க‌ரும்,முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜியும் முட்டி மோதுவதால் கரூர் தொகுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிரடி அரசியலால் ஜெயலலிதாவைக் கவர்ந்தவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதாவின் கருணையால் செந்தில் பாலாஜியின் பதவியை தட்டிப் பறித்தவர் எம்.விஜயபாஸ்கர்.

உயர் கல்வி படித்துக்கொண்டிருந்தபோது அரசியல் அரசியலில் நாட்டம் கொண்ட செந்தில் பாலாஜி 1995 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு கரூர் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.அதிரடி அரசியலில் நாட்டம் கொன்ட செந்தில் பாலாஜியால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உள்ளடி அரசியலைத் தாக்கும் பிடிக்க முடியவில்லை. அங்கிருந்து வெளியேறியவர் வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது கரூர் மாவட்ட அண்னா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரான சின்னச்சாமியின் அறிமுகம் ஏற்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்த செந்தில் பாலாஜி மாணவர் அணி இணைச்செயலாளர் ஆனார். 2004 ஆம் ஆண்டு மாணவர் அணி செயலாளர் ஆனார்.செந்தில் பாலாஜியின் நடவடிக்கையால் ஜெயலலிதா கவரப்பட்டார்.

தான்தோன்றிமலை  ஒன்றியச் செய‌லாளரான எம்.ஆர்.பாஸ்கருக்கும் செந்தில் பாலாஜிக்கும் இடையில் முரண்பாடு தோன்றியது. இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் கொலை மிரட்டல் விடும்வரை வளர்ந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு தேர்தலில் எம்.ஆர்.பாஸ்கர் கரூரிலும், செந்தில் பாலாஜி அரவக்குறிச்சியிலும் போட்டியிட்டனர். பணப்பட்டுவாடாவால் அர‌வக்குறிச்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடைபெற்றது. இருவரும் வெற்றி பெற்றனர்.

கரூர் கைவிட்டுப்போனதால்  கொதிப்படைந்த செந்தில் பாலாஜி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு எதிராக செயற்பட்டார். அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான பாங்க் சுப்பிரமணியத்துக்கு செந்தில் பாலாஜி மறைமுகமாக உதவி செய்தார்.441 வாக்கு வித்தியாசத்தில் எம்.ஆர்.வியஜபாஸ்கர் வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் காதுக்கு இச்செய்தி போனதால் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  போக்குவரத்துத்துறை அமைச்சரானார். செந்தில் பாலாஜி அமைச்சராகவில்லை.

2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜியை வேட்பாளராக்கினார் ஜெயலலிதா.அந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை பிடித்தது.

 திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான வாசுகி முருகேசனைத் தோற்கடித்த செந்தி பாலாஜி முதன் முதலாகச் ச‌ட்டசபைக்குள் நுழைந்தார். ஜெயலலிதாவின் பார்வை செந்தில் பாலாஜியின் மீது விழுந்தது. சின்னசாமியிடம் இருந்த கரூர் மாவட்ட செலயாளர் பதவி செந்தில் பாலாஜியின் கைக்கு மாறியது. கரூர் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.2011 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி போக்குவரத்துதுறை அமைச்ச்சரானார். நான்கரை ஆண்டுகளாக அமைச்சர்களை தூக்கி அடித்த ஜெயலலிதா செந்தில் பாலாஜியை மாற்ற‌வில்லை

ஜெயலலிதா மறைந்த பின்னர் டி.டி.வி.தினகரனின் பக்கம் சென்றதால் செந்தில் பாலாஜி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 2018 ஆம் ஆண்டு மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த  செந்தில் பாலாஜி 41 நாட்களில் கரூர் மாவட்ட பொறுப்பாளரானார். 2019 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் .  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரைத் தோற்கடித்தார்.

கரூரில் 84 வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவது கரூரில்தான்.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியில் சார்பில் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மீதமான 71 பேர் சுயேட்சை வேட்பாளர்கள். இவர்களில் 40 வேட்பாளர்கள் செந்தில் பாலாஜியின் ஆட்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் செலவு ,வாக்காளர்களுக்கான விநியோகம் என்பனவற்ருக்காக இந்த ஏற்பாடு என்கிறார்கள்.

 ஒருகட்சியில் இருந்தபோது பரம எதிரிகளாகச் செயற்பட்ட செந்தில்பாலாஜியும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கரூரில் தமது பலத்தைக் காட்ட களம் இறங்கியுள்ளனர்.கரூர் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையா அல்லது செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் உள்ள தொகுதியா என்பதை வெளிப்படுத்தும் தேர்தலாக இது கருதப்படுகிறது.

Thursday, March 25, 2021

சசிகலாவின் முன்னால் தலை குனிந்த பன்னீரின் தர்மயுத்தம்


 ஜெயலலிதா மரணமான பின்னர் அன்றைய முதலமைச்சரான ஓ.பன்னீர்ச்செல்வ‌ம் சசிகலாவுக்கு எதிராக  ஆரம்பித்த தர்மயுத்தம் இன்று சசிகலாவுக்கு முன்னால் மண்டியிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஓ.பன்னீர்ச்செல்வத்தை முதலமைச்சர் பதவியில் இருந்து அகற்றி விட்டு சசிகலாவை முதலமைச்சராக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டசபை உறுப்பினர்கள் முயற்சி செய்தனர். வெறுத்துப்போன பன்னீர்ச்செல்வம் முதலமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்து விட்டு ஜெயலலிதாவின் சமாதியில் முக்கால் மணி நேரம் தியானம் செய்துவிட்டு சசிகலாவுக்கு எதிரான தர்ம யுத்தத்தை ஆரம்பித்தார்.  

  சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியான சசிகலா சிறைக்குச் செல்லும் முன்னர் எடப்பாடி பன்னீர்ச்செல்வத்தை முதலமைச்சராக்கினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும் 11 சட்டசபை உறுப்பினர்களும் பன்னீரின் பின்னால் சென்றனர்.

முதல்வர் பதவியை முழுமையாக அனுபவிப்பதற்கு பன்னீரின் உதவி தேவை என்பதை உணர்ந்த எடப்பாடி சமாதானமானார். சசிகலாவையும் அவரது மன்னார்குடி உறவுகளையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றிய எடப்பாடி முதலமைச்சர் பதவியை முழுமையாக அனுபவிக்கத் தொடங்கினார்.

பன்னீரைத் திருப்திப்படுத்துவதற்காக துணை முதலமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. ப‌ன்னீர் ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி துணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமனனம் செய்யப்பட்டனர். பொருளாளர் பதவி இல்லாமல் செய்யப்பட்டதால் சசிகலாவின் பதவி பறிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை முடிந்த பின்னர் சகிலகா விடுதலையானதும் தினகரன் மிரட்டிய  சிலீப்பர் செல்கள் வெளியேறும் என எதிர் பார்க்கப்பட்டது.  பெங்களூரில்  இருந்து சென்னைவரை சசிகலாவிக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. மெளனமாக இருந்த சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார். சசிகலா ஒதுங்கினாலும் தினகரனின் சவால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் கருத்துக் கணிப்புகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாதகமாக உள்ளன. தினகரனின் கட்சியால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வாக்கு வங்கி சிதறும் சூழ்நிலை உள்ளது. தவிர, சசிகலாவின்  சமூகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இதனைச் சரிக்கட்டுவதற்காக .பன்னீர்ச்செல்வம் சகிலகாவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.


சசிகலாவை விமர்சித்து பன்னீர்ச்செல்வம் கூறிய கருத்துக்களும், பன்னீருக்கு சசிக்லா விடுத்த எச்சரிக்கையும் இன்றும் யூ ரியூப்பில் வலம் வருகின்றன. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சசிகலாவின் ஆதரவு தேவை என்பதை காலம் கடந்து பன்னீர்ச்செல்வம் உணர்ந்து கொண்டார். சசிகலாவை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அன்று தர்மயுத்தம் செய்த பன்னீர்ச்செல்வம் இன்று அவரை கட்சியில் சேர்க்க வேண்டும் என கருத்துக் கூறுகிறார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, விசாரணைக் கமிசன் அமைக்க வேண்டும் என அன்று வலியுறுத்திய பன்னீர்செல்வம் இன்று அவர் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டவே விசாரணைக் கமிசனைக் கோரியதாக தெரிவிக்கிறார். விசாரணைக் கமிசன் முன் பன்னீர்ச்செல்வம் ஆஜராகவில்லை என்பது வேறுகதை.

ஒருங்கிணப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்  கட்சியை திறமையாக நிர்வகிக்கின்றனர். அவர்களின் கீழ் சசிகலா இணையலாம் என பன்னீர்ச்செல்வம் கூறினார். சிறையில் இருந்து தான் திரும்பும்வரை கட்சியையும், ஆட்சியையும் பாதுகாக்கும் பொறுப்பை எடப்பாடியின் கையில் ஒப்படைத்தார் சகிகலா. பதவி மோகம் எடப்பாடியை ஆட்கொண்டதால் சசிகலாவும் சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணை பொதுச் செயலாளர் தினகரனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தூக்கி எறியபட்டனர்.

சிறைத்தண்டனை முடிந்து தான் வெளியேறும்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது கையை விட்டுப் போய்விடும் என நினைத்திருக்க மாட்டார்.தேர்தல் முடிவு  வரும்வரை பொறுமை காக்கிறார் சசிகலா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடையும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அது நிஜமானால் சசிகலா மீண்டும் அரசியலில்   கால் பதிப்பார். 

Wednesday, March 10, 2021

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் குழப்பம் வியஜகாந்தும் ராமதாஸும் வெளியேறினர்

தமிழக, பாண்டிச்சேரி சட்டசபைத்தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும்  கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றன. தமிழகத்தில் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணியில் விஜயகாந்தும், பாண்டிச்சேரியில் ராமதாஸும் முறித்துக்கொண்டனர். இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டனிக்கு பெரும் பின்னடைவாக அமைய உள்ளது.

தேர்தல் திகதி அரிவிக்க முன்னரே கூட்டணிப் பேச்சு  வார்த்தையை ஆரம்பியுங்கள் என விஜயகாந்தின் மனைவி நச்சரித்தார்.அதனை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள்  எவரும் கண்டு கொள்ளவில்லை.தமிழமெங்கும் சூறாவளி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு தனது கழகத் தொண்டர்களை பிரேமலதா உற்சாகப்படுத்தினார்.

தேர்தல் திகதி அரிவிக்கப்பட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தங்களை அழைத்துப் பேசும் என பிரேமலதா எதிர் பார்த்தார். தேசிய முற்போக்கு திராவிடக் கட்சிதான் தமிழகத்தின் மூன்றவது பெரிய கட்சி என பிரேமலதா நம்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கட்சி ஆகியன  இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள்.

தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் சொந்த சின்னத்தில் போட்டியிடும் தகுதி மூன்று கட்சிகளுக்குத்தான் உள்ளது. அதனால்தான் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என பிரேமலதா சொல்கிறார். ஒரு காலத்துல் 10 சதவீத வாக்கு வங்கி உள்ள கட்சியாக விஜயகாந்தின் கட்சி விளங்கியது. உலக்கை தேய்ந்து உளிப்பிடியானதுபோல்   இரண்டு சத வீத வாக்கு மாத்திரமே  தற்போது விஜயகாந்தின் கட்சிக்கு உள்ளது.

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் ஆறு சதவீத வாக்கு கிடைக்க வேண்டும் இரண்டு தொகுதிகளில்  வெற்றி பெற்ற வேண்டும் என்ற தர்மசங்கடமான நிலையில்  விஜயகாந்தின் கட்சி உள்ளது.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிப் பேச்சு  வார்த்தைக்கு அழைக்கும் என பிரேமலதா எதிர் பார்த்து காத்திருந்தார். முதலில் ராமதாஸுடன் தொகுதிப்பங்கீட்டை முடித்துக் கொண்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பின்னர் பாரதீய ஜனதாவடன் ஒப்பந்தம் செய்தது.

ராமதாஸுடன் முதலில் ஒப்பந்தம் செய்ததை  பிரேமலதா விரும்பவில்லை. அரசியலில் ஒரே கட்சியில் கூட்டணி சேர்ந்தாலும் ராம்தாஸை விட தனக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதே விஜயகாந்தின் கொளகை. ராமதாஸுக்குக் கொடுத்ததை விட அதிக தொகுதிகளைப் பெற  வேண்டும் என பிரேமலதா  சபதம்  செய்தார். பிரேமலதா எதிர் பார்த்த அந்த நாளும் வந்தது கூட்டணிப் பேச்சு வார்த்தை ஆரம்பமானது. விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். 41 தொகுதிகள் வேண்டும் எஅன் விடாப்பிடியாக நின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கொஞ்சமும்  இறங்கி வரவில்லை.

கூட்டணிப் பேச்சு வார்தைக்கு கட்சியின் முக்கியஸ்தர்களான பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. கடைசியாக நடந்த பேச்சு வார்த்தையில்  சுதீஷ் கலந்துகொண்டார். 13 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதவியும் தரபப்டும் என அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தெரிவித்தது.  ராமதாஸுக்கு இணையாக தொகுதிகள் ஒதுக்கப்பட  வேண்டும் என்பதில் சுதீஷ் குழுவின்ழ்ர்  உறுதியாக நின்றனர்.  அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் கையை விரித்தது.

“வெளியேறுவோம்” என்ற விஜயகாந்தின் குறுஞ்செய்தியுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியுடனான  இணைப்பு கைவிடப்பட்டது. இதனால் இரண்டு கட்சிகளும் பாதிப்படையப் போகின்றன. விஜயகாந்திக் ஆதரவாளர்களின் வாக்கு வங்கி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  மிகவும் அவசியம் அதே போல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றுக்கு  உதவி செய்யும்.

2011 ஆம் ஆண்டு ஒன்றாக  இணைந்ததால்  வெற்றி பெற்ற இரண்டு கட்சிகளும் 2021 ஆம் ஆண்டு பிரிந்து விட்டன. ஒரே கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளின் வாக்குகள் சிதறப் போவதால் திராவிட முன்னேற்றக் கூட்டணியின் வெற்றி சுலபமாகி உள்ளது. பிரேமலதா, விஜய பிரபாகரன், சுதீஷ் ஆகியோரின் பேச்சுகள்  நடுநிலையாளர்களை  முகம் சுழிக்கவைத்துள்ளன. அரசியல் யதார்த்தம் தெரியாத தொண்டர்கள் பட்டாசு கொளுத்தி சந்தோஷப்பட்டனர். எதிர் கால தோல்வியை சந்தோஷமாகக்கொண்டாடிய தொண்டர்களின் அறியாமையை தேர்தல் முடிவின் பின்னர் தெரியவரும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய சரத்குமார் 10 வருடங்களாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேர்தல்களைச் சந்தித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தபோது வெற்றி பெற்ற சரத்குமாரால் அண்ணா திராவிட முன்னாற்றக் கழக்த்தில் இணைந்த பின்னர் வெற்றி பெறமுடியவில்லை. தமக்குப் பின்னா பெரும் தொகையான தொண்டர்கள் இருப்பதாக சரத்குமாரும் மனைவி ராதிகாவும் நினைக்கிறார்கள். சரத்குமார் கமலுடன் இணைந்துள்ளார்.

கருணாஸ், தனியரசு, தமீம் அன்சாரி ஆகியோர் கடந்த தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் இம்முறையும் தமக்கு இடம் கிடைக்கும் என எதிர் பார்த்தனர்.  அழைப்பு வராததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தனர். தனியரசும், கருணாஸும் திராவிட முன்னேற்றக் கழகத்துகு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். பின்னர் கருணாஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்றார்.

புதிய நீதிக் கட்சியின் தலைவர்  ஏ.சி சண்முகம் ஐந்து தொகுதிகள் கேட்டார் அண்ணா திராவிட முன்னேற்ர்க் கழக மறுத்ததால் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்.

கார்த்திக்,ஜான்பாண்டியன்,ஜெகன்மூர்த்தி, ஷேக்தாவூத்  ஆகியோரும் அதிக தொகுதிகளைகேட்டுள்ளனர். ஒடுப்பதர்கு தொகுதிகள் இல்லாததனால் தமக்கு ஆதரவ்ளிக்கும் கட்சிகள் என 13 கட்சிகளின் பெயரைக் குறிப்பிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிர்ச்சியளித்துள்ளது.

தமிழ்கத்தில் கைகோர்த்த அண்னா திராவிட முன்னேற்றக் கழகமு, பாரதீய ஜனதாவும் பாண்டிச்சேரியில் பாட்டளிமக்கள் கட்சியை புறம் தள்ளியுள்ளன.பாண்டிச்சேரியில் ந்ந்ன்கு தொகுதிகளை ராமதாஸ் கேட்டார். அங்கு ஒரே ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது.  இதனால் கோபமடைந்த ராமதாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். இது தமிழக தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தமிழகத்தில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெறும் ஒரு சத வீத வாக்குகளால் திராவிட முன்னேற்ற கழகம் தோல்வியடைந்தது.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலால் திராவிட முன்னேற்றக் கழக்த்தின்  வெற்றிவாய்ப்பு அதிகரித்துள்ளது.

Sunday, March 7, 2021

அதிகார மமதை காட்டிய பாரதீய ஜனதா பதுங்கி ஒதுங்கியது

ஜெயலலிதாவின் மரணம்,கூவத்தூர் கூத்து, சசிகலாவின் சிறைவாசம் பன்னீரின் தர்ம யுத்தம் என்பனவற்றால் பழனிச்சாமி பதவியில் நீடிக்க மாட்டார் என்ற கருத்து மேலோங்கியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நீடிக்காது என்ற எண்ணத்தில் ஸ்டாலின் காலக்கெடு விதித்தார்.

இரட்டை இலையை தாமரையின் கீழ் பத்திரமாகச் செருகியதால்  நான்கு வருட முதலமைச்சர் பதவியை எடப்பாடி முழுமையாக அனுபவித்தார்.  ஜெயலலிதா எதிர்த்த திட்டங்கள் அனைத்தையும்  செங்கம்பளம் விரித்து வரவேற்றார்.  பதவியை முழுமையாக அனுபவுக்க வேண்டும் என்றால் பாரதீய ஜனதாவின்  ஆசீர்வாதம் வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்ட எடப்பாடி அதற்கேற்ப காய் நகர்த்தினார்.

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் தான் தேர்தலில் தோற்றோம் என்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குற்றச் சாட்டும்,   தமிழகத்தில் ஊழ அரசாங்கம் என்ற பாரதீய ஜனதாவின் குற்றச்சாட்டும்  மூடி  மறைக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்ட சபைத் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு 20 தொகுதிகளை மட்டும் ஒதுக்கி தனது பலத்தைக் காட்டியுள்ளார் எடப்பாடி. ஆட்சியில் இருக்கும்போது பாரதீய ஜனதாவின் தாளத்துக்கு ஏற்ப ஆடினார் எடப்பாடி. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பாரதீய ஜனதாவை ஆட்டுவிக்கிறார் எடப்பாடி.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலவீனத்தை அறிந்து கொண்ட மத்திய அரசு தான் நினைத்த அனைத்தையும் தமிழகத்தில் செயற்படுத்தியது.  எடப்பாடியின் குடுமியை தமிழக பாரதீயஜனதா பிடித்து ஆட்டியது. தமிழக பாரதீய ஜனதாக் கட்சித்தலைவர்  முருகன், வேலுடன் யாத்திரை சென்றதைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.

தமிழக முதல்வரை பாரதீய ஜனதாதா முடிவு செய்யும், தமிழக ஆட்சியில் பங்கு 100 தொகுதிகளில் பாரதீய ஜனதா  போட்டியிடும்,   60  தொகுதிகளில் தமிழகத்தில் பாரதீயஅனதா  போட்டியிடும்  என கொடுக்கப்பட்ட குடைச்சல்களை  எரிச்சலுடன் பார்த்தது தமிழக அர்சு.

சசிகலாவுடன் சமரசமாகப் போனால்தான் வெற்றி பெறலாம் என்பதை பாரதீய ஜனதா தெரிந்து வைத்துள்ளது. சசிகலாவிச் சேர்ப்பதற்கு எடப்பாடி துளியும் விரும்பவில்லை. தேர்தலில் வெற்றி தோல்வி ஏற்படுவது வழமை  இந்த்த் தேர்தலில்  தோல்வியடைந்தால் அடுத்த தேர்தலில் வெற்றி பெறலாம்  அப்போது தலைமையைத் தக்க வைக்கலாம் என்ற நம்பிக்கை எடப்பாடியிடம் இருக்கிறது.  

சசிகலாவின் உதவியால் வெற்றி பெற்றால் சாசிகலாவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.  பழைய படி  மன்னார் குடி உறவுகளுக்கு அடிமையாக இருக்க வேண்டும். இதனை முன்னிறுத்தியே தனது கட்சியில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர்களை அடக்கினார் எடப்பாடி.

தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத பாரதீய ஜனதாவுக்கு அதிக தொகுதிகளை விட்டுக்கொடுக்கக் கூடாது எனபதில் உறுதியாக நின்று எடப்பாடி வெற்றி பெற்று விட்டார்.இந்தியாவின் மற்றைய  மாநிலத் தலைவர்கள் எல்லோரும்  அமித் ஷாவுக்குக் கட்டுப்பட்டு  விட்டுக்கொடுத்தார்கள். அமித் ஷாவே டெல்லி செல்வதைத் தாமதப் படுத்தி எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.அமித் ஷாவின் மாயா ஜாலம் எடப்பாடியிடம் எடுபடவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து சென்ற இரண்டு தலைவர்களும் குஷ்பு, கெளதமி  போன்ற சினிமாப் பிரபலங்களும் தம் கட்சியில்  சேர்ந்ததால்    தமது பலம் கூடிவிட்டதாக பாரதீய ஜனதாவினர் நம்புகின்றனர்.  

இந்தியாவின்  வட மாநிலங்களில் காங்கிரஸை அகற்றி விட்டு தாமரையை மலரச் செய்தது பாரதீய ஜனதா.  தென் மாநிலங்களை தாமரை மொட்டு கூர அரும்பவில்லை என்பது  கெளரவப் பிரச்சினையாகும்.

தோழமைக் கட்சித் தொண்டர்களின் தயவில்தான் தமிழகத்தில்  தாமரையின் எதிர் காலம் தங்கி உள்ளது.                                 

 

Friday, March 5, 2021

தினகரனுக்கு அதிர்ச்சியையும் எடப்பாடிக்கு மகிழ்ச்சியையும் கொடுத்த சசிகலா

ஜெயலலிதாவின் உடன் பிறவாசகோதரியான சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்ததால் தமிழக அரசியலில்  பல  பிரச்சினைகளுக்கு  முடிவு  கட்டப்பட்டுள்ளது.

சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா, பொது எதிரியான திராவிட முன்னேற்றக் கழகத்தை  ஆட்சிபீடம் ஏற அனுமதிக்கக் கூடாது என அறிக்கை விடுத்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றின் தலைவர்களுக்கு எதிராக சசிகலா எதுவும் சொல்லவில்லை.

பாரதீய ஜனதாக் கட்சியின் அழுத்தத்தால் மீண்டும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் செல்லலாம் என சசிகலா எதிர்பார்த்தார்.  ஆனால், எடப்பாடி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கும் என்ற எதிர் பார்ப்பு உள்ளது.  சசிகலாவைச் சேர்க்காமல் தோல்வியடைந்தால் தினகரனின் மேல் பழியைப் போடலாம் என எடப்பாடி கருதுகிறார்.

கட்சி அதிகாரத்தில் இருந்து எடப்பாடியை அகற்ற பன்னீர் காத்திருக்கிறார். தோல்விக்கு எடப்பாடிதான் காரணம் என பன்னீர் பிரசாரம் செய்வார். எடப்பாடியும், பன்னீரும் ஏட்டைக்குப் போட்டியாக விளம்பரம் செய்த்து தம்மை முன்னிலைப் படுத்துகிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்த  சசிகலா விடுதலயானதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்  பிரளயம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று  அமைச்சராக வலம் சிலரும், சட்டசபை உறுப்பினர்களில் சிலரும் சசிகலாவால்  ஜெயலலிதாவுடம் பரிந்துரைக்கப்பட்டவர்கள். 

ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்ச்செல்வத்தை  முதலமைச்சர் பதவியில் இருந்து   விலக நெருக்கடி கொடுத்த சசிகலா தான் விரும்பிய எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு சிறைக்குச் சென்றார். சிறைத்தண்டனை முடிந்து தான் வெளிவரும்போது    எடப்பாடி தனக்கு விசுவாசமாக இருப்பார் என சசிகலா நினைத்தார்.

ஆனால், பதவி ஆசை யாரை விட்டது.  எதிரியுடன் சமாதானமானால்தான் ஆட்சியைத் தக்க வைக்கலாம் என உணர்ந்துகொண்ட  எடப்பாடி பன்னீரின் விருப்பத்துக்கமைய நடந்துகொண்டாட்.

 சசிகலா கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரிடம் இருந்த  பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. தாமரைக்குக்கீழே இரட்டை இலையைச் செருகியதால்  ஸ்டாலினிடமிருந்து எடப்பாடி தப்பினார்.

எல்லாம் சுமுகமாகச் சென்ரு கொண்டிருந்தபோது சசிகலா விடுதலையாகும் நாள்  அறிவிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா சுகமாகி தமிழகம் வரும் நாள் குறிக்கப்பட்டது. அன்று சசிக்லாவின் மீதா ஊடக வெளிச்சத்தைத் தவிர்ப்பதற்காக ஜெயலலிதாவின் நினைவிடம் அவசர அவசரமாகத்  திறக்கப்பட்டது. ஆனால், சசிகலா அன்று தமிழகத்துக்கு வரவில்லை. 

ஒரு வாரம் கடந்து சசிகலா தமிழகத்துக்கு வந்த போது  கர்நாடகத்தில் இருந்து  சென்னை வரை பிரமாண்டமான பேரணியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கொடி கட்டப்பட்ட காரில் சசிகலா பயணம்  செய்ததால்  தமிழக அமைச்சர்களின் புகார் அவரிடம் கையளிக்கப்பட்டது. சசிகலா பயனம் செய்த கார் அண்னா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகரின் கார் என்பதால் கொடி அகற்றப்படவில்லை.

மிகப்பெரிய திட்டத்துடன் சசிகலா வந்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அவர் கைப்பற்றுவார் என தினகரனின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று சசிகலா விடுத்த அறிக்கை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே சசிகலா ஒதுங்கவில்லை , பதுங்குகிறார்.

சசிகலாவின் அறிக்கை எடப்பாடிக்கு  ஏற்பட இருந்த  பிரச்சினைக்குத் தீர்வாகிவிட்டது. சசிகலாவைச் சேர்க்கும்படி பாரதீய ஜனதா கொடுத்த அழுத்தத்தில் இருந்து எடப்பாடி தப்பி விட்டார். டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த பின்னர்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சசிகலாவைச் சேர்ப்பதில்லை  என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.   

இந்திய அரசியல் மாயவித்தைக் காரனான அமித் ஷாவின் வேண்டுகோளையும் எடப்பாடி ஏற்கவில்லை. சசிகலாவைக் கட்சியில் சேர்த்துவிட்டு மன்னார்குடி குடும்பத்துக்கு அடிமையாக  இருப்பதை எடப்பாடி விரும்பவில்லை.  சசிகலாவின் விடயத்தில் ஓ.பான்னீர்ச்செல்வம் அமைதியாக இருக்கிறார். வாழும் பரதன் என்று விளம்பரம்  செய்து தன் விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதா சிறைக்குச் சென்ற போது இரண்டு முறை  பன்னீரிடம்  முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்தார்.  இரண்டு முறையும் அவர் ஜெயலலிதாவிடம் திரும்பக் கொடுத்தார்.  பன்னீரிடம் இருந்த  முதலமைச்சர் பதவியைப்  பறித்து  எடப்பாடியிடம் கொடுத்துவிட்ட சசிகலா சிறைக்குச் சென்றார்.  சசிகலா சிறையில் இருக்கும்போதே அவரிடம் இருந்த பொதுச்செயலாளர் பதவியைப் பறித்து கட்சியில் இருந்து அவரை நீக்கினார் எடப்பாடி. பன்னீரின்  விளம்பரம் எடப்பாடிக்கும் எதிரானதுதான்.

சசிக்லாவின் அறிவிப்பால்  தினகரன் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைப்பற்றுவதற்காகவே புதிய கட்சியை ஆரம்பித்ததாக தினகரன் பிரசாரம் செய்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இடம் இல்லையானால் சசிகலா தன்னுடன் இருப்பார் என தினகரன் நம்பி இருந்தார். அந்த நம்பிக்கை இன்று தவிடுபொடியானது.

அரசிலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவிக்கவில்லை. ஒதுங்கி இருப்பதாக்தனா அறிவித்துள்ளார். தேர்தலில் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்தால் தீவிர அரசியலில் இறங்குவார். இரட்டை இலை சின்ன வழக்கு நிலுவையில் உள்ளது.  அதன் தீர்ப்பின் பின்னர்  அண்னா திராவிட முன்னேற்றக் கழகம்யாருடைய கையில் இருக்கும் எனத் தெரியவரும்.

எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டானது. எம்.ஜி.ஆரின்  மனைவி ஜானகி அணி, ஜெயலலிதா அணி என  பிரிந்தது அப்போது ஏற்பட்ட மன  உழைச்சலால்  அரசியலில் இருந்து வெளியேறுவதாக ஜெயலலிதா கடிதம் எழுதினார். சசிகலாவின் கணவரான நடராஜன் அந்தக் கடிதத்தை வெளியிடாமல் மறைத்து வைத்தார். அதனை அறிந்த அன்றைய அரசு கடிதத்தைத்தேடி நடராஜனின்  வீட்டில் தேடுதல் நடத்தியது. ஜானகி அரசியலை விட்டு ஒதுங்கியதும்.   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஜெயலிதாவிடம் சரணடைந்தது. அதே  போன்ற ஒரு நிலை இன்றைக்கு சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர்களாக  சட்டசபை உறுப்பினர்களாக வட்ட, மாவட்ட பொறுப்பில் இருப்பவர்களில் பலர் சசிகலாவின் தயவால் பதவி பெற்றவர்கள். அவர்கள் பதவி இழந்ததும் தன்னிடம் வருவார்கள் என சசிகலா எதிர்பார்க்கிறார்.