Showing posts with label ஈக்குவடோர். Show all posts
Showing posts with label ஈக்குவடோர். Show all posts

Friday, June 26, 2026

ஜேர்மனியை வீழ்த்தி நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஈக்வடோர்

  உலகக்  கிண்ண  குரூப் E பிரிவின் இறுதிப் போட்டியில், ஈக்வடார் அணி பின்தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து  ஜேர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பரபரப்பான வெற்றியைப் பெற்றது. இதன் மூலம், மூன்றாவது இடத்தைப் பிடித்த எட்டு சிறந்த அணிகளில் ஒன்றாக, ஈக்வடோர் அணி 32 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறியது.

ஜேர்மனி அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட போதிலும், அதன் பயிற்சியாளர் ஜூலியன் நாகல்ஸ்மான் பெரிய அளவிலான மாற்றங்களைச் செய்வதைத் தவிர்த்தார். கணுக்கால் தசைநார் காயம் காரணமாக போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களில் இருந்து விலக்கப்பட்ட நிக்கோ ஷ்லோட்டர்பெக்கிற்குப் பதிலாக, அன்டோனியோ ரூடிகர் மத்திய தடுப்பாட்ட வீரராக மீண்டும் களமிறங்கினார்.

வியாழக்கிழமை அன்று ஜெர்மனிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வெற்றி பெற்ற ஈக்வடார், 77-வது நிமிடத்தில் கோன்சாலோ பிளாட்டா பந்தை மானுவல் நியூயரைத் தாண்டி கோலாக மாற்ற,   நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

ஈக்வடோர் நான்கு புள்ளிகளுடன் குழுவில் மூன்றாவது இடத்தைப் பிடித்ததுடன், இரண்டாவது முறையாக குழுச் சுற்றைத் தாண்டியது; 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

  

Monday, June 15, 2026

ஈக்வடோரின் நம்பிக்கையை தகர்த்தது ஐவரி கோஸ்ட்


 அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில்  ஈக்வடோர், ஐவரிகோஸ் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 90 ஆவது நிமிடத்தில்  அமத் தியல்லோ அடித்த   கோலால் ஈக்வடாரை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஐவரி கோஸ்ட் வெற்றி பெற்றது.

 ஆட்டத்தின் முதல் பாதியில் ஈக்வடார் அணி ஆதிக்கம் செலுத்தியது. 24வது நிமிடத்தில் ஜான் யெபோவாவும், 30வது நிமிடத்தில் ஆலன் மிண்டாவும் அடித்த பந்துகள் துரதிர்ஷ்டவசமாக கோல் போஸ்ட்டின் மேல் கம்பத்தில் பட்டுத் திரும்பின. 

ஐவரி கோஸ்ட் அணியும் பதிலடி கொடுக்கத் தவறவில்லை. 2வது பாதியில் எலி வஹி அடித்த பந்து கம்பத்தில் பட்டுத் திரும்பியது. செகோ போபனா, பிராங்க் கெஸ்ஸி ஆகியோர் நடுகள ஆட்டத்தில் பலம் சேர்த்தனர். குறிப்பாக, இளம் வீரர் இயன் தியோமண்டே தனது அசுர வேக ஆட்டத்தால் ஈக்வடார் தற்காப்பு அரணுக்கு பெரும் சவால் அளித்தார். ஆர்சனல் டிபெண்டர் பியரோவை ஏமாற்றி அவர் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கினார்.

ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 90வது நிமிடத்தில் வில்பிரைட் சிங்கோ கொடுத்த அருமையான பாஸை பெற்றுக்கொண்ட மான்செஸ்டர் யுனைடெட் விங்கர் அமத் தியல்லோ, பந்தை லாவகமாக வளைத்து கோல் போஸ்ட்டிற்குள் அனுப்பி அணியை 1-0 என வெற்றி பெறச் செய்தார். இதனால் ஈக்வடார் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

உலகக்கிண்ணம்,அமெரிக்கா,மெக்ஸிகோ,கனடா,ஈக்குவடோர்,ஐவரிகோஸ்ட், ,உதைபந்தாட்டம், விளையாட்டு

 

Monday, November 21, 2022

ஆரம்பப் போட்டியில் அசத்தியது ஈக்குவடோர்


 உலகக் கிண்ண  உதைபந்தாட்டத்  திருவிழா, வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியில் கட்டார் அணியை 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஈகுவடார் வீழ்த்தியது. 

உலகமே உற்று நோக்கிய உலகக் கிண்ணத் தொடர் கட்டாரில்   அல்கோர் நகரில் உள்ள அல்-பேட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 60,000 ரசிகர்கள் திரண்டிருந்த இந்த மைதானத்திற்குள், பிரான்ஸ் ஜாம்பவான் மார்செல் டிசைலி, உலகக் கிண்ணத்துடன்  வலம் வந்தார். அப்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரத்தால் கட்டாரே அதிர்ந்தது.

 ஹொலிவுட் நட்சத்திரம் மார்கன் ஃப்ரீமன், நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பது குறித்து எடுத்துரைத்தார்.

பின்னர், அரங்கேறிய கலை நிகழ்ச்சிகளை, ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர். மேலும், தென்கொரிய பாப் பாடகர் BTS ஜங் கூக்கின் இசைமழையில் ரசிகர்கள் நனைந்தனர். மேலும், தொடக்க விழாவின் போது நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கையால் அல்கோர் நகரமே ஒளி வெள்ளத்தில் ஒளிர்ந்தது.

போட்டி   தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே ஈக்குவேடாருக்கு ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்திருந்தது.   வெலன்சியா மூன்றாவது நிமிடத்திலேயே ஒரு கோலை அடித்தார். கோலும் வழங்கப்பட்டது. ஆனால், பின்னர் VAR மூலம் பரிசோதித்த போது இந்த கோல் ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது. ஃப்ரீ கிக் மூலம் பந்து உதைக்கப்பட்ட சமயத்தில் ஈக்குவேடார் வீரர் ஒருவரின் கால் மட்டும் கட்ட‌ர் அணியின் கடைசிக்கு முந்தைய டிஃபண்டரை தாண்டி இருந்தது. அதனாலயே கோல் வழங்கப்படாமல் ஆஃப் சைடு என அறிவிக்கப்பட்டது.

  16 வது நிமிடத்தில்  பெனால்டி மூலம்  வெலன்சியாதான் முதல் கோலை அடித்தார்.  30 வது நிமிடத்தில்  வெலன்சியா மீண்டும் ஒரு கோலை அடித்தார். இரண்டு கோல்களும் இடைவேளைக்கு முன்பு அடிக்கப்பட்டது.

  வெலன்சியாவிற்கு 33 வயதாகிறது. ஈக்குவேடார் அணிக்காக அதிக கோல்களை அடித்திருக்கும் வீரர் அவரே. 37 கோல்களை அடித்திருக்கிறார். இதுவரை நான்கு  உலகக் கிண்ணப் போட்டிகளில் விளியாடிய வெலன்சியா  5 கோல்களை அடித்திருக்கிறார்.  உலகக்கிண்ணப் போட்டியில் ஈக்குவடோர் சார்பாக அதிக கோல்களை அடித்த வீரரும் அவர்தான்.

 2014 பிறேஸிலில்  நடந்த‌உலகக் கிண்ணப் போட்டியில்  3 கோல்களை அடித்திருந்தார். 8 ஆண்டுகள் கழித்து மீண்டும்  வந்து வ்வெற்றியத் தேடிக்கொடுத்துள்ளார்.  வெஸ்ட் ஹாம், எவர்டன் போன்ற க்ளப்களுக்கும் ஆடியிருக்கிறார். சமீபமாக டர்க்கீஸ் லீகில் ஃபெனர்பாஜி அணிக்காக சிறப்பாக ஆடி வந்தார். ஒரே சீசனில் 13 கோல்களை அடித்திருந்தார். 

2006 ஜேர்மனி,2010 தென் ஆபிரிக்கா,2014 பிறேஸில், 2018 ரஷ்யா ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக்கிண்ண ஆரம்பப் போட்டிகளில் அந்த நாடுகள்  வென்ற வரலாறு கட்டாரில் மாறியது.

கட்டார் 5 முறையும் ,ஈக்குவடோர் 6 முறையும் கோலகம்பத்தை நோக்கி அடித்தன.  ஈக்குவடோரின் மூன்று கோல் முயற்சிகள் தடுக்கப்பட்டன.

கட்டாருக்கு  எதிராக 4 மஞ்சள் அட்டைகளும், ஈக்குவடோருக்கு எதிராக இரண்டு மஞ்சள் அட்டைகளும் காட்டப்பட்டன.    

Tuesday, May 17, 2022

ஈக்குவடார் அணியில் தகுதியற்ற வீரர்


  உலகக் கிண்ண‌ தகுதிச் சுற்று ஆட்டங்களில் தகுதியற்ற ஒரு வீரரை ஈக்குவடார் களமிறக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பீபா ஒழுங்குக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஈக்குவடோர் அணிக்காக உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகளில் விளையாடிய   பைரன் காஸ்டிலோ உண்மையில் கொலம்பியாவில் பிறந்தவர் என்றும் ஈக்வடோர் அதிகாரிகள் கூறுவதை விட மூன்று வயது மூத்தவர் என்றும்சிலி  உதைபந்தாட்ட  கூட்டமைப்பு   குற்றம் சாட்டுகிறது. எட்டு தகுதிகாண்  போட்டிகளில் காஸ்டிலோ விளையாடினார்.

  விசாரணையைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஈக்குவடோர் உதைபந்தாட்ட கூட்டமைப்பு  கூட்டமைப்பு,பெருவியன்  உதைபந்தாட்டச் சங்கம் ஆகியவை  பீபா ஒழுங்குமுறைக் குழுவிடம் தங்கள் நிலைப்பாட்டை சமர்ப்பித்தன‌.

ஏப்ரல் 2021 இல் ஈக்குவடோர் வடார் நீதிமன்றம், காஸ்டிலோ ஈக்வடோஒர் நாட்டவர்   என்றும், நவம்பர் 10, 1998 அன்று ஈக்வடோரில் பிறந்தவர் என்றும் தீர்ப்பளித்தது.

  காஸ்டிலோ ஜூலை 25, 1995 இல் கொலம்பியாவில் உள்ள டுமாக்கோவில் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக  தெரிவிக்கப்படுகிறது.  காஸ்டிலோ மீதான   விசாரணையில் அவர் கொலம்பியனாக இருப்பதை உறுதிசெய்ததாகவும், சிவில் விசாரணையில் வீரர் வழங்கிய பிறப்புச் சான்றிதழானது மற்ற பதிவுகளுடன் முரண்படுவதாகவும், மோசடி செய்யக்கூடியதாகவும்   குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான  உலகக் கிண்ண குரூப் சுற்றுப் போட்டியில்  கட்டார், நெதர்லாந்து, ஆப்பிரிக்க ச‌ம்பியன் செனகல் ஆகிவற்றுருடன் ஈக்வடார் அணி  உள்ளது.