Showing posts with label ஆர். Show all posts
Showing posts with label ஆர். Show all posts

Sunday, March 4, 2018

ரசிகர்களின் மனதைக் கவர்ந்த அழகான மயில் ஸ்ரீதேவி


     

இந்தியத் திரை உலகை சுமார் 20 வருடங்களாகத் தனது   வசீகரச் சிரிப்பால் கட்டிப்போட்ட அழகான மயில் ஸ்ரீதேவி. சிவாஜி- பத்மினி ,சிவாஜி -கே.ஆர்.விஜயா , எம்.ஜி.ஆர் -சரோஜாதேவி ,எம்.ஜி.ஆர் -ஜெயலலிதா ஜோடிக்குப்பின்னர் கமல் - ஸ்ரீதேவி ஜோடி சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது.

 துணைவனில் முருகனாக அறிமுகமாகி மூன்று முடிச்சு மூலம் கதாநாயகியாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஸ்ரீதேவி 16 வயதினிலே தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.16 வயதினிலே படத்தில் பார்த்த அதே அழகுத் தேவதையாகத்தான் இன்றும் அவர் ஜொலித்தார். காந்தப் புன்னகையின் உறைவிடமான ஸ்ரீதேவி காலமாகிவிட்டார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய  வைத்துள்ளது.

சிவாஜி,எம்.ஜி.ஆர், என்ற இரண்டு இமயங்களின் மடியில் விளையாடி, கமல்,ரஜினி ஆகிய இருவருக்கும் ஈடுகொடுத்து தன்னை முன்னிறுத்தியவர்.  ஹிந்தியில் அமிதாப் ஜிதேந்திரா,ஜெயப்பிரதா,ரேகா போன்ற  நட்சத்திரங்களுடன் போட்டிபோட்டு லேடி சுப்பர் ஸ்டாராக ஜொலித்தவர் ஸ்ரீதேவி எனும் சிரிப்பழகி.

சிவகாசி,மீனாம்பட்டிக் கிராமத்தில் 1963 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி பிறந்தார். தகப்பன் ஐயப்பன் வக்கீலாகத் தொழில் பார்த்தவர். தாயார் ராஜேஸ்வரி தெலுங்கைப் பூர்வீகமாகக் கொண்டவர். குழந்தை நட்சத்திரமாகத் திரைப்படங்களில் ஜொலித்தபோதும்  தான்  பிறந்த கிராமத்திலேதான் வசித்தார். கதாநாயகியானபின் சென்னையில் குடியேறிய போதும் ஹிந்தியில் ஜொலித்த வேளையிலும் தனது கிராமத்தை மறக்காதவர்.

சாண்டோசின்னப்பா தேவரின் துணைவன் படத்தில்  குழந்தை முருகனாக நடிப்பதற்கு அழகான குழந்தை ஒன்றைத் தேடியபோது, காமராஜரின் சிபார்சில் கண்ணதாசனால் தேவருக்கு அறிமுகமானவர் குழந்தை ஸ்ரீதேவி.  நான்கு வயதான   முருகன் அனைவரையும் கவர்ந்தார் அதன் பின்னர் வெளியான பல படங்களில் சிறுவனாகவும் சிறுமியாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். வசந்தமாளிகை, பாபு, பாரதவிலாஸ் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக சிவாஜியுடன் நடித்தார்.. நம்நாடு படத்தில் குழந்தை நட்சத்திரமாக எம்.ஜி.ஆருடன் நடித்தார். கனிமுத்து பாப்பா,திருமாங்கல்யம், அகத்தியர், ஆதிபராசக்தி ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். 23 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தபின்னர் 24 ஆவது படத்தில் கதாநாயகியாகப் பரிணமித்தார்.

குழந்தை நட்சத்திரமான ஸ்ரீதேவியை 1976 ஆம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் மூன்று முடிச்சு படத்தின் மூலம் கதாநாயகியாக்கினார். கமல்,ரஜினி ஆகிய இருவருக்கும் ஈடு கொடுத்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். மூன்று முடிச்சு படத்தில் நடித்தபோது ஸ்ரீதேவிக்கு 13 வயது.  அப்போதும் அவர் சிறுமிதான். கமலின் காதலியாகவும் ரஜினியின் சித்தியாகவும் நடித்து முத்திரை பதித்தார். முதல் படத்தியேலே கமலின் நாயகியாகவும் ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்தார். கமலையும் ரஜினியையும் பட்டை தீட்டிய பாலசந்தர் ஸ்ரீதேவியையும் ஜொலிக்கவைத்தார்.

மூன்று முடிச்சு நாயகி  செல்வியைப்பற்றி ரசிகர்கள் சிலாகித்துக் கொண்டிருந்த வேளையில் 1977 ஆம் ஆண்டு இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் 16 வயதினிலே பட நாயகியான மயில் ரசிகர்களின் மனதை மயிலிறகால் வருடினார். கமல்,ரஜினி  போன்றவர்களுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீதேவி சில படங்களில் சிவாஜியுடன் ஜோடியாக நடித்தார். கமல்,ரஜினி,சிவாஜி,சிவகுமார் போன்ற பலருடன் ஸ்ரீதேவி ஜோடியாக நடித்தபோதும் கமலுடனும் ரஜினியுடனும் நடித்த படங்கள்தான் அதிகமாகப் பேசப்பட்டன.

கமலும் ஸ்ரீதேவியும் இணைந்து  24 படங்களில் நடித்துள்ளனர்.   1976ம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சுதான் இருவரும் இணைந்து ஜோடியாக நடித்த முதல் படம். இதில் வில்லன் என்றாலும் கதாநாயனுக்கு இணையாக மிரட்டியவர் ரஜினி 16 வயதினிலே படத்தில் கமல்,ரஜினி,ஸ்ரீதேவி ஆகிய மூவரின் நடிப்பில் யாருடைய நடிப்பு உச்சத்தைத் தொட்டது என்ற பட்டிமன்றத்துக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. சிகப்பு ரோஜாக்கள், மனிதரில் இத்தனை நிறங்களா,தாயில்லாமல் நானில்லை போன்றவை உச்சம் தொட்ட படங்கள்.

வெள்ளிவிழா படமான கல்யாணராமன், வறுமையின் நிறம் சிவப்பு ஆகிய படங்கள் இருவரின் நடிப்பில் புதிய அத்தியாயத்தைப் படைத்தன. குரு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பெரு வெற்றி பெற்றது. இலங்கையில் ஒருவருடம் ஓடி தமிழ்  மட்டுமல்லாது சிங்கள ரசிகர்களின் மனதிலும் கமலும் ஸ்ரீதேவியும் இடம் பிடித்தனர். மீண்டும் கோகிலா படத்ஹ்டில் கமலும் ஸ்ரீதேவியும் போட்டி போட்டு நடித்தனர்.  சின்னஞ்சிறு வயதில் என்ற பாடல் காட்சி மனதை விட்டு  நீங்காதது.
தேவதாஸ்,வசந்தமாளிகை போன்ற காதல் படங்களுக்கு ஈடாக வெளியான படம் வாழ்வே மாயம். கமலும் ஸ்ரீதேவியும் போட்டி போட்டு நடித்த படம் மூன்றாம் பிறை. கமலுக்கு முதன்  முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம். சத்மா என்ற பெயரில் ஹிந்தியிலும் வெற்றிபெற்ற படம்.

ரஜினியுடன் 22 படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். மூன்று முடிச்சில் வில்லத்தனம் காட்டிய ரஜினி 16 வயதினிலேயும் தொடர்ந்தார். சப்பாணி,மயிலு போன்றே பரட்டையும் பட்டையை கிளப்பியது. வணக்கத்துக்குரிய காதலியே,பிரியா, தாயில்லாமல் நானில்லை, தர்மயுத்தம்,ஜானி,ராம் ராபர்ட் ரஹீம், {தெலுங்கு}, ராணுவ வீரன், தனிக்காட்டு ராஜா, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, நான் அடிமை இல்லை ஆகியன வெற்றிப் படங்கள் வரிசையில் முன்னிலை வகிக்கின்றன. 1992 ஆம் ஆண்டு வெளியான சோர் கே கார் சோர்னி என்ற ஹிந்திப் படமே இருவரும் இணைந்து நடித்த கடைசிப் படம்.

மலையாள திரைப்படங்களிலும் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதற்கு சான்றாக 'ஆலிங்கனம்' குட்டவும் சிக்ஷையும்' 'ஆத்ய பாடம்' ' நிமிஷம்' போன்ற திரைப்படங்களை கூறலாம்.

1975ம் ஆண்டு இயக்குநர் கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த 'ஜுலி' என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1978ல் வெளிவந்த சோல்வா சாவன்' (16 வயதினிலே) என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இயக்குநர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி கண்ட 'மூன்றாம் பிறை' திரைப்படம் ஹிந்தியில் சத்மா' என்ற பெயரில் வெளிவந்து வெற்றி கண்டதோடு மட்டுமல்லாமல் ஸ்ரீதேவிக்கு புகழையும் தேடித்தந்தது.

அதன் பின் வெளிவந்த 'ஹிம்மத்வாலா' 'சாந்தினி' திரைப் படங்களின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலில் ஸ்ரீதேவியும் இணைந்தார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்த ஸ்ரீதேவி 1996ம் ஆண்டு நடிகர் அனில்கபூரின் சகோதரரும் திரைப்படத் தயாரிப்பாளருமான           போனிகபூரை மணமுடித்தார்இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஜான்வி சினிமாவில் நடிக்கின்றார்.

  சினிமாவை விட்டு விலகி இருந்த ஸ்ரீதேவி 14 ஆண்டுகளுக்குப் பின் 2012ம் ஆண்டு வெளிவந்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடித்தார்.    இப்படத்தில் அஜித்தும் நடித்துள்ளார்.  மாம் ஸ்ரீதேவியின் கடைசிப்படம்.  2015  ஆம் ஆண்டு   விஜயுடன் நடித்த புலி என்ற படமே இவர் கடைசியாக நடித்த தமிழ்ப்படம்.

   இந்தியாவின் 4வது உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் ஸ்ரீதேவி பெற்றுள்ளார்.

ஸ்ரீதேவி பெற்ற விருதுகள் :
  2013 ல் பத்மஸ்ரீ விருது
    சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதுகள். 4 முறை
   பிலிம்ஃபேர் சிறப்பு விருது 2 முறை
  1981 ல் மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது
  2013 ல் இங்கிலீஷ் விங்கிலீஷ்.  படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது.
 2013 ல் என்டிடிவி விருது
  2013 ல் இந்தியா டுடேவின் கலைத்துறையில் சிறந்த பெண் விருது
 2013 ல் இந்திய சினிமாவின் பேரரசி விருது
  2015 ல் புலி படத்திற்காக சிறந்த வில்லி விருது
  இந்திய சினிமாவில் இவர் அளித்த பங்களிப்பிற்காக 1990, 2003, 2009, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் 20 க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கி கெளவிக்க்கப்பட்டுள்ளார்.
  2012 ல் டாப் 10 பாலிவுட் நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடித்ததற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்
ஸ்ரீதேவியின் வாழ்வு முடிந்தாலும் அவர் நடித்த பாத்திரங்கள் ரசிகர்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும்.
வர்மா

Thursday, January 17, 2013

திரைக்குவராதசங்கதி 54



மந்திரி குமாரியின் பாடல்கள்அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள். வாராய்நீவாராய்,உலவும்தென்றல் காற்றினிலே ஆகிய பாடல்கள் திருச்சி லோகநாதனைகண் முன்னால் நிறுத்தின. அதேபடத்தில்ரி.எம். சௌந்தரராஜன்ஒருபாடல்பாடிஇருந்தார்.அன்னம்இட்வீடட்டிலேகன்னக்கோல்சாத்தவேஎண்ணம்கொண்டபாவிகள்மண்ணாய்போகநேருமேஎன்றஅப்பாடல்ரி.எம்.சௌந்தரராஜனின்கணீரென்றகுர‌லைவெளிச்சம்போட்டுக்காட்டியது.ஜி.ராமநாதனின்இசையில்வெளியானஅப்படத்தின்பாடல்கள்அனைத்தும் மனதைவிட்டுநீங்காதுள்ளன.எம்.ஜி.ஆரின்படங்களுக்குஇசைஅமைத்தால்.அவர்ஒப்புக்கொண்டபின்னர்தான்பாடல்ஒலிப்பதிவுசெய்யப்படும்.ஜி.ராமநானின்திறமையில்நம்பிக்கைவைத்தஎம்.ஜி.ஆர்அவருடையஇசையமைப்பில்தலையிடுவதில்லை

டி.எம்.சௌந்ததரராஜனின்குரலில்மயங்கியஜி.ராமநாதன்அவரைக்கதாநாயகனாக்கிபட்டினத்தார்என்றபடத்தைஎடுத்தார்.பட்டினத்தார்படம்வளர்ந்துகொண்டிருக்கும்போதுகடனும்மறுபுறத்தில்வளர்ந்துகொண்டுசென்றது.தனதுகவலையை எம்.ஜி.ஆரிடம் கூறியஜி.μõமநாதன்தனக்குஒருபடம்நடித்துத்தரும்படி கேட்டார்.எம்.ஜி.ஆரும்அதற்குஒப்புதலளித்தார்.பாடல்காட்சியைக்கூறிபாடலைகொடுத்துவிட்டால்போதும்.அதன்பின்யாருடையதலையீட்டையும்ஜி.ராமநாதன்விரும்புவதில்லை.தயாரிப்பாளர்களின்தலையீடுஉள்ளஏ.வி.எம்.,ஜெமினிபோன்றபெரியநிறுவனங்களுக்குஅவர்பணியாற்றாததற்குஅதுவேகார‌ணம்என்றுஅவரைப்பற்றிநன்குஅறிந்தவர்கள் கூறியுள்ளனர்


.நடிகைமாதுரிதேவி,ரோஹினிஎன்றபடத்தைத்தயாரித்தார்.அப்படத்துக்குஇசைஅமைப்பாளராகஜி.ராமநாதனைஒப்பந்தம்செய்தார்.பாடல்களைஎழுதியவர்கவிஞர்மருதகாசி.இருவரும்யாருடையதலையீட்டையும்விரும்பாதவர்கள்.மாதுரிதேவிசிலபெங்காலிபாடல்களைகிராமபோனில்போட்டுக்காட்டிஅப்பாடல்போன்றுஇசைஅமைக்கவேண்டும்என்றுகூறினார்.அவருடையதொல்லைபொறுக்கமாட்டாதஜிராமநாதன்இடையிலேவிலகிவிட்டார்.ஜி.ராமநாதனின்வேண்டுகோளின்பேரில்கே.வி.மகாதேவன்அப்படத்துக்குஇசைஅமைத்தார்.பொன்முடிபடத்தின்நாயகன்நர‌சிம்மபார‌திக்கானபாடல்கள்அனைத்தையும்ஜிராமநாதன்பாடிஇருந்தார்.கே.வி.மகாதேவன்இசைஅமைத்தஅல்லிபெற்றபிள்ளை படத்தில் எசமான் பெற்ற செல்வமே என் சின்ன எசமானே என்ற பாடலையும் ஜி. ராமநாதன் பாடியுள்ளார்.பாடியதுடன் மட்டும் அவர் நின்று விடவில்øல. ஆயிர‌ம் தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி படத்தில் முனிவர் வேடத்தில்பாடி நடித்தார்

 சேலம்மார்டன்தியேட்டர்களில்சீர்காழிகோவிந்தராஜன்துணைநடிகராகஇருந்த‌போதுஅவருடையதிறமையைஇளம்கண்டஜிராமநாதன்சீர்காழிக்குஉற்சாகமூட்டினார்.நீசிறந்தபாடகனாகவருவாய்என்றுஅன்றேகூறிவிட்டார்.கோமதியின்காதலன்என்றபடத்தில்ஜிராமநாதனின்இசையில்சீர்காழிகோவிந்தராஜன் பாடல்களைப்பாடினார்.அவற்றில்வானமீதில்நீந்திஓடும்வெண்ணிலாவேநீவந்ததேனோஜன்னலுக்குள்வெண்ணிலாவேஎன்றபாடல்எத்தனைமுறைகேட்டாலும்திகட்டாதது.தபேலா,வயலின், சீர்காழியின் குர‌ல்மூன்றும் இணைந்த ஒரு அற்புதக் கலவை அப்பாடல்.
ரமணி
மித்திரன்    01/04/2007
115

Wednesday, February 1, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள்21

வெளிநாட்டில் படித்து அந்நிய கலாசாரத்திற்கு அடிமையான இளைஞன் ஒருவர் தமிழ்க்கலை, கலாசாரம், இந்துமதம் என்பவற்றைக் கிண்டலடிக்கிறான். மனைவியை மறந்து விபசாரி வீடே கதியென்று கிடக்கும் இளைஞன் இறுதியில் குஷ்டரோராகியாகிறான். பால்வினை நோயான‌ எயிட்ஸ் பற்றி அதிகம் அறிந்திடாத காலத்தில் வெளியான இப்படத்தின் மூலம் விபசாரியிடம் சென்றால் வாழ்க்கை சீரழியும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.
வெளிநாட்டில் படித்துவிட்டு நாடு திரும்பும் எம்.ஆர்.ராதா வெளிநாட்டு கலை கலாசாரத்தைத் தனது கிராமத்திலும் புகுத்துவதற்கு விரும்புகிறார். விபசாரியின் வீடேட கதியென்று எம்.ஆர்.ராதா கிடப்பதனால் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்கின்றனர். திருமணம் முடிந்தால் விபசாரியிடம் எம்.ஆர்.ராதா @பாகமாட்டார் என்று பெற்றோர் நம்பினர். திருமணத்தின் பின்னர் விபசாரியிடம் போவதை எம்.ஆர்.ராதா நிறுத்தவில்லை. விபசாரி எம்.என்.ராஜத்தின் வீடே கதியென்று கிடக்கிறார் எம்.ஆர்.ராதா. எம்.ஆர்.ராதாவுக்கு குஷ்டரோகம் வருகிறது. அவரது அவலட்ச‌ணமான உருவத்தை ச‌கிக்க முடியாத எம்.என்.ராஜம் அவரை விரட்டி விடுகிறார். நல்ல உணவை தூக்கி எறிந்த எம்.ஆர்.ராதா சாப்பிடுவதற்கேக வழியின்றி பிச்சை எடுக்கிறார். அவருடைய அவலட்ச‌ணமான உருவத்தை பார்த்த சிலர் அருவருப்புடன் பிச்சை கொடுக்காது விலகி செல்கின்றனர்.
நண்பனான எஸ்.எஸ்.ஆரிடம் பிச்சைகேட்கிறார். எஸ்.எஸ்.ஆரினால் கூட எம்.ஆர்.ராதாவை அடையாளம் காண முடியவில்லை. கண் பார்வை இழந்த எம்.ஆர்.ராதாவால் உலகத்தை பார்க்க முடியவில்லை. சாப்பாட்டுக்கே வழியின்றி அலையும்போது இளமை பருவத்தில் செய்த செயல்கள் ஞாபகத்தில் வருகின்றன. தன் மீது உயிரை வைத்திருந்த மனைவி ஸ்ரீரஞ்ச‌னி மீதும் நண்பன் எஸ்.எஸ்.ஆரின் மீதும் வீண் பழி சுமத்தியதை நினைத்து வருத்தப்படுகிறார். சாப்பாட்டுக்கு மூன்று மைல் தூரம் போக வேண்டும் என்று ஒருவர் கூற தாயின் பிரேதத்துடன் மூன்று மைல் தூரம் உள்ள சுடலைக்கு நடந்து போக வேண்டுமா என்று கேட்ட ஞாபகம் வந்து எம்.ஆர்.ராதாவை வாட்டியது.
எஸ்.எஸ்.ஆரும் ஸ்ரீரஞ்ச‌னியும் எம்.ஆர்.ராதாவை அடையாளம் காண்கின்றனர். எஸ்.எஸ்.ஆரையும், ஸ்ரீரஞ்ச‌னியையும் இணைத்து தப்பாக நினைத்த எம்.ஆர்.ராதா. தன் மனைவியை காப்பாற்றும்படி எஸ்.எஸ்.ஆரின் கையில் ஒப்படைக்கிறார்.


ரத்தக்கண்ணீர் படத்தின் வச‌னங்கள் அனைத்தும் இந்துமத கொள்கையை நக்கலடிப்பவையாகவே உள்ளன. 3000 தடவைமேடைஏறிய ரத்தக்கண்ணீர் என்ற நாடகம் திரைப்படமான போதும் ரசிகர்களின் ஆதரவை பெற்றது. பாடல்கள் திரைப்படங்களை ஆக்கிரமித்திருந்த வேவளையில் வெளியான இப்படத்தின் வச‌னங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்தன. எம்.ஆர்.ராதா வச‌னங்கள் இன்றும் மனதில் நிழலாடுகின்றன.மாமனாரைப் பார்த்து மிஸ்டர் பில்லை என்பார். நெற்றியில் இருக்கும் விபூதியைசுட்டிக் காட்டி என்ன மான் இது கோடு கோடா இருக்கு என்று எம்.ஆர்.ராதா கேட்க. இது பட்டை விபூதி என்கிறார் மாமன், வாட் பாட்டை என்று திரும்ப கேட்பார். எல்லா க‌ட்சிலையும் பிஸினஸ்ல பூத்துட்டான் பெக்கர்ஸ் என்ற அரசியல் கட்சி அனைத்தும் வியாபார நோக்கத்தில் அமைந்தவை என்ற வச‌னம் இன்றைக்கு சாலப் பொருந்துகிறது.
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது என்ற சி.எஸ்.ஜெயராமனின் பாடலும், எம்.ஆர்.ராதாவின் இடைக்குரலும் காலத்தால் அழியாதவை. நகைச்சுவை கலந்த வில்லன் பாத்திரத்தில் ஜொலித்த எம்.ஆர்.ராதா ரத்தக்கண்ணீர் படத்தின் மூலம் மிகச் சிற்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதேபோன்று வித்தியாச‌மான பாத்திரங்கள் கிடைத்திருந்தால் அவரது நடிப்பு இன்னமும் ஒருபடி கூடுதலாக புகழ் பெற்றிருக்கும்.


பாடல்களில் தமிழ் சினிமா உலகம் கட்டுண்டிருந்த வேளையில் வச‌னத்தின் மூலம் மக்களின் பேரபிமானத்தை பெற்ற படம் ரத்தக்கண்ணீர். நடிப்பாலும் பேச்சாலும் கவர்ந்தவர் எம்.ஆர்.ராதா. அழகாலும் கவர்ச்சியாலும் ரசிகர்களைச் சுண்டி இழுத்தார் எம்.என்.ராஜம்.
1954 ஆம் ஆண்டு இப்படத்தைத் தயாரித்தது பெருமாள் முதலியாரின் நஷனல் பிக்ஸர்ஸ். கதை வச‌னம் கே.தங்கராசு. இசை சிதம்பரம் எஸ்.ஜெயராமன். பாடல்கள் அ.மருதகாசி, ஆத்மநாதன். எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ஆர், ச‌ந்திரபாபு, துரைசாமி, ஸ்ரீரஞ்ச‌னி, எம்.என்.ராஜம், எஸ்.ஆர்.ஜானகி, அங்கமுத்து ஆகியோர் நடித்தனர். எம்.எல்.வச‌ந்தகுமாரி பாடிய கதவைச்சாத்தடி கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச்சாத்தடி என்ற பாடல் விபசாரியின் மனநிலையை நன்கு விளக்குகிறது. ரி.பி.ரத்தினம் பாடிய ஆளை ஆளைப் பார்க்கிறார் ஆளை ஆளைப் பார்க்கிறார் ஆட்டத்தைப் பார்த்திடாது ஆளை ஆளைப் பார்க்கிறார் என்ற பாடல் விபசாரியைத் தேடிச் செல்பவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.

ரமணி


மித்திரன்

Sunday, December 4, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 14

சினிமாவிலும் அரசியலிலும் எதிரும் புதிருமாக இருந்த மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படம் கூண்டுக்கிளி. நண்பனின் மனைவியை அடையத் துடிக்கும் துரோகியின் கதை. எம்.ஜி.ஆர் கதாநாயகனாகவும் சிவாஜி வில்லனாகவும் நடித்தனர்.
பி.எஸ்.சரோராஜாவைப் பெண் பார்த்த சிவாஜி, அவர்தான் தன் மனைவி என்று முடிவு செய்கிறார். விதி வச‌த்தால் சிவாஜியின் நண்பன் எம்.ஜி.ஆரின் மனைவியாகிறார் சரோஜா. இதை அறியாத சிவாஜி பி.எஸ்.சரோஜாவைத்தேடி ஊரெல்லாம் அலைகிறார். வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவாஜி ரயிலின் முன் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தபோபாது எம்.ஜி.ஆர் காப்பாற்றுகிறார். சிவாஜியை வீட்டுக்கு கூட்டிவந்த எம்.ஜிஆர். தன் மனைவி பி.எஸ். சரோஜாவை அறிமுகப்படுத்துகிறார். தனக்கு மனைவியாக வரவேண்டிய பி.எஸ்.சரோராஜா தன் நண்பனின் மனைவியானதை அறிந்து அதிர்ச்சியடைகிறார் சிவாஜி.
சிவாஜி செய்த குற்றத்திற்காகக் சிறைக்குச் செல்லும் எம்.ஜி.ஆர் தன் மனைவியை கவனமாக பார்க்கும் படி கூறுகிறார். உயிர் கொடுப்பான் நண்பன் என்பதற்கிணங்க எம்.ஜி.ஆர் சிறைச்செல்ல நண்பனுக்கு துரோகம் செய்ய திட்டமிடுகிறார் சிவாஜி. தனக்கு தலைவலி என்று கூறி தலைக்கு தைலம் பூசும்படி பி.எஸ்.சரோஜாவிடம் கூறுகிறார். கள்ளம் கபடமில்லாத சரோஜா, சிவாஜிக்குத் தைலம் பூ"கிறார். சரோஜாவின் கைப்பட்டதும் சிவாஜியின் காமத் தீ வெளிப்படுகிறது. தன் இச்சையை சரோஜாவிடம் கூறுகிறார். தான் நண்பனின் மனைவி என்பதை சரோராஜா ஞாபகப்படுத்துகிறார்.
கடுமையான மழை பெய்த ஒருநாள் சரோஜாவை கெடுக்க முயற்சிக்கிறார் சிவாஜி. அப்போது உண்டான மின்னலால் சிவாஜியின் கண் பார்வை பறி போகிறது. தன் தவறுக்கு கடவுள் கொடுத்த தண்டணை என்று உணர்ந்த சிவாஜி ஊரை விட்டுச் செல்கிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த எம்.ஜி.ஆர் நண்பனின் துரோகத்தை மன்னித்து மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.



இரு பெரும் துருவங்கள் நடித்த கூண்டுக்கிளி பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படு தோல்வியடைந்தது. தியேட்டர்களில் சிவாஜி ரசிகர்களும் மோதிக் கொண்டார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இப்போது இப்படத்தை எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி ரசிகர்களும் அமைதியாக பார்க்கின்றனர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, பி.எஸ்சரோஜா, கொட்டாபுளி ஜெயராமன், ஈ.ஆர்சகாதேவன், டிகே.கல்யாணம், குச‌லகுமாரி, டி.பி.முத்துலட்சுமி, அங்கமுத்து ஆயோர் நடித்தனர். திரைக்கதை வச‌னம் விந்தன். பாடல்கள் தஞ்சை ராமையாதாஸ். கவி.காமு.ஷெரீப், மருதகாசி, விந்தன். இசை கே.வி.மகாதேவன். கொஞ்சுங் கிளியான பெண்ணை கூண்டுகிளி ஆக்கிவிட்டு கொட்டு மேளம் கொட்டுறது ச‌ரியா தப்பா என்ற டி.எம்.எஸ்ஸின் குரல் இன்றும் மனதை வருடுகிறது. இயக்கம் டி.ஆர்.ராமண்ணா.
1954 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தபோது சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற இரு பெரும் நட்ச‌த்திரங்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. விதி வச‌த்தால் அதுவே முதலும் கடைசியுமான படமானது. ரசிகர்களை அமைதிப்படுத்தி இருவரும் இணைந்து நடித்திருக்கலாம். இருவரும் இணைந்து நடிக்காததற்கு தமிழக அரசியலும் ஒரு முக்கிய காரணம்.
ரமணி
மித்திரன்13/11/11