Tuesday, February 26, 2008

தசாவதாரம்







தசாவதாரம் படம் பற்றிய சகல விபரங்களையும் பொத்திப்பொத்தியே வைத்திருந்தார்கள் முன்னர்வெளிவந்தபடங்கள் எல்லாம் போலிஎன்று கூறினார்கள் இப்போது புதியபடங்கள் வெளியாகி உள்ளன.

Tuesday, February 19, 2008

எம்.ஜி.ஆரின் வாக்குவங்கியை கவர முயற்சிக்கும் ஜெயலலிதா




அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி விஜயகாந்தின் பக்கம் செல்வதை
வர்மா

உணர்ந்துகொண்ட ஜெயலலிதா, எம். ஜி. ஆர் வாழ்ந்த ராமவரம் தோட்டத்துக்கு 11 வருடங்களின்பின்னர் சென்று எம்.ஜி. ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தமிழக அரசியலைப் புரட்டிப்போட்ட ஒப்பற்ற சக்தி எம். ஜி. ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு உண்டு. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு ஜெயலலிதா தலைமை ஏற்றதில் இருந்து கழகத்தில் இருந்த எம். ஜி.ஆர். என்ற சொல்தான் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டடிக்கப்பட்டது. எம். ஜி.ஆரின் விசுவாசிகள் ஓரங்கட்டப்பட்டார்கள். எம். ஜி.ஆரின் விசுவாசிகளிடம் இருந்த பதவிகள் பறிக்கப்பட்டன.
எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து இருந்த இடத்தில் அம்மா என்ற மூன்றெழுத்து ஒட்டிக்கொண்டது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் மூத்த தலைவர்களும் ஜெயலலிதாவுக்கு மதிப்புக்கொடுக்கத் தொடங்கினர்.
ஜெயலலிதாவின் எம்.ஜி.ஆர் விரோதக் கொள்கையினால் சிலர் வேறு கட்சிகளில் இணையத் தொடங்கி விட்டனர். எம். ஜி.ஆரின் அதிதீவிர விசுவாசியான ஆர். எம். வீரப்பன் எம்.ஜி. ஆர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினார்.
எம். ஜி. ஆரின் வழியில் விஜயகாந்த் கட்சி ஒன்றை ஆரம்பித்தார். ஜெயலலிதாவினால் ஓரம் கட்டப்பட்ட எம். ஜி. ஆர் ரசிகர்கள் விஜயகாந்தின் கட்சியில் சேரத் தொடங்கினார்கள். விஜயகாந்தின் துரித வளர்ச்சியை ஜெயலலிதா முதலில் கண்டு கொள்ளவில்லை. காலப்போக்கில் விஜயகாந்தின் வளர்ச்சி ஜெயலலிதாவை அச்சப்பட வைத்தது. அதையடுத்து இத்தனை நாட்களாக எம். ஜி. ஆரின் புகழைப் பற்றிப் பேசாமல் இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென ஞானோதயம் பிறந்தது.
எம். ஜி. ஆர் உயிருடன் இருந்த போது ராமாவரம் தோட்டம் கலகலப்பாக இருந்தது. அதனை புனித இடமாகக் கருதிய எம். ஜி.ஆரின் ரசிகர்களும், கழகத்தொண்டர்களும் ஒரு முறை ராமாவரம் சென்று தமது ஆதங்கத்தை தெரிவித்தார்கள். எம். ஜி.ஆர் மறைந்த பின்னர் ராமாவரம் தோட்டம் உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை. இதுபற்றி பல பத்திரிகைளும் சஞ்சிகைகளும் பல கட்டுரைகளை வெளியிட்டபோதும் கண்டு கொள்ளாத ஜெயலலிதா இப்போதுதான் விழித்துக்கொண்டு ராமாவரம் சென்று எம். ஜி.ஆரை முன்னிலைப்படுத்துகிறார். எம். ஜிஆரின் பிறந்த நாளின் போதும்
நினைவுநாளின் போதும் வேறு எந்தத்
தலைவருக்கும் இல்லாத அளவில் விழாக்கள் நடைபெறும். எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தாங்களாகவே விழா எடுத்து எம்.ஜி.ஆரின் புகழை வெளிப்படுத்துவார்கள்.
அரசியல் தலைவர்களுக்கு அவர் சார்ந்த கட்சிகள்தான் விழா எடுப்பது வழமை. ஆனால் எம்.ஜி.ஆருக்கு அவரின் ரசிகர்கள் விழா எடுத்து அவரை நினைவுபடுத்துவார்கள். எம்.ஜி. ஆருக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படாமையே அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் தோல்வி அடையக் காரணம் என்று கருத்து நிலவுகிறது. அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின் தோல்வியைப்பற்றி ஆராய்ந்தவர்கள் இதனை ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். எம்.ஜி. ஆரின் பெயரை உச்சரித்தால் வெற்றி என்பதை உணர்ந்து கொண்ட ஜெயலலிதா ராமாவரத் தோட்டத்துக்கு சென்று எம்.ஜி.ஆரின் மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.
எம்.ஜி.ஆரின் பெயரைக் கூறி விஜயகாந் வளர்வதைத் தடுத்து எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு தானே என்பதை தமிழக மக்களுக்கு வெளிப்படுத்தும் முயற்சியில் ஜெயலலிதா வெற்றி பெற்றுவிட்டார்.
நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றி பெறும் கூட்டணியை அமைக்க விரும்புகிறார் ஜெயலலிதா. மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடனும் தமிழகத்தில் வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகளுடனும் கூட்டணி வைப்பதில் ஜெயலலிதா அக்கறையாக உள்ளார். வடமாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களில் பாரதீய ஜனதாகட்சி வெற்றி பெற்று வருகிறது. ஆனால், தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சிக்கு எந்த செல்வாக்கு இல்லை.
பாட்டாளி மக்கள் கட்சி விஜயகாந்தின் தேசிய முன்னேற்ற திராவிடக்கட்சி, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி வைக்க ஜெயலலிதா விரும்புகிறார். பாட்டாளி மக்கள் கட்சிக்கும் விஜயகாந்துக்கும் தமிழகத்தில் செல்வாக்கு உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணி தோல்வி அடைவதற்கு விஜயகாந்தின் எழுச்சியும் ஒரு காரணம்.
தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் சக்திகளில் நாடார் சமூகமும் முக்கியமானது. ஆகையினால் நாடார் சமூகத்தை குறிவைத்து கட்சியை ஆரம்பித்திருக்கும் சரத்குமாரையும் தனது கூட்டணியில் இணைக்க ஜெயலலிதாவிடம் விருப்பம் உள்ளது. இதேவேளை, விஜயகாந்துடனும், சரத்துகுமாருடனும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெயலலிதா தயாரில்லை. பாரதீய ஜனதாகட்சி விஜயகாந்துடனும் சரத்குமாருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சம்மதிக்கவைத்தால் தமிழகத்தில் வெற்றிக் கூட்டணி அமைந்து விடும் என்று ஜெயலலிதா எண்ணுகிறார்.

வர்மா


வீரகேசரி வார வெளியீடு, 27.01.2008

Tuesday, February 12, 2008

மோடியின் வருகையால் உற்சாகமா பா.ஜ.க.



வர்மா

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தமிழக விஜயத்தின் பின்னர் தமிழக அரசியலில் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. பாரதீய ஜனதாக் கட்சி, ஆர்.எஸ்.எஸ். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன நரேந்திர மோடியின் தமிழக விஜயத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றன.
காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன நரேந்திர மோடியின் தமிழக விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. நரேந்திர மோடியின் தமிழக விஜயத்தை முன்னிட்டு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
குஜராத்தில் நடந்த மதக்கலவரங்களுக்கு நரேந்திர மோடியின் மீதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. குஜராத்தில் முஸ்லிம்கள் மீது கொடூரமான தாக்குதல் நடந்தபடியினால் குஜராத் சட்டசபைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி தோல்வியடையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. நரேந்திர மோடியின் வெற்றி காங்கிரஸ் கட்சியை மட்டுமல்லாது பாரதீய ஜனதாக் கட்சியையும் அதிர்ச்சியடையச் செய்தது.
துக்ளக் சஞ்சிகையின் ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காகவே நரேந்திர மோடி தமிழகத்துக்கு விஜயம் செய்தார். காங்கிரஸ் கட்சி உரிமை கொண்டாடும் காமராஜர் அரங்கத்தில் துக்ளக்கின் ஆண்டு விழா நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் பிரதான எதிரியான மோடி பங்குபற்றும் நிகழ்ச்சிக்கு காமராஜர் அரங்கத்தின் அனுமதி வழங்கப்பட்டதனால் காங்கிரஸ் கட்சியினர் கொதித்துப் போயுள்ளனர்.
துக்ளக் சஞ்சிகையின் ஆண்டு விழாவில் நரேந்திர மோடி பங்குபற்றியதை விட நரேந்திர மோடி ஜெயலலிதா சந்திப்புத்தான் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் சுமார் முக்கால் மணி நேரம் பேசினார்கள். கட்சிப் பிரமுகர்கள் உதவியாளர்கள் யாரும் இல்லாமல் இருவரும் பேசியதால் அவர்களின் பேச்சு விபரம் வெளியில் வரவில்லை. ஆனால், ஏராளமான ஊகங்கள் கசியத் தொடங்கி விட்டன.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியும், அ.தி.மு.கவும் இணைந்து போட்டியிடும் என்ற கருத்து மேலோங்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சி விஜயகாந்தின் தேசிய முன்னேற்ற திராவிடக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றுடன் கூட்டணி சேர, அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டும் போட்டி போடுகின்றன. பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டுச் சேர்வதற்கு தமிழகத்தின் கட்சிகள் எவையும் தயாராக இல்லை.
காங்கிரஸ் கட்சியையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் இப்போதைக்கு பிரிக்க முடியாது. தமது பலம், பலவீனம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்ட இரண்டு கட்சிகளும் விட்டுக் கொடுப்புகளுடன் கூட்டணியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
நரேந்திர மோடிக்கு மிகப் பிரமாண்டமானதொரு விருந்தை ஜெயலலிதா வழங்கினார். கடந்த முறை நரேந்திர மோடி வெற்றி பெற்றதும் அவருக்கு முதலில் வாழ்த்துத் தெரிவித்தவர் ஜெயலலிதா. இந்த முறை குஜராத்தில் வெற்றி பெற்ற நரேந்திர மோடியின் முதல் விஜயம் இதுவாகும்.
இமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய ஜெயலலிதா பாரதீய ஜனதாக் கட்சியின் மீது நாட்டம் கொள்கிறார்.
காங்கிரஸ் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு எதிராக மூன்றாவது அணி ஒன்றை ஆரம்பித்த ஜெயலலிதா, இப்போது பாரதீய ஜனதாக் கட்சியுடன் சேர்வதற்கு முயற்சிக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாராகி விட்டது. அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகமும், பாரதீய ஜனதாக் கட்சியும் இணைந்தால் பாட்டாளி மக்கள் கட்சியும் அதில் ஒட்டிக் கொள்ளும்.
பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர்களின் பொங்கல் செய்திகள் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால் பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைவதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பச்சைக்கொடி காட்டி விட்டதென்றே நினைக்கத் தோன்றுகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்ற நிலை இருக்கையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கூட்டணி இல்லாது தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளார். வடுஜன் சமாஜக் கட்சித் தலைவி மாயாவதி. தலித், பிராமணர் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்கி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளார் மாயாவதி.மாயாவதியுடன் கூட்டணி சேர தமிழகத்தின் இரு கட்சிகள் விரும்புகின்றன.
ஆனால் விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட மாயாவதி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாயாவதியும் விஜயகாந்தும் இணைந்தால் பலம்மிக்க மூன்றாவது அணி தமிழகத்தில் உருவாகிவிடும்.

வர்மா

வீரகேசரி வார வெளியீடு: 20.01.2008

Monday, February 11, 2008

சாதனைஎன்றால்சச்சின்


சாதனைஎன்றால்சச்சின்


1. அதிக ஓட்டங்கள் (16007) எடுத்தவர் என்ற பெருமை பெற்றவர்.
2. அதிக சதம் (41) கடந்தவரும் இவர் தான்.
3. அதிக முறை 90களில்(16) அவுட்டானவர்.
4. அதிக முறை ஆட்ட நாயகன் (56) விருது வென்றவர்.
5. தொடரின் நாயகன் விருதை அதிக முறை (14) கைப்பற்றியவர்.
6. ஒரு நாள் போட்டிகளில் அதிக அரைசதம் (87) கடந்தவர்.
7. ஒரு நாள் போட்டியில் 150 விக்கெட் மற்றும் 15,000 ஓட்டங்கள் எடுத்த ஒரே வீரர்.
8. முதல் தர கிரிக்கெட்டில் 100 சதம் கடந்துள்ள ஒரே வீரர்.
9. உலக கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (1,796)எடுத்தவரும் சச்சின் தான்.
10. உலக கிண்ணப் போட்டிகளில் அதிக ஆட்டநாயகன் விருது வென்றவர்.
11. அதிக ஒரு நாள் போட்டிகளில் (409) விளையாடியவர்.
12. ஒரே உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் (673) குவித்தவர் என்ற சாதனையை தென் ஆபிரிக்காவில் நடந்த 2003 உலக கிண்ணத்தில் படைத்தார்.
13. ஒரு நாள் போட்டியில் ஒரே ஆண்டில் (1998) அதிக ஓட்டங்கள் (1894), அதிக சதம் (9) எடுத்தவர்.
14. ஒரு நாள் தொடரில் ஒரே ஆண்டில் 1,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை 7 முறை கடந்தவர்.
15. உலகின் "நம்பர்1' அணியான அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 10 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார்.
16. ஒரு நாள் போட்டியில் 10,000 ஓட்டங்களை வேகமாக கடந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இம்மைல்கல்லை இவர் 259 போட்டிகளில் எட்டினார்.
17. 185 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று சாதித்துள்ளார்.
18. ஒரு நாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர்.1999இல் ஹைதராபாத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 186* ஓட்டங்கள் எடுத்தார்.
19. ஒரு நாள் போட்டிகளில் 50 ஓட்டங்களுக்கு மேலாக 100 முறை (41 சதம் + 87 அரைசதம் என மொத்தம் 128 முறை) எடுத்துள்ள ஒரே வீரர் இவர் தான்.
20. ஒரு நாள் போட்டியின் சிறந்த தொடக்க ஜோடி என்ற சாதனையை கங்குலியுடன் இணைந்து படைத்துள்ளார். இந்த ஜோடி 128 போட்டிகளில் 6,271 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
21. கங்குலியுடன் இணைந்து 20 முறை முதல் விக்கெட்டுக்கு 100 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
22. சச்சின், ட்ராவிட் ஜோடியாக இணைந்து 331 ஓட்டங்கள் எடுத்தனர். ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த ஜோடி என்ற சாதனை படைத்தனர்.
23. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.,) தரவரிசையில் 10 ஆண்டுகள் "டொப்10'இல் இருந்த ஒரே வீரர் இவர் தான்.
24. டெஸ்டில் அதிக சதம் (39) கடந்தவர்.
25. டெஸ்டில் 11,000 ஓட்டங்களை தாண்டியமூன்று வீரர்களில் ஒருவர் மற்றும் முதல் இந்திய வீரர்.
26. இந்தியாவின் உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா வென்ற ஒரே கிரிக்கெட் வீரர்.
27. 2003இல் விஸ்டன் தலைசிறந்த வீரர்கள் வரிசையில் முதலிடம்.
28. 2002இல் விஸ்டன் வெளியிட்ட டெஸ்ட் வீரர்கள் வரிசையில் பிராட்மனுக்கு அடுத்து இரண்டாவது சிறந்த வீரராக சச்சினை தேர்வு செய்தது.
29. 1988இல் வினோத் கம்ளி, சச்சின் ஜோடியாக இணைந்து 664 ஓட்டங்கள் எடுத்தனர்.
30. அறிமுக ரஞ்சி, துலிப் மற்றும் இரானி கிண்ணப் போட்டிகளில் சதம் பதிவு செய்த ஒரே வீரர்.
31. யார்க்ஷையர் கவுன்டி அணியில் விளையாடிய முதல் அன்னிய வீரர்.
32. ராஜிவ் கேல் ரத்னா, அர்ஜுனா மற்றும் பத்மஸ்ரீ என 3 விருதுகளையும் வென்ற ஒரே கிரிக்கெட் வீரர்.
33. அதிக சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் முதலிடம்.
34. கிரிக்கெட் வரலாற்றில் 50 சதம் பதிவு செய்த முதல் வீரர். இதுவரை 80 சதங்கள் கடந்துள்ளார்.
35. சர்வதேச கிரிக்கெட்டில் 27,799 ஓட்டங்கள் (டெஸ்டில் 11782, ஒரு நாள் போட்டியில் 16007, "டுவென்டி20'இல் 10) எடுத்துள்ளார்.
36. டெஸ்டில் அதிக ஓட்டங்கள் (11,782) எடுத்தவர்கள் வரிசையில் 2ஆவது இடம் பிடித்துள்ளார்.
37. அதிக டெஸ்டில் (146) விளையாடிய இந்திய வீரர்.
38. 1990இல் மிக இளம் வயதில் சதம் பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்தார்.
39. ஒரு நாள் போட்டிகளில் கங்குலி மற்றும் ட்ராவிட்டுடன் ஜோடியாக இணைந்து 6 முறை 200 ஓட்டங்கள் சேர்த்துள்ளார்.
40. டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதம் கடந்துள்ளார்.
41. 20 வயதுக்கு முன் 5 டெஸ்ட் சதம் கடந்த ஒரே வீரர்.
42. அதிக டெஸ்ட்(38) சதம் கடந்தவர்.
43. 2007 ஜனவரியில் அன்னிய மண்ணில் நடந்த டெஸ்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவின் லாராவை முந்தி, படைத்தார்.
44. டெஸ்டில் 10,000 ஓட்டங்களை வேகமாக கடந்தவர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீசின் லாராவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
45. 1999இல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 217 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் டெஸ்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமை பெற்றார்.
46. கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் எதிராக 1,000 ஓட்டங்கள் எடுத்த ஒரே வீரர்.

47. 90 கிரிக்கெட் மைதானங்களில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
நன்றி தினமலர்

Sunday, February 10, 2008

போராடத் தயாராகிறார்கள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள்

ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் 2011ஆம் ஆண்டு தமிழகத்தில் தமது கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று கூறி வருகின்றனர். அதேவேளை 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் கூறத் தொடங்கி விட்டார்.
2011ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கூட்டணி இல்லாது தனி ஒரு கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைப்பது முடியாத காரியம். பலமான கூட்டணி அமைத்தால்தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் துணை இன்றி தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. இந்த இரண்டு கழகங்களையும் எதிர்த்து மூன்றாவது அணி அமைத்தால் வெற்றி பெறலாம் என்று கிருஷ்ணசாமி நினைக்கிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்குப் போட்டியாக விஜயகாந்த் வளர்ந்து வருகிறார். விஜயகாந்தைத் தவிர்த்து மூன்றாவது அணி அமைக்க முடியாது.
விஜயகாந்த்துடன் காங்கிரஸ் கட்சி இணைந்தால் சிலவேளை வெற்றி பெறலாம். அப்படி வெற்றி பெற்றாலும் முதல்வர் பதவியை விஜயகாந்த் விட்டுக் கொடுக்கமாட்டார்.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தின் ஆட்சியில் இருந்து வெளியேறி 40 ஆண்டுகளாகி விட்டது. இந்தியாவின் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு இப்படி ஒரு அவமானம் ஏற்படவில்லை. காங்கிரஸின் பாரம்பரியம் தமிழகத்தில் இல்லாமல் போய் விடும் சூழ்நிலை எழுந்துள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பீடமேற வேண்டும் என்பதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் உறுதியாக உள்ளனர்.
தென் மண்டல கலந்தாய்வுக் கூட்டம் கடந்த வாரம் மதுரையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியின் போராட்ட வேகம் போதாது என்று குறை கூறியுள்ளனர். குமரி முதல் மதுரை வரையிலான எண்பது மாவட்டங்களின் பிரமுகர்கள் இக் கூட்டத்தில் பங்குபற்றினர்.
காங்கிரஸ் கட்சி இதுவரை செய்த தவறுகள் எல்லாவற்றையும் அங்கு இருந்தவர்ககள் பட்டியலிட்டனர். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்வதுடன் தனது பணி முடிந்து விட்டது என தாம் எண்ணியதை காலம் கடந்து காங்கிரஸ் கட்சி உணர்ந்து கொண்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்காளிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசுக்கு எதிராக அறிக்கைகளை விடுத்துக் கொண்டு போராட்டங்களையும் நடத்தி வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பாதையில் சென்று மக்களின் மனதைக் கவர தமிழக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் சில நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுமாறு மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அழைப்பு விடுத்துள்ளமை அரசியல் அவதானிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
முதல்வரும், பா. சிதம்பரமும் மிகவும் நெருக்கமானவர்கள். ஒருவர் மீது ஒருவர் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளவர்கள். தமிழக அரசுக்கு எதிராக போராடும்படி அமைச்சர் ப. சிதம்பரம் அழைப்பு விடுத்ததன் மூலம் முதல்வரையும் மீறி சில அத்துமீறல்கள் நடப்பதை உணரக் கூடியதாக உள்ளது.
அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கின் உரை அனுபவம் உள்ள அரசியல்வாதிகளை உலுக்கி விட்டது. தமிழக காங்கிரஸுக்கு புது இரத்தம் பாய்ச்சப்படவில்லை என்ற உண்மையை பகிரங்கப்படுத்தினார். இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடிய காங்கிரஸ் கட்சிக்கு இளைஞர்கள் குறைவது மிக மிக அபூர்வமாக உள்ளது. இளைஞர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்ற உருப்படியான ஆலோசனையை கார்த்திக் சிதம்பரம் முன் வைத்தார்.
தமிழகத்தின் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு கும்பல் கும்பலாக ஆட்கள் சேருவார்கள். கட்சித் தலைவருடன் தொண்டர்கள் இணையும் படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பாகப் பேசப்படும். ஆனால், தமிழக காங்கிரஸில் பழைய அரசியல்வாதிகூட சேருவதாகக் காணோம். மக்களைக் கவரும் வகையில் காங்கிரஸ் கட்சி செயற்படாததே இதற்கு முக்கிய காரணம்.
தென் மாவட்ட காங்கிரஸ் கலந்தாய்வுக் கூட்டத்திலும் கோஷ்டிகளின் ஆதிக்கம் தலைதூக்கியது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானதேசிகன் சுதர்ஸன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், மயூரா ஜெயக்குமார் உட்பட பல தலைவர்கள் இருந்தும் அவர்கள் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்காமல் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களிடம் உள்ளது. அதே ஆர்வம் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களின் மனதில் இல்லாதது துர்அதிஷ்டமே. இந்த ஆர்ப்பாட்டம் பேச்சளவில் முடிந்து விடுமா? அல்லது செயலிலும் காட்டப்படுமா என்பதை டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள்.

வர்மா
வீரகேசரி வார வெளியீடு: 13.01.2008

Friday, February 8, 2008

என்னகொடுமைசார் இது 2?






என்னகொடுமைசார் இது 2?
கடவுளை புறம்தள்ளி வள்ளுவரை அய்யனாக்கி உரைஎழுதி கோட்டம்கட்டி கடல்பாறையில் சிலைவைத்த முதல்வரின் ஆட்சியிலா வள்ளுவன்வாசுகிபெயரில் இப்படிப்பட்டபடம். இதுமட்டுமா ஆண்டாள் அழகர் என்றபெயரில் இன்னும்சிலகண்றாவிக்காட்சிகள் வெளியாகிஉள்ளன.

என்னகொடுமைசார் இது ?







கடவுளை புறம்தள்ளி வள்ளுவரை அய்யனாக்கி உரைஎழுதி கோட்டம்கட்டி கடல்பாறையில் சிலைவைத்த முதல்வரின் ஆட்சியிலா வள்ளுவன்வாசுகிபெயரில் இப்படிப்பட்டபடம். இதுமட்டுமா ஆண்டாள் அழகர் என்றபெயரில் இன்னும்சிலகண்றாவிக்காட்சிகள் வெளியாகிஉள்ளன.

Thursday, February 7, 2008

சந்தர்ப்பவாத கூட்டணியால் தடுமாறுகிறது தமிழக அரசு


இந்திய நாடாளுமன்றப் பொதுத்தேர்தலிலும், சட்டசபைத் தேர்தலிலும் கூட்டணி இல்லாது வெற்றி பெறமுடியாத நிலை உள்ளது. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கூட்டணி சேர்த்து போட்டியிடுவார்கள். தேர்தல் முடிந்ததும் கூட்டணி என்பது தேர்தலுக்காகவே அமைக்கப்பட்டது என்றும் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறி, ஆட்சியில் இருக்கும் கட்சியை விமர்சிப்பது இப்போது சர்வசாதாரணமாகி விட்டது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இடதுசாரிக் கட்சிகளும் தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியும் தலையிடியை கொடுத்துக்கொண்டிருக்கின்றன.

திராவிட முன்னேற்றக் கட்சியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி இணைந்ததை தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் விரும்பவில்லை. இந்தக் கூட்டணி தோல்வி அடைந்தால் திராவிட முன்னேற்றக்கழகத்துடனான கூட்டணியில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துடன் கூட்டுச் சேரலாம் என்று சிலர் கருதினார்கள்.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணி இமாலாய வெற்றி பெற்றதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணியில் தொடர்ந்தும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று இளங்கோவன் போன்ற தலைவர்கள் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றனர். கருணõநிதியின் மீது சோனியாகாந்தி மிகுந்த மதிப்பு வைத்துள்ளார். ஆகையினால் இளங்கோவன் போன்றவர்களின் குரல் தமிழகத்துடன் அடங்கிவிடுகின்றது.
ஆதரித்தால் முழுமனதுடன் எந்தவித மான தடங் களும் இல்லாது ஆதரிப்பார். எதிர்த்தாலும் அதேபோன்று உறுதியுடன் எதிர்ப்பார். இது முதல்வர் கருணாநிதியின் குண இயல்பு. ஆகையினால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் தொடரும் என்று காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான வீரப்ப மௌலி தெரிவித்துள்ளார்.
இது இளங்கோவன் போன்றவர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இந்த அறிவித்தலினால் அதிர்ச்சி அடைந்தவர்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸும் ஒருவர்.

அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பேன் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அந்தக் கூட்டணியில் திராவிட முன்னேற்றக்கழகம் இருந்தால் என்ன செய்வீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது திராவிட முன்னேற்றக்கழகம் இருந்தால் இருக்கட்டும் என்று பதிலளித்தார் டாக்டர் ராமதாஸ்.

திராவிட முன்னேற்றக்கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகிய இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதையே ஏனைய கட்சித் தலைவர்கள் விரும்புவார்கள். இந்த இரண்டு கட்சிகளும் இல்லையென்றால் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க பல தலைவர்கள் ஆவலாக உள்ளனர். கூட்டணி சேர்வதில்லை என்ற வீறாப்புடன் விஜயகாந்த் இருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைப்பதற்கு எந்த ஒரு கட்சியும் முன்வர மாட்டாது. ஆகையினால், திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், விஜயகாந்தின் கட்சி ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி அமைப்பதையே டில்லித் தலைவர்கள் விரும்புகிறார்கள்.

டாக்டர் ராமதாஸின் கனவு நனவாகும் நிலை இப்போதைக்கு தமிழ்நாட்டில் இல்லை. இந்தியாவின் வடமாநிலங்களில் செல்வாக்கை இழந்து வரும் காங்கிரஸ் கட்சி, தென் பகுதிகளில் தனது இருப்பைத் தக்கவைக்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆகையினால் திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியில் இருந்து இப்போதைக்கு காங்கிரஸ் கட்சி வெளியேறமாட்டாது.

தமிழக அரசியலுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்ற ஆசை டாக்டர் ராமதாஸிடம் உள்ளது. முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் தமிழகத்தின் அசைக்க முடியாத தலைவர்களாக உள்ளனர். விஜயகாந்த் வளர்ந்து வருகிறார்.

விஜயகாந்தின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதில் முதல்வரும் ஜெயலலிதாவும் தம்மால் இயன்ற முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த முயற்சிகளையும் மீறி விஜயகாந்த் விஸ்வரூபமாக வளர்ந்து வருகிறார்.

சென்னை லயோலாக் கல்லூரி அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பில் விஜயகாந்த்துக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் செல்வாக்கு சரிந்துள்ளது.

தமிழக சட்ட மன்றத்தேர்தலில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். ஏனைய கட்சிகளின் வாக்குகள் விஜயகாந்தின் கட்சியினால் பிரிக்கப்பட்டது. விஜயகாந்தின் கட்சியினர் எவரும் வெற்றி பெறவில்லை. ஆகையினால் விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த குறைந்தது ஐந்து பேர் வெற்றி பெற்றால் அதன் பின்னர் விஜயகாந்தின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

வீரகேசரி வார வெளியீடு 06.01.2008
வர்மா

Friday, February 1, 2008

"அண்ணாவும் மூன்றெழுத்தே !"

"அண்ணாவும் மூன்றெழுத்தே !"



தெள்ளுத் தமிழ்த் தீஞ்சுவையிற் துள்ளுதமி ழேயுதிர்
தீரனே திறமையென்னே
வள்ளுவர்தம் வேதமதை வாழ்வதனிலேதந்த‌
வள்ளலே வண்மையென்னே
கள்ளமில்லமனது கொண்டவொரு கொளகையே
கண்டவுயர் பண்புமென்னே
உள்ளுதொறு முந்னுரு செந்தமிழர் சிந்தைமிசை
எங்கணமி வங்குமன்றோ.

இருள்கொண்ட சமுதாய இன்னல்கள் தீரவே
இரவியே எனவுதித்தாய்
பொருள் கொண்டு வாழுயர் பேதமில்லாரிடைப்
பொன்னான காலமெல்லாம்
தெருள் கண்ட கல்வியால் தீனர்தம் பந்துவாய்த்
தென்னனாங் கோகார்த்தாய்
அருள் கொன்ட பார்வையால் அகிலமும் மேயாண்ட‌
அறிவான அண்ணலண்னா.

வால்காட்டி யேயிங்கு வகை காணும் மோர்தவம்
வளமார் தளைகாட்டிடும்
மால்காட்டு மாந்தருள் மாணிக்கமேயென்ன
ம‌கித‌ல‌ங் க‌ண்ட‌வுன்
பால்காட்டு வேத‌மாம் பண்போடு வ‌ரும்ரைப்
போத‌மே ய‌ணியுமானாய்
சூல் காட்டு குழ‌வியுஞ் சொல்லுமே யெங்ங‌ணும்
சொன்த‌மே எங்க‌ளண்ணா.

போதவிழ் பொயை போதெல்லாம் வாழ்ந்திடும்
பொலந்த ஈண்டுகமெல்லாம்
தாதவிழ் தேன்கொளத் தகமையில் லாததால்
தொலைதவுன் மேவு காணின்
நாதமர் வண்டினம் நாடியே வந்துயர்
நறியதேனுண்டு மீளும்
போதமர் க்தையினைப் புரியவே வைத்திடும்
புகழ்மேவும் அண்ணலாற்றல்.

தென்னாட்டிலே யுயர் சிவமெனப்போற்றிடும்
தெய்வமே மூன்றெழுத்தாம்
தென்னாட்டிலே நல்ல சங்கம் வளர்த்ததமிழ்
தூயமொழி மூன்றெழுத்தாம்
தென்னாட்டிலே பழம் பதியெனப் போற்றுயர்
தலமதுரை மூன்றெழுத்தாம்
தென்னாட்டி லேதனித் தீர்த்தமாங் காவிரித்
தாயுமே மூன்றெழுத்தாம்
தென்னாட்டி லேபுகழ் உற்றவைகள் யாவுமே
தெளிவான மூன்றெழுத்தாம்
தென்னாட்டி லேபெருஞ் சோதியாய்த் தோன்ருமெம்
அண்ணாவும் மூன்றெழுத்தே.

கா.சூ.ஏகாம்பரம்
கரவெட்டி
03.02.1971
மித்திரன்

இன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி இந்தக் கவிதையை பிரசுரித்துள்ளேன். சிலவரிகள் விடுபட்டுள்ளன. காரணம் தெளிவற்ற பிரதி. உங்களின் பார்வைக்காக பத்திரிகையின் ஸ்கேன் வடிவம்.