Tuesday, May 31, 2022

பிரதமர் புதிசு அரசாங்கம் பழசு

  

அரசாங்கத்துக்கு எதிரான மக்களின்  எதிர்ப்பலை மீரிகானவில்  சூறாவளியாக சுழன்றடித்தது.அந்தச் சூறாவளி கோல்பேசில் தர்போது நிலைகொண்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் ,அன்றைய பிரதமர் மஹிந்தவுக்கும் எதிராகபோராட்டம்  சூடுபிடித்தபோதுமஹிந்த ராஜபக்ஷ பதவியை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

மஹிந்தவுக்குப் பின்னர் பிரதமர் யார் என்ற கேள்வி  எழுந்தபோது பலரின் பெயர்கள் உலவின. ரணில் பிரதமராகப் பதவி ஏற்று அரசியல் அரங்கை அதிரவைத்தார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில்  படு தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரை பிரதமர் பதவி தேடிச் சென்றது.

தனி ஒருவனாக பாராளுமன்றத்தில் இருக்கும் ரணிலுக்குப் பின்னால் செல்லப் போகும்  எம்பிக்கள் பற்றி அறிவதற்கு பொது மக்கள் ஆர்வமாக இருந்தனர்.

சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்  போன்றவற்றை வாங்குவதற்கு மக்கள் மனித்தியாலக் கணக்காக வரிசையில் நிற்கின்றனர். எரிபொருளுக்காக வாகனங்கள் வரிசை கட்டி காந்திருக்கின்றன. பெற்றோல் , டீசல் விலை ஏறியதும்  மாட்டு வன்டியில் பாராலுமன்றத்துக்குச் சென்ற கனவான்கள் யாரும் மக்களுடன் மக்களாக வரிசையில் நிற்கவில்லை.

 அந்தக் கனவான்கள்  ஜனாதிபதியின் முன்னால் வரிசையாக நின்று அமைச்சுப் பதவியைப் பெற்றார்கள்.  ஜனாதிபதியை மிக மோசமாஅக்த் திட்டியவர் தான் ஜனாதிபதியின் முகத்தைப் பார்க்கவில்லை என்றும்  சிரிக்கவில்லை என்றும் கதையளந்தார். அவர் ஜானாதிபதியின் முகத்தைப் பார்த்து வாய் நிறைய சிரிக்கும் படத்தை வெளியிட்ட ஜனாதிபதியின் செயலகம்  மூக்கை உடைத்தது.

- மே 13 அன்று நான்கு, மே 20 அன்று ஒன்பது, மே 23 அன்று எட்டு பேர் அமைச்சரானார்கள். ஜனாதிபதியையும், பிரதமரையும் சேர்த்து 23  பேர் அமைச்சரவையில் உள்ளனர்.இன்றைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள்  மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். பதவியைக் காப்பாற்றுவதற்காக மெளனமாக இருந்தவர்கள் எப்படி இலங்கையை மீட்டெடுப்பார்கள் என்ற‌ கேள்விக்கு பதில் இல்லை.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரிக் கட்டமைப்பை சிதைத்த போது, வருடாந்தம் ஏறக்குறைய 600 மில்லியன் ரூபா பெறுமதியான கருவூலத்தை பறித்த போது, இதற்கு முன்னர் அமைச்சரவை அமைச்சர்களாக எதிர்ப்புக் குரல் எழுப்ப முதுகெலும்போ தைரியமோ  இலாதவர்கள்தான் இப்பொழுதும் பதவி ஏற்றுள்ளார்கள்.

புதிய அமைச்சர்களில் பலர்     நெல் அறுவடையில் நாடு கிட்டத்தட்ட 60% இழந்துள்ள நிலையில் தெருக்களில்; பிரபலமற்ற சர்க்கரை மற்றும் பாமாயில் ஊழல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த பூண்டு ஊழல் ஆகியவற்றில் கருவூலம் கிட்டத்தட்ட ரூ.16 பில்லியனை இழந்தபோது அவர்கள் பார்வையாளர்களாகவே இருந்தனர்; விவசாய அமைச்சகம் 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அசுத்தமான உரத்திற்கு மாற்றாக ஒரு அவுன்ஸ் உரம் கூட பெறாமல் கொடுத்தபோது அவர்கள் மௌனம் காத்தனர்.  

  அமெரிக்காவை தளமாகக் கொண்ட புதிய கோட்டையின் துணை நிறுவனத்துடன் யுகடனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கையெழுத்தானபோது அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அமைச்சரவை ஒப்புதலின் விதிமுறைகளை மீறி எரிசக்தி நிறுவனம். இவ்வாறானதொரு பின்னணியில் இந்த அமைச்சர்களால் இம்முறையாவது சிறப்பாகச் செயற்பட முடியுமா என்ற சந்தேகம் எழுவது தவிர்க முடியாதது.

கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை மீறி  ஐக்கிய க்கள் சக்தி, சிலங்கா சுதந்திரக் கட்சி,  முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்ரின் உறுப்பினர்கள் அமைச்சராக பதவி ஏற்றுள்ளனர். கட்சிக்குத் துரோகம் செய்ஹ இவர்கள் மக்களுக்கு  உதவி செய்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்.

 

பஞ்சம் ,பாட்டிணியால்  வாடிய  வெளிநாடுகளைப் பார்த்து பரிதாபப்பட்ட  இலங்கை மக்களைக் காப்பாற்றவேண்டிய பெரும் பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது.

 

 

 

 

 

 

 

உக்ரைன் மக்களை அகதியாக்கிய ரஷ்ய போர்


உக்ரைன் மீதான ரஷ்யாவின் மூர்க்கமான  தாக்குதலால்  எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக .நா.வின்  புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

யு.என்.எச்.சி.ஆர், .நா அகதிகள் முகமையின் புதிய தரவுகளின்படி, உலகளவில் மோதல்கள், வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் ,துன்புறுத்தல்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உக்ரைனில் ஏற்பட்ட மோதலால் முதன்முறையாக 100 மில்லியன் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது.

யு.என்.எச்.சி.ஆர் இன் அறிக்கையின் படி, கடந்த இரண்டு மாதங்களில் 12.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர், இதில் 7.7 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். 5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள்  எல்லைகளைத் தாண்டி வெளியேறியுள்ளனர்.

பெப்ரவரி 24 அன்று உக்ரைன் மீது ரஷ்யா ஆரம்பித்ததாக்குதலுக்குப் பிறகு 4 மில்லியன் அகதிகளை யு.என்.எச்.சி.ஆர்    எதிர்பார்த்தது., ஆனால் , இந்தத்தொகை கடந்த மாதம் எட்டப்பட்டது.

இந்த ஆண்டு எட்டு மில்லியனுக்கும் அதிகமான உக்ரேனியர்கள் அகதிகளாக வெளியேறக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. போரினால் நாசமடைந்த நாட்டிற்குள் சிக்கித் தவிப்பவர்களுக்கு அதன் உதவி முறையீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது.

இந்த ஆண்டு நான்கு மில்லியன் மக்கள் வெளியேறுவார்கள் என்று ஆரம்பத்தில் கணித்த .நா அகதிகள் நிறுவனம் செவ்வாயன்று அண்டை நாடுகளில் உள்ள அகதிகளுக்கு ஆதரவளிக்க 1.85 பில்லியன் டொலர் தேவைப்படும் என்று கூறியது. 

"இந்த இடப்பெயர்வுகள்   ஒவ்வொரு நாளும் நிகழ்கின்றன. ஒவ்வொரு மணி நேரமும் மக்கள் உக்ரைனில் இருந்து தொடர்ந்து வெளியேறுவதை நாங்கள் காண்கிறோம்," என்று யு.என்.எச்சிஆர்   செய்தித் தொடர்பாளர் ஷபியா மாண்டூ,  ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறினார், இடப்பெயர்வுகள் அதிக சுமை மற்றும் விரைவான விரிவாக்கத்தைக் காட்டுகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் அகதிகள் நெருக்கடியை பெப்ரவரி 24 அன்று ரஷ்யா தனது முழு அளவிலான தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 5.3 மில்லியன் உக்ரேனியர்கள் ஏற்கனவே உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இரண்டு மாதப் போருக்குப் பிறகு, உக்ரைன் மோதல் விரைவில் சிரியாவை விட அதிக அகதிகளை உருவாக்கும் என்று தோன்றுகிறது, இது 11 வருட உள்நாட்டு மோதலுக்குப் பிறகு அதன் 6.8 மில்லியன் நாட்டவர்கள் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 7.7 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர், ஆனால், உக்ரைனுக்குள் இருக்கிறார்கள், அதாவது தாக்குதல் தொடங்கியதில் இருந்து மொத்தம் 12.7 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

"கிட்டத்தட்ட 13 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது அல்லது பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக வெளியேற முடியவில்லை" என்று மண்டூ கூறினார்.

ஐநா மனிதாபிமான நிறுவனமான OCHA செவ்வாயன்று உக்ரேனில் 15.7 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக மதிப்பிட்டுள்ளது, இது அதன் முந்தைய மதிப்பீட்டில் 12 மில்லியனாக இருந்தது

செவ்வாயன்று, OCHA உக்ரைனுக்குள் அதிகரித்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்ய $2.25 பில்லியனுக்கும் அதிகமான தொகை தேவை என்று மதிப்பிட்டுள்ளது, மேலும் ஆகஸ்ட் மாதம் வரை உதவிகளை வழங்குவதற்காக இந்த முறையீடு செய்யப்படுவதாகக் கூறியது.

8.7 மில்லியனுக்கு உதவி தேவைப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, என  OCHA    செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லேர்க் செய்தியாளர்களிடம் கூறினார், இதுவரை நன்கொடையாளர்கள் $980 மில்லியன் வழங்கியுள்ளனர், இது புதுப்பிக்கப்பட்ட முறையீட்டில் 44 சதவீதத்தை உள்ளடக்கியது.

"உக்ரைனில் உள்ள மனிதாபிமானிகள் போரினால் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைய சர்வதேச ஆதரவு இன்றியமையாததாக இருக்கும்" என்று லேர்க்  கூறினார்.ரஷ்யாவின் காஸ்ப்ரோம் அண்டை நாடான பின்லாந்துக்கான எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது. உக்ரைன் மீதான மாஸ்கோவின் படையெடுப்பின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாக, எரிவாயு விநியோகத்திற்கு நாடுகள் ரூபிள்களில் பணம் செலுத்த வேண்டும் என்று அது விரும்புகிறது.

டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் பல பிரதிநிதிகளின் உதடுகளில் உக்ரைன் முக்கிய விஷயமாக இருந்தது.

  உக்ரேனிய எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான இவானா கில்ம்புஷ்-சிண்ட்சாட்ஸே, ஸ்கை நியூஸிடம், ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஐரோப்பா நம்பியிருப்பது உக்ரேனிய குழந்தைகளை கற்பழித்து கொலை செய்வதற்கு நிதியளிப்பதாக தான் நம்புவதாகக் கூறினார் .

மேற்கத்திய மாநிலங்களும் நிறுவனங்களும் மாஸ்கோவுடனான  வர்த்தகத்தை கைவிட வேன்டும் என்று அவர் கூறினார், மேலும் கனரக ஆயுதங்கள், மொத்த எரிவாயு மற்றும் எண்ணெய் தடை மற்றும் கடுமையான தடைகளுக்கு அழைப்பு விடுத்தார்.

"ரஷ்ய நிறுவனங்களின் எண்ணெய், எரிவாயுவிற்கு நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள் என்றால், எங்கள் நகரங்களை, எங்கள் கிராமங்களை அழித்து, எங்கள் குழந்தைகளைக் கொல்வதற்கு, எங்கள் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், சின்னஞ்சிறு குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வதற்கும், நம் நாட்டை அழிப்பதற்கும் நீங்கள் அவர்களுக்கு ஆதாரங்களை வழங்குகிறீர்கள்." என எச்சரித்தார்.

ரஷ்யப் போர் முடிவுக்கு வந்தாலும் அகதிகள் வாழ்க்கை எப்போது முடியும் எனச் சொல்ல முடியாது.

 

 


தெரிந்த சினிமா தெரியாத சங்கதி 20

 தமிழ்த் திரை உலகில  சிவாஜியும்,எம்.ஜி.ஆரும்  கொடிகட்டிப்பறந்த பொற்காலத்தில் தனக்கென  ஒரு  பாணியை வகுத்து  உச்சம் தொட்டவர் ஜெய்சங்கர்.

நடிகர் திலகம், சிவாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், காதல் மன்னன் ஜெமினி, நவரச நாயகன் முத்துராமன் , இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் வரிசையில்  மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் என ரசிகர்களால் கொண்டாடப்பப்பட்டவர். வெள்ளிக்கிழமை நாயகன் என்ற பெயரும் அவருக்கு உள்ளது. வெள்ளிக்கிழமையில் அவரது ஏதாவது ஒரு படம் வெளியாகும். சில வேளை இரண்டு, மூன்று படங்கள் வெளியான சந்தற்பங்களும்  உள்ளன.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர்., முத்துராமன், ஏவிஎம்.ராஜன் என பலரும் நடித்துக் கொண்டிருந்த காலம் அது. எம்.ஜி.ஆர் போல் ரவிச்சந்திரனும்,   சிவாஜியைப்போல்  ஏவிஎம்.ராஜனும் நடிக்க முயற்சி செய்த காலகட்டம். எவர் மாதிரியாகவும் நடிக்காமல், புதுமாதிரியாக நடித்தார் ஜெய்சங்கர்.

வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் நிறைந்த பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர் ஜெய்சங்கர், சோ நடத்திய 'விவேகா பைன் ஆர்ட்ஸ்' நாடக குழுவில் நடித்துக் கொண்டு  சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புத் தேடி அலைந்தார்.டிருந்தவர் 'இரவும் பகலும்' படத்தில் அறிமுகமானார்.   இயக்குநர் ஜோஸப் தளியத்தின் பார்வை  ஜெய்சங்கர் மீது பட்டபோது அவரது இருண்ட வாழ்க்கை பகலாக  மாறியது. முதல் பட்மே 100 நாள், இரட்டை வேடம்.

மற்ற நடிகர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட ஹாலிவுட் ஹீரோக்களின் சாயலில் நடிக்க ஆரம்பித்தார். சிஐடி சங்கர், வல்லவன் ஒருவன், கருந்தேள் கண்ணாயிரம், கங்கா, ஜக்கம்மா, ஜம்பு, எங்க பாட்டன் சொத்து போன்ற படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் நடித்தார். துணிவே துணை, கங்கா போன்ற படங்களில கவுபாய் கேரக்டர்களில் நடித்தார்.  ஜெய்சங்கரின் படத்தில் ஒரு கவர்ச்சி நடனம் கண்டிப்பாக இருக்கும்.   இவர் காலத்தில்தான் ராஜ்கோகிலா, ஜெயமாலா, ராஜ்மல்லிகா, போன்ற கவர்ச்சி நடிகைகளும் சினிமாவுக்கு வந்தார்கள்.

ஒருபக்கம் ஜேம்ஸ்பாண்ட் படங்கள், இன்னொரு பக்கம் கெளபோய்  படங்கள், ’இவற்றுக்கிடையே  கே.சங்கரின் ‘பஞ்சவர்ணக்கிளி,   ஏவிஎம்மின் ‘குழந்தையும் தெய்வமும்  ப்பொன்ற படங்கள்  பெண்கள் பக்கம் இவரைக் கொண்டு சேர்த்தது. இளைஞர்களின் விருப்பமான  கீரோவான  ஜ்யெசங்கரை குடும்பப் பெண்களும் ரசிக்கத் தொடங்கினர்.  இவரின் சுறுசுறுப்பைப் பார்த்துவிட்டு, மாடர்ன் தியேட்டர்ஸ் மாதச் சம்பளத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்து  தொடர்ச்சியாக படங்கள் பண்ணியது. ‘வல்லவன் ஒருவன், ‘சிஐடி.சங்கர் அவரை வசூல் சக்கரவர்த்தியாக்கிற்று. கத்திச்சண்டை போட்டு வந்த காலத்தில், டுமீல் டுமீல் சத்தங்கள், கோட்சூட், துப்பாக்கி சகிதமாக ஆங்கிலப் பட பாணியில், ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் பின்னிப்பெடலெடுத்தார் ஜெய்சங்கர்.  ஜெய்சங்கரின் வளர்ச்சியால்  எம்ஜிஆர் ’ரகசிய போலீஸ் 115’, சிவாஜி ’தங்கச்சுரங்கம் மாதிரியான படங்களில் நடிப்பதற்கு  இவரின் படங்களே காரணம் என்பார்கள்.

  குடும்பக் கதைப் படங்களுக்கு நடுவே  நடுவே ’பொம்மலாட்டம், ’வரவேற்பு, ’பூவா தலையா என நகைச்சுவைப் படங்களை கலக்கினார். சிவாஜியுடன் இணைந்து நடித்த குலமா? குணமா? படமும் ஜெய்சங்கருக்கு பெண் ரசிகைகளை  அதிகரித்தது.

பாலசந்தரின் ‘நூற்றுக்கு நூறு மிகச்சிறந்த நடிகர் எனும் பெயரைப் பெற்றுத் கொடுத்தது.. எம்ஜிஆர், சிவாஜிக்கு சம்பளம் கொடுக்க முடியாத சிறிய தயாரிப்பாளர்களெல்லாம் ஜெய்சங்கரைத் தேடிச் சென்றார்கள்.  குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்தார் ஜெய்சங்கர். டார்ச்சர் கொடுக்காமல் நடித்துக் கொடுத்தார். ஈகோ எதுவும் பார்க்காமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார். மிகுந்த லாபத்துடன், தயாரிப்பாளர்கள் மகிழ்ந்து கொண்டாடினார்கள்.

ஜெய்சங்கரை வைத்து படம் எடுத்து ஒரு தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தார், நடுவீதிக்கு வந்தார் என்று எவராலும் விரல் நீட்டி கூற முடியாது. அவர் யாரிடமும் எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுங்கள் என்று கேட்டதில்லை. முடிந்ததை கொடுங்கள் என்பார். அவர் வீட்டு பீரோ நிறைய திரும்பி வந்த காசோலைகள் பண்டல் பண்டலாக இருந்தது என்பார்கள்.

அதேபோல தோல்வி அடைந்த படங்களின் சம்பளத்தை திருப்பிக் கொடுப்பதை தொடங்கி வைத்தவரே ஜெய்சங்கர் தான். லைட் பாயிலிருந்து ரசிகன் வரை யார் அவரை உதவி என்று தேடிப்போனாலும் இருப்பதை கொடுக்கும் கொடை வள்ளலாக வாழ்ந்தார். எம்.ஜி.ஆரை சந்திப்பது கடினம். அப்படி சந்தித்து விட்டால் பெரியதாக அள்ளிக் கொடுப்பார். ஜெய்சங்கரை சந்திப்பது எளிது. அவர் சக்திக்கேற்ப கிடைக்கும். அதனால்தான் ஜெய்சங்கரை சின்ன எம்.ஜி.ஆர் என்பார்கள். அவர் கடைசி வரை சிறு தயாரிப்பாளர்களின் ஹீரோவாகவே இருந்தர். இளைஞர்களுடன் இணைந்து 'ஊமை விழிகள்' போன்ற படங்களிலும் நடித்தார். 100 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தார்.

 ஒருபக்கம், ஜேம்ஸ்பாண்ட் படங்களின் மூலமாக ஸ்டைலீஷ் மேனரிஸம் காட்டினார். இது எம்ஜிஆர் ரசிகர்களையும் கவர்ந்தது. இன்னொரு பக்கம், ‘பொம்மலாட்டம், ‘யார் நீ, ‘பூவா தலையா, ‘வைரம், ‘செல்வமகள், ‘டீச்சரம்மா, ‘குழந்தையும் தெய்வமும், ‘கண்ணன் வருவான், ‘மன்னிப்பு’, ‘அவசர கல்யாணம், ‘பட்டணத்தில் பூதம் , ‘உள்ளத்தில் குழந்தையடி மாதிரியான படங்களில் நடித்து, சிவாஜி ரசிகர்களையும் கவர்ந்தார். ஆக்ஷன், செண்டிமெண்ட், காமெடி என பல ரூட்டுகளிலும் ஜெயித்தார் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கரின் படங்கள் முக்கால்வாசி பட்ஜெட் படங்கள். ஆனால் போட்ட பணத்தைவிட மூன்று நான்கு மடங்கு லாபம் தந்தன. யூனிட்டில் உள்ள எல்லோரிடமும் கனிவாகப் பேசும் பண்பு கொண்டவர் என்கிறார்கள். யாரைப் பார்த்தாலும் ‘ஹாய் என்று சொல்லி, நட்புடன் பேசுவதுதான் ஜெய்சங்கர் குணம். பின்னாளில், இந்த ‘ஹாய் என்ற வார்த்தையே ஜெய்சங்கரை அடையாளமாகிற்று.

கமல்,ரஜினி காலத்தில் ஜெய்சங்கருக்கு வாய்ப்பு குறைந்தது. எல்லோருக்கும் பிடித்த நடிகர், வில்லனாக நடித்தால் புதுமையாக இருக்கும் என ‘முரட்டுகாளையில் வில்லனாக நடிக்கக் கேட்டார்கள். சம்மதித்தார். இவரின் கதாபாத்திரம் மெருகேற்றப்பட்டது. அடுத்தடுத்து வில்லனாக வலம் வந்தார். ‘அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ‘ஊமைவிழிகள் குணச்சித்திரக் கேரக்டர், அடுத்தடுத்து நல்ல கேரக்டர்களை வழங்கக் காரணமாக அமைந்தது.

எல்லோருக்கும் பிடித்த நடிகர்களின் பட்டியலில் ஜெய்சங்கர் இருப்பதற்கு, அவரின் நடிப்பும் வேகமும் சிரித்த முகமும் மட்டுமே காரணமில்லை. அவரின் பண்பும் அன்பும் கனிவும் கருணையும் நிஜ ஹீரோவாக்கிற்று!

தமிழ் சினிமாவில் தன்னுடைய பெயரே கரக்டர் பெயராக, படத்தின் பெயராகக் கொண்டு அதிகம் நடித்தது ஜெய்சங்கராகத்தான் இருக்கும். ஜெய், சங்கர் என்றெல்லாம் இவருக்கு கேரக்டர் பெயர் அமைந்தன.

  ’ஜெய்சங்கரின் ரசிகை என்ற கதையை வைத்துக்கொண்டே ‘சினிமா பைத்தியம் என்ற படத்தை இயக்கினார் முக்தா சீனிவாசன். ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்த ஜெயசித்ரா, இதில் நடிகர் ஜெய்சங்கரின் ரசிகையாக நடித்திருப்பார். இதுவும் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்காத சாதனைதான்.

ஜெய்சங்கர் ஆகச்சிறந்த நடிகரோ இல்லையோ... ஆனால், தனித்துவம் மிக்க கலைஞர். அதனால்தான் இன்றைக்கும் எல்லோராலும் கொண்டாடப்படுகிறார். மக்கள் கலைஞர் என்று போற்றப்படுகிறார்.

Monday, May 30, 2022

மெல்போர்னை மிஞ்சிய அஹமதாபாத்

உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. இந்த வருடம் குஜராத், லக்னோ ஆகிய புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கேற்ற 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் கடந்த 65 நாட்களாக ரசிகர்களை மகிழ்வித்து வந்தது. அதில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளை கடந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் மே 29-ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெற்றது.

புதிதாக கட்டப்பட்டுள்ள அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் 1 லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் திருவிழாவைப் போல நடைபெற்றது.  ஏஆர் ரகுமான், ரன்பீர் கபூர் போன்ற நட்சத்திரங்கள் பங்கேற்ற நிறைவு விழாவும் இந்த மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

 ஐபிஎல் 15 வருடங்களை தொட்டுள்ளதை கொண்டாடும் வகையில் 66 மீட்டர் நீளம் 42 மீற்றர் அகலம் கொண்ட பிரம்மாண்ட செய்தியை வெளியிட்ட பிசிசிஐ உலகிலேயே மிகப்பெரிய ஜெர்சியை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்தது.

1,04,859 ரசிகர்கள் இந்த மாபெரும் இறுதிப் போட்டியை பார்க்க வந்ததாக ஐபிஎல் நிர்வாகம் போட்டியின் இடையே அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதன் வாயிலாக ஒட்டுமொத்த சர்வதேச அல்லது முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரசிகர்கள் பார்த்த ஒரு வெள்ளை பந்து போட்டியாக ஐபிஎல் 2022 தொடர் புதிய பிரம்மாண்ட உலக சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் 1,00,024 அமர்ந்து பார்க்கக் கூடிய அவுஸ்திரேலியாவில் உள்ள உலக புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 1,00,022 ரசிகர்கள் பார்த்த ஒரு உலக கோப்பை போட்டியே அதிகபட்சமாக இருந்தது. ஆனால் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை மிஞ்சும் வகையில் 1,32,000 ரசிகர்கள் பார்க்கக்கூடிய நரேந்திர மோடி மைதானத்தில்   1,04,859 ரசிகர்கள் ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியைப் பார்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளது .


ஐபிஎல் 22 விருகள்

 


ஐபிஎல் 15வது சீசனில் சாதனை செய்த வீரர்களுக்கும், முதல் மூன்று இடங்களைப் பிடிக்த அணிகளுக்கும் விருதுகளும் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தானை எதிர்த்து விளையாடிய குஜராத் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியனானது. அறிமுக சீசனிலேயே சம்பியன் பட்டம் வென்று அசத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டது. அணியின் அனைத்து பயிற்சியாளர்களுக்கும், வீரர்களுக்கும் ஐபிஎல்-ன் அதிநவீன ஸ்பெஷல் வாட்ச்கள் வழங்கப்பட்டன

2வது இடம் பிடித்த ராஜஸ்தான் அணிக்கு பதக்கங்களும், ரூ.12.50 கோடி வழங்கப்பட்டது.


3வது இடம் பிடித்த ஆர்சிபிக்கு ரூ.7 கோடி வழங்கபப்பட்டது.

இறுதிப்போட்டி விருதுகள் ஆட்ட நாயகன் : ஹர்திக் பாண்ட்யா ரூ.5 இலட்சம்

சூப்பர் ஸ்ட்ரைக்கர் - டேவிட் மில்லர் ரூ. 1 இலட்சம்

கேம் சேஞ்சர் : ஹர்திக் பாண்ட்யா ரூ.1 இலட்சம்

சிக்ஸர் ஆஃப் தி மேட்ச் - யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ரூ. 1 இலட்சம்

பவர் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் : ட்ரெண்ட் போல்ட் ரூ. 1 இலட்சம்

அதிவேக பவுலிங் : லாக்கி ஃபெர்க்யூசன் ரூ.1 இலட்சம்

மதிப்புமிக்க வீரர் : ஹர்திக் பாண்ட்யா ரூ.1 இலட்சம்

சிறந்த பவுண்டரி : ஜாஸ் பட்லர் ரூ.1 இலட்சம்

ஒரேஞ்ச் தொப்பி: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் 17 இன்னிங்ஸ்களில் 863 ஓட்டங்கள் அடித்தார். இதற்காக அவருக்கு ரூ.10 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

பேப்பிள் தொப்பி:யுவேந்திர சாஹல் 17 இன்னிங்ஸ்களில் 27 விக்கெட்கள் ரூ. 10 இலட்சம் கொடுக்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிரடி காட்டிய வீரராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். 2018ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதை பெறும் முதல் இந்தியர் தினேஷ் கார்த்திக் தான். இதற்கு முன்னர் 4 ஆண்டுகளும் மேற்கு, இந்திய வீரர்கள் தான் பெற்றுள்ளனர்.