Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Tuesday, July 1, 2025

குற்றவாளிக்கூண்டில் நெதன்யாகு

அரபுநாடுகளின் விரோதியாகச் சித்தரிக்கப்படுபவர் நெதன்யாகு, காஸா யுத்தம், ஈரானின் மீதான தாக்குதல் என்பனவற்றால் சர்வதேச ஊடகங்களில்  இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.

நெதன்யாகு நல்லவரா கெட்டவரா என்ற விவாதமும் இன்னொரு புறத்தில் நடைபெறுகிறது.

இஸ்ரேலின் வீத தீரனாக விளங்குபவர் நெதன்யாகு. அவர்தான்  இஸ்ரேலின் ஹீரோ என்றே பலரும் நினைக்கின்றனர்.

 ஆனால், நெதன்யாகுவுக்கு எதிரானவர்கள்  இஸ்ரேலிலும்  உள்ளனர். நெதன்யாகுவின்   அமைச்சரவையிலேயே அவரை எதிர்ப்பவர்கள்  இருக்கிறார்கள். 

"பீபீ' என   அழைக்கப்படுபவர் பெஞ்சமின் நெதன்யாகு. இஸ்ரேலில் மிக நீண்டகாலம் பிரத்மரானவர் என்ற பெருமையைப் பெற்றவர். முதலில் 1996 ஆம் ஆண்டுமுதல் 1999 ஆம் ஆண்டுவரை,  பின்னார் 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை இஸ்ரேலின்  பிரதமராகப் பதவி வகித்தவர். 2022 ஆம் ஆண்டு முதல்  இன்ஸுவரை இஸ்ரேலின்  பிரதமராக இருக்கிறார் நெதன்யாகு

 இஸ்ரேலியப் பிரதமராக நெதன்யாகு இருக்கும் போதே அவருக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டது. பிரதமர் மீது குற்றச் சாட்டு என்பதால் பொலிஸார் விட்டு விடவில்லை. விசாரணை தொடர்ந்தது. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய்ப்பட்டது.

2023 ஆம் ஆண்டு காஸாவில்  ஹமாஸ் தாக்குதல் நடத்தியதால் நெதன்யாகுவுக்கு எதிரான  ஊழல் குற்றச் சாட்டு வழக்கு தாமதமாகிறது. அவர் மீதான குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 வருட சிறைத் தண்டனை கிடைக்கும். நெதன்யாகு  குற்றம் செய்யவில்லை என அவரது வழக்கறிஞர்கள் வாதிடுகிறார்கள்.

நெதன்யாகுவின் மீதான ஊழல் குற்றச்சாட்டு விபரங்கள் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம்திகதி பத்திரிகைகளில் வெளியானபின்னர் மக்கள் மத்தியில் பேசு பொருளானது.

அன்றைய இஸ்ரேலிய  அரச வழக்கறினர் ஷாய் நிட்சன், அன்றைய அட்டரி ஜெனரல் அவிச்சாய் மண்டேல் பிட் ஆகியோர் நெதன்யாகுவின் மீதான குற்றச் சாட்டுகளை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இலஞ்சம், மோசடி, நம்பிக்கை மீற  ஆகிய மூன்று வழக்குகள் நெதன்யாகுவுக்கு எதிராகப்  பதியப்பட்டன.

இஸ்ரேலிய வரலாற்றின்  முதன் முதலாக குற்றவியல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்ட பிரதமர் என்ற கறை நெதன் யாகுவின் மீது படிந்தது.

இலஞ்சக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 வருட சிறைத்தண்டனையும்,   மோசடி, நம்பிக்கை மீறல் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் மூன்று  வருடச் சிறைத் தண்டனையும் கிடைக்கும்.

 குற்றச் சாட்டுகளின் எதிரொலியால் சுகாதார, விவசாயம், புலம் பெயர் விவகாரம் ஆகிய அமைச்சுப் பதவிகளை நெதன்யாகு துறந்தார். 

நெதன்யாகு பிரதமராக நீடிக்கலாமா இல்லையா என்ற என்ற விவாதம் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

நெதன்யாகுவுக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் நடை பெறுகின்றன.  ஹமாஸின் தாக்குதல், ஈரானுடனான போர் ஆகியவற்றால்  விசாரணை தாமதமாகிறது.

நெதன்யாகுவுக்கு எதிராக   போர்க்குற்றம் சுமத்தப்பட்டு சர்வதேச விசாரணை நடைபெற  வேண்டும் என்ற கருத்தும்  தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபது மூக்ககை நுழைத்து சொல்லிய கருத்து எதிர் வினைகளைத் தோற்றுவித்துள்ளது.

நெதன்யாகுவின் மீதான குற்றச் சாட்டுகளை வாபஸ் பெற வேண்டும்ம், அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ட்ரம்ப்  அறிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்பின் கருத்துக்கு எதிரான கண்டனங்கள் பருமளவில்  எழுந்துள்ளன.

இஸ்ரேல் சிறையில் நெதன்யாகு அடைக்கப்படுவாரா இல்லையா எனப்தை நீதிமன்றம் முடிவு செய்யும்.   

Friday, June 20, 2025

இஸ்ரேலின் வான் பாதுகாப்பை சிதைத்த ஈரானின் அரக்கன்

 இஸ்ரேல், ஈரான் போரினால் உலக நடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. ஈரானின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரான் பதிலடி கொடுத்தது.

  ஈரானின்  கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களிக் குறை வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 

  இஸ்ரேலின் ஹைஃபா, டெல் அவிவ் , ஜெருசலேம்  ஆகிய நகரங்கள்   ஈரானின் தாக்குதலால்  சிதைந்தன.இஸ்ரேலின் தாக்குதலை ஈரானால் சமாலிக்க் முடியாது என்றே பலரும் நினைத்தார்கள்.

ஆனால் ஈரானின் பதில்தாக்குதல் இஸ்ரேலை அதிரச் செய்தது.

பலம் வாய்ந்த  இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறை ஈரானால் தாக்குதல் நடத்த முடியாது என்றே போர் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ஹமாஸின் தாக்குதலால்  இஸ்ரேலின் வான் பாதுகாப்பு  இரண்டு மாதங்களுக்கு முன்னர்  சிதைத்தது. அதிலிருந்து பாடம் கற்ற இஸ்ரேல் எச்சரிக்கையானது. ஈரானின் ஏவுகளைகளைத்தடுக்க இஸ்ரேலால் முடியவில்லை.

இரானின் அரக்கன் என வர்ணிக்கப்படும் ஹைபர் சுப்பர் சொனிக் ஏவுகளைகள்  இஸ்ரேலின் முக்கிய நகரங்களைச் சிதைத்தன.

     ஹைபர்சோனிக் ஏவுகணையான ஃபட்டா-1 ஐ இஸ்ரேலிம் மீது  ஏவியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்தது.

  இஸ்ரேலுக்கு எதிரான மோதலில்  ஹைபர் சுப்பர்சொனிக்  முதன் முதலில்  பயன்படுத்தப்பட்டது.

 2023 ஆண்டு உலகத்துக்கு  வெளிப்படுத்தப்பட்ட இந்த ஏவுகணைக்கு    ஈரானின்  தலைவர் அயதுல்லா அலி கொமேனி தான்  பெயரிட்டார்.

IRGC-யால் உருவாக்கப்பட்டு ஜூன் 2023 இல் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்ட ஃபட்டா-1, ஒரு நடுத்தர தூர ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.

ஈரான்-இஸ்ரேல் போரில் பயன்படுத்தப்பட்ட ஃபட்டா-1 ஹைபர்சோனிக் ஏவுகணைகள் என்றால் என்ன? 

 ஃபட்டா-1 ஏவுகணை என்றால் என்ன?

IRGC படி, இந்த தாக்குதல் ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3-இன் 11வது அலையின் ஒரு பகுதியாகும். ஃபட்டா-1 ஏவுகணை இஸ்ரேலின் இரும்பு டோம் மற்றும் அம்பு போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்ப்பதற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரானிய அதிகாரிகள் இதை "இஸ்ரேல்-ஸ்ட்ரைக்கர்" என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த ஏவுகணை  மணிக்கு சுமார் 15,000 கிலோ மீற்றர் செல்லும் திறன் கொண்டது.

இது 350-450 கிலோ எடையுள்ள  வெடிமருந்திஅச் சுமந்து செல்லும்.

 இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி, அந்நாட்டின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் தற்போது பெரிதாக வெடித்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான ஐயன் டாம் ஈரான் ஏவிய ரொக்கெற்களையும், ஏவுகணைகளையும் வானிலேயே இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.

ஆனால், ஈரான் அனுப்பிய  ஹைபர்சோனிக்  ஏவுகளைகளையும், பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் தாக்கியபோது, இஸ்ரேலின் ஐயன் டாம் வான் பாதுகாப்பு அமைப்பால் கூட அதனைத் தடுக்க முடியாமல்  இஸ்ரேலைச் சீரளித்தன.  ஈரானின் இந்த ஹைபர்சோனிக் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் எந்த நாட்டிடமாவது இருக்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

ஆயுதங்களின் நவீன அரக்கனான சுப்பர்சோனிக் ஏவுகணைகள்   மூலம் உகரைனின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

சண்ண்டையை நிறுத்தும்படியும்சரணடையும் படியும்   ஈரானிடம் ட்ரம்ப் கூறினார். ட்ரம்பின் சொல்லைக் கேட்ட முடியாது என கொமேனி  பதிலளித்தார்.

கொமேனி பதுங்கி இருக்கும் இடம் தெரியும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப்  போர்  செய்வார் என அமெரிக்க ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.

  வெள்ளை மாளிகையில் தனது தேசிய பாதுகாப்பு குழுவுடன் ட்ரம்ப் ஒரு மணி நேரம் 20 நிமிட சந்தித்து உரையாடினார்.

  ஈரானிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேலின் இராணுவ தாக்குதலில்   இணைவதற்கு  ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக   மூத்த உளவுத்துறை அதிகாரி ,பாதுகாப்புத் துறை அதிகாரி உட்பட சிலர் ஊடகங்களுக்குத் தெரிவித்துளனர்.சமூக ஊடகங்கள் இதனை விவாதிக்கின்றன.

  ஈரானுக்கு எதிரான  போரில் அமெரிக்கா ஜனாதிபதி   ட்ரம்ப்   இணையும்  வாய்ப்புள்ளது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமும் நம்புவதாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாக  செய்தி வெளியாகி உள்ளது. .

கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து ட்ரம்ப் திடீரென வெளியேறியதும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து வந்த  ட்ரம்பின் அச்சுறுத்தும் எச்சரிக்கைகளும், அமெரிக்காவின் ஈடுபாட்டை உறுதிப்படுத்தின.

ரஷ்யாவும்,  வட கொரியாவும்  இஸ்ரேலைக் கண்டித்துள்ளன.   இஸ்ரேலுக்கு ஆதரவாக  அமெரிக்கா  போர் செய்தால் நிலமை மேலும் விபரீதமாகும்.

ஈரானின் ஆயுதப் பலம் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக  உள்ளது.

ஈரானுக்கு அருகில் அமெரிக்க இராணுவத் தளங்கள்  உள்ளன.  இந்தப் போர்  இப்போதைக்கு முடியும் போல் தெரியவில்லை   

Tuesday, June 17, 2025

அமெரிக்காவில் கிளப் உலகக்கிண்ணப் போட்டி

உலக  உதைபந்தாட்டத்தில்  தரவரிசையில்  முன்னணியில் உள்ள 32 அணிகள் பங்கேற்கும் பீபாகிளப் உலகக்  கிண்ணபபோட்டி அமெரிக்காவில் நடைபெறுகிறது.   மியாமியில் உள்ள ஹார்ட் ராக் மைதானத்தில்  ஜூன் 14 ஆம் திகதி கிளப் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாகிறது.

டேவிட் பெக்காமின் இணை உரிமையாளரும் லியோனல் மெஸ்ஸியின் தலைவருமான மேஜர் லீக் கால்பந்து அணியான இன்டர் மியாமி, மியாமி கார்டன்ஸில் ஆப்பிரிக்க சம்பியன் அல் அஹ்லிக்கு எதிராக  முதல் போட்டியில் விளையாடுகிறது.

ஆப்பிரிக்கா: 4  அணிகள்.

ஆசியா: 4   அணிகள்.

ஐரோப்பா: 12 அணிகள்.

வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா, கரீபியன்: 4 கான்காகாஃப் அணிகள்

ஓசியானியா: 1  அணி.  .

தென் அமெரிக்கா: 6  அணிகள்

குழு A: பால்மீராஸ், எஃப்சி போர்டோ, அல் அஹ்லி, இன்டர் மியாமி

குழு B: பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன், அட்லெடிகோ மாட்ரிட், போடாபோகோ, சியாட்டில் சவுண்டர்ஸ்

குழு C: பேயர்ன் முனிச், ஆக்லாந்து நகரம், போகா ஜூனியர்ஸ், பென்ஃபிகா

குழு D: ஃபிளமெங்கோ, எஸ்பரன்ஸ் ஸ்போர்டிவ் டி துனிசி, செல்சியா, கிளப் லியோன்

குழு E: ரிவர் பிளேட், உராவா ரெட் டயமண்ட்ஸ், மோன்டெர்ரி, இன்டர் மிலன்

குழு F: ஃப்ளூமினென்ஸ், போருசியா டார்ட்மண்ட்,உல்சன்,

          மாமெலோடி  சன் டோன்ஸ்

குழு G: மான்செஸ்டர் சிட்டி, வைடாட், அல் ஐன், ஜுவென்டஸ்

குழு எச்: ரியல் மாட்ரிட், அல் ஹிலால், பச்சுகா, சால்ஸ்பர்க்

ஜஸ் 

  கிளப் உலகக்  கிண்ணப் போட்டிகான  தனது அணியை இன்டர் மியாமி புதன்கிழமை அறிவித்தது, அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அணியை வழிநடத்த உள்ளார். 

இன்டர் மியாமி ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை அணி

கோல்கீப்பர்கள்: டிரேக் காலன் டெர், ரோக்கோ ரியோஸ் நோவோ, ஆஸ்கார் உஸ்டாரி, வில்லியம் யார்ப்ரோ

டிஃபெண்டர்கள்: ஜோர்டி ஆல்பா, நோவா ஆலன், டோமஸ் அவிலெஸ், இஸ்ரேல் போட்ரைட், மாக்சிமிலியானோ ஃபால்கான், இயன் ஃப்ரே, கோன்சாலோ லுஜான், டைலர் ஹால், டேவிட் மார்டினெஸ், ரியான் மாலுமி, மார்செலோ வெய்காண்ட்

மிட்ஃபீல்டர்கள்: யானிக் பிரைட், செர்ஜியோ புஸ்கெட்ஸ், பெஞ்சமின் கிரெமாச்சி, சாண்டியாகோ மோரல்ஸ், ஃபெடரிகோ ரெடோண்டோ, பால்டாசர் ரோட்ரிக்ஸ், டேவிட் ரூயிஸ், டெலஸ்கோ செகோவியா

முன்கள வீரர்கள்: லியோ அபோன்சோ, தடியோ அலெண்டே, லியோனல் மெஸ்ஸி, ஆலன் ஒபாண்டோ, ஃபாஃபா பிகால்ட், லூயிஸ் சுரேஸ் 

ரமணி

15/6/25

Monday, June 16, 2025

உலகக்கிண்ணப் போட்டிக்குத் தயாரான அமெரிக்க நகரங்கள்

 உலகக் கிண்ண  உதைபந்தாட்டப் போட்டி நடை பெறுவதற்கு முன்னதாக  அமெரிக்காவின் 11 போட்டிகளை நடத்தும் நகரங்களின் பிரதிநிதிகள், இந்தப் போட்டி கலாசார சமத்துவம் , உள்கட்டமைப்பு முதல் இளைஞர் விளையாட்டு அணுகல் வரை நீண்டகால சமூக தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்வதற்கான திட்டங்களை முன்வைத்துள்ளனர்.

நியூயார்க்கில் உள்ள பேலி சென்டர் ஃபார் மீடியாவில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒரு குழுவில், கலாசார உள்ளடக்கத்தை வலுப்படுத்துதல், இளைஞர் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் பொது உள்கட்டமைப்பில் முதலீடு செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளை ஹோஸ்ட் நகர அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்.

மிகவும் விரிவான முயற்சிகளில் ஒன்று சியாட்டிலின் சீன அமெரிக்க கலை மரபு திட்டம் ஆகும், இது நகரத்தின் சீனாடவுன்-சர்வதேச மாவட்டத்தில் சீன அமெரிக்கர்களின் வரலாற்று பங்களிப்புகளை எடுத்துக்காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட 250,000 அமெரிக்க டொலர் நகர நிதியுதவி திட்டமாகும்.

மற்ற நகரங்களும் இதேபோன்ற உள்ளூர்மயமாக்கப்பட்ட அணுகுமுறைகளை எடுத்து வருகின்றன. லொஸ் ஏஞ்சல்ஸ் சமூக இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது; மியாமி கலாசார ரீதியாக மூழ்கடிக்கும் ரசிகர் விழாவை நடத்துகிறது; கன்சாஸ் நகரம் ஒரு புதிய பிராந்திய போக்குவரத்து மாதிரியை முன்னோட்டமாக உருவாக்குகிறது; டல்லாஸ் இளைஞர் கால்பந்து உள்கட்டமைப்பு , ஊடக திறனில் முதலீடு செய்கிறது.

போட்டியின் போட்டி கட்டமைப்பை  பீபா  மேற்பார்வையிடும் அதே வேளையில், அமெரிக்க நகரங்கள் நிகழ்வை உள்ளடக்கியதாகவும் உள்ளூர் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்துகின்றன. இலவச பொதுப் பார்வை மண்டலங்கள், அடிமட்ட கூட்டாண்மைகள் , பிராந்திய பிராண்டிங் முயற்சிகள் ஆகியவை உலகக் கோப்பையை நீண்டகால குடிமை நலனுக்கான தளமாகப் பயன்படுத்துவதற்கான பரந்த உத்தியின் ஒரு பகுதியாகும்.

2026 போட்டி அமெரிக்கா, கனடா ,  மெக்சிகோ  ஆகிய மூன்று நாடுகளில்  16 நகரங்களில் நடைபெறும், இறுதிப் போட்டி உட்பட 60 போட்டிகளை அமெரிக்கா நடத்துகிறது. 

Tuesday, February 11, 2025

இந்தியர்களை விலங்கிட்டு அனுப்பியது அமெரிக்கா


 அமெரிக்காவில் சட்ட விரோதமாகத் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்தப் போவதாக ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் பரப்புரை செய்தார். ட்ரம்ப் பதவி ஏற்ரு ஒரு மாதம் முடிவதர்கிடையில் தேர்தல் பிரராச வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கி விட்டார். குவாத்தமாலா, ஈக்வடார்  கொலம்பியா நாட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

 அமெரிக்காவில் தங்கி இருக்கும் ஏழு  இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை   வெளியேற்ற  அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், முதல் தொகுப்பு நபர்கள்  இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சான் அன்டோனியோ, டெக்ஸாஸ் மாகணங்களிலிருந்து  புறப்பட்ட அமெரிக்க இராணுவ  விமானங்கள்பஞ்சாப் அமிர்தசரஸில் தரை இறங்கின.

அமெரிகாவில் வசதியாக வாழலாம் எனச் சென்றவர்கள் விலங்குகள்  போல் அனுப்பபட்டுள்ளனர்.   கைதிகளைப் போல குடியேறிகள் கைவிலங்கிட்டு, கால்களிலும் விலங்கிடப்பட்டு, முகத்தை மறைக்கும் வகையில் முக கவசம் அணிவிக்கப்பட்டு, கொண்டுவரப்பட்டதாக படங்களுடன் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால்  அந்தப் படங்களில் இருப்பவர்கள் இந்தியர் அல்ல என சில முன்னணிப் பத்திரிகைகள் தகவல் வெளியிட்டன.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட சில ஊடகங்களும் அந்த புகைப்படங்களில் இருப்பது இந்தியர்கள் அல்ல என்பதை உறுதி செய்துள்ளன. கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் முறையைப் பயன்படுத்தி புகைப்படங்கள் முதலில் எங்கே வெளியிடப்பட்டது என்பதை அறிந்துகொள்ளலாம்.

104 இந்தியர்கள் இன்று நாடுகடத்தப்பட்டதாக ஊடகங்களில் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. இந்தியர்கள் கண்ணியமாக நடத்தப்பட்டார்களா என்பது குறித்தும் இந்திய வெளியுறவுத்துறையும், அமெரிக்க அரசும் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

சட்டவிரோதமாக குடியேறியதாக கூறி நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு மிக மோசமாக அமெரிக்கா நடத்தியுள்ளது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை அந்த  நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை தலைவரே வெளியிட்டுள்ளார். அத்தோடு இந்தியர்களை Illegal Aliens என்றும் கேவலமாக சித்தரித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் மைக்கேல் டபிள்யூ பாங்க்ஸ் என்ற அதிகாரி இதுகுறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பின்னணி இசை சேர்த்து அவர் போட்டுள்ள அந்த வீடியோவில் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களது கால்களிலும், கைகளிலும் விலங்குகள் போடப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அவர்களை ஏதோ கொத்தடிமை போல அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றுகின்றனர். இதுதொடர்பாக மைக்கேல் போட்டுள்ள எக்ஸ் பதிவில், சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்திருக்கிறோம். இதுவரை  அமெரிக்க  ராணுவம் மேற்கொண்டதிலேயே மிக தூரமான பயணம் இதுதான்.  குடியேற்றச் சட்டங்களை மதிக்காத யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி. அவர்கள் யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக குடியேறினால் வெளியேற்றப்படுவார்கள் என்று திமிராக கூறியுள்ளார் மைக்கேல் பாங்க்ஸ்.

இந்த நிலையில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் மைக்கேல் டபிள்யூ பாங்க்ஸ் என்ற அதிகாரி இதுகுறித்த ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பின்னணி இசை சேர்த்து அவர் போட்டுள்ள அந்த வீடியோவில் இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களது கால்களிலும், கைகளிலும் விலங்குகள் போடப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. அவர்களை ஏதோ கொத்தடிமை போல அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றுகின்றனர். இதுதொடர்பாக மைக்கேல் போட்டுள்ள எக்ஸ் பதிவில், சட்டவிரோத ஏலியன்களை இந்தியாவுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைத்திருக்கிறோம். இதுவரை  அமெரிக்க  ராணுவம் மேற்கொண்டதிலேயே மிக தூரமான பயணம் இதுதான்.  குடியேற்றச் சட்டங்களை மதிக்காத யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி. அவர்கள் யாராக இருந்தாலும் சட்டவிரோதமாக குடியேறினால் வெளியேற்றப்படுவார்கள் என்று திமிராக கூறியுள்ளார் மைக்கேல் பாங்க்ஸ்.

ட்ரம்ப் அதிபராக வந்தது முதல் பல்வேறு அதிரடிகளில் ஈடுபட்டுள்ளார். சட்டவிரோதமாக குடியேறிய பிற நாட்டவரை தற்போது வெளியேற்ற ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் இந்தியர்களும் கூட இதில் சிக்கிக் கொண்டுள்ளனர். 

அமெரிக்க அதிகாரி வெளியிட்டுள்ள இந்த வீடியோவின் மூலமாக, நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் மோசமாக நடத்தப்பட்டது தெளிவாகியுள்ளது.

சட்ட விரோதமாக தங்கள் நாட்டில் வசிப்பதாக கூறி 4 வயது குழந்தை உட்பட 104 பேரை கைவிலங்கு (handcuffs) போட்டு இந்தியாவுக்கு அமெரிக்கா நாடு கடத்தியது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

 "அமெரிக்க சட்டப்படியே நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கை விலங்கு போடப்படவில்லை. வெளிநாட்டில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களை திரும்ப பெறுவது அனைத்து நாடுகளின் கடமையாகும். நாடு கடத்தப்பட்டவர்கள் தவறாக நடத்தப்படவில்லை என்பதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

 அந்த சி 17 ராணுவ விமானத்தில் வந்த ஒருவர், கைகளுக்கு விலங்கு போடப்பட்டதாகவும், கால்களில் செயின்களால் கட்டி வைத்து அழைத்து வந்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும் மொத்த பயணத்திலும் இப்படியே அழைத்து வந்ததகாவும் அமிர்தசரஸ் வந்த பிறகுதான் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.   அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கண்ணியக்குறைவாக நடத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்து இருந்தன. இது தொடர்பான புகைப்படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் இந்த குற்றச்சாட்டு மத்திய அரசு தரப்பில் மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட விமானத்தில் வந்த இந்தியாவை சேர்ந்த ஜஸ்பால் சிங் என்பவர் பல்வேறு திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். 36 வயதான ஜஸ்பால் சிங் கூறியதாவது:- கைகளுக்கு விலங்கு போடப்பட்டதாகவும், கால்களில் செயின்களால் கட்டி வைத்து அழைத்து வந்ததாக கூறியிருக்கிறார். மொத்த பயணத்திலும் இப்படியே அழைத்து வந்ததாகவும் அமிர்தசரஸ் வந்த பிறகுதான் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியுள்ளார். பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜஸ்பால் சிங், அமெரிக்கா எல்லையை கடந்த 24 ஆம் திக‌தி தாண்ட முயற்சிக்கும் போது அந்நாடு எல்லை பாதுகாப்பு ரோந்து படையினரால் பிடிக்கப்பட்டாராம். டிராவல் ஏஜெண்ட் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்காவில் இருந்து 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இந்தியர்கள் கைது செய்யப்பட்டு கை விலங்குகளுடன் விமானத்தில் ஏற்றப்பட்டு நாடு கடத்தப்பட்டது குறித்து மத்திய பாஜக அரசு ஏன் மவுனமாக இருக்கிறது என்பதும் எதிர்க்கட்சி எம்பிக்களின் கேள்வி. அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வ்ருகின்றனர். 

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு நாடு கடத்தப்பட்டது தொடர்பாக மத்திய அரசு கனத்த மவுனமாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் நேற்று முதல் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்னதான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர்.

ரமணி

16.2.25

இடம் பெயர்ந்த காஸா மக்களுக்கு சவால்விடும் குளிர்காலப் புயல்

 காஸா பகுதியில் ஒரு பேரழிவு தரும் குளிர்காலப் புயல் வீசி வருகிறது, இதனால் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களின் உயிர்வாழ்வதற்கான போராட்டம் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களை தங்க வைத்திருக்கும் பலவீனமான கூடாரங்கள், புயல், குளிர் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாதவை.  காஸா மக்களுக்கு, புயல் என்பது வெறும் இயற்கையின் செயல் மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கையைப் பிளந்த பேரழிவுகளின் வரிசையில் ஒரு கூடுதல் சோகம்.

பராக்காவிலிருந்து வெகு தொலைவில் இல்லாத ஓம் அகமது அல்-ரம்லி, புயல் தனது கூடாரத்தை நாசமாக்கிய பிறகு, தனது உடைமைகளைக் காப்பாற்ற தீவிரமாகப் போராடினார்.

 பாலஸ்தீன அரசியல்வாதிகள்  காஸாவை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது பற்றி சண்டையிடுகிறார்கள், ஆனால் இந்தப் போருக்கான இறுதி விலையை செலுத்துவது மக்கள்தான்.நிலம் அடர்ந்த சேற்றின் சேற்றாக மாறுவதால் நிலைமை மோசமடைகிறது, இடம்பெயர்ந்தவர்களை சிக்க வைத்து, தப்பிக்கவோ அல்லது உதவி பெறவோ தடையாகிறது.

இடைவிடாத மழையும், பலத்த காற்றும் முகாம்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன, மேலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு புகலிடம் இல்லை.எரிபொருள் பற்றாக்குறை அவர்களின் துயரத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது, குடும்பங்கள் தங்கள் தங்குமிடங்களை சூடாக வைத்திருக்க எந்த வழியையும் இழக்கச் செய்துள்ளது. ஈரப்பதமான மற்றும் குளிரான சூழ்நிலையில் வாழ்வதால், மக்கள் நோய்களுக்கு ஆளாக நேரிடும் அபாயம் உள்ளது.

வடக்கு  காஸாவில், நிலைமை அதே அளவுக்கு மோசமாக உள்ளது. ஜனவரியில் ஹமாஸ் , இஸ்ரேல் ஆகியவற்றுக்கு இடையேயான போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஸ்திரத்தன்மையின் சாயல் கிடைக்கும் என்று நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த குடும்பங்கள், இடிபாடுகளைத் தவிர வேறு எதையும் காணவில்லை.

வீதிகள், வீடுகள் ,உள்கட்டமைப்புகள் என்பன  அழிக்கப்பட்டுள்ளன, மேலும் உயிர்வாழ்வது அன்றாடப் போராட்டமாகிவிட்டது.

தாங்க முடியாத இந்த துன்பத்தை எதிர்கொள்ளும் நிலையில், இடம்பெயர்ந்த குடும்பங்கள் மனிதாபிமான அமைப்புகளுக்கு அவசர துயர அழைப்புகளை அனுப்பி, இன்னும் உறுதியான கூடாரங்கள், வெப்பமூட்டும் சாதனங்கள் மற்றும் சிறிதளவு நிவாரணத்தை வழங்கக்கூடிய எந்தவொரு உதவியையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மனித உரிமை அமைப்புகள் இந்த அழைப்புகளை எதிரொலித்து, காசாவில் வேகமாக மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை குறித்து எச்சரித்துள்ளன.சுகாதார சேவைகள் பற்றாக்குறையின் மத்தியில் குளிர் மற்றும் நோய்களுக்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் கடுமையான ஆபத்துகளை அவை எடுத்துக்காட்டுகின்றன.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்படி,  காஸாவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மோதலால் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை.அவர்கள் அடைக்கலம் தேடும் முகாம்களில் கண்ணியமான வாழ்க்கை நிலைமைகள் எதுவும் இல்லை. சுத்தமான தண்ணீர், வெப்பமூட்டும் உபகரணங்கள் , அத்தியாவசிய மருந்துகள் என்பன  பற்றாக்குறையாக உள்ளன.

 ஊர்மிளா

Monday, January 20, 2025

ட்ரம்ப் அதிரடி கலக்கத்தில் உலக நாடுகள்

அமெரிக்காவின் 47வது அஜனாதிபதியாக  டொனால்ட் ட்ரம்ப், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளை மாளிகைக்குத் திரும்பியுள்ளார்.  அவர்  தனது இரண்டாவது பதவிக்காலத்தை திங்கள்கிழமை நண்பகல் அமெரிக்க தலைநகர் ரோட்டுண்டாவில் பதவியேற்றார்.

வாஷிங்டன், டி.சி.யில் குளிரான வானிலை காரணமாக, அவரது பதவியேற்பு விழா நான்கு தசாப்தங்களில் முதல் முறையாக வீட்டிற்குள் நடைபெற்றது.

தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ்     பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.  தலைமை நீதிபதி வழக்கமாக குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணத்தை மேற்கொள்வார், இது முதல் பதவியேற்றதிலிருந்து பின்பற்றப்படும் பாரம்பரியம்.

ட்ரம்ப் தனது பதவியேற்பு உரையில், தனது பதவியேற்பு உரையில் அமெரிக்காவிற்கு ஒரு புதிய "பொற்காலம்" தொடங்கியுள்ளதாக அறிவித்தார்.

ட்ரம்ப் தனது உரையில், தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்தல், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை மேம்படுத்துதல், மின்சார வாகன ஆணையை ரத்து செய்தல் உள்ளிட்ட "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாக உத்தரவுகளில்" கையெழுத்திடுவதாக உறுதியளித்தார். வர்த்தக முறையின் மறுசீரமைப்பு மற்றும் "கட்டண மற்றும் வரி வெளிநாட்டு நாடுகளுக்கு" உடனடியாகத் தொடங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

  விலைகளைக் குறைக்கவும், வாகனத் தொழிலைக் காப்பாற்றவும், "நியாயமான, சமமான மற்றும் பாரபட்சமற்ற நீதியை மீட்டெடுக்கவும்" மற்றும் அமெரிக்க நகரங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கை மீண்டும் கொண்டு வர உறுதியளித்தார்.

ஜனநாயகக் கட்சியினரின் DEI (பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம்) திட்டங்களை விமர்சித்து, புதிதாக பதவியேற்ற ஜனாதிபதி இந்த வாரம், "பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இனம் மற்றும் பாலினத்தை சமூகப் பொறியியலாளர் முயற்சி" என்ற அரசாங்கக் கொள்கையையும் முடிவுக்குக் கொண்டு வருவார் என்று கூறினார். "நிற குருட்டு மற்றும் தகுதி அடிப்படையிலான சமுதாயத்தை உருவாக்குங்கள்."

ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே உள்ளன என்பது அமெரிக்க அரசாங்கத்தின் "அதிகாரப்பூர்வ கொள்கை" என்று அவர் குறிப்பிட்டார்.

உலகம் இதுவரை கண்டிராத வலிமையான ராணுவத்தை உருவாக்கவும் ட்ரம்ப் உறுதியளித்தார். "நாங்கள் வெற்றிபெறும் போர்களால் மட்டுமல்ல, நாம் முடிவுக்கு வரும் போர்களாலும், மிக முக்கியமாக, நாம் ஒருபோதும் ஈடுபடாத போர்களாலும் எங்கள் வெற்றியை அளவிடுவோம்," என்று ட்ரம்ப் கூறினார், அவர் சமாதானம் செய்பவராகவும் ஒன்றிணைப்பவராகவும் இருப்பார்.

மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றப்போவதாகவும், பனாமா கால்வாயை திரும்பப் பெறுவதாகவும் ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.

செவ்வாய் கிரகத்திற்குச் செல்லப்போவதாக டர்ம்ப்   உறுதியளித்தார்.

 பருவநிலை மாற்றம் தொடர்பான முக்கிய பரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை இரண்டாவது முறையாக வெளியேற்றப் போவதாக  ட்ரம்ப் கூறினார்.

ட்ரம்ப் பதவியேற்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, துணை  ஜனாதிபதியாக ஜேடி வான்ஸ் பதவியேற்றார்.

 பதவியேற்பு உரையின் போது உக்ரைனில் நடந்த மோதல்கள் குறித்து நேரடியாகக் குறிப்பிடவில்லை.ட்ரம்பின் உரையைத் தொடர்ந்து, அமெரிக்க ஊடகங்களில், ட்ர‌ம்ப் ஏன் உக்ரைனின் பெயரை வேண்டுமென்றே குறிப்பிடுவதைத் தவிர்த்தார் என்பது விவாதப் பொருளாகியது.

கிரெம்ளினில் இருந்து ஒரு அறிக்கையின்படி, ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் திங்களன்று நடந்த சந்திப்பின் போது, மாஸ்கோ ஒருபோதும் உரையாடலை நிராகரிக்கவில்லை என்றும், எந்த அமெரிக்க நிர்வாகத்துடனும் ஒத்துழைக்க எப்போதும் திறந்திருப்பதாக புடின் கூறினார். 

ட்ரம்ப் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவிக்க ரஷ்ய தலைவர்  இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

ஜனவரி 6 கலவரக்காரர்களை மன்னிக்கும் நிர்வாக உத்தரவுகளில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்தார்.

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்றவர்களின்  நிகர மதிப்பு $1 டிரில்லியன் டொலராக உள்ளது, டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் கூட்டத்தில் இருந்த ஆறு பெரும் பணக்காரர்களின் நிகர மதிப்பு, மொத்த இங்கிலாந்து பொருளாதாரத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கு சமமாக உள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவை தனித்துவமாக்கிய விஷயங்களில் ஒன்று சிலிக்கான் பள்ளத்தாக்கு உயரடுக்கின் முக்கியத்துவமாகும்.

எலோன் மஸ்க் , ஜெஃப் பெசோஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகிய உலகின் மூன்று பணக்காரர்களை எளிதில் அடையாளம் காண முடியும் . கேமராக்களின் பார்வையில் நேரடியாக வைக்கப்படாத சில பில்லியனர்களும் அங்கு இருந்தனர்.பில்லியனர் தொழில்நுட்ப நிறுவனர்கள், மில்லியனர் வணிகர்கள்   பணக்கார அரசியல்வாதிகளும் டர்ம்பின் பதவி ஏற்பு வைபவத்தைக் கண்டு ரசித்தனர்.

Monday, January 13, 2025

ஜிம்னாஸ்டிக்கில் கால் பதிக்கும் உகண்டா


  அமெரிக்கா,ரஷ்யா,சீனா,ஜப்பான் ஆகிய நாடுகளின்  பிடியில் இருக்கும் ஜிம்னாஸ்டிக்கில் சாதனை செய்கிறார்கள் உகண்டாவில் தெருவோர இளைஞர்கள்.

உகாண்டாவின் கட்வே நகரில் , தூசி நிறைந்த தெருக்களில், வறுமையுடன் வாழும் இளைஞர்களின் கனவு முடக்கப்படுகிறது.

ஆனால், அங்குள்ள சில  இளைஞர்கள் குழு ஜிம்னாஸ்டிக்ஸ் மூலம் நம்பிக்கையை மட்டுமல்ல, பிரகாசமான எதிர்காலத்திற்கான உந்துதலையும் கண்டுபிடித்துள்ளனர்.

 "நான் சிமோன் பைல்ஸைப் போல இருக்க விரும்புகிறேன்," என்று கூறும்  எரிக் மயஞ்சா வின் லட்சியங்களுக்கு எல்லையே இல்லை.

உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில்   சேரியான கட்வேயின் மையத்தில், குழந்தைகள் மிகுந்த சிரமத்தால் மூழ்கிய வாழ்க்கையை எதிர்கொள்கின்றனர். ஆயினும்கூட, கட்டகா ஆர்ட்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் என்ற உள்ளூர் கிளப் நினைத்துப் பார்க்க முடியாததைச் சாதித்து வருகிறது:

 ஜிம்னாஸ்டிக்ஸை வாழ்க்கையை மாற்றுவதற்கான ஒரு கருவியாக மாற்றுகிறது. வளரும் விளையாட்டு வீரர்களில் 17 வயதான எரிக், தனது  விருப்பத்துகுரிய பைல்ஸின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சாதிக்கத் துடிக்கிறார்.

  "தொற்றுநோயின் போது,  வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்தபோதுதான்  ஜிம்னாஸ்டிக்ஸ்  தொடங்கியது யூடியூப் வீடியோக்களைப் பார்த்து அடிப்படைகளைக் கற்றுக்கொண்ட ஃபைசோ லுகோலோபி, ஒரு சுய-கற்பித்த   பயிற்சியாளராக மாறினார்..

இப்போது கிட்டத்தட்ட 60 குழந்தைகளுடன் சேர்ந்து, கிளப் ஒரு சரணாலயமாக மாறியுள்ளது.

உகாண்டாவில், விளையாட்டு அரங்கில் உதைபந்தாட்டம்  ஆதிக்கம் செலுத்துகிறது, ஜிம்னாஸ்டிக்ஸ் பெரும்பாலும் சந்தேகத்தை சந்திக்கிறது. பல உள்ளூர்வாசிகள் அதை ஆபத்தானதாக உணர்கிறார்கள் என பயிற்சியாளரான  ஃபைஸோ கூறுகிறார்

 ஃபைசோவும்  அவரது குழுவினரும் அந்த கதையை மாற்றுவதில் உறுதியாக உள்ளனர். ஒரு நாள் தங்கள் ஜிம்னாஸ்ட்களை சர்வதேச போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும் கனவுகளுடன், ஜிம்னாஸ்டிக்ஸ் ஒரு சாத்தியமான மற்றும் அர்த்தமுள்ள பாதையாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்க அவர்கள் அயராது உழைக்கிறார்கள்.


  பதினான்கு வயதான சில்வெஸ்டர் ஓஜியம்போ, மற்றொரு வளர்ந்து வரும் நட்சத்திரம், ரஷ்ய ஒலிம்பிக் சாம்பியனான நிகிதா நாகோர்னியைப் பின்பற்ற வேண்டும் என்று கனவு காண்கிறார். "நான் ஜிம்னாஸ்டிக்ஸை விரும்புகிறேன், உபகரணங்கள் மற்றும் ஆடைகளுடன் எங்களுக்கு உதவும் ஸ்பான்சர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என்று அவர் ஒரு புன்னகையுடன் கூறுகிறார்.

தடைகள் இருந்தபோதிலும், கடக கலை ஜிம்னாஸ்டிக்ஸ் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தது. நிலப்பரப்பு தளங்களில் பயிற்சி செய்வதிலிருந்து, அவர்கள் இப்போது உள்ளூர் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெறுகிறார்கள் வளங்கள் பற்றாக்குறையாக இருந்தாலும், பயிற்சியாளர்கள் மற்றும் குழந்தைகளின் அசைக்க முடியாத ஆர்வம் திட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அனுசரணையாளர்கள் ஆர்வத்துடன் உதவி செய்கிறார்கள். 

சிலம்பு

12/1/25

Sunday, January 12, 2025

கலிபோர்னியாவைக் கருக்கிய காட்டுத்தீ


   அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்றான கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதி முழுவதும் காட்டுத்தீயால் அழிக்கப்பட்டுள்ளது. 11 பேர் மரணமானார்கள். 3 இலட்சத்துக்கும்  மேற்பட்ட மக்கள் லொஸ் ஏஞ்சல்ஸை விட்டு வெளியேறியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களை தீ  நாசமாக்கியுள்ளது.

58 சதுர மைல்களுக்கு மேல் சாம்பல் காடாகக் காட்சியளிக்கிறது.   தீப்பிழம்புகளை வீசிய காற்று பலவீனமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஆபத்துகள் நீடிக்கின்றன. 

லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. போர் நடக்கும் நாடுகளில் எப்படி எல்லாம் தரைமட்டமாக காட்சி அளிக்குமோ அப்படிதான் கலிபோர்னியாவில் தற்போது பெரும்பாலான பகுதிகள் காட்சியளிக்கின்றன.

 உலகமே புதிய ஆண்டைக் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில்  ஜனவரி 7  ஆம் திகதி  உருவான காட்டுத்தீ லொஸ்  ஏஞ்சல்ஸ் பெருநகரப் பகுதியையும் சுற்றியுள்ள பகுதிகளையும் பரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. . சில இடங்களில் மணிக்கு 80-100 மைல்கள் (130-160 கிமீ/மணி) வேகத்தில்

 இந்த முறை காட்டுத் தீயை அணைப்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. இது லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை அடைவதற்குள் எப்படியாவது அணைக்கப்பட்டு விடும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியையும் இந்த தீ  அரக்கன் ஆக்கிரமித்துள்ளான்.

 1000 தீ அணைப்பு வாகனங்களும், 32 ஹெலிகாப்டர்களும், 8,500 தீயணைப்பு வீரர்களும்   கோரத் தீயை அணைக்க போராடுகின்றனர்.

 தீயை அணைப்பதற்காக  இதுவரை சுமார் 1825 கோடிக்கும் அதிகமாக  செலவு ஆகி உள்ளது

 பாரிஸ் ஹில்டன், பில்லி கிரிஸ்டல் , அந்தோனி ஹாப்கின்ஸ் உள்ளிட்ட பிரபலங்களின் அரண்மனை போன்ற வீடுகளை தீ  பொசுக்கி உள்ளது.

 காட்டுத்தீ காரணமாக 29,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ஏற்கனவே கருகிவிட்டன, மேலும் 2,93,000 குடியிருப்பாளர்கள் வெளியேறி உள்ளனர். வீடுகள், பள்ளிகள்   , வீடுகள், வணிக நிறுவனங்கள்  என்பன கருகி விட்டன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் கருகி உள்ளன.  அங்கே சுமார் 10 இலட்சம் கோடி ரூபாய்க்கு நாசம் ஏற்பட்டு உள்ளது.

 முக்கியமாக பாலிசேட்ஸ் தீ அதாவது பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை மிக மோசமாக அமைந்துள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள கடலோர நிலப்பரப்பு ஆகும் இது. இங்கே இப்போது கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. அங்கேதான் அதிக அளவில் ஹாலிவுட் பிரபலங்கள் , கோடீஸ்வரர்கள் உள்ளனர்.

உலக அளவில் வெப்பம் அதிகரித்து வருவதால் இனி பேரிடர்களுக்கு மத்தியில்தான் வாழ்க்கை இருக்க போவதாக ஐநா எச்சரித்து இருந்தது. ஐநாவின் எச்சரிக்கை நாளுக்கு நாள் பலிக்க தொடங்கி உள்ளது.

 உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. தீவிரவாதம்.. சர்வாதிகாரம்.. வேலையின்மை.. வறுமை ஆகியவை உலகின் மிகப்பெரிய பிரச்சனைகளாக தோன்றினாலும், அதை விட பெரிய பிரச்சனை ஒன்றை நாம் சத்தமின்றி எதிர்கொண்டு வருகிறோம். அதுதான் காலநிலை மாற்றம்!

 . உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில மாதங்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.

 தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பல்வேறு பகுதிகள் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயிலேயே இதுதான் மிக மோசமானது என்று அமெரிக்கா வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் வரலாற்றில் ஏற்பட்ட இந்த மிக மோசமான தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடிக்கொண்டு உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் இந்த காட்டுத்தீயால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பலர் தற்போது தற்காலிக மையங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் பொங்கி எழும் தீ, நவீன அமெரிக்க வரலாற்றில் "மிகவும் அழிவுகரமானதாக" இருக்கலாம்.

வெறும் மூன்றே நாட்களில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புகளை இந்த தீ பொசுக்கிவிட்டது.மேலும் இது $150bn (£123bn) வரை பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தனியார் முன்னறிவிப்பாளரான Accuweather தெரிவித்துள்ளது.

தெற்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் என்று தீயணைப்பு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டில், KABC இன் ஹெலிகாப்டர் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் மீது பறக்கும் போது ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கையாக தரையிறங்க வேண்டியிருந்தது .

FAA விதிகள் விமான நிலையத்திலிருந்து ஐந்து மைல்களுக்குள், 400 அடி உயரத்திற்கு மேல் அல்லது ஆளில்லா விமானங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ட்ரோன்களை பறக்கவிடுவதை தடை செய்கிறது. ஆபரேட்டரின் உதவியற்ற பார்வைக்கு அப்பால் ட்ரோன்களை இயக்க முடியாது என்றும் அது கூறுகிறது.