Showing posts with label எம்.ஜி.ஆர். Show all posts
Showing posts with label எம்.ஜி.ஆர். Show all posts

Saturday, December 20, 2025

எம்ஜிஆரின் வழியில் விஜய் சாதிப்பாரா? சறுக்குவாரா?

ஈரோடு பெருந்துறையில் மக்கள சந்திப்பு என்ற பெயரில் விஜய் பிரசாரம் செய்த்டார்.வழமைபோல பலத்த கெடுபிடிகளின்மத்தியில் அனுமதி வழங்கப்பட்டது. எது எது செய்யக்கூடாது என விஜயின் கட்சி சொல்லிக் கட்டுப்படுத்தியதோ அவை அத்தனையையும் விஜயின் தொண்டர்கள் கனகச்சிதமாகச் செய்தர்கள். விஜய் போசும்  போது 30 அடி  உயரமான ஒரு இடத்தில் ஏறியவர்  முத்தத்தைப் பறக்கவிட்டார். அவரை இறங்கும்படி விஜய் கெஞ்சினார்.

விஜயின்  பேச்சு சற்று வித்தியாசமாக  இருந்தது. அவர் தன்னை எம்ஜிஆராக நினைத்துக் கொண்டார். திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தவர் அண்ணா. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப் பட்டதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்ஜிஆர் உருவாக்கினார்.

அண்ணாவும், எம்ஜிஆரும்  பொதுவானவர்கள் எனச்சொல்லும் விஜய் அவர்களுக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்.  ஜெயலலிதாவை முதன் முதலாக மேடம் என  விஜய் அழைத்தார்.  ஊழல் அற்ற அரசை அமைக்கப்போகும் விஜய்க்கு ஜெயலலிதா மெடமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் தீய சக்தி என எம்ஜிஆர்  பிரகடனப்படுத்தினார்.  அவர் வழியை ஜெயலலிதாவும்  பின்பற்றி திமுக தீயசக்தி எனக் கூறினார்.திமுக தீயசக்தி என ஈரோட்டில் விஜய் முழங்கினார். இது செங்கோட்டையனின் வருகையினால் ஏற்பட்ட தாக்கமாக  இருக்கலாம்.

வழக்கம் போல திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக் விஜய் முழங்கினார். பாஜகவிஅயும் கொஞ்சம் தொட்டுப் பார்த்தார். அதிமுகவைப் பற்றி வாயே திறக்கவில்லை. திமுகவுக்கும் தவெகவுக்குமிடையேதான் போட்டி. களத்தில் இலாதவர்களைப் பற்றிப் பேசமாட்டேன் எனவும் விஜய் தெரிவித்தார். களத்தில் இல்லாதவர் சீமானாக  இருக்கலாம்.

கவர்மெண்டா கண்காட்சியா.. எம்ஜிஆரும் அண்ணாவும் தமிழ்நாட்டோட சொத்து.. உங்களுக்கு காசு தான் துணை எனக்கு மாஸ் தான் துணை.. தீயசக்தி தூயசக்தி. திமுக ஆட்சியும் பிரச்சனைகளும் பெவிக்கால் போட்டு ஒட்டுன ப்ரண்ட்ஸ் மாதிரி என்று பஞ்ச் டயலாக் பேசினார் விஜய்.

  விஜய் பேசிய விஷயங்கள் அப்படியே  . 2 மணித்தியாலயத்துக்கு முன்னர்    இணையத்தில் கசிந்தது கட்சிக்கு உள்ளே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விஜய் கோபம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்கு உள்ளேயே இருக்கும் அந்த கருறுப்பு ஆடு யார் என்று விஜய் கோபத்தில் கேட்டதாக கூறப்படுகிறது. எனக்கு எழுதிக்கொடுத்தவர் அதை லீக் செய்ய வாய்ப்பு இல்லை.. வேறு யார் லீக் செய்தது என்ற கேள்வி விஜய்க்கு எழுந்து உள்ளதாம்.

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்திருக்க்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விருப்புமனு வாங்கத்தொடங்கி உள்ளது. வெற்றி வாய்ப்புள்ள 40 தொகுதிகளின் பட்டியலை தமிழக பாரதீய ஜனதாத் தலைவர் டெல்லிகுத்  தெரியப்படுத்தியுள்ளார். தொகுதிப் பங்கீட்டுப்  பேச்சு வார்த்தைக்கு முன்பாக அதிமுகவும், பாரதீய ஜனதாவும் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டன.

தேர்தலின் கதாநாயகனாக தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக குழுவை அமைத்துள்ள்து.

தமிழக சட்டமன்றத்  தேர்தலுக்கு சுமார் நான்கு மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் கூட்டணியை இறுதி செய்ய கட்சித் தலைவர்கள் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகின்றனர்.   கூட்டணி ஏற்கனவே பலம் வாய்ந்ததாக இருக்கிறது. பெரும்பாலான கட்சிகள் அதே கூட்டணியில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியில் அதிகதொகுதிகள்   வேண்டுமென காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகின்றன.  ஆனால் அது கூட்டணியில் பெரிய அளவில் பிளவை ஏற்படுத்தாது எனச் சொல்லப்படுகிறது.

 எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக ஆளும்கட்சியாக வேண்டும் எனத் தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணியை அமித்ஷா இறுதி செய்துவிட்டார். 2021ஐ போலவே 2026லும் பாஜக அதிமுக கூட்டணி அமைந்திருக்கிறது. மேலும் அந்த தேர்தலில் கூட்டணியிலிருந்து பாமகவை அழைத்து வர எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாகப் பேசி வருகிறார். 

  பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே குடும்ப தகராறு இருக்கிறது. அந்த தகராறு கட்சியிலும் எதிரொலித்திருக்கும் நிலையில், நான் தான் தலைவர் என ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால் தேர்தல் ஆணையம் தங்களைத்தான் அங்கீகரித்து இருப்பதாக கூறி அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறார் அன்புமணி. உச்சமாக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனுக்களையும் பெற்று வருகிறார். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்வத்தோடு விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.

  தமிழக தேர்தல்களில் பலமுறை களம் கண்ட சீமான், இந்த முறையும் தனித்து களம் காண்பதென முடிவு செய்திருக்கிறார். இதற்காக வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார். பொதுவாக பல கட்சிகள் தேர்தல் நேரம் வரை காத்திருந்து கூட்டணி பங்கீடு முடிவடைந்தது தான் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார்கள். ஆனால் வழக்கம்போல் முதல் ஆளாக வேட்பாளரை பட்டியலை அறிவித்து, பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் என பிரம்மாண்டம் காட்டி வருகிறார் சீமான் எ.

  அரசியல் பிரச்சாரம் மற்றொரு புறம் தேர்தல் வேலைகள் என தனியாக துவக்காவிட்டாலும் கள அரசியலில் தனது முத்திரையை ஆழமாக பதித்து வருகிறார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய். இதுவரை ஒன்றிய, நகர, மாநகர நிர்வாகிகள் நியமனம் செய்யப்படவில்லை என்றாலும், விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் சேருவது அவர் தரப்பை உற்சாகப்படுத்தி இருக்கிறது. அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் விஜய் கால்பதிக்க திட்டமிட்டு அதற்கான காய்களை நகர்த்தி வருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை முன்பே திட்டமிட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் கரூர் சம்பவத்தால் 70 நாட்களுக்கும் மேலாக தடைப்பட்டது .தற்போது நிலைமை ஓரளவு சீராகி இருக்கும் நிலையில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை பிரச்சாரம் போல மேற்கொண்டு வருகிறார்.இதுவரை மாவட்ட அரசியல் பேசாத விஜய் காஞ்சிபுரத்திலிருந்து உள்ளூர் அரசியலையும் பேச ஆரம்பித்திருப்பது பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுக,பாரதீய ஜனதா, தவெக ஆகிய மூன்று கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளைப் பிரிக்கப்போகின்ரன. இந்த நிலை திமுகவுக்கு சாதகமாக உள்ளது.

ரமணி

21/12/25 

Friday, October 27, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 84

வசீகரிக்கும் முகம், கவர்ந்திழுக்கும் கண், அழகான சிரிப்பு  என்பன  ஈ.வி.சரோஜாவை  நினைவு படுத்துபவை. கதாநாயகி, இரண்டாவது கதாநாயகி, தோழி, நகைச்சுவை,  குணசித்திரம் எதுவாக  இருந்தாலும்  ஜமாய்ப்பவர் ஈ.வி.சரோஜா. கலை அரசி என ரசிகர்களால் போற்றப்பட்ட  ஈ.வி.சரோஜா நடனத்தில் தேர்ச்சி பெற்றவர். நடனம் தான் அவரை திரை உலகுக்கு அழைத்து வந்தது.

வழுவூர் ராமய்யா பிள்ளையிடம் நடனக் கலைகளை கற்றுக் கொண்டு நன்கு தேர்ச்சி பெற்ற சரோஜாவின் நாட்டிய அரங்கேற்றம் 1951ஆம் ஆண்டில் சென்னை ரசிக ரஞ்சினி சபாவில் நீதிபதி ஏ.எஸ்.பி.அய்யர் முன்னிலையில் நடந்தேறியபோது, அனைத்து தரப்பினரின் பாராட்டு மாலைகள் ஒருசேர சரோஜாவுக்கு குவிந்தன.இந்த வேளையில் சிவாஜி கணேசன் நடித்து வந்த ‘என் தங்கை’ என்ற நாடகத்தை அதே பெயரில் அசோகா பிக்சர்ஸ் பட நிறுவனத்தார், எம்ஜிஆரை நாயகனாக்கி திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டிருந்தனர்.

இந்தப் படத்தில் எம்ஜிஆருக்கு தங்கையாக மீனா என்ற பாத்திரத்தில் நடிப்பதற்கு இளம்பெண் ஒருவரை தேடிக் கொண்டிருந்தனர்.நடன நிகழ்ச்சியில் சரோஜாவை பார்த்த இவர்கள், தங்கள் படத்தில் அவரை நடிக்க வைப்பதற்கு முடிவெடுத்து அவரை ஒப்பந்தம் செய்தனர்.பார்வையற்றப் பெண்ணான மீனாவின் நடிப்பு இந்தப் படத்தில் மிக முக்கியமான வேடமாகும்.தங்கைக்காக தனது வாழ்வையே அர்ப்பணிக்கும் ஏழை அண்ணன் ராஜேந்திரனாக, எம்ஜிஆரின் உணர்ச்சிப்பூர்வ நடிப்பும், அதற்கு ஈடாக சரோஜாவின் உருக வைக்கும் பாத்திரமும், படத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கின.இதில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை எடுத்த எடுப்பிலேயே சரோஜா கவர்ந்தார்.

1935ல் திருவாரூர் மாவட்டம் என்கண் கிராமத்தில் வேணுபிள்ளை, ஜானகி தம்பதியருக்கு 2வது மகளாகப் பிறந்தார். பிறந்த ஊரின் முதல் எழுத்துடன், தந்தையின் பெயரையும் சேர்த்து ஈ.வி.சரோஜா என்று பெயர் வைத்தார். இவருடன் மூத்த அண்ணன், 2 தம்பிகள் உள்ளனர்.வீட்டில் ஒரே மகள் என்பதால் பெற்றோர் இவரை சீரும் சிறப்புமாக மகாலெட்சுமி போல் வளர்த்தனர். சிறுவயது முதலே நடனமாடுவது, பாடுவது என தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். இவரது 8 ஆவது  வயதில் தந்தை காலமானார்.

வழுவூர் ராமையாபிள்ளையிடம் ஈ.வி.சரோஜா நடனம் கற்றார். 1952ல் என் தங்கை என்ற படத்தில் அறிமுகமானார். இந்தப்படத்தில் எம்ஜிஆரின் தங்கையாக நடித்து இருந்தார்.

பணமின்றி வறுமையில் வாழ முடியாது என்ற நிலையில் இறந்து போகிறார் ஈ.வி.சரோஜா. சோகம் தாங்காமல் தானும் கடலில் இறங்கித் தற்கொலை செய்து கொள்கிறார் எம்ஜிஆர். படம் கதை எதிர்மறையாக வெளியானதால் வெற்றி பெறவில்லை. இதன்பிறகு எம்ஜிஆர் இதுபோன்ற கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதே இல்லை.955ல் ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கத்தில் கே.ஏ.ராமசாமி, ராஜசுலோச்சனா நடித்த நீதிபதி என்ற படத்தில் இடம்பெற்ற நடனத்தில் ஈ.வி.சரோஜாவும், அவரது தோழி விஜயலெட்சுமியும் இணைந்து அற்புதமாக நடனமாடினர்.

குலேபகாவலியில் குல்சார் என்ற கதாபாத்திரத்தில் சரோஜா தோன்றி நடித்து அசத்தினார். ஜிக்கியின் பின்னணி குரலில் சொக்கா போட்ட நவாபு செல்லாது உங்க ஜவாபுன்னு அசத்தலாக பாடி, ஆட்டம் போடுவார்.

பெண்ணரசி என்ற படத்தில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்துத் தாய்மார்களின் பேராதரவைப் பெற்றார். பலே ராமுடு என்ற தெலுங்கு படத்தில் நடனமங்கையாக அறிமுகமானார்.

1956ல் வெளியான அமரதீபம், பாசவலை படங்களில் நடித்து நடிப்பில் தனக்கென தனிமுத்திரை பதித்தார். 1956ல் லேனா செட்டியார் இயக்கத்தில் எம்ஜிஆருடன் இணைந்து பானுமதி மதுரை வீரன் படத்தில் நடித்தார். இந்தப்படத்தில் கிள்ளி என்ற கதாபாத்திரத்தில் ஈ.வி.சரோஜா நடித்தார்.

வாங்க மச்சான் வாங்க என்ற பாடலுக்கு ஆடிப்பாடி எம்ஜிஆரை கலாய்த்திருப்பார். அடுத்து கே.ஏ.தங்கவேலு, பானுமதி இணைந்து நடித்த ரம்பையின் காதலி படத்தில் ஊர்வசி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

1957ல் டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த புதுமைப்பித்தன் படத்தில் அபராஜிதா என்ற கதாபாத்திரத்தில் ஈ.வி.சரோஜா நடித்தார். சந்திரபாபுவுடன் இணைந்து தில்லானா பாட்டுப்பாடி என்ற பாடலுக்கு செம ஆட்டம் போடுவார். ஜெமினிகணேசன், சாவித்ரியின் நடிப்பில் வெளியான கற்புக்கரசியில் சசிகலாவாகத் தோன்றினார்.

எங்கள் வீட்டு மகாலெட்சுமியில் பட்டணம் தான் போகலாமடி பொம்பள என்ற பாடலுக்கு ஆடிப்பாடி ஜமாய்த்திருப்பார். வீரக்கனல், காத்தவராயன், பிள்ளைக்கனியமுது படங்களில் நடித்து முத்திரை பதித்தார். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். 1960ல் பீம்சிங் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் படிக்காத மேதை படத்தில் நடித்தார்.


 டி.ஆர்.மகாலிங்கம் நடிப்பில் ஆடவந்த தெய்வம் படத்தில் பைரவியாக தோன்றி அசத்தினார். 1961ல் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பாக்ய லட்சுமி படத்தில் ஜெமினியின் 2வது மனைவி ராதாவாகத் தோன்றி அசத்தினார். மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற பாடலில் சௌகார் ஜானகி உடன் வீணை வாசித்தபடி அசத்தலாக நடித்தார்.

நல்லவன் வாழ்வான் படத்தில் இடம்பெற்ற ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான், குத்தால அருவியிலே குளித்தது போல் இருக்குதா? பாடலில் ஈ.வி.சரோஜா பின்னி எடுத்திருப்பார்.

அடுத்து 1954இல் டி.ஆர்.மகாலிங்கத்தின் சொந்தப் படைப்பான சுகுமார் புரொடக்க்ஷன்ஸ் ‘விளையாட்டு பொம்மை’ படத்தில்

குமாரி கமலாவுடன் இணைந்து சரோஜா நடித்தார்.தொடர்ந்து 1955இல் ஏ.பி.நாகராஜனின் ‘பெண்ணரசி’ படத்திலும் எம்ஜிஆருடன் ‘குலேபகாவலி’ படத்திலும், ஆர்.எஸ்.மனோகர் நடித்த ‘நல்ல தங்காள்’ படத்திலும், ஜெமினி கணேசன் நடித்த ‘நீதிபதி’ படத்திலும் அடுத்தடுத்து சரோஜா நடித்தார்.1956இல் தங்கவேலுவுடன் ‘அமரதீபம்’ படத்தில் தோன்றிய சரோஜா, இந்த ஆண்டில் ‘நன்நம்பிக்கை’, ‘பாசவலை’, ‘மறுமலர்ச்சி’, ‘மதுரைவீரன்’, ‘ரம்பையின் காதல்’, ஆகியப் படங்களிலும் திறம்பட நடித்தார்.

‘எங்க வீட்டு மகாலஷ்மி’, ‘கற்புக்கரசி’, ‘நீலமலைத் திருடன்’, ‘புதுமைப்பித்தன்’, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ ஆகியப்

படங்கள் 1957ஆம் ஆண்டில் சரோஜாவின் அபார நடிப்புடன் திரைக்கு வந்தன.தொடர்ந்து ‘கடன் வாங்கிக் கல்யாணம்’, ‘காத்தவராயன்’, ‘குடும்ப கௌரவம்’, ‘பிள்ளைக்கனியமுது’, ‘பூலோக ரம்பை’ ஆகியப் படங்கள் 1958இல் சரோஜாவின் நடிப்பு நடனம் இரண்டையும் புலப்படுத்தி வெளியீடு கண்டன.1959இல் ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’, ‘சுமங்கலி’, ‘தங்கப்பதுமை’, ‘மனைவியே மனிதனின் மாணிக்கம்’ ஆகியப் படங்களிலும் சரோஜா இடம் பெற்றார்.

சரோஜாவின் அற்புத நடிப்பை புலப்படுத்தும் விதமாக 1960இல் ‘

ஆட வந்த தெய்வம்’, ‘மணப்பந்தல்’, ‘பங்காளிகள்’, மற்றும்

‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ ஆகியப் படங்கள் திரைக்கு வந்தன.தொடர்ந்து ‘கைதி கண்ணாயிரம்’, ‘படிக்காத மேதை’, ‘பாட்டாளியின் வெற்றி’, ‘இரத்தினபுரி இளவரசி’, ‘ராஜபக்தி’ ஆகியப் படங்கள் இவரின் நடிப்பை பாராட்டும் விதமாக ரசிகர்களை மகிழ்வித்தன.1961இல் ‘பாக்கியலஷ்மி’ படத்திலும், 1962இல் ‘வீரத்திருமகன்’ படத்திலும் சரோஜாவின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் நடனமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன.

இவர் தனது சகோதரர் ஈ.வி.ராஜனுடன் இணைந்து, ஈ.வி.ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி 1963ஆம் ஆண்டில் ‘கொடுத்து வைத்தவள்’ என்ற படத்தையும் 1969இல் ‘தங்கச் சுரங்கம்’ என்ற படத்தையும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கொடுத்து வைத்தவள் படத்தில் எம்ஜிஆருக்கு இணையாக சரோஜாவின் நடிப்பு தரமாக அமைந்திருந்தது.இப்படத்தில் பித்தனாக விடும் எம்ஜிஆரை சந்தர்ப்பவசத்தில் மணந்து கொள்ளும் துர்ப்பாக்கியப் பெண்ணாக சரோஜா திறம்பட நடித்திருந்தார். எம்ஜிஆருடன் இவர் பாடும் ‘என்னம்மா சௌக்கியமா எப்படி இருக்குது மனசு’ என்ற பாடல், இவரை ரசிகர்களின் கண் முன்னே கொண்டு வரும் இனிமையானப் பாடலாகும்.

தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஏறத்தாழ 70 படங்களில் நடித்திருக்கும் சரோஜா, எம்ஜிஆருடன் நடித்திருந்த ‘கொடுத்து வைத்தவள்’ படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு இல்லத்தரசியாகவே தனது வாழ்நாளைக் கழித்தார்.பிரபல இயக்குநர் டி.ஆர். ராமண்ணாவுக்கு இரண்டாவது மனைவியான இவருக்கு நளினி என்ற பெயரில் ஒரே ஒரு மகள் உண்டு.சரோஜா 1974ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடமிருந்து கலைமாமணி விருது பெற்றார்.2002ஆம் ஆண்டில் முத்தமிழ் பேரவை சார்பில் ‘நாட்டிய செல்வி’ என்ற விருதையும், 2004ஆம் ஆண்டில் தமிழக அரசின் எம்ஜிஆர் விருதையும் சரோஜா பெற்றுள்ளார்.

Tuesday, October 17, 2023

தெரிந்த சினிமா தெரியாதா சங்கதி -83


   தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழித் திரைப் படங்களில் நடித்து  ரசிகர்களின் மனதில் இடம்  பிடித்தவர்  எஅஜசுலோசனா.

 ந . தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டாலும், படித்தது வளர்ந்தது, நடித்தது எல்லாமே தமிழகத்தில் தான். இவரது தாய்க்கு நடனம், இசையில் நல்ல ஆர்வம் இருந்ததால் 8வயதிலேயே ராஜசுலோசனாவுக்கு வாய்ப்பாட்டு, வயலின், சப்தஸ்வரம் என கற்றுக்கொடுத்தார்.

கதாநாயகி, குணசித்திரம், நகைச்சுவை, வில்லி பாத்திரங்களில் நடித்து  முத்திரை பதித்தவர். இரண்டாவது, மூன்றாவது கதாநாயகியானாலும் தனி முத்திரை பதித்து  ரசிகர்களைக் கவர்ந்தவர்.  கதாநாயகனுக்கு இணையான வில்லியாக நடித்து மிரட்டியவர்.

எம்ஜிஆர், சிவாஜி, தெலுங்கில் என்டிஆர், கன்னடத்தில் ராஜ்குமார் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்து தனது யதார்த்தமான அபார நடிப்பை வெளிப்படுத்தினார்.

1950களில் நடிக்க வந்த நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த நடிகை. இனிமையான குரலும், மென்மையாகப் பேசவும் தெரிந்த நடிகை. அவர் பேசும் வசனங்களே இதற்கு சாட்சி. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 15.8.1935ல் பிள்ளையார்சட்டி பக்தவச்சலம் நாயுடு, தேவகி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை பக்தவச்சலம் வெள்ளைக்காரன் காலத்தில் சென்னையில் ரயில்வேத்துறையில் பணிபுரிந்தார். பெற்றோர் இட்ட பெயர் ராஜீவ லோசனா. மழலை மொழியில் பள்ளியில் இவர் தன் பெயரை ராஜசுலோசனா என சொல்லவே அதுவே பெயரானது.

திரைப்படங்களில் திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா, பத்மினி இருவரும் ஆடுவதைப் பார்த்து தானும் அவர்களைப் போலவே நடனம் ஆட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே வளர்ந்தது. இதை அவரது பெற்றோரிடம் சொல்லவே மகளின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாமல் நாட்டியமும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

திருவல்லிக்கேணியில் லலிதா என்பவரிடம் நாட்டியத்திற்கான ஆரம்பப் பாடத்தைக் கற்றார். பத்மினி, வைஜெயந்திமாலாவை உருவாக்கிய கே.ஏ.தண்டபாணியிடம் பரதநாட்டியம் கற்றார். குச்சுப்புடி, கதகளி நடனங்களையும் அந்தந்த வல்லுநர்களிடம் கற்றுத் தேர்ந்தார்.

ராஜசுலோசனாவின் முதல் பரத நாட்டிய நிகழ்வு உச்ச நீதிமன்ற நீதியரசர் பி.எல். வெங்கட்ராமஅய்யர் தலைமையில் நடந்தது. ராஜசுலோசனாவுடன் நடனம் பயின்ற மற்றொரு மாணவி, நடிகை ‘ தாம்பரம் லலிதா.’ எம்.சி. சி. மைதானத்தில் லலிதா நாட்டியக் குழுவினரின் நிகழ்ச்சி. நடன மாது ஒருவர் வரவில்லை. ராஜசுலோசனா தன் தோழிக்குக் கால் கொடுத்தார். பாம்பாட்டியாகவும் , கிருஷ்ணராகவும் ஆடிப் பாடினார்.

அதை நேரில் கண்டு ரசித்தவர் கன்னட சினிமா இயக்குநர் சின்ஹா. ராஜசுலோசனாவை நடிக்கக் கூப்பிட்டார். வீட்டில் எதிர்ப்பு அணிவகுத்தது. ஆருடம் பார்த்தனர் பெற்றோர். ‘ஒப்பனை ஒளி வீசத் திரையில் மின்னுவார்’ என்றே அத்தனை பண்டிதரும் அடித்துச் சொன்னார்கள். ராஜசுலோசனாவின் முதல் படம் ஹொன்னப்ப பாகவதர்-பண்டரிபாய் நடிக்க, கன்னடத்தில் ‘குணசாகரி’ எனவும், தமிழில் ‘சத்தியசோனை’ எனவும் தயாரானது. மிகச் சிறிய வேடம். நடனம் ஆடவும் முடிந்தது

  1952ல் வந்த பராசக்தி படத்திலேயே ராஜசுலோசனா சிவாஜியின் தங்கை கல்யாணியாக நடிக்க வேண்டிய வாய்ப்பு கிட்டியது. ஆனால் அந்த சமயத்தில் அவர் கர்ப்பவதியாக இருந்ததால் அந்த வாய்ப்பு ஸ்ரீரஞ்சனிக்கு கொடுக்கப்பட்டது.

 ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான நால்வர் படத்தில் ராஜசுலோசனா அறிமுகமானார்.  தொடர்ந்து மாங்கல்யம், பெண்ணரசி ஆகிய படங்கள் ராஜசுலோசனாவை ரசிகர்கள் அனைவரும்; கவரும் வகையில் வெளியானது.1955ல் வெளியான பெண்ணரசி படத்தில் ஒரு நாட்டின் அரசியல் நிர்வாகத்திற்குள் ஊடுருவி நாட்டின் அமைதியைக் குலைத்துவிடும் நாட்டியக்காரி ஜீவாவாக பேர் சொல்லும்படியான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

1955ல் வெளியான டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான குலேபாகாவலியில் தன் வசீகரிக்கும் சிரிப்பாலும், சொக்க வைக்கும் பார்வையாலும் ரசிகர்களை இருக்கையை விட்டு எழ முடியாதவாறு கட்டிப்போட்டுள்ளார் டி.ஆர்.ராஜகுமாரி. அவருடன் காந்தக்கண்ணழகி ஜி.பரலட்சுமி நடித்துள்ளார்.

வில்லியாகவும், பி.எஸ்.வீரப்பாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். படத்தில் ஈ.வி.சரோஜா, சூரியகலா என இரு கதாநாயகிகள் இருந்தும் நாட்டியக்காரி ஜீவாவின் நடனத்தில் தான் ரசிகர்கள் அனைவருமே சொக்கிப்போனார்கள்.அப்போது அவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என அவரது வீட்டு வாசலில் ரசிகர்கள் வந்து குவிந்துள்ளனர். மர்மவீரன், அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா, எம்ஜிஆருடன் குலேபாகவாலி ஆகிய படங்களிலும் நடித்தார். சிவாஜியுடன் அம்பிகாவதி படத்தில் நடித்தார்.

டி.ஆர். ராமண்ணாவின் ‘குலேபகாவலி’யில் ராஜசுலோசனா முதன்முதலாக எம்.ஜி.ஆருடன் நடித்தார். ராஜசுலோசனா ஆடிப் பாடிய ‘என் ஆசையும் உன் நேசமும் ரத்த பாசமும்’ ‘குலேபகாவலி’யைக் கூடுதல் குஷிப்படுத்தியது. அதன் வெற்றியைத் தொடர்ந்து ராஜசுலோசனா இல்லாமல் சினிமாவே வராது என்ற நிலை.

1959 பொங்கல் வெளியீடு ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’. ஓஹோவென்று ஓடிற்று. ராஜசுலோசனாவை மேலும் பிரபலமாக்கியது. ‘அமுதும் தேனும் எதற்கு’ இரவுகளை சாஸ்வதமாக இனிக்கச் செய்கிறது. அண்ணாவின் ‘நல்லவன் வாழ்வான்’ திரைப்படத்தில் கவிஞர் வாலி எம்.ஜி.ஆருக்கு எழுதிய முதல் பாடலில் (சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்) ஆடிப்பாடும் வாய்ப்பு ராஜசுலோசனாவுக்குக் கிடைத்தது. அதன் மற்றொரு டூயட்டான ‘குற்றால அருவியிலே குளித்ததைப் போல் இருக்குதா’ பட்டிதொட்டிகளிலும் பட்டையைக் கிளப்பியது. 

“எம்.ஜி.ஆர். ஜோடியாக ராஜசுலோசனா நடித்த படம்    ‘நல்லவன் வாழ்வான்’ படம். மிக  குருகிய காலத்தில் எடுக்கப்பட்ட படம்.  படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார்கள். இரவு பகலாகப் படப்பிடிப்பு நடந்தது. நாள் முழுவதும் நடித்த அலுப்பு, விடியும் வரை தொடர்ந்தது.

பொலிஸ்  ராஜசுலோசனாவைத்  துரத்தும் காட்சியில் நிஜமாகவே மயங்கி விழுந்துவிட்டார். அவர்  கண் விழித்தபோது கையில் ஆவி பறக்கும் சூடான காபியுடன், முகத்தில் கவலையுடன்  எம்.ஜி.ஆர். நின்றார்.   

அடுத்து   டூயட் ஒன்று படமாவதற்காகக் காத்திருந்தது. முடியுமா...’ என  டைரக்டர் கேட்டதற்கு  ராஜ சுலோசனா ஓமெனத்தலயாட்டினார். எம்.ஜி.ஆர் தலையிட்டு  அன்ரு பாடல் காட்சியை   எடுக்க வேண்டாம் என்றார்.

ராஜசுலோசனாவுக்கு குணவதி - அடாவடிப் பெண் என இரு வேடங்களில் ‘கவிதா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியது மாடர்ன் தியேட்டர்ஸ்.

அதற்கு முக்கிய காரணம், அவர்களது 100 நாள் படமான ‘கைதி கண்ணாயிரம்’. அதில் ராஜசுலோசனா இடம் பெற்ற ‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்’ பாடல் பெற்ற வரவேற்பு.

‘படித்தால் மட்டும் போதுமா’- வெற்றிச் சித்திரத்தில் நடிகர் திலகத்தின் மனைவியாக ராஜசுலோசனாவின் குணச்சித்திர நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.

சிவாஜி குடித்துவிட்டு வந்து ராஜசுலோசனாவிடம்,

‘நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை’ - என்று உள்ளக் குமுறலை உதடுகளில் உயிரூட்டிப் பாடி நடித்திருப்பார்.

பெரிசுகள் இன்னமும் தங்கள் இதயத்தில் பச்சை குத்திக்கொண்ட காட்சி அது!

‘இதயக்கனி’யில் ராஜசுலோசனா ஏற்ற கொள்ளைக் கூட்டத் தலைவி வேடம் எவரும் எதிர்பாராதது.

ஜேம்ஸ்பாண்ட் ஜெய்யுடன் ராஜசுலோசனா மோதிய ‘துணிவே துணை’ எமர்ஜென்ஸி காலத்தில் வசூலில் முரசு கொட்டியது. ரஜினியுடன் ராஜசுலோசனா நடித்த ‘காயத்ரி’ பரபரப்பாக ஓடியது.

ராஜசுலோசனாவின் கடைசி தமிழ்ப் படம் வெள்ளிவிழா கொண்டாடிய டி.ராஜேந்தரின் ’எங்க வீட்டு வேலன்’.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று ஐந்து மொழிகளிலும் சொந்தக் குரலில் பேசி நடித்தவர் ராஜசுலோசனா.

பிரபல தெலுங்கு டைரக்டர் சி.எஸ். ராவ் - ராஜசுலோசனாவின் கணவர். இந்தியத் திரை உலகிலேயே தேவி,  என்று இரட்டைப் பெண் குழந்தைகளை ஈன்ற ஒரே நட்சத்திரத் தாய் ராஜசுலோசனா!

தண்டபாணிபிள்ளையின் மாணவியாக நடனக் கலையைப் பரிபூரணமாகக் கற்றவர். ஆந்திரத்தின் ‘குச்சுப்புடி’ உயர்வடைய ராஜசுலோசனாவின் பாதங்கள் பாடுபட்டன.

எழுபதுகளுக்குப் பின்னர் தெலுங்கிலும் தமிழிலும் முகம் சுளிக்கும் விதத்தில் ராஜசுலோசனா நடித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆயினும் சக கலைஞர்களால் ’நல்ல மனுஷி!’ என்று பாராட்டப்பட்டவரும் அவரே!

அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி. ராமாராவ், ஜெயலலிதா என்று ஐந்து முதல்வர்களுடனும் பணியாற்றியவர் ராஜசுலோசனா