Friday, June 24, 2022

எரிபொருள் வரிசையில் முட்டல் மோதல் மரணம்

உலகின் எங்கோ ஒரு மூலையில்  ஏதோ  ஒரு தேவைக்காக மக்கள் வரிசையில்   காத்திருந்ததை ஊடகத்தில் பார்த்து,கேட்டு,படித்த பின்னர் அனுதாபத்துடன் கடந்து சென்றோம். அப்படி ஒரு நிலை நமக்கு வரும் என கனவிலும் நாம் நினைத்துப் பார்த்திருக்கமாட்டோம்.இலங்கையின் பொருளாதாரத் தாக்கம் எம்மை அந்த வரிசையில் நிறுத்தியுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின்  இமாலய விலை உயர்வு  மக்களை வாட்டி வதைக்கிறது. பொருட்களின் விலை அதிகரித்தது என அறிந்ததும் ஈவு இரக்கமின்றி உடனடியாகப் பொருட்களின் விலையை  வியாபாரிகள் உயர்த்துகிறார்கள். மண்ணெண்னெய், பெற்றோல்,டீசல், எரிவாயு என்பன தாரளமாகக் கிடைத்தன. இன்று அவை காண்பதர்கு அரிய பொருட்களாக மாறிவிட்டன.பார்த்துக் கொண்டிருக்க  பொருட்களின் விலை விலை அதிகரித்தது.

பெற்றோல்,டீசல், மண்ணெண்னெய்  என்பனவற்றுக்காக வரிசையில் நின்று இதுவரை 13 பேர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரிசையில் காத்திருக்கும் போது மரணமானவர்,  மூன்று நாட்கள் வரிசையில் காத்தீருந்து  மண்ணெண்ணெயுடன் வீட்டுக்கு வந்து பரணமானவர், வரிசையில் நிற்கும் போது வாகனம் மோதி மாரணமானவர் என இந்தப் பட்டியல் தொடர்கிறது. மரனங்கள்  ஒரு புறம்  மனழுத்தம், களைப்பு என்பனவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்பாதிக்கப்பட்டவர்கள்  இன்னொரு புறம்.

பெற்றோலுக்காக மோட்டார் சைக்கிளுடன் காத்திருப்பவர்களின் தொகை நாடளவிய நீரியில் மிக அதிகமாக உள்ளது.  ஏமாற்றம் விரக்தி என்பனவற்றால் நிதானம் இழப்பவர்களால் வாய்த்தர்க்கம் , கைகலப்பு என்பன ஆங்காங்கே உருவாகின்றன. வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியபோது  இராணுவ வீரரால் தாக்கப்பட்ட பொலிஸ்காரர் காயமடைந்தார். நாட்டையும், மக்களையும் பாதுகாக்கப் புறப்பட்டவர்கள் தமக்குள் மோதுகிறார்கள்.  அரச  உத்தியோகஸ்தர் எள்ளி நகையாடப்பட்டதால் கிளிநொச்சியில் பெண் உப அதிபர் ஒருவர்  போராட்டம் செய்தார்.  பணிக்கு வருவதானால் எரிபொருள் வேண்டும் என அரச உத்தியோகஸ்தர்கள்  ஆர்ப்பாட்டம் செய்தனர். முல்லைத்தீவில் அமைதியை நிலைநாட்ட தாக்குதல் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம்   எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவ சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இடையில் புகுந்தவர்களுக்கு எரிபொருள்  கொடுத்ததைத் தட்டிக் கேட்டபோது  தலைக் கவசத்தால் தாக்கப்பட்டார்.

கலேவெல   எரிபொருள் நிரப்பு நிலையம்   போர்க்களமாக மாறியிருந்ததாக தென் பகுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக எரிபொருளை பெற்று வரும் பிரதேச மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் மகுலுகஸ்வெவ பொலிஸாருக்கு பல முறைப்பாடு செய்யப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில்23ம் திகதி பிற்பகல் எரிபொருள் விநியோகத்தின் போது குண்டர்கள் வந்து அப்பகுதி மக்களை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்காத வேளையில், பெண்கள் குழுவொன்று வந்து அந்தக் கும்பலைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.  பாதுகாப்புப் படையினரால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மந்திகை எரிபொருள் நிலயத்தில் குழப்பம் பிரதேச  செயலர் தலையிட்டு தீர்த்து வைத்தார். திருகோணமலையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்று கொள்வதற்கென பொதுமக்களுக்கு ஒருவரிசை, அரச உத்தியோகத்தர்களுக்கு ஒரு வரிசை, பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு ஒரு வரிசை என எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அரச உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் எவ்வாறு இப்படி எரிபொருளை விநியோகிக்க முடியும் என பொதுமக்கள் குழப்பம் செய்தனர். பொதுமக்களின் வரிசைகளை கவனத்திற்கொள்ளாது அரச உத்தியோகத்தர்கள் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம்  தெரிவிக்கின்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  வேலை செய்பவர்கலின் செல்வாகு காரணமாக  ஒரு சிலருக்கு தேவையான எரிபொருள் வழங்கப்படும்  குற்றச்சாட்டுகலும்  உள்ளன.  இது தொடர்பான வீடியோக்கள் பல உலவுகின்றன. அவற்றை ஆதாரமாக வைத்துக் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.  எரிபொருளுகான மாற்றுவழிகள் பல உள்ளன. அவற்றை அரசாங்கம் கண்டுகொள்ள வில்லை என்ற கருத்தும்  உள்ளது.

எரிபொருள் சிக்கலைத் தீர்க்க உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் முச்சக்கர வண்டி இலங்கையில்  உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் நிறுவனர் ஒரு ஜேர்மன் பெண் ஆவார். சுமார் 27 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த உலா மாஷ்பெர்க், இந்நாட்டின் சுற்றுச்சூழல் , இயற்கை அழகின் மீது கொண்ட நேசம் காரணமாக உனவடுனாவை வாழத் தேர்ந்தெடுத்தார்.

புதிய படைப்புகளை உருவாக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பர்களின் உதவியுடன் 'சேவ் எவர் ஸ்ரீலங்கா' என்ற அமைப்பையும் நிறுவியுள்ளார். தனது வடிவமைப்பு குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

“புள்ளிவிவரங்களின்படி தற்போது இலங்கையில் 1.3 மில்லியன் முச்சக்கர வண்டிகள் உள்ளன. சூரிய ஆற்றல் மற்றும் பிற இயற்கையான புதுப்பிக்கத்தக்க பொருட்களில் அவற்றை இயக்குவதே எங்கள் முயற்சியாகும். அப்போது டீசல், பெட்ரோல் பயன்பாடு நூறு சதவீதம் குறைக்கப்படும்.அரசாங்கம் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும். முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் நிறைய பணத்தை மீதப்படுத்த முடியும். அத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் அதிக அளவில் இருக்கும்.

இதை 'சோலார் மல்லி' என்கிறோம். சோலார் பேனல்கள் தயாரிப்பு உட்பட மற்ற அனைத்து பராமரிப்பு பணிகளையும் நாங்கள் செய்கிறோம். இப்போது எரிபொருளின் விலையால் சராசரி மனிதர்கள் கார் அல்லது மூச்சக்கர வாகனம் ஓட்டுவது கடினம்.

எரிபொருள் விலை உயர்வினால் முச்சக்கர வண்டி கட்டணங்களும் அதிகரிக்கின்றன. இதற்கு நல்ல தீர்வு எங்களுடைய 'சோலா டக் டக் மல்லி'. இதற்கு எரிபொருள் தேவையில்லை. சூரிய சக்தியில் இயங்கும் இந்த முச்சக்கர வண்டி ஜனாதிபதி, பிரதமர், கைத்தொழில் அமைச்சர் மற்றும் முப்படைத் தளபதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சோலார் மல்லிக்கு வீதியில் பயணிக்க அனுமதியில்லை.

எனவே, சோலார் மல்லி தேசியத் திட்டத்திற்கு அரசின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். சூரிய சக்தியில் இயங்கும் இந்த மூச்சக்கர வாகனத்திற்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளோம். எனினும், இதுவரை பெறப்படவில்லை. விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

பன்னீரை வெளியேற்றிய ஒற்றைத் தலைமைக் கோஷம்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் கடந்த  ஒரு வாரமாக  நிலவிய பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது.   எடப்படி பழனிச்சாமி,ஓ.பன்னீர்ச்செல்வம் அகியோரின்  இரட்டைத் தலைமையில் செயற்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல்களில் பலத்த தோல்விகளைச் சந்தித்தது. தோல்வியில் இருந்து  மீண்டு வருவதர்குறிய  திட்டங்கள் எதனையும் முன்னெடுக்காமல் கட்சித் தலைமையைக் கைப்பற்றுவதில் எடப்பாடி  வெற்றி பெற்று விட்டார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  இரட்டை தலைவர்களாக எடப்பாடியும், பனீரும் ஈபிஎஸ் இருந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கை அனுமதித்துக் கொண்டிருந்த எடப்பாடி, கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் கைப்பற்றிக் கொள்வதில் படுவேகம் காட்டினார். வட்டார, மாவட்ட தலவர்களாக எடப்படியின் ஆதரவாளர்கள் அதிகளவில் நியமிக்கப்பட்டனர். பன்னீரின் பக்கத்தில் இருந்தவர்கள் கடந்த மூன்று நாட்களில் எடப்பாடியின் பக்கம் சாய்ந்து விட்டனர். இத்தனைகும் எடப்பாடி அரசியல் சானக்கியன் அல்ல. தன்னை ஒரு தலைவராக அவர் நிரூபிக்கவில்லை. எடப்பாடி தரபினறின் ஆசைவார்த்தைகளும், பெட்டி மாரியமையும் -பின்னணியில் இருந்திருக்கலாம். ஜெயலலிதாவின்  மறைவின் பின்னர் எடப்பாடி ஆட்சி செய்தார். அப்போது பதவி பலம் இருந்தது. இப்போது எதிர்க் கட்சித் தலைவராக எடப்பாடி இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவருக்கு அண்ணாமலையும், அன்புமணியும் போட்டி போடுகிறார்கள்.

சென்னையில்  பொதுக்குழு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பொதுக்குழுவில் எடப்பாடியை பொதுச் செயலாளராக்க வேண்டும்  என்ற கோஷம்  முன் வைக்கப்பட்ட‌து. அந்த  கோஷம் விஸ்வரூபம் எடுத்து பன்னீருக்கு எதிரான கோஷமாக  உரு  மாறியது.  ஒற்றைத் தலைமை என்ற நிகழ்ச்சி நிரல் ஓங்கி ஒலித்தது. இதனால் பன்னீர் கொதித்துப் போனார். அதனை எதிர்ப்பதற்கு  சக பாடிகளுடன் கலந்துரையாடினார்.

 இதனை ஏற்றுக் கொள்ள முடியாதபன்னீர்ச்செல்வம் முதலில் பொதுக்குழுவுக்கு தடை கேட்டார்; பின்னர் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கேட்டார்.. பொலிஸுக்கும் போனார்; நீதிமன்ற படிகளிலும் ஏறினார்.. இது தொடர்பான வழக்கை விசாரித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் முதலில், பொதுக்குழு தீர்மானங்களில் தலையிட முடியாது என்றது; பின்னர் 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்றது.  இதனால் பன்னீர் தரப்பு ஆறுதலடைந்தது.

  இந்த பரபரப்புக்கு நடுவேகடந்த வியாழக்கிழமை   காலை அதிமுக பொதுக்குழு கூடியது. பொதுக்குழுவின் தொடக்கமாக அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவருமே தமிழ் மகன் உசேனை வழிமொழிந்தனர். அதிமுகவைப் பொறுத்தவரையில் பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்த அதிகாரம் கொண்ட பதவி அவைத்தலைவர். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு தர வேண்டும் என்பதில் முடிவெடுக்கக் கூடியவர்களில் அவைத் தலைவரும் ஒருவர். அவைத்தலைவர்தான் பொதுவாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களைக் கூட்டுவது அதிமுக மரபு.

ஓபிஎஸ்,ஈபிஎஸ் இருதரப்பும் ஏற்றுக் கொண்ட அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன். இதன்பின்னர்தான் காட்சிகளை திட்டமிட்டபடி அரங்கேற்றியது எடப்பாடி தரப்பு. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க முடியாது; நிராகரிக்கிறோம் என முதலில் சிவி சண்முகமும் பின்னர் கேபிமுனுசாமியும் அறிவித்தனர். இதில் கேபி முனுசாமி, முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர். உயர்நீதிமன்றத்தில் சொன்னபடி தீர்மானங்கள் பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்டது. ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் இதனை நிராகரித்துவிட்டனர். ஆகையால் நீதிமன்ற அவமதிப்பாகிவிடாது என்பது எடப்பாடி அணியின் கருத்து.

அத்துடன் நிற்காமல் அடுத்த அதிரடியாக  2190 உறுப்பினர்களின் கோரிக்கை மனு ஒன்றையும் சிவி சண்முகம் வாசித்தார்.2190 உறுப்பினர்கள் எண்ணிக்கை மற்றும் கோரிக்கை மனு ஆகியவற்றை அழுத்தம் திருத்தமாக சிவி சண்முகம் குறிப்பிடவும் காரணம் இருக்கிறது. பொதுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைதான் இது.. தீர்மானம் அல்ல என்கிற சட்ட விளக்கத்துக்காகவே இப்படி கூறினாராம் சிவி சண்முகம். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று, புதிய பொதுக்குழு ஜூலை 11-ல் கூடும் என முறைப்படி அறிவித்திருக்கிறார் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன். இதனை ஏற்க முடியாமல்தான்  பன்னீர்ச்செல்வமும், வைத்திலிங்கமும் வெளிநடப்புச் செய்தனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணப்பாளராக  இருந்தபோது கட்சியின் நலனுக்காக பனீர்ச்சேல்வம்  பல பிரச்சினைகளை பெரிது படுத்தவில்லை.   எடப்பாடி பழனிசாமி தரப்பு தமக்கான பலத்தை வலுவாக்கிக்கொண்டேதான் வந்தது. அதிமுகவின் வேட்பாளர் தேர்வு, சசிகலா விவகாரம், முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் பதவி என இத்தனை படிநிலைகளிலும் ஓபிஎஸ் தோற்றுக் கொண்டே வந்தார். இப்போது கடைசியாக ஒருங்கிணைப்பாளர் பதவியையும் பறிகொடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஓபிஎஸ்ஸை தள்ளிவிட்டிருக்கிறது எடப்பாடி கோஷ்டி. தொடக்கத்திலேயே ஓபிஎஸ் தரப்பு உஷாராகி இருந்திருந்தால் இத்தனை அவமானங்களையும் அத்தனை பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஓபிஎஸ் எதிர்கொள்ள நேரிட்டிருக்காது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீருக்கு எதிராக  ஜெயலலிதாவின் வழிவந்தவர்கள் கோஷம் போட்டனர். பன்னீரின்  மீது  போத்தல் வீசப்பட்டது. பன்னீர்  முதலமைச்சராக இருந்தபோது கூழைக் கும்பிடு போட்டவர்கள்  இப்போ குத்துக் கரணம் அடித்து அவரை வ் எளியேறுமாறு ஆவேசத்துடன் கூக்குரலிட்டனர்.

ஒருங்கிணைப்பாளரும் ,துணை ஒருங்கிணைப்பாளரும் ஒரு கதிரை தள்ளி அமர்ந்திருந்தனர்.  ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை. அண்ணன் என பன்னீரை வாஞ்சையுடன் அழைத்தவர்கள்  மறுபுறம் திரும்பினர். ஆனால் ஜெயலலிதா காலத்தில் அவருக்கு அடுத்த இடத்தில் வைத்து அழகு பார்க்கப்பட்ட தான் அதே தொண்டர்கள் நிர்வாகிகளால் இப்படி அவமானப்படுத்தப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்ட மண்டபத்துக்கு ஓபிஎஸ் வந்த போது, ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோஷம் உறுப்பினர்கள் தரப்பில் எழுப்பப்பட்டது. மேலும், ஓபிஎஸை முன்னாள் அமைச்சர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் மேடையில் ஏறிய சிறிது நேரத்திலேயே தொண்டர்கள் எதிர்ப்பு காரணமாக கீழே இறங்கினார்.

இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் முட்டல் மோதல்கள், பஞ்சாயத்துகள், உச்சகட்ட சலசலப்புகளுக்கு இடையே அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் இன்று கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனை ஓபிஎஸ் முன்மொழிய இபிஎஸ் வழிமொழிய , நிரந்த அவைத்தலைவர் என குறிப்பிட்டார் கே.பி.முனுசாமி. இதற்கு பொதுக்குழு உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக கட்சி பதவியை கைப்பற்றியுள்ளார்.

அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்ட பின்பு, அவரிடம் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அடுத்த பொதுக்குழு கூட்ட தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். தற்போதைய நிலவரப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களாக எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்தான் தொடர்கின்றனர்.

 அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் அறிவிக்கப்பட்ட பின்பு, அவரிடம் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அடுத்த பொதுக்குழு கூட்ட தேதியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்தார். தற்போதைய நிலவரப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களாக எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகியோர்தான் தொடர்கின்றனர்.

அரசு பேருந்து ஓட்டுநராக இருந்த போது எம்ஜிஆர் கட்சியைவிட்டு நீக்கப்பட்டதை அறிந்து பேருந்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு எம்ஜிஆருக்கு ஆதரவு அளித்தவர் தமிழ்மகன் உசேன். அதன் பின்னர் பல ஆண்டுகள் கட்சிக்காக உழைத்துள்ளார். எம்ஜிஆர் மன்றத்திலேயே நீண்டகாலம் பணியாற்றி வந்த தமிழ்மகன் உசேன், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுசூதனன் மறைவிற்குப் பிறகு தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் நடுநிலை வகித்து வந்த அவர் பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்குவரை அறிந்து அவரது தரப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போதைய சூழலில் பொதுக்குழு கூட்டம் யாருக்கு லாபமோ இல்லையோ தமிழ்மகன் உசேன் எனக்கு நூறு சதவீதம் லாபம் தான்.

பல்வேறு கட்ட போராட்டங்கள், சர்ச்சைகள், தீர்ப்புகளுக்குப் பிறகு தொடங்கிய அதிமுக பொதுக் குழு அதே வேகத்திலேயே ஒரு முடிவின்றி முடிக்கப்பட்டிருக்கிறது. சட்டரீதியாக எடப்பாடி பழனிசாமி பதவியேற்காத நிலையில் , ஓபிஎஸ் நினைத்ததும் ஓரளவு நடந்திருக்கிறது. ஆனால் சத்தமில்லாமல் நிரந்தர அவைத் தலைவராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் தமிழ் மகன் உசேன்.

ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்றியதற்குப் பிறகு அதிமுக வரலாற்றில் இப்படி ஒரு பொதுக்குழு கூட்டத்தை தொண்டர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு தண்ணீர் பாட்டில் வீச்சு, பஞ்சய் செய்யப்பட்ட டயர் என அல்லோலகல்லப்பட்டு முடிந்திருக்கிறது.

 

உலகக்கிண்ண போட்டிக்கான 1.2 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை


 கட்டாரின் நவம்பர் மாதம் நடைபெற உள்ள  உலகக்கிண்ண உதைபந்தாட்டப்   போட்டிக்கான   1.2 மில்லியன் டிக்கெட்டுகள்  விற்பனை செய்யப்பட்டதாக  கட்டார் உலகக் கிண்ணப் போட்டியின்    தலைமை அமைப்பாளர்  ஹசன் அல்-தவாடி புதனன்று தெரிவித்தார். 

80,000 இருக்கைகள் கொண்ட லுசைல் ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளுக்கு ஐந்து மில்லியன் கோரிக்கைகள் வந்துள்ளதாக பீபா  தலைவர் கியானி இன்ஃபான்டினோ கூறினார். மதிதிய கிழக்கின் முதலாவது உலகக்கிண உதைபந்தாட்டப் போட்டி இதுவாகும். 

ஆன்லைன் விற்பனையின் இரண்டு கட்டங்களிலும் சுமார் 40 மில்லியன் டிக்கெட் கோரிக்கைகள் இருந்ததாக ஏற்பாட்டுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் இரண்டு மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்படும், மற்றொரு மில்லியன் உலக அமைப்பு பீபா,  ஆனுரசணையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

சுமார் 2.4 மில்லியன் மக்கள்தொகை கொண்ட டோஹா, பார்வையாளர்களின் பெரும் வருகைக்கு தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்கிறது. 32 அணிகள் கொண்ட போட்டியானது தலைநகரிலும் அதைச் சுற்றியுள்ள எட்டு மைதானங்களில் நடைபெறும், இது உள்கட்டமைப்பில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பயணக் கப்பல்கள் ,பாலைவன முகாம்களில் 130,000 அறைகள் இருக்கும் என்று கட்டார் கூறுகிறது, அங்கு 1,000 கூடாரங்கள் இருக்கும். இது ஒரு இரவுக்கு $85க்கு மட்டுமே பகிரப்பட்ட அறைகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

கிளாம்பிங் இருக்கும்," என்று இன்ஃபான்டினோ மன்றத்தில் கூறினார், உயர்மட்ட முகாம் பற்றி குறிப்பிடுகிறார். பாரம்பரிய, பெடோயின் பாணி கூடாரங்களில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இருக்கும், ஆனால் ஏர் கண்டிஷனிங் இல்லை.

ஆன்லைன் விற்பனையின் இரண்டு கட்டங்களிலும் சுமார் 40 மில்லியன் டிக்கெட் கோரிக்கைகள் இருந்ததாக ஏற்பாட்டுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் இரண்டு மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்படும், மற்றொரு மில்லியன் உலக அமைப்பு பீபா,  ஆனுரசணையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 


 சுமார் 2.4 மில்லியன் மக்கள்தொகை கொண்ட டோஹா, பார்வையாளர்களின் பெரும் வருகைக்கு தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்கிறது. 32 அணிகள் கொண்ட போட்டியானது தலைநகரிலும் அதைச் சுற்றியுள்ள எட்டு மைதானங்களில் நடைபெறும், இது உள்கட்டமைப்பில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பயணக் கப்பல்கள் ,பாலைவன முகாம்களில் 130,000 அறைகள் இருக்கும் என்று கட்டார் கூறுகிறது, அங்கு 1,000 கூடாரங்கள் இருக்கும். இது ஒரு இரவுக்கு $85க்கு மட்டுமே பகிரப்பட்ட அறைகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

கிளாம்பிங் இருக்கும்," என்று இன்ஃபான்டினோ மன்றத்தில் கூறினார், உயர்மட்ட முகாம் பற்றி குறிப்பிடுகிறார். பாரம்பரிய, பெடோயின் பாணி கூடாரங்களில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இருக்கும், ஆனால் ஏர் கண்டிஷனிங் இல்லை.

"தங்குமிடம் ஒரு கவலை இல்லை,"    இங்கேயும், அண்டை நாடுகளிலும் போதுமான தங்குமிடங்கள் தயாராக இருக்க எல்லாம் செய்யப்பட்டுள்ளது " என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு நாளைக்கு 160 க்கும் மேற்பட்ட சுற்று-பயண ஷட்டில் விமானங்கள் அண்டை நாடுகளில் இருந்து ரசிகர்களைக் கொண்டு வரும், தங்குமிடத்தின் மீதான அழுத்தத்தை எளிதாக்கும், அதே நேரத்தில் டோஹாவின் இரண்டு சர்வதேச விமான நிலையங்களில் திறன் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, உலகக் கிண்ணப் போட்டியின் போது, போட்டிக்கான டிக்கெட்டுகள் உள்ளவர்கள் மட்டுமே, வாயு நிறைந்த சிறிய நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் அல்-தவாடி தங்குமிட விலைகளில் "தந்திரமான"  அதிகரிப்பை ஒப்புக்கொண்டார், அவை தேவைக்கு ஏற்ப உயர்ந்து வருகின்றன. விலைவாசி உயர்வைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர். "வெளிப்படையாக சந்தை சக்திகள் எப்போதுமே தேவை அதிகமாக இருக்கும் வரை விலைகள் உயரும். வணிக சமூகம் பயன்பெறும் சூழலை உருவாக்க முயற்சிக்கிறோம், ஆனால் அதே நேரத்தில், அது மலிவு விலையிலும் தங்குமிடங்கள்  இருக்கும்." என்றார்.

கட்டாரில் வெளிநாட்டு தொழிலாளர்களை நடத்துவது மற்றும் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் பற்றிய நிலையான விமர்சனங்களைத் தொடர்ந்து, அல்-தவாடியும் கட்டாரில் எதிர்ப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை நிராகரித்தார். கட்டாரில் ஆர்ப்பாட்டங்கள் நடப்பது அரிது.

"எல்லோரும் வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைப் பாராட்டுவதில், எங்களிடம் மிகவும் வளமான கலாச்சாரம் உள்ளது. மக்கள் எங்கள் கலாச்சாரத்தை மதிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறினார். சிறிய மீறல்களுக்காக ரசிகர்கள் கைது செய்யப்படலாம் என்ற கவலையையும் இன்ஃபான்டினோ நிராகரித்தார். பழமைவாத நாட்டில் பொது இடங்களில் மது அருந்துவதும் குற்றமாகும்.

"நிச்சயமாக மக்கள் தெருக்களில் சண்டையிடத் தொடங்கினால் அவர்கள் எதையாவது அழித்துவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள், மேலும் இது பொதுவாக உலகக் கிண்ணப் போட்டிகளில் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை," இன்ஃபான்டினோ கூறினார்.

 

Thursday, June 23, 2022

105 வயதில் 100 மீற்றர் போட்டியில் பாட்டி சாதனை

 

குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்ற தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் 105 வயது மூதாட்டி ராம்பாய் என்பவர் கலந்து கொண்டி ஓடியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

85 வயதுக்கு மேற்பட்டோருக்கான போட்டியில் தனிநபராக கலந்து கொண்டு ராம்பாய் அசத்தியுள்ளார். 45.40 வினாடிகளில் 100 மீற்றர் இலக்கை 105 வயதில் எட்டி அவர் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும் அவர் 200 மீட்டர் ஓட்டத்தில் 1 நிமிடம் 52.17 வினாடிகளில் இலக்கை கடந்து அசத்தினார்.

எனக்கு இது ஒரு பெரிய உணர்வைத் தருகிறது. மீண்டும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள விரும்புகிறேன்என்றார் ராம்பாய்.இந்த வயதிலேயே சாதிக்கிறீர்களே ஏன் சிறுவயதில் கலந்துக் கொண்டு சாதனை படைத்திருக்கலாமே என்று அந்த மூதாட்டியிடம் கேட்டதற்கு, “நான் ஓடத் தயாராகவே இருந்தேன் யாரும் வாய்ப்புக் கொடுக்கவில்லைஎன்றார்.

இந்தப் பந்தயத்தின் நட்சத்திர மூதாட்டி வீராங்கனையான இவரை மூதாட்டி உசைன் போல்ட் என்று செல்லமாக அழைக்கின்றனர்.

தன் 105 வயது இளமையின் ரகசியம் பற்றி ராம்பாய் கூறும்போது, நாளொன்றுக்கு 250 கிராம் நெய், 500 கிராம் தயிர், அரைலீற்றர் சுத்தமான பால் நாளொன்றுக்கு இருமுரை இவரது உணவு. தான் அதிகமாக அரிசி சாதம் எடுத்துக் கொள்வதில்லை என்றார்.

சாதாரண நாளில் 3 கிமீ வரை ஓடுவாராம் இந்த 105 வயது உசைன் போல்ட் ராம்பாய், இவரது வலுவுக்குக் காரணம் கிராமத்து உணவு தானியமே என்கிறார் அவரது பேத்தி ஷர்மிலா சங்வான்

Tuesday, June 21, 2022

வழக்கறிஞரான முன்னாள் கப்டன்

 கிரிக்கெட் வீரர்கள் பலர் சடுதியில் தங்கள்   முடிவுகளை மாற்றி விடுவார்கள், ஏகலைவா திவேதி என்ற ஒரு விக்கெட் கீப்பர் துடுப்பாட்டவீரர்  இவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 43 முதல் தர கிரிக்கெட், 36 குறைந்த ஓவர் லிஸ்ட் கிரிக்கெட், 47 ரி20 போட்டிகளில் 2008முதல்ல் 2018 வரை ஆடி திடீரென வக்கீல் தொழிலைத் தேர்வு செய்து இப்போது ரிஷப் பண்ட் தொடர்பான வழக்கு ஒன்றை இவர்தான் கையிலெடுத்துள்ளார்.

அலகாபாத்தில் 1988-ல் பிறந்தவர் ஏகலைவா திவேதி, 2008-ல் விஜய் ஹசாரே டிராபியில் முதன் முதலில் .பி. அணிக்காக அறிமுகமானார். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் நவம்பர் 2010 இல் ஒடிசாவுக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தை விளையாட, உத்தரப் பிரதேச ரஞ்சி அணியில் இடம்பிடித்தார். 2016 ஆம் ஆண்டில்,   ஏக்லைவா திவேதி சையத் முஷ்டாக் அலி டிராபியில்  9 ஆட்டங்களில் 258 ஓட்டங்கள் எடுத்தார்,

அந்த சீசனில் .பி.க்காக அதிக ஓட்டங்கள் எடுத்தவர். ஒரு நல்ல சீசனின் பின்னணியில், அவர் குஜராத் லயன்ஸிடம் இருந்து ரூ 1 கோடி மதிப்பிலான ஐபிஎல் ஒப்பந்தத்தைப் பெற்றார், அறிமுக சீசனில் 4 போட்டிகளில் விளையாடினார்.

முழுநேர வழக்கறிஞராக தனது கவனத்தை மாற்றுவதற்கு முன், அவர் 43 முதல்தர விளையாட்டுகள், 36 பட்டியல் A மற்றும் 47 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் நீண்ட வடிவத்தில் 3 சதங்கள் உட்பட 3000 ஓட்டங்களுக்கு மேல் அடித்தார். அவர் உத்தரபிரதேசத்துக்காக முதல் தரத்தில் அதிவேக சதம் அடித்தவர், வெறும் 70 பந்துகளில் சதமெடுத்தார். மேலும் 21 பந்துகளில் அதிவேக லிஸ்ட் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இரண்டும் ரயில்வேக்கு எதிராக.

குஜராத் லயன்ஸ் தவிர, அவர் சென்னை சூப்பர் கிங்ஸ், புனே வாரியர்ஸ் இந்தியா மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியவற்றில் விளையாடினார்.

இவர் நியூஸ் 18 கிரிக்கெட் நெக்ஸ்ட் ஆன்லைன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தன் முடிவு குறித்து கூறும்போது, “இது ஒரு கதை. நான் சிறிது காலம் கிரிக்கெட் விளையாடினேன், நீங்கள் அறிந்திருப்பீர்கள். அடிப்படையில், எனக்கு சட்டத்தில் குடும்பப் பின்னணி உள்ளது. வேலை செய்ய எனக்கு ஒரு அடித்தளம் இருந்தது; தொடங்குவதற்கும், கிரிக்கெட்டில் இருந்து சட்டத்திற்கு மாறுவதற்கும் எனக்கு ஒரு நல்ல அடித்தளம் இருந்தது.

கிரிக்கெட் விளையாடுவதன் நோக்கமே நாட்டுக்காக விளையாடுவேன் என்பதுதான். அதற்குள் எனக்கு ஏற்கனவே முப்பது வயதாகிவிட்டதால் வாய்ப்பு  நழுவியது மேலும், எம்எஸ்   இன்னும் விளையாடிக் கொண்டிருந்ததையும் பார்த்தபோது, ரிஷப் பண்ட்டும் இந்திய அணிக்குள் வருகிறார் எனும்போது நம் வாய்ப்பு சீல் வைக்கப்பட்டதாகி விட்டது.

எனவே, எனது தொழில் வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை நான் கணக்கிட வேண்டியிருந்தது. நான் இன்னும் 4-5 வருடங்கள் உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் விளையாடியிருக்கலாம், ஆனால் அப்போது கிரிக்கெட்டில் இருந்து சட்டத்திற்கு மாறுவது எனக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும். இன்னும் நேரம் இருக்கும்போது, நான் என் தொழிலை மாற்றினால்தான் உண்டு என்று மாற்றிவிட்டேன்.

கிரிக்கெட்டுக்குப் பிறகு, நான் அதைச் செய்தேன் (சட்டத்தைத் தொடர்ந்தேன்). நான் இந்தியாவில் இருந்து 2018 இல் எல்எல்பி முடித்தேன். நான் தற்போது சுதந்திரமாக வேலை செய்து வருகிறேன், அதே நேரத்தில் இங்கிலாந்தில் இருந்து சர்வதேச வர்த்தக மற்றும் பெருநிறுவன சட்டங்களில் முதுகலைப் பட்டம் பெற்று வருகிறேன்.

இப்போது ரிஷப் பண்ட்டை ரூ.1.63 கோடி மோசடி செய்தவருக்கு எதிரான வழக்கில் ரிஷப் பண்ட் சார்பாக நான் தான் இறங்கியிருக்கிறேன்என்றார் ஏக்லைவ திவேதி