Friday, July 31, 2020

மாலவியில் கர்ப்பமான 7 ஆயிரம் மாணவிகள்

 

கொரோனா பாதிப்பு காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ள இந்த நேரத்தில் 7000க்கும் அதிகமான மாணவிகள் கர்ப்பமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் பல மாணவிகள் வயது 10ல் இருந்து 14 வயதுக்குள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந்த தகவலை அரசு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டது. இதன்பின்னரே மாணவிகள், சிறுமிகள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளது.பலோம்பே  நகரில் மட்டும் இந்த காலக்கட்டத்தில் 1000 சிறுமிகள் கருத்தரித்துள்ளனர்.

கல்வி தொடர்பான சிவில் சொசைட்டி கூட்டணியின் இயக்குனர் பெனடிக்டோ கோண்டோவ் கூறுகையில், கொரோனா தொற்றுநோய் நாட்டின் இளம் பெண்களின் வாழ்க்கையை மோசமாக பாதித்துள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் பாலின அடிப்படையிலான வன்முறை, சுரண்டல் மற்றும் இளம் பருவ சிறுமிகளுக்கு எதிரான பிற வகையான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன என கவலை தெரிவித்துள்ளார்.மாலவி நாட்டில் இதுவரை 3,700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதுபோல் கென்யா அதிகாரிகள், ஜூலை தொடக்கத்தில், கொரோனா ஊர்டங்கின்  போது சிறுமிகள் கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது என  அறிவித்தனர், இதில் 150,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊர்டங்கின் மூன்று மாதங்களில், 152,000 கென்ய சிறுமிகள் கர்ப்பமாகிவிட்டனர், இது மாத சராசரியில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

கென்யா உலகின் மிக அதிகமான சிறுமிகள்  கர்ப்ப விகிதங்களில் ஒன்றாகும், இங்கு 1,000 பேரில்  82 சிறுமிகள் கர்ப்பம் தரிக்கின்றனர்.

99 வயது பாட்டி விமானத்தை இயக்கி கின்னஸ் சாதனை

ரோபினா ஆஸ்தி என்ற 99 வயது பாட்டி உலகின் மிக வயதான விமான பயிற்சியாளராகவும், விமானியாகவும் தனது நிலையை உறுதிப்படுத்தி இருக்கிறார். இது கின்னஸ் சாதனையாக அமைந்துள்ளது.  

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ரிவர்சைட் என்ற இடத்தில் ரோபினா ஆஸ்தி என்ற 99 வயது பாட்டி, விமானம் ஓட்டுவது தொடர்பான பாடத்தை பல்லாண்டு காலமாக கற்பித்து வந்தார். இவர் விமான ஓட்டிகளுக்கான பயிற்சியாளராக தனது கடைசி பாடத்தை இப்போது நடத்தி முடித்து உள்ளார்.

அப்போது அவர் விமானத்தை இயக்கியும் காட்டி உள்ளார். இதன்மூலம் உலகின் மிக வயதான விமான பயிற்சியாளராகவும், விமானியாகவும் தனது நிலையை உறுதிப்படுத்தி இருக்கிறார். இது கின்னஸ் சாதனையாக அமைந்துள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்காவின் அயோவா மாகாணத்தை சேர்ந்த 98 வயதான ஆண்தான் உலகின் வயதான விமான பயிற்சியாப்பாளர், விமானி என்ற சாதனையை வைத்திருந்தார்.அந்த சாதனையை இப்போது ரோபினா ஆஸ்தி முறியடித்துள்ளார். அவரை அவரது மாணவர்கள் பாராட்டினர்.

பிராண்டன் மார்டினி என்ற மாணவர் இதுபற்றி கூறுகையில், “1000 மணி நேரத்தில் நான் கற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை ரோபினா ஆஸ்தி எனக்கு கற்று தந்துள்ளார் என குறிப்பிட்டார்.

Wednesday, July 29, 2020

500 விக்கெட் வீழ்த்தி ஸ்டூவர்ட் பிராட் சாதனை

மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளான நேற்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், கிரேக் பிராத்வெய்ட்டின் (19 ஓட்டங்கள்) விக்கெட்டை எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தினார். இது ஸ்டூவர்ட் பிராட்டின் 500-வது டெஸ்ட் விக்கெட் (140-வது போட்டி) ஆகும். இதன் மூலம் இந்த இலக்கை கடந்த பந்து வீச்சாளர்களின் வரிசையில் 7-வது வீரராக ஸ்டூவர்ட் பிராட் இணைந்துள்ளார். மேலும் இந்த மைல்கல்லை குறைந்த வயதில் எட்டிய 2-வது பந்து வீச்சாளர்  என்ற பெருமையையும் பெற்றார். பிராட்டின் தற்போதைய வயது 34 ஆண்டு 32 நாட்கள். இலங்கை சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன் அவரை விட குறைந்த வயதில் (31 ஆண்டு 334 நாட்கள்) சாதித்த வீரர் ஆவார். 

டெஸ்ட் போட்டியில் பிராட்டின் பந்து வீச்சில் அதிக முறை வீழ்ந்தவர்கள் அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் (12 முறை), மைக்கேல் கிளார்க்கும் (11 முறை) என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். சாதனை நாயகன் பிராட்டை வெகுவாக பாராட்டியுள்ள சக வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன், அவர் தொடர்ந்து இதே போன்று பந்து வீசினால் தனது விக்கெட் எண்ணிக்கையை கடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். டெஸ்ட் வரலாற்றில் 500 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் விவரம் வருமாறு:-

 

 முதலிடத்தில் இலங்கை வீரர் முரளிதரன் இருக்கிறார். 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகலை வீழத்தியுள்ளார். அவுஸ்திரேலிய வீரர் ஷேர்ன் வோர்ன் 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுளார். 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் அனில் கும்ளே 619 விக்கெட்டுகளையும், 153 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இக்கிலாந்து வீரர் ஜேம்ஸ் அண்டர்சன் 589 விகெட்டுகளையும், 124 போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலிய வீரர் மெக்ராத்563 விக்கெட்டுகளையும்,132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மேற்கு இந்திய வீரர் வால்ஸ் 519 விக்கெட்டுகளையும், 140 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இக்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 501 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பிராட் என்றதுமே இந்திய ரசிகர்களுக்கு பிராடைவிட நினைவுக்கு வருபவர் யுவராஜ் சிங்தான். 2007 ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் பிராட்டின் ஒரு ஓவரின் 6 பந்துகளையும் சிக்ஸர்களாக்கி சாதனை படைத்தார் யுவராஜ் சிங். ஒரு சர்வதேசப் போட்டியில், அதுவும் ஒரு உலகக்கிண்ணப் போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களைக் கொடுத்தவரின் மனநிலை எப்படியிருந்திருக்கும்? எவ்வளவு மன அழுத்தம் கூடியிருக்கும், அதுவும் 21 வயது இளைஞனுக்கு இந்த மரண அடிகளையெல்லாம் தாங்கும் வலிமை இருந்திருக்குமா, தூக்கத்தில் எல்லாம் யுவராஜ் அடித்த சிக்ஸர்கள்தானே ஞாபகத்தில் வந்திருக்கும். ஆனால், சிக்ஸர்களால் மிரட்டப்பட்டவன், பீஸ் பீஸாகக் கிழிக்கப்பட்டவன்தான் இன்று 500 விக்கெட்டுகளோடு நம்மைப் பார்த்து புன்னகைக்கிறான்.

 

இன்று 500 விக்கெட்டுகளைக் கடந்து வெற்றிகரமான  பந்துவீச்சாளராக மாறியிருப்பதற்குப் பின்னால் பிராடின் கடுமையான உழைப்பு இருக்கிறது. அதேபோல் இங்கிலாந்து அணி நிர்வாகத்தின் உதவியும் இருக்கிறது. 2007 செப்டம்பரில் ரி20 உலகக் கிண்ணப் போட்டியோடு ஸ்டூவர்ட் பிராடை கைவிடுடவில்லை இங்கிலாந்து அணி நிர்வாகம். அந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இலங்கைக்கு எதிரான தொடருக்கு பிராடை அழைத்துச்சென்றது இங்கிலாந்து. பிராடின் டெஸ்ட் அறிமுகம் இலங்கையில்தான் நடந்தது.