Sunday, June 28, 2009

திரைக்குவராதசங்கதி 12


இலட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றவர்எஸ். எஸ். ராஜேந்திரன். இவரை எஸ்எஸ். ஆர். என்று அன்புடன் அழைப்பார்கள். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும்அருமையானது. நடிகர் திலகத்துக்குஇணையாக வசனம் பேசி நடிக்கும் திறமை உள்ளவர் எஸ். எஸ். ஆர்.எஸ். எஸ். ஆரும் எம்.ஜி. ஆரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். திராவிடமுன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய மக்கள் திலகம் அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம் என்ற அரசியல்கட்சியை ஆரம்பித்த போது அவருடன்இணைந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபட்டதுடன்அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தின் சார்பில் சட்டசபைத் தேர்தலில்நின்று வெற்றிபெற்றவர்.லேனா செட்டியார் என்பவர் "ராஜா தேசிங்கு' என்ற படத்தைத் தயாரிக்கத் திட்ட
மிட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகவும் நாட்டியப் பேரொளி பத்மினி கதாநாயகியாகவும் நடிப்பது என்றுமுடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரின் நண்பனாக என்.டி. ராமராவும் அவரது ஜோடியாக பானுமதியும் நடிப்பது எனவும் தயாரிப்பாளர் திட்டமிட்டார்."ராஜா தேசிங்கு' படத்துக்கு கவியரசு
கண்ணதாசன் வசனம் எழுதினார். கவியரசு கண்ணதாசனின் வசனங்களைப்படித்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்வாய்விட்டுச் சிரித்தார். அரச பட
மான "ராஜா தேசிங்தில்' கலைவாணர்வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய வசனம்என்ன இருக்கும் என்று தயாரிப்பாளர்யோசித்தார்.கவியரசரின் இந்த அழகான
தமிழ் வசனத்தை என்.டி. ராமராவ்பேசினால் அலங்கோலமாகிவிடும். எஸ். எஸ். ஆர். நடித்தால்சிறப்பாக இருக்கும் என்று கலைவாணர் கூறினார். தயாரிப்பாளர்எஸ். எஸ். ஆரை அழைத்து எம்.ஜி.ஆரின் படைத் தளபதியும், நண்பனுமான மகமத்கான் வேடத்தில் நடிக்க சம்மதமா எனக்கேட்டார். எம்.ஜி. ஆருடன்நடிக்க யாருக்குத்தான் விருப்பம்இருக்காது. எஸ். எஸ். ஆர். உடனே சம்மதம் தெரிவித்து விட்டார்.எம்.ஜி. ஆருடன்நடிக்க பலரும் போட்டி
போடும் அதேவேளைபானுமதியுடன்இணைந்து நடிக்க எம்.ஜி.ஆர். விருப்பப்படமாட்டார். எம்.ஜி.ஆர்., பானுமதி, எஸ். எஸ். ஆர்., பத்மினி என இருக்கட்டும்
என்று எம்.ஜி.ஆர் யோசனை கூறினார்.படப்பிடிப்புத் தளத்துக்குவந்த பானுமதிதனது ஜோடி எஸ்.எஸ்.ஆர். என அறிந்ததும் சத்தம் போட்டார்."ரங்கூன் ராதா' என்றபடம் வெளியாகி மிகப் பரபரப்பாகஓடிக்கொண்டிருந்த நேரமது. அதில் கதாநாயகனாக நடிகர் திலகம் நடித்தார். நடிகர்திலகத்தின் ஜோடியாக பானுமதி நடித்தார். பானுமதியின் மகனாக எஸ். எஸ்.ஆர். நடித்திருந்தார். கலைஞர் கருணாநிதிதயாரித்த அப்படம் பெரு வெற்றிபெற்றது."ரங்கூன்ராதா' படத்தில் எனக்கு மகனாகநடித்த எஸ். எஸ். ஆருக்கு ஜோடியாக நடிக்க முடியாதென பானுமதி மறுத்துவிட்டார்.
பானுமதியின் கோபத்தைப் பற்றி படஉலகம் நன்கு அறிந்திருந்தது. தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் அனைவரும்அவரை எதிர்த்து பேசத் தயங்குவார்கள்.
எஸ். எஸ்.ஆருடன் ஜோடியாக நடிக்கமுடியாது என்று பானுமதி சத்தமாகப்பேசினார். நிலைமையை உணர்ந்த எஸ்.எஸ்.ஆர். தயாரிப்பாளரிடம் சென்று
எம்.ஜி.ஆரின் ஜோடியாக பானுமதி நடிக்கட்டும் என்றார். என்.எஸ்.கிருஷ்ணனுக்குஇப்பிரச்சினையைப் பற்றி தயாரிப்பாளர்அறிவித்தார். என். எஸ். கிருஷ்ணன் ஸ்டூடியோவுக்குச் சென்று எல்லோரையும்சமாதானம் செய்தார். அதன் பின்னர்படப்பிடிப்பு ஆரம்பமானது.கலைஞரின் "காஞ்சித் தலைவன்' படத்தில்
எம்.ஜி.ஆரும் பானுமதியும் ஜோடிசேர்ந்தார்கள். எம். ஜி.ஆரின் தங்கையானவிஜயகுமாரியை காதலிக்கும் பாத்திரத்தில்எஸ். எஸ். ஆரை நடிக்க வைக்க
விரும்பியதால் எம்.ஜி. ஆரின் மூலம்தூதுவிட்டார் கலைஞர்."காஞ்சித் தலைவன்' படப்பிடிப்பு நடைöபற்றுக் கொண்டிருக்கையில் கலைஞருக்கு
ம், எம்.ஜி.ஆருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் இடையில் இணைப்புப் பாலமாகஎஸ். எஸ். ஆர் செயற்பட்டார்.

மதில் மேல் பூனையாக காத்திருக்கும் பா.ஜ.க


இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாறும் என்று வீராப்புப் பேசிய டாக்டர் ராமதாஸ் தனது சுருதியைக் குறைத்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான குற்றச் சாட்டுகளை குறைத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை டாக்டர் ராமதாஸ் மிக மோசமாக விமர்சித்த போது பொறுமை இழந்த முதல்வர் கருணாநிதி, டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றினார். கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டதையிட்டு கொஞ்சமும் கவலைப்படாத டாக்டர் ராமதாஸ் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் தனது கட்சி அங்கம் வகிப்பதாக பெருமிதமாகக் கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் படுதோல்வி அடையும் என எதிர்பார்த்த டாக்டர் ராமதாஸ் அன்புச் சகோதரி ஜெயலலிதாவிடம் அடைக்கலம் புகுந்தார்.
ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தததால் நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியன தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட ஆறு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
நாடாளுமன்றத் தேர்தலின் போது டாக்டர் ராமதாஸை அன்புடன் வரவேற்ற ஜெயலலிதா தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னர் டாக்டர் ராமதாஸை ஏறெடுத்தும் பார்க்கவில்லø. ஒரே மேடையில் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்ட கூட்டணித் தலைவர்கள் தோல்வி அடைந்த பின்னர் ஆளுக்கு ஒரு பக்கமாகச் சென்று விட்டனர்.
டாக்டர் ராமதாஸின் மகன் அன்பு மணி ராஜ்சபை உறுப்பினராக உள்ளார். அவருடைய பதவிக்காலம் முடிந்த பின்னர் மீண்டும் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்காகவே ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார் டாக்டர் ராமதாஸ். நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னர் அன்புமணியின் அடுத்த நியமனம் கேள்விக்குறியாக உள்ளது. அன்புமணியின் நியமனம் தொடர வேண்டுமானால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதைத் தவிர வேறு மார்க்கம் டாக்டர் ராமதாஸிற்கு இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தமிழக சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கி வரும் ஆதரவு விலக்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் சூசகமாகத் தெரிவித்தார். டாக்டர் ராமதாஸுக்கு விசுவாசமான காடுவெட்டி குரு, தேர்தல் பிரசாரத்தின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதி குடும்பத்தையும் மிக மோசமாக தாக்கிப் பேசினார். நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்த படுதோல்வி டாக்டர் ராமதாஸின் கனவுகளை தவிடு பொடியாக்கியது.
தமிழக சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்குவதாக பாட்டாளி மக்கள் கட்சி முறைப்படி அறிவிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மீண்டும் இணைவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. அதேபோல், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பாட்டாளி மக்கள் கட்சி முறைப்படி அறிவிக்கவில்லை. வெளிப்படையில் அறிவிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கி உள்ளார் டாக்டர் ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி செயற்குழு அங்கத்தவர்களிடையே தேர்தல் ஒன்றை நடத்தி அந்தத் தேர்தல் முடிவின் பிரகாரமே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைவதாக நாடகம் நடத்தினார். டாக்டர் ராமதாஸ் அப்படி ஒரு தேர்தலை நடத்தி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கும் ஆதரவை வாபஸ் பெறுவதற்கு தயாராக இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று அன்புமணி விரும்பினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பாடம் படிப்பிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், காடு வெட்டி குரு போன்றோர் விரும்பினர். ஆனால் பொதுமக்கள் அவர்களுக்கு பாடம் படிப்பித்து விட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் அணி மாறும் போது அன்புமணி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஐந்து வருடங்கள் முழுமையாக அமைச்சுப் பதவியை அனுபவித்து விட்டு அமைச்சுப் பதவியை மட்டும் ராஜினாமாச் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் 18 உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு அணி மாறும் போது இவர் தத்தமது பதவியை ராஜினாமாச் செய்யவில்லை. சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்து விட்டு தேர்தலைச் சந்திக்கும் துணிவு பாட்டாளி மக்கள் கட்சிக்கு இல்லை.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தின் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பதை அறிவதற்கு தமிழக அரசியல் களம் ஆர்வமாக உள்ளது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 28/06/09

Friday, June 26, 2009

பயங்கரவாதத்தால் பயமில்லை


பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட முடியாது பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு செல்லமாட்டோம் என்று கூறிய நாடுகளுக்கு டுவன்ரி 20 கிண்ணத்தை வென்றதன் மூலம் பதிலளித்துள்ளது பாகிஸ்தான் அணி.
தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய நாடுகள் அச்சத்தின் காரணமாக பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்று தெரிவித்தன.
அண்டை நாடான பாகிஸ்தானை இந்தியாவும் இலங்கையும் கைவிடாது தட்டிக் கொடுத்தன. பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இருந்த போதும் இந்தியாவும் இலங்கையும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடின.
மும்பைத் தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானுடனான தொடர்புகளை அறுத்தெறிந்தது இந்தியா. பாகிஸ்தானில் பயங்கரவாதம் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகச் சென்ற இலங்கை அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தப்பினேன் பிழைத்தேன் என்று திரும்பியது இலங்கை அணி.
கிரிக்கெட் விளையாடும் நாடுகளினால் ஒதுக்க, பாகிஸ்தான் வீரர்கள் தமது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி டுவன்ரி 20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றி பாகிஸ்தானை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
முதலாவது போட்டியே கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. கிரிக்கெட்டில் குழந்தை நாடான ஹொலண்டிடம் இங்கிலாந்து தோல்வியடைந்தது. 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்திய பங்களாதேஷ் அயர்லாந்திடம் அடிவாங்கியது. யாருமே எதிர்பார்க்காத அயர்லாந்து சூப்பர் 8க்குத் தெரிவானது. ருவன்ரி 20 உலகக் கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி பங்களாதேஷையும் அயர்லாந்தையும் வென்ற திருப்தியுடன் சுப்பர் 8லிருந்து வெளியேறியது.
ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் வல்லரசனாகத் திகழும் அவுஸ்திரேலியா, இலங்கை, மேற்கு இந்தியா ஆகியவற்றுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து சூப்பர் 8க்கும் தெரிவாகாமல் நாடு திரும்பியது.
அரை இறுதிக்கு பாகிஸ்தான், தென்ஆபிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை ஆகியன தெரிவாகின. தென்னாபிரிக்காவுக்கு எதிரான அரை இறுதியில் அப்ரிடியின் அதிரடியால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. உலகக் கிண்ண அரை இறுதியில் தோல்வியுடன் வெளியேறும் தென்னாபிரிக்காவின் துரதிர்ஷ்டம் இம்முறையும் தொடர்ந்தது. இலங்கை மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான அரை இறுதியில் மத்தியூன் வீசிய முதலாவது ஓவர் இலங்கையின் வெற்றியை உறுதி செய்தது. முதல் ஓவரில் முக்கியமான மூன்று விக்கெட்டுகள் வீழ்ந்தன. அணித் தலைவர் கைல்ஸ் தனி ஒருவராகப் போராடியும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. 2007ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் கிண்ணத்தை வெல்லும் குறிக்கோளுடன் இங்கிலாந்தில் விளையாடியது.
பயங்கரவாதத்தால் சோர்ந்து போயுள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகமாக வீதியில் இறங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பயங்கரவாதத்தால் கிரிக்கெட்டுக்கு பாதிப்பு இல்லை என்பதை உலகுக்கு எடுத்துக்கூறி உள்ளனர் பாகிஸ்தான் வீரர்கள்.
ரமணி
மெட்ரோநியூஸ்
26/06/09

Monday, June 22, 2009

மதில்மேல் பூனையாககாத்திருக்கும் பா.ம.க.


இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாறும் என்று வீராப்புப் பேசிய டாக்டர் ராமதாஸ் தனது சுருதியைக் குறைத்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான குற்றச் சாட்டுகளை குறைத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை டாக்டர் ராமதாஸ் மிக மோசமாக விமர்சித்த போது பொறுமை இழந்த முதல்வர் கருணாநிதி, டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் இருந்து வெளியேற்றினார். கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டதையிட்டு கொஞ்சமும் கவலைப்படாத டாக்டர் ராமதாஸ் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் தனது கட்சி அங்கம் வகிப்பதாக பெருமிதமாகக் கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் படுதோல்வி அடையும் என எதிர்பார்த்த டாக்டர் ராமதாஸ் அன்புச் சகோதரி ஜெயலலிதாவிடம் அடைக்கலம் புகுந்தார்.
ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தததால் நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியன தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட ஆறு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
நாடாளுமன்றத் தேர்தலின் போது டாக்டர் ராமதாஸை அன்புடன் வரவேற்ற ஜெயலலிதா தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னர் டாக்டர் ராமதாஸை ஏறெடுத்தும் பார்க்கவில்லø. ஒரே மேடையில் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்ட கூட்டணித் தலைவர்கள் தோல்வி அடைந்த பின்னர் ஆளுக்கு ஒரு பக்கமாகச் சென்று விட்டனர்.
டாக்டர் ராமதாஸின் மகன் அன்பு மணி ராஜ்சபை உறுப்பினராக உள்ளார். அவருடைய பதவிக்காலம் முடிந்த பின்னர் மீண்டும் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்காகவே ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார் டாக்டர் ராமதாஸ். நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னர் அன்புமணியின் அடுத்த நியமனம் கேள்விக்குறியாக உள்ளது. அன்புமணியின் நியமனம் தொடர வேண்டுமானால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதைத் தவிர வேறு மார்க்கம் டாக்டர் ராமதாஸிற்கு இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தமிழக சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கி வரும் ஆதரவு விலக்கப்படும் என்று டாக்டர் ராமதாஸ் சூசகமாகத் தெரிவித்தார். டாக்டர் ராமதாஸுக்கு விசுவாசமான காடுவெட்டி குரு, தேர்தல் பிரசாரத்தின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதி குடும்பத்தையும் மிக மோசமாக தாக்கிப் பேசினார். நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்த படுதோல்வி டாக்டர் ராமதாஸின் கனவுகளை தவிடு பொடியாக்கியது.
தமிழக சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கி வரும் ஆதரவை விலக்குவதாக பாட்டாளி மக்கள் கட்சி முறைப்படி அறிவிக்கவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் மீண்டும் இணைவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. அதேபோல், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் பாட்டாளி மக்கள் கட்சி முறைப்படி அறிவிக்கவில்லை. வெளிப்படையில் அறிவிக்க முடியாத சூழ்நிலையில் சிக்கி உள்ளார் டாக்டர் ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி செயற்குழு அங்கத்தவர்களிடையே தேர்தல் ஒன்றை நடத்தி அந்தத் தேர்தல் முடிவின் பிரகாரமே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைவதாக நாடகம் நடத்தினார். டாக்டர் ராமதாஸ் அப்படி ஒரு தேர்தலை நடத்தி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வழங்கும் ஆதரவை வாபஸ் பெறுவதற்கு தயாராக இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று அன்புமணி விரும்பினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பாடம் படிப்பிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், காடு வெட்டி குரு போன்றோர் விரும்பினர். ஆனால் பொதுமக்கள் அவர்களுக்கு பாடம் படிப்பித்து விட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் அணி மாறும் போது அன்புமணி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஐந்து வருடங்கள் முழுமையாக அமைச்சுப் பதவியை அனுபவித்து விட்டு அமைச்சுப் பதவியை மட்டும் ராஜினாமாச் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் 18 உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு அணி மாறும் போது இவர் தத்தமது பதவியை ராஜினாமாச் செய்யவில்லை. சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்து விட்டு தேர்தலைச் சந்திக்கும் துணிவு பாட்டாளி மக்கள் கட்சிக்கு இல்லை.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தின் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பதை அறிவதற்கு தமிழக அரசியல் களம் ஆர்வமாக உள்ளது.
வர்மா
வீரகேசரி 21/06/2009

Monday, June 15, 2009

ஜெயலலிதாவை கைவிட்டகூட்டணித் தலைவர்கள்


இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி கலகலப்பை இழந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற கனவில் கூட்டணி சேர்ந்த கட்சிகள் தோல்வியின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதற்கு விதி விலக்காக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பதாக வைகோ காட்டிக் கொள்கிறார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி சேர்ந்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பயனடைந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்த ஏனைய கட்சிகள் உள்ளதையும் இழந்து நொண்டிக் குதிரையாகின.
மின்னணு இயந்திரத்தில் மோசடி, பண விநியோகம், அதிகார பலம் என்பனவற்றினால் தான் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்று தோல்வி அடைந்த கட்சிகள் அனைத்தும் பரவலாகக் குற்றம் சாட்டின. ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் ஆகியோர் தேர்தலில் தோல்வி அடைந்ததும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் மிகவும் மோசமாகத் தாக்கிப் பேசினார்கள். இடதுசாரிகள் கொஞ்சம் அடக்கமாக அறிக்கை விட்டனர்.
முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளன்று மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வரதராஜன் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தார். ஸ்டாலின் துணை முதல்வரானதும் அன்புமணி தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார். இறக்கும் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற மனுவை சரத்குமார் தமிழக முதல்வரிடம் நேரில் கொடுத்து வலியுறுத்தினார்.
எதிர் அணியில் இருந்தாலும் நல்ல காரியங்களுக்காக ஆளுங்கட்சித் தலைவரைச் சந்திக்கும் நல்லதொரு கலாசாரம் தமிழகத்தில் துளிர்விடத் தொடங்கியுள்ளது. இது உண்மையிலேயே நல்ல அறிகுறியா அல்லது அரசியல் சந்திப்பா என்பது தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலின்போது தான் தெரியவரும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி. சேகர், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான பேச்சாளர்களில் ஒருவரான நடிகர் முரளி ஆகியோர் துணை முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எஸ்.வி. சேகர் வெளியேறப் போகிறார் என்ற செய்தி பலமாக அடிபடும் இவ்வேளையில் துணை முதல்வர் ஸ்டாலினை எஸ்.வி. சேகர் சந்தித்தது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராதாரவியின் தாயார் மரணமானபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் கூட மரண வீட்டுக்குச் செல்லவில்லை. ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு மாறாக செயற்பட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் யாரும் தயாராக இல்லை. அப்படிப்பட்ட ஒரு நிலையில் எஸ்.வி. சேகரும் முரளியும் துணை முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தது ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு அவர்கள் தயாராகி விட்டனர் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஓய்வெடுப்பதற்காக ஜெயலலிதா கொடாநாட்டுக் குப் போய்விட்டார். அவர் ஓய்விலிருந்து சென்னைக்குத் திரும்பியதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம். நாடாளுமன்றத் தேர்தலின் தோல்விக்குப் பின்னர் கழகத்தின் முக்கியஸ்தர்கள் மத்தியில் பேசுகையில் சகலரையும் கண்டித்துப் பேசிய ஜெயலலிதா புதிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடியை கொடுக்க முயற்சி செய்வார்.
கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் கைவிட்ட நிலையிலும் வைகோ மட்டும் தொடர்ந்தும் ஜெயலலிதாவுடன் இணைந்து உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தையும் முதல்வர் கருணாநிதியையும் முன்னரை விட கடுமையாகத் தாக்கிப் பேசுகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையை ஜெயலலிதாவுக்கு ஊட்டிய தலைவர்கள் தோல்வியின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஒன்றாகக் கூடி ஆராயவில்லை. மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத அந்த தலைவர்கள் ஆளும் கட்சியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி உள்ளனர்.
கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி விட்டு திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. எனினும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 12 தொகுதிகளில் தோல்வியடைந்தததற்கான காரணத்தை அறிவதற்கு முயற்சி செய்கிறார் துணை முதல்வர் ஸ்டாலின். தோல்விக்கான காரணத்தை எதிர்க் கட்சிகள் மீது சுமத்தாது உண்மையை அறிவதற்கு ஸ்டாலின் முயற்சி செய்வது அவரது அரசியல் வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் பிரசாரம் முக்கிய காரணமாக அமைந்தது. தமிழகம் எங்கும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்ய முடியாத நிலை முதல்வர் கருணாநிதிக்கு ஏற்பட்டதனால் ஸ்டாலினும் கனிமொழியும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்தனர்.
தேர்தல் வெற்றிக்கு காரணமாக இருந்த ஸ்டாலின், அழகிரி ஆகிய இருவருக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்த முதல்வர் கருணாநிதியால் மகள் கனிமொழிக்கு பதவி ஒன்றைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சர்கள் பெயர் பட்டியலில் கனிமொழியின் பெயரும் இருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. முதல்வர் கருணாநிதியும் கனிமொழியும் அதனை மறுக்கவில்லை. எனினும் ஒரே குடும்பத்துக்கு மூன்று அமைச்சர்களைக் கொடுப்பதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்ததனால் கனிமொழியின் பெயர் நீக்கப்பட்டது. கனிமொழிக்கு உரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுப்பதற்கு முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார்.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு பங்கு கொடுப்பதற்கு முதல்வர் கருணாநிதி முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக அரசில் காங்கிரஸ் கட்சி பங்கு பற்றும் வேளையில் அதற்கு பிரதி உபகாரமாக கனிமொழிக்கு ஏதாவது ஒரு பதவியை காங்கிரஸ் கட்சியிடமிருந்தே முதலமைச்சர் பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்துவதற்கு ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் புதிய யுக்தியை வகுத்துள்ளார்கள். காங்கிரஸிற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்த ராகுல் காந்தி தமிழக காங்கிரஸுக்கு உயிர் கொடுக்க முயற்சி செய்கிறார்.
கலைஞருக்கு பின் ஸ்டாலின் என்ற கோஷத்தை மெய்ப்பிக்கும் வழியில் செயற் படும் ஸ்டாலின், தமிழகக் காங்கிரஸின் வளர்ச்சிக்கு துணை போவாரா அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிழலில் தமிழக காங்கிரஸ் ஒதுங்க வழி விடுவாரா என்பதை அவரது எதிர்கால நடவடிக்கைகளே வெளிப்படுத்த வேண்டும்
.வர்மா
வீரகேசரி 14/06/2009

Sunday, June 7, 2009

தந்தைவழியா தனிவழியா?பேரறிஞர் அண்ணா மறைந்த பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தலைமை ஏற்பது யார் என்ற கேள்வி எழுந்தபோது கலைஞர் கருணாநிதிக்கும் இரா. நெடுஞ்செழியனுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இரா. நெடுஞ்செழியனை முந்திக் கொண்டு கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் கலைஞர் கருணாநிதி.
முதல்வர் கருணாநிதிக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பு ஸ்டாலினிடம் செல்லும் என்பது நீண்ட காலத்துக்கு முன்னரே எழுதப்பட்டு விட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பை ஸ்டாலினின் கையில் கொடுப்பதன் முன்னோட்டமாக ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காத கௌரவம் காலம் தாழ்த்தி கிடைத்துள்ளது.
அழகிரி அமைச்சராகப் பொறுப்பேற்று சூடு ஆறுவதற்குள் ஸ்டாலினின் தலையில் துணை முதல்வர் என்ற கிரீடம் சூட்டப்பட்டுள்ளது. ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டுவது தொடர்பாக கட்சிக்குள் கருத்து பேதம் இல்லை. ஆனால் குடும்பத்துக்குள் ஏற்பட இருந்த பூகம்பத்தை நீக்கிய பின்பே ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை, வாரிசு அரசியலுக்கு அப்பாற்பட்டது. பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே அவர் அரசியலுக்குத் தள்ளப்பட்டார். தியாகங்கள், சிறைவாழ்க்கை ஆகியவற்றுடன் அவரது அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது.
அழகிரி, ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் முக்கிய பொறுப்புகள் கொடுத்த பின்னர் முதல்வர் கருணாநிதி அரசியலில் இருந்து ஒதுங்குவார் என்று அவரது அரசியல் எதிரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் முதல்வர் கருணாநிதி தனது பொறுப்புகள் சிலவற்றை ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளாரே தவிர, அரசியலில் இருந்து ஒதுங்குவதற்கு அவர் தயாராக இல்லை.
அதிரடி நடவடிக்கைகளினால் மக்கள் மத்தியிலும் அரசியல் அரங்கிலும் பிரபலமானவர் அழகிரி. இதற்கு நேர்மாறாக அமைதியாக கருமங்களை ஆற்றுபவர் ஸ்டாலின். இருவருக்கும் ஆதரவு அதிகம் உண்டு. மதுரையில் அழகிரியின் ராஜாங்கம்தான். தமிழ்நாடு முழுவதும் அழகிரிக்கு செல்வாக்கு உண்டு.
தமிழகத்திலும் டில்லியிலும் தனக்கு நம்பிக்கைக்கு உரிய இருவரை அமர்த்திய திருப்தியில் உள்ளார் முதல்வர் கருணாநிதி. தமிழகப் பிரச்சினைகளை முதல்வர் கருணாநிதி நேரடியாகக் கவனித்த வேளையில் மத்திய அரசுடனான உறவுகளை சுமுகமாக கொண்டு செல்வதற்கு முரசொலிமாறன் இருந்தார். முரசொலிமாறன் மறைந்த பின்னர் அந்த இடத்தை அவருடைய மகன் தயாநிதி மாறன் நிரப்பினார். குடும்பத்துக்குள் பூகம்பம் ஏற்பட்ட போது அந்த இடத்துக்கு மகள் கனிமொழியை நியமித்தார் முதல்வர் கருணாநிதி.
கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதும். அவர் எப்போது அமைச்சராவார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. ஆனால், கனிமொழியை முந்திக் கொண்டு அழகிரி அமைச்சராகியுள்ளார்.
இந்திய அரசியல் அமைப்பில் இல்லாத ஒரு பதவி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி என்ற பதவி இந்திய அரசியல் அமைப்பில் உள்ளது. துணைப் பிரதமர், துணை முதல்வர் பதவிகள் இல்லை. வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது தேவிலாலும் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அத்வானியும் துணைப் பிரதமர் பதவியை வகித்தனர்.
சிக்கலான ஒரு காலத்திலேயே ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு ஆதரவு கொடுக்கும் காங்கிரஸ் கட்சியை அரசியல் பங்காளி ஆக்க வேண்டிய நிலை உள்ளது. முதல்வர் கருணாநிதி தனது பொறுப்புகளை குறைத்தது போன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களுக்கும் தமது பொறுப்புக்களை குறைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தொண்டர்களுடன் அதிகம் நெருங்கிப் பழகாதவர் என்ற குறையை நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் மூலம் துடைத்தெறிந்து விட்டார் ஸ்டாலின். ஸ்டாலின் துணை முதல்வராகக் கூடாது என்று கருதிய சில தலைவர்களின் எதிர்பார்ப்பையும் மீறி துணை முதல்வராகிய ஸ்டாலின் தனது அடுத்த கட்ட நடவடிக்கை மூலம் தனக்கு எதிராக எழும் அரசியல் சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதேவேளை, திராவிடக் கழகங்களின் துணையுடன் தேர்தலில் வெற்றி பெறும் சூழ்நிலையை தமிழகத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். பெருந்தலைவர் காமராஜருக்குப் பின்னர் தமிழக காங்கிரஸில் கோஷ்டிகள் வளர்ந்ததே தவிர, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி பெறவில்லை.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு தமிழக அமைச்சராக தமது கட்சியைச் சேர்ந்த சிலர் இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். தமிழக காங்கிரஸின் இந்த வேண்டுகோளைப் பூர்த்தி செய்தால் பாட்டாளி மக்கள்கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் எதிர்ப்புகளை சுலபமாக முறியடிக்கலாம் என்ற கருத்து உள்ளது.
தமிழக ஆட்சியில் காங்கிரஸை பங்காளியாகச் சேர்த்தால் தமிழக காங்கிரஸில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவான தலைவர்களின் நிலை சிக்கலாகி விடும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு ஜெயலலிதா ஒரு காலமும் விரும்ப மாட்டார்.
காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கினால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவு பலமடையும் என்ற கருத்தும் உள்ளது.
துணை முதல்வர் பதவி மட்டுமல்லாது திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்க்கும் பணியும் ஸ்டாலினின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்டாலின், அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி என்று ஒரு குடும்ப உறுப்பினர்கள் தமிழக அரசியில் அதிகாரங்களில் இருப்பது சற்று நெருடலாகத்தான் உள்ளது.
துணை முதல்வரான ஸ்டாலின் தந்தை வழியில் அரசியல் வாரிசுகளை குடும்பத்துக்குள் உருவாக்குவாரா? தனி வழியில் பயணம் சென்று அரசியலில் கொடி நாட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
வர்மா,
வீரகேசரி 07/06/2009

Thursday, June 4, 2009

அட்டகாச திருவிழா இன்று ஆரம்பம்


பரபரப்பும் விறுவிறுப்பும் மிக்க ருவென்ரி 20 உலகக் கிண்ணப் போட்டி இன்று இங்கிலாந்தில் ஆரம்பமாகிறது.ஐ.பி.எல். ரி 20 போட்டிகளில் மூழ்கித் திளைத்த ரசிகர்களை மேலும் பரவசப்படுத்த இப்போட்டிகள் களமாக அமையவுள்ளன.
ருவென்ரி 20 உலகக் கிண்ணப் போட்டியில் 12 நாடுகள் பங்கு பற்றுகின்றன. a b c d என்ற நான்கு பிரிவுகளில் தலா மூன்று நாடுகள் உள்ளன. கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டு மொத்தப் பார்வையும் a பிரிவில் உள்ள இந்திய அணி மீதே உள்ளன. a பிரிவில் இந்தியா, பங்களாதேஷ், அயர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. பங்களாதேஷ், அயர்லாந்து ஆகிய அணிகளை விட வலிமையான இந்திய அணி முதலிடம் பிடித்து இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகி விடும். பங்களாதேஷ், அயர்லாந்தை வீழ்த்திவிடும். ஆகையினால் பங்களாதேஷ் இரண்டாவது சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டு விடும்.
முதலாவதுரு வென்ரி 20 போட்டியில் கிண்ணம் வென்ற அணித்தலைவர் டோனி இம்முறையும் கிண்ணத்தைக் கைப்பற்றும் நோக்குடன் உள்ளார். முதலாவது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டி வரைக்கும் இரண்டாவது ஐ.பி.எல். போட்டியில் அரை இறுதிவரை அணியை வழி நடத்திய அனுபவம் டோனிக்கு இருப்பதால் கிண்ணத்தை வெல்லும் சாத்தியம் அதிகம் உள்ளது.
கடந்த முறை கலக்கிய ஜோகின்தர் சர்மா, ஸ்ரீசாந்த் ஆகியோர் அணியில் இல்லை. ஐ.பி.எல். லில் எதிரணி வீரர்களை மிரட்டிய யூசுப் பதான், ரோகித் சர்மா, ரைனா, இர்பான் பதான் ஆகியோர் அணியில் இருப்பது பலமானது. ஐ.பி.எல்.லில் இரண்டு முறை ஹட்ரிக் சாதனை செய்த யுவராஜ்சிங் பந்து வீச்சில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். ஆர்.பி. சிங் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. இஷார்த் சர்மா, ஷேவாக், கம்பீர் ஆகியோரும் பழைய நிலைக்கு திரும்பினால். இந்திய அணி இக் கிண்ணத்தை இரண்டாவது தடவையும் கைப்பற்றும் சாத்தியம் உள்ளது.
bபிரிவில் பாகிஸ்தான், இங்கிலாந்து , நெதர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. முதல் சுற்றிலேயே நெதர்லாந்து வெளியேறிவிடும். முதலாவது டுவென்ரி 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் பயிற்சி இல்லாததால் கஷ்டப்பட்டு முன்னேற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. முகம்மது யூசுப், சொஹைப் அக்தர் இல்லாதது பாகிஸ்தானுக்கு பலவீனம். யூனுஸ்கான், அப்ரிடி, தன்வீர், சொகைப் ஆகியோரின் பங்களிப்புத் தான் பாகிஸ்தான் அணிக்கு மிகுந்த தேவையாக உள்ளது.
சகல துறை வீரர் பிளின்டொப் இல்லாததனால் இங்கிலாந்து அணி பலவீனமாக உள்ளது. சொந்த மண் உள்ளூர் ரசிகர்களின் உற்சாகம் இங்கிலாந்து அணிக்கு கை கொடுக்கும்.
அவுஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் ஆகியன c பிரிவில் உள்ளன. மேற்கிந்திய தீவுகள் பலம் குறைந்த அணிபோல் தோன்றினாலும் இந்தப் பிரிவில் வெளியேறும் அணி எது என்று கூறிவிட முடியாது.
பிரட்லீ, மைக்கல் கிளார்க், சைமன்ஸ் ஆகியோரின் எழுச்சியே அவுஸ்திரேலிய அணிக்கு எழுச்சியைக் கொடுக்கும். அவுஸ்திரேலிய அணியின் ஓய்வு பெற்ற வீரர்களான ஹைடன், கில் கிறிஸ்ட் ஆகியோர் ஐ.பி.எல்லில் இளைஞர்களுக்கு சவால் விட்டு தமது திறமையை வெளிப்படுத்தினர்.
ஜயசூரிய , மஹேல, முரளிதரன், மலிங்க ஆகியோர் ஐ.பி.எல்.லில் தமது முழுத் திறமையினை வெளிப்படுத்தவில்லை. மென்டிஸ் நிலை மிகவும் மோசம். சங்கக்கார, டில்ஷான் ஆகியோர் ஐ.பி.எல்லில் சிறப்பாகச் செயற்பட்டனர். இலங்கை வீரர்கள் முயற்சி செய்தால் கிண்ணத்தை வெல்லலாம்.
அணித்தலைவர் கெய்ல்ஸ், சர்வான் ஆகியோர் எழுச்சி பெற்றால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெறலாம்.
நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, ஸ்கொட்லாந்து ஆகியன d பிரிவில் உள்ளன. ஸ்கொட்லாந்து முதல் சுற்றிலேயே வெளியேறிவிடும்.
கொல்கத்தாவுக்கு தலைமை தாங்கிய மெக்கலத்தின் விளையாட்டு எதிர்பார்த்ததுபோல் இல்லை என்றாலும் நியூசிலாந்து அணியை குறைத்து மதிப்பிடக் கூடாது.தென் ஆபிரிக்க வீரர்களான கலிஸ், போத்தா, டிவில்லியன்ஸ், ஆகியோர் ஐ.பி.எல். மூலம் சிறந்த அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.
20 உலகக் கிண்ண போட்டியில்
ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் மேற்கிந்திய தீவுகளின் தலைவர் கிறிஸ்கெய்ல் உள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 117 ஓட்டங்கள் எடுத்தார். தவிர டுவென்டி 20 உலகக் கிண்ணத் தொடரில் சதம் கடந்த ஒரே வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து தென் ஆபிரிக்காவின் கிப்ஸ் (90) மற்றும் கெம்ப் (89) உள்ளனர். இந்தியா சார்பில் கம்பீர் (75) யுவராஜ் (70), சேவாக் (68) ஆகியோர் உள்ளனர்.
மெக்கலம் அதிரடி
அதிக சிக்ஸர் டுவென்டி 20 உலகக் கிண்ண வரலாற்றில் விளாசிய வீரர்கள் வரிசையில் பிராண்டன் மெக்கலம் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள மக்கலம் 13 சிக்ஸர் விளாசியுள்ளார். இதுவரை தொடர்ந்து இந்தியாவின் யுவராஜ் (12), வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ல் (10) ஆகியோர் உள்ளனர்.
உமர் குல் துல்லியம்
டுவண்டி 20 உலகக் கிண்ண அரங்கில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் வீரர் உமர்குல் முதலிடத்தில் உள்ளார். இதுவரையில் போட்டியில் விளையாடி உள்ள குல் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் ஆர்.பி.சிங் 12 விக்கெட்டுகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளார்.
இலங்கை முதலிடம்
ஐ.சி.சி டுவென்டி20 உலகக் கிண்ண அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் குவித்த அணிகள் வரிசையில் இலங்கை அணி முதலிடம் வகிக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக ஜொகன்னஸ் பேர்க்கில் நடந்த போட்டியில் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ஓட்டங்கள் குவித்தது.
ஹைடன் அசத்தல்
டுவென்டி 20 உலகக் கிண்ண அரங்கில் அதிக ஓட்டங்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் அவுஸ்திரேலிய வீரர் ஹைடன் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 6 போட்டியில் விளையாடியுள்ள இவர் 4 அரைச் சதம் உட்பட 265 ஓட்டங்கள் குவித்து உள்ளார். இரண்டாவது இடத்தில் இந்தியாவின் கம்பீர் (227) மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் மிஸ்பா (218) உள்ளனர்.
ரமணி
மெட்ரோநியூஸ் 05/06/09

Tuesday, June 2, 2009

முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும்காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்தமிழக அரசாங்கத்தில் தமக்கும் அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என்ற கோஷத்தை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் உரக்கக் கூறத் தொடங்கி விட்டனர். மத்திய அரசின் அமைச்சரவையில் இடம்பிடிப்பதற்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டதனால் மனஸ்தாபங்களின் பின்னர் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு இல்லாமலேயே மத்தியில் ஆட்சி அமைக்கக் கூடிய பெரும்பான்மை காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கொடுக்கும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளாது தமிழக முதல்வர் முரண்டு பிடித்ததை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் விரும்பவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தயவுடனேயே திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சி புரிகிறது. தமிழக அமைச்சரவையில் தமக்கும் பங்கு தரும்படி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விடுத்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் கண்டு கொள்ளவில்லை. அமைச்சுப் பொறுப்புகளுக்காக தமிழக முதல்வர் மத்திய அரசை மிரட்டியதால் தமிழக அரசில் தமக்கும் அமைச்சுப் பதவி வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களின் வேண்டுகோளைப் புறக்கணித்த முதல்வர் கருணாநிதி மத்தியில் தனக்கு வேண்டியவர்களை அமைச்சராக்குவதில் குறியாக இருந்தார். தமிழக முதல்வரின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது என்று காங்கிரஸ் தரப்பில் இருந்து உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது.முன்னாள் அமைச்சர்களான டி.ஆர். பாலு, ராசா ஆகியோருக்கு பதவி வழங்க முடியாது என்று காங்கிரஸ் தரப்பில் உறுதியாக கூறப்பட்டது. தயாநிதி மாறன், மு.க.அழகிரி, கனிமொழி ஆகிய மூவரின் பெயர்களும் தமிழக முதல்வர் கொடுத்த பெயர்ப் பட்டியலில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை அமைச்சராக்க முடியாது என்று காங்கிரஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.
இதனால் கனிமொழி சுழற்றிவிடப்பட்டார். தயாநிதி மாறனும் அழகிரியும் கபினட் அந்தஸ்து உள்ள அமைச்சரானார்கள். அரசியல் வேண்டாம் இலக்கியமே போதும் என்றிருந்த கனிமொழி அரசியலுக்கு இழுத்து வரப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார். கனிமொழி நாடாளுமன்ற உறுப்பினரானதும் விரைவில் அமைச்சராவார் என்று எதிர்வு கூறப்பட்டது. புதிய அரசில் கனிமொழி அமைச்சராவார் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமானது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ வெளியேறியதும் முரசொலி பத்திரிகையைக் கவனிப்பதற்கும் கட்சியை வளர்க்கவும் மு.க. அழகிரி மதுரைக்கு அனுப்பப்பட்டார். மதுரையில் முடி சூடா மன்னனாக விளங்கும் அழகிரி அரசியலில் தன்னை முழுமையாக வெளிப்படுத்தி தனது அரசியலை நடத்தினார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் அøமச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரானார். அரசியலில் அனுபவம் இல்லாத அழகிரி அதிர்ஷ்டத்தினால் அமைச்சரானார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக சிறைவாசம் சென்று அரசியல் அனுபவம் உள்ள ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலத்தின் பின் இப்போதுதான் நிறைவேறி உள்ளது.
ஸ்டாலின் முதல்வராகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று மேடை தோறும் பிரசாரம் செய்யப்பட்டது. நீங்கள் எதிர்பார்க்கும் மகிழ்ச்சிகரமான செய்திவிரைவில் வெளிவரும் என்று முதல்வர் கருணாநிதி பல சந்தர்ப்பங்களில் கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியின் பின்னணியில் ஸ்டாலினின் பங்கு மிகவும் முக்கியமானது. ஆகையினால் அவருக்கு உரிய கௌரவம் வழங்கப்பட்டுள் ளது. முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் உள்ளாட்சித்துறை அமைச்சரான ஸ்டாலினை துணை முதல்வராக ஆளுநர் பர்னாலா அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக முக்கியமானவர்களில் ஒருவரான டி.ஆர். பாலுவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. துணை சபாநாயகர் பெயருக்கு டி.ஆர். பாலுவின் பெயர் அடிபடுகிறது. டி.ஆர். பாலுவுக்கு மிக முக்கியமான பொறுப்பு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இல்லையேல் கடந்த ஆட்சிக் காலத்தில் டி.ஆர். பாலுவின் முறை கேடு காரணமாகவே அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மையாகி விடும் சூழ்நிலை உள்ளது.
மத்தியில் அமைச்சரவையில் திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பிடித்தது போல் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசில் பங்கு பெற வேண்டும் என்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கையை தமிழக முதல்வர் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு தமிழக அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும், அமைச்சராக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர்.
அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை தமிழகத்தில் இருந்து அகற்றியது. அண்ணாவின் அன்புத் தம்பியான கலைஞர் கருணாநிதியின் அரசு காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்தது என்ற அவப் பெயர் வந்து விடுமோ என்று தமிழக முதல்வர் கருணாநிதி அஞ்சுகிறார்.
மத்தியில் அமைச்சரவையில் இடம்பிடிப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் முட்டி மோதியதால் தமிழகத்தில் காங்கிரஸிற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தான் தமிழக அரசு தப்பிப் பிழைத்துள்ளது. ஆகையினால் தமிழக காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைக்கு சாதகமாக பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது என தமிழக காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தும் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் பங்கு கொடுக்க விரும்பவில்லை.
தமிழகத்தில் காங்கிரஸ் பல கோஷ்டிகளாகப் பிரிந்து செயற்படுவதனால் அதன் செயற்றிறன் குறைந்துள்ளது. இதனைக் காரணம் காட்டி அமைச்சரவையில் காங்கிரஸை சேர்ப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் மறுப்புத் தெரிவிக்கலாம் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத் தலைவர்கள் படுதோல்வி அடைந்ததும் மக்கள்மத்தியில் காங்கிரஸுக்குச் செல்வாக்கு இல்லை என்று காரணம் கூறி தவிர்த்து விடும் சூழ்நிலையும் உள்ளது.
ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழா, தமிழக காங்கிரஸின் அமைச்சரவை ஆசை இரண்டையும் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளார் முதல்வர் கருணாநிதி.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு30/05/09