Tuesday, May 29, 2012

திக்குத்தெரியாத...  கொழும்பிலிருந்துபுறப்பட்ட இரவுநேரப்புகையிரதம் நான்குமணித்தியாலம் தாமதமாக கண்டிபுகையிரதநிலையத்தைச்சென்றடைந்தது. கண்டிபுகையிரதநிலையம் அன்றுவழமைக்குமாறாக இருந்தது. பயணிகளைவிட அதிகளவி இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிந்திருந்தனர்.
  நீண்டதூரம் பயணம் பயணம்செய்தபுகைவண்டி பெருமூச்சுடன் கண்டிபுகையிரதநிலையத்தில் நின்றதும் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு இறங்கினர்.
  புகைவண்டியின்வாசலின் நின்றபடி இருபக்கங்களும் நிதானமாகப்பார்த்தான் அவன். வழக்கத்துக்குமாறான இறுக்கமும் பாதுகாப்பும் அவன் மனதை உறுத்தியது. பின்னால் நின்ற அவசரப்பயணி அவன் முதுகைச்சுரண்டினான். முதுகில் சுரண்டியவனைப்பார்த்துவிட்டு புகைவண்டியை விட்டு இறங்கினான். அவ்னை விலத்திக்கொண்டு அவசரமாக இறங்கியவர்கள் வெளியேறும் இடத்தை நோக்கிச்சென்றனர்.
   புகையிரதத்துக்காகக் காத்து நின்றவர்களின் அடையாளாட்டைகளை சிலபொலிஸார் பார்த்தபடி கேள்விகளைக்கேட்டனர். சில பொலிஸாரும் இராணுவத்தினரும் பொதிகளைச்சோதித்தனர். மெதுவாக நடந்தபடி தொலைபேசியின்மூலம் யாருடனோகதைத்தான் அவன்.நடந்தபடியே மீண்டும் யாருடனோகதைத்தபடி தலையை இருபக்கமும் ஆட்டியபடி வெளியேறும் இடத்தை நோக்கிச்சென்றான் அவன். அவனது நடத்தைகள் அனைத்தையும் இரண்டுகண்கள் அவதானித்துக்கொண்டிருந்தன.
  புகயிரத்தைவிட்டு வெறியேறும் இடத்தில் நீண்டவரிசயில் பலர் நின்றனர்.அவனும் அந்தவரிசையுடன் சேர்ந்தான். அவனுக்குப்பின்னால் இன்னும் சிலர்சேர்ந்து அந்தவரிசையை நீளமாக்கினர்.  அவனது நடவடிக்கைகளைக்கவனித்துக்கொண்டிருந்தகண்களுக்குரியவன் அவனருகேசென்று அடையாள அட்டையைக்கேட்டான்.எனக்குமுன்னால் ஐந்துபேர் நிற்கிறார்கள். இவன் ஏன் இடையில் வந்து என்னிடம் அடையாள அட்டையைக்கேட்கிறான் என அவன் நினைத்தான். அவனிடம் அடையாள அட்டையக்கேட்டவர் புலனாய்வு அதிகாரி என்பதுஅவனுக்குத்தெரியாது.மிரட்டியபடி அடையாள அட்டையைக்காட்டும்படி அதிகாரி கேட்டார்.  அவன் தனது அடையாள அட்டையைக்க்கொடுத்தான். அடையள அட்டையில் உள்ளபடம் அவனதுமுகத்தை ஒத்திருக்கிறதா என்று பார்க்காது மறுபக்கத்தைப்பார்த்தார் அந்த அதிகாரி. அங்கே தமிழ் எழுத்து இருந்தது. வரிசையைவிட்டு வெளிய வரும்படி கூறினார் அந்த அதிகாரி.
  வரிசையில்நின்றவர்களிடயே சலசலப்பு ஏற்பட்டது.புகையிரதமேடையில் நின்றவர்களவனை வினோதமாகப்பார்த்தனர். அவனதுதோளிலிருந்த பாக்கைவாங்கி ஒவ்வொருசிப்பாகத்த்டிறந்துபார்த்தார் அந்த அதிகாரி. மாற்று உடுப்புகளும் ஆங்கில நாவலும் அந்த பாக்கினுள் இருந்தன. அவனுடைய கையடக்கத்தொலைபேசியை வாங்கிய அந்தப்புலனாய்வு அதிகாரி அதிலிருந்த இலக்கங்களைப்பார்த்தார். திருப்தியாகத்தலையை ஆட்டியபடி தன்னுடன் வருமாறுகூறிவிட்டு முன்னேசென்றார்.
   என்னசெய்வதெனத்தெரியாது அவன் திகைத்து நிற்கையில் முதுகில் யாரோ சுரண்டினார்கள்.திரும்பிப்பார்த்தான். இரண்டு பொலிஸ்காரர்கள் நடக்கும்படி சைகை காட்டினார்கள்.எதுவும்பேசாமல் அந்தப்புலனாய்வு அதிகாரியைப்பின் தொடர்ந்தான் அவன்.அவனுக்குப்பாதுகாப்பாக இரண்டு பொலிஸ்காரர்கள் பின்தொடர்ந்தனர்.
புகையிரதநிலையத்துக்கு வெளியேநின்ற பஸ்சில் அவனை ஏற்றினார்கள்.அவன் உள்ளே நோட்டம்விட்டான்.பதினைந்துபேர் இருந்தார்கள். அவர்களில் மூவர் பெண்கள். அவனுக்காகவே காத்துக்கொண்டு நின்றதுபோன்று அவன் ஏறியதும் பஸ் புறப்பட்டது.       புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டபஸ் பொலிஸ்நிலையத்தினுள்ளேசென்றுநின்றது.எல்லோரையும் இறங்கச்சொன்னார்கள்.அவனும் இறங்கினான்.அவனுடையகால் கூசியது.முதன்முதலாக பொலிஸ்நிலையத்தினுள் கால்பதித்தான்.ரயில்நிலையத்தில் அவர்களைக்கைதுசெய்தஅதிகாரியின் பின்னால் வரிசையாகச்சென்றார்கள்.
  அந்த அதிகாரி அவனைத்தான் முதலில்தனதுஅறைக்கு அழைத்தார்.பெயர்.விலாசம் போன்ற விபரங்களை எழுதிவிட்டு மணிக்கூடு, மோதிரம், சப்பாத்து, பெல்ட் எல்லாவற்றையும் அருகே நின்றபொஸிடம் கொடுக்கச்சொன்னார். ஐந்துவருடங்களாக விரலிலிருந்துகழற்றாத அந்தமோதிரத்தைக்கவலையுடன் கழற்றிக்கொடுத்தான். அவனுக்கு மிகமிகத்தேவையான ஒரு ஜீவன் பிறந்தநாள்பரிசாகக்கொடுத்தமோதிரம் அது.
   அவனை ஒருகூட்டுக்குள்விட்டுப்பூட்டினார்கள்.ஆறுபேர் இருக்கக்கூடிய அக்கூட்டினுள்பத்தாவது ஆளாக அவன் தள்ளப்பட்டான்.குப்பென்று ஒருதுர்நாற்றம் அவன் மூக்கினுள் நுழைந்தது.அப்படி ஒரு மோசமான நாற்றத்தை அவன் வாழ்நாளில் அனுபவித்ததில்லை.   புதிய விருந்தாளியை எல்லோரும் ஆர்வத்துடன் பார்த்தார்கள்.ஒருவன் நீட்டி நிமிர்ந்து நல்ல நித்திரை.இன்னொருவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.அவனுக்குப்பக்கத்தில் இருந்தவன் பீடியை ரசித்துச்சுவைத்து புகையை வெளியே விட்டான்.அவனுக்குவயிற்றைக்குமட்டிக்கொண்டு வந்தது.   கண்களில் நீர் நிறைந்து அவனையுமறியாமல் கன்னத்தில் வடிந்தது. கம்பிகளின் வழியாகவெளியே பார்த்தான். அப்போது அவனது முதுகில் யாரோதட்டினார்கள்.பீடி குடித்தவன் ஒரு அசட்டுச்சிரிப்புடன் எங்கேபிடித்தார்கள் என சிங்களத்தில் கேட்டான். வெறுப்படைந்த அவன் பேசாமலிருந்தான். தமிழா எனக்கேட்டான்.ஆம் என்பதற்கு அடையாளமாகத்த்லையை மேலும் கீழும் ஆட்டினான்.
 "எங்கே பிடிச்சாங்க"
 "ரயில்வே ஸ்டேசன்லை"
  "என்ன செய்தாய்"
  "ஒண்டும் செய்லலை"
  "அப்ப ஏன் பிடிச்சாங்க?"
   "தெரியாது"
  "பொக்கற்றிலை காசு இருக்கா?"
  அவன் பொக்கற்றினுள் கையை விட்டு நூறு ரூபத்தாளை எடுத்தான்.அவசரமாகக்காசைப்பறித்த பீடிக்காரன் தனது பொக்கற்றினுள் திணித்தான்.
"யோசிக்க வேணாம்.விசாரிச்சுச்சு வுட்டுடுவாணுங்க கஞ்சாகேசில ஆறுமாசம் உள்ள இருந்தனான். வெளியவந்து ஒரு கொளமை தான் புடிச்சுட்டானுங்க.இனி ஆற் மாசமோ ஒரு வருசமோ தெரியாது. அந்திக்கு உன்னை விட்டுடுவானுங்க"நூறு ரூபா அவனை சினேகிதனாக்கியது.
 "பிரபுயாரு?"கூண்டுக்குவெளியே நின்ற பொலிஸ் சிங்களத்தில் கேட்டான்.
  நான் தான் பிரபு என அவன் சிங்களத்தில் கூறினான்.கதவைதிறந்து அவனை அழைத்துச்சென்றான்.ரயில் நிலையத்தில் அவனைக்கைதுசெய்த அதிகாரி கதிரையில் அவனை இருக்கச்சொன்னார்.இன்னும் சில அதிகாரிகளும் அந்த அறையினுள் இருந்தார்கள்.
  "என்ன பெயர்" அதிகாரி தமிழில் கேட்டார்.
  "பிரபு" என்றான்.
  "பிரபுவா? பிரபாவா?"
 அவர் கேட்டதும் உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை பிரபுவுக்குச்சில்லிட்டது.
  "என்ன பதிலைக்காணம்?"
   பிரபா இல்லை. பிரபு என அவன் சிங்களத்தில் கூறினான்.
  "இங்க இருக்கிற எல்லாருக்கும் தமிழ் நல்லாத்தெரியும்.நீ சிங்களத்திலகதைச்சு கஸ்ரப்பட வேண்டாம்" என  அந்த அதிகாரி கூறினார்.
 "சொந்த இடம் எது?"
 "கண்டி"
 "கொழும்பில என்ன செய்யிறாய்"?
 "படிக்கிறன்"
"என்ன படிக்கிறாய்"?
 "ஏ.எல்"
 "இப்ப ஸ்கூல் லீவா?'
 "இல்லை"
 "அப்ப ஏன் இங்கை வந்தாய்?"
  அந்தக்கேள்விக்குப் பிரபுவால் பதில்கூற முடியவில்லை.
  "யாழ்ப்பாணத்திலை யாரைத்தெரியும்"?
   "யாரையும் தெரியாது"
  "உன்ரை போனிலை யாழ்ப்பாணநம்பர்கள் கனக்க கிடக்கு"?
  "பிரண்ட்ஸ்"
  "யாரையும்தெரியாதெண்டா எப்பிடி பிரண்ட்ஸ்"?
   "கொம்பியூட்டர் கிளாஸ்ல படிக்குற பிரண்ட்ஸ்"
  அன்று வெளியான தமிழ்ப்பத்திரிகை ஒன்றைப்பிரபுவிடம் கொடுத்து "இதைப்படிடா" என்றார் அந்த அதிகாரி.அப்போதுதான் அவர்கள் தன்னை ஏன் கைது செய்தார்கள் என்ற உண்மை அவனுக்குத்தெரியவந்தது.கொழும்பிலே குண்டு வெடித்த இரவுதான் அவன் ரயில் ஏறியது அவனுக்கு ஞாபகம் வந்தது.
  கொழும்பில் குண்டுவெடிப்பு ஐந்துபேர்பலி.பதினைந்திபேர் படுகாயம் என்ற பெரிய எழுத்துக்களுடன் கொழும்பில் நடந்த குண்டு வெடிப்புப்பற்றிய படங்களும் செய்தியும் அந்தத்தமிழ்ப்பத்திரிகையின் முன்பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது.
 "படியடா" என்று அந்த அதிகாரி கோபத்துடன் கூறினார்.தலையை இடமும்  வலமுமாக அசைத்து முடியாது என்றான் அவன்.
  "படிக்கச்சொல்லுறன். ஏலாதுன்னுந்தலையை ஆட்டிறாய்" எனக்கோபத்துடன் கூறிய அதிகாரி பிரபுவின் முகத்தில் ஓங்கி அடித்தார். சுருண்டுவிழுந்த பிரபுவின் மூக்கால் இரத்தம் வடிந்தது.
  மிகவும் ஆத்திரத்துடன்பிரபுவின் சேட்டைப்பிடித்து உலுக்கிய அந்த அதிகாரி தமிழ்ப்பேப்பரை அவன் முகத்துக்கு முன்னால் பிடித்து "படிக்கபோறியா இல்லையா?" என்று கேட்டார்.
 இரத்தத்தையும் கண்ணீரயும் துடைத்தபடி வார்த்தையை வெளியிடத்தயங்கிய பிரபு தன்னால் படிக்கமுடியாதென இடமும் வலமுமாகத்தலையை அசைத்தான். அந்த அதிகாரி பிரபுவின் முகத்தில் ஓங்கிக்குத்தினார்.அவன் வாயிலிருந்து இரத்தம் வடிந்தது.
  "நான் படிக்கிறது சிங்கள மீடியம்" என்று தட்டுத்தடுமாறியபடி சிங்களத்தில் சொன்னான் பிரபு. அவனை அடிக்கக் கையை ஓங்கிய அதிகாரி திகைத்துப்போய்நின்றார்.

சூரன்.ஏ.ரவிவர்மா
ஞானம்  வைகாசி 2007

Sunday, May 27, 2012

மத்திய அரசுக்கு குறிவைக்கும் ஜெ


புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்வேளையில் மத்திய அரசில் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முயற்சிக்கிறார் ஜெயலலிதா. இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக் காலம் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியும் தடுமாறிக் கொண்டிருக்கிறன. டில்லிக் கட்சிகளின் தடுமாற்றத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய ஜெயலலிதா ஜனாதிபதி வேட்பாளராக மக்களவையின் முன்னாள் சபாநாயர் சங்கமாவின் பெயரை முன்மெõழிந்துள்ளார்.
இந்தியப் பிரதமர், ஜனாதிபதி ஆகியோரைத் தெரிவு செய்யும் உரிமை வட மாநிலக் கட்சிகளின் ஏகபோக உரிமையாக இருக்கிறது. அந்த உரிமையில் அதிரடியாகத் தலையிட்டு தமிழகத்திலிருந்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு காங்கிரஸ் கட்சியை கொதிப்படைய வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி முன் நிறுத்திய ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றிக்கு கருணாநிதி பெரும் பங்காற்றினார். இந்தியாவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தன் பங்கு அதிகம் இருக்க வேண்டும் என்று கருதுகிறார் ஜெயலலிதா.
இந்திய பிரதமரைத் தெரிவு செய்யும் இரண்டு சந்தர்ப்பங்கள் தமிழகத்துக்குக் கிடைத்தன. நேரு மறைந்தபோது இந்தியாவின் எதிர்காலம் பெருந் தலைவர் காமராஜனின் தலையில் சுமத்தப்பட்டது.
நேருவின் மகள் இந்திரா காந்தியைப் பிரதமராக்கி அழகுபார்த்தார் காமராஜர், அரசியல் மாற்றங்களின் பின்னர் இந்திரா காந்தி பெருந் தலைவர் காமராஜரைத் தூக்கி எறிந்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய மூப்பனார், கருணாநிதியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டபோது அடுத்த பிரதமரைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் தமிழகத்துக்கு கிடைத்தது.
பழங்குடி இனத்தவரான சங்மாவை ஜனாதிபதி வேட்பாளர் அறிவித்து நாடி பார்த்துள்ளார் ஜெயலலிதா. ஒடிஸா மாநில முதல்வரான நவீன் பட் நாயக் ஒருவர்தான் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார். தேசிய கட்சிகளிலுள்ள பழங்குடி இனத் தலைவர்களிடமும் மாநிலக் கட்சித் தலைவர்களுடனும் தொடர்பு கொண்டு சங்மாவுக்கு ஆதரவு வழங்குமாறு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்வானி உள்ளிட்ட பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு சங்மாவுக்கு ஆதரவு தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெயலலிதா. இடதுசாரித் தலைவர்களான பரதன், பிரகாஷ் காரக் ஆகியோரிடமும் சங்மாவுக்கு ஆதரவாக வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெயலலிதா. தமிழக சட்ட மன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியையும் மாக்ஸிஸ் கட்சியையும் புறந்தள்ளிய ஜெயலலிதா தனது காரியம் நடைபெற வேண்டும் என்பதற்காக வட மாநிலத்தில் உள்ள தலைவர்களிடம் சரணடைந்துள்ளார்.
இந்திய ஜனாதிபதித் தேர்தலில் சங்மாவை ஜெயலலிதா முன்னிறுத்தியதால் அவர் மீது மிகுந்த கடுப்பில் உள்ளது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியின் பரம எதிரிகளில் ஒருவர் சங்மா. சோனியா வெளிநாட்டுக் காரி என்று அவமானப்படுத்தியவர் சங்மா. ஆகையினால் சங்மாவை வீழ்த்துவதற்குரிய வியூகத்தை வகுக்கத் தயாராக உள்ளது காங்கிரஸ் கட்சி. தமிழக இடைத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் வேட்பாளரை அறிவிக்க முன்னர் தனது வேட்பாளரை அறிவித்து அதிர்ச்சியளித்தார் ஜெயலலிதா.
இந்திய ஜனாதிபத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் தமது வேட்பாளரை அறிவிக்க தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் சங்மாவை முன் மொழிந்து இந்திய அரசியலை தன்பால் ஈர்த்துள்ளார் ஜெயலலிதா.
இந்தியாவின் ஜனாதிபதியாகும் ஆசை சங்மாவிடம் உள்ளது. ஜெயலலிதா பற்ற வைத்த பொறியினால் கவரப்பட்ட சங்மா சோனியா காந்தியைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டார். சங்மாவைச் சந்திப்பதற்கு விரும்பாத சோனியா சந்திப்புக்கு மறுத்து விட்டார். சங்மாவைச் சந்திக்க சோனியா மறுத்ததினால் அவருடைய நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய ஜனாதிபதியாவதற்கு சங்கமா விரும்புகிறார். சோனியா இத்தாலியக்காரி, வெளிநாட்டுப் பெண் என்று தான் கூறிய தவறை உணர்ந்து அதற்காக மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறார். அரசியல் நிரந்தர எதிரியுமில்லை நிரந்தர நண்பனும் இல்லை என்ற கோட்பாட்டைக் காலம் கடந்து உணர்ந்துள்ளார் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சங்மா. கட்சித் தலைவரான தன்னை விட உயர்ந்த ஸ்தானத்துக்குச் சங்மா செல்வதை சரத் பவார் விரும்பமாட்டார். ஆகையினால் தேசியவாத காங்கிரஸ் கட்சியே சங்மாவுக்கு ஆதரவு வழங்கமாட்டாது.
இந்திய மத்திய அரசில் செல்வாக்குச் செலுத்துவதில் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே பலத்த போட்டி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் செல்வாக்குடன் உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை முறியடிப்பதற்காகவே சங்மா என்ற அஸ்திரத்தை ஏவியுள்ளார் ஜெயலலிதா. இந்திய அரசியலில் அதிகம் செல்வாக்குள்ள நரேந்திர மோடி, லல்லு பிரசாத் யாதவ், மம்தா பனர்ஜி, சரத் பவார், மாயாவதி போன்ற வட மாநிலத் தலைவர்கள் ஜெயலலிதாவின் கோரிக்கைக்கு சாதகமான பதிலளிக்கமாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையிலான இந்திய ஜனாதிபதித் தேர்தல் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான பலப் பரீட்சையாக மாறியுள்ளது.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு27/05/12

Friday, May 25, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 3
பெலாரஸ்  

பெலாரஸ்
லண்டன் ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் பங்கேற்பதற்கு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து பெலாரஸ் ஸ்பெயின், சுவிட்ஸர்லாந்து ஆகியன தகுதி பெற்றுள்ளன. ஒலிம்பிக்கை நடத்தும் இங்கிலாந்து நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது. 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் பல நாடுகளைப் பிரித்தபோது உருவான நாடுகளில் ஒன்று பெலாரஸ். ஜேர்மனிய பயிற்சியாளரான பேர்ஸ்ரங்கின் வழிகாட்டலில் பெலாரஸ் பல சாதனைகளைச் செய்துள்ளது. 21 வயதுக்குட்பட்ட யு.ஈ.எஃப்.ஏ. 2011 ஐரோப்பிய சம்பியனான பெலாரஸ் அணி எதிரணிகளுக்குச் சவால் விடும் வகையில் பலமானது. யூரோ 2012 கிண்ணஸ் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெலாரஸ் பெற்றுள்ளது.
ஒலிம்பிக் தகுதி காண்போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்று ஒலிம்பிக்கில் நுழைந்துள்ளது பெலாரஸ். ஐஸ்லாந்துடனான போட்டியில் வெற்றி பெற்ற பெலாரஸ் ஸ்பெயினுடனான போட்டியில் மேலதிக நேரத்தில் தோல்வியடைந்தது. செக் குடியரசுடனான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தனது ஒலிம்பிக் கனவை உறுதி செய்தது. ஈக்ரோ பிலிபென்கோ, அன்ரிவொதன் கோ ஆகிய வீரர்கள் மீது பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர் ரசிகர்கள். குழு சி இல்  உள்ள பெலாரஸ் பிரேஸில், எகிப்து, நியூஸிலாந்து அணிகளுடன் மோத உள்ளது.
இங்கிலாந்து
இங்கிலாந்து உதைப்பந்தாட்ட அணி 1960ஆம் ஆண்டின் பின்னர் ஒலிம்பிக்கில் விளையாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளது. 1908ஆம் ஆண்டு லண்டனிலும், 1912ஆம் ஆண்டு ஸ்ரொக்கோட்டிலும் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது இங்கிலாந்து. 1948ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் டென்மார்க்கிடம் தோல்வியடைந்து நான்காவது இடத்தைப் பெற்றது. லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இங்கிலாந்து உதைபந்தாட்ட அணி சிறப்பாகச் செயற்பட்டதால் இம்முறையும் பதக்கம் பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ரசிகர்கள்.
1992, 1996, 2008ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற 21 வயதுக்குட்பட்ட யு.ஈ.எஃப்.ஏ. உதைபந்தாட்டப் போட்டியில் இங்கிலாந்து சம்பியனானது. ஆனால், ஒலிம்பிக்கில் விளையாடும் சந்தர்ப்பத்தைத் தவற விட்டது யூரோ. 2012இல் விளையாடுவதற்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.
1908ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஹரோல்ட்ஸ் ரெப்லி ஆறு கோல்கள் அடித்தார். ஹரோல்ட்வல்டேனர் 1912ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஒன்பது கோல்கள் அடித்தார். 1948ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் பொப் ஹர்டிஸ்ரி மூன்று கோல்களை அடித்தார்.
சுரெட் பலோ பிரஸர் தம்பெல், ஜக்ரொட்வெல், மாக் அல்பிரிட்ரொன், ஜோதான் ரொடேஸ் ஆகியோர் சாதனை புரிவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. செனகல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உருகுவே ஆகியவற்றுடன் குழு "ஏ'யில் உள்ளது இங்கிலாந்து.

ரமணி
மெட்ரோநியூஸ் 25/05/12

Thursday, May 24, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 33


கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பலின் சதியால் தலைமறைவாக இருக்கும் கணவனைக் காப்பாற்றுவதற்கும் பணத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் சபல புத்தி படைத்த மூன்று முதியவரை மயக்கி பணம் பறிக்கும் இளம் பெண்ணின் கதைதான் ஓடி விளையாடு தாத்தா. 1977ஆம் ஆண்டு வெளியான ஓடி விளையாடு தாத்தா என்ற படம் குலுங்கும் நகைச்சுவை காட்சிகளால் அதிக வருமானத்தை பெற்று தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இலாபத்தைக் கொடுத்தது.
வி.எஸ்.ராகவனின் ஸ்டூடியோவில் முகாமையாளராகப் பணியாற்றுகிறார் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்தின் மனைவி ஸ்ரீப்பிரியா. சந்தோசமாக வாழ்ந்து வரும் ஸ்ரீகாந்தின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விடும் ஜெய் கணேஷ். வேலை செய்பவர்களுக்குச் சம்பளம் கொடுக்கும் போது பணம் குறைகிறது. ஸ்ரீகாந்த் வங்கிக்குச் சென்று பணத்தை எடுத்து வருகிறார். அப்போது ஜெய் கணேஷ் பணப்பெட்டியை மாற்றி வைக்கிறார். ஜெய் கணேஷ் வைத்த பணப்பெட்டியில் கள்ள நோட்டு இருந்ததனால் ஸ்ரீகாந்த் மீது திருட்டுப் பழி விழுகிறது. பணத்தைக் கையாடி கள்ள நோட்டைப் புழக்கத்தில் விட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் ஸ்ரீகாந்த்தைக் துரத்துகிறது.
வங்கியிலிருந்து எடுத்து வந்த பணத்தில் கள்ள நோட்டு எப்படி வந்ததெனத் தெரியாது கள்ள நோட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை எனக் கூறி தன்னைக் காப்பாற்றும் படி மனைவி ஸ்ரீப்பிரியாவிடம் கூறுகிறார் ஸ்ரீகாந்த். கணவன் மீது விழுந்த திருட்டுப் பழியைத் தீர்ப்பதற்கும் பணத் தேவையைப் பூர்த்தி செய்யவும் தன் மீது ஜொள்ளுவிடும் மூன்று முதியவர்களை வளைத்துப் போடத்திட்டமிடுகிறார் ஸ்ரீப்பிரியா. சபலபுத்தியுடன் அலையும் வி.கே.ராமசாமி, எஸ்.ஏ.அசோகன், சுருளிராஜன் ஆகிய மூன்று பணக்கார முதியவர்களையும் தன் வலையில் விழுத்துகிறார் ஸ்ரீப்பிரியா. மூவரையும் தனித்தனி இடங்களில் தங்க வைத்து அவர்களுடன் குடும்பம் நடத்துவது போல் நடிக்கிறார். மூன்று முதியவர்களும் தாராளமாக பணத்தை வாரி இறைக்கின்றனர். இரவிலே வீட்டுக்கு வந்து போகும் கணவன் ஸ்ரீகாந்த்துடன் எதிர்காலம் பற்றி திட்டமிடுகிறார் ஸ்ரீப்பிரியா.
ஸ்ரீப்பிரியா கர்ப்பமாகிறாள். ஸ்ரீப்பிரியாவின் கர்ப்பத்துக்கு நீங்கள்தான் காரணம் என்று வி.கே.ராமசாமி, எஸ்.ஏ.அசோகன், சுருளிராஜன் ஆகிய மூவரிடமும் கூறுகிறாள் ஸ்ரீப்பிரியா. குடும்பம் நடத்தாமலே அப்பாவானதை அறிந்த மூன்று முதியவர்களும் அதிர்ச்சியடைகின்றனர். குழந்தையைக் காரணம் காட்டி அதிக பணத்தைப் பெற முயற்சி செய்கிறாள் ஸ்ரீப்பிரியா. இதற்கிடையில் கள்ள நோட்டுக் கும்பல் பிடிபடுகிறது. ஸ்ரீகாந்த் மீது விழுந்த திருட்டுப்பட்டம் துடைக்கப்படுகிறது. வி.கே.ராமசாமி , எஸ்.ஏ.அசோகன், சுருளிராஜன் ஆகிய மூவரையும் ஏமாற்றிய உண்மையைக் கூறி மன்னிப்புக் கேட்கும் ஸ்ரீப்பிரியா அவர்கள் மூவரிடமும் மோசடியாகப் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுக்கிறாள்.
ஸ்ரீகாந்த் ஸ்ரீப்பிரியா, வி.கே.ராமசாமி, எஸ்.ஏ.அசோகன், சுருளிராஜன் , காந்திமதி, மனோரமா, வி.கோபாலகிருஷ்ணன், ஜெய்க@ணஷ், வி.எஸ்.ராகவன் ஆகியோர் நடித்தனர். இளையராஜாவும் @வதாவும் இணைந்து இசை அமைத்தனர். கதை வசனம் எழுதி இயக்கியவர் வேலு.
முருகன் காட்டிய வழி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய ஸ்ரீப்பிரியாவின் வாழ்வில் மூன்றாண்டுகளின் பின் வெளிவந்த படம் ஓடி விளையாடு தாத்தா. பணக்கார முதியவர்களை மயக்கும் கவர்ச்சிகரமான வேடத்தில் துணிச்சலுடன் நடித்தார். ஸ்ரீப்பிரியாவின் கவர்ச்சியான நடிப்பைக்காண தியேட்டரில் கூட்டம் அலை மோதியது.
ஸ்ரீப்பிரியாவின் கவர்ச்சியில் மயங்கிய முதியவர்களாக நடித்த வி.கே.ராமசாமி, எஸ்.ஏ.அசோகன், சுருளிராஜன் ஆகிய மூவரும் தோன்றும் காட்சிகள் தியேட்டரைக் கலகலப்பாக்கின.
ரமணி
மித்திரன்20/05/12

Sunday, May 20, 2012

அசுர பலத்துடன் ஜெயலலிதாஆதரிப்பாரின்றி விஜயகாந்த்

புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் ஒதுங்கி இருக்கும் நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துத் தனது கட்சி வேட்பாளரைக் களமிறக்கியுள்ளார் விஜயகாந்த். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் இரு முனைப் போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது. ஜெயலலிதாவின் கடைக் கண் பார்வையால் தமிழக சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவராக வீற்றிருக்கும் விஜயகாந்த் இன்று ஜெயலலிதாவைத் தனித்து நின்று எதிர்க்க துணிந்துவிட்டார்.
இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு சாதகமாக அமைவதுண்டு. ஆட்சி அதிகாரம் அரச இயந்திரம் அனைத்தும் முடக்கி விடப்படுவதால் எதிர்க்கட்சி இடைத் தேர்தலில் வெற்றி பெறுவது முயற்கொம்பாகவே அமையும். திராவிட முன்னேற்ற ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழகமும் கூட்டணி கட்சியான காங்கிரசும் வெற்றி பெற்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் நடைபெற்ற திருச்சி மேற்கு சங்கரன் கோயில் ஆகிய இடைத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றியை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சியான மாக்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டைத் தொகுதியில் வெற்றி பெற்றது. கூட்டணி தர்மத்தின்படி  புதுக்கோட்டைத் தொகுதியை மாக்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுக் கொடுத்திருக்க வேண்டும்.
தமிழகத் தேர்தல் முடிந்ததும் கூட்டணிக் கட்சிகளை ஒதுக்கி வைத்தார் ஜெயலலிதா. விஜயகாந்தும் இடதுசாரிகளும் ஜெயலலிதாவினால் ஓரம் கட்டப்பட்டனர். தமிழகத்தின் செல்வாக்கு இல்லாத கட்சித் தலைவர்களைத் தன் அருகில் வைத்துள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதா அவமானப்படுத்துவதைப் பொறுக்க முடியாத விஜயகாந்தும் மாக்சிஸ்ட் கட்சி தலைவர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி முறிவடைந்த நிலையில் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தனது வேட்பாளரைக் களமிறக்கியுள்ளார் விஜயகாந்த். தமிழக அரசியல் கட்சிகள் புதுக்கோட்டை இடைத் தேர்தலை புறக்கணித்த நிலையில் ஜெயலலிதாவை எதிர்த்து நிற்கிறார் விஜயகாந்த்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் விஜயகாந்தின் வேட்பாளரக்கு மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு வழங்கும்.  ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்குவது சந்@தக@ம.  தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தியிருந்தால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லாததினால் பொது வேட்பாளர் என்பது பேச்சளவிலேயே நின்று விட்டது.
விஜயகாந்தும் கருணாநிதியும் மனம் விட்டுப் பேசி இருந்தால் புதுக்கோட்டையில் பொது வேட்பாளரை நிறுத்தி இருக்க முடியும். இருவருக்கும் இடையேயான கௌரவப் பிரச்சினையால் அண்ணா திராவிட முன்னேறக் கழகத்தின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கருணாநிதியையும் மிக மோசமாகத் தாக்கிப் பேசினார் விஜயகாந்த். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரப் பீரங்கியாகச் செயல்பட்ட வடிவேல் விஜயகாந்தைத் தரக்குறைவாகப் பேசினார்.
இந்த நிலையில் யார் முதலில் இறங்கி வருவதென்ற போலி கௌரவத்தினால் பொது வேட்பாளர் அடிபட்டுப் போய்விட்டது. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும்படி விஜயகாந்த்துக்கு கோரிக்கை விடுத்தால் எதுவித நிபந்தனையும் இன்றி ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருக்கிறார் கருணாநிதி. ஆதரவு தெரிவிக்காத நிலையிலும் விஜயகாந்தின் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் பொது வேட்பாளர் போன்றே களத்தில் நிற்கிறார். அவருக்கு ஆதரவு வழங்குவதாக கருணாநிதி, வைகோ டாக்டர் ராமதாஸ் திருமாவளவன் போன்ற தலைவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லையே தவிர அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைய வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓராண்டு ஆட்சியின் பின்னர் நடைபெறப் போகும் புதுக்கோட்டை இடைத் தேர்தல் தமிழகத்தின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் சர்ச்சை, முல்லை பெரியாறு விவகாரம், தமிழகத்தில் அடிக்கடி நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளையும் தாண்டி வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளார் ஜெயலலிதா.
தமிழக எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தன்னந்தனியாக புதுக்கோட்டை இடைத் தேர்தலைச் சந்திக்கிறார் விஜயகாந்த். தேர்தல் தோல்வி என்பது விஜயகாந்துக்குப் புதிதல்ல. தோல்வி உறுதி என்று தெரிந்து கொண்டே தேர்தலைச் சந்திப்பவர் விஜயகாந்த். புதுக்கோட்டையிலும் அப்படி ஒரு நிலை ஏற்படச் சந்தர்ப்பம் உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது புதுக்கோட்டையில் போட்டியிட்ட பெரியண்ணன் மூவாயிரம் வாக்குகளினால் தோல்வியடைந்தார். ஆகையினால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று விஜயகாந்த் கூறியிருந்தால் புதுக்கோட்டை இடைத் தேர்தல் சூடு பிடித்திருக்கும்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களின் போலிக் கௌரவத்தினால் புதுக்கோட்டை இடைத் தேர்தல் வெற்றியை கொண்டாட ஜெயலலிதா தயாராகி விட்டார்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு20/05/12

Friday, May 18, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 2

ஜப்பான்
லண்டன் ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றுவதற்கு ஆசிய கண்டத்தில் நடைபெற்ற தகுதி காண் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென் கொரியா ஆகிய நாடுகள் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன. பேர்லின் 1936, மெல்போன் 1956 ரோக்கியோ 1964 ஒலிம்பிக் போட்டிகளில் ஜப்பான் விளையாடியது. மெக்ஸிக்கோவில் 1968 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் வெண்கலப் பதக்கம் பெற்றது. 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்குப் பின்னர் லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கு ஜப்பான் தகுதி பெற்றுள்ளது.
முதல் சுற்றுப் போட்டியில் 4-3 என்ற கணக்கில் குவைத்திடம் தோல்வியடைந்தது ஜப்பான். மலேஷியா, சிரியா, பஹ்ரேன் ஆகியவற்றுக்கு எதிரான மிக முக்கியமான போட்டிகளில் ஜப்பான் வெற்றி பெற்றது. சிரியாவுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கிலும் மலேஷியாவுக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்ற ஜப்பான் லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது.
லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடுவதற்காக எட்டுத் தகுதி காண் போட்டிகளில் விளையாடிய ஜப்பான் 17 கோல்களை அடித்தது. கோல் காப்பாளர் சுசி ஹொண்டா, மத்திய கள வீரர் யுகி ஒட்சு, பின் கள வீரர் ஹிரோகி சகாய் ஆகியோர் மீது ஜப்பான் ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

தென் கொரியா
ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் தென் கொரியா அணி தொடர்ச்சியாக எட்டாவது முறையாகப் பங்கு பற்றத் தகுதி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக ஆறாது தடவையாக ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும் தகுதியை பெற்றுள்ளது. 1948 ஆம் ஆண்டு உதைபந்தாட்டக் களத்தில் களம் புகுந்த தென் கொரியா தனது முதலாவது சுற்றுப் பயணத்தில் 5-3 என்ற கோல் கணக்கில் மெக்ஸிக்கோவை தோற்கடித்தது. 12-0 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் தோல்வியடைந்தது.
அட்லாண்டா 2004 இல் உதைபந்தாட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற பரகுவேயுடனான போட்டியில் மிகத் திறமையாக விளையாடி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. ஓமான், கட்டார், சவூதி அரேபியா ஆகியவற்றுடனான தகுதி காண் போட்டிகளில் தென் கொரியா வெற்றி பெற்றது. ஜோர்தானுடனான போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஒலிம்பிக்கில் விளையாடுவதற்கான மூன்றாவது சுற்று தகுதி காண் போட்டியில் தலா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமநிலைப்படுத்தியது. தென் கொரியா எட்டு கோல்களை அடித்தது.
23 வயதுக்குட்பட்ட தென் கொரிய உதைபந்தாட்ட அணி கடைசியாக விளையாடிய 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
பின் கள வீரரான ஹொல் ஜெங்  ஹோ-கிம் போகுங், கூஜா  ஹோ ஆகியோர் எதிரணிகளுக்கு நெருக்கடி கொடுப்பர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் முதன் முதலில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளது ஐக்கிய அரபு இராச்சியம். 1980 ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக் தகுதி காண் போட்டிகளில் விளையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இறுதிச் சுற்றில் வெளியேறியது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இன்றைய முன்னேற்றத்துக்கு அதன் பயிற்சியாளரான மஹிட் அலியே முக்கிய காரணம். இவரின் பயிற்சியின் கீழ் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதைபந்தாட்ட அணி பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. 20 வயதுக்குட்பட்ட 19 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட அணிகள் பல தொடர்களில் வெற்றி பெற்று சம்பியனாகியது. ஒலிம்பிக் தகுதி காண் போட்டிகளில் ஐக்கிய அரபு எமிரேஸ்ட் தோல்வியடையவில்லை. ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளைச் சம நிலையில் முடித்தது. அஹமட் ஹலில், ஹம்டன் அல் கமலி, ஒமார் அப்துர் ரஹ்மான், மொஹமட் அஹமட் ஆகியோரின் செயற்பாடு எதிரணிகளைத் திக்கு முக்காடச் செய்யும்.    
    ரமணி
மெட்ரோநியூஸ் 13/05/12

Thursday, May 17, 2012

வேகத்தை அதிகரிக்க நவீன ஆடை

லண்டன் 2012  ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடவுள்ள அமெரிக்க மெய்வல்லுனர்கள் தங்கள் எதிர் போட்டியாளர்களை விட அதிவேகமாக செயற்படும் விதத்தில் உயர் தொழில் நுட்பம் வாய்ந்த கோல்ப் பந்தொன்றால் உணர்ச்சியூட்டும் வகையில்  வடிவமைக்கப்பட்ட ஆடை வகைகளை அமெரிக்க அணியின் அனுசரணையாளரான  நைக்   நிறுவனம் வெளியிட்டுள்ளது. 100 மீற்றர்  குறுந்தூர அதிவேக  ஓட்டத்தை 0.23  விநாடிகளில் ஓடி முடிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த திருக்கை மீன் வேகம் கொண்ட  ஒரே வகைத் துணியால் தைக்கப்பட்டுள்ள  ஆடைவகை வெளிவந்துள்ளது. உலகில் அதிவேக ஓட்டப் போட்டிகள் நிகழுமிடத்து ஒவ்வொரு மில்லி விநாடியும் கணக்கிடப்படுகிறது. அமெரிக்க குறுந்தூர அதிவேக ஓட்ட வீரர் வோல்டர் டிக்ஸின் கடந்த 2008  இல் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் 100 மீற்றர்  போட்டியில் எடுத்திருந்த நேரத்தை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
அப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்த ஜமேக்காவின் உசைன் போல்ட்டை விட அவர் 0.22 விநாடிகள் மட்டுமே கூட எடுத்து வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
ஒலிம்பிக் போட்டியின்போது உசைன் போல்டுக்கு பியுமோ நிறுவனமே அனு சரணை வழங்குகிறது. எனவேநைக் நிறுவனத்தின்  இந்த உறுதி மொழி நம்பப்படுமானால் அமெரிக்க வீரர் டிக்ஸ் உசைன் போல்டை இம்முறை வித்தியாசமான  ஓட்ட ஆடையணிவதன்  மூலம் இலகுவாக வீழ்த்த முடியும். மேலும் முன்னர்  0.02 விநாடிகள் கூட எடுத்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த ரிச்சர்ட் தொம்சனையும் நிச்சயமாக அவர் முந்திவிடலாம். அடிடாஸ்  நிறுவனத்தின்  அனுசரணையில் விளையாடியிருந்த ட்ரினிடாட் டொபாகோ அணியின் ஒரு வீரராகவே தொம்சன் களமிறங்கி இருந்தார்.
நைக் நிறுவனத் தயாரிப்பான வாயு இயக்க இழுவையைக் குறைக்கும் சக்தி கொண்ட இந்த ஓட்ட @வகத்தை அதிகரிக்கும் ஆடையில் கோல்ப் பந்தின் சிறிய குழிவுகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கு மேலான காலப் பகுதியில் காற்று சுரங்கமொன்றில் நூற்றுக்கணக்கான மணித்தியாலங்களாக இதன் செயற்றிறன் பரீட்சிக்கப்பட்டது.
இத்தகைய ஒவ்வொரு  ஓட்ட ஆடையும் சுமார் 14 பிளாஸ்டிக் போத்தல்களை மீளுருவாக்கம் செய்து 82 சதவீத பொலிஸ்டர் துணி கொண்டு மிகவும் சிக்கனமான முறையில் வடிமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.
அத்துடன்  ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ள ரஷ்ய மற்றும் ஜேர்மன் அணிகளுக்கும் இந்த விளையாட்டு ஆடை அணிகலன் உற்பத்தி நிறுவனமேநைக் அனுசரணை  வழங்கியுள்ளமையும் கவனிக்கத்தக்கது
மெட்ரோநியூஸ்16/05/12

Tuesday, May 15, 2012

பொன்வண்ணமயமாகப்போகும் லண்டன் ஒலிம்பிக் பூங்கா

பிரித்தானியாவில் மனித முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள காட்டுப் பூக்கள் நிறைந்த புல்லினங்கள், லண்டன் 2012  ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள ஒலிம்பிக் பூங்காவில் இந்த வாரம் நாட்டப்பட்டுள்ளன
மேற்படி போட்டிகள் தொடங்க இன்னும் 73 நாட்களே இருக்கும் நிலையில் ஒலிம்பிக் விளையாட்டரங்கைச் சுற்றிலும் அவை பொன்னிற மயமாகும் வகையிலேயே இவ்வாறு நாட்டப்பட்டுள்ளனவாம்.
பத்துக்கு @மற்பட்ட கால்பந்தாட்ட மைதானங்களில் கடந்த இரண்டு வருடங்களாக பரீட்சித்துப் பார்க்கப்பட்ட பின்னரே மேற்படி விளையாட்டுகள் இடம்பெறும். விளையாட்டரங்கிற்கு அழகு சேர்க்கும் வகையில் தேன் சிந்தும் காட்டு மலர்ச் செடிகள் நாட்டப்பட்டுள்ளன. இது  குறித்து லண்டன் 2012  ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான செபஸ்தியன் கோ தெரிவிக்கையில்,
மேற்படி போட்டிகளுக்கான தெரிவு நிகழ்வுகளை வெற்றிகரமாகப் பூர்த்தி செ#த பின்னர் மில்லியன்  கணக்கான  விளையாட்டு இரசிகர்களின் இதயங்களை இந்தக் கோடை காலத்தில் ஈர்த்தெடுக்கும் நடவடிக்கையில் நாம் தற்போது ஈடுபட்டு வருகின்றோம்.
எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஒலிம்பிக் விளையாட்டரங்கைச் சுற்றியுள்ள பகுதியெங்கும் இந்தச் செடிகள் பூத்துக்  குலுங்கி அதனைப் பொன்னிறமயப்படுத்தும் வகையில் இத்துறைசார் நிபுணர்கள் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொன்மயமான தேன் நாடா
(A Ribbon of Gold) )
ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச வன புஷ்ப நிபுணரும் பேராசிரியருமான நைகல் டனெட் (Nigel Dunnett) ) இனால் வடிவமைக்கப்பட்ட ஆற்றங்கரையோரப் புல்வெளிகள் எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி  நடை பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின்போது பொன்னிறமாகப் பூத்துக் குலுங்கும் நிலையில் இருக்கப் போகின்றன. இதுபற்றி பேராசிரியர் நைகல் குறிப்பிடுகையில்,
வருடக் கணக்கான பரீட்சார்த்த நடவடிக்கைகள்  மற்றும் இரண்டு பயிற்சிகளின் பின்னரே ஒலிம்பிக் விளையாட்டரங்கைச் சுற்றியுள்ள பொன்மயமானதோர் நாடாவைப் போன்று  காட்சியளிக்கவுள்ள இந்த இறுதி வடிவம் பெற்ற புல்லினங்களை  நாட்டியுள்ளோம். இப்போது வெறும் சேற்று நிலமாகக் காட்சியளிக்கும்  இப்பிரதேசங்கள் இன்னும்  ஒரு சில வாரங்களில் தேனீக்களும் பட்டாம் பூச்சிகளும் தேன் சிந்தும்  மலர்களில் ரீங்காரமிட்டபடி அமர்ந்து தேன் உண்ணும் காட்சிகளை இரசிகர்கள் நேரிலும் தொலைக்காட்சியிலும் கண்டு களிக்கப் போகின்றனர் என்றார்.
மனங்கவர் சிகரம்
ஒலிம்பிக் விநியோக அதிகார சபை ஒலிம்பிக் பூங்காவில் 4,000 மரங்கள் 300,000 ஈர நிலத் தாவரங்கள் மற்றும் 150,000 க்கு மேற்பட்ட  வருடம் முழுவதும் பூக்கும் தாவரங்கள் மற்றும் புதர்களையும் இதுவரை நாட்டியுள்ளது.  மாரிகாலம் மற்றும் வசந்தகாலம் முழுவதும் தோட்டக் கலை  நிபுணர்கள் குழுவினர் பொது அர்ப்பணிப்புடன் தேவையான பூர்வாங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு இதனை இந்தக் கோடை காலத்தில் காண்போரைக்   கவர்ந்திழுக்கும்  சிகரமாக்கியுள்ளனர்  என்றே கூறலாம்.
மேற்படி ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்ததும்  இந்த பொன் வண்ணமயமான செடிகள் காலப் போக்கில் படிப்படியாக வளர்ந்து எதிர்காலத் தலைமுறையினருக்கான புதியதோர்  பூங்காவாகவும் வனவிலங்கு சரணாலயமாகவும் காட்சியளிப்பதில் சந்தேகமில்லை.
மெட்ரோநியூஸ்15/05/12

Monday, May 14, 2012

ஒலிம்பிக் கனவை நனவாக்ககாதலைத் துறந்த உசைன் போல்ட்


உலகின் குறுந்தூர அதிவேக ஓட்ட வீரரான ஜமெய்க்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் லண்டனில் நடைபெறவுள்ள கோடை கால ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்லும் தனது கனவை நனவாக்கும் பொருட்டு தான் மனதாரக் காதலித்துவரும் வெள்ளையின நவநாகரிக வடிவமைப்பாளரான லூபிகா சுடஸ்லோவாக்கிடமிருந்து பிரிந்து செல்லத் தீர்மானித்துள்ளார்.
இருபத்தைந்து வயதான உசைன் போல்ட் தனது தாயக மண்ணில் நடைபெற்ற ஓட்டப் போட்டி அமளிதுமளியின் போது வெள்ளை இனப் பெண்ணொருவருடன் வெளியே சென்றதாக எழுந்த விமர்சனத்தை தொடர்ந்தே இந்தப் பிரிவு பற்றிய செய்தி கசிந்துள்ளது. ஆயினும் அவரது நெருங்கிய நண்பர்களின் கூற்றுப்படி அவர்களிருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளமை நிரூபிக்கப்பட்டது.

ஆயினும் அவர்களிருவரும் பிரிந்து கொள்வதில் அன்னியோன்னியமான முறையில் தீர்மானித்துள்ளதாக ஜ@மக்காவில் தெரிவிக்கப்பட்டது. ஜமெய்க்காவில் உசைன் போல்ட் லண்டன் ஒலிம்பிக்கில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஆகிய போட்டிகளில் தான் முடிசூடிக்கொண்ட தங்கப் பதக்க சாதனைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும் தனது முன்னைய சாதனைகளை முறியடிக்கவுமென கங்கணங் கட்டிய நிலையிலேயே இத்தகையதோர் முடிவை எடுத்துள் ளார்.
தனது பதினா ன்கு வயதில் கனடாவுக்குக் குடிபெயர்ந்து அங்கு நவநாகரிக வடிவமைப்புக் கலையைக் கற்றுத் தேர்ந்த 28 வயதான லூபிகா வருட விடுமுறையொன்றின் போது உசைன் போல்ட்டை பாடக நண்பர் ரமிசின் மூலம் சந்தித்தார். அதன் பின்னர் அவர்களிருவரும் நெருக்கமான முறையில் இராப்போசன கேளிக்கை நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர்களிருவரும் முத்தமிடும் காட்சியொன்று கடந்த மாதம் வெளியாகியிருந்த பின்னர் அவர்கள் அடுக்கடுக்கான அவதூறுகளைச் சந்திக்க நேர்ந்தது.
உசைன் போல்ட்டுக்கு நெருங்கிய வட்டாரமொன்று இதுபற்றி கூறுகையில், அவர் ஏராளம் உறவுகளை வைத்திருப்பார். தற்போது அவர் தனது ஓட்டத்துறையில் அதிக கவனஞ் செலுத்தி வருகின்றார். போல்டின் முகவரான றீக்கிசிம்ஸ் இதுபற்றி தெரிவிக்கையில், மெய்வல்லுநர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை என்றார்.
மெட்ரோநியூஸ் 14/05/12

Sunday, May 13, 2012

ஜெயலலிதாவின் கோட்டையை தகர்க்குமா புதுக்கோட்டை

 தமிழகத்தின் பிரதான கட்சிகள் புதுக்கோட்டை இடைத் தேர்தலைப் புறக்கணித்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துக் களமிறங்குகிறார் விஜயகாந்த். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரச இயந்திரத்தை எதிர்த்து இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதனால் கருணாநிதி, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வைகோ ஆகியோர் தமது கட்சி போட்டியிடாது என்று அறிவித்துவிட்டனர். தமிழகத் தேர்தலின் போது புதுக்கோட்டைத் தொகுதியில் வெற்றிபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி ஜெயலலிதாவின் ஆதரவுடன் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பியது. ஜெயலலிதா கைவிட்டதால் கம்யூனிஸ்ட் கட்சி ஒதுங்கியது.
காங்கிரஸ் கட்சி பாரதீய ஜனதாக் கட்சி ஆகியன இடைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றிய முடிவை இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. விஜயகாந்தின் அறிவிப்பால் மாக்சிஸ்ட் அமைதியாகிவிட்டது.
திராவிட முனனேற்றக் கழக ஆட்சியின்போது தொண்டா முத்தூர், கம்பம் ஸ்ரீ வைகுண்டம் உட்பட ஐந்து தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை. தோல்வியைப் பற்றி சிறிதும் கவலைப்படாத விஜயகாந்த் சகல இடைத் தேர்தல்களிலும் தனது கட்சியின் வேட்பாளரை போட்டியிடச் செய்து கணிசமான வாக்குகளைப் பெற்றார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான வாக்குகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவான வாக்குகளும் விஜயகாந்தின் கட்சிக்குக் கிடைத்தன. இதனால் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் வாக்கு வங்கி அதிகரித்தது. விஜயகாந்தின் வளர்ச்சியை தடுப்பதற்காக பொன்னாகரம் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சி போட்டியிட்டால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு வழங்கும். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் புதுக்கோட்டை இடைத் தேர்தலை புறக்கணித்ததனால் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
. திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் 40 ஆயிரம் மேலதிக வாக்குகளாலும், சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் 68 ஆயிரம் அதிகப்படியான வாக்குகளாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. திருச்சி மேற்கிலும் சங்கரன் கோவிலிலும் பல முனைப்போட்டி இருந்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. சங்கரன் கோவிலில் எதிர்க்கட்சிகள் கட்டுப்பணத்தை இழந்தன. அப்படி ஒரு நிலை புதுக்கோட்டை இடைத் தேர்தலிலும் ஏற்படக்கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளனர் ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரும் இது பற்றி வெளிப்படையாகப் பேசாதுள்ளனர்.
கருணாநிதி, வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் வெளிப்படை யாக விஜயகாந்துக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள். இவர்களின் ஆதரவை விஜயகாந்தும் வெளிப்படையாகக் கேட்கமாட்டார். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் விஜயகாந்தின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்திருந்தது. விஜயகாந்ததும் ஒதுங்கினால் புதுக்@காட்டையில் @பாட்டியிட மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு விஜயகாந்த் விட்டுக் கொடுந்திருந்õல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து  எதிர்க்கட்சி பொது வேட்பாளர் போட்டியிடும் வாய்ப்பு உருவாகியிருக்கு. ஜெயலலிதாவை அச்சுறுத்தும் ஆயுதம் விஜயகாந்தின் கையில் இல்லை.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சி போட்டியிடாது ஒதுங்கிகி இருந்தõல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது வேட்பாளரை நிறுத்தும் நிலை உருவாகி இருக்கும். மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள், கருணாநிதி, வைகோ, திருமாவளன், டாக்டர் ராமதாஸ் ஆகியோரைச் சந்தித்து தமக்கு ஆதரவு தரும்படி வேண்டுகோள் விடுத்திருப்பர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒரு கூட்டணியில் உள்ளன.  அசுர பலத்துடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தனித்து நின்று எதிர்க்கும் சக்தி விஜயகாந்திடம் இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் துணை இன்றி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து வெற்றி பெற முடியாது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாகும் சூழல் உள்ளது. புதுக்கோட்டை இடைத் தேர்தல் அதற்கான கால்கோளாக அமையும் ச‌ந்தர்ப்பம் தவற விடப்பட்டுள்ளது.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு13/05/12

Friday, May 11, 2012

திரைக்குவராதசங்கதி37


பசி' திரைப்படத்தின் வெற்றி துரையைதிரை உலகில் பிசியாக்கியது. 1979 ஆம்ஆண்டு ஒன்பது படங்களை இயக்கினார்துரை. பசி'யைத் தொடர்ந்து கிளிஞ்சல்கள்என்ற படம் வியாபார ரீதியில் துரையைஉயர்த்தியது. மோகன் கதாநாயகனாகநடித்த கிளிஞ்சல்கள் படத்தின் மூலம் பூர்ணிமா ஜெயராம் தமிழில் கதாநாயகியாகஅறிமுகமானார்.பிரபல ஹிந்தி நடிகையான ஹேமமாலினியின் தாயாரான ஜெயா ச‌க்கவர்த்திதான்பூர்ணிமாவைப் பற்றி துரைக்குக்கூறினார். பூர்ணிமாவை சென்னைக்குஅழைத்து புகைப்படமெடுத்துப் பார்த்தார் துரை. பூர்ணிமாவின் அழகு துரையை வெகுவாகக் கவர்ந்து விட்டது.
மஞ்சில் விரிங்ச பூக்கள் என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் பூர்ணிமாமுதன் முதலில் திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தப் படத்தின் மூலம் அவருக்கு பெரும்புகழ் கிடைத்தது. அந்தப்புகழை விட அதிகமான புகழை கிளிஞ்சல்கள் பெற்றுக் கொடுத்தது.கிளிஞ்சல்கள் படம் 250 நாட்களைக் கடந்துஓடி வெற்றிப்பட இயக்குநர் என்ற பெயரைதுரையின் மீது அழுத்தமாக பதித்தது. ரூபிமைடார் லிங் என்றபெயரில் கிளிஞ்சல்கள் மலையாளத்தில்வெளியானது. துரைதான் அப்படத்தையும்இயக்கினார். மலையாளப் படமும் வெற்றிபெற்றது.
மலையாளத்தில்இருந்துபிரேமக்கோபாதாபிஷேகம் என்றபெயரில்தெலுங்கில்டப் செய்யப்பட்டது. அங்கும் 100 நாட்கள் ஓடியது.கிளிஞ்சல்களின் தொடர் வெற்றிதுரையை ஹிந்தித் திரை உலகுக்கு அழைத்துச்சென்றது. பிரபல ஹிந்தித் தயாரிப்பாளரான மதன்லால் துரையைச் சந்தித்து கிளிஞ்சல்களை ஹிந்தியில் தயாரிக்க அனுமதிகேட்டார். துரையும் சம்மதம் தெரிவித்தார்.பிரபல ஹிந்திப் பட இயக்குனரும் தயாரிப்பாளருமான மனோஜ் குமாரின் மகன்குணால் கோஸ்வாழி கதாநாயகனாகவும்மனீஷா என்ற புதுமுகம் கதாநாயகியாகவும்நடித்தனர். தோகுலாப் என்ற ஹிந்திப் படம்கிளிஞ்சல்கள் போன்றே வெள்ளி விழாக்கொண்டாடியது.
நடிகர் சரத்குமாரை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் துரை. சமாஜ முலோஸ்ரீஎன்ற தெலுங்கு படத்தின்மூலம் சரத்குமார் திரை உலகில் நுழைந்தார்.எம்.ஜி.ஆருடன் அவரதுராமாவதார தோட்டத்தில்துரை ஒரு நாள் கதைத்துக்கொண்டிருந்தபோது தான்முதலமைச்சரானதால் துரையின் இயக்கத்தில் நடிக்கமுடியவில்லை என்று கூறினார். எம்.ஜி.ஆர். துரையின்பசி என்ற படம் எம்.ஜிஆரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது.சிவாஜியை வைத்து துரைஒரு படத்தை இயக்க வேண்டுமென எம்.ஜி.ஆர். வேண்டுகோள் விடுத்தார். அதனைக் கேட்ட துரைநெகிழ்ந்து போனார். எம்.ஜி.ஆரின் விருப்பத்தை சிவாஜிகணேசனிடம் துரை கூறியபோது அவர் முதலில் நம்பவில்லை.மக்கள் திலகத்தின் சிபாரிசில்நடிகர் திலகத்தைத் தேடி துரைவந்ததை அறிந்த நடிகர் திலகம்சந்தோஷப்பட்டதுடன் நடிப்பதற்கும் ஒப்புதல் வழங்னார்.
சிவாஜிக்காகவே துணை என்றகதையை உருவாக்கினார் துரை.எம்.ஜி. ஆரின் படங்கள் உருவான சத்யாஸ் ஸ்டூடியோவுக்குநடிகர் திலகம் சென்றார். துரையின் வேண்டுகோளின் படிதனது மேக்கப் அறையை சிவாஜிக்குபாவிக்க எம்.ஜி.ஆர். அனுமதியளித்தார். சிவாஜியை இயக்குவதை நினைத்துதுரை பதற்றப்பட்டார். துரையின் பதற்றத்தைஉணர்ந்த நடிகர் திலகம் அவருக்குதைரியம் கொடுத்தார்.துரை படத்தின் படப்பிடிப்பு ஓடும் ரெயிலில் நடிக்க வேண்டி இருந்ததால் மின்சாரரயில் ஒன்றை வாடகைக்குப் பெற்று படப்பிடிப்பை நடத்தினார் துரை.அதிர்ச்சியான செய்தியை கேட்டால் நடிகர்
திலகத்துக்கு காக்கா வலிப்பு வந்து விடும்.அன்றைய காட்சியை விபரித்தபோது ஒரேஷொட்டில் நடிச்சிடுவேன். அப்புறம் மிடில்ஷொட் குளோசப் ஷொட் என்று குழப்பம்செய்யக்கூடாது என்ற நடிகர் திலகம் கூறினார்.அப்படியானால் ஒரு மணி நேர அவகாசம்தரும்படியும் அதன் பின்னரே படப்பிடிப்புநடத்த முடியும் என துரை கூறினார்.எதற்காக ஒரு மணி நேரம் என்று நடிகர் திலகம் கேட்டபோது இன்னும் இரண்டு க‌மராக்கள்வேண்டும் என துரை விளக்கினார்.
துரை கூறியது போன்றே ஒரு மணித்தியாலயத்தின் பின்னர் நடிகர் திலகத்தை வைத்துஅந்தக் காட்சியைப் படமாக்கினார்.துணைபடம் வெற்றிப் படமானது.நடிகர் திலகத்துடன் சகல இளம் நடிகர்களும் நடித்து விட்டனர். விஜயகாந்த் மட்டும்நடிக்கவில்லை என்று நினைத்த துரை நடிகர்திலகத்துடன் விஜயகாந்தை இணைத்து வீரபாண்டி என்ற படத்தைத் தயாரித்தார். அப்படம் வியாபார ரீதியில் வெற்றி பெற்றது.
ரமணி
மித்திரன்26..11.2006
96

லண்டனில் தங்கத் திருவிழா 1

உலகின் மிகப் பிரமாண்டமான ஒலிம்பிக்கை நடத்த இங்கிலாந்து தயாராகி விட்டது. ஜூலை மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் ஒலிம்பிக் திருவிழா ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதிவரை நடைபெறும். தடகளம், மரதன், சைக்கிள் ஓட்டம், டெனிஸ், ஹொக்கி, துப்பாக்கி சுடுதல், கைப்பந்து, உதைபந்தாட்டம், குத்துச்சண்டை, நீச்சல், ஜிம்னாஸ்ரிக், கூடைப்பந்தாட்டம் உட்பட சுமார் 90 க்கும் அதிகமான போட்டிகளில் தங்கப் பதக்கம் பெறுவதற்காக வீரர்கள் தயாராகியுள்ளனர். சுமார் 10,500 க்கும் அதிகமான போட்டிகளைக் கண்டு மகிழ ரசிகர்கள் தயாராகி விட்டனர்.
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தடகள வீரர்களின் கனவாகும். பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பல வீரர்களிடம் உள்ளது. வளமான நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்களுக்கு பல வசதிகளைச் செய்துள்ளன. வறுமையில் வாடும் öகன்யா, எத்தியோப்பியா போன்ற நாட்டுத் தடகள வீரர்கள் மிக எளிதாக தங்கத்தைத் தட்டிச் சென்று விடுகிறார்கள். உசைன் போல்ட் புதிய சாதனை செய்வார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
100 மீ, 200 மீ , 400 மீ தடைதாண்டல் ஆகிய போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்கள் பதற்றத்தின் உச்சிக்கே போய் விடுவார்கள். தகுதிகாண் போட்டிகளே பரபரப்பை ஏற்படுத்தி விடும். இப்போட்டிகளைப் பார்ப்பதற்கே ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கும். ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கும் போட்டிகளில் ரி@லயும் ஒன்று வீரர்களின் மின்னல் வேக ஓட்டம் இதயத் துடிப்பை அதிகமாக்கி விடும். நீச்சலில் போட்டி மட்டுமல்ல நளினமும் உண்டு. பல வீர வீராங்கனைகள் ஒரே நேரத்தில் நடத்தும் அசைவுகள் ரசிகர்களை வியக்க வைக்கும்.
இது உடம்பா அல்லது இறப்பரா என்று வியர்க்க வைப்பது ஜிம்னாஸ்டிக். வீர வீராங்கனைகள் அந்தரத்தில் சுழலும் போது கீழே விழுந்து கையை காலை முறித்து விடுவார்களோ என்ற பதைபதைப்பு ஏற்படும். கோடிக் கணக்கான ரசிகர்கள் எதிர்பார்க்கும் போட்டியில் உதைபந்தாட்டமும் ஒன்று. ஒலிம்பிக் உதைபந்தாட்ட போட்டியில் 16 நாடுகள் விளையாடத் தகுதியை பெற்றுள்ளன. ஆறு மைதானங்களில் உதைபந்தாட்டப் போட்டி நடைபெறவுள்ளது.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து எகிப்து, காபோன், மொராக்கோ, செனகல், ஆசியக் கண்டத்தில் இருந்து ஜப்பான், தென்கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்காமத்திய அமெரிக்காவிலிருந்த ஹொண்டூராஸ், மெக்ஸிக்கோ ஓசியானாத் தீவுகளில் இருந்து நியூஸிலாந்து, தென் அமெரிக்காவிலிருந்து பிரேஸில் உருகுவே, ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து பெலாரஸ், ஸ்பெ#ன், சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகள் ஒலிம்பிக் உதைபந்தாட்ப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் இங்கிலாந்து நேரடியாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. 2004 ஆம் ஆண்டும் 2008 ஆம் ஆண்டும் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஆர்ஜென்டீனா இம்முறை தகுதி பெறவில்லை.
ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
குழு "ஏ' இல் இங்கிலாந்து, செனகல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உருகுவே.
குழு  "பி' இல் மெக்ஸிக்கோ, தென்கொரியா, கெபொன், சுவிற்ஸர்லாந்து.
குழு  "சி' இல் பிரேஸில், எகிப்து, பெலாரஸ், நியூஸிலாந்து.
குழு  "டி' இல் ஸ்பெயின், ஜப்பான், ஹொன்டூரஸ், மொராக்கா ஆகியன உள்ளன.

எகிப்து
ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் எகிப்து 12 தடவைகள் பங்குபற்றியுள்ளது. 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்ரர் டாம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 1964 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற போட்டியிலும் நான்காம் இடத்தைப் பெற்றது. 1928 ஆம் ஆண்டு இத்தாலியு டனும் 1964 ஆம் ஆண்டு மேற்கு ஜேர்மனியுடனும் மூன்றாவது இடத்தைப் பிடிக்க போராடித் தோல்வியடைந்தது. உள்நாட்டு அரசியல் காரணமாக 1956, 1980 ஆம் ஆண்டுகள் நடைபெற்ற ஒலிம்பிக்கில் எதிலும் பங்குபற்றவில்லை.
12 தகுதிகாண் போட்டிகளில் விளையாடிய எகிப்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வியடைந்தது. ஒரு போட்டியை சமன் செய்தது. எகிப்து 12 கோல்களை அடித்தது. எகிப்துக்கு எதிராக ஆறு கோல்கள் அடிக்கப்பட்டன.
அஹமட் எல் ஜெனவி, ஷகீப் எல் டின் அஹமட், அஹமட் ஷேசிடா மாவன் மொசீன், மொஹமட் எல் நெனி ஆகிய வீரர்கள் மீது எகிப்து ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அஹமட் ஹேவிடனா மாவன் மொசீன் ஆகியோர் தகுதி காண் போட்டிகளில் தலா மூன்று கோல் அடித்துள்ளனர்.
பிரேஸில், பெலாரஸ், நியூஸிலாந்து ஆகியவற்றுடன் குழு "சி'யில் உள்ளது எகிப்து.


கெபொன்
ஒலிம்பிக் உதைப்பந்தாட்டப் போட்டியில் முதன் முதலாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது கெபொன். இளம் வீரர்களைக் கொண்ட கெபொன் உதைபந்தாட்ட அணி, ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ள பலம் வாய்ந்த அணிகளுக்குச் சவாலாக உள்ளது.
எகிப்து,. தென்னாபிரிக்கா ஆகியவற்றுடனான முதல் சுற்றுப் போட்டிகளை வெற்றி தோல்வியின்றி சமமாக முடித்தது கெபொன், ஐவரிகோஸ்டை 3  1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நம்பிக்கையளித்தது கெபொன். குழு "ஏ'யில் முதலிடம் பெற்ற செனகலுடனான போட்டியில் மேலதிக நேரத்தில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது கெபொன்.
இமானுவில் டொப் மபா மீது ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர். பெற்றி எம்ரிக், ரெமி எபெங்கா, அலென் நொறொ, அன்ரி பியங் பொகோ ஆகியோரின் பங்களிப்பு கைபொன் உதைபந்தாட்ட அணியை ஒலிம்பிக் போட்டி வரை கொண்டு சென்றது.
மொராக்கோ
டோக்கியோவில் 1964 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் மொராக்கோ உதைபந்தாட்ட அணி முதன் முதல் விளையாடும் தகுதியைப் பெற்றது. ஏழு தடவை ஒலிம்பிக்கில் விளையாடிய தகுதி பெற்ற மொ@ராக்கா இரண்டாவது சுற்றுக்குச் செல்லவில்லை. 2011ஆம் ஆண்டு 23 வயதுக்குட்பட்ட ஆபிரிக்கக் கிண்ண இறுதிப் போட்டியில் கபோனிடம் 2  1 என்ற கோல் கணக்கில் மொராக்கோ தோல்வியடைந்தது. அப்போது ""இத்தோல்வி பற்றி நாம் கவலைப்படவில்லை. 2012 ஒலிம்பிக்கில் நாம் விளையாடுவோம்'' என்று பயிற்சியாளர் கூறினார். அவர் கூறியது போன்றே மொ@ராக்கோ ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது.
செனகலுடனான போட்டியில் 1  0 என்ற கோல் கணக்கிலும் கெபானுடனான போட்டியில் 2  0 என்ற கோல் கணக்கிலும் மொ@ராக்கோ தோல்வியடைந்தது. 23 வயதுக்குட்பட்ட ஆபிரிக்கக் கிண்ணப் போட்டியில் 3  2 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தியது.
செனகல்
செனகல் உதைபந்தாட்ட அணி முதன் முதலில் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. கெபானுடனான தகுதி காண்போட்டியில் 2  0 என்ற கோல் கணக்கில் செனகல் தோல்வியடைந்தது. அல்ஜீரியாவுக்கு எதிரான தகுதிகாண் போட்டியில் தோல்வியடைந்தது செனகல், நைஜீரியா, மொ@ராக்கோ ஆகியவற்றுக்கு எதிரான போட்டிகளிலும் செனகல் தோல்வியடைந்தது. கொபõனுடனான அரையிறுதிப் போட்டியில் 1  0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ரமணி

மெட்ரோநியூஸ் 06/05/12

லண்டனில் தங்கத் திருவிழா

Wednesday, May 9, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 32

 முதியவர் ஒருவர் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்வதற்குப் பக்கத்து வீட்டு இளைஞனையும் அழைத்துக் கொண்டு பெண் பார்க்கச் செல்கிறார். முதியவருடன் வந்த இளைஞனின் அழகில் மனதைப் பறிகொடுத்த  பெண் இளைஞன் தான் மணமகன் என நினைத்து சந்தோஷக் கனவில் மிதக்கிறõள். தன்னைப் பெண் பார்க்க வந்தது முதியவர் என்பதை மண மேடையில் அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இளைஞனை மனதில் நினைத்துக் கொண்டு முதியவரின் தாலியைக் கழுத்த்தில் சுமக்கும் இளம் பெண் ணின் கதை தான் தாலி பாக்கியம்.
எம்.ஜி.ஆரின் பக்கத்து வீட்டில் சரோஜாதேவி வசிக்கிறார்.  சிறு வயது முதலே பழகும் எம்.ஜி. ஆரும் சரோஜாதேவியும் பருவ வயதை அடைந்ததும் காதல் வலையில் வீழ்கிறார்கள். சரோஜாதேவியின் தகப்பன் மறுமணம் செய்வதற்காகப் பெண் பார்க்கப் போகும் போது எம்.ஜி. ஆரையும் அழைத்துச் செல்கிறார். மணமகளான எம்.என். ராஜம் தனது எதிர்காலக் கணவன் எம்.ஜி.ஆர் எனத் தவறாக நினைத்து மனதைப் பறிகொடுக்கிறாள். எஸ்.வி. சுப்பையாவுக்கு எம்.என். ராஜத்தைப் பிடித்து விடுகிறது. ஆகையால் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் எம்.ஜி.ஆர். தான் தனது கணவன் என்ற கனவில் மிதக்கும் எம்.என். ராஜம் திருமண நாளை எதிர்பார்க்கிறாள்.மணமேடையில் எஸ்.வி. சுப்பையாவைக் கண்ட எம்.என். ராஜம் அதிர்ச்சியடைகிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையினால் எஸ்.வி. சுப்பையாவுக்கு மனைவியாகிறாள் எம்.என். ராஜத்தின் மனதில் எம்.ஜி. அதன் உருவம் ஆழமாகப் பதிந்ததனால் எம்.ஜி. ஆரை மறக்க முடியாது தடுமாறுகிறார் எம்.என். ராஜம். தன் மனதில் உள்ள ஆசையை ஒருநாள் எம்.ஜி.ஆரிடம் கூறுகிறார் எம்.என். ராஜம். எம்.என்.ராஜத்தின் விபரீத ஆசை தவறெனக் கூறுகிறார் எம்.ஜி.ஆர். எம்.என். ராஜத்துக்கும் புத்திமதி கூறி அனுப்புகிறார். இவர்கள் பேசியதை மறைந்திருந்து கேட்ட நம்பியார் தனது குள்ளநரித்தனத்தால் எம்.ஜி. ஆரின் குடும்பத்துக்கும் எஸ்.வி. சுப்பையாவின் குடும்பத்துக்கும் இடையில் பூசலை உருவாக்குகிறார். நம்பியாரின் மிரட்டலுக்குப் பணிந்த எம்.என். ராஜமும் இதற்கு உடந்தையாகச் செயற்படுகிறார்.
குடும்பப் பிரச்சினை விஸ்வரூபமானதால் எம்.ஜி.ஆ.ரின் மீதான சரோஜாதேவியின் காதலுக்குத் தடை ஏற்படுகிறது. சரோஜா தேவியின் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று எம்.ஜி.ஆர். சவால் விடுகிறார். சரோஜாதேவியின் கழுத்தில் எம்.என். ராஜம் தாலியைக் கட்டி விட்டு எம்.ஜி.ஆர். திருட்டுத் தாலி கட்டி விட்டதாகக் கூறுகிறார். இந்தப் பிரச்சினையை விசாரித்த ஊர்ப் பஞ்சாயம் எம்.ஜி.ஆரை ஊரைவிட்டு விலக்கி வைக்கிறது. தான் குற்றமற்றவன் என்பதை இறுதியில் நிரூபிக்க எம்.ஜி.ஆர். சரோஜாதேவியை கரம் பிடிக்கிறார்.
எம்.ஜி.ஆர். சரோஜாதேவி, எஸ்.வி. சுப்பையா எம்.என். நம்பியார், வி. நாகையா நாகேஷ், மனோரமா ஆகியோர் நடித்தனர். புளுவாரூர்சுந்தராமவின் மூலக் கதைக்கு ஆருர்தாஸ் வசனம் எழுதினார். பாடல்கள் வாலி, இசை கே.வி. மகாதேவன். அன்னை இல்லாமல் பிறந்தவர் யார், கண் பட்டது நெஞ்சம் புண்பட்டது நெஞ்சம், உள்ளம் ஒரு கோயில், இதயத்தை அந்த இறைவன் படைத்து வைத்தான் ஆகிய பாடல்கள் கதைக்கு வலுச் சேர்த்தன.
வரலஷ்மி நிறுவனத்தின் பெயரில் கண்ணாம்பா தயாரித்த இப்படத்தை அவரது கணவன் கே.பி. நாகபூஷணம் இயக்கினார்.
ரமணி
மித்திரன்13/05/12

Tuesday, May 8, 2012

திரைக்குவராதசங்கதி36

துரை இயக்கிய "அவளும்பெண்தானே'படம் பெருவெற்றி பெற்றது. தமிழில் பெற்றஅதே வெற்றியை கன்னடத்திலும் பெறவேண்டும் என விரும்பிய துரை அதேகதையை "முகியதசுரா' என்ற பெயரில்இயக்கினார். தமிழில் துரையால் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல நடிகை எனப் பெயர்பெற்ற சுமித்ராதான் கதாநாயகி. கன்னட நடிகர் ராஜேஸ்சுதா நாயகனாக நடித்தார். தமிழில் கிடைத்த வெற்றி கன்னடத்தில் கிடைக்கவில்லை.கன்னடப் பட இயக்குனர் புட்டண்ணா ஒருபடத்தில் மூன்று வித்தியாசமான கதைகளைக்கூறியிருந்தார். அந்த மூன்று கதைகளில்ஒரு கதையில் ரஜினி நடித்தார். கன்னடரசிகர்களிடையே அந்தக் கதை மூலம் ரஜினிபிரபல்யமானார். ரஜினியின் புகழ் ஏறிக்கொண்டிருந்தபோது அவரை வைத்து ஒருபடமாவது இயக்க வேண்டும் என்று துரைவிரும்பினார். அவரின் ஆசை தீர சதுரங்கம் பாவத்தின்சம்பளம் ரகுபதிராகவராஜாராம் ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய நான்குபடங்களை ரஜினியை வைத்து இயக்கினார்துரை.
சதுரங்கம் படத்தில் அப்பாவி வேஷம். பாவத்தின் சம்பளத்தின் கதை ரஜினியிலிருந்துஆரம்பமாகும். யக்ஷகானம் என்ற மலையாளப் படத்தையே ஆயிரம் ஜென்மங்கள்என்ற பெயரில் இயக்கினார் துரை.ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்தார் ரஜினி. அப்படத்தில் லதாநடித்தால் நன்றாகஇருக்கும் எனநினைத்தார்துரை. உலகம்சுற்றும் வாலிபனில்எம்.ஜி. ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்லதா. எம்.ஜி.ஆர். முதல்வரானதும் லதாநடிக்க மாட்டார் என்று பலர் நினைத்தார்கள்.லதாவைச் சந்தித்து நடிப்பதற்கு முடியுமாஎனக் கேட்டார் துரை. எந்தவிதமான தயக்கமும் இன்றி ஒப்புக் கொண்டார் லதா. அதன்பின்னர் பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார் லதா.ஸ்ரீப்ரியா தயாரித்த நீயா படத்தை துரைஇயக்கினார். அந்தப் படம் அவருக்கு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.இயக்குனர் துரைக்கு அகில இந்திய அளவில்பெரும் வரவேற்பைக் கொடுத்த படம்"பசி'.
 "பசி' படத்தின் கதை துரையின் மனதில்மிக நீண்ட நாட்களாக இருந்தது. தனக்குசந்தர்ப்பம் கிடைத்த வேளைகளில் எல்லாம்அந்தக் கதையை பலருக்கும் கூறினார்.சிறந்த கதை எனக் கூறினார்களே தவிர அதனைப் படமாக்க எவரும் முன்வரவில்லை.குறைந்த பட்ஜட்டில் தயாரான துரையின்படங்கள் எல்லாம் 50 நாட்களைத்தாண்டிஓடும் என்றதால் துரையிடம் கதை கேட்கபலர் ஆவலாக இருந்தார்கள்.பசி கதையில் நம்பிக்கை கொண்ட துரைஅதனை தானே தயாரிக்க முடிவு செய்தார்.ஷோபாவின் நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்துவருவதால் ஷோபாவையே கதாநாயகியாக்க முடிவு செய்தார். புதிய நடிகர்கள்நடித்தால்தான் பசியின் தாக்கத்தை ரசிகர்கள்உணர்வார்கள் என்பதால் புது முகங்களைத்தேடினார்.பிரவீணா செந்தில் சத்யாநாராயணன்ஆகியோர் துரையின் கண்டுபிடிப்புகள். பிரவீணா சிறந்த நடிகை. பின்னர் பாக்யராஜைமணந்து கொண்டு சினிமாவுக்கு முழுக்குப்போட்டு விட்டார்.செந்திலைப் பற்றிசொல்லவே வேண்டா
ம். செந்தில்என்ற பெயரைக்கேட்டால் சிரிப்புத்தான்வரும். சத்யாவும் நாராயணனும்பசி சத்தியா பசி நாராயணன் என்றேஅழைக்கப்படுகின்றனர்."பசி' படத்தில்பிராமணப் பெண்ணாகஷோபா நடித்ததனால் பிராமணப் பெண்களின் நடை உடை பாவனைகளைக் கவனிக்கச் செய்தார்.படப்பிடிப்பு முழுவதும் சேரியிலே நடந்ததால்சேரி வாழ்க்கை பற்றியும் ஷோபா அறிவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்.
டெல்லிகணேஷ் ரிக்ஷா ஓட்டுபவராக நடித்தார். அதற்காக புது ரிக்ஷா ஒன்று வாங்கி ரிக்ஷாவைஎப்படி ஓட்டுவது என்று டெல்லிகணேஷ் பழகுவதற்கும் ஏற்பாடு செய்தார்துரை.படப்பிடிப்பு ஒத்திகையை ஸ்ரூடியோவில்நடத்திய பின்பு சேரியில் உண்மையானபடப் பிடிப்பு நடைபெறும். சேரியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பது தெரியாதவகையில் மிகவும் யதார்த்தமாகப் படப்பிடிப்பை நடத்தினார் துரை.மேக்கப் இல்லை. பாட்டு இல்லை. டான்ஸ்இல்லை. ரசிகர்களைக் கவரும் எவையுமேஇல்லாமல் 22 நாட்களில் படப்பிடிப்புமுடிந்தது. படப்பிடிப்பு முடிந்து விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக் காட்டினார்.பார்த்தவர்கள் பாராட்டினார்கள். விநியோகிக்க யாருமே முன்வரவில்லை. சற்றும்சளைக்காத துரை எழுத்தாளர்களையும் தயாரிப்பாளர்களையும் எல்லா மொழிஇயக்குனர்களையும் அழைத்து படத்தைக்காட்டினார். அனைவரும் பாராட்டினார்களேதவிர படத்தை வாங்க முன்வரவில்லை.பசி படத்தை துரை வெளியிட்டார். ஓடாதுஎன விநியோகஸ்ர்களால் ஒதுக்கப்பட்ட பசிஓகோ என ஓடியதுடன் விருதுகளையும்அள்ளிக் குவித்தது. பசி படத்தைப் பார்த்தபெண்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.அகில இந்திய சிறந்த நடிகைக்கான "ஊர்வசி' விருதை ஷோபா பெற்றார். சிறந்த மாநில மொழிப் படத்துக்கான மத்திய அரசின்விருது. தமிழக அரசின் விருது. மாநில மொழிப் படத்தின் சிறந்த இயக்குனர் துரை எனபல விருதுகளை "பசி' பெற்றது.
ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிலும் "பசி' திரையிடப்பட்டு பாராட்டுதல்களைப் பெற்றது.
"பசி' படத்தின் வெற்றி விழா சென்னையில்நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.வெற்றி விழா நடைபெறும் தினத்தில்தான்ஷோபா தற்கொலை செய்தார். வெற்றிவிழாவை ரத்துச் செய்து ஷோபாவுக்குஇறுதி அஞ்சலி செலுத்தினார் துரை.
ரமணி
மித்திரன்19.11.2006

Sunday, May 6, 2012

ஒதுங்கினார் கருணாநிதிமகிழ்ச்சியில் ஜெயலலிதா


புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடாம@ல அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுவது மிகவும் அபூர்வமாகவே நடைபெறும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது நடைபெற்ற இடை தேர்தல்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணித்தது. அதேபோன்ற ஒரு நிலை தான் இப்போது ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த அதேபோன்ற ஒரு முடிவினையே இப்போது திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்துள்ளது. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கட்டுப்பணத்தை இழந்தன. அதேபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படக்கூடாது என்ற எச்சரிக்கையினால் திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளது.
புதுக்கோட்டைத் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெரியண்ணன் அரசு மீண்டும் இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. முன்னாள் அமைச்சர் ரகுபதியின் பெயரும் பரிசீலனையில் இருந்தது. இவர்கள் இருவரும் ஸ்டாலினின் ஆதரவாளர்கள் என்பதால் இடைத் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் யாருக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே இருந்தது. இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கருணாநிதி அறிவித்தலால் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாந்துள்ளனர்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடாது ஒதுங்கிக் கொண்டதனால் காங்கிரஸ் கட்சி போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் தமது செல்வாக்கை இழந்துள்ள காங்கிரஸ் கட்சி, புதுக்கோட்டை இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் களமிறங்கக் காத்துள்ளது. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் தோல்வி உறுதி என்று தெரிந்தும் தமக்கு உள்ள வாக்கு வங்கியை கணிப்பிடும் ஒரு சந்தர்ப்பமாகவே இந்த இடைத் தேர்தலைக் கணிக்க உள்ளது காங்கிரஸ் கட்சி.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சிகள் இன்னமும் தயாராகவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புதுக்கோட்டையில் முகாமிட்டுத் தேர்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டது சங்கரன் கோவில் தேர்தலில் விழுந்த பலத்த அடியினால் எதிர்க்கட்சிகள் புதுக்கோட்டைத் தொகுதியில் இன்னமும் காலடி எடுத்து வைக்கவில்லை. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் தமிழக அமைச்சு பட்டாளம் புதுக்கோட்டையை முற்றுகையிட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தக் கூடிய நிலை இல்லை. எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமாக@வ உள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருந்து கொம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. திராவிடக் கழகங்களின் ஆதரவுடன் தமிழகத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து ஒதுங்கி கொண்டுள்ளது.
தமிழக அரசியலில் அசைக்க முடியாத பெரும் சக்தியாக விளங்கும் ஜெயலலிதா முன்னதாக@வ இடைத் தேர்தல் கோதாவில் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்குத் துணிவின்றி எதிர்க்கட்சிகள் தடுமாறுகின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் இருந்து பின்வாங்கியுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான கார்த்திக் தொண்டமான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு அடியாட்களுடன் சென்று சித்தி முறையான பெண்மணியை மிரட்டியதாக கார்த்திக் தொண்டமான் மீது புகார் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் 2003 ஆம் ஆண்டு மூன்று மாத சிறையும் 3 ஆயிரம் ரூபா அபராதமும் கார்த்திக் தொண்டமானுக்கு விதிக்கப்பட்டது.
நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறை யீடு செய்துள்ளார் கார்த்திக் தொண்டமான். இக் குற்றச்சாட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை பாதிக்கப் போவதில்லை, எதிர்க்கட்சியினர் இதனை பெரிய விசயமாகத் தூக்கிப் பிடித்தாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதனையிட்டு கவலைப்படப் போவதில்லை.
ஜெயலலிதாவின் தயவினால் தமிழக சட்ட சபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்த் புதுக்@காட்டை இடைத்@தர்லில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளார். இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களிடம் விருப்பு மனுக்கள் வாங்கப்படுகின்றன. தமிழக சட்ட சபையின் எதிர்க்கட்சியாக விஜயகாந்த் இருந்தாலும் இடைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பின்னாலேயே விஜயகாந்தின் கட்சி உள்ளது. பலமான கூட்டணி இன்றி விஜயகõந்த் வெற்றி பெற முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது.
மாக்ஸிட் கொம்யூனிஸ்ட் கட்சி, விஜயகாந்தின் @வட்பாளருக்கு ஆதரவு வழங்கும் தமிழகத்தில் அதிக செல்வாக்கு இல்லாத மாக்சிஸ்ட் கட்சியினால் விஜயகாந்துக்கு மிகப் பெரிய இலாபம் எதுவும் கிடைக்கப்போவ தில்லை. புதுக்கோட்டைத் தொகுதியில் வெற்றிபெற்ற கொம்யூனிஸ்ட் கட்சி இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது.
ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்ட கொம்யூனிஸ்ட் கட்சி, அண்ணா திராவிட முன்@னற்றக் கழகத்தை எதிர்த்துப் பிரŒõரம் öŒ#யுமா அல்லது ஒதுங்கி இருக்குமா என்று அறிவிக்கவில்லை.
புதுக்கோட்டை இடைத்தேர்தல் மும்முனைப் போட்டியாக நடைபெற உள்ளது. வேறு சில உதிரிக் கட்சிகளும் சுயேட்சைகளும் இடைத் தேர்தலில் போட்டியிட்டாலும் அவற்றினால் மிகப் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படப் போவதில்லை.
வர்மா
சூரன்,ஏ,ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு06/05/12

Friday, May 4, 2012

திரைக்குவராதசங்கதி35


தமிழ்த் திரை உலகின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் துரை. திரைப்படத் துறையால் கவரப்பட்ட ஆர்வமுள்ள இளைஞர்களைப் போலவே இயக்குனராக வேண்டும்என்ற ஆர்வம் துரையிடமும் இருந்தது. சினிமாத்துறைக்கு கொஞ்சமும் சம்பந்தம்இல்லாத குடும்பத்தில் பிறந்தவர் துரை.கதை எழுதுவதில் அதீத ஆர்வம் இருந்ததால்சினிமாவில் ஜெயித்து விடலாம் என்றநம்பிக்கை துரையிடம் அளவுக்கு அதிகமாகஇருந்தது.
துரையின் சினிமா ஆசைக்கு பாதைஅமைத்துக் கொடுத்தவர் பிரபல இயக்குனர்யோகானந்த். யோகானந்தின் குடும்ப டாக்டரிடம் துரையின் சகோதரி உதவியாளராகஇருந்தார். அந்த டாக்டரின் சிபார்சுக் கடிதத்துடன் மனதில் ஏராளமான கனவுகளை சுமந்தபடி இயக்குனர் யோகானந்தைச் சந்தித்தார்துரை.
டாக்டர் கொடுத்த சிபார்சுக் கடிதத்தைக்கொடுத்து யோகானந்தின் காலைத் தொட்டுக்கும்பிட்டு தனது சினிமா ஆசையைக்கூறினார் துரை. தமிழ் சினிமாக் கதையைஅறிஞர்களும், கலைஞர்களும் புடம் போட்டுக்கொண்டிருந்த காலம். புதியவரானதுரையின் கதை எடுபடுமா என்று யோகானந்த் சிந்தித்தார்.
துரையின் சினிமா ஆசைக்கு தடை போடவிரும்பாத அவர் சினிமாத் தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டால் எழுத்தாளராகவோ அல்லது இயக்குனராகவோ நிலைத்துநிற்க முடியும் என்றுஆலோசனை வழங்கினார். அவரது ஆலோசனையின்பிரகாரம்ஒலிப்பதிவாளர் ரங்கசாமியிடம் உதவியாளராகச் சேர்ந்தார் துரை.
சினிமாதான் வாழ்க்கை என்ற ஆர்வம் மனதில்ஆழப் பதிந்ததனால் மிகுந்த அக்கறையுடன் பயிற்சி பெற்றார். ஓய்வு நேரங்களில்எடிட்டிங் ரூமிக்குச்சென்று எடிட்டிங்பயின்றார். நாகேஸ்வரராவ், அஞ்சலி தேவிநடித்த "அனார்கலி'என்ற தெலுங்குப்படத்தில் "ஒலிப்பதிவுஉதவி  துரை' என்றஎழுத்து மின்னியது.
தனது பெயரைப்பார்ப்பதற்காக உறவினரையும், நண்பர்களையும் தியேட்டருக்கு அழைத்துச்சென்றார்.ஒலிப்பதிவில் திறமையைக் காட்டினாலும் இயக்குனர் என்றகனவு அடிக்கடி துரையின் மனதில் தோன்றிமறைந்தது. ஒலிப்பதிவாளராகக் கடமையாற்றும் படத்தின் இயக்குனர்களிடம்வாய்ப்புக் கேட்டார். வேலை இல்லாதவேளையில் திரைப்படக் கம்பெனிகளுக்கும் சென்று வாய்ப்புக் கேட்டார். யாரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை.
கல்யாண்குமார் தான் நடித்த படத்தின் பாடல்காட்சி ஒன்றைப் பார்ப்பதற்காக துரைவேலை செய்த ஸ்டூடியோவிலுள்ளதியேட்டருக்குச் சென்றார். அப்போதுபுரொஜக்டரை இயக்குபவர் வெளியில்சென்று விட்டார். ஏமாற்றத்துடன் திரும்பியபோது எனக்கு புரொஜக்டரை இயக்கத் தெரியும் வாருங்கள் என்று துரை அழைத்துச்சென்று அப்பாடல் காட்சியை போட்டுக்காட்டினார்.
துரையின் அந்த உதவி கல்யாண்குமாரின்மனதைக் கவர்ந்து விட்டது. எந்த உதவியும்எப்போது வேண்டுமானாலும் தயங்காமல்கேட்கலாம் என்று வாக்குக் கொடுத்தார் கல்யாண்குமார். அதன் பின்னர் கல்யாண்குமாரும் துரையும் மிகவும் நெருக்கமானார்கள்.
தான் எழுதிய கதைகளை கல்யாண்குமாருக்குக்காட்டினார் துரை. துரையின் கதைகளைப் படித்த கல்யாண்குமார் பிரபல கன்னடஇயக்குனரான ஜி.வி. அய்யரிடம் துரையைஅறிமுகப்படுத்தினார்.
துரையின் கதைகளைப் படித்துப் பார்த்தஜி.வி. அய்யர் கதை எழுதும் வேலையைதுரைக்கு கொடுத்ததுடன் உதவி இயக்குனர்பணியையும் ஒப்படைத்தார்.தமிழ்ப்படஇயக்குனராக வரவேண்டும் என்று விரும்பிய துரை கன்னடப்பட உதவி இயக்குனராகினார். கன்னட சூப்பர்ஸ்டாரான ராஜ்குமார், கல்யாண்குமார், உதயகுமார் ஆகியகலைஞர்களுடன் ப‌ணியாற்றியபடி கன்னடம் கற்றுக் கொண்டார்.பெங்களூர் ரயில் நிலையத்தில் தனியாகச்செல்லும் பெண்ணை வழிமறித்து கத்தியைக் காட்டி வில்லன் மிரட்டும் காட்சிஅன்று படமாக்கப்பட்டது. எப்படி நடிக்கவேண்டும் என்று பல தடவை துரை நடித்துக்காட்டியும் வில்லனாக நடித்தவரால் நடிக்கமுடியவில்லை. வெறுப்புற்ற இயக்குனர்ஜி.வி. அய்யர், நீ நல்லா நடிக்கிறாய் நீயேவில்லனாக நடி என்றார். இயக்குனர் கனவில்திரைத் துறைக்குள் நுழைந்த துரை வில்லன் நடிகரானார்.துணை இயக்குனராக இருந்து கொண்டேகன்னடப் படங்களுக்கு கதை எழுதினார்.
அவருடைய கதையில் வெளியான கன்னடப் படங்கள் வெற்றி பெற்றன. துரைதுணை இயக்குனராகப் பணியாற்றிய படங்கள் சிலவற்றில் பண்டரிபாய் நடித்தார்.துரையின் கடின உழைப்பையும் திறமையையும் நேரில் பார்த்த பண்டரிபாய் தான் தயாரிக்கப் போகும் படத்துக்கு துரையை இயக்குனராக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.பண்டரிபாயின் கணவர் துரையிடம் தமதுவிருப்பத்தைத் தெரிவித்தார். துரை உடனடியாக ஒப்புக் கொண்டார். பெண்களைக் கவரும் கதைதான் வேண்டும் என்று பண்டரிபாய் கூறினார். தன் மனதில் இருந்த "அவளும் பெண்தானே' என்ற கதையைக் கூறினார் துரை.இந்தக் கதையில் புதுமுகம் நடித்தால்தான்நன்றாக இருக்கும் என்று துரை கூறினார்.பண்டரிபாயும் சம்மதித்தார். அவர்கள் தேடிய போது அகப்பட்டவர்தான் சுமித்ரா.கதையைக் கூறி காட்சிகளை விளக்கப்படுத்திய போது சுமித்ரா நடிக்க சம்மதித்தார். சிலநாட்கள் ஒத்திகை பார்க்கப்பட்டது. அப்போது அப்படத்தின் பாத்திரமாகவே மாறிவிட்டார் சுமித்ரா.1975 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்த "அவளும் பெண்தானே' 100 நாட்கள்கடந்து ஓடி நல்ல கதை, நல்ல இயக்குனர்என்ற பெயரை துரைக்குத் தேடிக் கொடுத்தது.
ரமணி
மித்திரன்12/11/2006

Thursday, May 3, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 31

கணவனின் விருப்பத்துக்காக மது அருந்தி விருந்துகளில் ஆடிப்பாடி மகிழும் சீரழிவை வெளிப்படுத்திய படம் தான் 1972ஆம் ஆண்டு வெளியான அவள் திரைப்படம். வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற குறிப்புடன் வெளியான இப்படத்திற்கு பலத்த விமர்சனங்கள் எழுந்த போதும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.வெண்ணிற ஆடை நிர்மலாவைக் கற்பழிக்கத் துரத்துகிறார் ஸ்ரீகாந்த். மூக்கு முட்டக் குடித்து விட்டு மனைவியின் அபயக்குரலுக்கு உதவ முடியாத நிலையில் கிடக்கிறார். அப்போது குளோசப்பில் தெரியும் துப்பாக்கியிலிருந்து புறப்படும் தோட்டா ஸ்ரீகாந்தின் உயிரைக் குடிக்கிறது. ஸ்ரீகாந்தைச் சுட்டுக்கொலை செய்தது யார் என்ற பரபரப்புடன் படம் ஆரம்பமாகிறது.
சசிகுமாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் தம்பதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் ஸ்ரீகாந்தினால் சசிகுமாரின் வாழ்க்கை திசை மாறுகிறது. எந்தவிதமான தீய பழக்கமும் இல்லாத சசிகுமாருக்கு மதுப்பழக்கத்தை அறிமுகப்படுத்துகிறார் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்தின் விருப்பத்துக்காக வேண்டா வெறுப்பாக மது அருந்திய சசிகுமார் இறுதியில் மதுவுக்கு அடிமையாகிறார்.
விருந்துகளில் மது அருந்தி வந்த சசிகுமார் வீட்டிலும் மது அருந்த ஆரம்பித்து வருகிறார். தனக்குத் துணையாகக் குடிப்பதற்கு ஸ்ரீகாந்தின் வீட்டிற்கு அழைக்கிறார். மனைவி வெண்ணிற ஆடை நிர்மலாவையும் வற்புறுத்திக் குடிக்க வைக்கிறார். சசிகுமாரின் விருப்பத்துக்காக குடிக்க ஆரம்பித்த வெண்ணிற ஆடை நிர்மலாவும் குடிக்கு அடிமையாகிறார். விருந்துகளுக்குச் செல்லும் சசிகுமார் மனைவி நிர்மலாவையும் நண்பன் ஸ்ரீகாந்தையும் அழைத்துச் செல்கிறார். விருந்துக்குச் செல்லும் வெண்ணிற ஆடை நிர்மலா குடித்து விட்டு ஆடிப்பாடுவார் சசிகுமார் மற்றவர்களுடன் சேர்ந்து பார்த்து ரசிப்பார்.
ஸ்ரீகாந்தை தனது உற்ற நண்பனாக நம்புகிறார் சசிகுமார். ஸ்ரீகாந்தின் காமக்கண்கள் வெண்ணிற ஆடை நிர்மலாவின் உடம்பை மேயத் தொடங்குகிறது. வெண்ணிற ஆடை நிர்மலாவை அனுபவிக்க வேண்டும் என்ற காமத் தீ ஸ்ரீகாந்தின் மனதில் கொளுந்து விட்டுஎரியத் தொடங்கியது. ஸ்ரீகாந்த் எதிர்பார்த்த அந்த சந்தர்ப்பம் ஒருநாள் கிட்டியது. அளவுக்குமிஞ்சிய மது அருந்திய சசிகுமார் மதுபோதையில் வீழ்ந்து கிடக்கிறார். அப்போது தன் ஆசையைத் தீர்ப்பதற்காக வெண்ணிற ஆடை நிர்மலாவை நெருங்குகிறான் ஸ்ரீகாந்த். மது அருந்தினாலும் மானமிழக்க விரும்பாத வெண்ணிற ஆடை நிர்மலா ஸ்ரீகாந்திடமிருந்து தப்பிக்க முயற்சிக்கிறாள். அப்போதுதான் அந்தத் துப்பாக்கி ஸ்ரீகாந்தை சுட்டுத்தள்ளுகிறது.
சசிகுமார் வெண்ணிற ஆடை நிர்மலா, ஸ்ரீ காந்த் ,டி.கே.பசுபதி சந்திரபாபு, மனோரம்மா, விஜயமாலா , வீரசாமி ஆகியோருடன் திருப்பு முனையான கதாபாத்திரத்தில் ஏ.வி.எம். ராஜன் நடித்தார். சசிகுமாரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இப்படம் வெளியான சில நாட்களில் தீ விபத்தில் சசிகுமாரும் மனைவியும் மரணமானார்கள் வளர்ந்து வந்த சிறந்த நடிகரைத் திரை உலகம் இழந்து விட்டது.
வெண்ணிற ஆடை நிர்மலா பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்தார். அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன் என்ற பாடலும் வெண்ணிற ஆடை நிர்மலாவின் நடிப்பும் இன்னமும் மனதைவிட்டு நீங்கவில்லை. இப்படத்துக்குப் பின்னர் கற்பழிக்கும் வில்லனாக மாறிவிட்டார் ஸ்ரீகாந்த்.
தோரஹா என்ற பெயரில் ஹிந்தியில் வெளியாகி பரபரப்புடன் வெற்றி பெற்ற படத்தை தமிழில் அவள் என்ற பெயரில் சுந்தர்லால் நஹாதா தயாரித்தார். சங்கர் கணேஷின் இசை படத்துக்கு மெருகூட்டியது. வசனம் ஏ.எல்.நாராயணன். இயக்கம் ஏ.சி.திருலோகசுந்தர்.
ரமணி
மித்திரன்06/05/12 

Wednesday, May 2, 2012

திரைக்குவராதசங்கதி34


சிட்டாடல்பிலிம்ஸ்தயாரித்தஇரவும்பகலும்என்றபடத்தின்மூலம்தென்னகத்துஜேம்ஸ்பொன்ட்எனவர்ணிக்கப்பட்டஜெய்சங்கரும்,வசந்தாவும்ஜோடியாகஅறிமுகமானார்கள்.சிறுவயதிலேயேநாட்டியம்பயின்றவர்வசந்தா.நாடகத்தில்நடிக்கவேண்டும்எனவிரும்பியஅவருக்குசேவாஸ்டேஎன்றநாடகக்குழுகைகொடுத்தது.அதன்பின்னர்டி.கே.எஸ்நாடகக்குழுவில்இணைந்தார்.டி.கே.எஸ்.நாடகசபாமேடையேற்றியராஜராஜசோழன்என்றநாடகத்தைதயாரிப்பாளரும்இயக்குநருமானஜோசப்தளியத்பார்த்தபோதுஅதில்நடித்தவசந்தாவைதனதுவிளக்கேற்றியவள்என்றபடத்தில்கதாநாயகியாகநடிக்கஒப்பந்தம்செய்தார்.விளக்கேற்றியவள்படப்பிடிப்புநடைபெற்றுக்கொண்டிருந்தஅதேவேளையிலேயேஅவருடையசிட்டாடல்பிலிம்ஸ்இரவும்பகலும்என்றபடத்தைத்தயாரித்தது.அப்படத்தில் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமானார். இரவும் பகலும் படத்துக்காக கதாநாயகிகளை தேடிய ஜோசப் தளியத் வசந்தாவையே இரவும் பகலும் என்ற தனதுபடத்தில்நடிக்கச் செய்தார்.விளக்கேற்றியவள் படத்துக்கு முன்னதாகவே இரவும் பகலும் படம் வெளியானது.இரவும் பகலும் படம் 100நாள்ஓடிஜெய்சங்கரையும்வசந்தாவையும்சிறந்தநடிகர்கள்எனவெளிச்சம் போட்டுக் காட்டியது.இரவும் பகலும் 1965 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியானது. அதே ஆண்டு ஏப்ரலில்விளக்கேற்றியவள்வெளியானது.அதேஆண்டுஇறுதியில்வசந்தாகதாநாயகியாகவும், கே.விஜயன்கதாநாயகனாகவும்நடித்தகார்த்திகைதீபம்வெளியானது,கதாநாயகனானவிஜயன்பின்னாளில்இயக்குனராகிதீபம்,தியாகம்,திரிசூலம்போன்றவெள்ளிவிழாப்படங்களைத்தந்தார்.அவருடைய மகன்சுந்தர்கே. விஜயன் சின்னத்திரையில் முத்திரைபதித்து வருகிறார்.வசந்தா மிகவும் பிஸியாக இருக்கிற நேரம்கே. பாலசந்தரின்பத்தாம்பசலிஎன்றபடத்தில்நடித்தார்.படப்பிடிப்புக்கு அன்று அவர்தாமதமாகச் சென்றார். இயங்குநர் கோபமாக இருக்கிறார் என்று கூட நடித்த நாகேஷ்கூறினார். தனதுகோபத்தைவெளிக்காட்டாத‌இயக்குநர்அன்றையகாட்சியைவிபரித்தார்.சுமார் 200 அடி நீளமான அந்தக் காட்சியைஒரே டேக்கில் நடித்து முடித்தார் வசந்தா.அப்போது நான் சொன்னேனே வசந்தா நாடத்தில் இருந்து வந்த பொண்ணு ஒரேடேக்போதும்இப்போதுகோபம் போய்விட்டதா''என்று சத்தமாக நாகேஷ் கேட்டார். பாலச்சந்தர் மெல்லிய புன்னகையை வெளிக்காட்டினார்.
            பாஞ்சாலிசபதம்என்றநாடகத்தில்வசந்தாபாஞ்சாலியாகநடித்தார்.அந்தநாடகத்தைப்பார்த்தஎம்.ஜி.ஆர்தன்னைவந்துசந்திக்கும்படிகூறினார்.வசந்தாவின்தமிழ்உச்சரிப்பைரசித்தஎம்.ஜி.ஆர்க‌ , ணவன்என்றபடத்தில்தங்கைவேடத்தில்நடித்கவசந்தாவைஏற்பாடுசெய்தார்.படப்பிடிப்புக்காகமேக்கப்போட்டுக்கொண்டுசத்யாஸ்டூடியோவில்காத்திருந்தார்வசந்தா.அப்போதுசீனியர்ந‌டிகைஒருவ‌ரும்அங்கேபடப்பிடிப்புக்குதயாராகஇருந்தார்.சீனியர்நடிகைவசந்தாவுடன்கதைத்தபோதுஎம்.ஜி.ஆரின்ஒரேஒருதங்கைக்காகஇருவர்மேக்கப்புடன்இருக்கும்விசயம்தெரியவந்தது.இந்தப்பிரச்சினைஎம்.ஜி.ஆரின்காதுக்குச்சென்றதும்இயக்குநரும்,கதாசிரியருமான சொர்ணத்தை அழைத்து இருவருக்கும் ஏற்றவகையில்கதையில்மாறுதல்செய்யும்படிகூறினார்.எம்.ஜி.ஆர்அழைத்தவசந்தாவும், தயாரிப்பாளர்ஒப்பந்தம்செய்தசீனியர்நடிகையும்ஏமாறக்கூடாதுஎன்பதற்காககதையில்மாற்றம்செய்யப்பட்டது.வசந்தாஒருநாள்மிகவேகமாககாரைச்செலுத்திக்கொண்டுசென்றார்.இதனைஎம்.ஜிஆர்பார்த்துவிட்டார்.வசந்தாவீட்டுக்குச்சென்றதும்சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆரைப் பார்க்கும்படிஅழைப்புவந்தது.கூடவேகாரைசாரதிதான்செலுத்திவரவேண்டும்என்றும்தெரிவிக்கப்பட்டது . மாலையில் சந்தியா ஸ்டூடியோவுக்கு சென்று எம். ஜி.ஆரைச் சந்தித்தார்வசந்தா.இந்தாம்மா உன்னை நம்பி எத்தனையோதயாரிப்பாளர் பணம் போட்டுபடம்எடுத்திருக்கிறார்கள்,சிலர்கடன் வாங்கி படமெடுக்கிறார்கள் . காரிலை நீ இவ்வளவு வேகமாகப் போய் உனக்கு ஏதாவது ஆகினால்அவர்களின் கதி என்ன? நீ கார் ஓட்டுவதானால்50 கி. மீற்றருக்கு மேல்போகக்கூடாதுஎன்று அன்புக் கட்டளையிட்டார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது வசந்தாவின்பெயரும் கலை மாமணிவிருதுக்குதெரிவானது.சிகிச்சைக்காகஎம்.ஜி.ஆர்அமெரிக்காசென்றதால்விருதுவழங்கும் விழாவில்அவர் கலந்து கொள்ளமாட்டார் என்று வசந்தாவுக்குத் தெரியவந்தது.அண்ணன் வருவார் என்றால் என் பெயரைச் சேருங்கள். அவர் இல்லைஎன்றால்என்பெயரைவிட்டுவிடுங்கள். அவர் இல்லாத விருது வழங்கும் விழாவில் நான்கலந்து கொள்ளமாட்டேன் என்று ஏற்பாட்டாளர்களிடம் கண்டிப்பாகக்கூறினார்வசந்தா.கலைவாணர்அரங்கத்தில்வசந்தாவுக்குகலைமாமணி விருதைக் கொடுத்த எம்.ஜி.ஆர் ஏம்மா நான் இல்லையென்றால் விருதே வேண்டாம் என்றாயாமே? இப்போ சந்தோஷம் தானே எனக் கேட்டார்.
       தமிழகமுதல்வர்கலைஞர்கருணாநிதிக்குதமிழகக்கலையுலகம்கடந்தமாதம்பெருவிழாஎடுத்தது.அந்தவிழாவில்வசந்தாவும்கலந்துகொண்டார்.வசந்தாவைக்கண்டமுதல்வர்வாம்மாதமிழ்ச்செல்வம் என்றுஅழைத்தார்.தமிழ்செல்வம்என்றவார்த்தையைக்கேட்டவசந்தாஆச்சரியப்பட்டார்.முத்தமிழ்க்காவலர்கி.ஆ.பெ.விசுவநாதன்எழுதியதமிழ்ச்செல்வம்என்றநாடகத்தில்வசந்தாநடித்தார்.அந்த நாடகத்தை எம்.ஜி.ஆர்.பெ. விசுவநாதனுடன் கலைஞரும்பார்த்து ரசித்தார். வசந்தாவின் தமிழ் உச்சரிப்பைக் கண்டு வியந்த தி.ஆ.பெ தமிழ்ச்செல்வம் என்ற ட்டத்தைஅவருக்குவழங்கினார்.
சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் வழங்கிய பட்டத்தைகலைஞர்நினைவுவைத்திருந்ததைக்கண்டுவியந்துநின்றார்வசந்தா.எம்.ஜி.ஆர்.,சிவாஜிஆகியோருக்கும்தங்கையாகநடித்தவசந்தா,ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு , ஸ்ரீதேவி, ராதா, பூர்ணிமாஆகியோருக்கும் அம்மாவாக நடித்தார்.செல்வி தொலைக்காட்சியில் வசந்தா இப்போது நடித்து வருகிறார்.
  ரமணி
மித்திரன்12/11/2006
93