Showing posts with label சுஜதா. Show all posts
Showing posts with label சுஜதா. Show all posts

Tuesday, October 10, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 82

பத்மினி,கே.ஆர்.விஜயா,சரோஜாதேவி,லக்ஷ்மி, ஜெயலலிதா  போன்ர நட்சத்திரங்கள்  மின்னிக்கொண்டிருக்கும் போது  "இயக்குனர் சிகரம்"கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான "அவள் ஒரு தொடர்கதை மூலம் தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகமானார் சுஜாதா. பாலச்சந்தரின் அறிமுகங்கள் என்றைக்குமே சோடைபோனதில்லை. சுஜாதாவும் தன் திறமையினால் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா  இடம்  பிடித்தார்.கே.ஆர்.விஜயா,சரோஜாதேவி,லக்ஷ்மி, ஜெயலலிதா  போன்ர நட்சத்திரங்கள்  மின்னிக்கொண்டிருக்கும் போது  "இயக்குனர் சிகரம்"கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான "அவள் ஒரு தொடர்கதை மூலம் தமிழ்த் திரை உலகுக்கு அறிமுகமானார் சுஜாதா. பாலச்சந்தரின் அறிமுகங்கள் என்றைக்குமே சோடைபோனதில்லை. சுஜாதாவும் தன் திறமையினால் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா  இடம்  பிடித்தார்.

சினிமாவுக்கும் சுஜாதாவின்  தகப்பனுக்கும் ஏழாம் பொருத்தம். சினிமா பற்றிய செய்திகளைப் பார்ப்பதற்கே தடை விதித்தார். அந்த வீட்டில் இருந்து சினிமாவை ஆட்சி செய்ய   பெண்  ஒருவர்  புறப்பட்டதுதான் விதியின் விளையாட்டு. இலங்கையில் பிறந்து வளர்ந்த சுஜாதாவுக்கு சினிமாவில் ஆர்வ் அம் இருக்கவில்லை. ஆசிரியையாக வேண்டும் என்பதே அவரது கனவு.இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த  பிறகு "பொலிஸ் ஸ்டேஷன்"என்ற மலையாள நாடகத்தில் முதல் முதலாக மேடை ஏறிய சுஜாதா நடித்த முதல் படமாக கிருஷ்ணன் நாயரின் இயக்கத்தில் உருவான "தேஜஸ்வினி"என்ற மலையாளப் படம் அமைந்தது.

அந்தப் படத்தில் கதாநாயகனைக் கட்டிப்பிடித்து  நடிக்க வேண்டிய காட்சி கள் ஏராளமாக இருந்ததால்  அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்கு சென்றபோது சரியாக நடிக்க வேண்டுமே என்று சுஜாதா வேண்டாத தெய் வங்களே இல்லை.ஆனால் முதல் நாள்  அப்படிப்பட்ட காட்சிகள் எதையும் கிருஷ்ணன் நாயர் படமாக்கவில்லை.அதற்கு மாறாக காதலனின் கையைப் பிடித்தபடி சுஜாதா கண்ணீர் விடும் காட்சியைப் படமாக்கினார் அவர். முதல் நாள் படப்பிடிப்பிலே அன்று கண்ணீர் சிந்தத் தொடங்கிய சுஜாதா தன்னுடைய கடைசிப் படமான "வரலாறு"படம் வரை அதை நிறுத்தவே இல்லை.

எக்ஸ்பிரஸ்"படத்தைப் பார்த்துவிட்டுத்தான் அந்தப் படத்தில் நடிக்க அவரைத் தேர்ந்தெடுத்தார் பாலச்சந்தர்.அந்தப் படத்தில் அரை நிஜாரும்,குட்டைப் பாவாடையும் அணிந்து  கொண்டு கவர்ச்சிகரமான தோற்றத்தில் டூயட் பாடிய சுஜா      தாவை  நெருப்பு போல்  வாழ்ந்த  "அவள் ஒரு தொடர்கதை"நாயகி கவிதாவின் பாத்திரத்துக்கு பாலச்சந்தர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்று அப்போது ஆச்சர்யப்படாதவர்களே இல்லை.

அந்தப் பாத்திரத்திலே நடிக்க கே.பாலச்சந்தரும்,அந்தப் படத்தின் தயாரிப் பாளரான ராம.அரங்கண்ணலும் முதலில் தேர்ந்தெடுத்த நடிகை லட்சுமி.   மூன்று மாதங்களுக்குள் அந்தப் படத்தின் படப்பிடிப்பை முடிக்க அவர்கள் திட்டமிட்டு இருந்ததால்  அப்போது பல படங்களில்  இரவு பகல் பாராமல் மூன்று ஷிப்டுகள் நடித்துக் கொண்டிருந்த லட்சுமியால் அந்தப் பட வாய் ப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கவிதா பாத்திரத்துக்கு கே.பாலச்சந்தர்  சுஜாதாவைத் தேர்ந்தெடுத்தபோது  அவர் பேசிய மொழி சிங்களம்,மலையாளம்,தமிழ் ஆகிய மூன்றும சேர்ந்த புது மொழியாக இருந்தது.ஆகவே படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு  முன் னாலே சரளமாகத் தமிழில் பேச அவரை பயிற்சி எடுத்துக்கொள்ளச்  சொன்னார் பாலச்சந்தர்.

அந்தக் கவிதா பாத்திரம் தன்னுடைய வாழ்க்கையையே புரட்டிப்போடப் போகிறது என்று அப்போது சுஜாதாவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் இரவு பகல் பாராமல் முறையாகத் தமிழிலே பேச பயிற்சி எடுத்துக் கொண்டார் சுஜாதா.அவரது கடும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது.


தமிழிலே மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற "அவள் ஒரு தொடர்கதை " பின்னர் தெலுங்கு,கன்னடம்,இந்தி,பாங்களா என்று பல மொழிகளில் உருவானது. தமிழிலே சுஜாதா ஏற்றிருந்த கவிதா பாத்திரத்தை தெலுங் கிலே ஜெயப்பிரதாவும்,கன்னடத்திலே சுஹாசினியும்,வங்க மொழியில் மாலாசின்ஹாவும்இந்தியிலே ரேகாவும் நடித்தனர்.புதுமுகமான சுஜாதா தந்த உயிரோட்டமான நடிப்பில் பாதியைக் கூட  அனுபவம் வாய்ந்த அந்த நடிகைகளால் தரமுடியவில்லை.

அறிமுகமான முதல் படத்திலேயே படத்தின் ஆணிவேராக இருந்த பாத்தி ரத்தை  ஏற்று சுஜாதா வெற்றி பெற்றிருந்ததால் அவரை முன்நிறுத்தி "அன் னக்கிளி,மயங்குகிறாள் ஒரு மாது,வாழ்ந்து காட்டுகிறேன்,ஒரு கொடியில் இரு மலர்கள்"என்று பல படங்கள் உருவாகத் தொடங்கின. 

"அவள் ஒரு தொடர்கதை,மயங்குகிறாள் ஒரு மாது"போன்ற படங்கள் மேல்தட்டு ரசிகர்கள் மத்தியில் சுஜாதாவிற்கு ஒரு அங்கீகாரத்தை தேடித் தந்தது என்றால் அவரைப்  பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்த பெருமை தேவராஜ் மோகன் இயக்கத்திலும்,பஞ்சு அருணாச்சலத்தின் திரைக்கதை வசனத்திலும் உருவான  "அன்னக்கிளி" படத்தையே சாரும். அப்படி அவரை கொண்டு போய் சேர்த்ததில் பெரும் பங்கு அந்தப் படத் திலே இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜாவுக்குப்  பங்கு உண்டு.

அன்னக்கிளியைத் தொடர்ந்து எஸ்.பி,முத்துராமன் இயக்கத்திலே "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது"என்ற நியூ வேவ் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்திருந்தார் சுஜாதா.அந்தப் படமும் வெற்றிப் படமாக அமைந்தது.

1976 ஆம் ஆண்டில் மட்டும்  பத்து தமிழ்ப் படங்களில் நடித்திருந்த சுஜாதா அது தவிர பல மலையாளப் படங்களிலும் ,தெலுங்குப் படங்களிலும் அந்த ஆண்டில் நடித்திருந்தார்.அந்த பட எண்ணிக்கையைப் பார்க்கும்போது அந்த ஆண்டில் ஏறக்குறைய எல்லா நாட்களும் படப்பிடிப்பு தளத்திலேயே தன்னுடைய வாழ்க்கையை  அவர் கழித்திருக்கிறார் என்பது தெரிய வரு கிறது.

அந்த ஆண்டில் அவர் நடித்த பெரும்பாலான தமிழ்ப் படங்கள் அவரது கதாபாத்திரத்தை முன்நிறுத்தி எடுக்கப்பட்டிருந்த படங்கள்.தமிழ்த் திரைப் படங்களைப் பொறுத்தவரையில் கதாநாயகிகளை முன்னிறுத்தி எடுக்கப் படும் படங்கள் படங்கள் வெற்றி பெறாது என்ற என்ற எண்ணம்  எழுபது களில் திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியில் மிகவும் அழுத்தமாக இருந் தது.அந்த எண்ணத்தை   சுஜாதா நடித்த பல திரைப்படங்கள் உடைத்து எறிந்தன.  திரைப்பட விநியோகஸ்தர்கள் மத்தியில் சுஜாதா  படத்தில் இருந்தாலே படங்கள் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையை அவர் நடித்த பல படங்களின் வெற்றி உருவாக்கியது.

தமிழ்த் திரையுல கில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்ற நிலையிலும் மிகப்பெரிய நடிகை என்ற அந்த கிரீடத்தை அணிந்து கொள்ளாமல் எல்லோரிடமும் எளிமையாகப் பழக ஆசைப்பட்ட   ஒரு சாதாரணப் பெண்ணாகவே வாழ்ந்தார் சுஜாதா.

ஆனால் அவர் விருப்பப்பட்டபடி அவரை வாழ விடாமல் அவரைச் சுற்றி ஒரு மாயத் திரையை உருவாக்கி வைத்திருந்தார் சுஜாதாவின் சகோதர ரான மேனன். திரையுலகில் அடி எடுத்து வைத்த ஆரம்ப நாட்களில் தன் னுடைய சகோதரர் மேனனின் முழு கட்டுப்பாட்டில்  இருந்த சுஜாதாவால் தனது சகோதரனை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. அவர் விருப்பப் பட்ட படத்தில் மட்டுமே அப்போது சுஜாதாவால் நடிக்க முடிந்தது. சுஜாதா வின் பணம்,அவரது கால் ஷீட்டுகள் ஆகிய எல்லாவற்றையும் நிர்வகித்துக் கொண்டிருந்த மேனனின் அனுமதியின்றி சுஜாதாவை யாரும் சந்திக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கி வைத்திருந்தார் அவர்.

1974 ஆம் ஆண்டில் "அவள் ஒரு தொடர்கதை"யின் மூலம் தமிழ்ப் பட உல கில் அறிமுகமான சுஜாதா அடுத்த நான்கு ஆண்டுகளில் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை 60."இயல்பான நடிப்பிற்கு இவரை மிஞ்சக் கூடிய நடிகைகள் யாரும் எல்லை" என்ற பாராட்டை எல்லோரிடமும் பெற்ற சுஜாதாவை அவரது குடும்ப உறுப்பினர்கள் ஒரு .டி .எம் இயந்திரத்தைப் போலத்தான் பார்த்தார்கள்.சுஜாதா இரவும் பகலும் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு நடித்துக் கொண்டிருக்க அவர் சம்பாதித்த பணத்தில் அவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்.

இது சுஜாதாவின் வாழ்க்கையில் மட்டும் நிகழ்ந்த ஒரு நிகழ்வு அல்ல என்பதும் தமிழ்த் திரையுலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரையில் மிகச் சில நடிகைகள் தவிர எல்லா நடிகைகளும் இப்படிப்பட்ட சூழ்நிலை யில்தான் வாழ்ந்து வருகிறார்கள். திருமணமும் அவரது வாழ்க்கையை  மீட்கவில்லை.