Showing posts with label திருமாவளவன். Show all posts
Showing posts with label திருமாவளவன். Show all posts

Sunday, May 31, 2026

டெல்லியில் எதிர் பார்த்தது நடக்கவில்லை தமிழக முதல்வரைச் சுற்றி வலம் வரும் சர்ச்சைகள்


 

குதிரை  வேகத்தில் நடந்த குதிரை  பேர அரசியலால் தமிழகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புடன் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் வெறும் கையுடன் திரும்பினார்கள்.

அதிமுக பிரமுகர்கள்  தவெகவில் சேர்வதால் தங்களது வாய்ப்பு பறிபோகும் என  அச்சமடைந்த தொண்டர்கள்.

 தனி விமானத்தில் டெல்லிக்குச் சென்ற தமிழக முதல்வரின் டெல்லிப்பயணம் சர்ச்சைக்குளானது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. என்ன செய்யப்போகிறார் திருமாவளவன்? 

 

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்த பின்னரும் தமிழக அரசியலின் சூடு ஆறவில்லை. மிகுந்த இழுபரியும் மத்தியுல் முதல்வர் ஆசனத்தில் விஜய் அமர்ந்தார். அதன்  பின்னர்   அரசியல் நிகழ்ச்சி நிரல் முடிந்து விடும் என எதிர் பார்த்தவர்கள் ஏமாற்ற மடைந்தனர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையிலும், மாநில அரசியல் களம் இன்னும் அமைதியடையவில்லை. அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி அரசியல் நகர்வுகளால் தமிழக அரசியல் சூழல் தொடர்ந்து உச்சக்கட்ட பரபரப்பிலேயே நீடித்து வருகிறது. ஒருபுறம் ஆளுங்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான உட்கட்சிப் பூசல்களும், மறுபுறம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பிளவுகளும் தேர்தல் கடந்த பின்னரும் தமிழக அரசியலைத் தகித்துக்கொண்டிருக்கச் செய்துள்ளன. 

அதிமுக இரண்டாகப் பிளவு பட்டது. மீண்டும் அவர்கள் இணைந்தது. சிவி சண்முகம் தனி வழிபே போனது. தமிழக முதல்வரின் டெல்லிப்பயணம். திட்டமிட்டபடி சோனியாவையும், ராகுல் காந்தியையும் விஜய் சந்திக்காதது, முதல்வர் விஜயைச் சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்காதது போன்ற சம்பவங்களால் தமிழக அரசியல் பரபரப்பாக உள்ளது.

  முதலமைச்சர் விஜய் யின்  டெல்லிப்பயணத்தால்  தமிழகத்துக்கு மதிய அரசு ஆதரவளிக்கும், நிதி கிடைக்கும் என எதிர் பார்த்திருந்தவர்கள் ஏமாற்ற மடைந்துளனர். டெல்லியில் முதலமைச்சர் விஜய்யின் பயணத்தின்போது திட்டமிடப்பட்ட பல சந்திப்புகள் இரத்தாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின், முதல்முறையாக பிரதமர் மோடியை விஜய் சந்தித்து பேசியுள்ளார். 10 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் மீனவர்கள் கைது,  தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தமிழ்நாடு கேரளா, புதுச்சேரி இணை ஆற்றுப்படுகை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து  முதல்வர விஜய் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நீட் தேர்வு, மும்மொழிக்கொள்கை, கச்சதீவு விககாரம் அப்ற்றியும் விஜய் பேசுவார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பிரதமரும் , தமிழகமுதல்வரும் வெறும் 10 நிமிடங்கள் மட்டும் பேசியதாகச் செய்தி  வ்ந்துள்ளது.பிரதமரைச் சந்திக்கும் தமிழக முதலமைச்சர்கள் தமிழ்நாட்டின் கோரிக்கைகளை விலாவரியாக விவரித்து கூறுவதால் சுமார் 30 நிமிடங்கள் முதல் சுமார் 1 மணி நேரம் வரை சந்திப்பு நடைபெறும். ஆனால், மேகதாது அணை விவகாரம், தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிறுவனங்களை அமைப்பதில் முக்கியத்துவம் அளிப்பது குறித்து பல பக்கங்களை கொண்ட கோரிக்கை மனுவை மட்டும் விஜய் கொடுத்தார். 

கோரிக்கை மனு குறித்து விலாவரியாக பிரதமரிடம் எடுத்துக்கூறுவதற்கு இந்த 10 நிமிடங்கள் போதுமா? என்ற கேள்வியும் பல தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பொதுவாக டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர்கள் தமிழ்நாடு அரசின் இல்லத்தில் பத்திரிகையாளர்களை நேரில் சந்திப்பது வழக்கம். ஆனால், அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பதையும் தவிர்த்தார்.   மத்திய உள்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் விஜய்  சந்தித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் சந்திப்பார் எனக் கூறப்பட்டது.  ஆனால், அவர் அமித்ஷாவுடனான சந்திப்பு நடைபெறவில்லை. அமித்ஷாவை சந்திப்பதற்கு விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், அலுவலக பணிகள் இருப்பதாக காரணம் கூறி அமித்ஷாவை சந்திப்பதற்கு விஜய்க்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், அமித்ஷா கேரளாவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விடி சதீஷனை   சந்தித்தார்.

டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை  முதல்வர் விஜய் திறந்து வைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் சிலையை திறந்து வைக்காமல் டனடியாகச்  சென்னைக்குத்  திரும்புனார்.

  தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாமல் இருந்த தவெக-விற்கு காங்கிரஸ் கூட்டணி அமைத்து பக்கபலமாக இருந்தது. இதனால், டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய் டெல்லியில் ராகுல் காந்தி, சோனியாகாந்தியை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், சோனியா மற்றும் ராகுல்காந்தியையும் அவர் சந்திக்கவில்லை. இதற்கான காரணம்   வெளியாகவில்லை. விஜய்யை வரவேற்க காங்கிரஸ் அலுவலகத்தில் பதாகைகள் வைக்கப்பட்டன.

விஜய்யின் டெல்லி பயணம்   விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரைகாலமும் தலைமைச் செயலாளர், நிதி அமைச்சர், ஆலோச்கர்கள், முக்கைய துறை சார்ந்த நிபுணர்கள் தமிழகத்தில் இருந்து  முதல்வருடன் டில்லிக்குச் சென்றார்கள்.

விஜய்யுடன் சென்றவர்களின் பட்டியலை உற்று நோக்கினால் அதில் தமிழக அரசியலுக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்கிறார்கள் விமர்சகர்கள். ஆந்திர முன்னாள் முதல்வரின் உறவினர்கள், தொழிலதிபர்கள் ஏன் விஜய்யுடன் சென்றார்கள் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.  சிகை அலங்கார நிபுணரும் முதல்வருடன் டெல்லிக்குச் சென்றார்.

விஜய் முதல்வராவதற்கு திருமாவளவன் உதவியதால் விசிகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.  திருமாவளவனின் செயற்பாட்டை ஆதரிக்காதவர்கள்  குமுறிக்கொண்டிருக்கிறார்கள். திருமாவளவனின் முக்கிய தளபதிகளில் ஒருவரான பனையூர் பாபு கட்சியில்ல் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் விசிக அதிர்ச்சியடைந்துள்ளது.  விசிகவின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட பனையூர் பாபு, ஆலூர் ஷாநவாஸ், சிந்தனைச் செல்வன் , எஸ்.எஸ். பாலாஜி ஆகிய 4 முன்னாள் எம்.எல்..க்களும் விரைவில் தங்களை திமுகவில் இணைத்துக் கொள்ளப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த தேர்தல் சமயத்தில் தொகுதிப் பங்கீடு மற்றும் கட்சிப் பொறுப்புகள் ரீதியாக ஏற்பட்ட சில அதிருப்திகளே இவர்களின் இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. விசிகவின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட  இவர்கள்  திமுகவிற்கு மாறினால், அது விசிக தலைமைக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

ஆளூர் ஷாநவாஸ் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் வரை தொடர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆளூர் ஷாநாவாஸுக்கு தவெக மூலம் ராஜ்யசபா சீட் பெற்றுத் தந்து சமாதானம் செய்யும் முயற்சியில் திருமாவளவன் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே ஆளூர் ஷாநவாஸுக்கு சீட் வழங்கப்படாதது விசிகவுக்குள் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. கட்சியில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்தவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

  அவருக்கு விசிக முதன்மை செயலாளர் பொறுப்பு வழங்கி திருமாவளவன் சமாதானம் செய்ய முயன்றதாக கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் விசிக பங்கேற்றதிலும் ஆளூர் ஷாநவாஸ் வெளிப்படையாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார்.  இந்த நிலையில், "ஆளூர் ஷாநவாஸ் திமுகவில் இணையப் போகிறார்" என்ற தகவல்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதற்கு காரணமாக, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான முக ஸ்டாலின் மற்றும் ஆளூர் ஷாநவாஸ் இடையே நடந்ததாக கூறப்படும் ரகசிய சந்திப்பு பேசப்படுகிறது.

ஆளூர் ஷாநவாஸ் பெயரில் சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அவை அவருடைய அதிகாரப்பூர்வ பதிவுகள் அல்ல என்று விசிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆளூர் ஷாநவாஸ் நேரடியாக எந்த மறுப்பும் தெரிவிக்காததால் சந்தேகங்கள் நீடித்துக் கொண்டே இருக்கின்றன. 

சட்டமன்ற தேர்தல் முடிந்து, அதிமுக 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், அதிமுக இரண்டாக உடைந்தது. இபிஎஸ் க்கு எதிராக  எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம்   கோஷ்டி  விஸ்வரூபமெடுத்த நிலையில், அந்த பிரச்னைகள் முடிந்து, இரு அணி எம்எல்ஏ-க்களும் ஒன்றாக சபாநாயகரை சந்தித்து, ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனுக்களை வாபஸ் பெற்றனர்.

தவெகவில் இணைந்தா அமைச்சுப் பதவி பெறலாம் என எதிர்பார்த்த சிலர் எடப்பாடிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள். விஜய்யின் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது  அவர்களுக்கு இடம் கொடுக்கபப்டாமையிலான தந்து உறுப்பினர் பதவியைக் காப்பாற்றுவதற்காக எடப்பாடியுடம் சரணடைந்தனர். 

சிவி சண்முகம், எஸ்பி வேலுமணிக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏ-க்களான ஜெயக்குமார், சத்தியபாமா, மரகதம் குமரவேல் , இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை இராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.  அதிமுகவின்  முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  தவெக-வில் இணைந்தார்.  அதிமுக-வினர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுக-விற்கு புதிய போட்டியாக உருவாகியிருக்கும் தவெக-வில் இணைவதால் தங்களது அரசியல் எதிர்காலத்தை காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற போக்கிலே அவர்கள் இணைந்து வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக-வினர் தொடர்ந்து தவெக-வில் இணைவது இரண்டாம் கட்ட நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இதன்மூலம் கட்சியில் தங்களது ஆதரவாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பொறுப்புகளை பெற முயற்சிப்பார்கள் என்றும், அடுத்தடுத்து நடக்கும் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு பெறுவார்கள் என்றும், இதனால் கட்சி தொங்கியது முதலே கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு உரிய வாய்ப்பு மறுக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருச்சி கிழக்கு தவிர அம்பாசமுத்திரம், பெருந்துறை, , மற்றும் மதுராந்தகத்தில் தவெக சார்பில் ஏற்கனவே பாேட்டியிட்டவர்களுக்கு விஜய் வாய்ப்பு வழங்குவாரா? அல்லது தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை உதறித் தள்ளிவிட்டு வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்குவாரா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. ராஜ்யசபா பதவி தவெக-விற்கு கிடைத்திருக்கும் சூழலில், ராஜ்யசபா உறுப்பினராக விஜய் மாநிலங்களவைக்கு யாரை அனுப்பி வைக்கப்போகிறார்? என்ற மிகப்பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.  

விஜய்க்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக் கழகத்திற்காக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரமும், முன்னுரிமையும் எப்போதும் அளிக்க வேண்டும் என்றும், அதை கட்சித் தலைமை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தவெக வலியுறுத்தி வருகிறது. இதுதவிர விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் திமுக மற்றும் அதிமுக-விற்கு மாற்றாகவே தவெக-விற்கு வாக்களித்தோம். ஆனால், அந்த கட்சியில் இருப்பவர்கள் இங்கே இணைந்தால் எப்படி மாற்றம் வரும்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.