Friday, May 31, 2019

உலகக்கிண்ண முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது


ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண கிறிக்கெற்றின் முதல் போட்டியில் தென். ஆபிரிக்காவை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து 104 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென். ஆபிரிக்கா பந்துவீச்சைத் ட்ர்ஹேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களைல் எட்டி விக்கெற்களை இழந்து 311 ஓட்டங்கள் எடுத்தது. தென்.ஆபிரிக்க 39.5 ஓவர்களில்  சகல விக்கெற்களையும் இழந்து 207 ஓட்டங்கள் அடித்து தோல்வியடைந்தது.

இங்கிலாந்தின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான ஜானி பெஸ்டோ,ராஸன் ராய் ஆகிய இருவரும் களம் இறங்கினர். உலகக்கிண்ண வரலாற்றில் முதன் முதலாக ஒரு புதிய சரித்திரத்தை தென். ஆபிரிக்க கப்டன் டுபிளிஸிஸ் அரங்கேற்றினார். வேகப்பந்து வீச்சாளரை எதிர்பார்த்து எதிரணி வீரர்களும் ரசிகர்களும் காத்திருந்தபோது சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிரிடம் பந்தைக்கொடுதார் டுபிளிஸிஸ்.

19912 ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நியூஸிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் தீபக் பட்டேல் இரண்டாவது ஓவரை வீசி சரித்திரம் படைத்தார். இப்போ அது முறியடிக்கப்பட்டுவிட்டது. முதல் பந்தை எதிர்கொண்ட ராய் ஒரு ஓட்டம் எடுத்தார். இரண்டாவது பந்துக்கு முகம் கொடுத்த பெஸ்டோ, விக்கெற்கீப்பர் டிகொக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அத பின்னரான்ஃஅ போட்டி முழுவதும் இங்கிலாந்தின் கைகளிலேயே இருந்தது.

ஜாசன் ராயுடன் ஜோ ரூட் இரண்டாவ்து விக்கெற்றுக்கு  இணைந்தார். இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி இங்கிலாந்தின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். 17   ஆவது ஓவரில் இங்கிலாந்து 100 ஓட்டங்களை எட்டியது. 111 பந்துகளுக்கு முகம் கொடுத்த இந்த ஜோடி 106 ஓட்டங்கள் எடுத்தது. ஜாசன் ராய்  53 ஓட்டங்கலிலும் ஜோ ரூட்  59 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணியின் கப்டன் இயன் மோர்கனும் சகல துறை வீரர் பென் ஸ்டோக்ஸும் மூன்றாவது விக்கெற்றில் இணைந்து ஒட்ட விகிதத்தை குறையவிடாமல் பார்த்தனர். நான்கு பவுண்டரிகளும் மூன்று சிக்சரளும் அடித்து ரசிகர்கலைக் குஷிப்படுத்திய மோர்கன்  57 ஓட்டங்ளில் ஆட்டமிழந்தார். அடுத்டு வந்த பட்லர் 18 ஓட்டங்கலில் வெளியேறினார். இங்கிலாந்து வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க பென் ஸ்டோக்ஸ் தனி ஒருவனாக விளையாடி 89 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

நிகிடி மூன்று விக்கெற்களையும், இம்ரான்தாஹிர், ரபாடா ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களையும், பெலுக்வயோ ஒரு விக்கெற்றையும் கைப்பற்றினர். இங்கிலாந்து 351 ஓட்டங்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தென். ஆபிரிக்காவின் பந்துவீச்சும் களத்தடுப்பும் ஓட்ட எண்ணிக்கையைக் குறைத்தது. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து 300 ஓட்டங்கள் எடுத்தது இதுவே முதல் முறையாகும்.
312 எனும் இமலாய இலக்குடன் களம் இறங்கிய தென். ஆபிரிக்கா, 39.5 ஓஒவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 207 ஓட்டங்கள் எடுத்தது. ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சு தென் ஆபிரிக்க வீரர்களைக் கட்டிப்போட்டது. தென். ஆபிரிக்க ஆரம்ப்த் துடுப்பாட்ட வீரரான அம்லாவின் ஹெல்மெட்டி ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து சேதப்படுத்தியதால் அதிர்ச்சியடைந்த ஆம்லா, மைதானத்தை விட்டு வெளியேறினார். 11 ஓட்டங்களுடன் மார்க்ராமையும் ஐந்து ஓட்டங்களுடன் டுபிளிஸையும் ஆர்ச்சர் வெளியேற்றினார்.  டிகொக் 68 ஓட்டங்களும் வாண்டன் டுசன் 50 ஓட்டங்கலும் எடுத்தனர். வெளியாறிய அம்லா மீண்டும் களம் இறங்கி  13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பெலுக்வயோ 24 ஓட்டங்கள் எடுத்தார். ஏனையவர்கள் அதனைவிடக் குறைவான ஓட்டங்களே எடுத்தனர்.
ஆர்ச்சர் மூன்று விக்கெற்களும் பென் ஸ்டோக்ஸ்,  பிளங்கெற் ஆகியோர் தலைஇ இரண்டு விக்கெற்களும் ஆதில் ரஷீட், மொயின் அலி ஆகியோர் தல ஒரு விக்கெற்ரும் எடுத்தனர். பென்ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இங்கிலாந்து 351 ஓட்டங்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தென். ஆபிரிக்காவின் பந்துவீச்சும் களத்தடுப்பும் ஓட்ட எண்ணிக்கையைக் குறைத்தது. தென் ஆபிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து 300 ஓட்டங்கள் எடுத்தது இதுவே முதல் முறையாகும்
விரட்டியடித்தார்
மோர்கன் 27 ஒட்டங்கள் எடுத்த போது, ஒரு நாள் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் இங்கிலாந்து வீரர்.

ஜோப்ரா ஆர்ச்சர்ஷாட்பிட்ச்பந்துகளை போட்டு மிரட்டினார். அவர் வீசிய ஒருபவுன்சர்பந்து தொடக்க ஆட்டக்காரர் அம்லாவை ஹெல்மெட்டோடு பலமாக தாக்கியது. இதனால் அதிர்ந்து போன அம்லா சிகிச்சை பெறுவதற்காக வெளியேறினார்

  ஜேஸன் ராய் 8 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 54 ரன்களை எடுத்து தனது 15-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார் பெலுக்வயோ
 ஜோ ரூட் 59 பந்துகளில் 51 ஓட்டங்கள்  இது ஜோ ரூட்டின் 31-ஆவது ஒரு நாள் அரைசதமாகும்.  

 மொர்கன் தனது 46-ஆவது அரைசதத்தையும் பதிவு செய்தார். 3 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 60 பந்துகளில் எடுத்தார்.

உலகக் கோப்பையில் முதல் ஓவர் வீசி இம்ரான் தாஹிர் சாதனை

உலகக் கோப்பை போட்டியில் முதல் ஓவரை வீசிய முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் நிகழ்த்தினார்

கடந்த 1992 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானஆட்டத்தில் 2-ஆவது ஓவரை வீசினார் நியூஸி சுழற்பந்து வீச்சாளர் தீபக் பட்டேல் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஸ்டோக்ஸ். மின்னலென ஓடிவந்து, ஒற்றைக் கையில் பந்தை எடுத்து அதே வேகத்தில் எறிந்து, பிரிடோரியஸை ரன் அவுட் ஆக்கினார். அதன்பிறகுதான் அந்த ஆட்டத்தின் பெஸ்ட் மொமென்ட். ஃபெலுக்வாயா அடித்த பந்தை, தன் இடதுபுறம் ஓடி, பின் நோக்கிக் குதித்து, வலது கையால் பிடித்த அவரது அந்த கேட்ச், நிச்சயம் உலகக் கோப்பை முடிந்தபின்னும் பேசப்படும்

Wednesday, May 29, 2019

மோடியை மூழ்கடித்த தமிழகம்


இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் 303 தொகுதிகளில் வெற்றி பெற்ற மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி தமிழகத்தில் தனது அடையாளத்தை இழந்துள்ளது. பாரதீய ஜனதாவின் தப்புத் தாளத்துக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  தலை தெறித்து ஆடியது.  பாரதீய ஜனதாக் கட்சியுடன் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம்  கூட்டணி சேரப்போகும் செய்திகளை மருத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இரகசியத் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தனர். மறைந்திருந்த பொய்களை தேர்தல் கூட்டணி வெளிப்படுத்தியது.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு ஆளுமைகள் இல்லாத அரசியல் களத்தில் மிகச்சரியான கூட்டணி அமைத்த ஸ்டாலின் மிகப்பெரும் தலைவராக உயர்ந்து நிற்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின்  கையில் இருந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இப்போது ஸ்டாலினின் வசம் வந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் தான் கிடைத்துள்ளது. அதுவும் பன்னீரின் மகன் என்பது முதலமைச்சர் பழனிச்சாமிக்கு சற்று பின்னடைவாக உள்ளது. தமிழகத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்திருந்த பராதீய ஜனதாக் கட்சி இன்று அதனையும் இழந்துள்ளது.

இந்திய நாடாளு லுமன்றத் தேர்தலில் 303  எனும் பிரமாண்டமான உறுப்பினர்களை அறுவடை செய்த பாரதீய ஜனதாவால் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற  முடியவில்லை. பாரதீய ஜனதாக் கட்சியுடன்  கூட்டணி சேர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 36 நாடாளுமன்ற  உறுப்பினர்களை இழந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முன்னேற்றக் திராவிட கழகம், புதிய தமிழகம்,  தமிழ் மக்கள் காங்கிரஸ் ஆகியனவும் படு தோல்வியடைந்தன. மாறாக திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்த காங்கிரஸ், மாக்சிஸ்ட்,கம்யூனிஸ்ட்,விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய முஸ்லிம் லீக்,கொங்குநாடு மக்கள் கட்சி,இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியன வெற்றி பெற்றுள்ளன. ஈ.வி.கே இளங்கோவன் மட்டும் தோல்வியடைந்துள்ளார்.  பனப்பட்டுவாடா  புகாரினால் வேலூரில் தேர்தல் நடைபெறவில்லை.

தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவரான தமிழைசை, முன்னாள் அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன்,எச்.ராஜா, சி.பி ராதாகிருஷ்ணன் ஆகிய தமிழக பாரதீய ஜனதாவின் பிரபலங்கள் தேர்தலில் மிக மோசமாகத் தோல்வியடைந்துள்ளனர். 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 50  நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் விளங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகம் இன்று பலமிழந்துள்ளது.

கருணாநிதியின் தலைமையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோல்வியடைந்த திராவிட முன்னேற்றக் கழகம் இன்று 23 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ராகுல்,மம்தா,அகிலேஷ் யாதவ்,கெஜ்ரிவால் போன்ற   வடநாட்டு அரசியல்வாதிகளை வீழ்த்திய மோடி, தமிழகத்தில் ஸ்டாலினிடம் வீழ்ந்தது எப்படி என அனைவரும் வியப்புடன் நோக்குகின்றனர். மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி கடந்த ஐந்து வருட ஆட்சியில் இருந்தபோது மக்கள் அனுபவித்த துயரங்களைப் பட்டியலிட்டால் பாரதீய  ஜனதா வெற்றி பெறுவது முடியாத காரியம். அனால், தமிழகத்தையும் கேரளாவையும் தவிர இந்தியாவின் சகல மாநிலங்களிலும் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

நீட்தேர்வு,காவேரி,தமிழ்க மீனவர்,ஹைட்ரோ காபன், ஸ்டேர்ட்லைற், எட்டு வழிச்சாலை, புயல் சேத புறக்கணிப்பு என்பன பாரதீய ஜனதாவுக்கு எதிரான வாக்குகளாக மாறின. அந்த எதிர்ப்பு அலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் ஏனைய கூட்டணிக் கட்சிகளும் அடிபட்டுப்போயின. திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக்கட்சிகளும் கொடுத்த வாக்குறுதிகளுக்கமைய வாக்குகளை அள்ளிப் போட்ட தமிழக மக்கள் இமாலய வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். மத்தியில் கங்கிரஸ் ஆளும் கட்சியாக காங்கிரஸ்  இல்லாமையால் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பதை அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர்.

Tuesday, May 21, 2019

கனவைக் கலைத்த கருத்துக் கணிப்பு


இந்திய நாடாளுமன்றத் தேர்தல்  முடிவடைந்த பின்னர் வெளியான கருத்துக் கணிப்பில் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சி மீண்டும் அட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகளால், மோடியையும் பாரதீய ஜனதாவையும் வீட்டுக்கு அனுப்புவோம் என சபதம் செய்த அரசியல்த் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு வீசிய மோடி அலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சின்னாபின்னமாயின. மோடி எனும் ஒற்றைச்சொல் பரதீய ஜனதாக் கட்சியை ஆட்சியில் அமர வைத்தது.

மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சியில் ஐந்தாண்டு கால ஆட்சிக்கு எதிராக மக்கள் அணி வகுத்து  நின்றதால் இந்தத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி தோல்வியடையும் என்ற கருத்து நிலவியது. ஆனால், கருத்துக் கணிப்புகள்  அத்தனையையும்  பொய்யாக்கியுள்ளன. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பன மோடிக்கு எதிரான வலுவான அஸ்திரமாகக் பார்க்கப்பட்டன. மோடியின் ஆட்சியில் அனுபவித்த அத்தனை அவலங்களையும் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம் மீது நடைபெற்ற தாக்குதல் முறியடித்து விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாரதீய ஜனதசக் கட்சி 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என நான்கு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இரண்டு கருத்துக் கணிப்புகள் மட்டும் அறுதிப் பெரும்பான்மைக்குக் குறைவான தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெறும் எனக் கூறியுள்ளன. அறுதிப் பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தாலும் மோடி மகிழ்ச்சியாக இல்லை. பாரதீய ஜனதாவின் பிரத்ட்மரைத் தீர்மானிக்கும் ஆர்.எஸ்.எஸ், மோடிக்கு ஆதரவாக இல்லை. மோதி பிரதமராவதை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாத் தளத் தலைவர் நிதீஷ் குமார் விரும்பவில்லை. அத்வானி போன்ற மூத்த தலைவர்களை மோடி, அமித்ஷா கூட்டணி ஒதுக்கியதால் அவர்களின் மீது விசுவாசம் கொண்ட ஏனைய தலைவர்களும் மோடிக்கு எதிராக வெளிப்படையாகக் களம் இறங்கும் நிலை ஏற்படலாம்.

மோடியைக் கடுமையாக எதிர்த்த ராகுல், மாம்தா, அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்கள் ஓரணியில் இல்லாமல் தேர்தலில்  போட்டியிட்டது பாரதிய ஜனதாவுக்கு சாதகமாகி இருக்கலாம். மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும் கட்சிகள் பிரதான எதிர்க் கட்சியான காங்கிரஸுடன் இணைந்து செயற்படவில்லை. இதுவும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு சாதகமாக அமையும் சாத்தியம் உள்ளது
.
தமிழகத்தை பொறுத்த வரையில் எதிர் பார்த்தது போல திராவிட முன்னேற்றக் கழகம் அதிகளவு தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழ்கக் கருத்துக் கணிப்பை நம்பும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கட்சிகள் மத்தியில் பாரதீய ஜனதாக் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதை நம்பத் தயாராக  இல்லை. தமக்குச் சாதகமாக கருத்துக் கணிப்பு வரவில்லை என்றால் அது கருத்துக் கணிப்பு அல்ல. கருத்துத் திணிப்பு என்கிறார்கள். 200 4 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலா ஆட்சி மீண்டும் உருவாகும் எனக்  கருத்துக் கணிப்புத் தெரிவித்தது. அப்போது கருத்து கணிப்பைப் பொய்யாக்கி ஆட்சிபீடமேறிய காங்கிரஸ்  தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சி அமைத்தது. அதேபோன்று இம்முறையும்கருத்துக் கணிப்பு பொய்யாகும் என காங்கிரஸார் நம்புகின்றனர்.

கருத்துக் கணிப்பு என்பது மாயை.  சில நிறுவனங்களை விலைக்கு வாங்கி விட்டதாக சிலர் கருதுகிறார்கள்.  பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கருத்துக் கணிப்புத் தெரிவித்ததால் பங்குச் சந்தைகளி அதிகரித்ததை இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். வக்களித்தவர்கள் பொய்யான தகவலைச் சொல்லியிருக்கலாம் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. அவுஸ்திரேலிய்த் தேர்தலின் பின்னரான கருத்துக் கணிப்பை அந்நாட்டு மக்கள் பொய்யாக்கிவிட்டனர். அப்படி ஒரு நிலை இந்தியாவிலும் ஏற்படும் என்ற கருத்தையும்  புறந்தள்ளி விட முடியாது. மே 23 ஆம் திகதி  இதற்கான விடை தெரிந்துவிடும்.


Wednesday, May 15, 2019

தமிழக அரசைத் துரத்தும் இடைத்தேர்தல்


எடப்பாடி பன்னீர்ச்செல்வத்தின் தலைமையிலான அரசுக்கு பரீட்சைக்களமாக அமையப்போகிறது சட்டமன்ற இடைத்தேர்தல். சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரம்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு எதிர் வரும் 19 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கையில் இருந்த இந்த நான்கு தொகுதிகளையும் தக்க வைக்கவைப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி பெரும் பிரயத்தனம் செய்கிறார். நான்கு தொகுதிகளையும் கைப்பற்றி எடப்பாடிக்கு அதிர்ச்சிகொடுக்க வியூகம் அமைத்துள்ளார் ஸ்டாலின். அங்கு எடப்பாடியை வீழ்த்த சதுரங்கம் ஆடுகிறார் தினகரன்.

திருபரங்குன்றத்தில் போஸ் வெற்றி பெற்றதுசெல்லாது என நீதிமன்றத்தின் மூலம் உறுதி செய்த டாக்டர் சரவணன்  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுகிறார். போஸ் தாக்கல் செய்த வேட்புமனுவில் ஜெயலலிதா கையெழுத்திடாமல் விரல் ரேகை பதிவு செய்தார். அப்போது ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்தாரா என்ற நீதிமன்றம் சந்தேகப்பட்டதால் போஸின் வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுபவரின் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற கருத்தும் உள்ளது.

அரவக்குறிச்சித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜியும், ஒட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சுந்தர்ராஜனும்  தினகரனுடன் கைகோர்த்ததால் பதவியைப் பறிகொடுத்தனர். செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்திலும், சுந்தர்ராஜன், தினகரனின் அமைப்பிலும் போட்டியிடுவதால் அத் தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி கேள்விக்குறியாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை சூலூர். அங்கும் வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தினகரன் பெரும் தலையிடியாக இருக்கிறார். ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் ஆதரவாக இருப்பவர்கள் தினகரனை ஆதரிப்பார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி எவ்வளவு என்பது இன்னமும்  தெரியவில்லை. ஜெயலலிதா தலைமை வகித்தபோது இருந்த வாக்கு வங்கி அப்படியே இருக்கிறதா? கூடியுள்ளதா? அல்லது குறைந்துவிட்டதா என்பது புரியாத புதிராக உள்ளது.

 நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதும் திராவிட முன்னேற்றக் கழகம் முந்திக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்தது. ஆளும் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பலத்த இழுபறிகளின் பின்னர் வேட்பாளர்களை அறிவித்தது. சில அமைச்சர்கள் தமக்கு வேண்டியவர்களை வேட்பாளராக்குவதற்கு முயற்சி செய்ததால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அறிவிப்பு தாமதமானது. ஜெயலலிதா இருக்கும் போது யாருமே சிபார்சு செய்வதில்லை. இப்போ எல்லாம் தலைகீழாகி விட்டது.

நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலினும், எடப்பாடியும் தமது வியூகத்தை மாற்றியுள்ளனர். பிரதான வீதி, சந்தை, பஸ்நிலையம் என மக்கள் கூடும் இடங்களில் நடந்து சென்று வாக்குச் சேகரிக்கிறார் ஸ்டாலின். திண்ணைப் பிரசாரம், கலந்துரையாடல், கைகுலுக்குதல், செல்பி எடுத்தல்  என மக்களுடன் மிக நெருக்கமாக ஸ்டாலின் வலம் வருகிறார். பொதுத் தேதலின் போது பாரதீய ஜனதாவையும் மோடியையும் தூக்கிப் பிடித்த எடப்பாடி பன்னீர்ச்செல்வம் இப்போது வசதியாக அவற்றை மறைத்துவிட்டார்.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை சூலூர்.  சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் மரணமானதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கனகராஜின் மனைவி வேட்பாளராகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கனகராஜின் சித்தப்பாவின் மகனான கந்தசாமி என்பவரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக அறிவித்துள்ளது. பலமான வாக்கு வங்கி உள்ள தொகுதி, அனுதாப அலை என்பவற்றின் மூலம் வெற்றி பெறலாம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்க்கிறது.

கழகத்தின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியை வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. அதிகாரம் கையில் இருந்தபோது அசைக்க முடியாத சக்தியாக இருந்த பொங்கலூர் பழனிச்சமிமீது ஏகப்பட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டன. சட்டமன்றம் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்காக கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களின் பொங்கலூர் பழனிச்சாமிக்கும் அவரது உறவினர்களுக்கும் போது வாய்ப்பு மறுக்கப்பட்டது. சூலூரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினருடன் போட்டிபோடுவதற்கு தகுதியான ஒருவர் பொங்கலூர் பழனிச்சாமி என கருதி ஸ்டாலின் அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
தினகரனின் தலைமையிலான கட்சியின் வேட்பாளராக சுகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தினகரனுடன் இருக்கும் முன்னாள் அமைச்சர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து வெளியேறி  தினகரனுடன் இணைந்த பிரமுகர் ஆகியோர் சூலூரில்  போட்டியிட விரும்பியபோதும் அவர்களைப் புறம் தள்ளி சுகுமார் வேட்பாளராகியுள்ளார்.

மூன்று வேட்பாளர்களும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சாதியின் செல்வாக்கு தூக்கலாக உள்ளது. 25 சதவீத தேவர் சமுதாய வாக்குகள் சூலூரில் உள்ளது.
ஒட்டப்பிடாரம் தொகுதியிலிருந்து 2016 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சுந்தர்ராஜ். ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஏற்பட்ட சூறாவளியால் தினகரனின் பக்கம் சாய்ந்ததால் பதவியைப் பறிகொடுத்தார். இடைத் தேர்தலில் தினகரனின் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். இது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. எடப்பாடி அரசின் பதவியைக் காப்பாற்ருவதற்காக பலிக்கடாவாக்கப்பட்டவர்களுல் சுந்த்ர்ராஜனும் ஒருவர். ஒட்டப்பிடார மக்கள் தன் பக்கம் இருப்பதாக அவர் கருதுகிறார்.
2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது வேட்புமனுவில் தவறான தகவலை   சுந்தர்ராஜ் குறிப்பிட்டதாக அவரிடம் தோல்வியடைந்த டாக்டர் கிருஷ்ணசாமி வழக்குத் தொடுத்தார். சுந்தர்ராஜ், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். டாக்டர் கிருஷ்ணசாமி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்துள்ளார். ஆகையால் தான் தொடுத்த வழக்கை வாபஸ் பெற்றதால் தேர்தல் நடைபெறுகிறது.

அனைச்சர்களான கடம்பூர் ராஜு, வேலுமணி,தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமான மோகன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். 2006, 2011 ஆம் ஆண்டு தேர்தலின் போது ஒட்டப்பிடாரம் தொகுதியில் வெற்றி பெற்ற  மோகனுக்கு எதிராக சிலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்  இருக்கின்றனர்.

அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான சண்முகையா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுகிறார். ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு பலர் விணப்பித்த போதும் சண்முகையாவுக்கு செல்வாக்கு இருப்பதால் அவர் வேட்பாளரானார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனை திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக்கியுள்ளது. அண்ணா திராவிட முன்னெற்றக் கழக உறுப்பினர் போஸின் வெற்றி செல்லாது என நீதிமன்றத்தின் மூலம்  தீர்ப்புப் பெற்றவர் டாக்டர் சரவணன். திருப்பரங்குன்ற மக்களால் நன்கு அறியப்பட்டவர். அழகிரியின் ஆதர்வாளரான சரவணன், சிறிதுகாலம் பாரதீய ஜனதாவில் செயற்பட்டவர். பின்னர் வைகோவின் கட்சியில் இணைந்தார்.  அங்கிருந்து வெளியேறி மீண்டும் திராவிட முன்னேற்றக் கழ்கத்தில் ஐக்கியமானார். திராவிட முன்னேற்றக் கழக மருத்துவ அணியின் மூலம்  மக்களிடன் மிகவும் நெருக்கமானவர். 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழ்க வேட்பாளராக முனியாண்டி போட்டியிடுகிறார். அமைச்சர்களின் சிபார்ச்சுகளைப் புறந்தள்ளிய எடப்பாடி, தனக்காகப் போராட்டம் நடத்தியவரை வேட்பாளராக்கி உள்ளார். தினகரனும் தனக்கு வேண்டப்பட்ட மகேந்திரனை வேட்பாளராக்கியிருக்கிறார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டில்  தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு பின்னர் நடைபெற்ற தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தினகரன் பிரிந்தபோது அவரின் பின்னால் சென்றவர் செந்தில் பாலாஜி. தகுதி நீக்கத்தால் சட்ட மன்ற உறுப்பினர் பதவியை இழந்தபின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். செந்தில் பாலாஜியின் சொல்லுக்கு அரவக்குறிச்சி தொகுதி கட்டுப்படும். சுயேட்சையாக போட்டியிட்டாலும் அவர் வெற்றி பெறுவார். தந்து எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

செந்தில்பாலாஜியின் சிஷ்யப்பிள்ளையான செந்தில் நாதனை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக்கி உள்ளது. செந்தில் பாலாஜியுடன் ஒரே கட்சியில் இருந்தபோது முரண்பட்ட  சாகுல் ஹாமீதை தினகரன் வேட்பாளராக்கியுள்ளார். அரவக்குறிச்சியில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதால் தினகரன் அந்த வழியில் சென்றுள்ளார்.

இந்தியப் பொதுத்தேர்தலில் தமிழகம்,புதுவை உட்பட் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என திராவிடமுன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் சூழுரைத்தன. இதேவேளை 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் பொதுத் தேர்தலன்று நடைபெற்றது. பொதுத் தேர்தலைவிட சட்ட மன்ற இடைத்தேர்தலிலேயே திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதிக அக்கறை எடுத்தன. மத்தியில் மீண்டும்  பாரதீயஜனதா ஆட்சி அமைத்தால் எடப்பாடி பன்னீர்ச்செல்வத்தின் பதவிக்கு ஆபத்தில்லை. மாறாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால் எடப்பாடியின் முதலமைச்சர் கதிரை பறிக்கப்படும். ஆகையால்  தமிழக சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுதான் தமிழக ஆட்சியைத் தீர்மனிக்கப்போகிறது.

Monday, May 13, 2019

ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்து மும்பையிடம் கிண்ணத்தைக் கொடுத்த சென்னை


ஒன்றரை மாதமாக நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸும், சென்னை சூப்பர் கின்ஃப்ஸும் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்ற பெற்ற மும்பை முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஒவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.  150 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை விரட்டிய சென்னை, 20 ஓவர்களில் ஏழு விக்கெற்களை இழந்து 148 ஓட்டங்கள் எடுத்து ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்தது.

சென்னையும், மும்பையும் தலா மூன்று முறை சம்பியனாகின. நான்காவது முறையாக சம்பியனாகி  சாதனை செய்ய களம் இறங்கின. சென்னையும் மும்பையும்  மூன்று முறை இறுதிப்போட்டியில் விளையாடின. மும்பை  இரண்டுமுறையும், சென்னை ஒரு முறையும் வெற்றி பெற்று சம்பியனாகின. இந்த ஐபிஎல் சீசனில் சென்னையை இரண்டு முறை எதிர்கொண்ட மும்பை இரண்டு முறையும் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் சென்னையை மும்பை  வெற்றி கொண்டது.

ஐபிஎல் தொடரில் ஏழு இறுதிப்போட்டிகளில் விளையாடிய சென்னை மூன்று முறை சம்பியனாகியது. நான்கு முறை தோல்வியடைந்தது. சூதாட்டத் சர்ச்சையில் சிக்கி இரண்டு  வருட தடைக்குப் பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் விளையாடியபோது முதியோர் அணி எனக் கூறப்பட்டது. அந்த கேலியையும் கிண்டகளையும் உடைத்தெறிந்து தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. 2010 ஆம் ஆண்டு மும்பையுடனான போட்டியில் வெற்றை பெற்ற சென்னை, அதற்குப் பின்னரான அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்தது. 150  என்பது இலகுவான இலக்கு என்பதால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மும்பையில் ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு மிட்ச் மெக்லேகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் எதுவும் இல்லை. கடந்த போட்டியில் ஒரு ஓவரில் 13 ஓடங்களைக்  கொடுத்த ஷர்துர் தாகூர் , நீக்கப்பட்டு முரளி விஜய் சேர்க்கப்படலாம் என எதிர் பார்க்கப்பட்டது. ஷர்துர் தாகூரை டோனி நீக்கவில்லை. டோனியின் நம்பிக்கையை தாகூர் காப்பாற்றிவிட்டார். மும்பையிலும் சென்னையிலும் சிரந்த துடுப்பாட்ட வீரர்கள் இருந்தாலும் இறுதிப்போட்டியை பந்துவீச்சாளர்கள் தம் வசம் எடுத்துக்கொண்டனர். இலகுவான கச்களைத் தவறவிட்டவை, முஸ்பீல்டால் ரன் அவுட்களைக் கோட்டைவிட்டு நான்கு ஓடங்களை வழங்கியமை என ஏகப்பட்ட தவறுகளை இரண்டு அணிகளும் செய்தன.
குயிண்டன் டீக்காக்கும், ரோகித் சர்மாவும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர்.  இந்த ஜோடி ஓட்ட சராசரியை ஐந்து ஓவர்வரை 10 ஆக வைத்திருந்தது தீபக் சாகரின் முதல் ஓவரில் டிகாக் இரண்டு ஓட்டங்கள் மட்டும் எடுத்தார். ஷர்துர் தாகூர் வீசிய இரண்டாவது ஓவரில் ரோகித் சர்மா சிக்ஸர் அடிக்க மும்பை ரசிகர்கள் ஆரவாரப்பட்டனர். தீபக் சாஹரின் மூன்றாவது ஓவரில் டி காக், மூன்ன்றி சிக்ஸர்கள் அடிக்க அரங்கம் அதிர்ந்தது. ஹர்பஜனின் ஓவரில் ரோகித் சர்மா பவுண்டரியும், ஷர்துர் தாகூரின் ஒவரில் குயிண்டன் டிகாக் சிக்ஸரும் அடிக்க மும்பையின் ஓட்ட விகிதம் உயர்ந்தது. மும்பை ரசிகர்களின் இந்த சந்தோசம் அதிக நேரம் நீடிக்கவில்லை. தாகூரின் அடுத்த பந்தை டோனியிடம் பிடிகொடுத்த டிகாக் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ரோகித்துடன் சூரியகும்மர் யாதவ் இணைந்தார்.  தீபக் சாஹரின் அடுத்த ஓவரில் டோனியிடம் பிடிகொடுத்த ரோகித் சர்மா15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  சூரியகுமார், இஷான் கிஷான் ஜோடியின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. முதல் ஆறு ஓவர்கள் பவர் பிளேயில் மும்பை இரண்டு விக்கெற்களை இழந்து 45 ஓட்டங்கள் எடுத்தது.  சூரியகுமார் யாதவ், இஷாந்த் கிஷான் ஆகிய இருவரும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடினர். 11.2 ஒவர்களில் மும்பையின்  ஓட்ட எண்ணிக்கை 82 ஓட்டங்களாக இருந்தபோது இம்ரான் தாஹிரின் பந்து வீச்சில் 15 ஓட்டங்கள் எடுத்த சூரியகுமார் யாதவ் விக்கெற்றைப் பறிகொடுதார். அடுத்து வந்த க்ருனால் பாண்டியா ஷர்துரின் பந்தி அடித்து அவரிடமே பிடிகொடுத்து ஏழு ஓட்டங்களுடன் வெளியேறினார்.

புதிய வீரராகக் களம் இறங்கிய பொலாட்,தனது அதிரடியை வெளிக்காட்டினார். 14.1 ஓவர்களில் மும்பை 100 ஓட்டங்களை எட்டியது.   இம்ரான் தாகூரின் பந்தை தூக்கி அடித்த இஷான் கிஷான், ரெய்னாவிடம் பிடிகொடுத்து 23  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பொலட், ஹார்த்திக் பண்டையா ஜோடி சிக்சர் அடித்து மும்பை ரசிகர்களை உற்சாகப் படுத்தியது. மும்பை ரசிகர்களின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. தீபக் சாஹரின் பந்து வீச்சில் பண்டையா எல்பிடள்ள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதனி எதிர்த்து பண்டையா அப்பீல் செய்தார். மூன்ராவது நடுவரின் தீர்ப்பினால்  16 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

அடுத்துவந்த ராகுல் சாஹர், டுபிளிசிஸம் பிடிகொடுத்து ஓட்டமெடுக்காது ஆட்டமிழந்தார். கடசி ஓவரை பிராவோ வீசிய போது வைட் கொடுக்கவில்லை என்பதால் அதற்கெதிராக பற்றை தூக்கி எறிந்த பொலாட்,  விக்கெற்றை விட்டு விலகி நின்று போக்குக் காட்டினார். நடுவர்கள் எச்சரித்ததால் அமைதியானார்.
 அடுத்து களம் இறங்கிய மிட்ச் மெக்லேகனன் ஒட்டமெதுவும் எடுக்காது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.  20 ஒவர்கள் விளையாடிய மும்பை எட்டு விக்கெற்களை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது. பொலாட் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்கள் எடுத்தார். பொலாட் அதிக பட்சமாக 41 ஓட்டங்கள் எடுத்தார். தீபக் சாஹர் மூன்று விக்கெற்களையும்  ஷர்துர் தாகூர், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களையும் கைப்பற்றினர்.

150  என்ற இலகுவான இலக்குடன் வெற்றி களம்  இறங்க்ய சென்னை, ரசிகர்களை ஏமாற்றியது. டிபிளிசிஸ், வட்சன் ஜோடி நிதானமாக வெற்றியை  நோக்கி துடுப்பெடுத்தாடியது. அதிரடியாக விளையாடிய டுலிளசிஸ் 13 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்தபோது க்ருணாலின் பந்தை டிகாக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ரெய்னா எட்டு ஓட்டங்களுடனும் ராயுடு ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். வட்சனுடன் டோனி ஜோடி சேர்ந்தபோது சென்னை ரசிகர்கள்  உற்சாகமானார்கள்.  மும்பை ரசிகர்களின்  ஆரவாரம் அடங்கியது. இரண்டாவது ஓட்டத்தை எடுக்க முற்பட்ட டோனி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.  மிக நீண்ட  நேரம் பலகோணங்களில் பார்த்த நடுவர் டோனி ஆட்டமிழந்ததாக அறிவித்தார். சென்னை ரசிகர்கள் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. 15.4 ஒவரில் சென்னை 100 ஓட்டங்களைத் தொட்டது. வட்சனுடன் பிராவோ இணைந்தார்.

மலிங்க வீசிய 16 ஆவது ஓவரை வட்சன் துவம்சம் செய்தார், அந்த ஓவரில் 20 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. 17 ஆவது ஓவரை வீசிய பும்ரா நான்கு ஓட்டங்களை மட்டெமே  விட்டுக் கொடுத்தார். க்ருணாலின் 18 ஆவது ஓவரிலும் 20 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.  க்ருனாலில் ஓவரில் 15 ஓட்டங்கள் எடுத்த பிராவோ ஆட்டமிழந்தார். சென்னை வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழக்க வட்சன் நம்பிக்கையுடன் விளையாடினார். ஜடேஜா வட்சனுடன் ஜோடி சேர்ந்தார்.

பும்ரா வீசிய 19 ஆவது ஓவரில் 9 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. கடசி ஓவரில் ஆறு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. நான்காவபந்தில் இரண்டாவது ஓட்டம் எடுக்க முற்பட்டு வட்சன் ஆட்டமிழந்தார்.  59 பந்துகளில் 80 ஓட்டங்கள் அடித்த வட்சன் ஆட்டமிழந்ததும் மும்பையின் வெற்றி உறுதியானது. மலிங்கவின் பந்தை ஷத்துர் தாகூர் எதிர் கொண்டார் இரண்டு பந்துகளில் நான்கு ஓட்டங்கள் தேவை. ஐந்தாவது பந்தில் இரண்டு ஓட்டங்கள். கடைசிப்பந்தில் வெற்றி பெற இரண்டு ஓட்டங்கள் தேவை. அனுபவ வீரர் மலிங்க்வின் பந்தில் ஷர்துர் தாகூர் ஆட்டமிழந்தார். ஒரு ஓட்டத்தால் மும்பை வெற்றி பெற்றது.