Thursday, February 29, 2024

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -87


 சினிமவின் மீது இருந்த ஆர்வத்தால்  வீட்டிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்னையில் கால் பதித்த பஞ்சு அருணாசலம்  சிறந்த பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர், கதையாசிரியர், திரைக்கதை வடிவமைப்பாளர்   என சினிமாவின்  அனைத்திலும்  வெற்றிக்கொடி நாட்டினார்.

 பெரியப்பாவிடம் செட் அசிஸ்டென்ட்டாக திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பிறகு, தன் சித்தப்பா கண்ணதாசனிடம்  பாடல் எழுதும் உதவியாளராகப் பணிபுரிந்தார்.  பஞ்சு அருணாசலத்தின்  உறவினார்கள் பலர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதும்தகக்கு  ஒரு சந்தர்ப்பம் தரும்படி யாரிடமும்  கேட்கவில்லை. பஞ்சு அருணாசலம் எழுதிய  ஒரே  ஒரு பாட்டு அவரின் வாழ்க்கையை மாற்றியது.

சாரதா ஏ.எல்.எஸ் தயாரித்த படம். பாடல் எழுத கவிஞர் ஊரில் இல்லை. அவசரமாக பாடல் தேவைப்பட்டது. கே.வி. மகாதேவன் அவர்கள் தான் இசை. அவருடைய உதவியாளர் புகழேந்தி பஞ்சுவிற்கு மிகவும் நெருக்கமானவர்.

அந்த புகழேந்தி பஞ்சுவை பற்றி கே.வி.எம்.மிடம் சொல்ல அவர் அதுக்கென்ன இந்த சிச்சுவேஷனுக்கு பாட்டை எழுதித் தரச்சொல்லு, நல்லா இருந்தா யூஸ் பண்ணிப்போம் என்று கூறினார். கே.வி.எம். எப்போதும் பாட்டுக்குத்தான் மெட்டு போடுவார். பஞ்சுவும் ஒரு அருமையான பாடலை தர அனைவர் ஆமோதிப்புடன் பஞ்சுவின் பாடல் பதிவாகியது. அந்தப் பாடல்தான் ‘மணமகளே மணமகளே வா வா.. உன் வலது காலை எடுத்து வைத்து வா

. பயத்துடன் பஜ்சு அருணாசலம் எழுதிய பாடல் அரை  நூற்றாண்டு கடந்தும் இன்றுவரை திருமண வைபவத்தைல் ஒலிக்கிறது. "  வாராயென் தோழி வாராயோ,  மணப்பந்தல் காண வாராயோ" எனும் பாடல் மணமகளை அழைத்துவரும் தேசிய கீதமாக  இன்றும் தமிழ் மக்கள் வாழும் நாடெங்கும்  ஒலிக்கிறது.அந்தப்பாடலை கண்ணதாசன் எழுதியதாக நம்பும் பலர் இன்றைக்கும் வாழ்கிறார்கள்.

" வாராயென் தோழி வாராயோ" தந்த வெற்றியால் கண்ணதாசனின் உதவியாளராக  இருந்த  பஞ்சு அருணாசலம் முழுநேரப் பாடலாசிரியரானார்.பஞ்சு அருணாசலம் என்றதும்  இளையராஜாவை அரிமுகப்படுத்தியவர் என்ற  ஒற்றை வரிதான் ஞாபகத்துக்கு வரும். தமிழ் சினிமாவில் அவர் செய்த சாதனைகள் பலருக்கும் தெரியாத சங்கதி. ரஜினியின் அடையாளத்தை முதன் முதலில் மாற்ரியவர்  பஞ்சு அருணாசலம்.  வேகமாக நடப்படு கையைக் காலை ஆட்டுவது, சிகரெட்டைபிடிப்பது என்ர ரஜினியின் கெட்டப்பை "புவனா  ஒரு கேள்விக்குரியில் மாற்ரினார்.  ஆறிலிருந்து அறுபதுவரை, எங்கேயோ கேட்டகுரல் ,  போன்ற படங்கள் ரஜினியின்  இன்னொரு முகத்தை வெளிப்படுத்தின. சகல கலா வல்லவன் என கமலை அடையாளப்படுத்தியவர் பஞ்சு அருணாசலம்.

.   இந்தப் பாடலின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.வி.எம் செட்டியர் 'நானும் ஒரு பெண்' படத்தில் பூப்போல பூப்போல பிறக்கும் என்ற பாடலை எழுத வாய்ப்புக் கொடுத்தார்.

இதைப் பார்த்துக் கவியரசர் வருத்தப்படவில்லை, வாழ்த்தினார். இவராக வலியப் போய் யாரிடமும் வாய்ப்புக் கேட்டதில்லை. அதுவாக ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் அதை உபயோகித்துக் கொள்வார், அவ்வளவுதான். கவிஞர் ஊரில் இல்லாத சமயங்களில் பல திரைப்பட கம்பெனிகளுக்கு டிஸ்கஷன் செல்வார். தேவர் பிலிம்ஸ் மாதிரி பெரிய பெரிய கம்பெனிகளுக்கும் செல்வார். அவர் சொல்லும் சீன்கள் பிடித்தால் அதற்கேற்றார் போல் ஒரு தொகையை கொடுப்பார்கள். சினிமாவிற்கென்று ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. என்னதான் சிபாரிசு இருந்தாலும் தனியாளாக சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதும் பேரெடுப்பதும் கஷ்டம். பஞ்சுவிற்கு திடமான எந்தக் குறிக்கோளும் இல்லை. கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற் போலத்தான் திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தார்.

ஒரு சமயம் புரட்சித்தலைவருக்கும் கவிஞருக்கும் அரசியல் சம்பந்தமாக கருத்து வேறுபாடு வந்தது. இனி எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் எழுதப் போவதில்லை என்று முடிவெடுத்தார். அந்தச் சமயமத்தில் ஜி.என்.வேலுமணி எம்.ஜி.ஆர்-ஐ வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த படத்திற்கு எம்.எஸ்.வி. தான் இசை. கவிஞர் எழுத முடியாத காரணத்தால் பஞ்சுவை கூப்பிட்டு தான் போட்ட டியூனுக்கு பாட்டு எழுதச் சொல்லியிருக்கிறார். அதன்படி பஞ்சுவும் ‘பொன் எழில் பூத்தது புது வானில் என்ற பாடலையும், “என்னை மறந்ததேன் தென்றலே என்ற பாடலையும் எழுதித் தந்திருக்கிறார். பாடலும் பதிவாகி கேஸட் வடிவத்தில் எம்.ஜி.ஆரிடம் சென்றடைந்திருக்கிறது. பாடலை கேட்ட எம்.ஜி.ஆர், “இது கண்ணதாசன் எழுதிய பாடல், என்னை ஏமாற்ற பஞ்சு எழுதிய பாடல் என்று கூறுகிறீர்கள் என்று பாட்டை வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

பஞ்சுவுக்கோ அழகையே வந்துவிட்டது. பிறகு எம்.எஸ்.வி. எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து “என் மீது நம்பிக்கை இல்லையா? நான் உங்களிடம் பொய் சொல்வேனா?” என்று பலவாறாக சத்தியம் செய்திருக்கிறார். பிறகு எம்.ஜி.ஆர் உண்மையை உணர்ந்து பாடலை பாராட்டியதோடு, “பஞ்சுவை என்னை நேரில் வந்து பார்க்கச் சொல், இன்னும் வாய்ப்புகள் தருகிறேன், என்ற கூறியிருக்கிறார்.

ஸ்.பி. முத்துராமன், தேவராஜ், மோகன் போன்றவர்கள் பஞ்சுவுடன் சேர்ந்து ஒரு குழுவானர்கள். உறவு சொல்ல ஒருவன், உறவாடும் நெஞ்சங்கள், மயங்குகிறாள் ஒரு மாது போன்ற படங்கள் வந்து மிகப்பெரும் வெற்றியை பெற்றன. இதன்பிறகு பஞ்சு ஒரு தயாரிப்பாளர் ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்போதெல்லாம் தமிழ்படங்கள் ஒரளவிற்கு நன்றாக இருந்தால் 50 நாட்கள் ஓடும். மிகவும் நன்றாக இருந்தால் 100 நாட்கள் ஓடும். மிக மிக நன்றாக இருந்தால் 175 நாட்கள் ஓடும்.

இந்திப் படங்களைப் பார்த்து, கிந்திபாடல்களைப் பாடிய தமிழக  ரசிகர்களை தமிழ்ப் படத்தின் பக்கமும், பாடல்களின் பக்கமும் திருப்பியதில் பஞ்சு அருணாசலம்  முதன்மையானவர். 

  

Monday, February 26, 2024

ரஷ்யாவின் மேன்முறையீட்டை தள்ளுபடிசெய்த நீதிமன்றம்


 சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின்  இடைநீக்கத்திற்கு எதிரான ரஷ்யாவின் மேல்முறையீடு வெள்ளிக்கிழமை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தால்  தள்ளுபடி செய்யப்பட்டது.

சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட பிரதேசங்களை அங்கீகரிப்பதன் மூலம் உக்ரைனின் உறுப்பினர்களின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறியதற்காக கடந்த ஆண்டு அக்டோபரில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி  இடைநீக்கம் செய்தது.

உக்ரைனின் தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரத்தின் கீழ் உள்ள டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் , சபோரிஜியா ஆகிய பிராந்திய விளையாட்டு அமைப்புகளை அதன் உறுப்பினர்களாக சேர்க்க  ரஷ்யா முடிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு,  2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி  இடைநீக்கம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்ரத்தில் ரஷ்யா  மூல் முறையீடு செய்தது.

பரிஸ்  ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் உக்ரைன் மீதான போரை   ஆதரிக்காத   ரஷ்ய , பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கு டிசம்பரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பச்சைக்கொடி காட்டியது. அப்போது, நடுநிலை வீராங்கனைகளாக தகுதி பெற்ற ரஷ்யாவைச் சேர்ந்த எட்டு வீரர்களும் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று வீரர்களும் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

  ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 11 வரை நடைபெறும் பரிஸ் ஒலிம்பிக்கிற்கு 60 க்கும் மேற்பட்ட உக்ரேனிய விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

ரமணி

தனி ஒருவனாகப் போராடி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்


   ராஞ்சியில்  கடந்த  23ஆம் திகதி  தொடங்கிய  இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் இளம் வீரர்  ஜெய்ஸ்வால், கிறிக்கெற் ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.   முதலில் துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து 353 ஓடங்கள் எடுத்தது.

 முதல் இன்னிங்சில்  களமிறங்கிய இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 7 விக்கெற்களை இழந்து 219 ஓட்டங்கள் எடுத்தது.  இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஏமாற்றிய நிலையில்,  ஜெய்ஸ்வால் அதிக பட்சமாக 73  ஓட்டங்கள் அடித்தார்.  இந்த 73  ஓட்டங்களையும் சேர்த்து ஜெய்ஸ்வால்  இந்தத் தொடரில்   618* ஓட்டங்கள் எடுத்துள்ளார்.   டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 600  ஓட்டங்கள் அடித்த முதல் இந்திய இடது கை வீரர்  என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2007இல் பாகிஸ்தானுக்கு எதிராக சௌரவ் கங்குலி பாகிஸ்தானுக்கு எதிராக 534 ஓட்டங்கள் எடுத்ததே ஒரு தொடரில் இந்திய இடது கை வீரர்  குவித்த முந்தைய அதிகபட்ச  ஓட்டங்களாகும்.

ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்கள் அடித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் திலிப் சர்தேசாய் (1971), சுனில் காவாஸ்கர் (1971, 1978), ராகுல் டிராவிட் (2002, 2003), விராட் கோலி (2014, 2016, 2017) ஆகியோரும் இந்த சாதனையை படைத்துள்ளனர். அது உலக அளவில் போக 23 வயதுக்குள் ஒரு டெஸ்ட் தொடரில் 600 ஓட்டங்கள் அடித்த 7வது வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.  இதற்கு முன் அவுஸ்திரேலிய ஜாம்பவான் டான் ப்ராட்மேன், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ், இந்தியா ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், அவுஸ்திரேலியாவின் நெயில் ஹார்வி, வெஸ்ட் இண்டீஸின் ஜார்ஜ் ஹெட்லி ஆகியோரும் 22 வயதுக்கு முன்பே ஒரு தொடரில் 600  ஓட்டங்கள் அடித்தனர்.

சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட நவல்னி


 ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சில பகீர் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புட்தினை கடுமையாக விமர்சித்து வந்த அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த வாரம் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணத்தை ரஷ்யச் சிறை துறை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

நவல்னியின் குடும்பத்தினர் இதை கொலையாக இருக்கும் என்று சந்தேகிக்கின்றனர். ரஷ்ய அரசே இதற்குக் காரணம் என்றும் கூறுகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி பைடன் வெளிப்படையாக இந்த மரணத்திற்கு புட்தின் தான் காரணம் எனச் சாடியிருந்தார்.

இந்த மரணம் தொடர்பாக சில பரபர தகவல்கள் வெளியாகியுள்ளது. இதயத்தில் வந்து விழுந்த ஒரே ஒரு வலுவான குத்தினால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாகச் சோவியத் கால உளவு அமைப்பான கேஜிபி தனது இலக்குகளை இப்படி தான் காலி செய்வார்கள். இப்போது அதை முறையைப் பயன்படுத்தி நவல்னி கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் சிறை அதிகாரி ஒருவர் பிரபல பிரிட்டன் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். நவல்னியின் உடலில் சில காயங்கள் காணப்பட்டதாக ரஷ்யாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட மற்றும் மனித உரிமை ஆர்வலர் விளாடிமிர் ஓசெக்கின் தெரிவித்தார். அந்த காயம் கேஜிபி பயன்படுத்தும் ஒன்-பன்ச் கொலை முறையுடன் ஒத்துப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த நபர் மேலும் கூறுகையில், "இது கேஜிபி சிறப்புப் படை பயன்படுத்தும் பழைய முறை. உடனடியாக ஒருவரைத் தீர்த்துக் கட்ட இதயத்தின் மையத்தில் குத்த கேஜிபி ஏஜெண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இது கேஜிபியின் தனிச்சிறப்பாக இருந்தது.

: இந்த வகை காயத்தைப் பார்த்தாலே இது கேஜிபி வேலை தான் என்பது தெரியும் அதுதான் அவர்களின் ஹால்மார்க். நவல்னி இருந்த சிறையில் கேஜிபி அதிகாரிகளின் நடமாட்டம் இருந்ததையும் நம்மால் மறுக்க முடியாது. இணக்கு கிடைத்த தகவல்கள் படி பல நாட்கள் திட்டமிட்டு அந்த சிறப்பு ஆப்ரேஷனை (நவல்னியை கொல்வது) நடத்தியுள்ளனர். மேலிடத்தில் இருந்து நேரடியாக இந்த கட்டளை வந்திருக்கிறது. ஏனென்றால் மேலிடத்தின் உத்தரவு இல்லாமல் சிறை கேமராக்களை அகற்றி இருக்க முடியாது.. நவல்னிக்கு நோவிச்சோக் என்ற விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று நவல்னியின் மனைவி யூலியா கூறுகிறார். ஆனால், எனக்கு இதில் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் நோவிச்சோக் கொடுத்தால் டெஸ்டிங்கில் அது தெரிந்துவிடும். எனவே, நோவிச்சோக் கொடுக்க   வாய்ப்புகள் குறைவு.. அவரது உடலில் எந்தவொரு தடயத்தை விட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நோவிச்சோக்கொடுத்திருக்க   மாட்டார்கள்.

அங்கே வெப்பம் மைனஸ் 27 டிகிரி செல்சியஸில் இருக்கும்.. எனவே, நவல்னியை கொல்லும் முன்பு அங்கே வெளியே அவரை சுமார் இரண்டரை முதல் நான்கு மணி நேரம் கழிக்க வைத்து இருப்பார்கள். நீண்ட நேரம் குளிரில் அவரைத் தள்ளி, ரத்த ஓட்டத்தைக் குறைப்பதன் மூலம் அவர்கள் முதலில் உடலைப் பலவீனப்படுத்தினார்கள். இந்தளவுக்கு ஒருவரது உடல் பலவீனமாக இருந்தால் ஒரே அடியில் அவரை வீழ்த்திவிடலாம்" என்றார். சிங்கிள் பன்ச் டெக்னிக் என்பது கேஜிபியின் சிறப்புப் படைகள் பயன்படுத்தும் படுகொலை நுட்பமாகும். இதன் மூலம் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவது ரொம்பவே கடினம். இதன் காரணமாகவே ரஷ்யச் சிறப்பை படை இந்த நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

 

புட்டினுக்கு எதிரான போராட்டம் தொடரும் - நவல்னியின் மனைவி


 ரஷ்ய சிறையில்   மரணமான அலெக்ஸி நவல்னியின் போராட்டத்தை முனெடுக்கப்போவதாக அவரது மனைவி யூலியா நவல்னாயா அறிவித்துள்ளார். புட்டினின் அடக்கு முறைக்கு எர்கிராகப் போராடிய ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர்  அலெக்ஸி  நவல்னி  ரஷ்யச் சிறையில் கடந்த வாரம் மரணமானதாக புட்டினின் அரசாங்கம் அறிவித்தது.  நவ்வல்னியின் மரணம் இயற்கையானதல்ல அவர் கொலை செய்யப்பட்டதாக மனைவி யூலியா நவல்யனா  கடும்  கோபத்துடன்  கூறியுள்ளார்.

 புட்டின் தனது கணவரைக் கொன்றதாகவும்,    தனது இதயத்தின் பாதியை வெட்டியதாகவும்,  இரண்டு குழந்தைகளின் தகப்பனை இல்லாமச் செய்ததாகவும்  நவல்யா வெளியிட்ட  ஒரு நிமிட வீடியோவில் தெரிவித்துள்ளார்.

"நான் சுதந்திர ரஷ்யாவில் வாழ விரும்புகிறேன், சுதந்திர ரஷ்யாவை உருவாக்க விரும்புகிறேன்.அலெக்ஸி நவல்னியின் பணியை நான் தொடருவேன்.என் அருகில் நிற்கும்படி நான் உங்களை வலியுறுத்துகிறேன்.  எங்களுடைய எதிர்காலத்தைக் கொல்லத் துணிந்தவர்கள் மீது ஆத்திரம், கோபம், வெறுப்பு ஆகியவற்றை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோ எங்கிருந்து வெளியிடப்பட்டது என்ற விபரம் தெந்ரியவில்லை.

 ஆனால் நவல்னாயா   ரஷ்யாவில் இல்லை. திங்களன்று பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய யூனியன் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் நவல்னயா கலந்து கொண்டார். அதில் தனது கணவரின் மரணம் தொடர்பாக ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். பிரிட்டனும் ரஷ்யாவுக்கு  எதிராகக் கருத்துக் கூரியுள்ளது. 

நவல்னியின் சடலத்தை ரஷ்ய அதிகாரிகள் மறைத்து வைத்திருப்பதாகவும், அவரது உடலில் இருந்து நோவிச்சோக் நரம்பு முகவரின் தடயங்கள் மறைந்துவிடும் வரை காத்திருந்ததாகவும்மனைவி நவல்னாயா  குற்றம் சாட்டினார். அவர் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை, ஆனால் அவரது குழு தனது கணவரைக் கொன்றது பற்றிய விவரங்களை வெளியிடும் என்று கூறினார்.அலெக்ஸி நவல்னியின் உடல் இன்னும் 14 நாட்களுக்கு ரஷ்ய அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று  அவரது கூட்டாளியான இவான் ஜ்டானோவ்   புலனாய்வாளர் ஒருவரை மேற்கோள் காட்டி கூறினார்.

 மூன்று தசாப்தங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நவல்னி [47] ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே உள்ள "போலார் ஓநாய்" தண்டனைக் காலனியில் நடைபயிற்சி செய்தபின் வெள்ளிக்கிழமை திடீரென மயங்கி விழுந்து இறந்தார் என்று சிறைச் சேவை தெரிவித்துள்ளது.

நவல்னியின் மரணத்திற்கு புட்டின் தான் காரணம் என்று மேற்கு நாடுகளும்,  நவல்னியின் ஆதரவாளர்களும் கூறுகின்றனர். நவல்னியின் மரணம்  பற்றி புட்டின் பகிரங்கக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அலெக்ஸி நவல்னியின் மரணத்தைத் தொடர்ந்து ரஷ்யா மீது இங்கிலாந்து மற்றும் ஜி7 நாடுகள் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் என எதிர்பார்ப்பதாக வெளியுறவுச் செயலர் லார்ட் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.

"அலெக்ஸி நவல்னி என்ன ஒரு சிறந்த மனிதர் என்பதையும், ரஷ்யாவில் புடின் என்ன ஒரு பயங்கரமான ஆட்சியை நடத்துகிறார் என்பதையும் நினைவில் கொள்வதுதான் முதல் விஷயம் என்று நான் நினைக்கிறேன்," என்று பால்க்லாந்து தீவுகளுக்கு விஜயம் செய்தபோது செய்தியாளர்களிடம் கேமரூன் பிரபு கூறினார்.

விளாடிமிர் புட்டினால்  ரஷ்யாவில் நடத்தப்படும்  அரசியல் படுகொலைகள் "புதிதாக எதுவும் இல்லை" மற்றும் அலெக்ஸி நவல்னியின் மரணம் உக்ரைனுக்கான உதவிப் பொதியை வைத்திருக்கும் கடும்போக்கு குடியரசுக் கட்சியினரை வரையறுக்கும் செல்வாக்கை கொண்டிருக்க வாய்ப்பில்லை. "அவர் ஒரு சிறை அமைப்பில் அவரை வைத்திருந்தார் என்பது எங்களுக்குத் தெரியும், அங்கு அவர் வேண்டுமென்றே அவரது உடல்நிலையை சேதப்படுத்தும் சூழ்நிலைகளில் தள்ளப்பட்டார் - இங்கு எதுவும் புதியதல்ல."  என்று நேட்டோவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் கூறுகிறார்.

நூற்றுக்கணக்கான ரஷ்யர்கள் எதிர்க்கட்சி அரசியல்வாதியான அலெக்ஸி நவல்னியின் நினைவிடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நவல்னியின் தாயார் மற்றும் வழக்கறிஞர்கள் அவரது உடலைப் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மற்றும் அதிகாரிகள் அதன் சரியான இருப்பிடத்தை உறுதிப்படுத்தவில்லை.

கடந்த தசாப்தத்தில் நவல்னியின் பயணத்தை தொடர்ந்து வந்த   ஸ்கை நியூஸின் மாஸ்கோ நிருபர் டயானா மேக்னே தொகுப்பாளர் ஆடம் பார்சன்ஸுடன் இணைந்தார் .

ரஷ்யாவில் என்ன நடக்கிறது, நவல்னியின் பாரம்பரியம் மற்றும் மக்கள் நாடு முழுவதும் உள்ள தற்காலிக நினைவுச் சின்னங்களில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தும் மனநிலையை அவர் விவரிக்கிறார்

அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்து எம்.பி.க்களிடம் வெளியுறவுத்துறை அமைச்சரான லியோ டோச்செர்டி அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.

 நவல்னியின் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், இந்த மரணத்தால் அரசாங்கம் திகைத்துப்போயிருப்பதாகவும், கிரெம்ளினை "முழு பொறுப்பு" என்றும் கூறினார்.

ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு முன்னர் மாஸ்கோவில் கொல்லப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி பிரமுகரின் மகள், அலெக்ஸி நவல்னியின் மரணம் கொலை என்று உறுதியாக நம்புவதாகக் கூறுகிறார். ஜன்னா நெம்ட்சோவா 2015 இல் ரஷ்ய தலைநகரில் ஒரு பாலத்தில் படுகொலை செய்யப்பட்ட போரிஸ் நெம்சோவின் மகள் ஆவார்.

"ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னி புடினால் சிறையில் கொல்லப்பட்டார். நடந்ததை ஒரு கொலையாகவே கருதுகிறேன் சந்தேகத்திற்கு இடமின்றி, இது மிரட்டும் செயல் என்றும், அதே நேரத்தில் ஆட்சியின் பலவீனத்தையும் சுட்டிக்காட்டுகிறது.விளாடிமிர் புட்டின் சிறையில் இருந்தாலும் தனது அரசியல் போட்டியாளருக்கு "அஞ்சுவதாக" திருமதி நெம்சோவா கூறினார்.ஷ்ய விசாரணையில்உண்மையை வெளிப்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.  

"நான் உறுதியாக நம்புகிறேன், மேலும் அவர் சிறையில் கொல்லப்பட்டார் என்று நவல்னியின் குழுவுடன், அவரது மனைவி யூலியா நவல்னாயாவுடன் நான் உடன்படுகிறேன்," என்று அவர்   கூறினார்.

  ரஷ்யாவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்  காலம் நெருங்குகையில்   புட்டினின்  கரங்கள்  மேலும் பலமடைந்துள்ளன.

Sunday, February 25, 2024

குழந்தைகள் தடகளத்தில் சம்பியனான ஷார்ஜா

 அபுதாபி  தடகள சங்கம் நடத்திய குழந்தைகளுக்கான தடகள விழாவில் ஷார்ஜா கிளப் பங்கேற்று 24 பதக்கங்களை வென்றது. விழாவில் பங்கேற்ற ஷார்ஜா மகளிர் தடகளக் கழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகளின் பட்டியலில் 19 வீராங்கனைகள் இடம் பெற்றிருந்தனர்  6தங்கப்பதக்கங்களை சார்ஜா குழந்தைகள்  வென்றனர்.

உயரம் தாண்டுதல் போட்டியில் மரியா ஃபஹத், 50 மீற்றர் ஓட்டத்தில் பாத்திமா ஜாசிம், நீளம் தாண்டுதல் போட்டியில் மைதா கலீத், 500 மீற்றர் ஓட்டத்தில் ஹம்தா ஜாசிம், குண்டு எறிதலில் முதலிடம் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாரா அல்-பர்தான் ஆகியோர் வெற்றி பெற்றனர்

கழகத்தின் இளையோர் அணியும் 15 இரண்டாம் இடங்களைப் பெற்று பாராட்டத்தக்கது. ரீம் முகமது உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் இரண்டு வெள்ளி வென்றார், ஷாலுவி ரெய்லி 50 மீற்றர் ,நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் வென்றார். ரீம் எமத் குண்டு எறிதல் , சுத்தியல் எறிதலில்   இரண்டு  வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

50 மீ ஓட்டத்தில் மரியா ஃபஹ்த் மற்றும் 500 மீ ஓட்டத்தில் ஃபுவாகி ஹமிட் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர், அதே போல் நீளம் தாண்டுதல் போட்டியில் தீமா முகமது ஆகியோரின் சிறந்த செயல்திறன் இருந்தது. மைதா காலித் 50 மீட்டரில் வென்றார், மேரா ஜாசிம் 500 மீ , ரஹாஃப் அல்-ஹுசானி சுத்தியல் எறிதலில் வென்றார்.

 சுத்தியல் எறிதலில் மரியம் பத்ர், ஒன்று   4x50 மீ தொடர் ஓட்ட அணிக்கு ஒன்று. 4x50 மீட்டர் தொடர் ஓட்ட அணிக்கு மூன்று வெண்கலப் பதக்கங்களும், 50 மீட்டர் ஓட்டத்தில் டீமா முகமது மற்றும் குண்டு எறிதலில் ரஹாஃப் அல்-ஹுசானி தலா ஒரு பதக்கமும் பெற்றனர்.

அரசியலில் அதிரடியாகக் களம் இறங்கிய கயல்விழி

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு  இன்னமும் சில மாதங்களே உள்ளன. தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான  ஏற்பாடுகளை  முன்னிலைப்படுத்தியுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி மிகப் பலமாக அப்படியே  உள்ளதுஅந்தக் கூட்டணியில் கமல்  இணைவது  உறுதியாகி உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில்  இருந்த   கூட்டனிக் கட்சிகள்  ஒவ்வொன்றாக வெளியேறின. பாரதீய ஜனதாக் கட்சியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  வெளியேற்றிவிட்டது. பலமான கூட்டணியை  அமைக்கப் போவதாக அறிவித்த எடப்பாடி தனித்து விடப்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியால்  புறம் தள்ளப்பட்ட .பன்னீர்ச்செல்வம் பாரதீயஜனதாவிடம் சரணடைந்து விட்டார். தினகரனும் இவர்களுடன்  இணையத் துடிக்கிறார். சசிகலாவுக்காக பாரதீய ஜனதா காத்திருக்கிறது. வாசன்  போன்றவர்கள் மதில் மேல் பூனையாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழக அரசியலில் தனிவழி செல்லும் சீமான் வழக்கம் போல் 31 வேட்பாளர்களின்  பெயர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளார். எந்த கட்சிகயுடனும்  கூட்டணி இன்றி தனித்துப் போட்டி என்ற கொள்கையுடன் அரசியல் செய்யும் சீமான், 31 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய சீமான் திட்டமிட்டுள்ளார்.  தென்சென்னை, ஆரணி, கன்னியாகுமரி, கோவை, மயிலாடுதுறை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருப்பூர், கரூர், விழுப்புரம், வேலூர், நீலகிரி, தென்காசி, திருவள்ளூர், பொள்ளாச்சி, நாகப்பட்டினம், அரக்கோணம், ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 31 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.  50% பெண்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடுவார்கள்.

 திராவிடர் இயக்க மேடைகளில் தீவிர கொள்கை, அரசியல் பிரசாரம் செய்தவர் சீமான். 2009-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற  இறுதி யுத்தத்துக்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் பேசியதுடன்  நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கி பின்னர் அரசியல் கட்சியாக்கினார்  தமிழகத்தில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் கூட்டணி சேராதுதனித்துப் போட்டியிடும் சீமானின் கட்சி படு தோல்வியடைந்தாலும் வாக்கு சத வீதத்தை அதிகரித்துள்ளது.   அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவால் வாக்கு சதவீதம் அதிகரிக்கிறது.  இதனையே நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி; அடுத்த ஆட்சியே நாம் தமிழர் கட்சிதான் என பெருமிதத்துடன் பேசி வருகிறார் சீமான்.

 மக்களைக் கவரும்  பேச்சாளராக அரசியல் களத்தில்  வலம் வரும் சீமான்,  திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே கடுமையாக விமர்சித்து வருகிறார். தனது விமர்சனத்தில் மறக்காது வாரிசு அரசியலைச் சாடுவார்.

  இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் சட்ட ஆலோசகர்கள் பெயர்கள், தொலைபேசி  எண்கள் என்பன  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. தலைமை நிலையம் தொடங்கி ஒவ்வொரு தொகுதி வாரிய சட்ட ஆலோசகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் சீமான் மனைவி கயல்விழி காளிமுத்துவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தென் சென்னை தொகுதிக்கு ராஜன் செல்வராஜ், புருசோத்தமன் ஆகியோருடன் கயல்விழி காளிமுத்துவும் சட்ட ஆலோசகராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் கயல்விழி காளிமுத்துவின் தொலைபேசி இலக்கம் எண்கள்   மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது.

 நாம் தமிழர் கட்சியினர் திமுகவை விமர்சிக்கும் போது மறக்காமல் வாரிசு அரசியலை முன்வைத்தும் பேசுவர். ஒவ்வொரு மேடையிலும் திமுகவில் வாரிசு அரசியல் இருக்கிறதாக சீமான் உள்ளிட்டோரும் விமர்சிப்பர். சிமானின் மனைவி  நியமிக்கப்ப்ட்டது வாரிசு அரசியல் இல்லையா என எதிர்க் கட்சிகள்  கேள்வி எழுப்பி உள்ளன.

 கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியில் சீமான் மனைவி கயல்விழி காளிமுத்துவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என கூறப்பட்டு வந்தது. குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் தடா சந்திரசேகர் மறைவைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக கயல்விழி நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் போராட்டங்கள், சட்டசபை தொகுதி அலுவலகங்கள் திறப்பு ஆகியவற்றிலும் கயல்விழி முன்னிறுத்தப்பட்டார். அவரை வைத்து நாம் தமிழர் கட்சியினர் சில நிகழ்வுகள் நடத்த அதுவே அக்கட்சிக்குள் சர்ச்சையாகவும் வெடித்தது. நாம் தமிழர் கட்சியினர் பொதுவெளியிலேயே கயல்விழிக்கு முக்கியத்துவம் தருவதை விமர்சனம் செய்தனர்.

  நாம் தமிழர் கட்சியில் சீமானின் மனைவி கயல்விழிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ முதல் பதவி இது என்பதால் தொண்டர்கள்  கொண்ணாடுகிறார்கள்.  சமூக வலைதளங்களில்  மகிழ்ச்சியுடன் இந்த அறிவிப்பை பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் கயல்விழி  சட்டத் துறையில்  சித்தியடைந்து  ஒரு வருடம் கூட முழுமையாக முடியவில்லை, அவங்க எந்த வக்கீல் கிட்ட ஜூனியரா  இருக்கிறார் என்றும் தெரியவில்லை ஆனால் அதுக்குள்ள சட்ட ஆலோசகர் பதவி கொடுத்திருக்கிறார்? இதுக்கு பேர் குடும்ப அரசியல் இல்லையா?" என நாம் தமிழர் எதிர்ப்பாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் கயல்விழிக்கான நாம் தமிழர் கட்சி பொறுப்பு விவாதப் பொருளாகி இருக்கிறது.

வாரிசு அரசியலை  சகல அரசியல்வாதிகளும்  தமக்குச் சாதகமாக  திரிபுபடுத்திக் கருத்துக் கூறுகின்றனர். தனது மகன் தேர்தலில் போடியிடுவது வாரிசு அரசியல் அல்ல என  ஜெயக்குமார் வியக்கியானம் செய்கிறார். கருணாநிதியி மகன் ஸ்டாலின், ஸ்டாலினின் மகன் உதயநிதி  அரசியலுக்கு வருவதுதான்  வாரிசு அரசியல். எடப்பாடியின் மகன் அரசியலுக்கு வந்தால் அதுதான் வாரிசு அரசியல் என்று   புதியதொரு விளக்கத்தை ஜெயக்குமார்  கொடுத்துள்ளார்.

  வாரிசு அரசியலுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து  வெளியேறிய வைகோ,  இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி  சேர்ந்துள்ளது மட்டுமல்லாது  தனது மகனின் கையில் கட்சியைக் கொடுத்துள்ளார்.

வாரிசு அரசியலுக்கு எதிராகப் போராடுவதாகப் பறைசாற்றும்  பாரதீய ஜனதாவுக்குள்ளும் வாரிசு அரசியல் தலைவிரித்தாடுகிறது. சக்தி மிகுந்த அமைச்சர் அமித்ஷாவின் மகன்  ஜெய்ஷாவின் கட்டுப்பாட்டினுள்  இந்திய கிறிக்கெற் சிக்கி உள்ளது. திருமணம் செய்யாத அல்லது திருமணம் செய்தும்  குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் அரசியலுக்கு வந்தால் வாரிசு அரசியல்  இல்லாமல் போக சாத்தியம் உள்ளது. எம்.ஜி.ஆர் தன்னுடைய அரசியல் வாரிசாக  ஜெயலலிதாவை அடையாளம் காட்டினார். ஜெயலலிதா தான் மட்டும் தலைவராக  இருந்தார். இரண்டாம் கட்டத் தலைவர்களை அடக்கி ஒடுக்கியதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை இல்லாமல் தடுமாறுகிறது.

இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,  இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வாரிசு அரசியலை  முற்றுமுழுதாக  அகற்றிவிடமுடியாது.