Wednesday, November 27, 2013

குற்றவாளிக் கூண்டில் டெஹெல்காகா

இந்திய அரசியல்வாதிகள் இன்னொரு முகத்தை வெளிச்சம் போட்டு வெளிப்படுத்திய   டெஹெல்கா வாரஇதழ் இன்று பாலியல் புகாரில் சிக்கி தவிக்கிறது.இணைய தளமாக ஆரம்பித்து புலனாய்வு மூலம் பிரபலமாகி  வாரவெளியீடாகவும்  வெளிவரும்  வின் டெஹெல்காநிறுவனத்தலைவர் தருண்தேஜ்பாலுக்கு எதிராகவே பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்படுள்ளது.
பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லக்ஷ்மண் இலஞ்சம் வாங்குவதை ஒளிப்பதிவு செய்து டெஹெல்கா . கெம்மில் வெளியட்டார் தருண்தேஜ் பால். அந்த ஒளிப்பதிவு இந்திய அரசியலில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.தருண்தேஜ் பாவின் பெயரை கேட்டதும் அரசியல்வாதிகளும், ஊழல் பேர்வழிகளும் அலறியடித்தனர். பங்காடு லக்ஷ்மணின் விவகாரத்தினால் இந்திய நாடாளுமன்றம் அல்லோல கல்லோப்பட்டது.
பேனை, சூட்கேஸ் ஆகிளவற்றில் பொருத்தப்பட்ட இரகசியக் கமராக்கள் மூலம் அந்தரங்கத்தில் நடப்பவற்றை  டெஹெல்கா அரங்கத்தில் ஏற்றியதால் தருண்தேஜ் பாலுக்கு பேட்டி கொடுக்க பலரும் பின்னடித்தார்கள். அரசியல் பலம், பணபலம் என்பனவற்றுக்கு எதிராகப் போராடி தக்கென ஒரு இடத்தைஉயரத்தில்  பிடித்து வைத்திருந்த   டெஹெல்கா பாலியல்புகாரினால் சரிந்து விழுந்துவிட்டது.
கோவாவில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெயஹல்காவில் பணிபுரிபவர் சென்றிருந்தனர். அப்போது தனது குழுவிலுள்ள இளம் பெண் பத்திரிக்கையாளர் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தருண்ஜேபால் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லிப்டில் இருவரும் செல்லும்போது கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றதாகவும், அறைக்குள் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் தருண்பால் மீது குற்றம் சாட்டி அப்பெண் தனது தலைமையகத்துக்கு  தெரிவித்துள்ளார்.
அலுவலகத்துக்குள் மிக இரகசியமாக இருந்த இச்சம்பவம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.இளம் பெண்ணின் புகாரை விசாரித்த செய்தி ஆசிரியை சோமா  செளத்ரிரி இச்சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்த தருண்ஜேபால் மன்னிப்புக்கேட்டாகவும் இக்குற்றத்துக்குத் தண்டனையாக தருண்ஜேபால் ஆறு மாதங்கள் பணியிலிருந்து ஒதுங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இக்குற்றச்சாட்டுத் தொடர்பாக  பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ்ப்புVர் செய்யவில்லை. விசாரணையின் மூலம் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக டெயஹல்காவின் சோமா சாத்திரி கூறியுள்ளார்.
டெஹெல்கா    வினால் பாதிக்கப்பட்ட பலர் வெளியில் உள்ளனர்.அவர்கள் இதனை இலகுவில் விட்டுவிடப்போவதில்லை.டெயஹல்காவுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு உள்ளது.ஆகையினால் இச்சம்பவம் மூடிமறைக்கப்பட்டுவிடும் என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள்.அலுவலகங்களில் நடைபெறும் இப்படிப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி விசாரணை விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.அப்படிப்பட்ட குழு டெஹெல்கா   .  நிறுவனத்தில் இல்லை என்றுசட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட பெண் பொலிஸில் புகார் செய்யாவிட்டாலும் இதனை விநாரிப்பதற்கு உத்தரவிட் டுள்ளார். கோவாவின் முதமைச்சர் மனோஜ் பாரிக்.உத்தரவிட்டுள்ளார். தருண்ஜேபால் மீது குற்றம் சுமத்தப்பட்டு பொலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. தருண்தேஜ்பாலுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற நெருக்குதல் எல்லா பக்கங்களில் இருந்தும் முனைவிடத் தொடங்கியுள்ளது.புலனாய்வாய்  புகழ்பெற்றவர்அற்ப ஆசையில் அகப்பட்டுள்ளனர்.

 சுடர் ஒளி

24/11/13

Tuesday, November 26, 2013

ரொனால்டோ உள்ளே இப்ராஹிமோவிச் வெளியே

உலகக்கிண்ண உதைபந்தாட்ட‌ குதிகாண் போட்டிகளில் பின்னடைவைச் ந்தித்த‌ போத்துகல்,ஐவரிகோஸ்ட்நைஜீரியாஎகிப்துரூன்,பிரான்ஸ்,ரொமானியா,கொஸ்ரரிகாகிரீஸ்,மெக்ஸிகோ ஆகிய‌ பிளே ஓவ் போட்டியில் வெற்றி பெற்று உலக் கிண்ணப்போட்டியில் விளையாடத்தகுதி பெற்றுள்ளன.இதில் போத்துகல் சுவீடன் ஆகியற்றுக்கிடையேயான‌ போட்டியை சிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கினர்.

போத்துகல்,சுவீடன் ஆகியற்றுக்கிடையேயான‌ போட்டியாக‌ இல்லாமல்அணித்தலைவர்களான‌ ரொனால்டோ,இப்ராஹிமோவிச் ஆகிய‌ இருவருக்குமிடையேயான‌‌ ப்பரீட்சையாகவே ருதப்பட்டதுஐரோப்பாவின் மிகச்சிறந்த‌ வீரர்களான‌ இருவரும் இரசிகர்களின் ஆவலைப்பூர்த்திசெய்தர்இறுதிச்சந்தர்ப்பமான‌ பிளே ஓவ் போட்டிகளில் இரண்டு முறை மோதவேண்டும் முதல் போட்டியில் அதிக‌ கோல் அடித்து முன்னிலை பெற்றால் இரண்டாவது போட்டியை ற்றமின்றி எதிர் நோக்கலாம்.

 முதல் போட்டியில் ரொனால்டோ ஒரு கோல் அடித்து வெற்றியை பெற்றுகொடுத்தார்அதனால்இரண்டாவது போட்டி ப்பானது.முதல் போட்டியில் சாதிக்கத்தறிய‌ இப்ராஹிமோவிச் எழுச்சி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டதுஇரண்டாவது போட்டியில் ரொனால்டோஇப்ராஹிமோவிச் ஆகிய‌ இருவரும்  மாறி மாறி கோல்கள் அடித்து இரசிகர்களுக்கு விருந்து டைத்தர்என்றாலும் ரொனால்டோவின் அபார‌ ஆட்டத்தினால் உலக் கிண்ணப்போட்டியில் விளையாடுவற்கு போத்துகல் குதி பெற்றது.

  விறுவிறுப்பான‌ போட்டியில் 50 ஆவது நிமிடத்தில் அற்புதமான ஒரு கோல் அடித்து ஆச்சரியப்படுத்தினார் ரொனால்டோக்கு முன்னால் விழுந்து எழும்பிய‌ ந்தை து முழங்காலால் முன்னே ட்டி இடது காலால் அடித்த‌ ந்து கோல் கீப்பரின் கைக்கு எட்டாது உள்ளே சென்றது.

போத்துகல் சிகர்களின் உற்சாகம் அதிக‌ நேரம் நீடிக்கவில்லை. 68 ஆவது,72 ஆவது நிமிடங்களில் சுவீடன் சிகர்களை உற்சாகப்படுத்தினார் இப்ராஹிமோவிச்‌ வீரர் அடித்த‌ கோணர் கிக்கை லையால் முட்டி கோலாக்கினார்அடுத்து கிடைத்த‌ பிரீ கிக் வாய்ப்பை போத்துகல் வீரர்களை ஏமாற்றி நிலத்தை உரசிச்செல்லும் யில் அடித்து கோலாக்கினார்.

கிழ்ச்சியில் திளைத்த‌ சுவீடன் இரசிகர்கள் 77 ஆவது 79 ஆவது நிமிடங்களில் அ திர்ச்சியில் உறைந்தர் ரோனால்டோ தொடர்ந்து அடித்த‌ இரண்டு கோல்களினால் சுவீடன் இரசிகர்கள் அமைதியடைந்தர்போத்துகல் இரசிகர்கள் உற்சாக‌ கோஷமிட்டர்முதல் கோலைப்போன்றே இரண்டாவது கோலையும் இடது காலால் அடித்தார்இடது க்கம் இருந்த‌ ந்தை திடீரென் து காலுக்கு மாற்றி மூன்றாவது கோலை அடித்தார் ரொனால்டோ.


   போத்துகல், சுவீடன் ஆகியற்றுக்கிடையேயானஇப்போட்டி உலக்கிண்ணப் போட்டியைப்போன்றே விறு விறூப்பாகஇருந்தது. சுவீடன் தோல்வியடைந்து வெளியேறினாலும் து இரசிகர்களை கிழ்ச்சிப்படுத்தியது. ஐரோப்பாவில் டைபெறும் முன்னணிப்போட்டிகளில் ரொனால்டோவும் இப்ராஹிமோவிச்சும் முத்திரை தித்துள்ளர். அண்மையில் ஏழு போட்டிகளில் விளையாடியரொனால்டோ 16 கோல்கள் அடித்துள்ளார். எட்டுப் போட்டிகளில்விளையாடியஇப்ராஹிமோவிச் 14 கோல்கள் அடித்துள்ளார். 10 உலக்கிண்ணகுதி காண் போட்டிகளில் விளையாடியரொனால்டோ எட்டு கோல்ள் அடித்துள்ளார். 11 உலக்கிண்ணகுதி காண் போட்டிகளில் விளையாடியஇப்ராஹிமோவிச் எட்டு கோல்கள் அடித்துள்ளார். இருவருக்கும் எதிராகலா இரண்டு டவைகள் ஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

 ஐஸ்லண்ட், கொஸ்ரரிகா ஆகியற்றுக்கிடையேயானமுதலாவது போட்டி கோல் எதுவும் அடிக்காது நிலையில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் 2-0 கோல் க்கில் வெற்றி பெற்றகோஸ்ரரிகா உலக்கிண்ணஉதை ந்தாட்டப் போட்டியில் விளையாடத் குதி பெற்றது.
கிரீஸ்,ரொமேனியா ஆகியற்றுக்கிடையேயானபோட்டியில் 3- 1 கோல் க்கில் கிரீஸ் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டி 2 -2கோல்கக்கில் நிலையில் முடிந்தது அதிககோல்களின் அடிப்படையில் கிரீஸ் குதி பெற்றது.

 உக்கேனுக்கு எதிரானமுதலாவது போட்டியில் 2 -0 கோல்க்கில் தோல்வியடைந்தபிரான்ஸ், இரண்டாவது  போட்டியில் 3 -1 கோல் க்கில் வெற்றி பெற்றது. இரண்டு அணிகளு லா மூன்று கோல்கள் அடித்த‌. முன்னர்  டைபெற்றகோல்களின் அடிப்படியில் அதிககோல் அடித்தபிரான்ஸ் குதி பெற்றது.

நியூஸிலாந்துக்கு எதிரானமுதலாவது  போட்டியில்  5- 1 என்ற‌  கோல் க்கில் வெற்றி பெற்றஎகிப்து இரண்டாவது போட்டியில் 4 -2  கோல் க்கில் வெற்றி பெற்று து இடத்தை உறுதி செய்தது.
ஜோர்தானுக்கு எதிரான முதாலாவது போட்டியில்5- 0 கோல் கணக்கில் உருகுவேவெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கோல அடிக்காது சம நிலயில் முடிந்த தால் உருகுவே தகுதி பெற்றது.
ரமணி
சுடர் ஒளி
24/11/13


Monday, November 25, 2013

ஏற்காட்டில் பலப் பரீட்சை தி.மு.க, அ.தி.மு.க. நேரடிப்போட்டி

ஏற்காடு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் அண்ணா திராவிட   முன்னேற்றக்கழகத்துக்கும் இடையே நேரடிப்போட்டி நடைபெற உள்ளது.இடைத்தேர்தலுக்காக  தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 11 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் சரோஜா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் மாறன் ஆகிய இருவருக்கும் இடையேயான  தான் போட்டி உள்ளது.
தமிழக்கத்தில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் ஜெயலலிதாதான் முதலில் வேட்பாளரை அறிவிப்பார். ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை கருணாநிதிதான் முதலில் அறிவித்தார். வைகோவும் ராமதாஸும் இடைத்தேர்தலில்  போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. தோல்வி உறுதி என்று தெரிந்தாலும் இடைத்தேர்தல்களில் வேட்பாளரைக் களமிறக்கும் விஜயகாந்த் இறுதிவரை மெளனமாக இருந்தார். கடைசி நேரத்தில் விஜயகாந்த் வேட்பாளரை அறிவிப்பார் என தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர்.
2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட விஜயகாந்தின் வேட்பாளர் 10 ஆயிரம்  வாக்குகள் பெற்றார். 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் களம் இறங்கிய விஜயகாந்தின்மைத்துனர் சுதீஷ் 21 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.விஜயகாந்தின் கட்சிக்குரிய வாக்குகளை அள்ளுவதற்கு இரண்டு பெரிய கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.விஜயகாந்திடம் ஆதரவுகேட்டு கருணாநிதி பலமுறை தூது அனுப்பியும்  காரியம் எதுவும் நடைபெறவில்லை.கருணாநிதியை கவிழ்ப்பதற்காக ஜெயலலிதாவுடன் கூட்டுச்சேர்ந்த விஜயகாந்த் ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டபின் வேறு தலைவர்களுடன் கூட்டணி சேரத்தயங்குகிறார்.
ஏற்காடு இடைத்தேர்தலில் பரப்புரை செய்ய அமைச்சர்களைக் களமிறக்கியுள்ளார்   ஜெயலலிதா. திராவிட   முன்னேற்றக்கழகத்தின் வேட்பாளர் கட்டுபணத்தை இழக்க வேண்டும் எனக் கடுமையான உத்தரவை விடுத்துள்ளார்.இதற்காக அரச வளங்கள் அனைத்தும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.தோல்வி  அடைந்தாலும்கெளரவமாக தோற்க வேண்டும் என்பதே கருணாநிதியின் விருப்பம்.
இடதுசாரிகளும் சரத்குமாரும் அண்ணா திராவிட   முன்னேற்றக்கழகத்து ஆதரவளிப்பார்கள். விடுதலைச்சிறு கதைகள்,   மனித நேயமக்கள்கட்சி, முஸ்லிம் லீக் ,  புதியதமிழகம் ஆகியன    திராவிட   முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கின்றன. திராவிட   முன்னேற்றக்கழகத்தின் பிராதன பங்காளியான காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக இன்னமும் ஆதரவு தெரிவிக்கவில்லை.ஏற்காட்டில் நடைபெறுவது தமிழக சட்டசபையின் இடைத்தேர்தல் தான்.என்றாலும்  இந்திய நாடாளுமன்றத்தின் முன்னோடித் தேர்தலாகவே இது கருதப்படுகின்றது.
ஏற்காடு தேர்தல் தொகுதியில் 240 290வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்களைத் தம்பக்கம் இழுப்பதற்கான முயற்சியை இரண்டு திராவிடக்கட்சிகளும் முன்னெடுக்கின்றன. தமிழக அமைச்சர்கள் ஏற்காட்டில்   முகாமிட்டுள்ளனர். அரசவளங்கள் தாராளமாகப் பயன்படுத்த ப்படுகின்றன. தேர்தல் சட்டாவிதிகள் மீறப்படுவதாக திராவிட முன்னேற்றக்கழகம் தமிழக தேர்தல் ஆணையத்தில்  புகார் செய்துள்ளது.புகாரில் உள்ள ஒரு சிலவற்றுக்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பல கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அம்மா குடிநீரிலும், அரச, சொகுசு பஸ்களிலும் இரட்டை இலைசின்னம் பொறிக்கப்பட்டுள்ளதை திராவிட முன்னேற்ற கழகம் கூட்டிக் காட்டியுள்ளது.அம்மா குடிநீர்போத்திலில் உள்ள இரட்டை இலைச்சின்னத்தை அகற்றிவிட்டு குடிநீர்ப் போத்தலை விநியோகிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண நீதிமன்றத்தை நாடியுள்ளார் ஸ்டாவின்.
அம்மாகுடிநீரைத் தொடர்ந்து அம்மா உணவகத்தை 
தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.குறைந்த  விலையின் சிறந்த உணவு என்ற கோ­ஷத்துடன் ஆரம்பிக்கப்பட்ட  உணவகத்துக்கு செல்பவர்களின் தொகை அதிகாரித்து ள்ளது.பொது இடங்களில் அமைக்கப்பட்ட அம்மா உணவகம் வைத்தியசாலையிலும் அறிமுகப்படுத்தப்பட்டு ள்ளது.அம்மா என்றால் ஜெயலலிதா தான் என்பதை  அழுத்தம் திருத்தமாக மக்களின் மனதில் பதிப்பதற்கு இவை உதவுகின்றன.

வெற்றியை வெளிப்படுத்துவதற்கு கையை உயர்த்தி இரண்டு விலைக் காட்டுவதே  உலகில் உள்ளவர்களின் வழமையான நடவடிக்கை இரண்டாவது உலகமகாயுத்தத்தின்போது வின்ஸ்ரன் சேர்ச்சில் அறிமுகப்படுத்தியதையே உலகம் இன்றும் பின் தொடர்கிறது.அண்ணா திராவிட   முன்னேற்றக்கழகத்தை ஆரம்பித்து எம்.ஜி.ஆர்.இரண்டு விரல்களைக் காட்டி இரட்டை சின்னத்தை அறிமுகப்படத்தினார்.அன்றிலிருந்து தமிழகத்தில் அண்ணா திராவிட   முன்னேற்றக்கழகத்துக்கு எதிரானவர்கள் யாருமே கையை உயர்த்தி இரண்டு விரலைக் காட்டுவதில்லை.
 திராவிட   முன்னேற்றக்கழகத்தின் சின்னம் உதயசூரியன் கையை விரித்துக் காட்டி உதயசூரியன் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைத்தார்கள்.
 காங்கிரஸ் கட்சியின் சின்னம் கை, தமிழகத்திர் அவர்கள் இரண்டு கைகளையும் உயர்த்திக் காண்பிப்பார்கள். அண்ணா திராவிட   முன்னேற்றக்கழகத்வர்கள் ஜெயலலிதாவை அம்மா என்கிறார்கள். தமிழக சட்டசபையிலும் பொது இடங்களிலும்  அவரை அம்மா என்றே விழிப்பார்கள். அம்மா குடிநீர், அம்மாஉணவகம் எல்லாம் ஜெயலலிதாவை ஞாபகப்படுத்துவதாக கூறுகிறார் ஸ்டாவின்.
அம்மா என்றால் என்ன என்று நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது. அண்ணா திராவிட   முன்னேற்றக்கழக விளம்பரங்களில் ஜெயலலிதாவின் படத்துக்கு அருகில் அம்மா என்று எழுதுகிறார்கள்.   ஜெயலலிதாவின் பெயரைக் குளிபிடுவதில்லை.அம்மா என்றால் ஜெயலலிதா என்றே அண்ணா திராவிட   முன்னேற்றக்கழகத்தவர்களின் மனதில் பதிந்துள்ளது.மற்றவர்களின்  மனதில் அது இறுக்கமாப்  பதிய வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதாவின் படத்துடன் அம்மா குடிநீர் அம்மா உணவகம் என்பன ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதனைக்  கருத்திற்கொண்டே ஸ்டாவின் வழக்குத் தொடர்ந்துள்ளது.
திராவிட   முன்னேற்றக்கழகம்,அண்ணா திராவிட   முன்னேற்றக்கழகம்  ஆகியவற்றுக்கிடையே நடைபெறும் மோதலை  ஏனைய கட்சிகள் உன்னிப்பாக  அவதானித்து வருகின்றன. திராவிட   முன்னேற்றக்கழகத்தின் பங்காளியான தமிழக  காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், திராவிட   முன்னேற்றக்கழகத்துக்கு எதிராகச் செயற்படுகிறார். அமைச்சர்களான சிதம்பரம், இளங்கோவன், ஜெயந்தி நடராஜா ஆகியோர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவர்களாக உள்ளனர்.கடைசிநேரத்தில் காடகிரஸ் பிரகாரத்துக்கு வரும் என்று கருணாநிதி கருதுகிறார்.
வைகோவும், டாக்டர் ராமதாஸுடம் திராவிக் கட்சிகளைவிட்டு வெகுதூரத்திலேயே உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் தான் அவர்கள் குறியாக உள்ளனர்.ஆகையினால் , ஏற்காடு இடைத்தேர்தலில் அவர்கள் அக்கறைகாட்டவில்லை.தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத தலைவர்களாக வைகோவும் ராமதாஸும் ஒரு காலத்தில் விளங்கினர். அவர்களின் வாக்குவங்கி குறைந்ததனால் கருணாநிதியாலும்,ஜெயலலிதாவாலும் ஒதுக்கப்பட்டனர். அதனால் திராவிடக் கட்சிகளுடன் கூட்டுச்சேர்ததில்லை என இருவரும் சபதம் செய்துள்ளார்.
பலமான கூட்டணி  தேர்தலைச் சந்தித்து தோல்வியடைந்த வைகோவும், டாக்டர் ராமதாஸும் தனித்தனியாகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது என்பது வெளிப்படையானது.இந்திய நாடாளுமன்றத் தேர்தல்  நெருங்கும் போதுதான் இவர்களில் உண்மையான முகம் வெளிவரும்.அதுவரைஇவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு தமது இருப்பை வெளிக்காட்டுவார்கள்.
ஏற்காடு இடைத்தேர்தல் திராவிட   முன்னேற்றக்கழக த்துக்கும், அண்ணா திராவிட.   முன்னேற்றக்கழகத்துக்கும் பலப்பரீட்சைக்களமாக உள்ளது.வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் பாதை ஜெயலலிதாஉள்ளார். தோல்வியடைந் தாலும் கட்டுப்பணத்தை இழக்கக்கூடாது என கருணாநிதி நினைக்கிறார்.மக்களின் விருப்பத்தை தேர்தலுக்குப்பின்தான் தெரிந்து கொள்ளலாம் விஷேட  கவனிப்புகளால் மக்கள் மகிழ்ச்சியடையப்போவது உறுதி.
வர்மா
சுடர் ஒளி 24/11/13


Sunday, November 24, 2013

சர்ச்சையில் விருது


சச்சின் என்றால் சாதனை. சர்ச்சையில் சிக்காதவர் என்று அவரது ரசிகர்கள் குதூகலித்துக் கொண்டிருக்கும் வேளையில் சச்சினுக்கு வழங்கப்பட்ட விருது தொடர்பாக  சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. கிரிக்கெட்டிலிருந்து சச்சின் ஓய்வுபெற்ற அன்று அவருக்கு பாரத‌ரத்னா விருது வதாக அறிவித்து கெளரவித்தது இந்திய அரசு. இந்தவிருதை சில அரசியல் வாதிகள் அரசியலாக்கியுள்ளனர்.
சமூகசேவகர்கள் ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட பாரத‌ரத்னா  விருது விளையாட்டு வீரர் ஒவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.விளையாட்டிலே சச்சினை விட சாதனை படைத்த விளையாட்டு  வீரர்கள்  இருக்க எதற்காகச் சச்சினுக்கு வழங்கப்பட வேண்டும் என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்திய  அரசாங்கத்தால் வழங்கப்படும் விருதுகளில் பாரத‌ரத்னா விருது  சிறப்பானது அன்னைதெரேஸா,   அர் அம்பேத்கார், எம்.ஜி.ஆர்.வீ. இராதாகிருஷ்ணன் ராஜாஜி, இந்திரா காந்தி ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். நரேந்திரமோடி பிரதமராக  வேண்டும் என  பேட்டியளித்த லதா  மங்கேஷ்கரிடம் இருந்து பாரதரத்னா  விருதைப்பறிக்க  வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்திய மேல் சபையின் நாடாளுமன்ற  உறுப்பினராக சச்சினை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.ஆகையினால் இந்த விருது அரசியலாக்கப்பட்டுள்ளது.  கிரிக்கெட்டிலிந்து ஓய்வு பெற்ற சச்சின் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் பிரசாரம் செய்வார் என்ற செய்தி பரவியது. இதனை மறுத்த சச்சின் தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று கூறினார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஏன் இன்னனும் பாரதரத்னாவிருது வழங்கப்படவில்லை என்று கேட்டுள்ளார். மாநிலங்க ள‌வைத் துணைத்தலைவர் ரவிசங்கர்பிரசாந்த் மத்திய அமைச்சரான பாரூக் அப்துல்லாவும் வாஜ்பாயை சிபார்சு செய் கிறார். வாஜ்பாய்க்கு விருது வழங்காததை சுட்டிக்காட்டிய பாரூக் அப்துல்லா சண்டீஸ் கார் மாநிலம் உருவாவதற்கு வாஜ்பாய் செய்த சேவையை நினைவூட்டினார். மத்திய அமைச்சர்நிதீஷ்குமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
ஒலிம்பிக்போட்டியில் மூன்று முறை தங்கம் வென்று இந்தியா தலை நிமிர வழி வகுத்த‌ ‌ ஹொக்கி அணித்தலைவர் தியான் சந்த்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது.இந்திய ஹொக்கி ஹாக்கி கூட்டமைப்பு இதற்கு  பரிந்துரை செய்துள்ளது.தியான்    சந்காலமாகிவிட்டார்.இறந்தவர்களுக்கும் இந்த  விருது வழங்கலாம் என்று 1945 ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டது.


சச்சின்டெண்டுல்கார் பணம் வாங்கி கொண்டுதானே விளையாடினார்.கோடீஸ்வர ரான‌    சச்சினுக்கு இந்தவிருது வழங்கப்படக்கூடாது என்று  குமுறுகிறார். ஐக்கிய ஜனதாதலைவர்  சிவானந்திவாரி, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஷ் ஆகிய இருவருக்கும் இந்த விருது வழங்கப்படவில்லை.செஸ்சம்பியன் ஆனந்துக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற  அபி ன‌வ் முகுந்துக்கும்  வழங்கலாம் என்ற கரு த்தும் எழுந்துள்ளது.

அர்ஜுன விருது துரோணாச்சாரிய விருது தியான் சந்த் விருது, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது என்பன விளையாடடில் திறமையை  வெளிபபடுத்தும் இந்திய வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் வழங்கப்படுபவை.
பாரத ரத்னா விருதுடன் பணம் வழங்கப்படுவதில்லை.பெயருக் கு  முன்னாலோ அல்லது பினன்னாலோ பட்டப் பெயரைப் பொறிக்க முடியாது. பிரதமரின்  பரிந்துரையின் பேரில் விருது  பெறுபவர்களின் பெயரை ஜனாதிபதி அறிவிப்பார். ஒரு வருடத்தில் மூவருக்கு மாத்திரமே இந்த விருது வழங்கப்படும். இதுவரை 41பேர்இந்த விருதை பெற்றுள்ளனர். கலை, இலக்கியம், அறிவியல்,பொதுச்சேவை என்பனவற்றுக்காக வழங்கப்படும் இந்த விருதின் விதிமுறை சச்சினுக்காக மாற்றப்பட்டது..
இநிதியர்கள் அல்லாதநெல்சன் மண்டேலா கான் அப்துல் கான் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
ஈ.வே.ரா பெரியார் அறிஞ் அண்ணா கலைஞர் கருணாநிதி ஆகியோருக்கு இன்னமும் வழங்கப்படவில்லை.ஆகையினால் அவர்களுக்கும் இந்த விருது வழுங்கவேண்டும் என்று தமிழகத்தில் குரல் எழத்தொடங்யுள்ளது. என்.டி. ஆருக்கு வழங்கவவேண்டும் என்று சந்திரபாயு நாடு கோரிக்கை விடுத்துள்ளார். விஞ்ஞானி  சி.என்.ஆர். ராவ்வுக்கும்  பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்க்பட்டுள்ளது. சச்சினின் பெயர் முன்னணியில் இருப்பதனாலட சீற்றமடைந்த அவரை அரசியல்வாதிகள் முட்டாள்கள் எனக் கூறியுள்ளார்

ரமணி

சுடர் ஒளி 24/11/13