Showing posts with label அமித் ஷா. Show all posts
Showing posts with label அமித் ஷா. Show all posts

Saturday, November 4, 2023

கண்காணிக்கப்படும் எதிர்க் கட்சித் தலைவர்கள்

அரசாங்கத்தின் புலனாய்வும், கண்காணிப்பும் எதிரி நாட்டின்மீதுதான்  இருக்க வேண்டும். ஆனால், சில அரசாங்கங்கள் தமது நாட்டின் எதிர்க் கட்சித் தலைவர்களை  வேவு பார்ப்பதில் கண்ணும் கருத்துமாக  இருக்கின்றன. மோடியின் அரசாங்கம் தமது நடவடிக்கைகளைக் கண்காணிப்பதாக  இந்திய எதிர்க் கட்சித்தலைவர்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.

ஐபோன்களில் இருந்து எச்சரிக்கை வெளியான  பின்னரே தாம் கண்காணிக்கப்படுவதாக எதிர்க் கட்சித்தலைவர்களுக்குத் தெரியவந்துள்ளது. இஸ்ரேல் பெகாசஸ் விவகாரத்தை இந்தியர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. இந்தியாவில் உள்ள பிரபலங்கள், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களின் செல்போன்களை ஹேக் செய்து மத்திய அரசு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதேபோல் ஒரு சம்பவம் தற்போது வெடித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களின் ஐபோன்களை மத்திய அரசு உதவியுடன் ஹேக்கர்கள் கண்காணித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, ஐபோனில் பேசுவதை ஒட்டுக் கேட்பதாகவும், -மெயில் பரிமாற்றங்கள் கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக எச்சரிக்கைச் செய்திகள் அப்பிள் நிறுவனத்திடம் இருந்து சம்பந்தப்பட்டவர்களின் மொபைலுக்கு வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை பொறுத்தவரை பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் மேம்பட்ட வசதிகளை செய்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட வகையில் ஒட்டுக்கேட்பு விஷயங்கள் நடந்தால் உடனே எச்சரிக்கைச் செய்தியை அனுப்பிவிடும்

 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளில் உள்ள தலைவர்களின்அப்பிள்' ஐபோன்களுக்குஎச்சரிக்கை' செய்தி  ஒன்று சென்றது. அந்த செய்தியில்,

 ‛‛'ஸ்டேட் ஸ்பான்சர்டு அட்டாக்கர்ஸ்' மூலம் உங்கள் செல்போன் குறிவைக்கப்படுகிறது. உங்களின் ஐபோனை வேறு இடத்தில் இருந்து இயக்க முயற்சிக்கிறார்கள்.அரசு உதவியுடன் இயங்கும் இந்த ஹேக்கர்கள் ஹேக் செய்துவிட்டால், அதன் பின் எங்கிருந்தும் ஐபோனையும், அதில் உள்ள தகவல்களையும் பயன்படுத்த முடியும். இது தவறான அலர்ட்டாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. கவனமாக இருங்கள்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

  காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் சசிதரூர், பவன் கேரா, கேசி வேணுகோபால், சுப்ரியா ஸ்ரீநாத், டிஎஸ் சிங்டியோ, பூபிந்தர் சிங் ஹூடா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (உத்தவ் அணி) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ஆம்ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சதா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ராகுல் காந்தியின் சில உதவியாளர்களுக்கு சென்றுள்ளது. இதையடுத்து மத்திய பாஜக அரசு தங்களை உளவு பார்த்து, ஒட்டுகேட்க முயற்சிப்பதாகவும், செல்போன் தகவல்களை திருட முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை முற்றாக மருத்துள்ள இந்திய அரசு  விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக  பத்திரிகையாளர் சந்திப்பில் பல தகவல்களை ஆதாரங்களுடன் ராகுல் காந்தி வெளிப்படுத்தினார்

எனது அலுவலகத்திலும் பலருக்கு இந்த மெசேஜ் வந்துள்ளது. இளைஞர்களின் கவனத்தை திசை திருப்ப பாஜக முயற்சிப்பதாக தெரிவித்தார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். எவ்வளவு வேண்டுமானாலும் உளவு பார்த்து கொள்ளுங்கள். எங்களுக்கு கவலையில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அப்பிள் நிறுவனம், சுமார் 150 நாடுகளை சேர்ந்த ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. வெவ்வேறு காலங்களில் இதுபோன்ற தகவல்கள் பல காரணங்களுக்காக அனுப்பப்படுவது வழக்கம் தான் எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்திய மத்திய அரசை எதிர்க்கும் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் அரசியல்வாதிகளும்பிரமுகர்களும்  இதனால் பாதிக்கப்படவில்லை.

எந்த ஒரு குறிப்பிட்ட அரசையும் நாங்கள் குற்றம்சாட்டவில்லை. State-sponsored attackers என்றால் அதிகப்படியான நிதி, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், காலத்திற்கு ஏற்ப அட்டாக்கிங்கில் மேம்பட்டு காணப்படுவர். இவர்களின் அட்டாக்குகளை கண்டறிவது அச்சுறுத்தல் சார்ந்த உளவுத்துறை சிக்னல்களை பொறுத்தே அமையும். ஆனால் அது எல்லா நேரங்களிலும் சாத்தியமில்லை. சில எச்சரிக்கை மெசேஜ்கள் தவறாக கூட இருக்கலாம்.

ஆனால் அதன் பின்னணி காரணங்களை சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அட்டாக்கர்கள் உஷாராகி தங்களது அட்டாக்கிங் ஸ்டைலை வருங்காலத்தில் மாற்றிக் கொள்வர் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அப்பிள் நிறுவனத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவின் 26 எதிர்க் கட்சிகள்  ஒன்றிணைந்து   மிகப் பெரிய கூட்டணியை அமைத்துள்ளன.   தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமராகும்  மோடியில் கனவுக்கு இந்தியக் கூட்டணி சவாலாக  உள்ளது. ஆட்சிஅயித் தக்க வைப்பதற்காக மோடியின் அரசு எந்த எல்லைக்கும் செல்லவாய்ப்பு உள்ளது என்பது கடந்தகால வரலாறு.

ரமணி

 

Wednesday, May 10, 2023

ஏட்டிக்குப் போட்டியான‌ வாக்குறுதிகளால் திண்டாடும் கர்நாடகம்


  சட்டசபைத் தேர்தலால்  கர்நாடகம் களைகட்டியுள்ளது. மாநிலத் தலைவர்களும், டில்லித் தலைவர்களும் சந்திக்குச் சந்தி, மூலைக்குச் மூலை வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24 ஆம் திக‌தியுடன் முடிவடைகிறது. அங்கு மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.  தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் திக‌தி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பாரதீய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் உள்ள கர்நாடகத்தைக் கைப்பற்றுவதற்கு  காங்கிரஸ் சபதம் செய்துள்ளது. கர்நாடகத்தை ஆட்சி செய்தபோது செய்த சாதனைகள் எவற்றையும்  பாரதீய ஜனதாக் கட்சி  பட்டியலிடவில்லை. பாரதீய ஜனதாக் கட்சியின்  தவறுகளை காங்கிரஸ் பட்டியலிடவில்லை இரண்டு தேசியக் கட்சிகளும் இலவச வாக்குறுதிகளைப் பட்டியலிட்டுள்ளன.

இலவசங்களுக்கு  பரம எதிரியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் பாரதீய ஜனதாக் கட்சி இலவசங்களை   விதைத்துள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலில் ஆத் ஆத்மி இலவசங்களைக்  கொடுக்க வாக்குறுதியளித்தது. ஆம் ஆத்மியின்  இலவச வாக்குறுதியால் கலங்கிய பாரதீய ஜனதாக் கட்சி இலவச வாக்குருதியளித்து வெற்றி பெற்றது.

குஜராத் சட்டசபை தேர்தலுக்காக  "ஆக்ரெசர் Gஉஜரட் ஸன்கல்ப் Pஅட்ர 2022" என்ற பெயரில் பாரதீய ஜனதா தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது.

அதில் இலவச கல்வி கொடுப்போம், பெண்களுக்கு கிண்டர் கார்டன் முதல் பிஜி வரை கல்வி இலவசம் ,  இலவச மருத்துவம், இரண்டு இலவச சிலிண்டர்கள், சன்னா குறைந்த விலையில், குறைந்த விலையில் எண்ணெய், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு இலவச மின்சார பைக் ஆகியவை வழங்கப்படும் என்று   அறிவித்தது.

தமிழ்நாட்டு இலவசத் திட்டங்களை குஜராத்தில் பாரதீய ஜனதா அறிமுகப் படுத்தியது.

  இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதாவை  வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. குடும்ப தலைவிக்கு நிதி கொடுக்கும் திட்டத்தை அங்கே  காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. Hஅர் Gகர் ளxமி Cஅம்பைக்ன் என்ற பெயரில் 1500 ரூபாயை எல்லா மாதமும் பெண்களுக்கு வழங்குவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்தார். இந்த வாக்குறுதி பெண்களின் வாக்குகளை கவர மிக முக்கியமான காரணமாக அமைந்தது. இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

குஜராத் வெற்றியால்  மகிழ்ச்சியடைந்த பாரதீய ஜனதாக் கட்சி கர்நாடகாவிலும்  இலவச வாக்குறுதியுடன்  களம்  இறங்கியுள்ளது. இமாசலப் பிரதேச  வெற்றி கொடுத்த  உந்துதலால்  காங்கிரஸ் கர்நாடகாவில் இலவச வாக்குறுதியுடன் கால் பதித்துள்ளது.

  காங்கிரஸ் பல்வேறு சமூக நீதி கொள்கைகளையும், மாநில உரிமை கொள்கைகளையும், பல்வேறு இலவசங்களையும்  கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் அமுலான‌ பல திட்டங்களை   காங்கிரஸ் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது. நிலையில் தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி போல் ஸ்டாலின் பாணியில் சில முக்கியமான வாக்குறுதிகளை காங்கிரஸ் அங்கே வெளியிட்டுள்ளது.

திராவிட மாடல் என்றால் சமூக நீதி கொள்கைகளும், இடஒதுக்கீட்டு கொள்கைகளும் முக்கிய இடம்பெறும். அதை தற்போது கர்நாடகாவில் காங்கிரஸும் கையில் எடுத்துள்ளது.  பெண்  உரிமை, பெண்களுக்கான  முன்னுரிமை என்பனவற்றை காங்கிரஸ் வாக்குறுதிகளாகக் கொடுத்துள்ளது.

திராவிட மாடல் என்றால் சமூக நீதி கொள்கைகளும், இடஒதுக்கீட்டு கொள்கைகளும் முக்கிய இடம்பெறும். அதை தற்போது கர்நாடகாவில் காங்கிரஸும் கையில் எடுத்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை 50 சதவிகிதத்தில் இருந்து 70 சதவிகிதமாக உயர்த்தும். எல்லா தகுதி வாய்ந்த ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும். எல்லா பிரிவினருக்கும் ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


 தமிழ்நாட்டில் இருப்பது போலவே தமிழ்நாட்டை பின்பற்றி அவர் அளித்துள்ள வாக்குறுதி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சிறப்பு அதிகாரம் மூலம் தமிழ்நாடு மட்டும் 69 சதவிகிதம் இடஒதுக்கீடு கொண்டு உள்ளது. அதை கர்நாடகாவும் பின்பற்றி உள்ளது.

அதிலும் இதில் தமிழ்நாட்டை சித்தராமையா நேரடியாக எடுத்துக்காட்டி உள்ளார்.

சமீபத்தில் ஜாதி ரீதியிலான கணக்கெடுப்பு கர்நாடகாவில் எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்து இருந்த நிலையில்தான் இந்த இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் மாநில சுயாட்சி பற்றி பேசும் நிலையில், கர்நாடகாவிலும் காங்கிரஸ் இதை கையில் எடுத்துள்ளது. முக்கியமாக மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் வரி பங்கீட்டில் கர்நாடகாவிற்கு பெருவாரியான பங்கீட்டை திருப்பி கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வாக்குறுதியில் தெரிவித்து உள்ளது.

இது தமிழ்நாட்டில் திமுக வைத்து வரும் கோரிக்கை ஆகும். இதே விஷயத்தை அங்கே காங்கிரஸ் வாக்குறுதியாக கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் இருப்பது போலவே, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற வாக்குறுதி அங்கே அளிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு பகலில் மும்முனை மின்சாரம் 8 மணிநேரம் வழங்கப்படும். கர்நாடகாவின் Kஸ்ற்TC,BMTC பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி போன்றவை தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை.

பேருந்துகளில் பெண்களுக்கு இலவச அனுமதி தமிழ்நாட்டில் ஹிட் அடித்த திட்டம் இதை அப்படியே காங்கிரஸ் கர்நாடகாவில் கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் ரோல் மாடலாக திகழும் திட்டங்களை தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் வாக்குறுதிகளாக அறிவித்து உள்ளது.

நந்தினி நிறுவனத்தின் பால் அரை லிட்டர் இலவசமாக ஏழைகளுக்கு வழங்கப்படும்,கர்நாடகாவில் உள்ள பழமையான கோவில்களை புணரமைக்க ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்,

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள், தினமும் அரை லிற்ற‌டர் இலவச பால், மாதந்தோறும் இலவச உணவு தானியம்,ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும்,  5 கிலோ அரிசி, பருப்பு இலவசமாக வழஙப்படுமென  பாரதீய ஜனதா  வாக்குறுதியளித்துள்ளது.

கர்நாடகத்தில் 20 தொகுதிகளின்  வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழர்கள்  உள்ளனர். காங்கிரஸுக்கு ஆதர‌வாக  திராவிட முன்னேற்றக் கழகம் அறிக்கை விட்டுள்ளது. திருமாவளவன், கமல் ஆகியோர்  தேர்தல் பரப்புரை செய்கின்றனர். கர்நாடகாவில்  முன்பு நடைபெற்ற  தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகமும், விடுதலைச் சிறுத்தைகளும் தேர்தல் பரப்புரையில்  கலந்துகொள்ளவில்லை.

எம்.ஜி.ஆர் கால‌த்திலும், ஜெயாலிதாவின்  காலத்திலும்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

கர்நாடகத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்த எடப்பாடியின் ஆதர்வாளரும், பன்னீர்ச்செல்வத்தின் ஆதரவாளரும் தமது வேட்புமனுவை   வாபஸ் பெற்றனர். பாரதீய ஜனதாக் கட்சி கேட்டுக்கொண்டதால்  வேட்புமனுவை  வாபஸ் பெற்றதாக எடப்பாடி  அறிவித்தார்.  வாபஸ் பெற்றதற்கான காரணம் எதனையும் பன்னீர்ச்செல்வம் தெரிவிக்கவில்லை.   பன்னீர்ச்செல்வத்தைன்  முடிவு இரகசியமானதல்ல.  யாருக்காக பன்னீரின் வேட்பாளர் வாபஸ் பெற்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த  உண்மை.

கர்நாடகத் தேர்தல் களம் அண்ணாமலையின் அரசியலை நோட்டம் பார்க்கும்  இடமாகவும் உள்ளது.  கர்நாடக  தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை  நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான அண்ணாமலை,  கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக  நியமிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கருத்துக் கணிப்புகள்  காங்கிரஸுக்குச் சாதக‌மாக உள்ளது.

கர்நாடகத் தேர்தல் முடிவு  அடுத்து வரும் சட்டசபைத் தேர்தல்களிலும் ஆதிக்கம் செலுத்தும் என்பதை மறுக்க முடியாது.

Saturday, April 29, 2023

டில்லியில் பஞ்சாயத்து தீர்ப்பை மாற்றிய நாட்டாமை


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலவர் அண்ணாமலைக்கும் இடையிலான பிரச்சனைக்கு டில்லியில் பஞ்சாயம் நடந்தது. தமிழகத்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியவர்கள் அமித் ஷாவின் முன்னிலையில் பெட்டிப் பாம்பாக அடங்கி ஒடுங்கினர்.

தமிழகத்தின் எதிர்க் கட்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  இருக்கிறது.  ஆனால்,   கூட்டணிக்  கட்சியான  பாரதீய ஜனதாக் கட்சி    எதிர்க் கட்சி இடத்தைப் பிடிக்கப் போட்டி போட்டது. மிழக பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவராக அண்ணாமலை  நியமிக்கப்பட்டதன் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் குடைச்சல் கொடுக்கத் தொடங்கினார். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய  இரண்டு கட்சிகளையும் எதிர்ப் பதில்  அண்ணாமலை  ஆர்வம் காட்டினார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் ககத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மட்டுமல்லாது   எடப்பாடி பழனிச் சாமியும் நேரடியாக அண்ணாமலையை தாக்கிப்  பேசினர். முடிவெடுக்கும்  உரிமை அண்ணாமலைக்கு இல்லை. டெல்லிதான் முடிவு செய்யும் எனச் சொல்லிய எடப்பாடி இப்போது அமைதியாகி விட்டார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரான  பின்னர்  எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷா, நட்டா ஆகியோரை  சந்தித்தபோது அண்ணாமலையும் உடன் இருந்தார். கடந்த சில வாரங்களாக அண்ணாமலைக்கும் அண்னா திராவிட முன்னேற்றக் கழாக்த் தலிவர்களுக்கும் இடையே   கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இருவருக்கும் அமித் ஷா சில அறிவுறுத்தல்களை வழங்கி சமரசம் செய்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கேபி முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன்  இருந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்திடன் கூட்டணி வைத்தால் பதவிய இராஜினாமாச் செய்வேன். தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும். நான் தலைவர்.  ஏஜெண்ட் அல்ல என அலறிய அண்ணாமலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களுடன்  ஒன்றாக  இருந்தார்.

கூட்டணி  பற்றி முடிவு செய்வது  டில்லி, அண்ணாமலை அல்ல சவால் விட்ட எடப்பாடி, டில்லியில் அண்ணாமலையுடன்  சகஜமாகச் சிரித்துப் பேசினார்.  கூட்டணியை பாரதீய ஜனதாத் தலைமையே முடிவு செய்யும் என எடப்பாடி அறிவித்த போது   அமித் ஷாவும், அதனை ஆமோதிப்பதுபோல அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அண்ணாமலை அப்போதும் விடாமல் அரசியலில் எதுவும் கல்லில் எழுதப்பட்டவை அல்ல எனச் சீறியிருந்தார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டோம். கூட்டணியை நிர்ணயம் செய்யக் கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். மேலே பாஸ் இருக்கும் போது கீழே இருப்பவர்கள் குறித்து எதற்குப் பேச்சு என சீண்டலாகவே சொன்னார் எடப்பாடி பழனிசாமி.

கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்காக  எட்ப்பாடி பழனிச்சாமியை    தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.  கர்நாடகத்தில் பாரதீய ஜனதாவை எதிர்த்து தனது கட்சி வேட்பாளரை நிறுத்தினார் எடப்பாடி. பாரதீய ஜனதாவை எதிர்க்க எடப்பாடி துணிந்துவிட்டார் என அரசியல் ஆய்வாளர்கள் வியந்தபோது தனது வேட்பாளரை வாபஸ் வாங்கினார் எடப்பாடி.  பாரதீய ஜனதாவின் வேண்டுகோளுக்கமைய வேட்பாளரை வாபஸ் வாங்கியதாகத் தெரிவித்ததால் எடப்பாடி யாருடைய கட்டுப் பாட்டில் இருக்கிறார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நேரத்தில்  அமித் ஷாவை எடப்பாடி சந்திப்பதர்கு நேரம்  ஒதுக்கப்பட்டது. தமிழகத்துக்கு விஜயம் செய்த அமித் ஷாவை எடபாடி சந்திக்கவில்லை. பத்திரிகையாளர்கள் அதுபற்ரிக் கேட்ட போது  அமித் ஷா தமிழகத்துக்கு வரும் போதெல்லாம் சந்திக்க வேண்டுமா என  கேள்வி எழுப்பிய எடப்பாடி டெல்லிக்கு காவடி எடுத்தார்.

மோடியும் , அமித்  ஷாவும் தமிகத்துக்கு விஜயம் செய்தபோது காணாமல் போன அண்ணாமலை, டெல்லியில் ஆஜரானார். கர்நாடக தேர்தலில்  பிஸியாக  இருந்த அண்ணாமலை டெல்லி பஞ்சாயத்தில் கலந்து கொண்டார்.

 இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியை குழப்பமில்லாமல் செயல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் பிரிந்திருந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிதாகிவிடும், பொது எதிரியான திராவிட முன்னேற்றக் கழகத்தை  ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலிக்கு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்    அதிமுக இடையே நிகழ்ந்து வரும் மோதல் போக்கு குறித்து விவாதித்து அண்ணாமலை- எடப்பாடி பழனிசாமி இடையேயான பிரச்சனைகளை அமித் ஷா - நட்டா ஆகியோர் சமரசம் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருவருக்கும் அமித் ஷா சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளாராம். இதனை உறுதி செய்யும் விதமாக சந்திப்பு நடந்த சிறிது நேரங்களிலேயே அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் தலைவர்கள், நமது பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தனர்" என புகைப்படங்களைப் பகிர்ந்தார். அதேபோல, எடப்பாடி பழனிசாமியும்  செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை, திட்டமிட்டு அதிமுக - பாஜகவை பிரிக்க நினைக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின்  டெல்லி சென்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார்.  மறைந்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கும் சென்னை கிண்டியில் அமையவிருக்கும் பன்னோக்கு அரசு மருத்துவமனை உள்ளிட்ட திமுகவின் முக்கிய திட்டங்களுக்கு திறப்பு விழாவை நடத்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு முறைப்படி அழைப்பு விடுக்க முதலமைச்சர் மு..ஸ்டாலின் டெல்லி சென்றார்.

 இந்த சந்திப்பின் போது, ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகள் தொடர்பாகவும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்வது, நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது, மதம் மாறிய பட்டியலினத்தவருக்கு இடஒதுக்கீடு அளிப்பது உள்ளிட்டவை குறித்து குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் வலியுறுத்துனார். கூறப்படுகிறது. இதையடுத்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர்களையும் சந்திப்பார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் டெல்லியில் உள்ளார். தமிழக அரசுடன் மோதல் போக்கையே கடைபிடித்து வரும் ஆளுநர் ரவி, அன்மையில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இந்த சூழலில் தான்  காலையிலேயே சென்னையில் இருந்து விமானம் மூலமாக 3 நாள் பயணமாக ஆளுநர் டெல்லி புறப்பட்டார். இந்த பயணத்தின் போது குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆளும் திமுக தொடர்பாக எதிர்க்கட்சியினர் அளித்த பல்வேறு புகார்கள் குறித்து, உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு..ஸ்டாலினும் டெல்லி சென்றுள்ளார்.

தமிழக   அரசியல் தலைவர்களின் டெல்லி விஜயம் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது  உறுதியானது.