Showing posts with label எம்பாப்வே. Show all posts
Showing posts with label எம்பாப்வே. Show all posts

Thursday, July 9, 2026

மெஸ்ஸியை முந்தினார் முந்தினார் எம்பாப்பே

  உலகக்  கிண்ண  16-வது சுற்றுப் போட்டிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து,  ஆர்ஜென்ரீனாவின் லியோனல் மெஸ்ஸியை முந்தி தரவரிசையில் முதலிடம் பிடித்தார் பிரான்ஸ் கப்டன் கைலியன் எம்பாப்பே.

புதன்கிழமை  பீபாவால் வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தரவரிசையின்படி, 8.71 என்ற தாக்குதல் புள்ளிகளுடன் எம்பாப்பே முதலிடத்திலும், 8.45 புள்ளிகளுடன் மெஸ்ஸி இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.  

நோர்வே ஸ்டிரைக்கர் எர்லிங் ஹாலண்ட் 8.04 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து கப்டன் ஹரி கேன் 7.41   புள்ளிகளுடன்நான்காவது இடத்திலும் உள்ளனர்.

2026 உலகக் கிண்ணப் போட்டிக்காக அரம்கோவால் வெளியிடப்பட்டு நிர்வகிக்கப்படும்  பீபா  பவர் ரேங்கிங்ஸ், போட்டித் தரவுகளைப் பயன்படுத்தி, தொடர் முழுவதும் வீரர்களின் செயல்திறனை புறநிலையாக மதிப்பிடுகிறது.

கள வீரர்கள் தாக்குதல், ஆக்கத்திறன் , தற்காப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் 0-10 என்ற அளவில் மதிப்பிடப்படுகிறார்கள், அதே நேரத்தில் கோல்கீப்பர்கள் கோலைப் பாதுகாத்தல் மற்றும் பந்து கைவசம் இருக்கும்போது ஆடுதல் ஆகியவற்றுக்காக மதிப்பிடப்படுகிறார்கள்.ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் இந்தத் தரவரிசைகள் புதுப்பிக்கப்படுகின்றன.

மூன்று களப் பிரிவுகளில் இரண்டில் பிரான்ஸ் முன்னிலை வகிக்கிறது; மைக்கேல் ஒலிஸ் ஆக்கத்திறன் தரவரிசையில் (8.19) முதலிடத்திலும், டயோட் உபாமெக்கானோ தற்காப்புப் பிரிவில் (7.67) முன்னிலையிலும் உள்ளனர்.

போத்துககல் கோல்கீப்பர் டியோகோ கோஸ்டா, 8.89 புள்ளிகளுடன் கோல்கீப்பிங்கில் முதலிடம் வகிக்கிறார்.

  

Thursday, July 2, 2026

எம்பாப்வே இரட்டைக்கோல் வென்றது பிரான்ஸ்


 நியூயார்க் நியூ ஜெர்சியில்  சுவீடனை எதிர்த்து விளையாடிய பிரான்ஸ்  3-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தி ,   உலகக்  கிண்ண  காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.  

முதல் பாதி ஆட்டம் முடியும் தறுவாயில் கைலியன் எம்பாப்பே முதல் கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து, 65-வது நிமிடத்தில் மைக்கேல் ஒலிஸ், பிராட்லி பார்கோலாவுக்கு பந்தை வழங்க, இரண்டாவது கோல் அடிக்கப்பட்டது.

74-வது நிமிடத்தில் எம்பாப்பேவுக்கு ஓலிஸ் மற்றொரு கோலை அடிக்க உதவினார். இதன் மூலம், பட்டத்தை வெல்லும் தகுதி தனக்கு உண்டு என்பதை பிரான்ஸ் மீண்டும் ஒருமுறை நிரூபித்தது.     

இப்போட்டியில் அடித்த  இரண்டு கோல்களின் மூலம் உலகக் கிண்ண  வரலாற்றில் எம்பாப்பே தனது கோல்களின் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தியுள்ளார். இதன் மூலம் லியோனல் மெஸ்ஸியின் 19 கோல்கள் என்ற சாதனையை நெருங்கியுள்ளார். மேலும், உலகக் கிண்ண நொக்கவுட் சுற்றுகளில் அதிக கோல்கள் (9 கோல்கள்) அடித்த வீரர் என்ற தனது சாதனையை எம்பாப்பே மேலும் நீடித்துள்ளார்.நான்கு போட்டிகளில் இது அவரது மூன்றாவது இரண்டு கோல்கள் ஆகும்.

தனது சக வீரர்களுக்குப் பல உதவிகளைச் செய்தபோதிலும், ஒலிஸால்  கோல் அடிக்கவில்லை.முதல் பாதியில் அவர் அடித்த அபாரமான பைசைக்கிள் கிக், கோல் கம்பத்தில் பட்டது.மைக்கேல் ஒலிஸ் ஐந்து கோல்களுக்கு உதவியுள்ளார்.

இந்தத் தொடரில் 6 கோல்களுடன் தங்கக் காலணி விருதுக்கான பந்தயத்திலும் அவர் முதலிடத்தில் உள்ளார்.  இந்தத் தொடரில் பிரான்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, 13 கோல்களை அடித்து, 2 கோல்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளது.

 80,663 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். விரிவாக்கப்பட்ட 104-போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் மொத்த பார்வையாளர் எண்ணிக்கையை 5 மில்லியனுக்கும் அதிகமாக உயர்த்தியது.

ஜூலை 4 ஆம் திகதி நடைபெறும் அடுத்த சுற்றில் பிரான்ஸ், பராகுவேயை எதிர்கொள்ளும்.

  

 

Sunday, December 18, 2022

மெஸ்சியை எதிர்த்து அணிவகுத்தவர்கள்

2007 மெஸ்ஸி   காக்காவுக்குப் பின் 2வது இடத்தைப் பிடித்தார்

2008-2018 வரை மெஸ்ஸி vs ரொனால்டோ.

2019 இல் அது மெஸ்ஸி vs விர்ஜில் வான் ஜாக்

2021 இல் அது மெஸ்ஸி vs லெவன்டோவ்ஸ்கி.

2022ல்  மெஸ்ஸி   vs  எம்பாப்பே

2017  மெஸ்ஸி vs கிறிஸ்டியானோ

2019  மெஸ்ஸி vs வான் டிஜ்க்

2021  மெஸ்ஸி vs லெவன்டோவ்ஸ்கி

2022  மெஸ்ஸி vs எம்பாப்பே

ஆர்ஜென்ரீனா : லியோ மெஸ்ஸி - 5 கோல்கள்

ஆர்ஜென்ரீனா :ஜூலியன் அல்வாரெஸ் - 4 கோல்கள்

பிரான்ஸ் :கைலியன் எம்பாப்பே - 5 கோல்கள்

பிரான்ஸ் :Olivier Giroud - 4 கோல்கள்