Showing posts with label மெட்ரோநியூஸ். Show all posts
Showing posts with label மெட்ரோநியூஸ். Show all posts

Thursday, August 12, 2010

உலகக் கிண்ணப் போட்டியை நடத்தமுட்டி மோதும் நாடுகள்

தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி உவுசலாவின் ஓசையுடன் சிறப்பாக நடைபெற்றது. அடுத்த உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2014 ஆம் ஆண்டு லம்பா நடனத்துடன் பிரேஸிலில் நடைபெற உள்ளது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் போது பிரேஸில் நாட்டின் பாரம்பரிய நடனமான லம்பா ரசிகர்களின் கண்களுக்கு பெரு விருந்தாக அமையும். தென் ஆபிரிக்காவின் உவுசலா ஓசை
காதைப்பிளந்தது. பிரேசிலின் லம்பா நடனம் உதைபந்தாட்ட ரசிகர்களின் ஒட்டு மொத்த பார்வையையும் தன்பால் ஈர்க்க உள்ளது.
2018 ஆம் ஆண்டும் 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது 2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு ஐரோப்பிய நாடுகள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன. நெதர்லாந்து, பெல்ஜியம், ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெய்ன், போர்த்துக்கல் ஆகியன உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த முன் வந்துள்ளன.
உதைபந்தாட்ட ரசிகர்கள் மிக அதிகமாக உள்ள கண்டம் ஐரோப்பா. ஐரோப்பாக் கண்டத்தின் எந்த நாட்டில் உலகக்கிண்ண உதைபந்தாட்டம் நடைபெற்றாலும் ரசிகர்கள் வெற்றி பெறச் செய்து விடுவார்கள். உலகக் கிண்ண உதைபந்தாட்டச் சம்பியனான ஸ்பெயின், இரண்டாவது இடம் பிடித்த நெதர்லாந்து ஆகியன 2018 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த மிக ஆர்வமாக உள்ளன.
ஜப்பான், தென்கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியன கூட்டாக 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த ஆர்வமாக உள்ளன. ஜப்பானும், தென்கொரியாவும் இணைந்து 2000 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியை வெற்றிகரமாக நடத்தின. மீண்டும் ஒரு வாய்ப்புக்காக அவைகள் காத்திருக்கின்றன. உதைபந்தாட்டப் போட்டியை ரசிப்பவர்களின் தொகை ஜப்பானில் அதிகரித்துள்ளது. ஒசாகா உதைபந்தாட்ட மைதானத்தின் 83000 ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை பார்க்கக் கூடிய வசதி உள்ளது.
பிஃபாவில் அங்கம் வகிக்கும் 208 நாடுகளில் இருந்து 6000 சிறுவர்களை ஜப்பானுக்கு அழைத்து உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது. 34 வசதியுடனான நேரடி ஒளிபரப்புச் செய்வதாகவும் உறுதியளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு அவுஸ்திரேலியா ஆர்வமாக உள்ளது.
ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் இருப்பதால் உதைபந்தாட்டப் போட்டியை தம்மால் நடத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது அவுஸ்திரேலியா.2018 ஆம் ஆண்டும், 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு விண்ணப்பித்த நாடுகளுக்கு பிஃபா குழு விஜயம் செய்து வருகிறது.
மைதானங்கள், தங்குமிட வசதிகள், போக்குவரத்து, பாதுகாப்பு போன்றவற்றை பீஃபா குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் டிசம்பர் 2 ஆம் திகதி சூரிச்சில் நடைபெறும் வைபவத்தில் 2018, 2022 ஆம் ஆண்டுகளில் உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டி நடைபெறும் நாடுகள் அறிவிக்கப்படும்.
2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு விண்ணப்பிக்க சீனா தயாராகி விட்டது.
2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த ஆசியநாடுகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் சீனாவின் ஆசை நிராசையாகிவிடும்.

ரமணி
மெட்ரோநியூஸ்



Thursday, August 5, 2010

ஓய்ந்தது சுழல்


அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 1992 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி கொழும்புபிரேமதாஸ மைதானத்தில் உருவான முரளி எனும் சுழல் 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி காலியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் அமைதியடைந்தது.முரளி என்ற சுழல் அகோரப் பசிக்கு 800 விக்கெட்டுகள் இரையாகின.முரளிதரன் அறிமுகமான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றிமுடிவடைந்தது. இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்ற முரளி தனது கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார்.முரளி என்ற பெயரைக் கேட்டாலே எதிரணி வீரர்கள் அச்சத்தில் உறைவார்கள். அடித்தாடும் வீரர்களும் முரளியின் பந்தை சரியாகக் கணித்த பின்னரே அடிக்கத் தொடங்குவார்கள். முரளியின் பந்துக்கு அடிப்பதா? தடுத்து ஆடுவதா? எனத் தடுமாறும் வீரர்கள் ஆட்டமிழந்துவிடுவார்கள். இலங்கைக்கு எதிராக விளையாடும் நாடு ஓட்டங்களைக் குவிக்கும் போது இலங்கை ரசிகர்கள் பொதுவாகக் கேட்கும் கேள்வி முரளி பந்து வீசவில்லையா என்பதாகும். முரளி பந்து வீச ஆரம்பித்தால் எதிரணி விக்கெட்கள் வீழ்ந்து விடும் அல்லது ஓட்ட எண்ணிக்கை குறைந்து விடும். டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை கிரிக்கெட் அணி அதிகளவு வெற்றிகளைப் பெறாத காலத்திலேதான் கிரிக்கெட் அரங்கினுள் முரளி புகுந்தார். இலங்கை கிரிக்கெட் அணியை வெற்றித் தேவதையின் பக்கம் அழைத்துச்
சென்றதில் முரளியின் பங்கு முக்கியமானது. 800 விக்கெட் என்ற சாதனையைத் தொடுவதற்கு முரளி கடந்து வந்த பாதை மிக மிகக் கரடுமுரடானது.
நிறபேதம், இன பேதம் வளர்ந்துள்ள அவுஸ்திரேலிய மண்ணில் அவர்பட்ட அவமானங்கள், சாதனைபுரிய வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தின.
கிரிக்கெட் அரங்கில் சுழல் பந்து வீரர்கள் சாதனைகளைப் செய்த போதும் துஷ்ரா என்ற மாயச் சுழலை கனகச்சிதமாக வீசி விக்கெட்களை கைப்பற்றியவர் முரளிதரன் மட்டுமே. துஷ்ராவை அறிமுகப் படுத்தியவர் பாகிஸ்தான் முஷ்டாக் அகமது. துஷ்ராவை நேர்த்தியாகக் கையாண்டவர் முரளி. கையைச் சுழற்றி முழியைப் பிதுக்கி எதிரணி விக்கெட்டுகளை துவம்சம் செய்த சுழல்பந்து வீச்சு சக்கரவர்த்திக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் 1995 96 ஆம் ஆண்டு புயல் ஒன்று வீசியது. முரளிதரன் பந்தை எறிகிறார் என்று நடுவர் டேரர் ஹேர் குற்றம் சாட்டினார்.
பந்து வீச்சுப் பரிசோதனையின் பின்னர் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார் முரளிதரன். 1998 99 ஆம் ஆண்டு மீண்டும் அவுஸ்திரேலியாவில் றோய் எமர்சன் என்ற நடுவர் முரளிதரனின் பந்து வீச்சில் குற்றம் பிடித்தார். இரண்டாவது முறை நடைபெற்ற சோதனையின் போதும் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தார்முரளிதரன்.
2004 ஆம் ஆண்டு இது போன்ற சர்ச்சை கிளம்பியது. பிஷன்சிங்பேடி, அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் போன்றோரும் முரளிதரனின் பந்து வீச்சு தவறு என்று விமர்சித்தார்கள். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளினால் முரளியின் சாதனைக்குத்தடை போட முடியவில்லை. அவுஸ்திரேலிய மண்ணில் முரளிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்ட போது அன்றைய அணித் தலைவரான அர்ஜுன ரணதுங்க சீறி எழுந்தார். முரளிதரன் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக மைதானத்தில் நடுவருடன் வாதிட்டார். அர்ஜுன ரணதுங்க ஆவேசப்படாது மௌனமாக இருந்திருந்தால் முரளியின் கிரிக்கெட் பயணம் அன்றே முடிந்திருக்கும். முரளியின் வாழ்வில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்த பெருமை அர்ஜுன ரணதுங்கவைச்சாரும். இலங்கை அணியின் கிரிக்கெட் வீரனுக்கு ஏற்படும் அவமானம் இலங்கை நாட்டுக்கு ஏற்படும் அவமானம் என்பதை உணர்ந்த அர்ஜுன இலங்கையின் மதிப்பை உயர்த்தினார்.
1992 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஐந்து தலைவர்களின் கீழ் முரளி விளையாடியுள்ளார். அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரிய, திலகரத்ன, அத்தபத்து, மஹேலஜயவர்த்தன, சங்கக்கார ஆகிய ஆறு தலைவர்களின் வெற்றிக்கு முரளி பெரும் பங்காற்றியுள்ளார். வேர்ள்ட் ஙீஐ அணியில் ஸ்மித்தின் தலைமையில் விளையாடினார். ஐ. பி. எல். போட்டியில் டோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுகிறார். கிரிக்கெட்டில் சாதனைகள் பலவற்றின் உரிமையாளரான முரளி எனும் கறுப்பு முத்தைக் கண்டு மெருகேற்றியவர் கிரிக்கெட் பயிற்சியாளரான சுனில் பெர்னாண்டோ, சென் அன்ரனீஸ் பாடசாலை மைதானத்தில் ரென்னிஸ் பந்தில் பாடசாலைச் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிய போது பயிற்சியாளர் சுனில் பெர்னாண்டோவின் பார்வை முரளிதரனின் மீது படிந்தது. முரளி பந்து வீசும் பாணியை அவதானித்த சுனில் பெர்னாண்டோ, முரளிக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பதை உணர்ந்தார்.
சிறுவர்கள் விளையாடி முடிந்ததும் சிறப்பாகப் பந்து வீசிய சிறுவனை அழைத்து உன் பெயர் என்ன எனக் கேட்டார் பயிற்சியாளர் சுனில் பெர்னாண்டோ.அந்தச் சிறுவன் முரளிதரன் என்று பதிலளித்தான். கனிஷ்ட கிரிக்கெட் அணியில் விளையாடுகிறாயா என்று பயிற்சியாளர் கேட்ட போது முரளிதரன் அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. தனது எதிர்காலம் கிரிக்கெட்தான் என்பதை முரளிதரன் அப்போது உணரவில்லை. பந்து வீச்சில் தன்னிடம் இருக்கும் திறமை பற்றி முரளி என்றுமே அறிந்திருக்கவில்லை.திறமையான ஒரு வீரனை இழக்கக் கூடாது என்று
முடிவெடுத்த பயிற்சியாளர் முரளியின் பெற்றோரிடம் சென்று முரளியின் திறமையைப் பற்றிக் கூறி கனிஷ்ட கிரிக்கெட் அணியில் இணைத்தார். வேகப்பந்து வீச்சையே முரளிதரன் தெரிவு செய்தார். அவரை சுழல்பந்து வீச்சாளராக மாற்றியவர் பயிற்சியாளர் சுனில் பெர் னாண்டோ.
அன்று ஆரம்பித்த சுழல் இன்றுவரை ஓயவே இல்லை. டெஸ்ட்டில் முரளிதரன் ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டியிலும் 20 20 போட்டியிலும் எதிரணிகளை அச்சுறுத்தத் தயாராகஇருக்கிறார்.
800 விக்கெட்களைப் பெறுவதற்கு எட்டுவிக்கெட்டுகள் இருக்கையில் தனது ஓய்வு பற்றி அறிவித்தார் முரளிதரன். முரளி அவசரப் பட்டு விட்டாரோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டது. இரண்டாவது டெஸ்ட்டிலும் விளையாடினால் 800 என்ற இலக்கு இலகுவானது என்ற எண்ணம் ரசிகர்களிடம்
ஏற்பட்டது. முரளியின் தன்னம்பிக்கை அவரைக் கைவிடவில்லை. 800 ஆவது விக்கெட்டை முரளிக்குக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இந்திய வீரர்கள் போராடினர்.ஒரே ஒரு விக்கெட் கிடைத்தால் 800 என்ற இலக்கை அடைந்து விடலாம் என்ற உத்வேகத்துடன்முரளி களத்தில் நின்றார்.
இந்திய வீரர்கள் முரளியிடம் அகப்படக் கூடாது என்ற உறுதியுடன் விளையாடினர். உலகமே பதைபதைப்புடன் பார்த்திருந்த நீண்ட போராட்டத்தின் பின் 800ஆவது விக்கெட்டைப் பெற்று இலங்கையின் டெஸ்ட் வெற்றியை உறுதி செய்தார் முரளிதரன். லாரா, டெண்டுல்கர் ஆகியோர் பிரபல்யமாக இருந்தவேளை முரளி அவர்களை எதிர்கொண்டõர். சச்சின் டெண்டுல்கரை ஒன்பது தடவை ஆட்டம் இழக்கச் செய்தார். சச்சினை அதிக தடவை ஆட்டம் இழக்கச் செய்தவர் முரளி. லாரா, டெண்டுல்கர், ஷேவக் ஆகிய மூவருமே முரளியின் சுழலுக்குக் கட்டுப்படாது அவ்வப்போது தமது துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.
இலங்கைக்கு வழங்கப்படும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் டெஸ்ட் தொடர்களின் போது ஐந்து போட்டிகள் விளையாடப்படுகின்றன. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இரண்டு அல்லது மூன்று டெஸ்ட் தொடர்களிலேயே விளையாடுகின்றன. தனக்குக் கிடைத்த மிகக் குறைந்தளவு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாரும் நெருங்க முடியாத உயர்ந்த சாதனையைப் படைத்துள்ளார் முரளிதரன்.முரளிக்கு அடுத்தது யார் என்று கேட்டால் யாராலும் பதிலளிக்க முடியாது. எனக்கு அடுத்தது ஹர்பஜன் சிங் என்று முரளி கூறியுள்ளார். இன்னும் 10 வருடங்கள் விளையாடினால்தான் ஹர்பஜனால் முரளியின் இலக்கை நெருங்க முடியும். டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார் முரளி. முரளிக்குப் பின்னர் உள்ள ஷேன்வோர்ன், கும்ப்ளே, மக்ராத், வாஸ், கபில்தேவ், ஹட்லி, பொலக், வசீம் அக்ரம், அம்புரூஸ் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டனர். தென்னாபிரிக்க வீரரான நிதினி 390 விக்கெட்டுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். நிதினி, முரளியின் சாதனையை நெருங்குவது மிகவும் சிரமமான காரியம். புதிய பந்து வீச்சாளர்கள் முரளியின் சாதனையை பார்த்து வியக்க முடியுமே தவிர நெருங்குவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.ஊடகங்களுடனும் பொதுமக்களுடனும் முரளி மிகவும் நெருக்கமாகப் பழகவில்லை என்பது முரளிக்கு எதிரான குற்றச்சாட்டு. அமைதியான முறையில் பல சமூக சேவை செய்துள்ளார். ஆனால் அவற்றைப் பிரபலப்படுத்தவில்லை. சேர்.பொன் இராமநாதனைச் சிங்களத் தலைவர்கள் தமது தோளில் சுமந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பின்னர், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் முரளியை தோளில் சுமந்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.டெஸ்ட்டில் அமைதியடைந்த சுழல் ஒருநாள் போட்டியிலும் 20 20 போட்டியிலும் விக்கெட்களை கபளீகரம் செய்ய காத்திருக்கிறார்.

ரமணி
மெட்ரோநியூஸ்

Sunday, August 1, 2010

உலகக் கிண்ண உதைபந்தாட்டம் 2010


குழு "ஏ'யில் தென் ஆபிரிக்கா, மெக்ஸிகோ, உருகுவே, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இடம்பிடித்தன. முதலாவது நாடாக பிரான்ஸ் தெரிவாகும், இரண்டாவது நாடாகத் தெரிவாவதற்கு மெக்ஸிகோவுக்கும், உருகுவேக்கும் இடையே பலத்த போட்டி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குழு "ஏ'யின் முடிவு உதைபந்தாட்ட இரசிகர்களின் முடிவை புரட்டிப் போட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரான்ஸ் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாது ஒரே ஒரு புள்ளியுடன் வெளியேறியது. பிரான்ஸுடனான போட்டியை சமப்படுத்திய உருகுவே தென் ஆபிரிக்கா, மெக்ஸிகோ ஆகியவற்றுடனான போட்டியில் வெற்றி பெற்று ஏழு புள்ளிகளுடன் முதலாமிடத்தைப் பிடித்தது. தென் ஆபிரிக்காவுடனான போட்டியைச் சமப்படுத்தி பிரான்ஸை வென்ற உருகுவேயிடம் தோல்வி அடைந்த மெக்ஸிக்கோ நான்கு புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றது. குழு "ஏ'யில் இறுதி இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தென் ஆபிரிக்கா 21 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வென்று ஆறுதலடைந்தது.
மெக்ஸிக்கோ, தென்னாபிரிக்கா ஆகியன தலா நான்கு புள்ளிகளைப் பெற்றன. இரண்டு நாடுகளும் தலா மூன்று கோல்கள் அடித்தன. மெக்ஸிக்கோவுக்கு எதிராக இரண்டு கோல்களும், தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஐந்து கோல்களும் அடிக்கப்பட்டன. கோல்களின் அடிப்படையில் மெக்ஸிக்கோ இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
குழு "பீ'யில் ஆர்ஜென்ரீனா, நைஜீரியா, தென் கொரியா, கிரீஸ் ஆகியன விளையாடின. முதலிடத்தை ஆர்ஜென்ரீனா பிடிக்கும். இரண்டாவது இடத்துக்கு கிரீஸ் அல்லது நைஜீரியா தெரிவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று எதிர்பார்த்தது போலவே ஆர்ஜென்ரீனா தெரிவானது. யாரும் எதிர்பார்க்காத வகையில் தென் கொரியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வியடைந்த தென்கொரியா, நைஜீரியாவுடனான போட்டியைச் சமப்படுத்தி கிரீஸுடனான போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது.
குழு "சீ'யில் இங்கிலாந்து, அமெரிக்கா, அல்ஜீரியா, ஸ்லோவேனியா ஆகியன இடம்பிடித்தன. இங்கிலாந்து முதலாமிடத்தையும் அமெரிக்கா இரண்டாமிடத்தையும் பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தெரிவு செய்யப்படும் என்று உதைபந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்புக்கு மாறாக அமெரிக்கா முதலாமிடத்தையும் இங்கிலாந்து இரண்டாம் இடத்தையும் பெற்று இரண்டாமிடத்துக்குத் தெரிவாகின.
அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியன தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தலா இரண்டு போட்டிகளை சமப்படுத்தின. இரண்டு நாடுகளும் தலா ஐந்து புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் அமெரிக்கா முதலாமிடத்தையும் இங்கிலாந்து இரண்டாமிடத்தையும் பெற்றன.
குழு "ஈ'யில் இடம் பிடித்த நெதர்லாந்து, டென்மார்க், ஜப்பான், கமரூன் ஆகியவற்றில் இருந்து நெதர்லாந்தும், டென்மார்க்கும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தது போன்று நெதர்லாந்து முதலாமிடத்தைப் பெற்றது. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஜப்பான் இரண்டாமிடம் பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகியது.
குழு "எஃப்'பில் இடம்பிடித்த இத்தாலி, பரகுவே, நியூசிலாந்து, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலியும், பரகுவேயும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. உதைபந்தாட்ட ரசிகர்களை இத்தாலி ஏமாற்றி விட்டது. ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாது முதல் சுற்றுடன் உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து வெளியேறியது. இத்தாலி, பரகுவே முதலாமிடத்தையும் ஸ்லோவாக்கியா இரண்டாமிடத்தையும் பிடித்தன.
பிரேஸில், வட கொரியா, ஐவரிகோஸ்ட், போர்த்துக்கல் ஆகியன குழு "ஜி'யில் இடம் பிடித்தன. எதிர்பார்த்தது போன்றே பிரேஸிலும் போர்த்துக்கல்லும் முறையே முதலாமிடத்தையும் இரண்டாமிடத்தையும் பிடித்தன.
குழு "ஜி'இல் ஸ்பெய்ன், சுவிட்சர்லாந்து, ஹொண்டூராஸ், சிலி ஆகியன இடம்பிடித்தன. எதிர்பார்த்தது போன்றே ஸ்பெயின் முதலாமிடத்தையும் சிலி இரண்டாமிடத்தையும் பெற்றன.

ஏமாற்றிய நாடுகள்
2006ஆம் ஆண்டு சம்பியனான இத்தாலியும் பிரான்ஸும் ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஏமாற்றின. பரகுவே, நியூசிலாந்து ஆகியவற்றுக்கு எதிராக தலா 11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இத்தாலி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை 11 என்ற சமநிலையில் முடித்த ஸ்லோவாக்கிய பரகுவேக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இத்தாலி இரண்டு புள்ளிகளுடனும் ஸ்லோவாக்கியா ஒரு புள்ளியுடனும் பரபரப்பான கடைசிப் போட்டியில் மோதின. போட்டியை சமப்படுத்தினால் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகும் நிலையில் இத்தாலியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலும் ஸ்லோவாக்கியாவும் மோதின. யாருமே எதிர்பார்க்காத நிலையில் 32 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற ஸ்லோவாக்கியா இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகியது. ஸ்லோவாக்கியா ஒரு புள்ளியையும் இத்தாலி இரண்டு புள்ளிகளையும் பெற்றன. வெற்றி பெற்ற ஸ்லோவாக்கியா நான்கு புள்ளிகளைப் பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது.
உதைபந்தாட்ட ரசிகர்களை பெரிதும் ஏமாற்றிய நாடு இங்கிலாந்து. இங்கிலாந்து இண்டாவது சுற்றுக்குத் தெரிவானாலும் முதற் சுற்றில் இரண்டு கோல்கள் மட்டும் இங்கிலாந்து அடித்தது. ரூனி, பிரங்லம்பட் ஆகியோர் ஒரு கோல் கூட அடிக்காது ஏமாற்றினார்கள். தட்டுத்தடுமாறி இரண்டாவது சுற்றுக்குத் தெரிவான இங்கிலாந்து ஜேர்மனியிடம் சரணடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
முதல் சுற்றில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தெரிவான போர்த்துக்கல் ரசிகர்களை ஏமாற்றி விட்டது. உலகின் அதிகூடிய பெறுமதி மிக்க நட்சத்திர வீரரான கிறிஸ்ரியானோ ரொனால்டோவின் மீது ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தனர். பிரேஸிலுக்கும் ஐவரி கோஸ்டுக்கும் எதிரான போட்டியில் கோல் அடிக்கா தும், கோல் அடிக்க இடம் கொடுக்காதும் சமப்படுத்திய போர்த்துக்கல் பலம் குறைந்த வடகொரியாவுக்கு எதிராக ஏழு கோல்கள் அடித்து முதல் சுற்றில் அதி கூடிய கோல்கள் அடித்த நாடு என்ற பெருமையைப் பெற்றது.
ரமணி

மெட்ரோநியூஸ்

Thursday, June 10, 2010

உலகக்கிண்ணம்2010


உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக் கிண்ண உதைபந்தாட்ட திருவிழா இன்று தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிறது. 32 நாடுகள் பங்கு பற்றும் 64 போட்டிகள். தென்னாபிரிக்காவில் உள்ள 10 மைதானங்களில் நடைபெறுகிறது. நிற வெறியால் உலக அரங்கில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நாடு தென்னாபிரிக்கா. நிறவெறியை மூட்டை கட்டி புதைத்து விட்டு கடந்த 15 வருடங்களில் முன்னேற்றமடைந்துள்ள தென்னாபிரிக்காவை நோக்கி உலகமே திரும்பியுள்ளது.
தென்னாபிரிக்காவில் உதைபந்தாட்டம் பிரபலமானது. 1879ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது உதைபந்தாட்ட குழு ஆரம்பிக்கப்பட்டது பீட்டர் மாரிட் ஸ்பார்க் கன்ட்ரி என்னும் அந்த அணியில் ஐரோப்பியர்களும் வெள்ளையரும் மட்டுமே அங்கத்துவம் பெற்றனர். இந்த உதைபந்தாட்ட அணி இராணுவ வீரர்களுடன் மட்டுமே விளையாடி வந்தது. நிற வெறி காரணமாக விளையாட்டுத் துறையில் இருந்து தென்னாபிரிக்கா ஒதுக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிரான போட்டியே உலக உதைபந்தாட்ட அரங்கில் தென்னாபிரிக்கா கடைசியாக விளையாடிய போட்டியாகும்.
நிறவெறி காரணமாக விளையாட்டில் இருந்து ஒதுக்கப்பட்டாலும் சோர்ந்து போகாத தென்னாபிரிக்கா, 1959ஆம் ஆண்டு தொழில் முறை உதைபந்தாட்டப் போட்டிகளை அறிமுகப்படுத்தியது. 1992 ஆம் ஆண்டு உலக உதைபந்தாட்ட சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்றது தென்னாபிரிக்கா. உதைபந்தாட்ட வரலாற்றில் முதன் முதலாக ஆபிரிக்கக் கண்டத்தில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெறுகிறது. தென்அமெரிக்க நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் உதைபந்தாட்ட கிண்ணத்தைப் பெற்று முன்னணியில் உள்ளன. பிரேஸில் ஐந்து தடவை சம்பியனாகி முன்னணியில் உள்ளது. இத்தாலி நான்கு தடவை சம்பியனாகி இரண்டாவது இடத்திலும் ஜேர்மனி மூன்று தடவைகள் சம்பியனாகி மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஆர்ஜென்ரீனா, உருகுவே ஆகியன தலா இரண்டு முறையும் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன தலா ஒரு முறையும் சம்பியனாகின.
உலகின் எல்லாக் கண்டங்களிலும் சம்பியனான நாடு என்ற பெருமையை பெறுவதற்காக காத்திருக்கிறது பிரேஸில். ஐரோப்பா (1958சுவீடன்), தென் அமெரிக்கா (1962சிலி), வட அமெரிக்கா (1970 மெக்ஸிகோ), வட அமெரிக்கா (1994 அமெரிக்கா), ஆசியா (2002 கொரியா / ஜப்பான்) ஆகிய கண்டங்களில் வெற்றி பெற்ற பிரேஸில் ஆபிரிக்கக் கண்டத்திலும் சம்பியனாகும் முனைப்புடன் காத்திருக்கிறது. 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி பிரேஸிலில் நடைபெற உள்ளது. சம்பியன் கிண்ணத்துடன் சொந்த நாட்டில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் ஆர்வத்துடன் உள்ளது பிரேஸில்.
தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பிரேஸிலில் பிரபலமான "ஆர்' கூட்டணி இல்லாததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். ரொபேட்டோ கார்லோஸ் ஓய்வு பெற்று விட்டார். உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் (15) அடித்த ரொனால்டோ முழங்கால் காயத்தால் அவதிப்படுவதால் அணியில் இடம்பெறவில்லை. பிரேஸில் அணியின் குழப்படிக்காரப் பையனான ரொனால்டினோவுக்கு பயிற்சியாளர் துங்கா வாய்ப்பளிக்கவில்லை. விளையாட்டுக்கு இரண்டாவது இடத்தைக் கொடுத்து பொழுதுபோக்குக்கு முதலிடம் கொடுக்கும் ரொனால்டினோ 23 வீரர்கள் அடங்கிய பட்டியலில் இல்லையென்றாலும் ரிசேவ் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
மத்திய பகுதியில் பம்பரமாகச் சுழன்று விளையாடும் காகா இருப்பதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். காகாவின் உதவியுடன் ரொபின் ஹோ, பபியானோ ஆகியோரும் கோல் அடிப்பதற்குத் தயாராக முன் களத்தில் உள்ளனர். டேனியல் ஆல்வ்ஸ், தியகோ சில்வா, ஜுவான் ஆகியோர் பின் வரிசையில் பலமாக இருப்பதனால் இவர்களைத் தாண்டி கோல் அடிப்பது சிரமமானது.
மிக நீண்ட காலமாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் கடந்த மாதம் பிரேஸிலிடம் முதலிடத்தை பறிகொடுத்து விட்டு இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அண்மையில் ஸ்பெயின் பெற்ற வெற்றிகள் அதன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளை ஸ்பெயின் வீரர்களின் விளையாட்டினால் ரசிகர்கள் கொதித்தெழும் சம்பவங்களும் உள்ளன. பலவீனமான நாட்டுடன் அல்லது அணியுடன் விளையாடும் போது ஸ்பெயின் இலகுவாக வெற்றி பெற்று விடும். இந்தப் போட்டியில் ஸ்பெயின் தோல்வியடைந்து விடும் என்று எதிர்பார்க்கும் வேளையில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்று விடும்.
ஸ்பெயின் வீரரான பெர்னாண்டோ டாரஸை எதிரணி வீரர்கள் அச்சத்துடனேயே எதிர்நோக்குவார்கள். இரண்டு, மூன்று வீரர்கள் சேர்ந்து சுற்றி வளைத்தாலும் அவரிடமிருந்து பந்தைப் பறிப்பது மிகவும் சிரமமானது. அவருடைய கால்களுக்கு இடையே உள்ள பந்து எந்தத் திசை நோக்கி செல்லும் என்பதை எவராலும் கணிக்க முடியாது.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரண்டு முறை விளையாடி கிண்ணத்தை பறிகொடுத்த நாடு நெதர்லாந்து. அதிர்ஷ்டமில்லாத நாடு என்ற பெயரை நீக்குவதற்காக அர்ஜான் ரொபின், ரூபின் வான் பஸி ஆகிய நட்சத்திரங்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
உலகக் கிண்ணத்தைப் பெறும் எனக் கணிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பெக்கம், ஜோன் டெரி, வோர்ன் பிரிட்ஜ், ரூனி ஆகியோரின் கூட்டணி எதிரணிக்கு சிம்மசொப்பனம் என எதிர்பார்க்கப்பட்டது. காலில் அடிபட்டு சத்திர சிகிச்சை செய்யப்பட்டதால் பெக்கம் அணியில் சேர்க்கப்படவில்லை. வேயர்ன் பிரிட்ஜின் காதலியுடன் அணித்தலைவர் ஜோன் டெர்ரி பழகியதால் வேயர்ன் பிரிட்ஜின் காதலி வென்னன்கா கர்ப்பமானார். இந்த இரகசியம் அம்பலமானதால் ஜோன் டெர்ரி தலைமைப் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். மனமுடைந்த வேயர்ன் பிரிட்ஜ் உலகக் கிண்ண அணியில் தன்னைச் சேர்க்க வேண்டாம் என்று கூறிவிட்டார்.
கோல் அடிக்கும் இயந்திரமான ரூனியும் ஜோன் டெர்ரியும் இங்கிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை இரசிகர்களிடம் உள்ளது. 30 வயதைக் கடந்து விட்டால் உதைபந்தாட்ட வீரர்கள் ஓய்வு பெற்று விடுவார்கள்.
ஆனால், 35 வயதான பெக்கமின் விளையாட்டு இன்னமும் ஓய்ந்து விட வில்லை. மூன்று உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடிய பெக்கம் நான்காவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியுள்ளது.
பயிற்சியாளர் மரடோனா, 22 வயதான லயோனல் மெஸ்னி ஆகியோரின் மீது ஆர்ஜென்ரீனா நம்பிக்கை வைத்துள்ளது. மிகப் பிரபலமான விளையாட்டு வீரரான மரடோனா சர்ச்சைகளிலும் பிரபலமானவர். ஆர்ஜென்ரீனா உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது முதலே சர்ச்சைகளிலும் சோதனைகளிலும் சிக்கி வருகிறார் மரடோனா. மகளின் காதலனை அணியில் சேர்த்ததை ஆர்ஜென்ரீனா பத்திரிகைகள் விமர்சித்துள்ளன. பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருதை இந்த ஆண்டு பெற்ற லயோனல் மெஸ்ஸி மீது பல விமர்சனங்கள் உள்ளன. ஸ்பெயின் நாட்டில் பர்ஸிலோனா அணிக்காக திறமையாக விளையாடி வரும் லயோனல் மெஸ்ஸி தாய் நாட்டுக்காக விளையாடும் போது ஏமாற்றி வருகிறார். தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பொய் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார் லயோனல் மெஸ்ஸி.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு கடைசிச் சுற்று வரை காத்திருந்த நாடு ஆர்ஜென்ரீனா. ஆர்ஜென்ரீனாவைப் போன்றே கடைசிச் சுற்றில் வெற்றி பெற்று தகுதியான இன்னொரு நாடு போர்த்துக்கல். அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மட்டும் நம்பி உள்ளது போர்த்துக்கல். சிறந்த வீரருக்கான பீஃபா விருதை இரண்டு முறை பெற்றவர். ஸ்பெயின் நாட்டின் ரியல் மட்ரிட் அணி 93 மில்லியன் பவுண் கொடுத்து இவரை வாங்கி உள்ளது. உலகக் கிண்ணத்தை வெல்லும் நாடுகளின் பட்டியலில் போர்த்துக்கல் இல்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர்கள் அனைவரும் போர்த்துக்கல்லுக்கு ஆதரவளிப்பார்கள்.
லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்கிடையேயான போட்டி பலமாக உள்ளது. கோல்டன் ஷý, கோல்டன் பந்து ஆகிய விருதைப் பெற இரு வீரர்களும் முனைப்பாக உள்ளனர். பீஃபா விருதைப் பெற்ற லயோனல் மெஸ்ஸி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியிலும் விருது பெறும் நோக்கில் உள்ளார். பீஃபா விருதை மெஸ்ஸியிடம் பறிகொடுத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ மெஸ்ஸியை முந்தும் முனைப்பில் உள்ளார்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியைக் காண உலகில் உள்ள உதைபந்தாட்ட ரசிகர்கள் ஆவலாக உள்ள வேளையில் தமது மதிப்புக்குரிய நட்சத்திர வீரர்கள் விளையாடாத கவலை பல ரசிகர்களிடம் உள்ளது.
பெக்கம் (இங்கிலாந்து), வேயன் பிரிட்ஜ் (இங்கிலாந்து), ரொனால்டோ (பிரேஸில்), ரொபின்ஹோ (பிரேஸில்), மைக்கல் பெல்லிக் (ஜேர்மனி), ஆகியோர் விளையாடாததனால் உதைபந்தாட்ட ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

ரமணி

மெட்ரோநியூஸ்

Monday, June 7, 2010

உலகக்கிண்ணம்2010


ஜேர்மனி2006
ஜேர்மனியில் நடைபெற்ற 18ஆவது உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி இத்தாலி சம்பியானது. உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இத்தாலி நான்காவது முறை சம்பியனானது. உலகக்கிண்ண உதைபந்தாட்ட தகுதிகாண் போட்டியில் 198 நாடுகள் விளையாடின. 32 நாடுகள் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. கமரூன், நைஜீரியா ஆகியன தகுதி பெறவில்லை. அங்கோலா, ஐவரிகோஸ்ட், கானா, ரோகோ, ரினிடிட் அன்ட் டுபாக்கா ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப்போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து அங்கோலா, ஐவரிகோஸ்ட், கானா, ரோகோ, துனிஷியா, ஆசியக் கண்டத்தில் இருந்து அவுஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து குரோஷியா, செக்குடியரசு, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், சேர்பியா அன்ட் மொன்ரகோவா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்ஸர்லாந்து, உக்ரைன், வட மத்திய அமெரிக்காவிலிருந்து கொஸ்ரரிக்கா, மெக்ஸிகோ, ரினிடாட், அன்ட்டுபாக்கோ, அமெரிக்கா, தென் அமெரிக்காவில் இருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், ஈக்குவடோர், பரகுவே ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
32 நாடுகளும் எட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம்பிடித்தன. அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்று தலா இரண்டு நாடுகள் ஒவ்வொரு குழுவில் இருந்தும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
முதல் சுற்றில் வெற்றி பெற்ற 16 நாடுகள் இரண்டாவது சுற்றில் மோதின. சுவீடனுக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி, மெக்ஸிகோவுக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்ஜென்ரீனா, ஈக்குவடோருக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துக்கல், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி, கானாவுக்கு எதிரான போட்டியில் 30 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில், ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் ஆகியன காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. உக்ரைன், சுவிட்சர்லாந்து ஆகியவற்றுக்கிடையேயான போட்டி கோல் எதுவும் அடிக்காது சமநிலையில் முடிந்தமையில் பெனால்டி மூலம் 30 என்ற கோல் கணக்கில் உக்ரைன் வெற்றி பெற்று காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது. பெனால்டியில் கோல் அடிக்காது தோல்வியடைந்தது சுவிட்ஸர்லாந்து.
உக்ரைனுக்கு எதிரான போட்டியில் 30 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி, பிரேஸிலுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பிரான்ஸ் ஆகியன அரையிறுதிப்போட்டியில் விளையாடத் தகுதிபெற்றன. ஆர்ஜென்ரீனா, ஜேர்மனி ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் இரு நாடுகளும் தலா ஒரு கோல் அடித்தன. போட்டி சமநிலையில் முடிந்தது. மேலதிக நேரத்தில் கோல் அடிக்கப்படாமையால் பெனால்டி மூலம் 42 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வெற்றி பெற்றது. இங்கிலாந்து, போர்த்துக்கல் ஆகியவற்றுக்கிடையேயான போட்டி கோல் எதுவும் அடிக்காமையினால் பெனால்டிமூலம் 31 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வெற்றி பெற்றது.
ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி, போர்த்துக்கல்லுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற பிரான்ஸ் ஆகியன இறுதிப்போட்டியில் விளையாட தகுதிபெற்றன. அரையிறுதியில் தோல்வியடைந்த ஜெர்மனி, போர்த்துக்கல் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி மூன்றõவது இடத்தையும் தோல்வியடைந்த போர்த்துக்கல் நான்காவது இடத்தையும் பிடித்தன.
இத்தாலி, பிரான்ஸ் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் இருநாடுகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது. பெனால்டி மூலம் 53 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி சம்பியனானது.
64 போட்டிகளில் 147 கோல்கள் அடிக்கப்பட்டன. 3354439 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர். ஜேர்மனி 14 கோல்களும் இத்தாலி 12 கோல்களும், ஆர்ஜென்ரீனா 11 கோல்களும் அடித்தன. அதிக தவறு செய்த நாடாக இத்தாலி உள்ளது. இரண்டாவது இடத்தில் ஜேர்மனியும் மூன்றாவது இடத்தில் பிரான்ஸும் உள்ளன.
கோல்டன் ஷýவிருதுக்கு கொலோசி (ஜேர்மனி), கிரெஸ்போ (ஆர்ஜென்ரீனா), ரொனால்டோ (பிரேஸில்) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். கொலோ சிக்கு கோல்டன் ஷý வழங்கப்பட்டது. கோல்டன் பந்து விருதுக்கு ஸினடிஸினன் (பிரான்ஸ்) கன்னவாரோ (இத்தாலி), பிர்லோ (இத்தாலி) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். ஸினடிஸிடெனுக்கு கோல்டன் பந்து விருது வழங்கப்பட்டது. சிறந்த கோல் கீப்பருக்கான விருது இத்தாலி வீரனான வவ்பனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இளம் வீரரான லூகாஸ் பொடோங்கி (ஜேர்மனி) பெற்றுக்கொண்டார். முறை தவறாது விளையாடிய விருதை ஸ்பெயினும் பிரேஸிலும் பெற்றுக்கொண்டன. ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய விருதை போர்த்துக்கல் பெற்றுக்கொண்டது. சுவீடன், ஜேர்மனி ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது போட்டி ஜேர்மனிய நகரங்களில் பிரமாண்டமான திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. இதனை 750,000 பேர் கண்டுகளித்தனர்.
குரேõஷியா, அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற போட்டியில் மத்தியஸ்தர் தவறுதலாக மூன்று தடவை மஞ்சள் அட்டையை காட்டினார். உலகெங்கும் உள்ள 715.1 மில்லியன் ரசிகர்கள் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை பார்த்தனர்.
326 மஞ்சள் அட்டைகளும் 28 சிவப்பு அட்டைகளும் காண்பிக்கப்பட்டன. உதைபந்தாட்ட வரலாற்றில் இது ஒரு சாதனையாகும். போலந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டியின் போது மத்தியஸ்தரான வலன்ரின் இவானோவ் அதிகபட்சமாக 16 முறை மஞ்சள் அட்டையையும் நான்கு முறை சிவப்பு அட்டையையும் காட்டினார்.
முதல் சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக விளையாடிய நாடுகள் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது சுற்றுப்போட்டி சமநிலையில் முடிந்ததனால் பெனால்டி மூலம் முடிவு காணப்பட்டது. பெனால்டியில் கோல் அடிக்காமையினால் தோல்வியடைந்த சுவிட்சர்லாந்து வெளியேறியது.
உலகக் கிண்ண சம்பியனான நாடு தகுதிகாண் போட்டியில் விளையாடாமல் நேரடியாக உலகக் கிண்ண போட்டியில் விளையாடும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் உலகக் கிண்ண சம்பியனான பிரேஸில் தகுதிகாண் போட்டிகளில் விளையாடியது.

ரமணி

மெட்ரோநியூஸ்

Sunday, June 6, 2010

உலகக்கிண்ணம்2010


தென் கொரியா/ஜப்பான்2002
தென் கொரியா/ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய 17ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜேர்மனியை வீழ்த்திய பிரேஸில் சம்பியனானது. 1994ஆம் ஆண்டு சம்பியனான பிரேஸில் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. 2002ஆம் ஆண்டு ஐந்தாவது தடவை சம்பியனாகி சாதனை படைத்தது. உலகக் கிண்ண உதைபந்தாட்டம் முதன் முதல் ஆசியக் கண்டத்தில் நடைபெற்றது. முதன் முதலாக இரண்டு நாடுகள் இணைந்து நடத்திய உலகக் கிண்ணப் போட்டி இதுவாகும். ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் சம்பியனான ஒரே ஒரு நாடு பிரேஸில்.
உலகக் கிண்ண உதைபந்தாட்ட தகுதி காண் போட்டியில் 199 நாடுகள் பங்குபற்றின. அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 32 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் தகுதியைப் பெற்றன. நெதர்லாந்து தகுதி பெறவில்லை. செனகல், தென்கொரியா, துருக்கி ஆகியன தகுதி பெற்றன.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து கமரூன், நைஜீரியா, செனகல், தென் ஆபிரிக்கா, துனிஷியா, ஆசியக் கண்டத்தில் இருந்து சீனா, ஜப்பான், கொரியக் குடியரசு (தென்கொரியா), சவூதி அரேபியா, ஐரோப்பா கண்டத்தில் இருந்து பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், அயர்லாந்து குடியரசு, ரஷ்யா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவீடன், துருக்கி, வடமத்திய அமெரிக்காவிலிருந்து கொஸ்ரரிக்கா, மெக்ஸிகோ, அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜன்ரீனா, பிரேஸில், ஈக்குவடோர், பரகுவே, உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
சவூதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் ஜேர்மனி 80 என்ற கோல் கணக்கிலும் கொஸ்ரரிக்காவுக்கு எதிரான போட்டியில் பிரேஸில் 52 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்தின. 32 நாடுகளும் எட்டுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. ஒவ்வொரு குழுவிலும் அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற தலா இரண்டு நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
இரண்டாவது சுற்றில் பரகுவேக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஜேர்மனி, டென்மார்க்குக்கு எதிரான போட்டியில் 30 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, சுவீடனுக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செனகல், மெக்ஸிகோவுக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்கா, பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற துருக்கி, இத்தாலிக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற தென் கொரியா ஆகியன காலிறுதியில் விளையாட தெரிவாகின. ஸ்பெயின், அயர்லாந்து ஆகியவற்றுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தமையினால் பெனால்டி முறையில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.
காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடிய பிரேஸில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி, செனகலுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற துருக்கி ஆகியன அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. ஸ்பெயின், தென்கொரியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டி சமநிலையில் முடிவடைந்தமையினால் பெனால்டி மூலம் 53 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற தென் கொரியா அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.
அரையிறுதிப் போட்டியில் கொரியாவுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி, துருக்கிக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் ஆகியன இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த தென்கொரியா, துருக்கி ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற துருக்கி மூன்றாம் இடத்தையும் தோல்வியடைந்த தென்கொரியா நான்காம் இடத்தையும் பிடித்தன.
உலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆறுமுறை விளையாடிய பிரேஸில் நான்கு முறை கிண்ணத்தை வென்றது. இரண்டு முறை தோல்வியடைந்தது. ஜேர்மனியும் ஆறு முறை உலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடியது. ஜேர்மனி இரண்டு முறை கிண்ணத்தை வென்றது. நான்கு முறை தோல்வியடைந்தது.
பலம் வாய்ந்த பிரேஸில், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் ஐந்தாவது முறையும் சம்பியனானது. 64 போட்டிகளில் 161 கோல்கள் அடிக்கப்பட்டன. 2,705,197 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளை கண்டு ரசித்தனர். பிரேஸில் 18 கோல்களும், ஜேர்மனி 14 கோல்களும், ஸ்பெயின், துருக்கி ஆகியன தலா 10 கோல்களும் அடித்தன. அதிக தவறு செய்த நாடாக ஜேர்மனி விளங்குகிறது. இரண்டாவது இடத்தை தென் கொரியாவும் மூன்றாவது இடத்தை துருக்கியும் பிடித்தன. அதிக தவறு செய்த வீரராக பஸ்ரிக் (துருக்கி) முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை ஜிசுங் (தென்கொரியா), டவ் (அயர்லாந்துக் குடியரசு) ஆகியோர் பிடித்தனர்.
கோல்டன் ஷூ விருதுக்காக எட்டு கோல்கள் அடித்த ரொனால்டோ (பிரேஸில்), ஐந்து கோல்கள் அடித்த கொலோசி (ஜேர்மனி), ஐந்து கோல்கள் அடித்த ஹொங் மயுங்போ (தென் கொரியா) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. பிரேஸில் வீரர் ரொனால்டோ கோல்டன் ஷýவைப் பெற்றார். 1998ஆம் ஆண்டு கோல்டன் பந்து பெற்ற ரொனால்டோ இம்முறை கோல்டன் ஷýவைப் பெற்றார். கோல்டன் பந்து, கோல்டன் ஷý ஆகிய இரண்டையும் பெற்ற ஒரே ஒரு வீரர் ரொனால்டோ. கோல்டன் பந்து விருதுக்கு ஒலிவர்கான் (ஜேர்மனி), ரொனால்டோ (பிரேஸில்), ஹொங் மயுங்போ (தென்கொரியா) ஆகியோரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டன. ஒலிவர்கானுக்கு கோல்டன் பந்து விருது வழங்கப்பட்டது. இளம் வீரருக்கான விருது டொனோ வன் (அமெரிக்கா) பெற்றார். சிறந்த கோல் காப்பாளராக ஜேர்மனி வீரர் ஒலிவர்கான் தெரிவு செய்யப்பட்டார். தவறு செய்யாது முறையாக விளையாடிய விருதை பெல்ஜியம் பெற்றுக் கொண்டது. ரசிகர்களை மகிழ்ச்சியளித்த நாடாக தென் கொரியா தெரிவானது.
ரொனால்டோவின் மகன் தொலைக்காட்சியில் ரொபேட்டோ கார்லோசைப் பார்த்து "டடி' என முத்தமிட்டதால் அரையிறுதிப்போட்டியின் பின்னர் ரொனால்டோ தனது தலை அலங்காரத்தை மாற்றி விட்டார். 2002ஆம் ஆண்டு ஆபிரிக்கக் கிண்ணப் போட்டியின் போது கைகளை மறைக்கும் பகுதி இல்லாத சீருடை அணிந்ததால் கமரூன் தடை செய்யப்பட்டது. போலந்துக்கு எதிரான போட்டியின்போது 20 செக்கன்களில் தென் கொரிய வீரர் காயமடைந்ததனால் சாடூரி எனும் வீரர் களமிறங்கினார். குறைந்த நேரத்தில் மாற்று வீரராக விளையாடிய பெருமை இவரைச் சாரும்.
பொரா மிலுடினொவிக் என்னும் பயிற்சியாளர் 1986ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையான உலகக் கிண்ணப் போட்டிகளின் போது மெக்ஸிக்கோ, கொஸ்ரரிக்கா, அமெரிக்கா, நைஜீரியா, சீனா ஆகிய ஐந்து நாடுகளுக்கும் பயிற்சியாளராக கடமையாற்றினார்.

ரமணி
மெட்ரோநியூஸ்

Sunday, May 30, 2010

உலகக்கிண்ணம்2010


பிரான்ஸ்1998
பிரான்ஸில் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற 16 ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பிரேஸிலை வீழ்த்திய பிரான்ஸ் சம்பியனானது. 1994 ஆம் ஆண்டு சம்பியனான பிரேஸில், பிரான்ஸிடம் கிண்ணத்தைப் பறிகொடுத்தது. 60 வருடங்களின் பின்னர் பிரான்ஸில் மீண்டும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 174 நாடுகள் போட்டியிட்டன. அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 32 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இதுவரை 24 நாடுகள் விளையாடின. இம்முறை மேலும் எட்டு நாடுகள் கூடுதலாக இணைக்கப்பட்டு 32 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடின.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து கமரூன், மொராக்கோ, நைஜீரியா, தென்னாபிரிக்கா, துனுஷியா ஆசியக் கண்டத்தில் இருந்து ஈரான், ஜப்பான், கொரியக் குடியரசு (தென்கொரியா), சவூதி அரேபியா, ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா, கொஸ்ரிகா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, ரொமானியா, ஸ்கொட்லாந்து, ஸ்பெயின், யூகோஸ்லாவியா, வட, மத்திய அமெரிக்காவில் இருந்து ஜமேக்கா, மெக்ஸிகோ, அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், சிலி, கொலம்பியா, பரகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
32 நாடுகளும் எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம்பெற்றன. அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற இரண்டு நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
பல்கேரியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் 61 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து 50 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜமேக்காவுக்கு எதிரான போட்டியில் ஆர்ஜென்ரீனா 50 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
குழு "ஏ' யிலிருந்து பிரேஸில், நோர்வே குழு "பீ' யிலிருந்து இத்தாலி, சிலி குழு "சி'யிலிருந்து பிரான்ஸ், டென்மார்க் குழு "டி' யிலிருந்து நைஜீரியா பரகுவே, குழு "ஈ' யிலிருந்து நெதர்லாந்து, மெக்ஸிகோ, குழு "எஃப்' பிலிருந்து ஜேர்மனி, யூகோஸ்லாவியா, குழு "ஜி' யிலிருந்து ரொமானியா, இங்கிலாந்து குழு "எச்' சில் இருந்து ஆர்ஜென்ரீனா, கொஸ்ரிகா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
இரண்டாவது சுற்றில் விளையாடிய பிரேஸில், இத்தாலி, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, குரோஷியா ஆகியன வெற்றி பெற்று காலிறுதிக்கு தெரிவாகின. இங்கிலாந்து, ஆர்ஜென்ரீனா ஆகியவற்றுக்கிடையிலான போட்டி 22 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததனால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. மேலதிக நேரத்தில் கோல் அடிக்கப்படாமையினால் பெனால்டி மூலம் 43 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்ஜென்ரீனா காலிறுதிக்கு முன்னேறியது.
பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டி கோல் அடிக்கப்படாது சமநிலையில் முடிந்ததனால் பெனால்டி மூலம் 43 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. டென்மார்க்குக்கு எதிரான போட்டியில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில், ஆர்ஜென்ரீனாவுக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நெதர்லாந்து ஆகியன அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
ஜேர்மனி, குரோஷியா ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டியின் முடிவு உதைபந்தாட்ட ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 30 என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
பிரேஸில், நெதர்லாந்து ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததனால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. மேலதிக நேரத்தில் கோல் அடிக்கப்படாமையினால் பெனால்டி மூலம் 42 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
பிரான்ஸ், குரோஷியா, ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த குரோஷியா நெதர்லாந்து ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா மூன்றாவது இடத்தையும் தோல்வி அடைந்த நெதர்லாந்து நான்காவது இடத்தையும் பெற்றன.
உலகக் கிண்ண சம்பியனான பிரேஸில், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 30 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் உலகக் கிண்ண சம்பியனானது. ஐந்தாவது முறை உலகக் கிண்ணத்தைப் பெறும் நோக்கில் விளையாடிய பிரேஸில் இறுதிப் போட்டியில் கோல் அடிக்காது வீழ்ந்தது.
உலகக் கிண்ண ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி கொடுத்த குட்டி நாடான குரோஷியா ஏழு போட்டிகளில் விளையாடி 19 கோல்கள் அடித்தது. குரோஷியாவுக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன. மூன்று போட்டிகளில் குரேõஷியாவுக்கு எதிராக விளையாடிய நாடுகள் கோல் அடிக்கவில்லை டென்மார்க், ஜேர்மனி ஆகியன தலா 12 கோல்களும், பிரான்ஸ் 11 கோல்களும் அடித்தன.
கோல்டன் ஷýவுக்காக ஆறு கோல்கள் அடித்த குரோஷிய வீரர் டவோர் சுகெர், ஐந்து கோல்கள் அடித்த ஆர்ஜென்ரீன வீரர் கப்ரியல் பற்றிஸ்டா, ஐந்து கோல்கள் அடித்த இத்தாலி வீரர் கிறிஸ்ரினா வெய்ரி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். குரோஷிய வீரரான டவோர் சுகெர் கோல்டன் ஷý பெற்றார்.
கோல்டன் பந்து விருதுக்காக பிரேஸில் வீரர் ரொனால்டோ, குரோஷிய வீரர் டவோர் தாகர், பிரான்ஸ் வீரர் லிலியன் துராம் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். ரொனால்டோவுக்கு கோல்டன் பந்து வழங்கப்பட்டது. சிறந்த கோல் கீப்பராக பிரான்ஸ் வீரர் பபியன் பர்தீஸ் தெரிவு செய்யப்பட்டார்.
சிறந்த இளம் வீரராக இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கல் எவன் தெரிவு செய்யப்பட்டார். முறை தவறாது விளையாடிய நாடுகளாக பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியன அறிவிக்கப்பட்டன. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்த அணியாக பிரான்ஸ் தெரிவு செய்யப்பட்டது.
64 போட்டிகளில் 171 கோல்கள் அடிக்கப்பட்டன. 2785100 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர். 37 மில்லியன் ரசிகர்கள் தொலைக்காட்சி மூலம் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியைப் பார்வையிட்டனர். உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் தென் அமெரிக்க நாடுகள் முதன் முதலாக வெவ்வேறு குழுக்களில் இடம் பிடித்ததால் முதல் சுற்றில் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போட்டியிடவில்லை எலக்ரொனிக் மூலம் விளையாடும் நேரம் காட்சிப்படுத்தப்பட்டது.
போட்டி சமநிலையில் முடிந்தால் மேலதிக நேரத்தில் முதல் கோல் அடிக்கும் நாடு வெற்றி பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் கோல் கோல்டன் கோல் என அழைக்கப்பட்டது. பிரான்ஸ் வீரர் பலக் முதலாவது கோல்டன் கோல் அடித்த வீரராவார். இரண்டாவது சுற்றில் பரகுவேக்கு எதிரான போட்டியில் 113 ஆவது நிமிடத்தில் கோல்டன் கோல் அடிக்கப்பட்டது,
ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளை சமப்படுத்திய அவுஸ்திரேலியா ஈரானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததனால் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தது.

ரமணி

மெட்ரோநியூஸ்

உலகக்கிண்ணம்2010


அமெரிக்கா1994
அமெரிக்காவில் நடைபெற்ற 15ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இத்தாலியை வீழ்த்திய பிரேஸில் சம்பியனானது. நான்காவது தடவையாக உலகக் கிண்ண சம்பியனாகி புதிய சரித்திரம் படைத்தது பிரேஸில். உலகக் கிண்ண தகுதி காண் போட்டியில் 147 நாடுகள் போட்டியிட்டு 24 நாடுகள் விளையாடுவதற்குத் தகுதி பெற்றன.
இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தன. கிரீஸ், நைஜீரியா, சவூதி அரேபியா ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து கமரூன், மொராக்கோ, நைஜீரியா, ஆசியக் கண்டத்தில் இருந்து கொரியக்குடியரசு (தென்கொரியா), சவூதி அரேபியா, ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து பெல்ஜியம், பல்கேரியா, ஜேர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, அயர்லாந்துக் குடியரசு, ரொமானியா, ரஷ்யா, சுவீடன், சுவிட்சர்லாந்து, வட மத்திய அமெரிக்காவில் இருந்து மெக்ஸிகோ, அமெரிக்கா, தென் அமெரிக்காவில் இருந்து ஆர்ஜென்ரீனா, பொலிவியா, பிரேஸில், கொலம்பியா ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றன.
24 நாடுகளும் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 16 நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. குழு "ஏ' யிலிருந்து ரொமானியா, சுவீடன், அமெரிக்கா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. குழு "பீ' யில் இருந்து பிரேஸில், சுவீடன் ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. கமரூனுக்கு எதிரான போட்டியில் 6 1 என்ற கோல் கணக்கில் வென்ற ரஷ்யா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. குழு "சீ' யில் இருந்து ஜேர்மனி, ஸ்பெயின் ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றன.
குழு "டி' யில் விளையாடிய நைஜீரியா, பல்கேரியா, ஆர்ஜென்ரீனா ஆகியன தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலா ஒரு போட்டியில் தோல்வியடைந்து தலா ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின. குழு "ஈ'யில் விளையாடிய மெக்ஸிகோ, இத்தாலி, அயர்லாந்து குடியரசு, நோர்வே ஆகிய நாடுகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தலா ஒரு போட்டியை சமப்படுத்தி, தலா ஒரு போட்டியில் தோல்வியடைந்து தலா நான்கு புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் மெக்ஸிகோ, இத்தாலி, அயர்லாந்து குடியரசு ஆகியன இரண்டாவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.
குழு "எஃப்'பில் விளையாடிய நெதர்லாந்து, சவூதி அரேபியா, பெல்ஜியம் ஆகிய நாடுகள் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலா ஒரு போட்டியில் தோல்வியடைந்து தலா ஆறு புள்ளிகளுடன் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின.
பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி, சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் 30 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் சவூதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன், அயலர்லாந்துக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நெதர்லாந்து, அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில், நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி ஆகியன காலிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. மெக்ஸிகோ, பல்கேரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிந்ததனால் பெனால்ட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பல்கேரியா காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. காலிறுதிப் போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்திய இத்தாலி, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில், ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பெல்ஜியம் ஆகியன அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. ரொமானியா, சுவீடன் ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டி 22 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததனால் பெனால்ட்டி மூலம் 54 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் அரையிறுதியில் விளையாட தகுதி பெற்றது.
பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி, சுவீடனுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் ஆகியன இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சுவீடன், பல்கேரியா ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டியில் 40 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் மூன்றாம் இடத்தையும் தோல்வி அடைந்த பல்கேரியா நான்காம் இடத்தையும் பிடித்தன.
பிரேஸில், இத்தாலி ஆகிய நாடுகளுக்கிடையிலான பரபரப்பான இறுதிப் போட்டியில் இரு நாடுகளும் கோல் அடிக்கவில்லை. மேலதிக நேரத்திலும் கோல் அடிக்காமையினால் பெனால்டி மூலம் 32 என்ற கோல் கணக்கில் பிரேஸில் சம்பியனானது. இத்தாலியின் நம்பிக்கை நட்சத்திரமான ரொபேட்டோ பக்கியோ பெனால்டியில் கோல் அடிக்காது ரசிகர்களை ஏமாற்றினார்.
சுவீடன் 15 கோல்களும், பிரேஸில் 11 கோல்களும் ஸ்பெயின், ரொமேனியா, பல்கேரியா ஆகியன தலா 10 கோல்களும் அடித்தன. தலா ஆறு கோல்கள் அடித்த எலெக்சõலங்கோ (ரஷ்யா), ஹிரிஸ்கோஸ் ரொசிகோ (பல்கேரியா), கெனத் அன்டர்ஸன் (சுவீடன்), ரொமாரியோ (பிரேஸில்) ஆகியோரின் பெயர் கோல்டன் ஷýவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. எலெக் சாலங்கோ, ஹரிஸ்கோஸ் ரொசிகோ ஆகிய இருவருக்கும் கோல்டன் ஷý வழங்கப்பட்டது. பல்கேரியாவுக்கு எதிரான போட்டியில் ரஷ்ய வீரரான எலெக் சாலங்கோ ஐந்து கோல்கள் அடித்தார்.
கோல்டன் பந்துக்கு ரொமாரியோ (பிரேஸில்), ரொபேடோ பகியோ (இத்தாலி), ஹிஸ்ரோ ஸ்ரொகியோ (பல்கேரியா) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. ரொமாரியோவுக்கு கோல்டன் பந்து வழங்கப்பட்டன. சிறந்த கோல் கீப்பருக்கான விருது பெல்ஜிய வீரரான மைக்கல் பிரீடொமெனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இளம் வீரராக நெதர்லாந்தைச் சேர்ந்த மார்க், தெரிவு செய்யப்பட்டார். முறை தவறாது விளையாடிய விருது பிரேஸில் நாட்டுக்கு வழங்கப்பட்டது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்த அணியாக பிரேஸில் தெரிவானது. 52 போட்டிகளில் 141 கோல்கள் அடிக்கப்பட்டன. 3887538 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர். சராசரியாக ஒரு போட்டியை 68,991 ரசிகர்கள் பார்வையிட்டனர். உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாற்றில் இது சாதனையாகும்.
மத்தியஸ்தர்கள் கலர் உடை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், விளையாடும் இரு அணிகளின் நிறத்தை ஒத்த ஆடை அணியக் கூடாது. வீரர்களின் பெயர் உடையில் பொறிக்கப்பட்டது.
அமெரிக்கா சுவிட்சர்லாந்து ஆகியவற்றுக்கிடையேயான போட்டிகள் முதன் முதலில் உள்ளரங்கில் நடைபெற்றன.
அமெரிக்கா, கொலம்பியா ஆகியவற்றுக்கிடையிலான போட்டியின் போது பின்கள வீரரான கொலம்பிய வீரரான அன்ரீஸ் எஸ்போர் பந்தைத் தடுக்க முனைந்த போது அது கோலாகியது. இதனால் 21 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்று இண்டாவது சுற்றுக்குத் தெரிவானது. இப்போட்டி சமநிலையில் முடிந்திருந்தால் கொலம்பியா இரண்டாவது சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கும். நாடு திரும்பிய அன்ரீஸ் எஸ்போரை உதைபந்தாட்ட ரசிகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்தார்.
தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில் ஜேர்மனிய வீரரான ஸ்ரீபன் எப்பன்பெர்க் ரசிகர்களை எச்சரிக்கும் வகையில் விரல் காட்டியதால் அடுத்த போட்டிகளில் அவர் விளையாடுவதற்கு அனுமதி வழங்காத பயிற்சியாளர் அவரை நாட்டுக்கு அனுப்பி விட்டார். கமரூன் வீரரான ரொஜர் மில்லர் ரஷ்யாவுக்கு எதிரான போட்டியில் 42ஆவது வயதில் கோல் அடித்து தனது சாதனையை முறியடித்தார்.
ஆர்ஜென்ரீன வீரர் மரடோனா போதை வஸ்து பாவித்தமையினால் ஆர்ஜென்ரீன பயிற்சியாளர் அவரை விளையாட அனுமதிக்கவில்லை.

ரமணி
மெட்ரோநியூஸ்

Tuesday, May 25, 2010

உலகக்கிண்ணம்2010


இத்தாலி 1990
இத்தாலியில் நடைபெற்ற 14 ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் மேற்கு ஜேர்மனி வெற்றி பெற்று மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. மேற்கு ஜேர்மனி மூன்றாவது தடவையாக தொடர்ந்து இறுதிப் போட்டியில் விளையாடியது. 1982 ஆம் ஆண்டு இத்தாலியிடமும் 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவிடமும் தோல்வியடைந்தது. 1986 ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வியடைந்த மேற்கு ஜேர்மனி 1990 ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக 116 நாடுகள் தகுதிகாண் போட்டிகளில் விளையாடின. அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 24 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. டென்மார்க், பிரான்ஸ், போர்த்துக்கல் ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெறவில்லை. கொஸ்ரரிகா, அயர்லாந்து குடியரசு, அமெரிக்கா ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற 24 நாடுகளும் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம்பிடித்தன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற நாடுகள் இரண்டாவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து கமருன், எகிப்து, ஆசியக் கண்டத்தில் இருந்து கொரியக் குடியரசு (தென் கொரியா), ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து ஒஸ்ரியா, பெல்ஜியம், செக்கஸ்லோவியா, இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, அயர்லாந்து குடியரசு, ரொமானியா, ஸ்கொட்லாந்து, சோவியத் யூனியன் (ரஷ்யா), ஸ்பெய்ன், சுவீடன், யூகோஸ்லாவியா, வட மத்திய அமெரிக்காவிலிருந்து கொஸ்ரரிகா, அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், கொலம்பியா, உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
குழு "ஏ' யிலிருந்து இத்தாலி, செக்கஸ்லோவாகிய ஆகிய நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 5 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செக்கஸ்லோவாகியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. குழு "பீ' யிலிருந்து கமரூன், ரொமானியா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. ரொமானியா, ஆர்ஜென்ரீனா ஆகியவற்றை வீழ்த்திய கமரூனை 4 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சோவியத் யூனியன் அதிர்ச்சியளித்தது. ரொமானியா ஆர்ஜென்ரீனா ஆகியன தலா மூன்று புள்ளிகளைப் பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
குழு "சீ' யில் இருந்து பிரேஸில், கொஸ்ரரிகா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. குழு "டி' யில் இருந்து மேற்கு ஜேர்மனி, யூகோஸ்லாவியா, கொலம்பியா ஆகியனவும் குழு "ஈ' யிலிருந்து ஸ்பெயின், பெல்ஜியம், உருகுவே ஆகியனவும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
குழு "எஃ' பில் இங்கிலாந்து, அயர்லாந்து குடியரசு, நெதர்லாந்து, எகிப்து ஆகியன போட்டியிட்டன. எகிப்துடனான போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஏனைய இரண்டு போட்டிகளையும் சமநிலையில் முடித்ததில் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது. அயர்லாந்து குடியரசு, நெதர்லாந்து ஆகிய நாடுகள் தலா மூன்று போட்டிகளில் விளையாடின. மூன்று போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தன. ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத நிலையில் இரு நாடுகளும் இரண்டாவது சுற்றுக்கு தெரிவாகின.
இரண்டாவது சுற்றில் விளையாடிய யூகோஸ்லாவியா பெனால்டி மூலம் 2 3 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வி அடைந்தது. அயர்லாந்துக் குடியரசுக்கு எதிரான போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது. செக்கஸ்லோவியாவுக்கு எதிரான போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜேர்மனி வெற்றி பெற்றது. கமரூன், இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 2 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மேலதிக நேரத்தில் இங்கிலாந்து ஒரு கோல் அடித்ததனால் 3 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இத்தாலி, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பெனால்டி மூலம் 4 3 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்றது. ஜேர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதியில் 1 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்ததனால் பெனால்டி மூலம் 4 3 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வென்றது. அரையிறுதியில் தோல்வி அடைந்த இத்தாலி, இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி மூன்றாம் இடத்தையும் தோல்வி அடைந்த இங்கிலாந்து நான்காம் இடத்தையும் பிடித்தன.
மேற்கு ஜேர்மன், ஆர்ஜென்ரீனா ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜேர்மனி வெற்றி பெற்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் கோல் அடிக்காது தோல்வி அடைந்த முதலாவது நாடு ஆர்ஜென்ரீனா.
ஜேர்மனி 15 கோல்களையும், இத்தாலி, செக்கஸ்லோவாகிய ஆகியன தலா 10 கோல்களையும் அடித்தன. ஆறு கோல்கள் அடித்த ஸ்கிலாஸ்கி (இத்தாலி), ஐந்து கோல்கள் அடித்த ஸ்குரி (செக்கஸ்லோவாகியா), நான்கு கோல்கள் அடித்த மில்லா கமரூன் ஆகியோரின் பெயர் கோல்டன் ஷூவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஸ்கிலாஸ்கிக்கு கோல்ட்ஷீ வழங்கப்பட்டது.
ஸ்கிலாஸ்கி (இத்தாலி), மத்தியூஸ் (ஜேர்மனி), மரடோனா (ஆர்ஜென்ரீனா) ஆகியோர் கோல்டன் பந்துக்காக பரிந்துரைக்கப்பட்டனர். ஸ்கிலாஸ்கிக்கு கோல்டன் பந்து வழங்கப்பட்டது. சிறந்த இளம் வீரராக ரொபேட் புரொஸ்ங்கி தெரிவானார். முறை தவறாத அணியாக இங்கிலாந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. 52 போட்டிகளில் 116 கோல்கள் அடிக்கப்பட்டன. 2516348 பேர் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர்.
இத்தாலி, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஆட்டம் இடை நிறுத்தப்பட்ட எட்டு நிமிடத்தைக் கணக்கில் சேர்க்காது மத்தியஸ்தர் ஆட்டத்தை நிறுத்தி விட்டார்.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முதன் முதலில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட வீரர் ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த பெற்றோமன்ஸின், நைஜீரியா, அங்கோலா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற தகுதிகாண் போட்டியின் போது 23 வயதான நைஜீரிய வீரர் சாமுவேல் எக்காவாஜி மாரடைப்பால் மரணமானார்.
20 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் வயது கூடிய வீரர்கள் விளையாட அனுமதித்தபடியால் மெக்ஸிக்கோவுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டாவது முறையாக உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய நாடு என்ற பெருமையைப் பெற்றது. அயர்லாந்துக் குடியரசு கடைசியாக விளையாடிய எட்டுப் போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இதேவேளை இரண்டு கோல்கள் அடித்தது. அக்கோல்களும் பெனால்டி மூலம் அடிக்கப்பட்டன.
1974 ஆம் ஆண்டு மேற்கு ஜேர்மனி உலகக் கிண்ணத்தை வென்ற போது அணித் தலைவராக இருந்த பிரான்ஸ் பெக்கன் பௌச்சர் 1990 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் பயிற்சியாளராவார்.
கமரூனைச் சேர்ந்த ரொஜர்மில்லா (38 வயது 20 நாட்கள்) கூடிய வயதில் கோல் அடித்த வீரராவார். இரண்டாவது சுற்றில் கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் இச்சாதனையைச் செய்தார். நான்கு வருடங்களின் பின்னர் இச்சாதனையை இவரே முறியடித்தார்.

ரமணி
மெட்ரோநியூஸ்

Sunday, May 23, 2010

உலகக்கிண்ணம்2010


மெக்ஸிகோவில் 1986
மெக்ஸிகோவில் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற 13ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜேர்மனியை வீழ்த்திய ஆர்ஜென்ரீனா மூன்றாவது தடவை சம்பியனானது. 1970ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது. 1970ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் பிரேஸிலிடம் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தைப் பெற்ற இத்தாலி 1982ஆம் ஆண்டு சம்பியனானது.
1985ஆம் ஆண்டு மெக்ஸிகோவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் 25 ஆயிரம் பேர் மரணமானார்கள்.
பூகம்பம் காரணமாக போட்டி வேறிடத்துக்கு மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மெக்ஸிகோ உறுதியுடன் இருந்து உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியைச் சிறப்பாக நடத்தி முடித்தது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 121 நாடுகள் மோதின. அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 24 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
நெதர்லாந்து தகுதி பெறவில்லை. கனடா, ஈராக் ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து அல்ஜீரியா, மொராக்கோ, ஆசியக் கண்டத்தில் இருந்து ஈராக், கொரியக் குடியரசு (தென் கொரியா), ஐரோப்பாக் கண்டத்திலிருந்து பெல்ஜியம், பல்கேரியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி, வடஅயர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ஸ்கொட்லாந்து, சோவியத் ரஷ்யா, ஸ்பெயின், வட மத்திய அமெரிக்காவிலிருந்து கனடா, மெக்ஸிகோ, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், பரகுவே, உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
24 நாடுகளும் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம்பிடித்தன. மூன்று நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டன.
இரண்டாவது சுற்றில் கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற எட்டு நாடுகள் காலிறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
குழு "சி'யில் விளையாடிய சோவியத் ரஷ்யா 60 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியைத் தோற்கடித்து அதிகூடிய கோல் அடித்த நாடு என்ற பெருமையைப் பெற்றது. குழு "ஈ'யில் விளையாடிய டென்மார்க் 61 என்ற கோல் கணக்கில் உருகுவேயைத் தோற்கடித்தது.
குழு எஃப்இல் விளையாடிய மொராக்கோ, இங்கிலாந்து, போலந்து, போர்த்துக்கல் ஆகிய நான்கு நாடுகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. இங்கிலாந்து, போலந்து ஆகியன தலா ஒரு போட்டியைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வி அடைந்தன. புள்ளிகளின் அடிப்படையில் தோல்வி அடையாத நாடாகிய மொராக்கோ இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது.
இங்கிலாந்து, போலந்து ஆகியன தலா மூன்று புள்ளிகளைப் பெற்றதால் கோல்களின் அடிப்படையில் இங்கிலாந்து இரண்டாவது இடத்துடனும் போலந்து மூன்றாவது இடத்துடனும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
மெக்ஸிகோ, பெல்ஜியம் சோவியத் ரஷ்யா, பல்கேரியா பிரேஸில், போலந்து ஆர்ஜென்ரீனா, உருகுவே இத்தாலி, பிரான்ஸ் மொரோக்கோ, ஜேர்மன் இங்கிலாந்து, பரகுவே டென்மார்க், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டியில் வெற்றி பெற்ற பிரேஸில், ஜேர்மனி, ஆர்ஜென்ரீனா, ஸ்பெயின், பிரான்ஸ், மெக்ஸிகோ, இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகியன காலிறுதிக்குத் தெரிவாகின.
பிரான்ஸ், பிரேஸில் ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டி சமநிலையில் முடிவடைந்ததனால் பெனால்டி மூலம் 34 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அரையிறுதியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. ஜேர்மன்,மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு இடையேயான போட்டி சமநிலையில் முடிந்ததனால் பெனால்டி மூலம் 41 என்ற கோல் கணக்கில் ஜேர்மன் வெற்றி பெற்றது. ஸ்பெயின், பெல்ஜியம் ஆகியவற்றுக்கிடையேயான போட்டி சமநிலையில் முடிந்ததனால் பெனால்டி மூலம் 54 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. ஆர்ஜென்ரீனாவுக்கு அருகே உள்ள இங்கிலாந்துக்குச் சொந்தமான போக்லான்ட் தீவுகளை ஆர்ஜென்ரீனா ஆக்கிரமித்ததனால் இங்கிலாந்து ஆர்ஜென்ரீனாவிடமிருந்து போக்லண்ட் தீவை மீட்டது. யுத்தத்தில் வென்ற இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடன் ஆர்ஜென்ரீனா விளையாடியது.
முதல் பாதியில் இரு நாடும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் 11 என்ற கோலுடன் பரபரப்பாக விளையாடிய போது மரடோனா தலையால் ஒரு கோல் அடித்து ஆர்ஜென்ரீனாவை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
மறு நாள் பத்திரிகைகளில் பிரசுரமான புகைப்படத்தின் மூலம் மரடோனா கையால் கோல் அடித்தது தெரிய வந்தது. அது கடவுளின் கை என்று மரடோனா தெரிவித்தார்.
பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மன் இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்ஜென்ரீனா இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 42 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் மூன்றாவது இடத்தையும் தோல்வி அடைந்த பெல்ஜியம் நான்காவது இடத்தையும் பிடித்தன. இறுதிப் போட்டியில் ஜேர்மனியை எதிர்த்து விளையாடிய ஆர்ஜென்ரீனா 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணத்தைப் பெற்று 1978ஆம் ஆண்டு சம்பியனான ஆர்ஜென்ரீனா 1986ஆம் ஆண்டும் சம்பியனானது.
1982ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இத்தாலியிடம் தோல்வி அடைந்த ஜேர்மன் 1986ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வி அடைந்தது.
ஆர்ஜென்ரீனா 14 கோல்களையும், சோவியத் ரஷ்யா, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகியன தலா 12 கோல்களையும் அடித்தன. ஆறு கோல்கள் அடித்த கிறேலினெக்கர் (இங்கிலாந்து), தலா ஐந்து கோல்கள் அடித்த எமிலோ புராதியோனோ (ஸ்பெய்ன்), கரேகா (பிரேஸில்), மரடோனா (ஆர்ஜென்ரீனா) ஆகியோரின் பெயர் கோல்டன் ஷூவுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. மரடோனாவுக்கு அடிடாஸ் கோல்டன் ஷூ விருதும் கிறேலினெக்கருக்கு கோல்டன் பந்து விருதும் வழங்கப்பட்டன. சிறந்த இளம் வீரராக ஸ்கிபோ (பெல்ஜியம்) தெரிவு செய்யப்பட்டார். முறை தவறாது ஒழுங்காக விளையாடிய நாடாக பிரேஸில் தெரிவு செய்யப்பட்டது.
52 போட்டிகளில் 132 கோல்கள் அடிக்கப்பட்டன. 2,393,331 ரசிகர் மைதானங்களில் போட்டிகளை நேரடியாகப் பார்வையிட்டனர்.
ஈரான், ஈராக் ஆகிய நாடுகளுக்கிடையே யுத்தம் நடைபெற்றதனால் ஈராக்கில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடுவதற்கு ஒரு நாடும் செல்லவில்லை. விளையாடாமல் வெற்றி பெற்ற ஈராக் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் நாடுகளைத் தெரிவு செய்வதற்காக 308 போட்டிகள் நடைபெற்றன. 801 கோல்கள் அடிக்கப்பட்டன. முதல் சுற்றில் விளையாடிய பல்கேரியாவும் உருகுவேயும் தலா மூன்று போட்டிகளில் விளையாடின.
ஒரு போட்டியிலும் வெற்றி பெறாத போதும் புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாவது சுற்றுக்கு விளையாடத் தெரிவாகின.
பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியின் போது ஈராக் வீரரான சமீர் சஹீர் மொஹமட் நடுவர் மீது எச்சில் துப்பியதால் அவருக்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்டது.


ரமணி

மெட்ரோநியூஸ்

Saturday, May 22, 2010

உலகக்கிண்ணம்2010


ஸ்பெய்ன்1982
ஸ்பெயினில் 1982ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜேர்மனியை வீழ்த்திய இத்தாலி மூன்றாவது முறை உலகக் கிண்ணத்தைப் பெற்றது. ஆசியக் கண்டத்தில் இருந்தும் ஆபிரிக்க கண்டத்தில் இருந்தும் அதிகளவான நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்ற வேண்டும் என்ற நோக்கத்துக்காக உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதுவரை காலமும் 16 நாடுகளே உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றின. இந்த ஆண்டு முதல் 24 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றின.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் தகுதிகாண் போட்டிகளில் 109 நாடுகள் விளையாடின. அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 24 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் தகுதியை பெற்றன. 1978ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பெற்ற நெதர்லாந்தும் மெக்ஸிக்கோவும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட தகுதி பெறவில்லை.
அல்ஜீரியா, கெமரூன்,ஹொண்டூராஸ், குவைத், நியூஸிலாந்து ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து அல்ஜீரியா, கெமரூன், ஆசிய கண்டத்தில் இருந்து குவைத், ஓசியானிக் தீவுகளிலிருந்து நியூஸிலாந்து, ஐரோப்பா கண்டத்திலிருந்து ஒஸ்ரியா, பெல்ஜியம், செக்கோஸ்லோவாக்கியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, வட அயர்லாந்து, போலந்து, ஸ்கொட்லாந்து, சோவியத் யூனியன், ஸ்பெயின், யூகோஸ்லாவியா, வட மத்திய அமெரிக்காவிலிருந்து எல்சல்வடோர், ஹொண்டூராஸ், தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், சிலி, பெரு ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் முதல் சுற்றில் விளையாடின. முதல் சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற இரண்டு நாடுகள் இரண்டாவது சுற்றில் விளையாடும் தகுதியைப் பெற்றன. இரண்டாவது சுற்றுக்குத் தெரிவான 12 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா மூன்று நாடுகள் இடம்பிடித்தன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெறும் ஒரு நாடு அரையிறுதியில் விளையாடும் தகுதியைப் பெறும் வகையில் போட்டி அமைக்கப்பட்டது.
முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்றன. இரண்டாவது சுற்றுக்கு எந்த நாடு தெரிவாகும் என்பதை முன் கூட்டியே எதிர்வு கூற முடியாத நிலை ஏற்பட்டது. குழு 1இல் போலந்து, இத்தாலி, பெரு, கெமரூன் ஆகியன போட்டியிட்டன. பெருவுக்கு எதிரான போட்டியில் 51 என்ற கோல் கணக்கில் போலந்து வென்றது. ஏøனய ஐந்து போட்டிகளும் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தன. இத்தாலி, பெரு இத்தாலி, கெமரூன் ஆகியவற்றிற்கிடையேயான போட்டிகள் 11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தன. இத்தாலி, போலந்துபெரு, கமரூன் போலந்து, கமரூன் ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 00 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தன.
ஒரு வெற்றியைப் பெற்று இரண்டு போட்டிகளை சமநிலையில் முடித்த போலந்து நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகியது. இத்தாலி, கமரூன் ஆகிய நாடுகள் விளையாடிய மூன்று போட்டிகளும் சமநிலையில் முடிந்ததால் தலா மூன்று புள்ளிகளைப் பெற்றன. கூடிய கோல்கள் அடித்த இத்தாலி இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகியது. ஜேர்மனி, ஒஸ்ரியா, அல்ஜீரியா, சிலி ஆகியன குழு 2இல் மோதின. மூன்று போட்டிகளிலும் சிலி தோல்வி அடைந்தது. ஜேர்மனி, ஒஸ்ரியா, அல்ஜீரியா ஆகியன தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலா ஒரு போட்டியில் தோல்வி அடைந்தன. மூன்று நாடுகளும் தலா நான்கு புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் ஜேர்மனியும் ஒஸ்ரியாவும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
பெல்ஜியம், ஆர்ஜென்ரீனா, ஹங்கேரி, எல்சல்வடோர் ஆகியன குழு 3இல் விளையாடின. தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பெல்ஜியம், ஆர்ஜென்ரீனா ஆகியன இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. எல்சல்வடோருக்கெதிரான போட்டியில் 101 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஹங்கேரி அதி கூடிய கோல் அடித்த நாடு என்ற பெருமையைப் பெற்றது.
குழு நான்கில் இருந்து மூன்று வெற்றிகளைப் பெற்ற இங்கிலாந்தும், ஒரு வெற்றியைப் பெற்ற பிரான்ஸும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின. குழு நான்கில் விளையாடிய வட அயர்லாந்து, ஸ்பெயின், யூகோஸ்லாவியா ஆகியன தலா ஒரு வெற்றியைப் பெற்றன. நான்கு புள்ளிகளைப் பெற்ற வட அயர்லாந்து இரண்டாவது சுற்றுக்கு எளிதாகத் தெரிவாகியது. ஸ்பெயின், யூகோஸ்லாவியா ஆகியன தலா மூன்று புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் ஸ்பெயின் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகியது. குழு ஆறில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளைப் பெற்ற பிரேஸில் இரண்டாவது சுற்றை உறுதி செய்தது. சோவியத் யூனியன், ஸ்கொட்லாந்து ஆகியன தலா மூன்று புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் சோவியத் யூனியன் இரண்டாவது சுற்றில் விளையாடத் தகுதி பெற்றது.
முதற் சுற்றில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 12 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒரு குழுவில் தலா மூன்று நாடுகள் இடம்பிடித்தன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெறும் நாடு அரையிறுதியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. போலந்துக்கும் இத்தாலிக்கும் இடையே நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. ஜேர்மனிக்கும் பிரான்ஸுக்கும் இடையேயான போட்டி 33 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. ஆட்ட நேரம் முடிந்து மேலதிகமாக வழங்கப்பட்ட நேரத்திலும் வெற்றி தோல்வி இன்றி போட்டி முடிவடைந்ததினால் பெனால்டி முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் முதலாவது பெனால்ட்டி முறையில் 54 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வென்றது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அலன் திரைஸ் பெனால்டியை கோலாக்கிய முதலாவது வீரராவார்.
அரையிறுதியில் தோல்வியடைந்த போலந்திற்கும் பிரான்ஸுக்கும் இடையிலான போட்டியில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போலந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது. தோல்வியடைந்த பிரான்ஸ் நான்காவது இடத்தைப் பிடித்தது. ஜேர்மனிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் இத்தாலி வெற்றி பெற்றது.
பிரான்ஸ் 16 கோல்களும், பிரேசில் 15 கோல்களும், ஹங்கேரி, இத்தாலி, ஜேர்மனி ஆகியன தலா 12 கோல்களும் அடித்தன. ஆறு கோல்கள் அடித்த பேலோரோசி (இத்தாலி) 5 கோல்கள் அடித்த ரம்மரிஞ்சி (ஜேர்மனி), நான்கு கோல்களை அடித்த சிகோ(பிரேஸில்) ஆகியோரின் பெயர் கோல்டன் ஷூவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ரோசிக்கு கோல்டன் ஷூ வழங்கப்பட்டது. அடிடாஸ் கோல்டன் பந்துக்கான விருதுக்கு ரோசி (இத்தாலி), பல்கயோ (பிரேஸில்), ரம்பரிஞ்சி (பிரான்ஸ்) ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. கோல்டன் பந்தை ரோசி தட்டிச் சென்றார். சிறந்த இளம் வீரருக்கான விருதை ரொமோரோஸ் (பிரான்ஸ்) பெற்றார். முறைகேடின்றி நேர்மையாக விளையாடிய விருது பிரேஸிலுக்கு வழங்கப்பட்டது. 52 போட்டிகளில் 146 கோல்கள் அடிக்கப்பட்டன. 2,109,723 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர்.
பிரான்ஸிற்கும் குவைத்திற்கும் இடையேயான போட்டியின் போது நடுவர் தவறான கோல் வழங்கியதால் குவைத் இளவரசர் மைதானத்துள் சென்று நடுவருடன் வாதிட்டார். தவறு செய்த நடுவர் இடைநிறுத்தப்பட்டார். குவைத் இளவரசருக்கு 14,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
இத்தாலி அணித் தலைவர் டினோஸீஃப் சம்பியன் அணியை வழிநடத்திய வயது கூடியவர் என்ற பெருமையைப் பெற்றார். 40 வயதில் உலகக் கிண்ணத்தை தனது நாட்டுக்குப் பெற்றுக் கொடுத்தார். வட அயர்லாந்து வீரரான நோர்மன் 17 வருடம் 42 நாட்களில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய வயது குறைந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரரான பிரைன் ரொட்ஸன் 27 வினாடிகளில் கோல் அடித்து ஆகக் குறைந்த நேரத்தில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ரமணி
மெட்ரோநியூஸ்

உலகக்கிண்ணம்2010


ஆர்ஜென்ரீனா 1978

ஆர்ஜென்ரீனாவில் 1978ஆம் ஆண்டு நடைபெற்ற 11ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய ஆர்ஜென்ரீனா சம்பியனானது. 16 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி தென் அமெரிக்காவில் நடைபெற்றது. 1976ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவில் இராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதனால் அங்கு செல்வதற்கு சில நாடுகள் முதலில் மறுப்புத் தெரிவித்தன.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தகுதி காண் போட்டியில் 107 நாடுகள் பங்குபற்றின. அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. இங்கிலாந்து, செக்÷காஸ்லோவாக்கியா,சோவியத் யூனியன் ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தன. ஈரான், டுனீஷியா ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
ஆபிரிக்காவிலிருந்து டுனீஷியா, ஆசியாவிலிருந்து ஈரான், ஐரோப்பாவிலிருந்து ஒஸ்ரியா, பிரான்ஸ், கிழக்கு ஜேர்மனி, ஹங்கேரி, இத்தாலி, நெதர்லாந்து,போலந்து, ஸ்கொட்லாந்து, ஸ்பெய்ன்,சுவீடன், வட மத்திய அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோ, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், பெரு ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
16 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம்பிடித்தன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் கூடுதல் புள்ளிகள் உடன் வெற்றி பெறும் தலா இரண்டு நாடுகள் இரண்டாவது சுற்றில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
குழு 2இல் விளையாடிய ஜேர்மனி மெக்ஸிக்கோவுக்கு எதிராக 60 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அதிக கோல்கள் அடித்த நாடு என்ற பெருமையைப் பெற்றது.
முதல் சுற்றில் அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற நெதர்லாந்து, இத்தாலி, ஜேர்மனி, ஒஸ்ரியா ஆகியன குழு "ஏ'யிலும், ஆர்ஜென்ரீனா, பிரேஸில், போலந்து, பெரு ஆகியன குழு "பீ'யிலும் மோதின. குழு "ஏ'யிலிருந்து நெதர்லாந்து, இத்தாலி ஆகியன அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. ஒஸ்ரியாவுக்கு எதிரான போட்டியில் 51 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்றது. குழு "பீ'யிலிருந்து ஆர்ஜென்ரீனாவும், பிரேஸிலும் அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. பெருவுக்கு எதிரான போட்டியில் 60 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்றது.
பெரு நாட்டு கோல் கீப்பர் ஆர்ஜென்ரீனாவில் பிறந்தவர் என்பதனால் ஆர்ஜென்ரீனாவின் வெற்றியில் பலத்த சந்தேகம் ஏற்பட்டது. முதல் சுற்றில் குழு நான்கில் விளையாடிய பெருவுக்கு எதிராக இரண்டு கோல்கள் மட்டும் அடிக்கப்பட்டன. இரண்டாவது சுற்றில் பெருவுக்கு எதிராக 10 கோல்கள் அடிக்கப்பட்டன.
ஆர்ஜென்ரீனாவும், பிரேஸிலும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தலா ஐந்து புள்ளிகளுடன் அரையிறுதிக்குத் தெரிவாகின. கோல்களின் அடிப்படையில் ஆர்ஜென்ரீனா முதலிடம் பெற்றது.
இரண்டாவது சுற்றில் ஆர்ஜென்ரீனாவுக்கு எதிரான போட்டியில் எதிரணி கோல் அடிக்கவில்லை. பிரேஸிலுக்கு எதிரான போட்டிகளில் போலந்து ஒரே ஒரு கோல் அடித்தது. ஆர்ஜென்ரீனா, பிரேஸில் ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டி கோல் அடிக்கப்படாமையால் சமநிலையில் முடிந்தது.
இரண்டாவது சுற்றில் இரண்டாம் இடம்பிடித்த பிரேஸில், இத்தாலி ஆகியவற்றிற்கிடையே நடைபெற்ற போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் மூன்றாம் இடத்தையும், இத்தாலி நான்காவது இடத்தையும் பிடித்தன. இப் போட்டியின் முன்பாதியில் 10 என்ற கோல் கணக்கில் இத்தாலி முன்னிலை பெற்றிருந்தது. ஆட்ட நேர பின்பாதியில் இரண்டு கோல்களை அடித்த பிரேஸில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
ஆர்ஜென்ரீனா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்றது. ஆர்ஜென்ரீனா, நெதர்லாந்து ஆகியன தலா 15 கோல்கள் அடித்தன. பிரேஸில், ஜேர்மனி ஆகியன தலா 10 கோல்கள் அடித்தன. ஆறு கோல்கள் அடித்த மரியோ கெம்ப்ஸ் (ஆர்ஜென்ரீனா), தலா ஐந்து கோல்கள் அடித்த ரிபியோ கப்லாஸ் (நெதர்லாந்து) ஆகியோரின் பெயர் கோல்டன் ஷூவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆர்ஜென்ரீனா வீரர் கெம்ப்ஸ் கோல்டன் ஷூவைப் பெற்றõர்.
முறைதவறாது ஒழுங்காக விளையாடிய விருது ஆர்ஜென்ரீனாவுக்கு வழங்கப்பட்டது. கப்ரினோ சிறந்த இளம் வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
ஆர்ஜென்ரீனா, பிரேஸில் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற முதலாவது சுற்றுப் போட்டியில் பிரேஸில் அணி வீரர் கோனர் கிக் அடிக்கும் போது பந்து அந்தரத்தில் நிற்கையில் விசில் ஊதிய நடுவர் போட்டியை முடித்தார். 11 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிந்தது. ஹங்கேரி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் சீருடை வெவ்வேறு நிறங்களில் ஒரே மாதிரியாக இருந்தன. ஆர்ஜென்ரீனா தொலைக்கõட்சி ஒளிபரப்பு கறுப்பு வெள்ளையாகையால் தொலைக்காட்சி ரசிகர்களால் இரண்டு நாட்டு வீரர்களையும் பிரித்தறிவது கஷ்டமாக இருந்தது.
இத்தாலிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வீரர் எமிபிராடில் ஒரு கோல் அடித்தார். இப்போட்டியில் இவர் சேம் சைட் கோல் ஒன்று அடித்தார். நெதர்லாந்து 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 38 போட்டிகளில் 102 கோல்கள் அடிக்கப்பட்டன. 15,50,424 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர்.

ரமணி
மெட்ரோநியூஸ்

Thursday, May 20, 2010

உலகக்கிண்ணம்2010


ஜேர்மனி1974
ஜேர்மனியில் நடைபெற்ற 10ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய கிழக்கு ஜேர்மனி சம்பியனானது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 99 நாடுகள் தகுதி காண் போட்டியில் விளையாடின. கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதியைப் பெற்றன.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஹங்கேரி, ஸ்பெயின், சோவியத் ரஷ்யா ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெறவில்லை. அவுஸ்திரேலியா ஹெயிட்டி ஸார் (கொங்கோ) ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதி பெற்றன. ஆபிரிக்கக் கண்டத்திலிருந்த ஸாத் (கொங்கோ) ஆசியாக் கண்டத்தில் இருந்த அவுஸ்திரேலியா, ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து பல்கேரியா, கிழக்கு ஜேர்மனி, மேற்கு ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்த, போலந்து, ஸ்கொட்லான்ட், சுவீடன், யூகோஸ்லாவியா, வட மத்திய அமெரிக்காவிலிருந்து ஹெயிட்டி, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், சிலி, உரு
குவே ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
16 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழவிலும் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் கூடிய புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த தலா இரண்டு நாடுகள் காலிறுதியில் விளையாடின.
முதல் சுற்றில் குழு 2 இல் விளையாடிய யூகஸ்லாவியா, ஸாருக்கு எதிரான போட்டியில் 90 என்ற கோல் கணக்கி“ல வெற்றி பெற்று ஒரு போட்டியில் அதிக கோல் அடித்த நாடு என்ற பெருமையைப் பெற்றது. குழு 4 இல் விளையாடிய ஹெயிட்டிக்கு எதிராக 70 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போலந்து அதிக கோல் அடித்த இரண்டாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.
முதல் சுற்றில் அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற நெதர்லாந்த, பிரேஸில், கிழக்கு ஜேர்மனி, ஆர்ஜென்ரீனா ஆகியன குழு ஏயிலும் கிழக்கு ஜேர்மனி, போலந்து, சுவீடன், யூகஸ்லாவியா ஆகியன குழு பீயிலும் போட்டியிட்டன. நெதர்லாந்து, பிரேஸில் கிழக்கு ஜேர்மனி, போலந்து ஆகியன அரையிறுதிக்குத் தெரிவாகின.
போலந்துக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போலந்து மூன்றாவது இடத்தையும் பிரேஸில் நான்காவது இடத்தையும் பிடித்தன. ஜேர்மனுக்கும் நெதர்லாந்துக்கும் இடையே நடைபெற்ற இறதிப் போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஜேர்மன் சம்பியனானது.
போலந்து 16 கோல்களும் நெதர்லாந்து 15 கோல்களும் கிழக்கு ஜேர்மனி 13 கோல்களும் யூகஸ்லாவியா 12 கோல்களும் அடித்தன. ஏழு கோல்கள் அடித்த லகோ (போலந்து) தலா ஐந்து கோல்கள் அடித்த நீஸ்கென்ஸ், (நெதர்லாந்து) லம்சார்மச் (போலந்து) ஆகியோரின் பெயர்கள் கோல்டன் ஷூக்கு பரிந்துரை செய்யப்பட்டன.
ஏழு கோல்கள் அடித்த போலந்து வீரர் லதோ சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டு கோல்டன் ஷý வழங்கப்பட்டது. சிறந்த இளம் வீரராக ஷýமுடோ (போலந்து) தேர்வு செய்யப்பட்டார். 38 போட்டிகளில் 97 கோல்கள் அடிக்கப்பட்டன. 1768152 பேர் போட்டிகளை மைதானங்களில் கண்டு ரசித்தனர்.
முதல் சுற்றில் விளையாடி அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற எட்டு நாடுகளும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழுவில் தலா நான்கு நாடுகள் விளையாடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
சிலியில் இராணுவம் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றியதால் சிலியில் தகுதி காண் போட்டியில் விளையாடுவதற்கு சோவியத் ரஷ்யா மறுத்தது. எதிரணி இல்லாமையினால் வீரர்கள் இல்லாத நிலையில் சிலி வெறும் நெற்றுக்கு கோல் அடித்து வெற்றி பெற்றது. திரினிடாட்டுக்கு எதிராக ஹெய்ட்டியில் நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் ஹெயிட்டிக்கு எதிராக அடிக்கப்பட்ட நான்கு கோல்களை தவறான கோல்கள் என அறிவித்த நடுவர் இடை நிறுத்தப்பட்டார்.
ஹெயிட்டி வீரரான ஏனஸ் ஜோன் ஜோசப் ஊக்கமருந்து பாவித்ததாக இனங்காணப்பட்டார். உதைபந்தாட்டப் போட்டியின் முதன் முதலில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியவர் இவர். இவரை சக வீரர்களும் அதிகாரிகளும் ஹோட்டலில் தாக்கினார்கள். சிலி நாட்டைச்சேர்ந்த கார்லோஸ் கஸ்லே முதன் முதலில் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட வீரராவார்

ரமணி

மெட்ரோநியூஸ்

உலகக்கிண்ணம்2010


மெக்சிக்கோ1970
மெக்ஸிக்கோவில் 1970ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இத்தாலியை வீழ்த்தி பிரேஸில் சம்பியனானது. ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முதன் முதலாக வட அமெரிக்க நாட்டில் நடைபெற்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 75 நாடுகள் போட்டியிட்டன. 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து மொராக்கோ தகுதி பெற்றது. ஆர்ஜென்ரீனா, பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெறவில்லை.
ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து மொராக்கோ, ஐரோப்பாவிலிருந்து பெல்ஜியம், பல்கேரியா, செக்கஸ்லோவாகியா, இங்கிலாந்து, ஜேர்மன், இஸ்ரேல், இத்தாலி, ரொமானியா, சோவியத் யூனியன், சுவீடன், வட மத்திய அமெரிக்காவிலிருந்து எல்சல்வடோர் மெக்ஸிக்கோ தென் அமெரிக்காவிலிருந்து பிரேஸில், பெரு, உருகுவே ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
16 நாடுகளும் நான்கு குழக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. ஒவ்வொரு குழுவிலும் அதிக புள்ளிகளைப் பெற தலா இரண்டு நாடுகள் காலிறுதிக்குத் தெரிவாகின.
பிரேஸில் பெரு மேற்கு ஜேர்மன், இங்கிலாந்து இத்தாலி, மெக்ஸிக்கோ உருகுவே, சோவியத் ரஷ்யா ஆகியன காலிறுதியில் விளையாடின. காலிறுதியில் வெற்றி பெற்ற பிரேஸில் இத்தாலி, உருகுவே, மேற்கு ஜேர்மனி ஆகியன அரையிறுதியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. உருகுவேக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிரேஸில் ஜேர்மனுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இத்தாலி ஆகியன இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த மேற்கு ஜேர்மன், உருகுவே ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மன் மூன்றாவது இடத்தையும் உருகுவே நான்காவது இடத்தையும் பிடித்தன.
இங்கிலாந்தில் நடைபெற்ற எட்டாவது உலகக் கிண்ணஉதைபந்தாட்ட போட்டியில் இறுதிவரை முன்னேறி தோல்வி அடைந்த மேற்கு ஜேர்மனி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 1958, 1962ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியனான பிரேஸில் சம்பியனான கனவுடன் இறுதிப் போட்டியில் இத்தாலியை எதிர்த்த விளையாடியது பரபரப்பான இறுதிப் போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி சம்பியனானது பிரேஸில். இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இத்தாலி இரண்டாமிடத்தைப் பிடித்தது.
பிரேஸில் 19 கோள்களும் மேற்கு ஜேர்மனி 17 கோல்களும் இத்தாலி 10 கோல்களும் அடித்தன. மேற்கு ஜேர்மனியை சேர்ந்த கிரேட் முல்லர் 10 கோல்கள் அடித்தார். ஜய்சின்ஹோ (பிரேஸில்) ஏழு கோல்கள் அடித்தார்.
உருகுவேக்கு எதிராக ஆறு தடவை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஜேர்மனி வீரர் கிரேட் முல்லருக்கு கேடன் ஷý வழங்கப்பட்டது. கிரேட் முல்லர் (மேற்கு ஜேர்மனி) ஜய்சின்ஹோ (பிரேஸில்) கியுபிலஸ் பெரு அணி வீரர்கள் கோல்டன் ஷýவுக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.
பெருநாட்டு வீரர் கியுபிலஸ் சிறந்த இளம் வீரராகத் தெரிவானார். 1958ஆம் ஆண்டு சிறந்த இளம் வீரருக்கான விருது வழங்கப்பட்டது. 1958ஆம் ஆண்டு பீலே ( பிரேஸில், முதன் முதலில் சிறந்த இளம் வீரர் விருதைப் பெற்றார். 1962ஆம் ஆண்டு அல்பேட் (ஹங்கேரி, 1966 ஆம் õண்டு பெக்கன் பலூர் ( மே. ஜேர்மனி) ஆகியோர் இளம் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் முதன் முதலாக கலரில் ஒளிபரப்பப்பட்டன. ஒரு வீரர் காயமடைந்தால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு வீரர் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு அணியிலிருந்து இரண்டு மாற்று வீரர்கள் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு அணியும் சம புள்ளி பெற்றால் கோல்களின் அடிப்படையில் சராசரி புள்ளி கணக்கிட்டு அணிகள் தரப்படுத்தப்பட்ன.
பிரேஸில் வீரர் பீலே கடைசியாக விளையாடிய உலகக் கிண்ணப போட்டி இங்கிலாந்து அணித் தலைவர் பொபி மோரே திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்து, பிரேஸில் ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டியின் முதல் நாள் இரவு இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் முன்னால் ஆடிப் பாடிய பிரேஸில் ரசிகர்கள் இங்கிலாந்து வீரர்களின் தூக்கத்தைக் குழப்பினர். 32 போட்டிகளில் 95 கோல்கள் அடிக்கப்பட்டன. 1603975 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர். சிவப்பு அட்டையும் மஞ்சள் அட்டையும் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

ரமணி

மெட்ரோநியூஸ்

Wednesday, May 19, 2010

உலகக்கிண்ணம்2010


இங்கிலாந்து1966
இங்கிலாந்தில் 1966ஆம் ஆண்டு நடைபெற்ற ஏழாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் மேற்கு ஜேர்மனியை தோற்கடித்து இங்கிலாந்து சம்பியனானது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்கு 30 நாடுகள் போட்டியிட்டன. புள்ளிகளின் அடிப்படையில் 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
ஆசியாவில் இருந்து தென் கொரியா தகுதி பெற்றது. ஐரோப்பாவிலிருந்து பல்கேரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி, போர்த்துக்கல், சோவியத் யூனியன், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, வட மத்திய அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோ, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேசில், சிலி, உருகுவே ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
16 நாடுகளும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் போட்டியிட்டன. சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் 50 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மேற்கு ஜேர்மன் முதல் சுற்றில் அதிக கோல் அடித்த நாடாகத் திகழ்ந்தது. இங்கிலாந்து ஆர்ஜென்ரீனா, உருகுவே, மெக்ஸிக்கோ மேற்கு ஜேர்மன், ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டிகள் கோல் எதுவும் அடிக்கப்படாது சமநிலையில் முடிந்தன. தென் கொரியா, சிலி ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
முதல் சுற்றில் விளையாடிய நான்கு குழுக்களில் இருந்தும் அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற்ற தலா இரண்டு நாடுகள் காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. இங்கிலாந்து, ஆர்ஜென்ரீனா மேற்கு ஜேர்மன், உருகுவே சோவியத் யூனியன், ஹங்கேரிபோர்த்துக்கல், தென் கொரியா ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஜேர்மனி, இங்கிலாந்து, சோவியத் யூனியன், போர்த்துக்கல் ஆகியன அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் 53 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துக்கல் காலிறுதியில் அதிக கோல் அடித்த நாடு என்ற பெருமை பெற்றது. ஆட்ட நேர முதல் பாதியில் 3 2 என்ற கோல் கணக்கில் தென் கொரியா முன்னிலையில் இருந்தது. இடைவேளையின் பின்னர் மூன்று கோல்கள் அடித்த போர்த்துக்கல் வெற்றி பெற்றது.
மேற்கு ஜேர்மன், சோவியத் யூனியன் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மேற்கு ஜேர்மன் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. போர்த்துக்கலுக்கு எதிரான அரையிறுதியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
அரையிறுதியில் தோல்வி அடைந்த போர்த்துக்கல், சோவியத் யூனியன் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துக்கல் மூன்றாம் இடத்தையும் சோவியத் யூனியன் நான்காம் இடத்தையும் பிடித்தன.
இங்கிலாந்து, மேற்கு ஜேர்மன் ஆகியவற்றுக்கிடையேயான இறுதிப் போட்டியில் 4 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இங்கிலாந்து சம்பியனானது.
போர்த்துக்கல் 17 கோல்களும் ஜேர்மன் 15 கோல்களும் இங்கிலாந்து 11 கோல்களும் சோவியத் யூனியன் 10 கோல்களும் அடித்தன. ஆர்ஜென்ரீனா, உருகுவே ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு எதிராக தலா இரண்டு தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது. சோவியத் யூனியன் வீரருக்கு எதிராக ஒரு தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இயுசெபியோ (போர்த்துக்கல்) ஒன்பது கோல்களும், ஹெல்மட்ஹல்லர் (மேற்கு ஜேர்மன்) ஆறு கோல்களும், போர்குயன் (சோவியத் யூனியன்) ஹர்ட்ஸ் (இங்கிலாந்து), பெனி (ஹங்கேரி) ஆகியோர் தலா நான்கு கோல்களும் அடித்தனர். சில்வா (ஹங்கேரி), ரட்டின் (பல்கேரியா), ரொச்சி (ஹங்கேரி), அல்பொசி (ஆர்ஜென்ரீனா) ஆகியோருக்கு எதிராக சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
இயுசெபியோ (போர்த்துக்கல்), ஹெல்மட்ஹலர் (மே. ஜேர்மனி), பெக்கன் பகுர் (மே. ஜேர்மன்), பெனி (ஹங்கேரி), ஹரிட்ஸ் (இங்கிலாந்து), போர்குஜன் (சோவியத் யூனியன்) ஆகியோரின் பெயர்கள் கோல்டன் ஷýவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஒன்பது கோல்கள் அடித்த இயுசெபியோ சிறந்த வீரராகத் தெரிவ செய்யப்பட்டு கோல்டன் ஷý வழங்கப்பட்டது.32 போட்டிகளில் 89 கோல்கள் அடிக்கப்பட்டன. 16,35,000 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர்

ரமணி

மெட்ரோநியூஸ்

உலகக்கிண்ணம்2010


சிலி1962
சிலியில் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் செக்கோஸ்லோவாக்கியாவை வீழ்த்திய பிரேஸில் உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
1960ஆம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மரணமானார்கள். உலகக் கிண்ண உதைபந்தாட்டம் நடைபெறும் மைதானம் பாதிக்கப்பட்டது. சிலி நாட்டு ஜனாதிபதியின் முயற்சியினால் விரைவாக புதிய மைதானம் கட்டப்பட்டது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 56 நாடுகள் போட்டியிட்டன. 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. கடந்த உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய சுவீடன் தகுதி பெறவில்லை. கொலம்பியா உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
ஐரோப்பாவிலிருந்து பல்கேரியா, செக்கோஸ்லோவாக்கியா, இங்கிலாந்து, மேற்கு ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி, சோவியத் ரஷ்யா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, யூகோஸ்லாவியா வட மத்திய அமெரிக்காவிலிருந்து மெக்ஸிக்கோ, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், சிலி, கொலம்பியா, உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. 16 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. நான்கு குழுக்களிலும் இருந்து அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற தலா இரண்டு நாடுகள் காலிறுதிக்குத் தெரிவாகின. 21 வயதான பீலே மெக்ஸிக்கோவுக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்கள் அடித்து பிரேஸிலின் வெற்றிக் கணக்கை தொடக்கி வைத்தõர்.
முதல் சுற்றில் பல்கேரியாவுக்கு எதிரான போட்டியில் 61 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஹங்கேரி, ஒரு போட்டியில் அதிக கோல் அடித்த நாடு என்ற பெருமை பெற்றது. கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் 50 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற யூகோஸ்லாவியா அதிக கோல் அடித்த இரண்டாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.
சோவியத் யூனியன், கொலம்பியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டி 44 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. மேற்கு ஜேர்மன் இத்தாலி, பிரேஸில் செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி ஆர்ஜென்ரீனா, இங்கிலாந்துபல்கேரியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டிகள் கோல் எதுவும் அடிக்காமையினால் சமநிலையில் முடிவடைந்தன.
முதல் சுற்றில் அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற பிரேசில், இங்கிலாந்து சிலி, சோவியத் யூனியன் யூகோஸ்லாவியா, ஜேர்மன் செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி ஆகியன காலிறுதியில் விளையாடின. காலிறுதியில் வெற்றி பெற்ற செக்கோஸ்லோவாக்கியா, யூகோஸ்லாவியா, பிரேஸில், சிலி ஆகியன வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
செக்கோஸ்லோவாக்கியாவுடனான போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற யூகோஸ்லாவியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. சிலியுடனான போட்டியில் 4 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் இறுதிப் போட்டிக்கு விளையாடத் தகுதி பெற்றது.
அரையிறுதியில் தோல்வியடைந்த சிலி, யூகோஸ்லாவியா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சிலி மூன்றாவது இடத்தையும் யூகோஸ்லாவியா நான்காவது இடத்தையும் பிடித்தன.
பிரேஸில், செக்கோஸ்லோவாக்கியா ஆகியவற்றுக்கிடையேயான பரபரப்பான போட்டியில் 3 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் உலகக் கிண்ண சம்பியன் பட்டத்தைத் தக்க வைத்தது.
பிரேஸில் 14 கோல்களும் யூகோஸ்லாவியா, சிலி ஆகியன தலா 10 கோல்களும் சோவியத்யூனியன் ஒன்பது கோல்களும் ஹங்கேரி எட்டு கோல்களும் அடித்தன.
வாவா (பிரேஸில்), லியோனல் சன் செஸ் (சிலி), ஜாகோவிச் (யூகோஸ்லாவியா), அல்பேட் (ஹங்கேரி), இவானோவ் (சோவியத் யூனியன்) ஆகியோரின் பெயர் கோல்டன் ஷýவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தலா நான்கு கோல்கள் அடித்தனர். ஹங்கேரியைச் சேர்ந்த அல்பேட் சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டு கோல்டன் ஷý வழங்கப்பட்டது.
பெரினி (இத்தாலி), டேவிட் (இத்தாலி), கப்ரெரா (உருகுவே), லண்டா (சிலி), சரிஞ்சா (பிரேசில்) ஆகியோருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.32 போட்டிகளில் 89 கோல்கள் அடிக்கப்பட்டன. 89,074 பேர் போட்டிகளை மைதானங்களில் பார்வையிட்டனர்

ரமணி

மெட்ரோநியூஸ்