Showing posts with label நீரஜ். Show all posts
Showing posts with label நீரஜ். Show all posts

Thursday, November 16, 2023

உலக தடகள வீரர் விருது இறுதிப் பட்டியல்

2023 ஆம் ஆண்டுக்கான ஆண்களுக்கான உலக தடகள வீரர் விருதுக்கு பட்டியலிடப்பட்ட ஐந்து தடகள வீரர்களில் நீரஜ் சோப்ராவும் ஒருவர் என உலக தடகளம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

நீரஜ் சோப்ரா, இந்தியா ஈட்டி எறிதல்,உலக சாம்பியன் ,ஆசிய விளையாட்டு சாம்பியன்

ரியான் க்ரூசர், அமெரிக்கா, குண்டு எறிதல்,உலக சாம்பியன்,உலக சாதனை

மொண்டோ டுப்லாண்டிஸ் - சுவீடன் - போல் வால்ட்,உலக சாம்பியன், உலக சாதனையுடன் டயமண்ட் லீக் சாம்பியன்.

கெல்வின் கிப்டம், கென்யா, மரதன், லண்டன் மற்றும் சிகாகோ மரதன் வெற்றியாளர்

மரதன் உலக சாதனையை முறியடித்தவர்,நோவா லைல்ஸ், அமெரிக்கா, 100மீ/200மீ,உலக 100 மீ , 200 மீ சாம்பியன், 200 மீ ஓட்டத்தில் ஆறு இறுதிப் போட்டிகளில்   தோற்கடிக்கப்படாதவர்.

 

Sunday, September 3, 2023

நீரஜ் சோப்ராவின் பரிசுத்தொகை 70 ஆயிரம் அமெரிக்க டொலர்

உலகச் சம்பியன்ஷிப் தடகள போட்டிகள் ஹங்கேரி தலைநகர் புடபெஸ்ட்டில் நடைபெற்றன.  ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியா சார்பில் ஒலிம்பிக் தங்க மகன் நீரஜ் ஜோப்ரா மற்றும் டி.பி.மானு, கிஷோர் சேனா ஆகியோர் களம் கண்டனர்.   நீரஜ், தனது இரண்டாவது முயற்சிலேயே 88 புள்ளி 17 மீற்ற‌ர் தூரம் ஈட்டி எறிந்தார். 

இறுதிப் போட்டியில் ஒவ்வொரு வீரரும் தங்களது அனைத்து முயற்சிகளிலும், நீரஜின் இலக்கை எட்டிப் பிடிக்க முயன்றும் அது பலனளிக்கவில்லை. இதனால், முதலிடம் பிடித்த நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். ஈட்டியை வீசிய நொடியே தன்னுடைய வெற்றியை நீரஜ் கொண்டாடினார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் வெள்ளியும், செக்குடியரசு வீரர் ஜேகப் வட்லெஜ் வெண்கலப் பதக்கத்தையும் வசப்படுத்தினர்.

இந்த போட்டியில் நீரஜ் சோப்ராவிற்கு பரிசாக 70 ஆயிரம் அமெரிக்க டொலர் அளிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 58 லட்சமாகும். வெள்ளி வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீமுக்கு இந்திய மதிப்பில் ரூ. 29 லட்சம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.