Monday, June 28, 2021

செக். குடியரசு, பெல்ஜியம் வெற்றி போத்துகல் குரோஷியா தோல்வி

யூரோ2020  கிண்ண போட்டியில் செக். குடியரசும், பெல்ஜியமும் காலிறுதியில்  விளையாட தகுதி  பெற்றன. ரொனால்டோவின்  போத்துகலும், குரோஷியாவும்  தோல்வியடைந்து  வெளியேறின.

புடாபெஸ்ட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை2020 கிண்ணதொடரின் இறுதி -16 அணிகளுக்கு இடையேயான  சுற்றில்   சற்றும் எதிர்பாராத செக்.குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்து காலிறுதிக்குள் நுழைந்தது.

செக்.குடியரசின் 2 கோல்களுமே இடைவேளைக்குப் பிறகுதான் அடிக்கப்பட்டன. 68வது நிமிடத்தில் டொமாஸ் ஹோல்ஸ் தலையால் முட்டி முதல் கோலை அடிக்க, 80வது நிமிடத்தில் பாட்ரிக் ஷிக் 2வது கோலை அடித்தார்.

ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் நெதர்லாந்து தடுப்பு மாவீரர் என்று கருதப்படும் மத்தைஸ் டெலித் பந்தை வேண்டுமென்றே கையால் பிடித்ததால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது நெதர்லாந்தின் வீழ்ச்சிக்குக் காரணமானது.

2014 உலகக் கிண்ணப் போட்டியில்  பங்கேற்ற பிறகு பெரிய உதைபந்தாட்டத்  தொடருக்குத் தகுதி பெற்ற நெதர்லாந்து நாக் அவுட் சுற்றில் பரிதாபமாக வெளியேறியது.ஆட்டத்தில் முதல் வாய்ப்பு செக். குடியரசுக்குத்தான் கிடைத்தது, 23வது நிமிடத்தில் அதன் டொமாஸ் சூசெக் டைவ் அடித்து தலையால் முட்டிய பந்து வெளியே சென்றது. 34வது நிமிடத்தில் இதைவிடவும் நல்ல கோல் வாய்ப்பு மீண்டும் செக். அணிக்குக் கிடைத்தது. ஆனால் மத்தைஸ் டெலித் திகைப்பூட்டும் விதத்தில் தடுத்தார். லூகாஸ் மசோபஸ்ட் அருகிலிருந்து அடித்த கோல் ஷாட்டை டெலித் அபாரமாகத் தடுத்தார்.

இடைவேளைக்கு முன்னதாக நெதர்லாந்து ஏறக்குறைய கோல் அடித்திருக்கும், மெம்பிஸ் டீப்பே அடித்த ஷாட் பாட்ரிக் வான் ஆன் ஹோல்ட்டிடம் வர அவர் இலக்கை தவற விட்டார்.

இடைவேளைக்கு பிறகு மீண்டும் நெதர்லாந்துக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, இம்முறை டோன்யெல் மலேனின் முயற்சியை செக். கோல் கீப்பர் வாக்லிக் முறியடித்தார். அதன் பிறகுதான் செக். குடியரசின் கோல் முயற்சியைத் தடுக்கும் நோக்கத்துடன் மத்தைஸ் டெலித் பந்தை கையால் பிடிக்க சிவப்பு அட்டை  காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். 2004க்குப் பிறகு நெதர்லாந்து வீரர் ஒருவர் சிவப்பு அட்டை  காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஸ்பெயின், செவில்லில் நடைபெற்ற யூரோ2020  இறுதி-16 அணிகள் நாக் அவுட் சுற்றுப் போட்டியில்  ஐரோப்பிய சாம்பியனான போத்துகலை, பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.போர்ச்சுகல் கடும் ஏமாற்றமடைந்தது, காரணம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடும் கடைசி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இது என்று கூறப்படுகிறது, மேலும் ரொனால்டோ 110 கோல்கள் அடித்து அதிக கோல்களுக்கான உலக சாதனையையும் நிகழ்த்த முடியாமல் போனது.

42வது நிமிடத்தில்  தோர்கன் ஹசார்டு அடித்த கோல்தான் பெல்ஜியத்தின் வெற்றி கோலாக அமைந்தது.முக்கியமான வீரர்களானகெவின் டி புருய்ன், ஈடன் ஹசார்டு ஆகியோர் காயமடைந்து வெளியேறினர்.

ஈடன் ஹசார்டு, கெவின் டி புருய்ன், ரொமிலு லுகாக்கு தான் பெல்ஜியத்தின் மும்மூர்த்திகள். ஆனால் இந்தப் போட்டியில் ஜென் வெர்ட்டோன்கன், ஆல்டர்வெய்ரல்ட், தாமஸ் வெர்மீலன் ஆகியோர் முன்னிலை பெற்றனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ படையை இவர்கள் கோல் அடிக்க முடியாமல் ஆட்கொண்டனர்.

விளையாட்டாக சில விளையாட்டு செய்திகள்

 

யூரோ2020  முதல்  சுற்றில் நடந்த  36   போட்டிகளில் 94  கோல்கள் அடிக்கப்பட்டன.

 அதிக  கோல்  அடித்த  நாடுகள்

நெதர்லாந்து 8,  இத்தாலி, பெலிஜியம், போத்த்கல்  7,  ஜேர்மனி,  ஸ்பெய்ன்  6, டென்மாக் 5 

 ரொனால்டோ சாதனை 

பிரான்ஸுக்கு  எதிரான போட்டியில் இரன்டு  கோல்கள் அடித்த  ரொனால்டோ  , ஈரானின் அலி டேயின் 109 சர்வதேச ஆட்ட கோல்கள் என்ற உலக சாதனையை சமன் செய்தார்.

ரொனால்டோ  3 போட்டிகளில் 270  நிமிடங்கள்  விளையாடி அதிக  பட்சமாக  5 கோல்கள் அடித்தார். ஒருகோல்  அடிக்க  உதவி  புரிந்தார்.  

ரொனால்டொ   கோல்கம்பத்தை நோக்கி  11 முறை பந்தை  அடித்தார்.6 பந்துகள்  கோல் கம்பத்தினுள் சென்றன.வலது காலால்  3 கோல்கலும் இடது  காலால் 2 கோல்களும்  அடித்தார்.  

 தோல்விக்கு  பொறுப்பேற்ற  பயிற்சியாள‌ர்

யூரோ2020  தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான  போட்டியில்  3-0 என்று தோல்வியடைந்ததால் வடக்கு  மசடோனியா  அணியின்  பயிற்சியாலர்  ஆஞ்சேலோவ்ஸ்கி பதவியை ராஜினாமா செய்தார். அதன் மூத்த வீரர் கோரான் பாண்டேவ் இந்தப் போட்டியுடன் ஓய்வு பெறவிருப்பதால் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. 

  யூரோ  வரலாற்றில்  முதன்  முறையாக 

 ஜெர்மனிக்கு  எதிரான  போட்டியில்   4 நிமிட அவகாசத்தில் போத்துகல்  2 சேம்சைட்  கோல்கள்  அடித்தது. யூரோ  கிண்ண   வரலாற்றில் இரண்டு  சேம்சைட்  கோல்கள்  அடிக்கப்பட்டது  இதுவே முதன்  முறை. அதிக கோல் அடித்து  சாதனை  செய்த  ரொனால்டோ ஜேர்மனிக்கு  எதிராக  தனது  முதலாவது  கோலைப்  பதிவு  செய்தார். 

| ஸ்லோவாக்கியாவின் 2 சேம்சைடு கோல்கள் 

ஸ்பெயினுக்கு எதிரான  போட்டியில் ஸ்லோவாக்கியா  இரண்டு  கோல்கள்  அடித்ததால்     5-0   எனும் கோல் கணக்கில்தோல்வியடைந்தது. 

சிக்ஸர்  தந்த  சோகம் 

இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆஷிப்  அலி  எனும்  வீரர்  ஓங்கி  அடித்த  பந்து  சிக்ஸருக்குப்  போனதால்  தலையில்  கையை  வைத்த்தபடி மைதானத்தில்  இருந்துவிட்டார்.ஆஷிப்  அலி அடித்த  பந்து  அவரின்  கார்க் கண்ணாடியைப்  பதம்  பார்த்தது. 

நெய்மர்  இல்லாத  ஒலிம்பிக்  அணி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான பிறேசில்   அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான பிறேசில் அணியின் க‌ப்டனாக பின்கள வீரர் 38 வயது டேனி ஆல்வ்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.முழங்கால் காயத்தால் கோபா அமெரிக்கா போட்டியில் விளையாடாத அவருக்கு க‌ப்டன் பொறுப்பு கிடைத்துள்ளது. இதேபோல் 31 வயதான கோல்கீப்பர் சான்டோஸ், 28 வயது பின்கள வீரர் டியாகோ கார்லோஸ் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். நட்சத்திர வீரரான 29 வயதான நெய்மாருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 

ஒலிம்பிக் போட்டிக்கான உதைபந்தாட்ட  அனியில் 3 வீரர்களை தவிர எஞ்சிய அனைவரும் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இதனால் நெய்மாருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 

அட்டகாச  ஆர்ஜென்ரீனா 

2019-ல் கோப்பா அமெரிக்கா அரையிறுதியில் தோற்றதற்குப் பிறகு ஆர்ஜென்ரீனா  16 போட்டிகள்   தோல்வி பெறாமல் சாதனை ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

25 போட்டிகளில்  கோப்பா அமெரிக்கா   தொடரில் ஆர்ஜென்ரீனாவை பராகுவா வென்றதேயில்லை

ஆர்ஜென்ரீனாவுக்காகஅணிக்காக 147வது போட்டியில் விளையாடியமெஸ்ஸி, ஜேவியர் மஸ்செரானோவின் சாதனையை சமன் செய்தார்.

 

Monday, June 21, 2021

இத்தாலியிடம் தோல்வியடைந்த வேல்ஸ் அடுத்த சுற்றுக்கு தெரிவானது.


  ரோம் நகரில் ஸ்டேடியோ ஒலிம்பிகோவில் இத்தாலியை  எதிர்த்து  வேல்ஸ்  விளையாடியது.  அடுத்த  சுற்றுக்குத்  தெரிவான  இத்தாலி  நம்பிக்கையுடன்  களம்  இறங்கியது. அடுத்த  சுற்றுக்குத்தெரிவாக  வேண்டும்  எனும்  வெறியுடன்  விளையாடிய   வேல்ஸ்  வீரர்கள் இத்தாலியின்  தாக்குதலை  சமாளித்ததால்  அடுத்த  சுற்றுக்குத் தெரிவானது. வேல்ஸுக்கு எதிரான  போட்டியில் 1 - 0  எனும்  கோல்  கணக்கில்  இத்தாலி  வெற்றி  பெற்றது.

இத்தாலி வீரர் மேட்டியோ பெசினா 39வது நிமிடத்தில் அடித்த ஒரே கோல் வெற்றி கோலானது. தொடர்ந்து 30-வது போட்டியில் இத்தாலி அணி தன் தோல்வியற்ற சாதனையை நீட்டித்துள்ளது. 1935- 39-ல் இதே போன்று இத்தாலி 30 போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்துள்ளது.   இத்தாலி  31  கோல்கள்  அடித்துள்ளது. இத்தாலிக்கு எதிராக எதிரணிகள் எவையும் ஒரு  கோல்கூட அடிக்கவில்லை.

குழு ஏயில்  உள்ள  துருக்கி, சுவிட்ஸர்லாந்து  ஆகியவற்றுக்கிடையேயான  போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி  பெற்ற  சுவிட்ஸர்லாந்து அடுத்த  சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகளை தக்கவைத்துள்ளது.

சுவிட்ஸர்லாந்து, வேல்ஸ்  ஆகிய  இரண்டு  அணிகளும்  4 புள்ளிகளைப்  பெற்றன. சுவிட்சர்லாந்து அணியை விட கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற வேல்ஸ் அணி நேரடியாக  அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. சுவிட்ஸ‌ர்லாந்து அணி சிறந்த 3வது அணியாக இறுதி-16 அணிகள் சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது.

 

 

Sunday, June 20, 2021

ஜேர்மனியிடம் சரணடைந்த போத்துகல்

மியூனிச்சில்  நடைபெற்ற  போத்துகலுக்கு  எதிரான  போட்டியில் 4 2 எனும்  கோல  கணக்கில்  ஜேர்மனி  வெற்றிபெற்றதுபிரான்ஸுக்கு  எதிரான  போட்டியில்  சேம்சைட்  கோல் மூலம்  தோல்வியடைந்த  ஜேர்மனிபோத்துகலுக்கு  எதிரான  போட்டியில்  நான்கு  நிமிடங்களில் இரண்டு  சேம்சைட்  கோல்கள் மூலம்  வெற்றி  பெற்றது. ஐரோப்பிய  உதைபந்தாட்ட  ரலாற்றில்  ஒரு  அணி  இரண்டு  சேம்சைட்  கோல்கள் அடித்தது  இதுவே  முதல்முறை.

ஜேர்மனியின்  வியூகங்களால் போத்துக  வீரர்கள்  தடுமாறினார்கள். பிரான்ஸுக்கு  எதிரான  போட்டியில் ஏமாற்றி  ஜேர்மனி  வீரர்கள்  போத்துகலுடனான  போட்டியில்  ஆச்சரியப்பட  வைத்தார்கள்.

ஜெர்மனி வீரர் ராபின் கோசன்ஸை போர்ச்சுகல்லால் கட்டுப்படுத்தமுடியவில்லை, கடும் அச்சுறுத்தலையும் நெருக்கடியையும் போர்ச்சுகல் கோல் அருகே அவர் ஏற்படுத்தினார். முதல் கோலை 5வது நிமிடத்தில் கோசன்ஸ் அடித்தார் ஆனால் ஜேர்மனி வீரர் செர்ஜி நார்பி ஆஃப் சைடு என்பது வீடியோ ரிவியூவில் தெரியவர கோல் ரத்து செய்யப்பட்டது.

ஜேர்மனியின் டோனி குருஸ் கோனர்  அடித்தபோது சற்றும் எதிர்பாரா விதமாக  ரொனால்டோ தொடுத்த எதிர்த்தாக்குதலில் ஜேர்மனி ஆடிப்போனது. பெர்னார்டோ சில்வா, தியாகோ ஜோட்டா ஆகியோர் பந்தை பிரமாதமாக எடுத்துச் சென்று ஜேர்மனி கோல் பகுதிக்குள் விறுவிறுவென நுழைந்தனர்.    தியாகோ சில்வா, மிகப்பிரமாதமாக பந்தைத்   தூக்கி மற்றொரு போர்ச்சுக்கல் வீரரான ஜோட்டாவுக்குக் கொத்தார்.

  சில்வா கொடுத்த பந்தை நெஞ்சில் வாங்கி கட்டுப்படுத்திய ஜோட்டா கோல் அடிப்பது போல் ஏமாற்றி கோல் கீப்பரை திசைத் திருப்பி பந்தை பக்கவாட்டில் ரொனால்டோவுக்கு அளித்தார். அதை ரொனால்டோ மிகப்பிரமாதமாக கோலாக மாற்றினார் போத்துகல் 1-0 என்று முன்னிலை பெற்றது.ஜேர்மனிக்கு எதிராக ரொனால்டோ அடித்த  முதல்  கோல்  இதுவாகும்.

11வது நிமிடத்தில்   ராபின் கோசன்ஸ் இடது பக்கத்தில் இஷ்டத்துக்கு தடுப்பற்று பந்தை எடுத்து வந்து பெனால்டி பகுதிக்குள் ஊடுருவினார், பிறகு டொனி க்ரூஸுக்கு பந்தை கொடுத்தார், அவர்  அடித்தபோது ரூபன் டயஸ் தடுத்தார்

அதன் பிறகு முழுக்க முழுக்க ஜேர்மனிதான் ஆதிக்கம் செலுத்தியதுவலது புறம் ஜேர்மனி வீரர் ஜொஷுவா கிம்மிக் பந்தை கோலை நோக்கி அடிக்க அதை பேட்ரீசியோ தடுத்தார்.இந்த ஆட்டத்தைத் தீர்மானித்த அந்த 4 நிமிடங்கள் ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் வந்தது. மீண்டும் ஜேர்மனி வீரர் ராபின் கோசன்ஸுக்கு இடது ஓரம் ஏகப்பட்ட இடம் கிடைத்தது. இவருக்கு ஒரு அருமையான நீள பாஸ் வந்ததையடுத்து படுவேகம் காட்டி பந்தை எடுத்து சென்றார். கோல் அருகே கொண்டு சென்று ஒரு பலமான உதை உதைத்தார். அங்கு ஜேர்மனி வீரர் ஹாவெட்ஸ்தான் அதை கோலாக்கியிருக்க வேண்டும், ஆனால் போர்ச்சுகல் வீரர் ரூபன் டயஸும் அருகில் இருந்தார். இவர் காலை நீட்ட பந்து பட்டு கோலுக்குள் படுவேகமாக சென்றது, சேம்சைடு கோல் ஆனது ஜெர்மனி போர்ச்சுகல் 1-1. டயஸ் பந்தை அப்படியே விட்டிருக்கலாம், ஏனெனில் ஹாவெட்ஸ் காலில் பந்து படவில்லை. ஆனால் அணியின் கோலை தடுக்கும் முயற்சியில் இவரே சேம்சைடு கோலாக்கியது முதல் அதிர்ச்சி. 4 நிமிடங்கள் சென்று இந்த முறை வலது ஓரத்தில் ஜேர்மனி வேகம் காட்டி பந்தை எடுத்து போர்ச்சுகல் கோலை நோக்கிச் சென்றது. 39வது நிமிடத்தில் பெனால்டி பகுதியின் இன்னொரு புறத்திலிருந்து வந்த பந்தை ஜேர்மனியின் தாமஸ் முல்லர் அடித்தார். இதை ஹாவெட்ஸ் அடிக்க அதனை மற்றொரு ஜேர்மனி வீரர் ஜொஷுவா கிம்மிக் கோலை நோக்கி அடிக்க இம்முறை குறுக்கே காலை நீட்டியவர் போத்துகல் வீரர் குயெரியோ, இன்னொரு சேம்சைடு கோல்,. ஜேர்மனி 2-1 என்று முன்னிலை பெற்றது.இடைவேளைக்குப் பிறகு 6 நிமிடங்களில் அதாவது 51வது நிமிடத்தில்  ஜேர்மனி இன்னொரு கோல் அடித்து ஜெர்மனி 3-1. என  முன்னிலை  பெற்றது

59வது நிமிடத்தில் மீண்டும் ஜேர்மனி கோல் அடித்தது. இந்த முறை ஜேர்மனி வீரர் ஜொஷுவா கிம்மிக் வலது புறத்திலிருந்து மிகப்பிரமாதமாக தூக்கி அடித்து ஒரு கிராஸை ராபின் கோசன்ஸுக்கு செய்ய அங்கு கோல் அருகே எம்பிய கோசன்ஸ் தலையால் முட்டி கோலாக மாற்றினார் 4-1 என்று ஜேர்மனி முன்னிலை. ராபின் கோசன்ஸை போர்ச்சுகல்லினால் ஆட்டம் முழுக்கவுமே ஒன்றும் செய்ய முடியவில்லை. 62வது நிமிடத்தில் அவர் ஆட்டத்திலிருந்து வெளியே அழைக்கப்பட்டார்

ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் போத்துலுக்கு ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது.   பந்து இன்னொரு முனை கோல் போஸ்ட்டைக் கடந்து சென்ற்து, அங்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தைக் கட்டுப்படுத்தி மீண்டும் கோல் வாசலுக்கு அனுப்பினார். கோல் கீப்பர் நியூயரைக் கடந்துதான் ரொனால்டோ இந்தப் பாசைச் செய்தார், அதனால் ஜோட்டா எளிதாக கோலாக மாற்றினார் ஜேர்மனி 4 போர்ச்சுகல் 2.

குரூப் எஃப்-ல் பிரான்ஸ் 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க போர்ச்சுகலை வீழ்த்திய ஜேர்மனி 3 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், போத்துகல் 3 புள்ளிகளுன் 3ம் இடத்திலும்,பிரான்ஸுடனான போட்டியை  சமப்படுத்திய ஹங்கேரி  1 புள்ளியும்   பெற்றுள்ளன.

Saturday, June 19, 2021

தோல்வியடையாத ஆஜென்ரீனா 32 வருடங்களாக தோற்கும் பரகுவே


 பிரெசிலியாவில் நடைபெற்ற குரூப் ஏ ஆட்டத்தில் ஆஜென்ரீனாஅணி உருகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.இந்த வெற்றி மூலம் ஆஜென்ரீனா கடந்த 15 போட்டிகளாக தோல்வியடையாமல் ஆடி வருகிறது. கடைசியாக 2019 கோபா அமெரிக்கா கால்பந்தில் அரையிறுதியில் தோல்வியடைந்தது.

உருகுவே அணி கோபா அமெரிக்கா போட்டியில்  1989-க்குப் பிறகு   ஆர்ஜென்ரீனா வீழ்த்தியதில்லை, இப்போதும் வீழ்த்த முடியவில்லை. 

  ஆர்ஜென்ரீனாவுக்கு எட்டு கோர்னர் கிக் வாய்ப்புகள் கிடைக்க உருகுவே அணிக்கு 3 முறை கோர்னர் வாய்ப்பு கிடைத்தது. உருகுவே 5 முறை கோல்களை தடுத்தது, ஆனால் ஆர்ஜென்ரீனா அப்படி சேவ் செய்ய வேண்டிய அவசியமே ஏற்படவில்லை காரணம் கோல் அடித்து விடுவோம் என்ற அச்சுறுத்தலை உருகுவே அர்ஜென்ரீனாவுக்கு அளிக்கவே இல்லை.

ஆர்ஜென்ரீனாஅணி 9 முறை கோலை நோக்கி   அடித்த‌ 6 ஷாட் இலக்கை நோக்கி அமைந்தன மாறாக உருகுவே 4 ஷாட்களை கோலை நோக்கி அடித்தாலும் எதுவும் இலக்கை நோக்கி அமையவில்லை.

ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடத்திலேயே ஆர்ஜென்ரீனாவின் மார்கஸ் அகுனா உருகுவே கோல் அருகே சென்று இடது காலால் அடித்த ஷாட் தடுக்கப்பட்டது. 6வது நிமிடத்தில் உருகுவே வீரர் மத்தியாஸ் வினா ஃபவுல் செய்ய மெஸ்ஸிக்கு வலது ஓரம் ஒரு ஃப்ரீ கிக் கிடைத்தது. பாக்சுக்கு வெளியேயிருந்து லியோனல் மெஸ்ஸி அடித்த ஃப்ரீ கிக் இடது மூலையில் தடுக்கப்பட்டது. மீண்டும் வந்த பந்தை கொன்சாலேஸ் கோலாக மாற்றத் தவறினார். மிக அருமையான ஷாட் மெஸ்ஸி அடித்தது.

8வது நிமிடத்தில் ஆஜென்ரீனாவின் தாக்குதலை முறியடிக்க உருகுவே வீரர் எடின்சன் கவானி ஃபவுல் செய்தார். இதன் காரணமாக இடது ஓரம் ஆஜென்ரீனா வீரர் அகுனா ஃப்ரீகிக் ஷாட்டை அடித்தார். இவர் அடிக்க உருகுவே கோல் அருகே மத்தியில் நின்றிருந்த கிரிஸ்டியன் ரொமீரோ தலையால் முட்டிய ஷாட் தடுக்கப்பட்டது.

11வது நிமிடத்தில் இன்னொரு உருகுவே வீரர் ரோட்ரீகோ பெண்டங்கர் ஃபவுல் செய்தார். இதனையடுத்து ஆஜென்ரீனா வீரர் குடியோ ரோட்ரிகெஸ் ஃப்ரீ கிக்கை அடிக்கத் தயாரானார். இந்த ஷாட்டை தடுக்கும் உருகுவேயின் முயற்சி அர்ஜெண்டீனாவுக்குச் சாதகமாக கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

இந்த கார்னர் ஷாட்டை நேராக கோலுக்கு அருகில் பாக்ஸுக்குள் அடிக்காமல், கார்னர் வாய்ப்பையே ஷார்ட் பாஸாக ஆட முடிவெடுத்தனர். டீ பால் என்ன செய்தாரென்றால் ஷார்ட் பாசை மெஸ்ஸிக்கு அடிக்க தாதாகிரியான மெஸ்ஸி மிகத் துல்லியமாக அதை தன் இடது காலால் கோல் அருகே தூக்கி அடிக்க அங்கு ரோட்ரிகெஸ் தலையால் முட்டி கோலாக மாற்றினார். மிக சாமர்த்தியமான ஒரு மூவ். நேராக கார்னர் ஷாட்டை தூக்கி அடித்து அது என்ன ஆகும் என்றே சொல்ல முடியாது, ஷார்ட் பாஸ் செய்து அதற்குள் அங்கு ஆஜென்ரீனா வீரர்கள் தயாராவதற்கு நேரம் அளித்து மெஸ்ஸியின் துல்லிய பாஸ் கோலாக மாற்றப்பட்டது.

இந்த வெற்றி மூலம் ஆஜென்ரீனாஅணி இந்தப் பிரிவில் சிலி அணியுடன் இணைந்து டாப்-ல் உள்ளது, சிலி அணி பொலிவியாவை முன்னதாக 1-0 என்று வெற்றி பெற்றது. பராகுவா அணி 3 புள்ளிகளுடன் இருக்கிறது.

ஆர்ஜென்ரீனா அணி  திங்களன்று பராகுவா அணியைச் சந்திக்கிறது. இதே நாளில் உருகுவே-சிலி அணிகள் மோதுகின்றன.