Showing posts with label மங்கள்யான். Show all posts
Showing posts with label மங்கள்யான். Show all posts

Monday, November 11, 2013

வெற்றிப்பயணம் ஆரம்பம்





  மங்கள்யான் என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்வெளிக்கு  ஏவி செவ்வாய்க் கிரகத்துக்கான தனது விண் வெளி ஆய்வை கடந்த செவ்வாய்க் கிழமை ஆரம்பித்தது இந்தியா. சூரிய வட்டத்தில் உள்ள  நான்காவது கிரகமான செவ்வாயைப்பற்றி பல கதைகள் தமிழில் உள்ளன. அதேபோன்ற பூர்வீகக்கதை கள் ஆங்கிலத்திலும் உள்ளன.அந்தக் கதைகளை எல்லாம்புறந்தள்ளிவிட்டு செவ்வாய்பற்றிய உண்மையை அறிய விஞ்ஞானிகள் முயற்சி  செய்கின்றனர்.
தென்இந்திய ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஏவப்பட்ட மங்கள் யான் 43.30 நிமிடங்களில் பூமியைச் சுற்றி நிலைநிறுத்தப்பட்டது.பூமியைச் சுற்றி 250 தூரத்தில் வலம்வரும் மங்கள் யான் ஐந்து வட்ட பாதைகளில் 23500 கி.மீற்றர் வரை சுற்றிய பின் டிசம்பர் முதலாம் திகதி செவ்வாய் நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கும். 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் 24 ஆம் திகதி செவ் வாய் சுற்று வட்ட பாதையில் மங்கள்யான் பிரவேசிக்கும் செவ்வாயின் வளம் கனிம ஆய்வு மனிதர் வாழ்வதற்கு சூழ்நிலை உள்ளதா என்பதை மங்கள்யான்  ஆய்வு செய்யும். இதற்காக ஐந்து நவீன கருவிகள் மங்கள் யானில் பொருத்தப்பட்டுள்ளன. போர்பு ளோரா, புரூனை, தென்பசுபிக் நாடுகளில் நிலை கொண்டுள்ள இந்தியாவின் கப்பல்களில் பொருத்தப்பட்டிருக்கும் விசேட ராடர்கள் மூலம் மங்கள்யான் பற்றிய தகவல்களை இந்திய விஞ்ஞானிகள் பெற்றுக் கொள்வார்கள். முழுக்க முழுக்க இந்தியாவின்  தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தின் தலைமை விஞ்ஞானி தமிழ்நாடு திருநெல் வேலியைச் சேர்ந்த சுப்பையாஅருணன் என்பவராவார்.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸைத் தலை மையாகக் கொண்ட ஐரோப்பிப்பிய யூனியன் நாடுகள் ஆகியவையே செவ்வாய்க் கிரகத் துக்கு வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியுள்ளன. செவ்வாய்க்கிரக த்துக்கு விண்கலம் அனுப்பும் முயற்சி யில் ஜப்பான் தோல் வியடைந்தது. 2011 ஆம் ஆண்டு சீனா வும் செவ்வாய் நோக்கி விண்கலத் தை அனுப்பி தோல் வியடைந்தது. செவ் வாய்க்கு  விண் கலம் அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமை யை இந்தியா பெற் றுள்ளது. இந்தப் பெருமையால் சீனாவில்  உள்ள ஒரு சிலர் கடுப்பில் உள்ளனர்.  இந்தப் பணத்தை இந்தியாவில் உள்ள ஏழை களுக்கு கொடுத்திருக்கலாம் என்று சீனப் பத்திரிகை ஒன்று கடும் சீற்றத்தில் குமுறி யுள்ளது.இம்மாதம் 18 ஆம் திகதி மாவோன் என்ற விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது மங்கள்யான், மாவோன் ஆகிய வற்றின் மூலம் பல புதிய தகவல்களைப் பெறலாம் என்ற எதிர்ப்பாப்பு விஞ்ஞானிகளிடம் உள்ளது.
பூமி தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரம் எடுக்கும். செவ்வாய் தன்னைத்தானே சுற்றிவர 24.37 மணித்தியாலமாகும். பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வர 365 நாட்களும், சூரியனை செவ்வாய் சுற்றிவர 687 நாட் களும் எடுக்கும். பூமியைப் போன்றே செவ்வாயிலும் பள்ளத்தாக்கு, எரிமலை உண்டு என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.பூமியைத் தவிர வேற்றுக் கிரகங்களிலும் உயிர்வாழக்கூடிய சூழல் உள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
பறக்கும் தட்டுக்களில் வேற்றுக்கிரக வாசிகள் பூமிக்கு வந்ததைப்ப பார்த்ததாக பல செய்திகள் வெளிவந்தன. பறக்கும் தட்டு, வேற்றுக்கிரகவாசிகள்  எல்லாம் உண்மை தான் என்று ஒரு சிலர் அடித்துக் கூறுகின்றனர். ஆனால், அவை எல்லாம் பொய் என்று சிலர் மறுத்து வருகின்றனர். அமெரிக்காவும், ரஷ்யாவும் வேற்றுக்கிரக வாசிகளை பிடித்து வைத்து இரகசிய இடத்தில் விசாரணை செய்ததாக உத்தி யோகப் பற்றற்ற செய்திகள் வெளியாகின. வேற்றுக்கிரகவாசிகளைபற்றிய ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. வேற்றுக் கிரகவாசிகள் இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? இவர்களது பழக்க வழக் கம், உணவு எப்படி இருக்கும்? அவர் களுக்கென்று கலை, கலாசாரம் இருக்குமா என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித் துள்ளது

அமெரிக்கா செவ்வாய்க்குஅனுப்பிய  ஆய்வு இயந்திரம் மூலம் பெறப்பட்ட  சில படங்கள் பரபரப்பை உண்டாக்கின.ஒரு  பெண் கல்லிலே இருப்பது போன்றும் இயந்திரம் ஒன்று ஓடிய வழித்தடம் என்றும் சில பத்திரிகைககள் ஆர்வ மிகுதி யால் கதை கட்டின. அவையயல்லாம் பொய் என்று நாஸா கூறியது.ஆங்கில நாவல்களும், ஆங்கிலத் திரைப்படங்களும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய ஆர்வத்தை அதிகரித்துள் ளன. பூமியை அழிக்க வந்த வேற்றுக்கிரக வாசிகளை விரட்டியடித்த கதாநாயகர்கள், ரசிகர்கள்  மனதிலும் சிறுவர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளனர்.
செவ்வாய்க்கிரகம் பற்றிய ஆய்வு இன்ன மும் சரியான முறையில் ஆரம்பிக்கப்பட வில்லை. அதற்கிடை யில் அங்கு அடுக்கு மாடி குடியிருப்பு அமைத்து மக்களைக்குடி அமர்த் தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இணை யத்தளம் மூலம் இலட்சக் கணக்கா னோர் இதற்கு முன்பதிவு  செய்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தில் 97 சதவீத கரியமிலை வாயுவும் 0.13 சதவீத .ஒட்சிசனும் உள்ளன. இதனைத் தெரிந்துகொண்டும் குடியிருப் பதற்கு இலட்சக் கணக்கானோர் முயன்றடித்துள்ளனர். செவ்வாயக்கிரகத்துக்கான பயணம் ஒரு வழிபாதையாகும். செவ்வாய்க் கிரகத்தில் உங்களை இறக்கி விடுவதுதான்  நிறுவனத் தின் பொறுப்பு திரும்பி வருவது உங்களது கெட்டித்தனம்.
சந்திரனுக்கு சந்திரயான் 1 அனுப்பி புதிய தகவல்களை வெளியிட்டார்கள் இந்திய விஞ்ஞானிகள். 2016 ஆம் ஆண்டு சந்திரயான் 11ஐ சந்திரனுக்கு  அனுப்பத்திட்டமிட்டுள்ளது இந்தியா.
பல வழிகளிலும் இந்தியா வளர்ச்சியடை ந் துள்ளது.தொழில்நுட்பத்திலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் இந்தியா மிக வேகமாக  முன்னேறிக்கொண்டிருக்கின்றது.ஊழலும், அரசியலும் மாறாத கரும் புள்ளியாக உள்ளது. அப்துல் கலாமின் கனவை நனவாக்க இந்திய இளைஞர்கள் முனைப்பில் உள்ளனர். மங்களி யானின் வெற்றி இளைஞர்களுக்கு உற்சாகத் தைக் கொடுத்துள்ளது.
வானதி
 சுடர் ஒளி 10/11/13