Showing posts with label உலகக்கிண்ணம்26. Show all posts
Showing posts with label உலகக்கிண்ணம்26. Show all posts

Tuesday, June 17, 2025

சிலி உதைபந்தாட்ட பயிற்சியாளர் இராஜினாமா

 உலகக்கிண்ண தகுதிகாண்  போட்டியில்  பொலிவியாவிடம் 2-0 என்ற   கோல் கணக்கில் சிலி அணி தோல்வியடைந்ததை அடுத்து, தலைமை பயிற்சியாளர் ரிக்கார்டோ கரேகா இராஜினாமா செய்தார்.  இந்தத் தோல்வியின்  மூலம்  2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியை சிலி இழந்தது..

  தென் அமெரிக்க தகுதிப் போட்டியில் சிலி அணி 10வது தோல்வியை சந்தித்தது. 10 நாடுகள் கொண்ட  குழுவில் சிலி அணி கடைசி இடத்தில் உள்ளது.  பிளேஆஃப்  வாய்ப்பையும் இழந்தது.

  2024 ஆம் அண்டு  ஜனவரியில் ரிக்கார்டோ கரேகா பயிற்சியாளர் பதவியை பொறுப்பேற்றார்.அவருடைய தலைமையில்  13 போட்டிகளில் விளையாடிய சிலி  ஒரே ஒரு போட்டியில் மட்டும்  வெற்றி பெற்றது.

2015 , 2016 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக கோபா அமெரிக்கா பட்டங்களை வென்ற சிலி, 2018,2022 ஆம் ஆண்டுகளில்  உலகக்கிண்ணப் ஓட்டியில் விளையாடத் தகுதி  பெறாத சிலி   தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக்  கிண்ணப் போட்டியைத்  தவற விடுகிறது.

Thursday, June 12, 2025

உஸ்பெகிஸ்தான், ஜோர்தான் அணிகள் உள்ளே வெளியேற்றப்பட்டது சீனா


 

 

 

 உலகக்  கிண்ண   உதைபந்தாட்ட  தகுதிப் போட்டிகளில் முதலிடம் பெற்ற   உஸ்பெகிஸ்தான் , ஜோர்தான் அணிகள் முதன்முறையாகப் போட்டிகளில் பங்கேற்க உள்ளன.  ஆசியாவின் பலமான் அணியாக உள்ள சீனா ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் வெளியேற்றப்பட்டது.

குரூப் ஏ‍யில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான கோல் இல்லாத டிராவுடன் உஸ்பெகிஸ்தான் தனது இடத்தைப் பிடித்தது. இந்த வெற்றி மத்திய ஆசிய அணிக்கு போதுமானதாக இருந்தது - இதில் மான்செஸ்டர் சிட்டி டிஃபென்டர் அப்துகோதிர் குசானோவ் மற்றும் ரோமா ஃபார்வர்ட் எல்டோர் ஷோமுரோடோவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் -

ஜப்பான், நியூசிலாந்து, ஈரான்,ஆர்ஜென்ரீனாவுடன் இணைந்து உலகக்க்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில்  விளையாடும் ச்   ஐந்தாவது அணியாக மாறியது.

குரூப் பி பிரிவில், ஓமானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம் ஜோர்தான் தனது முதல் உலகக்  கிண்ணப் போட்டிக்குத்  தகுதி பெற்று வரலாறு படைத்தது.

 உலகக் கிண்ண தகுதிப் போட்டியில்    முன்னிலையில் இருக்கும் தென் கொரியா, 1986 முதல் தனது  இடத்தித் தக்க வைத்துக் கொள்ள ஈராக்கிற்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றது. ஈராக் பிளேஆஃப்களில் இணையும், அதே நேரத்தில் குரூப்பில் இருந்து இறுதி பிளேஆஃப் இடம் ஓமன் ,பாலஸ்தீனம் ஆகியன மோதும்.

ஜகார்த்தாவில் இந்தோனேசியாவிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த பிறகு, குரூப் சி-யில் சீனாவின் மெலிதான நம்பிக்கைகள் தகர்ந்து போயின. ஓலே ரோமெனி இடைவேளைக்கு சற்று முன்பு பெனால்டியை கோலாக மாற்றி வெற்றியைப் பெற்று இந்தோனேசியாவை பிளேஆஃப் சுற்றுக்கு அனுப்பினார்.

  

Saturday, February 10, 2024

2026 உலகக் கிண்ணத் திருவிழா

 3   நாடுகள்

  16   நகரங்கள்

 104  போட்டிகள்

 48   அணிகள்

38  நாட்கள்

  11    ஜூன் ஆரம்பம்

  19   ஜூலை முடிவு

 

அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ ஆகிய மூன்ரு நாடுகள்  இணைந்து நடத்தும் உலகக்கிண்ண  உதைபந்தாட்டத் திருவிழா 

 2026 ஆமாண்டு ஜூன்மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி  ஜுலய் மாதம் 19 ஆம் திகதி முடிவடையும். உலகக்கிண்ண  உதைபந்தாட்ட  இறுதிப் போட்டி   நியூயார்க்கில்  உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று  பீபா அமைப்பாளர்கள்   அறிவித்தனர்.

2026 உலகக் கிண்ணத்தொடரில் 48 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா,கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகலில் உள்ள16 நகரங்களில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெற  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஅரையிறுதி போட்டிகளை அட்லாண்டா , டாலஸில் நடத்தவும், 3வது இடத்திற்கான போட்டியை மியாமியில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதுகாலிறுதி போட்டிகள் லொஸ் ஏஞ்சலஸ், கன்சாஸ் சிட்டி, மியாமி  ,பாஸ்டன் ஆகிய நகரங்களில் நடக்கவுள்ளன. லீக் சுற்று உட்பட மொத்தமாக 104 போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால், உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக  பீபா   உலகக்கோப்பை தொடர் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பாக 1994 பீபா உலகக் கிண்ணத் தொடர் அமெரிக்காவில் நடத்தப்பட்டது. அப்போது லொஸ் ஏஞ்சலஸ் அருகே உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடந்தது. தற்போது இறுதிப்போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள மெட் லைஃப் மைதானம் 2010ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. மொத்தமாக 82,500 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த மைதானத்தில் 2016ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா இறுதிப்போட்டி நடத்தப்பட்டது.

Monday, February 5, 2024

நியூயார்க்கில் 2026 உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டி

அமெரிக்கா,கனடா,மெக்சிகோ ஆகிய  மூன்று நாடுகள் 2026 ஆம் ஆண்டு இணைந்து நடத்தும் உலகக்கிண்ண  உதைபந்தாட்ட  இறுதிப் போட்டி   நியூயார்க்கில்  உள்ள மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று  பீபா அமைப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர். 

ஜூன் 11 ஆம் திக தி மெக்ஸிகோ சிட்டியின்  அஸ்டெகா ஸ்டேடியத்தில்  ஆரம்பப் போட்டி நடைபெறும்.  அட்லாண்டா,டல்லாஸ்  ஆகிய  மைதானங்களில் அரையிறுதிப் போட்டிகளும்,  மியாமியில்  மூன்றாவது இடத்திற்கான  போட்டிகளும்   நடைபெறும்.

 பீபாவின்  தலைவர் கியானி இன்ஃபான்டினோ, நகைச்சுவை நடிகரும்   கெவின் ஹார்ட், ராப்பர் டிரேக்,  பிரபல நடிகை  கிம் கர்தாஷியன் ஆகியோர் கலந்து கொண்ட நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

நியூ ஜெர்சியின் கிழக்கு ரதர்ஃபோர்டில் உள்ள ஹட்சன் ஆற்றின் குறுக்கே 82,500 இருக்கைகள் கொண்ட மெட்லைஃப் ஸ்டேடியம், ண்Fள் இன் நியூயார்க் ஜயண்ட்ஸ், நியூயார்க் ஜெட்ஸின் தாயகமாகும்.2016 கோபா அமெரிக்கா போட்டியின் இறுதிப் போட்டி உட்பட பல சர்வதேச உதைபந்தாட்டப் போட்டிகல்  அங்கு நடைபெற்றன.

Monday, June 20, 2022

வட அமெரிக்காவில் உலகக்கிண்ணப் போட்டி


 

உதைபந்தாட்ட வரலாற்றில்  முதன் முதலாக மூன்று நாடுகள்  இணைந்து உலகக்கிண்ண உதை பந்தாட்டப் போட்டியை நடத்துகின்றன.

2026ஆம் ஆண்டு  அமெரிக்காமெக்ஸிகோகனடா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற உள்ளது.  போட்டிகள் நடைபெறும் மையதானங்கள்  மைதானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 11 மைதானங்கள் அமெரிக்காவிலும்மெக்ஸிகோகனடா  ஆகிய  நாடுகளில்  தலா மூன்று  மைதானங்களும் தேர்வு அஎய்யப்பட்டுள்ளன

அமெரிக்காவில் நியூயார்க்கின் மெட்லைஃப் ஸ்டேடியம்லாஸ் ஏஞ்சல்சின் SoFi , டல்லாஸ்சின் AT&T, சான் பிரான்சிஸ்கோவின் லெவி , மியாமியின் ஹார்ட் ராக்அட்லாண்டாவின் மெர்சிடிஸ்பென்ஸ்சியாட்டிலின் லுமன் ஃபீல்ட்ஹூஸ்டனின் NRG, பிலடெல்பியாவின் லிங்கன் பினான்சியல் பீல்ட்கன்சாஸ் சிட்டியின் , மிசோரி அரோஹெட்மற்றும் பாஸ்டனின் ஜில்லட் ஆகிய 11 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.   

மெக்சிகோவைவில் வாடலஜாரா நகரில் உள்ள எஸ்டாடியோ அக்ரோன்மான்டேரியாவின் எஸ்டாடியோ பிபிவிஏ பான்கோமர்மெக்ஸிகோ சிட்டியின் எஸ்டாடியோ அஸ்டெக மைதானங்களில்  போட்டிகள் நடைபெறுகின்றனமெக்சிகோவில் 10 போட்டிகள் நடத்தப்படுகின்றன அஸ்டெக மைதானத்தில் ஏற்கெனவே 1970 , 1986ல் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின்   இறுதிப்போட்கள் நடத்தப்பட்டுள்ளனமூன்றாவது முறையாக உலகக் கோப்பை போட்டி நடைபெறும் முதல் மைதானம் என்ற பெருமையை அஸ்டெக பெறுகிறது

கனடாவின் டொராண்டடாவான்கூவரில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடத்தப்படுகின்றனமெக்சிகோவைப் போலவே கனடாவிலும் 10 பேட்டிகள் நடைபெறும்கனடாவில் முதல் முறையாக உலகக் கிண்ணப்  போட்டிகள் நடைபெறுகின்றனமுன்பு போல் அல்லாமல் அனைத்து மைதானங்களிலும் இயற்கை புல் தரையில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படுவதாக ஃபிபா அறிவித்துள்ளது

80 போட்டிகளில் 60 போட்டிகளை அமெரிக்கா நடத்துகிறதுகாலிறுத்திக்கு பின்னர் அனைத்து போட்டிகளும் அமெரிக்காவில் மட்டுமே நடைபெறுகின்றனஇதற்கு முன்னர் 1994ஆம் ஆண்டு அமெரிக்காவில் உலகக் கிண்ணப்  போட்டி  நடத்தப்பட்டதுஅமெரிக்காவில் நியூயார்க்கின் மெட்லைஃப் ஸ்டேடியம்லாஸ் ஏஞ்சல்சின் SoFi, டல்லாஸ்சின் AT&T, சான் பிரான்சிஸ்கோவின் லெவி , மியாமியின் ஹார்ட் ராக்அட்லாண்டாவின் மெர்சிடிஸ்பென்ஸ்சியாட்டிலின் லுமன் ஃபீல்ட்ஹூஸ்டனின் NRG, பிலடெல்பியாவின் லிங்கன் பினான்சியல் பீல்ட்கன்சாஸ் சிட்டியின் , மிசோரி அரோஹெட்மற்றும் பாஸ்டனின் ஜில்லட் ஆகிய 11 மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மெக்ஸிகோவில்  குவாடலஜாரா நகரில் உள்ள எஸ்டாடியோ அக்ரோன்மான்டேரியாவின் எஸ்டாடியோ பிபிவிஏ பான்கோமர்மெக்ஸிகோ சிட்டியின் எஸ்டாடியோ அஸ்டெக  ஆகிய மைதானங்களில்   போட்டிகள் நடைபெறுகின்றனமெக்சிகோவில் 10 போட்டிகள் நடத்தப்படுகின்றன கன‌டாவில் உலகக்கிண்ண  உதைபந்தாட்டப் போட்டி முதன் முதலாக நடைபெறுகிறது.