Showing posts with label மகளிர். Show all posts
Showing posts with label மகளிர். Show all posts

Monday, June 16, 2025

கருவுறுதல் நடைமுறைகளுக்கு உட்படும் வீராங்கனைகளுக்கு சிறப்பு சலுகை


 கருவுறுதல் பாதுகாப்பு நடைமுறைக்கு உட்படுத்த விரும்பும்  வீராங்கனைகள் விளையாட்டிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, பாதுகாக்கப்பட்ட தரவரிசையுடன் போட்டி நடவடிக்கைகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று பெண்கள் டென்னிஸ் நிர்வாகக் குழு ( WTA) புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பெண் விளையாட்டு வீரர்கள் தங்கள் குடும்ப இலக்குகள் , தொழில் லட்சியங்களை சமநிலைப்படுத்துவதை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த புதிய விதி, WTA முதல் முறையாக வீரர்களுக்கு 12 மாதங்கள் வரை ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை வழங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு வருகிறது.

"புதிய விதியின்படி,  வீராங்கனைகள்  தொழில்முறை டென்னிஸிலிருந்து முட்டை அல்லது கருவை உறைய வைப்பது போன்ற கருவுறுதல் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு நேரத்தை ஒதுக்கி, பாதுகாக்கப்பட்ட தரவரிசையுடன் பாதுகாப்பாக போட்டிக்குத் திரும்பலாம்" என்று ந்டா   அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"தகுதியுள்ளவ‌ர்கள் சிறப்பு நுழைவு தரவரிசை (SER) பெறுவார்கள், இது அவர்களின் போட்டிக்கு வெளியே உள்ள காலம் தொடங்குவதற்கு எட்டு வாரங்களுக்கு முந்தைய WTA தரவரிசையின் 12 வார சராசரியின் அடிப்படையில் மூன்று போட்டிகளில் நுழையப் பயன்படுத்தப்படலாம்." 

2017 யுஎஸ் ஓபன் சம்பியனான ஸ்லோன் ஸ்டீபன்ஸ், முட்டை உறைபனியை ஒரு பாதுகாக்கப்பட்ட தரவரிசை நடவடிக்கையாக அங்கீகரிக்க வேண்டும் என்று முன்னர்  கோரிக்கை  விடுத்திருந்தார். புதன்கிழமை அறிவிப்பை "புதிய" நடவடிக்கை என்றும் அழைத்தார்.

சவூதி பொது முதலீட்டு நிதியத்தால் வழங்கப்படும் WTA மகப்பேறு நிதியத்தின் மூலம்,  வீராங்கனைகள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு,கருவுறுதல் பாதுகாப்பு மானியங்களைப் பெறுவார்கள் என்றும் WTA தெரிவித்துள்ளது.  

Tuesday, November 5, 2024

ம‌களிர் கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025-29 காலகட்டத்தை உள்ளடக்கிய மகளிர் கிரிக்கெட்டுக்கான எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை (FTP) அறிவித்துள்ளது.
இந்த புதிய சுழற்சியில் ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப்பின் நான்காவது  போட்டியும்அடங்கும். ஸிம்பாப்வே முதல் முறையாக இணைந்து 10 முதல் 11 அணிகளாக விரிவடைகிறது.
சம்பியன்ஷிப்பில் உள்ள ஒவ்வொரு அணியும் நான்கு உள்நாட்டு மற்றும் நான்கு வெளிநாட்டு போட்டிகளில் விளையாடும்.
மொத்தம் 44 தொடர்கள் மற்றும் 132 ஒரு நாள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இந்த காலப்பகுதியில் நடைபெறும். 
 
இந்தியாவின் மகளிர் சம்பியன்ஷிப் அட்டவணையில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே ஆகியவை நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடர்களை விளையாடுவதை உள்ளடக்கியது.
ஸிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் அயர்லாந்துக்கு எதிராக சொந்தத் தொடரில் விளையாடுகிறது. மேலும் இந்தியா, நியூசிலாந்து, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ளும்.
 இந்தியாவில் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை, 2026 இல் மகளிர் டி20 உலகக்கோப்பை, மற்றும் 2027 இல் தொடக்க மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடங்கி, 2028 இல் மற்றொரு டி20 உலகக்கோப்பை திட்டமிடப்பட்டுள்ளது.


 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன. இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான பல வடிவத் தொடர்களில் அவுஸ்திரேலியா அதிக அளவில் விளையாடும் வகையில் அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் கிரிக்கெட் பொது மேலாளர் வாசிம் கான், FTP அணிகள் மற்றும் ரசிகர்களுக்கு தெளிவு மற்றும் கூடுதல் சூழலை வழங்கும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, மகளிர் ஐபிஎல், மகளிர் பிக் பாஷ் லீக், தி ஹண்ட்ரேட் போன்ற போட்டிகளுக்கான அட்டவணையில் சிக்கல் ஏற்படாத வகையில், இந்த FTP உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், இதற்காக மகளிர் ஐபிஎல் 2026 முதல் ஜனவரி-பிப்ரவரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  

Tuesday, October 1, 2024

களை கட்டப்போகும் மகளிர் ரி 20 உலகக்கிண்ணம்


   9வது .சி.சி. மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி  ஐக்கிய அரபு எமரேட்ஸில் உள்ள சார்ஜா, துபாய் ஆகிய மைதானங்களில்   ஒக்டோபர் 3ம் திகதி முதல் ஒக்டோபர் 20ம் திகதி வரை நடைபெற உள்ளது.

கடந்த மகளிர் ரி20 உலகக்  கிண்ண  இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா சம்பியன் பட்டம் பெற்றது. 10 அணிகள்   பி  என  இராண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப்   இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் , இலங்கை  .

குரூப் பி  இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்தியா,பங்களாதேஷ் , தென்னாப்பிரிக்கா  .

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை  அதிக முறை வென்ற நாடு என்ற பெருமையை அவுஸ்திரேலியா தன்வசம் வைத்துள்ளது. 8 முறை நடைபெற்றுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில்  அவுஸ்திரேலியா 6 முறை ம்பியன் பட்டம் வென்று  அசத்தியுள்ளது. இங்கிலாந்து, மேற்கு இந்தியா ஆகியன  தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளன.

Monday, March 20, 2023

மகளிர் உலகக் கிண்ண பரிசுத் தொகை அதிகரிப்பு

2023ம் ஆண்டுக்கான பீபா பெண்கள் உலகக்  கிண்ணஉதைபந்தாட்டப்    போட்டிகள் அவுஸ்திரேலியாவிலும், நியூஸிலாந்திலும்  ஜூலை மாதம் முதல் நடக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் களமாடுகின்றன. இந்நிலையில், இந்த தொடருக்கான பரிசுத் தொகை 300% அதிகரித்து உள்ளது. அதாவது  150 மில்லியன் அமெரிக்க டாலர் அன அறிவிப்பப்பட்டுள்ளது.  இது கடந்த 2015ல் இருந்ததை விட 10 மடங்கு அதிகமாகும்.

 நடப்பு சம்பியனான அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் ,ஸ்பெயின் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள உதைபந்தாட்ட‌ வீராங்கனைகள்,   ஆடவ தேசிய அணிகளுடன் சம ஊதியம் மற்றும் சம மரியாதைக்காக போராடி வருகின்றனர்.

 2026 ,2027 ஆம் ஆண்டு முறையே, அடுத்த உலகக் கிண்ணப் போட்டிகளின் போது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பரிசுத் தொகையை இருக்கும் என்று பீபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ கூறியுள்ளார். கடந்த ஆண்டு கடாரில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் 32   அணிகள் பங்கேற்றன  சுமார் 440 மில்லியன் அமெரிக்க டாலர்  பரிசுத்தொகையாகவழங்கப்பட்டது.


Tuesday, March 14, 2023

மகளிர் ஐபிஎல் இல் கலக்கும் டோனியின் ரசிகை


   மகளிர் ஐபிஎல் ரி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 5ஆம் திகதியன்று நடைபெற்ற குஜராத்துக்கு எதிரான லீக் போட்டியில் 170 ஓட்டங்களைத் துரத்திய உத்தரபிரதேசம் கடைசி ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. குறிப்பாக கிரேஸ் ஹாரிஸ் 59* (26) ஓட்டங்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் ஆட்ட நாயகி விருதை வென்றார். இருப்பினும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் சரிந்த போது 3வது இடத்தில் களமிறங்கி 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 53 (43) ரன்ஓட்டங் கள் குவித்து சிறப்பாக செயல்பட்ட இளம் இந்திய வீராங்கனை கிரண் நவ்கிர் அறிவிக்கப்படாத ஆட்டநாயகியாக அசத்தினர்.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சோலாப்பூர் எனும் பகுதியை சேர்ந்த அவர் உள்ளூர் ரி20 கிரிக்கெட்டின் ஒரு போட்டியில் நாகாலாந்து அணிக்கு எதிராக 162 ஓட்டங்கள் குவித்து முதல் முறையாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் வாயிலாக ரி20 கிரிக்கெட்டில் 150+ ஓட்டங்களை எடுத்த ஒரே இந்திய வீராங்கனையாக சாதனை படைத்துள்ள அவர் என்னவென்று தெரியாத கிரிக்கெட்டை 2011 உலக கோப்பை பைனலில் கேப்டன் எம்எஸ் டோனி சிக்ஸர் அடுத்து வெற்றி பெற்று கொடுத்ததிலிருந்து தான் பார்க்கத் துவங்கியதாக கடந்த வருட மகளிர் ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் இதே போல் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வைத்த போது தெரிவித்திருந்தார்.

  அந்த நிலையில் இந்த போட்டியில் தன்னுடைய பேட்டில் தோனியின் பெயர் மற்றும் மேஜிக் நிறைந்த நம்பர் ஆகியவற்றை இணைத்து “எம்எஸ்டி 07” என தனக்குத்தானே எழுதிக்கொண்ட அவர் டோனியை போலவே மிகச் சிறப்பாக விளையாடினார். அவருடைய பேட்டில் தோனியை பற்றி எழுதியிருந்தது சமூகவலைதளங்களில் ரசிகர்களிடையே வைரலானது. ஆனால் அதன் பின் இந்தியாவுக்காக விளையாடி தனது குடும்பத்தையும் கரை சேர்க்க போராடும் ஒரு ஏழை சிங்கப்பெண்ணின் கதை இருப்பது பலருக்கும் தெரியாது.

 இந்தியாவில் உள்ள பல ஏழை குடும்பங்களை போலவே பெரிய கனவுகளுடன் தங்களது மகள் இந்த மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தொலைக்காட்சி கூட இல்லாத தங்களது வீட்டில் சிறிய மொபைல் போனில் பார்த்து ஆதரவு கொடுக்கும் நிலையில் தான் கிரண் நவ்கிர் குடும்பம் இருக்கிறது. அதை விட பொதுவாக அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளின் உபகரணங்களில் ஸ்பான்சர்ஷிப் செய்பவர்களின் பெயர் இருக்கும். ஆனால் தமக்கு இதுவரை யாரும் ஸ்பான்சர்ஷிப் செய்யாத காரணத்தால் தாம் விலை கொடுத்து வாங்கிய பேட் காலியாக இருப்பதை விரும்பாத கிரண் நவ்கிர் அந்த இடத்தில் தனது ரோல் மாடலான டோனியின் பெயரை விரும்பி எழுதியுள்ளார். அதன் காரணமாக அவருடைய பேட்டுக்கு ஸ்பான்சர்கள் கூட இல்லாதது முதல் முறையாக அனைவருக்கும் தெரிய வந்தது. அதை அறிந்த அதே உத்திரபிரதேச அணிக்காக விளையாடும் இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லஸ்டன் வெற்றியை கொண்டாடும் தருணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட போது “கிரண் நவ்கிர் பேட்டுக்கு ஸ்பான்சர் கொண்டு வாருங்கள்” என்று வாசகத்தையும் சேர்த்து பதிவிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

ஏழை பெண்ணாக இருந்தாலும் ஸ்பான்சர்ஷிப் இல்லை என்றாலும் அதற்காக கவலைப்படாமல் தனது ரோல் மாடலை அந்த இடத்தில் எழுதி வைத்து மிகச் சிறப்பாக விளையாடும் அவருக்கு மிக விரைவில் ஸ்பான்சர் கிடைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அத்துடன் தோனியை பார்த்து கிரிக்கெட் விளையாடத் துவங்கியதாக அவர் பேசிய பழைய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட் பற்றி தெரியாத காலத்திலிருந்து நான் தோனியை பின்பற்றி வருகிறேன். எங்களுடைய வீட்டில் 2011 உலக கோப்பை பைனல் நடைபெற்ற போது அதைப் பற்றி குழந்தையாக இருந்த நான் என்னுடைய சகோதரர்களிடம் கேட்டேன்” -  “அப்போது அது இந்தியா மற்றும் இலங்கை மோதும் ஃபைனல் என்று அவர்கள் சொன்னார்கள். அப்போது அந்த இன்னிங்ஸ் விளையாடி அந்த சிக்சரை தோனி அடித்தது என்னை மிகவும் கவர்ந்தது. அப்போதிலிருந்தே நானும் அவரை போல விளையாடி நிலைமை எதுவாக இருந்தாலும் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன்” என்று கூறினார்.

Wednesday, February 22, 2023

வடிவேலை ஞாபகப்படுத்தும் அயர்லாந்து வீராங்கனை


 மகளிர் ரி20 உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக    அயர்லாந்து விளையாடியபோது விக்கெர் கீப்பர் மேரி வால்ட்ரான், வித்தியாசமான ஹெல்மெட், ஹேர்ஸ்டைலுடன் விளையாடிய புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலானது.

கிறிக்கெற் விக்கெர்கீப்பர்கள் வழ்மையாக அணியும் தலைக் கவசத்துக்குப் பதிலாக அமெரிக்க  பேஃஸ்போல் வீரர்கள் பயன்படுத்தும் தலிக்கவசம் அணிந்திருந்தார்.  இதனால் தலையில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர்.  கடந்தாண்டு  பாகிஸ்தானுக்கு எதிரான  போட்டியின்போதும்  மேரி வால்ட்ரான் தே தலைக் கவசத்தை அணிந்திருந்தார்,  வடிவேலின்  படத்துடன் மேரி வால்ட்ரானின் படத்தை இனைத்து மீம்ஸ்கள்  பதிவிடபப்டுகின்றன.