Sunday, October 28, 2012

திரைக்குவராதசங்கதி 45


அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மக்கள்திலகத்துக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌ ர‌ வித்தது. அப்போது ஜேப்பிரியாரின் உந்துதலினால் ஏ.வி.எம்.ச ர‌வணன், பா ர‌தி ராஜா,சித் ரா லட்சுமணன் ஆகியோர் பஞ்சு அருணாசலத்தின் வீட்டில் கூடி மக்கள்திலகத்துக்குபாராட்டுவிழாஎடுத்தனர்.திரைஉலகம்டாக்டர்எம்.ஜிஆருக்குஎடுத்தஅந்தவிழாநடந்துசிலநாட்களில்மக்கள்திலகம்நோய்வாய்ப்பட்டார்.அவரின்உடல்நிலைமோசமாகியதால்சிகிச்சைக்காகஅமெரிக்காவுக்குகொண்டுசெல்லப்பட்டார்.மக்கள் திலகம் அமெரிக்காவில்சிக்கிச்சைபெற்றவேளைதமிழகசட்டச்சபைத் தேர்தலுக்குரியஏற்பாடுகள்மும்முரமாகநடைபெற்றன.அப்போதுஎம்.ஜி.ஆர்இறந்துவிட்டார்.என்றவதந்திதமிழகம்முழுவதும்பரவியது.மக்கள்திலகத்தின்ஆதர வா ளர்கள்அதனைநம்பவில்லை.எதிர்கட்சியினர்அந்தவதந்திஉண்மைஎன்றேஅடித் துக் கூறினார்கள்.உண்மை எது பொய் எது எனத் தெரியாதுநடுநிலையாளர்கள் தவித்தனர்.

 இந்த இக்கட்டான நே ர‌த்தில் மக்கள்திலகத்தின் மிக நெருங்கிசகாவானஆர்.எம். வீரப்பனிடமிருந்துஏ.வி.எம்.சரவணனுக்குதொலைபேசிஅழைப்புவந்தது.அந் த‌ தொலைபேசி அழைப்பைஅடுத்து ஏ.வி.எம் ச வணன்ஆர்.எம்.வீரப்பனின்வீட்டிற்கு சென்றார்.என்னிடம்ஒருடேப்இருக்கிறது.அதனைஎன்.டி.எல்சிவிஸ்டத்தில்தா ன் பார்க்கலாம்.அந்தமெஸின்என்னிடம்இல்லை.எல்.ஆர்நாராயணனிடம்அந்தமெஷின்உண்டு. அங்கே சென்று பார்ப்போம். என்றுஆர்.எம்.வீரப்பன்கூறினார்.ஆர்.எம். வீ ர‌ப்பன் கூறியதும் அதில்ஏதோ ஒரு விசேடம் இருப்பதை உணர்ந்தார்ஏ.வி.எம்ச ர‌வணன். அங்கிருந்தே ஏ.எல் .ஆர் .நா ராயணனுடன்தொலை பேசியில் தொடர்பு
கொண்டு அந்தமெஷினைஆர்.எம்.வீ ர‌ப்பனின்வீட்டிற்குச்கொண்டு வரும்படி கூறினார்.எல். ஆர். நா ராயணன் கொண்டு வந்தமிஷினின் அந்த டேப்பைப் போட்டுப்பார்த்ததும் ஏ.வி. எம். ச ர‌வணனும்அங்கிருந்தவர்களும் ந்தோஷப்பட்டனர்
  .அந்த டேப்பில் மக்கள் திலகம் சாப்பிடுகிறார். சாப்பாடு கையில் இருந்துநழுவி விழுகிறது.பத்திரிகைபார்க்கிறார்.கதைக்கிறா ர் அவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அசைக்கமுடியாதஆதர‌ மாக அந்த டேப் இருந்தது. இந்த டேப்பை இங்கு மக்கள் மத்தியில்போட்டுக் காட்ட வேண்டும் .இதில் பலபி ர‌திகள் வேண்டும். இந்த சிஸ்டத்தைமாற்றி எடுக்க முயற்சி செய்தேன் முடியவில்லை. என்ன செய்யலாம் என ஆர்.எம்.வீ ர‌ப்பன் கேட்டார்.அன்று தமிழகத்தில் தொழில் நுட்பவசதிகள் இல்லை. ஆகையால் சிங்கப்பூரில்இதை மாற்றக் கூடிய தொழில் நுட்பவசதிகள் இருப்பதாக ச ர‌வணனின் மகன்குகன் கூறினார்.அந்த சிஸ் ர‌த்தை மாற்றும்பொறுப்பை அவர்களிடமே கொடுத்துவிட்டார் ஆர்.எம். வீ ர‌ப்பன்.
 அந்தடேப்பைசிங்கப்பூருக்குகொண்டுசெல்வதனால்கஸ்டம்அதிகாரிகளின்கேள்விகளுக்குபதில்கூறவேண்டிஇருக்கும்.சட்டச்சிக்கல்கள்எழும்என்பதாலஅவர்கள்தங்களிடம்உள்ளமெஷின்ஒன்றுபழுதடைந்ததாகக்கூறஅந்தடேப்பைமெஷினுககுள்வைத்துசிங்கப்பூருக்குஅனுப்பினார்கள்.சிங்கப்பூரிலிருந்துசிஸ்டம்மாற்றப்பட்டுவந்த ப்பைஎடிட்செய்யும்பொறுப்பும்ஏ.வி.எம்சரவணனிடம்கொடுக்கப்பட்டது
.எஸ்.பி.முத்துராமன்,வலம்புரிஜான்,வைரமுத்துஆகியோரின்ஒத்துழைப்புடன் எ ம்.ஜி.ஆர்உயிரோடுஇருக்கும்வீடியோபிரசாரப்படம்தயாரானது.தேர்தல்மேடைகளில்அந்தடேப்போட்டுக்காண்பிக்கப்பட்டது.மக்கள்திலகம்உயிருடன்இருப்பதைஅனைவரும்நம்பினர்.சினிமாவில்புகழ்பெற்றுவிளங்கும்ஏ.வி.எம்.நிறுவனத்தைச் சேர்ந்த எவருமவெளிப்படையாக அ ர‌சியலில் இறங்கியதுகிடையாது. ஆர். எம். வீ ரப்பனின்வேண்டுகோளுக்காகவேஅந்தஉதவியைச்செய்தார்கள்.அண்ணாதிராவிடமுன்னேற்றக்கழகம்வெற்றிபெறுவதற்குஉதவியஅந்தபிரசாரவீடியோதயாரித்தில்ஏ.வி.எம்.நிறுவனம்முக்கியபங்குவகித்ததுஎன்பதுகலைஞருக்குத்தெரியும்.ஆனால் கலைஞர்அதனை பெரிதாக எடுக்கவில்லை
ரமணி
மித்திரன் 28/01/2007. 106





Saturday, October 27, 2012

பொன்னுக்கிழவி


பொன்னுக்கிழவியின் உயிர் இப்பவோ இக்கணமோ என்று இருக்கிறது.உறவினர்கள்,தெரிந்தவர்கள்,வேண்டியவர்கள் வந்து பார்த்துக்கொண்டுபோகிறார்கள்.வரமுடியாதவர்கள் வந்து பார்த்துப்போனவர்களிடம், "எப்பிடி இருக்கு? இப்பபோகுமோ?" என்று வினவினார்கள்.

  வெளி இடங்களில் உள்ளவர்களுக்குத்தந்தியிலும்,தொலைபேசியிலும் நிலைமை அறிவிக்கப்பட்டது.காணிப்பிரச்சினைகாரணமாக கிழவியுடன் மூன்று வருட‌மாக‌ப்பேசாதிருந்த சீதா ஓடிவந்து தலைமாட்டில் இருக்கிறாள்.

 கிழ‌விக்குக்கிட்ட‌ப்போய் "எணை ஆச்சி என்னைத்தெரியுதேணை" என‌ யாராவதுகேட்டால் போதும் சீதாவும் ஓடிப்போய் "எணை க‌ண்ணை முளிச்சுப்பார‌ணை நான் சீதா வ‌ந்திருக்கிறன்".என்று தானும் இருப்ப‌தாக‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்குக்காட்டிக்கொண்டாள்.

  "இள‌ந்தாரிப்பொடிய‌ள் திடீர்திடீரென‌ச்சாகுதுக‌ள்.இதுபோக‌மாட்ட‌ன் எண்டு இளுப‌றிப்ப‌டுது".கிழ‌வி இன்ன‌மும் சாக‌வில்லை என்ற‌ எரிச்ச‌லில் இருவ‌ர் பிர‌லாபித்தார்.விபுல‌ன் தோளில் சால்வையும் கையில் க‌ட‌தாசிக்க‌ட்டுமாக‌ அலுவ‌ல் பாக்கிறான்.

  வாய்கொள்ளாத‌ வெற்றிலையைப்போட்டுக் குத‌ப்பிக்கொண்டு மடியிலும் வெற்றிலையையும் சுருட்டையும் கட்டிக்கொண்டு க‌தைக்க‌முடியாம‌ல் பிற‌கு வ‌ருகிறேன் என‌ச்சைகையில் காட்டிவிடு ந‌டையைக்க‌ட்டினார் சின்ன‌ராசு.எட்டு முடிவ‌த‌ற்கிடையில் அவ‌ர்வீட்டில்

வெற்றிலைக்கடை ஆரம்பித்துவிடும்.

  "எடே செல்வன் சுறுட்டைக்கொண்டந்து குடடா. சுறுட்டுக்கேட்டு என்னைக் கரைச்சல் படுத்துகினம்" சுருட்டுக்கேட்டு செல்வனை ஏவினார் கந்தவனம். ஒரு தட்டில் சுருட்டையும் கயிற்றுத்தணலையும் கொண்டுவந்து கந்தவனத்துக்கும் இன்னும் சிலருக்கும் இடையில் வைத்தான் செல்வன்.
  

 கந்தவனம் ஒரு சுறுட்டை எடுத்து வலது காதில் செருகினார். இன்னொன்றை வாயில் வத்து புகையை வெளியேவிட்டார்.சுருட்டு பாதிபுகைந்ததும் இன்னொரு சுருட்டை எடுத்து மடியிலே வைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டகன்றார்.

  ஒருவருக்கும்தெரியாமல்  இரவு இரண்டாவது காட்சிக்குப்போவதற்கு சில இளைஞர்கள் திட்டமிட்டனர்.பொன்னுக்கிழவி.பொன்னாத்தா,பொன்னுப்பேத்தி, என எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் பெயர் பொன்னி என்பது பலருக்குத்தெரியாது..
  பொன்னிக்குப் பத்து வயதாக இருக்கும் போதே அவரின் பாட்டி "எனக்கென்ன என்ரை பொன்னி சாமத்தியப்பட்டாப்போலைதான் கண்ணை மூடுவன்.அதுக்கு முதல் நான் போக மாட்டன்" எனச்சொல்வாள்.
. ஆசை நிறைவேற நான்குவருடங்களுக்கு முன்னமே  பொன்னியின் பாட்டி போய்ச்சேர்ந்து விட்டாள்.

  பொன்னிக்குத்திருமணம்முடிந்து சரஸ்வதி என்ற குழந்தியைப்பெற்
றாள்."என்ரை சரசுவது சாமத்தியப்பட்டாப்போலைதான் சாகுவன்"என்றவபல்லவியைப்பாடத்தொடங்கிய பொன்னியின் தாயும் ஆசை நிறைவேறமுன்னர் காலமானாள்.

 சரஸ்வதி ஆசிரியராகக்கடமியாற்றுகிறாள். அவளது கணவன் பிரபல பாடசாலையின் அதிபர்.அவர்களுக்குப்பிறந்த பெண் குழந்திக்கு சிவசோதி எனப்பெயரிட்டனர்.முன்னோர்க்குத்தான் சற்றும் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில்"உவள் சோதி பெரிசானாப்போலைதான் நான் கண் மூடுவன்"என அடிக்கடி கூறினார் பொன்னுக்கிழவி. அவளின்ரை கலியாணவீட்டுக்கும் நீ இருப்பாயணை என ஆறுதல் கூறுவாள் மகள் சரஸ்வதி.

  சிவ‌சோதியும் அம்மாச்சி அம்மாச்சிஎன‌ப்பொன்னியின் ம‌டியிலேநெடுக‌ இருப்பாள். பொன்னுக்கிழ‌வியின் ப‌ர‌ம்ம‌பரையில் ந‌ட‌க்காத்து ந‌ட‌ந்துவிட்ட‌து.சிவ‌சோதி பெரிசாகும்வ‌ரை பொன்னுக்கிழ‌வி உயிருட‌ன் இருந்து விட்டாள்.

" சிவ‌சோதிம் க‌லியாண‌ம் கட்டினாப்போலைதான்நான் க‌ண் மூடுவ‌ன்" என்ற‌புதிய‌ ப‌ல‌ல‌வியைப்பாட‌த்தொட‌ங்கினாள் பொன்னுக்கிழ‌வி.சிவ‌சோதியின் திரும‌ண‌த்துக்கிடையில் பொன்னுக்கிழ‌வி எத்த‌னையோ முறை செத்துப்பிழைத்தாள்.சிவ‌சோதியின் திரும‌ண‌த்த‌ன்று பொன்னுக்கிழ‌வி மிக‌வும்  உசாராக‌ வேலைசெய்தார்.சாக‌கிட‌ந்த‌ கிழ‌வியா இது என‌ அனைவ‌ரும் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ன‌ர்.

  சிவ‌சோதியின் க‌ண‌வ‌ன் கொழும்பிலே த‌னியார் நிறுவ‌ன‌ம் ஒன்றில் பொறுப்புள்ள‌ அதிகாரியாக‌க் க‌ட‌மை யாற்றுகிறார்.சிவ‌சோதி க‌ண‌வ‌னுட‌ன் கொழும்புக்குப்புற‌ப்ப‌ட்ட‌போது பொன்னுக்கிழ‌வி அழுதுவிட்டாள்.சிவ‌சோதியும் த‌ன‌னை ம‌ற‌ந்து அழுதுதாள்.

  அம்மாச்சி அம்‌மாவைக்க‌வ‌ன‌மாக‌ப் பார்த்துக்கொள்ள‌னை என‌ பொன்னுக்கிழ‌வியிட‌மும். அம்மா அம்மாச்சியைக்க‌வமாக‌ப்பார்த்துக்கொள்ள‌னை என‌த்தாயிட‌மும் கூறினாள் சிவ‌சோதி.   
பொன்னுக்கிழ‌விக்குப்புதிய‌தொரு ஆசை பிறந்த‌து."சோதிக்கொரு பெட்டை பிறாந்தாப்போல‌தான்  நான் சாகுவ‌ன்" என்று கூறினார் பொன்னுக்கிழ‌வி.சிவ‌சோதி க‌ர்ப்ப‌மானாள்.சோதிக்குப்பொம்பிளைப்பிள்ளைபிற‌க்‌க‌வேண்டும் என‌ ஊரில் உள்ள‌ கோயில்க‌ள் எல்லாவ‌ற்றிலும் நேர்த்திவைத்தார் பொன்னுக்கிழ‌வி.எல்லாக்க‌ட‌வுளும் சேர்ந்து  கிழ‌வியை ஏம‌ற்றிவிட்டார்க‌ள். சிவ‌சோதி அழ‌கான‌ ஆண் குழ‌ந்தையைப்பெற்றெடுத்தாள்.அடுத்த‌து
 பொம்பிளைப்பிள்ளைதான் என்று ம‌ன‌தைத்தேற்றினாள் பொன்னுக்கிழ‌வி.
   
  "ச‌ல‌சா ச‌ல‌சா" என்று குழ‌எதையைச்செல்ல‌ங்காட்டினாள் பொன்னுக்கிழ‌வி.அப்போது அங்கே வ‌ந்த‌ ர‌ம‌ண‌ன் "அம்மாச்சி த‌ங்க‌ச்சியின்ரைபேர் ச‌ல‌சா அல்ல‌ சைல‌ஜா " என்று திருத்தினான்.தாய் சிவ‌சோதி அம்மாச்சி என்று கூப்பிடுவ‌தால் அவ‌னும்  அப்ப‌டியே கூறினான்.

  பொன்னுக்கிழ‌வி சாக‌த்துணிந்துவிட்டாள்."பேத்தீன்ரை பொடிய‌ளையும் க‌ண்டாச்சு  நான் இனிச்சாக‌லாம்" என்று  எல்லோரிட‌மும்ச‌ந்தோச‌மாக‌க்கூறூவாள்.ஆண்டொண்று போக‌ப்போக‌ ஆசைக‌ளும் வ‌ள‌ர‌த்தொட‌ங்கின‌."இன்னும் கொஞ்ச‌க்கால‌ம்தான் ச‌ல‌சா பெரிய‌பிள்ளையானாப்போலைதான் நான் க‌ண்மூடுவ‌ன். அவ‌ள‌வும் ய‌ம‌ன்  என‌க்குக்கிட்ட‌ வ‌ர‌மாட்டான்"என்றாள் பொன்னுக்கிழ‌வி.

  சைல‌ஜா பெரிய‌வ‌ளாகுமுன் பொன்னுக்கிழ‌வியைக்கூட்டிப்போக‌ ய‌ம‌ன் வ‌ந்து நிற்கிறான்.அவ‌ளை வ‌ழிய‌னுப்பிவைக்க‌ எல்லோடும் ஆய‌த்த‌மாக‌ நிற்கிறார்க‌ள்.வாச‌லில் கார் வ‌ந்து நின்ற‌து. சிவ‌சோதியும் க‌ண‌வ‌னும் பிள்ளைக‌ளும் இற‌ங்கின‌ர்.சிவ‌சோதி அம்மாச்சி என‌க்கூப்பிட்டு என‌னைத்தெரிகிற‌தா என‌க்கேட்டாள்.பொன்னுக்கிழ‌வி ஒன்றும்பேசாது கிட‌ந்தாள்.சைல‌ஜா கூப்பிட்ட‌போதும் ஒரு அசைவும் தென்ப‌ட‌வில்லை.

சிவ‌சோதிவ‌ந்து இர‌ண்டுநாட்க‌ளாகிவிட்ட‌து.எல்லாம் அப்ப‌டியேதான் உள்ள‌து.  த‌ங்க‌ம் உரைச்சுப்ப‌ருக்கினால் ஆசை அட‌ங்கும் என‌ யாரோஒ ருபுத்திசாலி சொன்னார்.அதையும் செய்து பார்த்தார்க‌ள் ஒரு அசைவும் தென்ப‌ட‌வில்லை.

 பொண்க‌ளிடையே திடீரென‌ ஒருப‌ர‌ப‌ர‌ப்புத்தென‌ட்ட‌து.ச‌த்த‌ம் வெளியேவ‌ராம‌ல் க‌தைத்தார்க‌ள். சில‌ர் ந‌ம்ப‌ மாட்டாம‌ல் உண்மை‌யா என‌ அறிவ‌த‌ற்கு வெளியேசென்ற‌ன‌ர்.அதை அவ‌தானித்த‌ ஆண்க‌ளும் என்ன‌ என‌ அறிவ‌த‌ற்கு ஆர்வ‌ம் காட்டின‌ர்.ஆண்களும் அறிந்துவிட்ட‌ன‌ர்.என்ன‌டாப்பா இந்த‌க்கிள‌வி இப்பிடிக்கிட‌க‌க‌ அது அப்பிடியாப்போச்சு என்ற‌ன‌ர்.

    பொன்னுக்கிழ‌விக்க‌ருகில் சென்ற‌ ச‌ர‌ஸ்வ‌தி மெதுவாக‌க்குனிந்து காத‌ருகே அம்மா என‌ மூன்று முறை கூப்பிட்டாள்.கிழ‌வி மெல்ல‌க் க‌ண்ணைத்திற‌ந்து பார்த்தாள்.சைல‌ஜா சாம‌த்திய‌ப்ப‌ட்டுவிட்டாள் என்று ச‌ர‌ஸ்வ‌தி கூறினாள்.

 கிழ‌வி க‌ண்ணை ந‌ன்றாக‌ விழித்துப்பார்த்துச் சிரித்தாள். ஏதோ சொல்வ‌த‌ற்கு முய‌ற்சித்தாள் . வார்த்தைக‌ள் வ‌ர‌வில்லை.ச‌ர‌ச‌க்கா என‌ யாரோகூப்பிட்ட‌த்திரும்பிப்பார்த்த‌ ச‌ர‌ஸ்வ‌தி மீண்டும் பொன்னுக்கிழ‌வியைப்பார்த்த‌போது க‌ண்க‌ள் மூடி இருந்த‌ன‌. அவை நிர‌ந்த‌ர‌மாக‌ மூடிவிட்ட‌ன‌.

சூ.ஏ.ர‌விவ‌ர் மா 01/02//1981
ஈழ‌நாடு வார‌ம‌ல‌ர் 01/02/1981

ஆடி அடங்கிய நித்தி


""யன்னலைத் திறந்தால் காற்று வரும்'' என்று நித்தியானந்தா கூறியதால் மனம் மகிழ்ந்தவர்கள் கதவைத் திறந்து அவரை தம் மானசீக குருவாக ஏற்றார்கள். நித்தியானந்தாவின் பள்ளியறைக் கதவை  நடிகை ரஞ்சிதா திறந்ததனால்  நித்தியானந்தாவின் காலடியில் கிடந்தவர்கள், அவரை  தம் காலால் எட்டி உதைத்தனர். கோபுரத்தில் இருந்த நித்தியானந்தா சாக்கடையில்  தூக்கி வீசப்பட்டார்.
வசீகரப் புன்னகையால்  கவர்ந்த இளந் துறவியின் பின்னால் முதியவர்களும் இளைஞர்களும் சென்றனர். பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் ஆகியன நித்தியானந்தாவின் புகழ் பாடின.  உலகெங்கும் கிளை நிறுவிய நித்தியானந்தாவின் ஆச்சிரமத்தில் இலட்சக்கணக்கான தொண்டர்கள் இணைந்தனர். கோடிக்கணக்கான பணம் புரளத் தொடங்கியது.
 நித்தியானந்தாவின்  ஆன்மிக வலையில் தம்மை மறந்தவர்கள் அவரிடம் சேர்ந்த கோடிக்கணக்கான  சொத்துகளைக் கவனிக்கத் தவறிவிட்டனர். ஆடம்பர மாளிகையிலும் இடாம்பீக கார்களிலும்  துறவி பவனி வருவதை  யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. நித்தியானந்தாவால் பாதிக்கப்பட்ட சிலர் அவருடைய லீலைகளை வெளியே  கொண்டு வர முயற்சி செய்தனர். அவர்கள் வைத்த பொறியில் வசமாக  மாட்டினார் நடிகை ரஞ்சிதா.
நித்தியானந்த சுவாமிகளின் புகழைப்  பரப்பிய ஊடகங்கள் அனைத்தையும் நித்தியானந்தா  ரஞ்சிதா படுக்கையறைக் காட்சிகள் ஆக்கிரமித்தன. இந்த அசிங்கத்தினால் அவமானப்பட்ட பலர் நித்தியானந்தாவைத் தூக்கி வீசினர். அந்தப் படங்கள் எல்லாம் போலி என நம்பிய சிலர் நித்தியானந்தாவின்  காலடியில் தவமிருந்தனர்.
பெருமை இழந்து பெட்டிப்பாம்பாக இருந்த நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக மதுரை ஆதீனம் அறிவித்தமை. இந்து சமய அபிமானிகளை அதிர்ச்சியடையச் செய்தது.  இந்த நியமனத்தை  எதிர்த்து பல போராட்டங்கள்  நடைபெற்றன. இதற்கெல்லாம்  அசராத மதுரை ஆதீனம் தனது நியமனத்தில் உறுதியாக  இருந்தார். திருஞானசம்பந்தரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மதுரை  ஆதீனத்தை நித்தியானந்தாவின் சீடர்கள் கைப்பற்றினர். மதுரை ஆதீனத்தின் செயற்பாடுகளில் நித்தியானந்தாவின் கை ஓங்கியது.  மதுரை ஆதீனம் அருணகிரியின் உத்தரவை யாருமே  மதிப்பதில்லை. தான் செய்த தவறை மதுரை ஆதீனம் உணர்ந்து கொண்டார். அதனைப் பகிரங்கப்படுத்த முடியாத சூழ்நிலையில் இருந்தார்.
ரஞ்சிதாவுடனான படுக்கையறைக் காட்சிகளால் அடங்கிக் கிடந்த நித்தியானந்தா  இளைய ஆதீனமானதும்  தன் சுயரூபத்தை  வெளிக்காட்டத் தொடங்கினார். நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்டங்களும் நித்தியானந்தாவின் தொல்லைகளும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை  நெருக்கடிக்குள் தள்ளின.
நித்தியானந்தாவின் மீது பாலியல் புகார் கூறி, தலைமறைவாக  இருந்த ஆர்த்தி வெளிப்பட்டமை நித்தியானந்தாவுக்குத் தலையிடியைக் கொடுத்தது. ஆர்த்தியின் குற்றச்சாட்டுக் காரணமாக ஆண்மைப் பரிசோதனைக்கு வருமாறு  நீதிமன்றம் விடுத்த அழைப்பு நித்தியானந்தாவைத் துரத்தியது. நீதிமன்றத்தில் ஆஜராகாது காலத்தைக் கடத்தினார் நித்தியானந்தா.
நித்தியானந்தாவின் சில்மிஷங்களை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த தமிழக அரசு விழித்துக் கொண்டது.  மதுரை ஆதீனத்துக்கு எதிரான வழக்குகள், தமிழக அரசின் கண்களைத் திறந்தன. தமிழக அரசும் நீதிமன்றமும் கண்கொத்திப்  பாம்பாக மதுரை ஆதீனத்தை அவதானித்ததனால் தன்னை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக்கி இந்து மக்களுக்கு அதிர்ச்சியளித்த மதுரை ஆதீனம், இளைய ஆதீனம் பதவியை பறித்து நித்தியானந்தாவை நிர்க்கதியாக்கினார்.
அடுத்த ஆதீனம் நான்தான்  என்ற இறுமாப்பில் இருந்த நித்தியானந்தா ஆடிப் போனார். பதவி பறிக்கப்பட்டு நித்தியானந்தா  தலைமறைவானார்.
இளைய மடாதிபதி என்ற பட்டம் தன்னைக் காப்பாற்றும் என்று நம்பி  இருந்த நித்தியானந்தாவைப் பலிக்கடாவாக்கி மடாதிபதி என்ற மகுடத்தைத் தக்கவைத்துள்ளார் அருணகிரிநாதர்.
இளைய மடாதிபதி என்ற பதவியை  நித்தியானந்தாவிடமிருந்து பறித்த பின்னரும் அருணகிரிநாதரால்  நிம்மதியாக இருக்க முடியாதுள்ளது. அவருக்கு எதிரான வழக்குகளில் ஆஜராக வேண்டிய நிலை உள்ளது. மதுரை ஆதீனத்தின் சொத்துகளை தன்னிச்சையாக  குறைந்த விலைக்கு விற்பனை செய்தமை அரசியல்வாதிகளை வரவேற்பதற்காக பணம் செலவளித்தமை போன்ற வழக்குகளுக்கு பதில் கூற வேண் டியதால் அதிர்ந்து போயுள்ளார் அருணகிரிநாதர்.
 மெட்ரோநியூஸ் 26/10/12