அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஆப்கானிஸ்தானின் எழுச்சிக்காக செய்தவை அனைத்தையும் தலிபான்கள் இரண்டு வாரங்களில் தலைகீழாக மாற்றி விட்டனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதற்கு பல காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆய்வாளர்கள் ஆளுக்கொரு கருத்தை முன் வைக்கின்றனர். தாய் நாட்டைப் பாதுகாக்காது தலைமரைவாகும் ஆப்கானிஸ்தான் இராணுவம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கண்டித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி
ஜோ பிடனின் குற்றச்
சாட்டை ஆப்கான் இராணுவத்தின் 209 வது ஷாஹீன் படையின் செய்தித் தொடர்பாளராக
இருந்த கேணல் ஹனிஃப் ரெசாய்
மறுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைமை, இராணுவ ஊழலின் பலவீனம் ஆகியவற்றால் தீவிரவாதிகளின்
மீள் எழுச்சி பெற்றனர் என்று ஹனிஃப் ரெசாய், ஸ்கை நியூஸிடம் கூறினார். ஆனால்,
இரட்டை வேடமிட்ட பாகிஸ்தானால்தான் தலிபான்கள் எழுச்சி பெற்றனர்
பஞ்ஷீரில் இருக்கும் என துணை ஜனாதிபதி தெரிவித்தார்.
கேணல்
ஹனிஃப் ரெசாய் 209 வது ஷாஹீன் கார்ப்ஸின் செய்தித் தொடர்பாளராக இருந்தார், இது வடக்கு
நகரமான மசார்-இ-ஷெரிஃபில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் இராணுவப் பிரிவாகும்.
இப்போது
அவர் ஆப்கானிஸ்தானுக்கு வெளியே அடையாளம்தெரியாத
இடத்திலிருந்து ஸ்கை நியூஸுடன் தொலைபேசியில் உரையாடினார். அங்கு அவரும் அவரது குடும்பத்தினரும்
தலைமறைவாக உள்ளனர். அங்கு கூட தமக்கு பாதுகாப்பு இல்லை என்றார்.
20 வருடப் போரில் 66,000 ஆப்கானிஸ்தான் துருப்புக்களின் இறந்தனர். இது அமெரிக்காவுக்குத் தெரியாதா என அவர் கேள்வி எழுப்புகிறார். அவர் ஆகஸ்ட் 11 அன்று அப்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானியின் மசார்-இ-ஷெரீஃப் வருகைக்கு வடக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அன்று, அருகிலுள்ள குண்டூஸில், நூற்றுக்கணக்கான வீரர்கள் தலிபான்களிடம் சரணடைந்தனர். கர்னல் ரெசாய் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆப்கானிஸ்தானுக்கு வெளியே பதுங்கி உள்ளனர்மசார்-இ-ஷெரீப்பில், உள்ளூர் வல்லுநர்களான அட்டா முகமது நூர், அப்துல் ரஷித் தோஸ்தம் ஆகியோருடன் கானி ஒரு சந்திப்பை நடத்தினார். மூன்று நாட்களுக்குப் பிறகு, வடக்கு ஆப்கானிஸ்தானின் கடைசி நகர்ப்புற மசார்-இ-ஷெரீப் தலிபான்களிடம் வீழ்ந்தது.அடுத்த நாள் தலைநகர் காபூலும் தலிபான்களால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு ஓடிவிட்டார். அவரை நம்பிய மக்களையும், நாட்டையும் விட்டு ஜனாதிபதி வெளியேறியது அவமானமானது.. "அஷ்ரப் கனிக்கு ஆப்கானிஸ்தான் மக்களிடமோ அல்லது நாட்டிலோ ஆர்வம் இல்லை," என்று கேணல் ரெசாய் கூறினார்.
ஆப்கானிஸ்தானில்
பணி தோல்விக்கு முக்கிய பங்களிப்பாளராக இல்லாவிட்டால் அரசியல் மற்றும் இராணுவ அளவில்
உள்ளூர் ஊழல் மிக முக்கியமானதாக இருக்கும் என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் நீண்டகாலமாக
எச்சரித்து வந்தன. சர்வதேசப் படைகள் திரும்பப் பெற்ற பின்னரும், அவர்கள் விட்டுச் சென்ற சொத்துகள் முறையாக விற்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன,
ஒரு சில தனிநபர்கள் அவற்றின் வருமானத்தை அபகரித்தனர்.
"அரசியலிலும் இராணுவத்திலும் மிக விரிவான
ஊழல் இருந்தது," என்று அவர் கூறினார். நான் உட்கார்ந்து உங்களுக்கு உதாரணங்களைக்
கொடுத்தால், பல, பல உதாரணங்கள் இருக்கும், எரிபொருள், உணவு, சம்பளம் பற்றிய விஷயங்களை
நான் மேற்கோள் காட்ட முடியும் கேணல் ரெசாய் கூறினார். ஆப்கான் மக்கள்
தலிபான்களின் ஆட்சியை விரும்பவில்லை
என என கேணல் ரொசாய் உறுதியாகக் கூறினார்.
ஆப்கான் ஜனாதிபதியாக தன்னை அறிவித்துக் கொண்டவரும் தாலிபான்களை எதிர்த்து கொரில்லா போரில் ஈடுபட்டவருமான அம்ருல்லா சலே சி என் என்னுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பாகிஸ்தானின் தாலிபான்கள் ஆதரவு போக்கை வெகுவாகக் கண்டித்தார். ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பி ஓடியதால் துணை ஜனாதிபதியான தான் தான் இப்பொ ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி என அறிவித்துள்ளார் அம்ருல்லா சலே.
தலிபான்கள்
ஒருபோதும் நெருக்கடியில் இருந்ததில்லை என்பது தெளிவு. பாகிஸ்தானை தங்கள் அடிப்படை ஆதரவாக
வைத்துக் கொண்டுள்ளனர். . தலிபான்களின் பிடியில்தான்
பாகிஸ்தானே உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானின் ஒத்துழைக்க அமெரிக்கா
பணம் கொடுத்தது. ஆனால் அமெரிக்கா எவ்வளவு பணம் கொடுத்ததோ அந்த அளவுக்கு பயங்கரவாதத்துக்கும்,
தலிபான்களுக்கும் பாகிஸ்தான் ஆதரவளிக்கும் தைரியமும் வளர்ந்தது. எனவே அணு ஆயுத நாடானா
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்ததையோ ஆப்கானிஸ்தானின் மேற்கத்திய கூட்டணிக்கு எதிராக
போர் மூண்டதைப் பற்றியோ பேசவே இல்லை.
டோகா பேச்சுவார்த்தைகள் தலிபான்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற மாட்டார்கள் என்பதை நியாயப்படுத்தியது. வாக்குறுதியை தூக்கி எறிந்து விட்டு உலக நாடுகளை முட்டாள்களாக்கி விட்டனர் தலிபான்கள். டோகா பேச்சுவார்த்தையின் நோக்கமே உலக நாடுகளின் கருத்தை பிரித்து வைத்து அமைதி பேச்சுவார்த்தையைப் பற்றி நம்பிக்கை ஏற்படுத்தத்தான், ஆனால் அப்படி ஒன்று இல்லை என்பதே அம்சருலாவின் வாதம்.
தலிபான்கள் ஆப்கானிஅக்
கைப்பற்ரியுள்ளனர். வெளிநாட்டுப் படைகலும்
அவர்களுக்கு உதவியவர்களில் பலரும் ஆப்கானை விட்டு
வெளியேறி விட்டனர். ஆனால், நாட்டை
விட்டு வெளியேற வழி இல்லாத ஆப்கான்
மக்களுக்கு ஆதரவு யார் என்பதே
இன்றைய மிகப் பெரும் கேள்வி.
தலிபான்களின் ஆட்சி எப்படி
இருக்கும் எனபது அனைவரும்
அறிந்ததே. எதைச் செய்ய மாட்டோம் என தலிபான்கள் தெரிவித்தனரோ
அதனை கச்சிதமாக செய்கிறார்கள்.
ஆப்கானின் புதிய அரசாங்கத்தினுடைய கொள்கைகள், வெளிநாட்டு உறவுகள் என்பனவே அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்றன.