Showing posts with label இந்தியா விளையாட்டு. Show all posts
Showing posts with label இந்தியா விளையாட்டு. Show all posts

Sunday, December 14, 2025

அன்கேப்ட் வீரராகும் அனுபவசாலிகள்


 2026 ஐபிஎல் மினி ஏல வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான விஜய் சங்கர், கரண் சர்மா ஆகியோர், "அன்கேப்ட்" (Uncapped - உள்ளூர் வீரர்கள்) பிரிவில் ஏலத்தில் களமிறங்கவுள்ளனர். சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருந்தாலும், பிசிசிஐ-யின் விதிகளின்படி இவர்கள் உள்ளூர் வீரர்களாகக் கருதப்படுவது அணிகளுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி டோனியைத் தக்கவைப்பதற்காக, பிசிசிஐ ஒரு பழைய விதியைத் தூசி தட்டி எடுத்தது. அதன்படி, "ஒரு இந்திய வீரர் கடந்த 5 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20) விளையாடாமல் இருந்தால், அவர் அன்கேப்ட் (Uncapped) வீரராகக் கருதப்படுவார்."

இந்த விதியைப் பயன்படுத்தித் தோனி குறைந்த விலையில் தக்கவைக்கப்பட்டார். இப்போது அதே விதியைப் பயன்படுத்தி விஜய் சங்கர், கரண் சர்மா ஆகியோர் ஏலத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர், 2019 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்காகக் கடைசியாக விளையாடினார். அதன்பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 5 ஆண்டுகள் கடந்துவிட்டதால், அவர் இப்போது 'அன்கேப்ட்' வீரராகிவிட்டார்.

சர்வதேச அனுபவம் கொண்ட ஒரு வீரர், வெறும் ரூ.30 லட்சம் அடிப்படை விலையில் ஏலத்திற்கு வருகிறார் என்பது ஐபிஎல் அணிகளுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாகும். அவரை மாற்று வீரராக சில அணிகள் வாங்கக் கூடும்.

38 வயதான அனுபவச் சுழற்பந்து வீச்சாளரான கரண் சர்மா, கடைசியாக 2014-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். 10 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இவரும் இயல்பாகவே அன்கேப்ட் பிரிவில் வருகிறார். மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி போன்ற அணிகளுக்காக ஆடிய இவரின் அடிப்படை விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Tuesday, October 12, 2021

பஞ்சாப் அணியின் ஏழு வருட காத்திருப்பு


 ராகுல் தலைமையில் ஐபெல் போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஓஃப் சுற்றுக்குத் தகுதி பெறாது வெளியேறியது.  இதனால் , ஐபிஎல் வரலாற்றில் சோகமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியிருக்கிறது.2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில்   இரண்டாவது இடம் பிடித்தித பஞ்சாப் அணி  அதன் பிறகு அந்த   பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் திணறி வருகிறது.

 கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி இந்த ஆண்டு மொத்தம் உள்ள 14 லீக் ஆட்டங்களில் ஆறில் மட்டுமே வெற்றி பெறது. எட்டுப் போட்டிகளில் தோல்வியடைந்தது.  12 புள்ளிகளுடன் 6வது இடம் பிடித்தது.தொடர்ச்சியாக 7 முறை பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போயிருக்கும் பஞ்சாப் அணி, ஐபிஎல் வரலாற்றில் அவல சாதனையை தன்வசமாக்கியிருக்கிறது. முன்னதாக டெல்லி கப்பிடல்ஸ் அணியும் தொடர்ச்சியாக ஆறு முறை ஐபிஎல் பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் இருந்தது, தற்போது அந்த எண்ணிக்கையை ஏழாக  மாற்றியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

2008ம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில்  பஞ்சாப் அணி அரை இறுதிப் போட்டிவரை வரை முன்னேறியது.

டெல்லி  க‌ப்பிடல்ஸ் அணி 2013 முதல் 2018  வரை தொடர்ச்சியாக ஆறு தொடர்களில் பிளே ஓஃப் சுற்றுக்குதகுதி பெறாமல் இருந்தது. ஆனால் தோல்விப்பாதையில் இருந்து மீண்டும் 2019  ஆம் ஆண்டு மூன்றாம் இடத்தையும், 2020 ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தையும்,   பிடித்தது.

 

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் சீசன்களில் டெல்லி க‌ப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் , பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய மூன்று அணிகள் மட்டுமே இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளாக உள்ளன. ஆனால் இம்முறை டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஓஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. பெங்களுருவும் பஞ்சாப்பும் வெளியேறியதால் டெல்லி மீது எதிர் பார்ப்பு கூடியுள்ளது.