Showing posts with label ஸ்ராலின். Show all posts
Showing posts with label ஸ்ராலின். Show all posts

Saturday, December 12, 2015

அல்லல்படும் மக்கள்மீது திணிக்கப்படும் நிவாரண அரசியல்

வந்தாரை வரவேற்ற தமிழத்தின் தலை நகரான சென்னை மக்கள் உணவுக்கும் குடிநீருக்கும் கையேந்தும்   நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.  சென்னை இப்போது சேறும் சகதியுமாக... மலை மலையான குப்பையாக மாறியிருக்கிறது. வரலாறு காணாத அளவிற்கு பெய்த பெருமழையால் பாதிக்கப்படட சென்னை மாநகரில் எப்போது இயல்பு நிலை திரும்பும் என்று என காத்திருக்கின்றனர் பொதுமக்கள். டிசம்பர் 2 ஆம்திகதி  காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 340 மில்லிமீற்ற  மழை சென்னையில் பெய்துள்ளது. பொதுவாக டிசம்பர் முழுவதிலுமே 250 மிமீ மழைதான் பெய்யும். இதுதான் உண்மை நிலவரம்.
 டிசம்பர் 1 ஆம்திகதி  செவ்வாய்கிழமை காலை 8.30 தொடங்கி புதன்கிழமை 8.30 மணிவரை காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் மட்டும் 494.20 மி.மீ மழை பெய்து மக்களை நடுங்க வைத்தது. திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 475 மி.மீ மழை பெய்து கதிகலங்க வைத்தது
 நவம்பர் மாதம் பெய்த மழையில் செம்பரம்பாக்கம் ஏற்கனவே நிரம்பியிருக்க டிசம்பர் 1 ஆம் திகதி பெய்த மழை நீரால் ஏரி உடையாமல் இருக்க அனைத்து நீரும் அப்படியே அடையாறில் திறந்து விடப்பட்டது. இந்த வெள்ளத்துடன் சென்னையில் பெய்த மழை வெள்ளமும் இணைந்து 80000 கனஅடி நீராக பெருக்கெடுத்து சென்னை நகருக்குள் புகுந்து கபளீகரம் செய்தது
  வெள்ளம் வடிந்த பின்னர் எஞ்சியிருப்பது சேறும் சகதியும், குப்பைகளும்தான். வீடுகளில் இருந்த அத்தியாவசியப் பொருட்கள் எல்லாம் வீதியில் இறைக்கப்பட்டிருக்கிறது. வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு தவிக்கிறார்கள் அங்கு வசித்தவர்கள்
 வெள்ளத்தில் இருந்து தப்பிக்க உயிரை கையில் பிடித்துக்கொண்டு கட்டிய துணியோடு வெளியேறிய மக்கள் வெள்ளம் வடிந்த பின்னர் தாங்கள் வசித்த பகுதிகளுக்கு வந்திருக்கிறார்கள். இதுநாள் வரை வசித்த வீட்டிற்குள் சேற்றை அள்ளி போட்டுவிட்டு போயிருக்கிறது வெள்ளநீர்.

உ ணவுக்காகவும், குடிநீருக்காகவும், பாலிற்காகவும் மக்களை கையேந்தும் நிலைக்கு கொண்டுவந்து விட்டிருக்கிறது இயற்கை ஆடிய கோரத்தாண்டவம்.

தொலைகாட்சி  பெட்டி , குளிர்சாதனப்பெட்டி, மின்விசிறி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் முற்றிலும் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டிய வீடு சேதமடைந்துள்ளதை விவரிக்க முடியாத வேதனையில் ஆழ்ந்துள்ளனர் மக்கள்.
 மழை வெள்ளத்திற்கு மிஞ்சியப் பொருட்கள் பழுதாகி உள்ளதால் அவற்றை உபயோகிக்க முடியாத நிலையே இருக்கிறது. பொருட்சேதம், நிறைந்துள்ள குப்பைகள் ஒருவித மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது இங்குள்ள மக்களுக்கு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என இத்தனையையும் மீறி இயல்பு நிலைக்கு வர மக்கள் முயற்சித்தாலும், அவர்கள் அனுபவிக்கும் துயரம் சொல்லில் அடங்காதவையாக இருக்கிறது.
 
 இந்த பெருவெள்ளம் ஒருவகையில் மக்களை ஒன்றிணைத்துள்ளது என்றே சொல்லலாம். வீடுகளை இழந்து, உடமைகளை இழந்து தவித்து வருவோருக்கு சக மனிதர்களின் ஆறுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.   
மழை வெள்ளம் என்பன வழமையானவைதான்.ஒரு சில சிறிய சேதங்களுடன் வெள்ளம்  வடிந்துவிடும் என எதிர்பார்த்திருந்தவர்கள் ஏமாந்து போனார்கள்.அவர்கள் சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள் அனைத்தும் கண்முன்னாலேயே அடித்துச் செல்லப்பட்டன. மழை,வெள்ளம,சுறாவளி,சுனாமி ,பூகம்பம்  போன்ற இயற்கை அனந‌ர்த்தங்களை மனிதனால் வெல்ல முடியாது. அவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை அதிலிருந்து  மீட்க முடியும்.மக்களைப் பாதுகாத்து அவர்களுக்கு உதவும் வரலாற்றுக்கடமையை செய்வதற்கு தமிழக அரசு தவறிவிட்டது.
மழை வெள்ளத்தால்  சென்னை மக்கள் அவதிப்படும்போது  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டில்  ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார்.எதிர்க் கட்சிகளின் கண்டனக் கணைகளுக்குப் பின்னர்தான் அவர் சென்னைக்குத் திரும்பினார். ஜெயலலிதா சென்னைக்கு வந்தபின்னரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.சமூக ஆர்வலர்களும் தன்னார்வத் தொண்டர்களும் பாதிக்கப்பட்டமக்களைக் காப்பாற்ற களம் இறங்கினார்கள். அரசின் மீது மக்களின்  கோபம் திசை திரும்பியது. சமூக வலைத்தளங்களின் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற உதவின.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழகில் ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அதனை எதிர்த்து வீதிக்கு இறங்கி போராட்டம் நடத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ இரண்டாம் கட்டத் தலைவர்களும் தொண்டர்களும் பேசாமடந்தைகளாக இருந்தனர். ஜெயலலிதாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதனால் அவர்கள் வாளாவிருந்தனர் பாதிக்கப்பட்டம் மக்களின் அவலக்குரலும் எதிர்க்கட்சிகளின் கண்டனங்களும் அரசின் காதுகளில் விளவில்லை.
சென்னையின் வெள்ளப்  பாதிப்பபைப் பார்வையிட மோடி வருகிறார் என்ற செய்தி பரவியதும் ஜெயலலிதா உசாரானார். ஹெலிக்கொப்டரில் ஏறி பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டா.. அதன்பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ புறப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடி ஏற்கெனவே  வழங்கிய உதவித்தொகையுடன் மேலும் ஆயிரம் கோடி ருபா வழங்க உத்தரவிட்டார். வழமைபோல் அத்  தொகை காணாது என தமிழக அரசு கூறியது.

. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை கைப்பற்றிய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அவற்றின் மீது ஜெயலலிதாவின் படத்தை ஓட்டினார்கள். நிவாரணம் உதவி என்பனவற்றை   ஜெயலலிதாதான் வழங்கினார் என்பதை மக்கள் அறிய  வேண்டும் என்பதற்காக இச்செயல் நடைபெற்றது. தன்னார்வலத் தொண்டர்கள் கொண்டுவந்த பொருட்களை அடித்துப் பறிப்பதிலும் அவர்கள் குறியாக இந்தனர்.  . தாமும்உதவி  செய்யாது.  உதவி செய்பவர்களையும் செய்யவிடாது தடுக்கும் அரசாங்கத்தின்  மீது மக்களின் கோபம்   திரும்பியது இந்த இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது காயை நகர்த்தியது.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரு இந்த இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் உதவி செய்ய களம் இறங்கியது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஸ்ராலின் சென்றார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களும் தொண்டர்களும் வெள்ளத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்தனர். கருணாநிதி, ஸ்ராலின் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட பொதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன கலைஞர்,சன் ஆகிய தொலைக்காட்சிகளின் பாதிக்கப்பட்ட மக்கள் தமது அவலங்களை வெளிப்படுத்தினார்கள். ஜெயா தொலைக் காட்சியில் அரசாங்கம் உதவி செய்வதாக காட்டப்பட்டது
 ராகுல் காந்தி வெள்ளத்தில் இறங்கி மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தமிழாக அரசியல் தலைவர்கள் அனைவரும் தமது தொண்டர்களுடன் மக்களுக்கு உதவினார்கள் கருணாநிதியும் தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாது பாதிக்கப்பட்ட மக்களைச்  சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால்,ஜெயலலிதா  மக்களைச்  சந்திக்கவில்லை. அரசியல் கட்சியை வழி நடத்துபவர் வழி நடத்துபவர். தமிழக முதல்வர் என்ற தகுதிகளுடன் இருக்கும் ஜெயலலிதா  பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காதது மிகப் பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது  

தமிழக மக்களின் நலனும் தமிழக அரசின் நலனும் வெவ்வேறானவை மட்டுமல்ல எதிரெதிரானவை என்பதை அதிகார வர்க்கத்தின் இந்தப் போக்கு பளிச்சென்று நமக்கு உணர்த்தியிருக்கிறது. மக்கள் நம்பி வாக்களித்து தேர்ந்தெடுத்த ஓர் அரசு நம் கண் முன்னால் அவர்களைக் கைவிட்டிருக்கிறது. மட்டுமின்றி, மக்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

இடர்பாடுகளிலும் இக்கட்டுகளிலும் சிக்கிச் சீரழிந்துள்ள மக்களை மீட்பதும் அவர்களை மீள்குடியமர்த்து வதும் அவர்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தருவதும் ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும். இந்தக் கடமையைச் செய்யத் தவறிவிட்டது தமிழக அரசு. சந்தேகமில்லாமல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோல்வி இது. இந்தத் தோல்வியின் கசப்பால்தான் அமைச்சர்களும் அதிமுக அடிப்பொடிகளும் மெய்யான அக்கறையுடன் நிவாரண உதவிகள் அளித்துவருபவர்கள்மீது பொறாமையுடன் பாய்கிறார்கள்.   தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி கடிதம் எழுதியுள்ளார். அதே நேரத்தில் தமிழகத்துக்கு முதன் முதலாக வெள்ள நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு ஜெயலலிதா நன்றி கடிதம் அனுப்பவில்லை. இதுகுறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஜெ. அனுப்பிய கடிதம்: கடந்த 3-ந்தேதி நீங்கள் எழுதிய கடிதத்திற்கும், தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாங்கள் அளித்த 5 கோடி ரூபாய் நன்கொடைக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 டிஷா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு அனுப்பிய கடிதத்தில் ஜெ கூறியிருப்பதாவது: கடந்த 4-ந்தேதி நீங்கள் எழுதிய கடிதத்திற்கும், ஒடிஷா முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து 5 கோடி ரூபாய் தர முன்வந்ததற்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மழையினால் ஏற்பட்ட பேரழிவின் அளவு மிக அதிகமானது. இந்த இயற்கை இடர்பாட்டின் விளைவுகளை போக்க எனது அரசாங்கம் அயராது பணியாற்றி வருகிறது. உங்களின் அக்கறைக்கும், நல்வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார். அதே நேரத்தில் கர்நாடகாவின் நிதி உதவியை வாங்க தமிழக அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அம்மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு ஜெயலலிதா நன்றி கடிதம் அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது.
கருணாநிதியின்  ஆட்சியில் 2008ஆம் ஆண்டு பெருமழை பெய்த போது   ஜெயலலிதா விடுத்த அறிக்கை ஒன்றில்,  திராவிட முன்னேற்றக் கழக அரசைக் கடுமையாகக் கண்டித்திருந்தார். அரசாங்கம்  அறிவித்திருந்த சலுகைகள் போதாது என்றும் கூறியிருந்தார்  
தமிழாக அமைசசர்களான செல்லூர்  ராஜு, நந்தம் விஸ்வநாதன் கூகுல இந்திரா ஆகியோர் ஜெயலலயொதாவின் தொகுதிக்கு சென்ற போது கோபமுற்ற மக்கள் அதம்து அதிருப்தியை வெளிப்படுத்தினர்.   காரில் இருந்து இறங்காது குசலம் விசாரித்தவர்களை மக்கள் வற்புறுத்தி இறங்க ச்  செய்தனர் 

 சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஐ.டி., துறைக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டு 20 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. யமஹா,  போட்,என்பீல்ட் ஆகிய வாகன நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.100 கோடி ரூபா வரையான் உணவுப்பொருட்கள்  சேதமடைந்துள்ளன.  
பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, கன்னியாகுமரி மாவட்ட இலங்கை அகதிகள் பணமும் நிவாரணப்பொருட்களும் வழங்கினர்.

சென்னையில் பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கன்னியாகுமரி மாவட்டம்  பெருமாள்புரம், பழவிளை, ஞயுறான்விளை மற்றும் கோழிவிளை ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர்.  இப்பகுதியை சார்ந்த இலங்கை அகதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆண், பெண் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் விதம் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான துணிமணிகள், போர்வைகள் மற்றும் 13,370 ரூபாய் காசோலை ஆகியவற்றை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வெள்ள நிவாரண பொது மையத்தில் இன்று வழங்கினர். 

தமிழகத்தில் அகதிகளாய் வாழ்ந்தாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானாக முன்வந்து உதவி செய்த இலங்கை அகதிகளை அரசு அதிகாரிகளும், பொதுமக்களும்  பாராட்டினர்
வெள்ளம் வந்து கொட்டிவிட்டு போன குப்பைப்கிடங்காய் காட்சியளிக்கிறது சென்னை மாநகரம். பல ஆயிரம் தொன்  குப்பைகள் மலையாக குவிந்துள்ளன. இந்த குப்பைகளை அகற்றுவதற்கு   பணியாளர்கள் போதாது என்பதால் பிற மாநகராட்சிகளில் இருந்து ஆயிரக்கணக்கான துப்புறவு பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் தலைநகர் சென்னை வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிபோன சென்னையில் மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. பொதுமக்கள் தற்போது வெள்ளம் வடிய ஆரம்பித்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கடந்த வாரம் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அனைத்து சாலைகளிலும் 2 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் பாதிப்பால், தேங்கிய குப்பைகள் அனைத்தும் வெள்ள நீரில் அடித்து கொண்டு சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளன.  ,  
  வெள்ளம் வடிந்த பகுதிகளில் குப்பைகள் மலைபோல குவிந்துள்ளன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது. சென்னையில் இப்போதைக்கு உடனடியாக செய்யவேண்டிய முதல்பணி குப்பைகளை அகற்றுவதுதான்.
மலேரியா.எலிக்காய்ச்சல்,டயரியா போன்ற நோய்கள் தாக்கக்ககூடிய அபாயமும் உள்ளது. வெள்ளத்தில் அடித்துச்  செல்லப்பட்ட கால் நடைகள்  ஆங்காங்கே இறந்து துர்நாற்றம் வீசுகின்றன.  இவற்றாலும் நோய்கள் உருவாகும் நிலை உள்ளது.
  கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 5,000 கோடி நிதியுதவி வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்த தமிழக அரசுமறுபுறம் கர்நாடக அரசு அளிக்க முன்வந்த 5 கோடி ரூபாய் நிதியுதவியை பெற முதலில் மறுத்தது. இத்  தகவல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தங்களது உதவி  ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு  அறிவித்தது.  மத்திய அரசு அனுப்பிய உணவுப்பொதிகளையும் நிவாரண உதவிகளையும் தமிழாக அரசு உடனடியாக விநியோகிக்க முன்வரவில்லை. தமிழக அரசின் மந்தகதியான நிர்வாகம் மக்களுக்கு  பெரும் சோதனையாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியான வதந்திகள் மக்களை பெரும் பீதிகுள்ளாக்கின. மழை தொடரும் வெள்ளம் அதிகரிக்கும்,நாசா அறிவிப்பு என வெளியான வதந்திகள் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் துன்புறுத்தின.
 தமிழக சட்டமன்றத்  தேர்தலின் போது இந்தப் பாதிப்பின் தாக்கம் அதிகளவில் இருக்கும். கோபத்தில் இருக்கும் மக்களுக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தூரத்தில் இல்லை.
வர்மா 
தமிழ்த்தந்தி
13/12/15

Sunday, December 6, 2015

கூட்டணி சேர தடுமாறும் தலைவர்கள் தெளிவான சிந்தனையில் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் பற்றிய அறிவிப்பு இன்னமும் வெளிவரவில்லை. தேர்தலை நடத்துவதற்கு  அதிகாரிகள் தயாராக இல்லை. ஆனால்,தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் அறிவிக்கப்படாத தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டன.தமிழக ஆளும் கட்சியின் தப்புகள்,தவறுகள், அராஜகங்கள், அலட்சியங்கள் அனைத்தும் ஆராயப்படுகின்றன.சிலகட்சிகள் கூட்டணி  பற்றி அறிவித்துவிட்டன. சிலகட்சிகள இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்துகின்றன.சில தலைவர்கள் பிடிகொடாமல் நழுவுகின்றனர்.
 தேர்தலுக்கு முன்னைய கருத்துக் கணிப்புகள் மூலம் மக்களின் மனநிலையை சில நிறுவனங்களும் சஞ்சிகைகளும் வெளிப்படுத்துகின்றன.ஆளும் கட்சிக்கு சாதகமாகவும் பாதகமாகவும் கருத்துக்கள் வெளியாகின்றன. கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடுவதில்  ஜெயலலிதா உறுதியாக உள்ளார். கூட்டனிக்கு எந்தக்கட்சியும் வராததனால் வெறுத்துப் போய் இருக்கிறார் கருணாநிதி.வைகோ,திருமாவளவன்,இடதுசாரிகள் ஒன்றாக இருக்கின்றனர். விஜயகாந்த் மதில்மேல் பூனையாக பதுங்குகிறார். ராமதாஸ் மகனை முதல்வர்  வேட்பாளராக்கி தனிவழி போகிறார்.
அரசியல் தலைவர்கள் தாமும் குழம்பி தொண்டர்களையும் குழப்பிக்கொண்டிருக்கின்றனர். மக்கள் மிகத் தெளிவாக  இருப்பதை கருத்துக்கணிப்புகள் மூலம் அறியமுடிகிறது.  தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் செயற்பாட்டில் மக்கள் அதிக நம்பிக்கை வைக்கவில்லை. அவருடைய செயற்பாட்டை ஆகா ஓகோ  என்று  அதிகம் புகழவில்லை. அவருடைய செயற்பாடு சுமா ரெண்ரீ அதிகமானூர்  கூறியுள்ளனர்.   மக்களிடம் ஜெயலலிதாவின் செல்வாக்கு சரிந்துள்ளதை கருத்துக்கணிப்பு வெளிப்படுத்துகின்றது.

அடுத்த முதல்வர் வேட்பாளர் பட்டியலில்  ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார்.  ஜெயலலிதா இரண்டாவது இடத்திலும் கருணாநிதி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஸ்டாலினின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை கருத்துக்கணிப்பு தெளிவுபடுத்தியுள்ளது.  திராவிட முன்னேற்றக்  கழகத்திலும் தமிழகத்திலும் ஸ்டாலினின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. ஸ்டாலினின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை கருணாநிதியின் விசுவாசிகள் விரும்பவில்லை. ஸ்டாலினின்  ஆதரவாளர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர்.


தமிழக சட்டசபைத் தேர்தலில்  எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற முக்கியமான கேள்விக்கு மக்கள் அளித்த பதில் அரசியல்வாதிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  அதிகமாநூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 26.84 சதவிகிதமானோரும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  24.03 சதவிகிதமானோரும்  வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.   2.81 சதவிகித  வித்தியாசமே உள்ளது. வலுவான கூட்டணி சேர்ந்தால்   திராவிட முன்னேரரக் கழகம் வெற்றி பெற்றுவிடும். அதனால்தான் வலுவான  கூட்டணிக்காக கருணாநிதி காத்திருக்கிறார்.
விஜயக்காந்த் வழமைபூல் மூன்றாவது இடத்திலிருக்கிறார். அவருக்கு 7.98 சதவிகிதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  முதல்வரைத் தெரிவு செய்யும் சக்தி அவரிடம் உள்ளது. ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் கூட்டணி சேரமாட்டார். ஆகையால் அவரின் வரவை கருணாநிதி எதிர் பார்க்கிறார். விஜயகாந்தின் மனைவி பிராமளதா  கருணாநிதியையும் அவரது கட்சியையும் மிக மோசமாகத் தாக்கிப் பேசுகிறார். ஆகையால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் விஜயகாந்த சாய்வது சந்தேகம்.
 பாரதீய ஜனதாக் கட்சி நான்காவது  இடத்திலும்  வைகோ தலைமையிலான  கூட்டணி ஐந்தாவது இடத்திலும் உள்ளன. பாரதீய ஜனதாவுடன் இணைய விஜயகாந்த் விரும்புகிறார். மோடிக்கு எதிரான் அலை எழுந்துள்ளதால் விஜயகாந்தின் எண்ணம் பலிக்கப்போவதில்லை.வைகோ தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என இன்னமும் முடிவு செய்யவில்லை. இதனால் அவர்கள் பின்னடைவை எதிர்நோக்கக்கூடும். முதலமைச்சர் இல்லாத கட்சிக்கு மக்கள் வாக்களிக்கத் தயங்குவார்கள்.  அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கும்,   திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கும்  மாற்றீடான கட்சி என்ற முத்திரையுடன் புறப்பட்ட வைகோவின் கூட்டணிமமீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்று கருத்துக் கணிப்பின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆறாவது இடமும் காங்கிரஸ் கட்சிக்கு ஏழாவது இடமும் கிடைத்துள்ளன. மக்கள் மத்தியில் செல்வாக்கை  இழந்த பாட்டாளி மக்கள் கட்சி  கூட்டணி இன்றி தேர்தலை  சந்திக்கப்போவதாக அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்னறி தோல்வி உறுதி என்பதை அக்கட்சித் தலைவர்கள் உணரவில்லை.  காங்கிரஸு டன் கூட்டணி  சேர  எந்தக்கட்சியும் முன்வரவில்லை
Add caption
 மோடியையும் ஜெயலலிதாவையும் தேர்தலில் வீழ்த்த வடமாநிலத் தலைவர்கள் வ வியூகம் அமைக்க உள்ளனர். அவர்களின் வியூகத்தினுள் காங்கிரஸ் கட்சியும் உள்ளடக்கப்பட்டால் அதற்கு விமோசனம் கிடைக்கும்.தமிழகத்தின் பலமான கட்சியான  திராவிட முன்னேற்றக்  கழகத்தை வடமாநிலத் தலைவர்கள் பலப்படுத்துவார்கள்  அப்போது காங்கிரஸ் கட்சியும் அதற்குள் உள்ளடக்கப்படலாம். சிலவேளை விஜயகாந்தும் வடமாநிலத் தலைவர்களின் வியூகத்தினால் உள்ளீர்கப்படலாம். இப்படிபட்ட ஒரு சந்தர்ப்பத்தையேர் கருணாநிதி எதிர்பார்கிறார்.

21.9 சதவீதமானோர்  ஏனையவர்களுக்கு வாக்களிக்கபோவதாகத்  தெரிவித்துள்ளனர். இவர்கள் எந்தக்  கட்சியையும் சேராதவர்கள். தேர்தலன்றுதான் இவர்களில் பலர் முடிவு செய்வார்கள். அதிகமானோர்  அரசுக்கு எதிரான முடிவையே  எடுப்பார்கள். ஐந்து வருடங்கள் அரசாங்கத்தின் நன்மை தீமைகளை அவதானித்து வாக்களிப்பவர்கள் அந்த ஆட்சியை அகற்றவே விரும்புவார்கள். எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியை விட இவர்களின் வாக்கு வங்கியே அதிக பலமானது
இவை அனைத்தும் தமிழகத்தை சூழ்ந்த வெள்ளத்துக்கு முன்னைய கருத்துக் கணிப்புகளே. வரலாறு காணாத வெள்ளம் தமிழக அரசுக்கு எதிரான உணர்வலைகளை எழுப்பி  உள்ளது. நிவாரணப் பணிகளும் மனிதாபிமான உதவிகளும் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை.   மத்திய அரசும் மாநில அரசும்  தமது இருப்பை  வெளிகாட்டுவதற்காக தனித் தனியாக உதவி செய்கின்றன.  ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய  உதவிகள் கிடைக்கவில்லை.
தமிழகத்தின் இயல்பு நிலை முற்றாக முடங்கி உள்ளது.  ஹிந்து உட்பட சில பத்திரிகைகள வெளிவரவில்லை. ஜெயா,  பொலிமர் ஆகிய  தொலைக்காட்சிகள் இயங்கவில்லை. விமானநிலையம் முடங்கியது.  பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை. வீடுகள், தொழிற்சாலைகள்,வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தமிழ சட்டமன்ற தேர்தலின் பேசு பொருளாக வெள்ள  அனர்த்தம் முதன்மைப் படுத்தப்படும்.
தமிழக அரசு விழித்துக் கொள்ளுமா. எதிர்க்கட்சிகள் பலமடையுமா என்பதை தேர்தல் நெருங்கும் போது தெரிந்து கொள்ளலாம்.
ரமணி
தமிழ்த்தந்தி
6/12/15



Tuesday, December 1, 2015

தமிழக மக்களின் வெறுப்பும் அரசியல் தலைவர்களின் விருப்பும்


தமிழக சட்டசபைத்  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில்  அரசியல் கட்சிகள் அனைத்தும் அறிவிக்கப்படாத தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டன. தேர்தல் போட்டியில் முன்னிலையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு இயற்கை சதி செய்கிறது. வரலாறு காணாத வெள்ளம் ஆளும் கட்சியின்மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  தமிழக அரசின் மந்தகதியிலான நிவாரணமும் எதிர்க்காட்சிகளின் சுறுசுறுப்பும் மக்களை சிந்திக்கத் தூண்டி உள்ளது. தமிழக அரசின் நான்கரை ஆண்டு கால ஆட்சியை மக்கள் எடைபோடத் தொடங்கி  உள்ளனர்.
1991, 2001, 2002, 2011, 2015 ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வர் அரியணையில் வீற்றிருந்தார்.அவர் முதல்வராக இருக்கும் போது சர்வ அதிகாரங்களையும் கையில் எடுத்து சர்வாதியாகவே வீற்றிருந்தார். ஒவ்வொரு முறையும் அவர் தப்பு செய்யும் போது தூக்கி எறி யும்    தமிழக மக்கள் அடுத்த தேர்தலில் அவரை முதல்வராக்கி  அழகு பார்த்தனர். ஒருமுறை தண்டிக்கும்   தமிழக வாக்காளர்கள் அடுத்தமுறை மன்னித்து வாழ்வு கொடுத்தனர்.. கருணா நிதியையும்  இதே போன்றுதான்    தமிழக மக்கள் அரியணையில் ஏற்றி இறக்குகின்றனர். இதனால் கருணாநிதி சற்று தெம்பாக இருக்கின்றார். அனால், தமிழக அரசியல் தலைவர்கள்  அவரின் கையை பற்றிப்பிடிக்க மறுக்கின்றனர். இது ஜெயலலிதாவுக்கு  சாதகமாக உள்ளது. ஜெயலலிதாவின் ஆட்சிமீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். மக்களின் வெறுப்பை  வெற்றியாக்க வேண்டும் என கருணாநிதி துடிக்கிறார்.
2 ஜி ஊழல் ,மின்வெட்டு ஆகியன காரணமாக திராவிட முன்நீர்ரக் கழகம் ஆட்சியை இழந்தது. தடை இல்லா மின்சாரம் தருவேன் என உறுதியளித்த ஜெயலலிதாவால் அதனை இன்று வரை நிறைவேற்ற முடியவில்லை. தேர்தல்  காலத்தில் ஆட்சிபீடம் ஏறுவதற்காக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் கலந்துவிட்டன. அரசியல் பழிவாங்கல்கள் தாராளமாக நடைபெற்றன. அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டடம் செய்தவர்கள் அடக்கப்பட்டனர். ஆட்சியாளர்களின் அராஜகத்துக்கு காவல்துறை துணைபோனது.

அனல்மின்சாரம்,காற்றலை மின்சாரம்,சஊரிய ஒலிமின்சாரம் என்பனவற்றின் மூலம் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்குவேன் என தேர்தல் சமயத்தில் ஜெயலலிதா உறுதியளித்தார்.கருணாநிதியின் ஆட்சியில் நடைப்பெற்ற மின்வெட்டு ஜெயலலிதாவின் ஆட்சியிலும் தொடர்கிறது. மின்வெட்டை இல்லாமல் செய்வதற்கான எந்தவித முயற்சியையும் ஜெயலலிதா முன்னெடுக்கவில்லை. 
 ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின்பதவி எப்போ  பறிமுதலாகும் எனத்தெரியாது.   அமைச்சுப் பதவி நிரந்தரமானதில்லை என அரசியல் தெரியாதவர்கள்கூட அடித்துக் கூறுவார்கள். முன்னாள் அமைச்சர்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.  இதுவரை  24  முறை அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது.
அவர்களில் 11 மட்டும்தான் தொடர்ந்தும் அமைச்சர்களாக உள்ளனர்.ஏனையோரின் பதவி பலவித குற்றச்சாட்டுகளால் பறிக்கப்பட்டது. பின்னர் குற்றச்சாட்டுகலில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படாமலே மீண்டும்  பதவி வழங்கப்பட்டது. அமைச்சர்கள் கொத்தடிமைபோல்  நடத்தபோபடுகிறார்கள்.அமைச்சுப் பதவி கிடைப்பதனால்  தலையாட்டி பொம்மைகளாகவே அவர்கள் வலம் வருகிறார்கள். ஜெயலலிதாவின் புகழ் பாடுவதிலேயே  அமைச்சர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
தமிழகத்தின் சஞ்சிகையான ஜுனியர் விகடன் நடத்திய கருத்துக் கணிப்பில் ஜெயலலிதாவின் செல்வாக்கு சரிந்துள்ளது.ஜெயலலிதாவின் செயற்பாடு மோசம் என athikamaano தெரிவித்துள்ளனர். அவரத்க்ஹு செயற்பாடு சுமார் என அதிகமானோர் குஉரி உள்ளனர். தேர்தல் சமயத்தில் சுமார் ஏனஸ் சொன்னவர்கள் அவருக்கு எதிராகத்திரும்பிவிடலாம். அதற்கிடையில் ஜெயலலிதாவின் செயற்பாடு எப்படி இருக்கிறது என்பதை வாக்காளர்கள் உன்னிப்பாக அவதானிப்பார்கள். கருத்துக்கணிப்புக்கு எதிராக ஜெயலலிதா வழக்கு தாக்கல் செய்துள்ளார். நீதிமன்ர்டம் செல்வது அவருக்கு அல்வா சாப்பிடுவதுபோல் விருப்பமானது.
தமிழகத்த்தின் எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் இருக்கிறார். ஆனால் அவர் எதிர்கட்சித் தலிவர்பூல் செயற்படுவதில்லை என 90 சதவீதமாநூர் கருத்துத் தெரிவித்துள்ளனர். வெறும் 10  சதவீதமானவர்கள் மட்டும்தான் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக அரசியலைப்பற்றி  தெரியாதவர்கள் அல்லது விஜயகாந்தின் விசுவாசிகள்தான்  அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.எதிர்க்கட்சித் தலைவராக செயற்படமுடியாத ஒருவர் எப்படி முதலமைச்சராக பதவி வகிப்பார் என மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டனர். இதேவேளை விஜயகாந்தின் வாக்கு வங்கியும் சரிந்துள்ளது. ஆனாலும் தனக்கு அதிகமான தொகுதிகள் வேண்டும் என்பதில்  அவர் விடாப்பிடியாக உள்ளார். க்ளடந்த சட்டசபைத் தேர்தலின் பூத்து வெற்றிபெற்ற அவரிக் கட்சி அங்கத்தவர்கள் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.  இது விஜயகாந்தின் அரசியலில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
திராவிட முன்னேற்ற‌க் கழகத்தின்  வெள்ள  நிவாரண நிதியை தமிழக அரசு ஏற்க மறுத்தது தற்போது சஊடான அரசியலாக உள்ளது.  சுனாமி தாக்குதலின் போது  திராவிட முன்னேற்ற‌க் கழகம்  வழங்கிய நிவாரனநிதியை  அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஸ்டாலினிடம் பெற்றார். இனறு ஸ்டாலினிடம் இருந்து நிவாரண நிதியைப்பெற நீரம் ஒதுக்காது இழுத்தடிக்கப்பட்டது மக்களுக்கு தேவையான தேவையான் உதவிகளையும் தான் மட்டுமே  செய்யவேண்டும் என்பதே ஜெயலலிதாவின் விருப்பம்.


 இந்தியாவின் முன்னிலை மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவீன் என உறுதிமொழி குஉரி ஆட்சியைப்பிடித்த ஜெயலலிதா, அந்த உறுதிமொழியை  காற்றில் பறக்கவிட்டார்.  அவருக்கு எதிரான  சொத்துக்குவிப்பு வழகில் இருந்து எப்படி வெளியே வருவது என்பதில் அதிக கவனம் எடுத்தார். மக்கள் பிரச்சினைகளில் மூழ்கி இருக்க கொடநாட்டில் ஓய்வெடுத்தார். வெள்ளத்தால் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கையிலும் அவர் கொடநாட்டில் ஓய்வெடுத்தார். எதிர்க்கட்சிகளும்  ஊடகங்களும்  கேள்வி எழுப்பியதனால் கொடநாட்டில் இருந்து சென்னைக்குத் திரும்பினார்.
கருணாநிதி அருமுகப்படுத்திய திட்டங்களை இடைநிறுத்திவிட்டு அதே திட்டங்களை வீருபெயரில் தனது திட்டம் போல் அறிமுகப்படுத்தினார். கருணாநிதியின்  மெட்ரோ ரயில் திட்டத்தை  மோனோ ரயில் திட்டம் என அறிமுகப்படுத்தினார். புதிய தலைமைச்செயலகத்தை கைவிட்டு பழைய் தலைமைச்செயலகத்தில் சட்டசபையை  நடத்துகிறார். பலகூடி றுபாவில கட்டப்பட்ப்ட புதிய தளமைஸ் செயலகத்தை வைத்திய சாலையாக மாற்றியுள்ளார். கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தில் கால் வைக்க மாட்டேன் என்ற சபதத்தை  நிறைவேறினார்.  புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டிய ஜெயலலிதா அதற்கான ஆதாரங்களை இன்றுவரை வெளியிடவில்லை.
ஜெயலலிதாவுக்கு எதிரான மனநிலையில் தமிழ மக்கள் உள்ளனர்.  அவரை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்குஅவர்கள் தயாராக உள்ளனர். தமிழக அரசியல் தலைவர்கள் சிலரின் செயற்பாடு அதற்கு இடைஞ்ச்சளாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தை  ஆட்சியில் இருந்து அகற்றும் வல்லமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமே உள்ளது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டும் ஜெயலலிதா வெற்றி பெறுவதற்குரிய வழிவகைகளைஈ அவர்கள் செய்கிறார்கள்.
தேர்தல் தேதியை இன்னும் குறிக்கவே இல்லை. அதற்குள்,  தேர்தல்  களேபரம் தொடங்கிவிட்டது. நமக்கு நாமே’, ‘முடியட்டும்... விடியட்டும்!என தமிழகம் முழுவதும் முதல்கட்ட  பிரசாரத்தை முடித்துவிட்டார் ஸ்டாலின், ‘விஷன் - 234’ என இலக்கு நிர்ணயித்து ஒளிரும் நிகழ்காலம்... மிளிரும் வருங்காலம்!’, ‘தழைக்கட்டும் தமிழகம்... செழிக்கட்டும் தமிழர்கள்!’, ‘தொடரட்டும் மேம்பாடு... ஜொலிக்கட்டும் தமிழ்நாடு!என அடுத்தடுத்த பிரசாரங்களைத் தொடங்கிவிட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் .கழகம் . மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி!’, ‘ஒரு சொட்டு மது இல்லாத  ஊழல் இல்லாத தமிழகம்!எனச் சொல்லி தேர்தல் அறிக்கை எல்லாம் வெளியிட்டு அன்புமணி ஒரு பக்கம் தோள் தட்டுகிறார். இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள்,   வைகோ தலைமையில் மக்கள் நலக் கூட்டணிகுறைந்தபட்ச செயல் திட்டத்தை எல்லாம் வெளியிட்டுத் தேர்தலுக்குத் தயாராகி நிற்கிறது. காங்கிரஸ் தயவில் கூட்டணி ஆட்சி அமையும்என திரிகொளுத்திப் போட்டு வருகிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். தமிழ் மாநில காங்கிரஸ் மதில் மேல் பூனையாக உள்ளது. நாம் தமிழர் கட்சியும், காந்திய மக்கள் இயக்கமும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இப்படி தேர்தல் களம் தயாராகிக் கொண்டிருக்கிறது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தேர்தல் களம்  சூடாகி  விடும்.வாக்காளர்கள் தெளிவான முடிவை எடுக்கத் தயாராகிவிடுவார்கள். அவர்களின் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட தலைவர்கள் வெற்றி பெறுவார்கள்.
ரமணி 



Monday, November 30, 2015

அரசியல் அரங்கில் உருவாகும் மோடிக்கு எதிரான அலை


இந்தியப் பொதுத்தேர்தலில் வீசிய மோடி அலையால் ஆட்சி பீடத்தில் இருந்த  காங்கிரஸ் கட்சி  தூக்கி  எறியப்பட்டது. காங்கிரஸ் கட்சியுடன்  இணைந்த சில மாநிலக் கட்சிகளும் மோடி அலையில்  மூழ்கின. பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதீஷ்குமார்,லல்லு,சோனியா ஆகியோர் ஒன்றிணைந்து பெற்ற வெற்றியால் மோடிக்கு எதிரான அலை தோன்றும் சாத்தியம் உருவாகி உள்ளது. பாரதீய ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் பீகார் முதல்வரின் பதவி ஏற்ப்பு விழாவில்   பங்குபற்றியது நம்பிக்கையை  ஏற்படுத்தி  உள்ளது.
. பீகார் சட்டசபை தேர்தலில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லல்லு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த கூட்டணியின் வெற்றியானது நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கவும் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான மாற்று அணி அமைவதற்கான வலுவான அடித்தளத்தை பீகார் தேர்தல் முடிவு ஏற்படுத்தியுள்ளது.. இதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜ.க.வுக்கு எதிராக முன்னாள் பிரதமர், எட்டு முதலமைச்சர்கள் உட்பட 35  கட்சிகளின்  தலைவர்கள் பீகார் முதல்வராக நிதீ ஷ்குமார் பதவியேற்கும்   விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய், சிக்கிம் முதல்வர் சாம்லிங், மணிப்பூர் முதல்வர் இபோபிசிங், இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ரசிங், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், கர்நாடகா முதல்வர் சித்தராமையா
 ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸின் குலாம்நபி ஆசாத், தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா


 டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்திரசிங் ஹூடா, குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்,



 தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிரா அமைச்சர் சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸின் பிரபுல் படேல், லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரகாஷ் அம்பேத்கர், இந்திய தேசிய லோக்தளத்தின் அபய் சவுதாலா, ராம்ஜேத்மலானி, முன்னாள் எம்.பி.க்கள் எச்.கே. தூவா, ராஜ்பப்பர் ஆகியோர் நிதீஷ்குமார் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

பீகாரில் எதிரும் புதிருமாக இருந்த மூன்று தலைவர்களும் ஒண்றிணைந்ததைப்போல் நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் ஒன்றிணைந்து  பாரதீய  ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்  என விரும்புகின்றனர்.  அதற்கு அச்சாரமாக பீகாரில் ஒன்று  கூடி  ஆலோசனை நடத்தினர்.
  பீகார்  மாநில முதல்வராக, 5வது முறையாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ்குமார்  பதவியேற்றார். அவருடன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர்  லல்லு பிரசாத் யாதவின், இரு மகன்கள் உட்பட, 28 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர்.


பீகார் மாநிலத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்,  லல்லுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்ற, 'மெகா' கூட்டணி, 178 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து, தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், நிதீ ஷ் குமார் தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா, கோலாகலமாக  நடைபெற்றது. இதில், நிதீஷ் குமார், ஐந்தாவது முறையாக பீகார் முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு, கவர்னர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து, 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில், தலா, 12 பேர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்; நான்கு பேர் காங்கிரசார்.



பீகார் சட்டசபை தேர்தலில், முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற,  லல்லு பிரசாத்தின் இரு மகன்களான தேஜஸ்வி, தேஜ் பிரதாப் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இருவரில், 26 வயதான தேஜஸ்விக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிதீஷ் அமைச்சரவையில், இம்முறை புதுமுகங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர்; அத்துடன் நிதீஷ் மற்றும்  லல்லு கட்சிகளைச் சேர்ந்த இரு பெண்களுக்கும், அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 


நிதீஷ்குமாரின் அமைச்சரவை ஏனைய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. இதே போன்ற செயற்திட்டத்தை ஏனைய மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும்  என்பதே வடமாநிலத் தலைவர்களின் விருப்பம்.மாநிலங்களில் பாரதீய ஜனதாவின் செல்வாக்கை இல்லாமல் செய்தால் நாடாளுமன்றத்  தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியைத் தோற்கடிக்கலாம். பொது எதிரியான பாரதீய ஜனதாவை வீழ்த்துவதற்கு கொள்கைகளை ஓரம்கட்டி வைத்துவிட்டு   ஒன்றிணையும்  திட்டம் ஆரம்பமாகிவிட்டது. பாரதீய ஜனதாவின்  ஆட்சியில் உள்ள மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணையத் தயாராகிவிட்டன. பாரதீய ஜனதாவின் தயவில் உள்ள மாநில ஆட்சியையும் அகற்றுவதற்கு வடமாநிலத் தலைவர்கள் தயாராகிவிட்டனர்.

தமிழகத்திலிருந்து சென்ற ஸ்டாலின்,டி.ஆர்.பாலு ஆகியோருடன் வடமாநிலத்தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.  பிரதமர் மோடியின் கடைக்கண் பார்வையிலேயே தமிழக‌ முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்கிறார் என்ற சந்தேகம் அரசியல் தலைவர்களிடையே  உள்ளது. ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் மத்திய அமைச்சர் ஒருவர் அவரைச் சந்தித்ததையும், தமிழகத்துக்குச் சென்ற பிரதமர் மோடி  மரபை மீறி ஜெயலலிதாவை  அவரது வீட்டிலே சந்தித்ததையும் ஏனைய தலைவர்கள் ரசிக்கவில்லை. பாரதீய ஜனதாவை வீழ்த்தும் அதேவேளை அக்கட்சியின் ஆசிபெற்ற ஜெயலலிதாவையும் அகற்ற வேண்டும் என விரும்புகிறார்கள்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக  ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர மோடி விரும்புகிறார்.  ஆனால் ஜெயலலிதா அதற்குத் தயாராக  இல்லை. தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவதே அவரது குறிக்கோள்.  நாடாளுமன்ற தேர்தலில்   தமிழகத்தில்  மோடியின் அலை  வீசவில்லை. ஜெயலலிதா இல்லை என்றால் தமிழகத்தில்  பாரதீய ஜனதா செல்லாக்  காசாகிவிடும்
 தமிழக அரசியல் ஜெயலலிதாவுக்கு சாதகமாக உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒவ்வொரு திசையில் உள்ளன. தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ,நிதீஷ் குமாரை முன்மாதிரியாகக் கொண்டு திராவிட முன்னேற்றக்   கழகம்  இறங்கி வரவேண்டும் என  ஸ்டாலினுக்கு ஆலோசனை  கூறப்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை  திராவிட முன்னேற்றக்   கழகம்  ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணமாக எந்தக் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன்   கூட்டணி சேர விரும்பவில்லை.

ராகுல்,விஜயகாந்த்,அன்புமணி ஆகியோர் ஸ்டாலினை பகைவனாக கருதுகிறார்கள் . இந்தப் பகை ஒழிந்தால் ஜெலயலிதாவை வீழ்த்துவது சுலபம். இதனை வடமாநிலத் தலைவர்கள் ஸ்டாலினுக்கு உணர்த்தி உள்ளனர்.

  தமிழகத்தில் தனித்து நிற்கும் காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் கூட்டணி   சேர்வதெனத்தெரியாது தடுமாறுகிறது.திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்கு ராகுல் விரும்பவில்லை. பாரதீய ஜனதாவுக்கு எதிரான அலையில் காங்கிரஸ் இருப்பதனால் வடமாநிலத் தலைவர்கள் ராகுலை வழிக்குக் கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

முதல்வர் கனவில் இருக்கும் விஜயகாந்த் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர விரும்புகிறார். மோடிக்கு எதிரான அலையால் அவரின் கனவு தவிடுபொடியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. துணை முதல்வர் பதவியைக் காட்டி விஜயகாந்தை கூட்டனியில் சேர்க்கும் திட்டம் உள்ளது. இந்தக் கூட்டணி உறுதியானால் வைகோ தலைமையிலான கூட்டணி உடைந்துவிடும்.மோடிக்கு எதிரான அலையில் ஜெயலலிதா அள்ளுப்படுவாரா அல்லது தப்பிப்பிழைப்பாரா என்பதை தேர்தல் நெருங்குகையில் தெரிந்துவிடும்.
வர்மா
தமிழ்த்தந்தி
29/11/15