Showing posts with label நெதர்லாந்து. Show all posts
Showing posts with label நெதர்லாந்து. Show all posts

Monday, June 17, 2024

வினோதமான உலக சாதனையுடன் இலங்கை வெற்றி

 செயின்ட் லூசிய நகரில்  நடந்த ரி20 உலகக்கிண்ணப் போட்டியில்  நெதர்லாந்தை எதிர்த்து விளையாடிய இலங்கை  38  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில்  வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசியது.   முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை   20 ஓவர்களில்  6 விக்கெற்களை இழந்து 201  ஓட்டங்கள் எடுத்தது அசலங்கா 46, குசால் மெண்டிஸ் 46 ஓட்டங்கள் எடுத்தனர்.   

 202 ஓட்டங்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே இலங்கை அணியின் நேர்த்தியான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாறியது.   சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி 16.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 118  ஓட்டங்கள் எடுத்தது.    அதிகபட்சமாக கப்டன் ஸ்காட்எட்வர்ட்ஸ் 31, மைக்கேல் லேவிட் 31 ஓட்டங்கள் எடுத்தனர். இலங்கை சார்பில்  நுவான் துசாரா 3, கப்டன் ஹசரங்கா 2, மதீஸா பதிரனா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இலங்கை ரி20 உலகக் கோப்பையில் தங்களுடைய 2வது பெரிய வெற்றியை பதிவு செய்து அசத்தியது.   நிஷாங்கா 0, குசால் மெண்டிஸ் 46, கமிண்டு மெண்டிஸ் 17, டீ சில்வா 34, அசலங்கா 46, ஏஞ்சேலோ மேத்தியூஸ் 30*, ஹஸரங்கா 20* ஓட்டங்கள் எடுத்தனர். ஆனால் யாருமே 50 ஓட்டங்களைத் தாண்டி அரை சதமடிக்கவில்லை.ரி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அரை சதம் அடிக்காமலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற வினோதமான உலக சாதனையை இலங்கை சமன் செய்தது. -

 இதற்கு முன் இதே உலகக் கோப்பையில் பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவும் அரை சதம் கூட அடிக்காமல் 201/7 ஓட்டங்கள் குவித்து அந்த சாதனையை படைத்துள்ளது. அத்துடன் இந்த தொடரில் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்த இலங்கை 4 போட்டிகளின் முடிவில் 3 புள்ளிகளை பெற்றது.  குரூப் டி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்து தப்பிய இலங்கை 3வது இடத்தைப் பிடித்தது.      

Saturday, June 8, 2024

நெதர்லாந்து அணியில் கீப்பராக கோமன் வெர்ப்ரூக்கன்

ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் நெதர்லாந்தின் முதல் தேர்வு கோல்கீப்பராக பார்ட் வெர்ப்ரூகன் இருப்பார் என்று பயிற்சியாளர் ரொனால்ட் கோமன் புதன்கிழமை தெரிவித்தார்

போட்டியில் விளையாடுவது சிறுவயது கனவு நனவாகும் என்று வெர்ப்ரூகன் கூறினார்.

ஒக்டோபரில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார் மற்றும் ஐந்து போட்டிகளில் வென்றுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் வழக்கமான கோல்கீப்பரைக் கண்டுபிடிக்க நெதர்லாந்து சிரமப்பட்டது. கட்டாரில்  2022 உலகக் கோப்பையில், பயிற்சியாளர் லூயிஸ் வான் கால் தனது முதல் தேர்வாக ஆண்ட்ரீஸ் நோபர்ட்டைத் தேர்ந்தெடுத்தார்.

  போட்டிக்குப் பிறகு ரொனால்ட் கோமன் பயிற்சியாளராக வான் காலுக்குப் பதிலாக நோபர்ட் விளையாடவில்லை, வெர்ப்ரூகன், ப்ரென்ட்ஃபோர்டின் ஃப்ளெக்கென் மற்றும் ஜஸ்டின் பிஜ்லோ ஜெர்மனிக்குச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்கள் ஜேர்மனிக்குச் செல்வதற்கு முன் திங்களன்று ரோட்டர்டாமில் ஐஸ்லாந்தை எதிர்கொள்கிறார்கள்.

Tuesday, November 14, 2023

உலகக்கிண்ண லீக் போட்டியில் தோல்வியடையாத இந்தியா

           இந்தியாவில் நடைபெறும்  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய  இந்தியா 9  போட்டிகளிலும் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. முன்னதாக  உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலியா  இரன்டு முறையும், இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆகியன தலா  ஒரு முறையும் லீக் போட்டியில் தோல்வியடையாமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி  50 ஓவர்களில்  4  விக்கெற்களை  இழந்து 410 ஓட்டங்கள் எடுத்தது. 411  என்ற இமாலய  இலக்கை நீக்கி விளையாடிய நெதர்லாந்து 47.5 ஓவர்களில் சகல விக்கெற்கலையும்  இழந்து 259ஓட்டங்கள் எடுத்தது. 9 லீக்  போட்டிகளில் விளையாடிய நெதர்லாந்து  இரண்டு போட்டிகளில் மட்டுமே  வெற்றி பெற்றது. வலுவான தென்னாப்பிரிக்காவை தங்களுடைய வரலாற்றில் முதல் முறையாக தோற்கடித்து சாதனை படைத்தது. நம்பிக்கை நட்சத்திரம் பஸ் டீ லீடி ஆல் ரவுண்டராக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

கப்டன் ரோகித் சர்மா,சுப்மன் கில் ஜோடி  பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாடி 100 ஓட்டங்கள்  பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ரோஹித் சர்மா 61, கில் 51, விராட் கோலி 51, ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 128,  கேஎல் ராகுல் 102 என இந்தியாவின் ஐந்து வீரர்கலும் 50+ ஓட்டங்கள் அடித்தனர். அடித்துள்ளனர்.   உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் டாப் 5 பேட்ஸ்மேன்களும் 50க்கும் மேற்பட்ட ஓட்டக்களை அடித்த முதல் அணி என்ற தனித்துவமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

                                        ரோஹித் சர்மாவின்  2 உலக சாதனைகள் 

2023 ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா இதுவரை மொத்தம் 60 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன்  ருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற ஏபி டீ வில்லியர்ஸ் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.  இதற்கு முன் 2015ஆம் ஆண்டு ஏபி டீ வில்லியர்ஸ் 58 சிக்சர்கள் அடித்ததே முந்தைய உலக சாதனையாகும்.  2023 உலகக்கோப்பையில் மட்டும் ரோஹித் சர்மா இது வரை மொத்தம் 24* சிக்சர்கள் அடித்துள்ளார்.   உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த கப்டன் என்ற இங்கிலாந்தின் இயன் மோர்கன் சாதனையை உடைத்துள்ள ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.   2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் கேடனாக இயன் மோர்கன் 22 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். 

                 ரோஹித்தின்  சாதனையை 32 நாட்களில்  உடைத்த ராகுல் 

62 பந்துகளிலேயே 100 ஓட்டங்கள் தொட்ட ராகுல் உலகக் கிண்ண  வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற மாபெரும் வரலாற்றுச் சாதனையும் படைத்தார். இதற்கு முன் இதே உலகக்  கிண்ணத்தில் கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி 32 நாட்களுக்கு முன்பாக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கப்டன் ரோஹித் சர்மா 63 பந்துகளில் சதமடித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

உலகக்கிண்ண  வரலாற்றில் 24 வருடங்கள் கழித்து சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் அவர் படைத்தார். இவருக்கு முன் கடைசியாக கடந்த 1999 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு எதிராக ஜாம்பவான் மற்றும் தற்போது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சதமடித்தார்.  அவுஸ்திராலியாவுக்கு எதிரான  போட்டியில் தவற விட்ட சதத்தை ராகுல்   இப்போது  அடித்துள்ளார்.

                                   பெங்களூருவை  கோட்டையாக்கிய ரோஹித் 

சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட், ஒருநாள், ரி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ரோஹித்சர்மா 32 சிக்சர்கள் அடித்துள்ளார்.  சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனையை ரோஹித் சர்மா உடைத்துள்ளார். இதற்கு முன் சார்ஜா மைதானத்தில் சச்சின் 30 சிக்சர்கள் அடித்திருந்ததே முந்தைய ஒரு சாதனையாகும்.  9 போட்டிகளில் 503 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதன் வாயிலாக உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 500 ஓட்டங்கள் முதல் இந்திய கப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

உலகக் கிண்ணத்தில்  அதிக ஓட்டங்ன்கள் அடித்த இந்திய கப்டன் என்ற சௌரவ் கங்குலியின் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

 1. ரோஹித் சர்மா : 503* (2023)

2. சௌரவ் கங்குலி : 465 (2003)

3. விராட் கோலி : 443 (2019)

 4. முகமது அசாருதீன் : 332 (1992) 

2019இல் 648 ஓட்டங்கள் அடித்த  ரோஹித்இந்த உலகக் கிண்ணத்தில் கோப்பையில் 503 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.  உலகக் கிண்ண  வரலாற்றில் அடுத்தடுத்த தொடர்களில் 500க்கும் மேற்பட்ட  ஓட்டங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

                          7 வருடங்களின்  பின் விக்கெற் வீழ்த்திய  கிங் கோலி 

இந்தப் போட்டியில் 3  ஓவர்கள் பந்து வீசிய விராட் கோலி 13  ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெற்றை வீழ்த்தினார்.25வது ஓவரின் 3வது பந்தில் எட்வர்ட்ஸ் 17 ஓட்டங்களில் கொடுத்த எட்ஜை கேஎல் ராகுல் கச்சிதமாக பிடித்ததால் ஆச்சரியமான விக்கெட்டை எடுத்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார். குறிப்பாக பேட்ஸ்மேனாக ஒவ்வொரு போட்டியிலும் ரன்கள் அடித்ததை மட்டுமே பார்த்து பழகிய ரசிகர்கள் விராட் கோலியின் விக்கெட்டை வெறித்தனமாக கொண்டாடினார்கள்.கடந்த 2016  ஆம் ஆண்டு ரி20 உலகக்  கிண்ண செமி ஃபைனலில் மேர்கு இந்திய வீரர் க ஜான்சன் சார்லஸ் விக்கெட்டை விராட் கோலி எடுத்திருந்தார். 

சுப்மன்கில், சூரியகுமார் யாதவ் ஆகியோர் தலா  இரண்டு ஓவர்கள்  பந்து வீசினர். 47 ஆவது ஓவரை கப்டன்   ரோஹித்  வீசினார். 5ஆவது  பந்திக் நெதர்லாந்தின் கடை விக்கெர் வீழ்ந்தது. தசைப் பிடிப்பு காரணமாக வேகப் பந்து வீட்டாளர் சிராஜ் வெளியேரியதால் துடுப்பாட்ட வீரர்கள்  பந்து வீசினர். 

                                        இந்தியாவின் 3 புதிய உலக சாதனைகள் 

நெதர்லாந்துக்கு  எதிரான  போட்டியில்  இந்திய வீரர்கள் 16 சிக்சர்கள் அடித்தனர்.  2023 காலண்டர் வருடத்தில் இதுவரை இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தம் 215* சிக்ஸர்களை அடித்துள்ளது.  ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்கள் அடித்த அணி என்ற மேர்கு இந்தியாவின்   சாதனையை உடைத்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது.

 1. இந்தியா : 215 (2023)*

 2. வெஸ்ட் இண்டீஸ் : 209 (2019)

 3. தென் ஆப்பிரிக்கா : 203 (2023)*

4. நியூசிலாந்து : 179 (2019)

 5. அவுஸ்திரேலியா : 165 (2023)* 

410 ஓட்டங்கள் அடித்த இந்தியா 2023 காலண்டர் வருடத்தில் இதுவரை மொத்தம் 8 போட்டிகளில் 350க்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளது. இ ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக முறை 350+ ஓட்டங்களை அடித்த அணி என்ற இங்கிலாந்தின் சாதனையையும் உடைத்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து 7 முறை 350+ ஓட்டங்கள் அடித்திருந்ததே முந்தைய சாதனையாகும். 

இப்போட்டியில் 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா இதற்கு முந்தைய 2 போட்டிகளில்  தென்னாப்பிரிக்காவை 243 ஓட்டங்களாலும்,    இலங்கையை  243  ஓட்டங்களாலும் வென்றது.  ஒருநாள் கிரிக்கெட்டில் 3 தொடர்ச்சியான போட்டிகளில் 150க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற முதல் அணி என்ற தனித்துவ உலக சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

    டோனி – ரெய்னா ஜோடியை முந்திய ஸ்ரேயாஸ் – ராகுல் ஜோடி 

ஸ்ரேயாஸ் ஐயர் – கேஎல் ராகுல் ஜோடி   4வது விக்கெட்டில்  208 ஓட்டங்கள் அடித்தது.  உலகக் கிண்ண  வரலாற்றில் ஒரு போட்டியில் 4வது விக்கெட்டுக்கு அதிகஓட்டங்கள் அடித்த  ஜோடி என்ற உலக சாதனை படைத்தது. இதற்கு முன் இதே நெதர்லாந்துக்கு எதிராக 2007 உலகக் கிண்ணத்தில்  அவுஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் ,ப்ராட் ஹோட்ஜ் ஆகியோர் 204ஓட்டங்கள் குவித்திருந்ததே முந்தைய சாதனையாகும். 

 208ஓட்டங்களை 9.82 என்ற ரன் ரேட்டில் குவித்த இந்த ஜோடி உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்ரேட்டில் இரட்டை சத பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் – ஜேபி டுமினி சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்தது. 

1. ஸ்ரேயாஸ் ஐயர் – கேஎல் ராகுல் : 9.82, நெதர்லாந்துக்கு எதிராக, 2023*

 2. ஜேபி டுமினி – டேவிட் மில்லர் : 8.62, Zஇம்பாப்வே அணிக்கு எதிராக, 2015

 3. விராட் கோலி – வீரேந்திர சேவாக் : 8.40, பங்களாதேஷுக்கு எதிராக, 2011

உலககிண்ணத்தில்  4வது அல்லது அதற்கு கீழான விக்கெட்டுக்கு இரட்டை சதம் அடித்த  முதல் இந்திய ஜோடி என்ற சாதனையும் அவர்கள் படைத்தனர். இதற்கு முன் கடந்த 2015 உலகக்  கிண்ணத்தில் ஸ்ம்பாப்வே அணிக்கு எதிராக எம்எஸ் டோனி,  சுரேஷ் ரெய்னா ஆகியோர் 5வது விக்கெட்டுக்கு 196* ஓட்டங்கள்  முந்தைய சாதனையாகும்

                             27 வருட சாதனையை சுழலால் உடைத்த ஜடேஜா 

 ரவீந்திர ஜடேஜா 9 ஓவரில் 49 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். குறிப்பாக இந்த உலகக் கோப்பையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அசத்திய அவர் இதுவரை 9 போட்டிகளில் மொத்தம் 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய ஸ்பின்னர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் 27 வருட மற்றும் யுவராஜ் சிங்கின் 12 வருட சாதனையை உடைத்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். 

  1. ரவீந்திர ஜடேஜா : 16* (2023)

 2. அனில் கும்ப்ளே :

15 (1996) 2. யுவராஜ் சிங் : 15 (2011)

 3. குல்தீப் யாதவ் : 14 (2023)*

3. மணிந்தர் சிங் : 14 (1987) -

Thursday, November 9, 2023

நெதர்லாந்தை வெளியேற்றிய இங்கிலாந்து

புனேயில்  நடைபெற்ற 40வது லீக் போட்டியில் இங்கிலாந்து,நெதர்லாந்து ஆகியன  மோதின மோதின.   லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறிய நடப்பு சம்பியன் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடியது. உலகக்கிண்ண சம்பியன்களை இந்ததொட‌ரில் குப்புற‌ வீழ்த்திய நெதர்லாந்து நம்பிக்கையுடன்  போட்டியை எதிர்கொணடது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற  இங்கிலாந்து  முதலில் துடுப்பெடுத்தாடி  50 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து  339  ஓட்டங்கள் எடுத்தது. 37.2 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த நெதர்லாந்து   179 ஓட்டங்கள் மட்டுமெ எடுத்தது. இங்கிலாந்து 160 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஆறுதலடைந்தது.

ஜானி பேர்ஸ்டோ 15ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.   துவக்க வீரர் டேவிட் மாலனுடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 85 ப்ப்ட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோ ரூட் 28 ஓட்டங்களில் களில் அவுட்டாக அடுத்ததாக வந்த ஹாரி ப்ரூக் 11, கப்டன் பட்லர் 5, மொயின் அலி 4 ஓட்டங்களில் வெறியேறி  ஏமாற்றத்தை கொடுத்தார்கள். 6 விக்கெற்களை இழந்து    192 ஓட்டங்கள் எடூத்து தடுமாரியது இங்கிலாந்து.  அப்போது நங்கூரமாக நின்ற நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல அதிரடியாகவும் விளையாடி தனது முதல் உலகக்கிண்ண சதத்தை அடித்தார்.  அவருடன் 7வது விக்கெட்டுக்கு 129ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய கிறிஸ் ஓக்ஸ் அதிரடியாக 51 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார்.  பென் ஸ்டோக்ஸ் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 108 (84) ஓட்டங்கள் குவித்ததால் 50 ஓவர்களில் இங்கிலாந்து 339 ஓட்டங்கள் எடுத்தது.  நெதர்லாந்து சார்பில்  பஸ் டீ லீடி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

  340 என்ற கடினமான இலக்கை துரத்திய நெதர்லாந்துக்கு மேக்ஸ் ஓதாவுத் 5 , ஆக்கர்மேன் டக் அவுட்டானார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் நிதானமாக விளையாடிய பரேசி 37 ஓட்டங்களில்   வெளியேறினார். 3  விக்கெற்களை இழந்து 68 ஒட்டங்கள் எடுத்து தடுமாறிய  நெதர்லாந்தை மிடில் ஆர்டரில் எங்கேல்பேர்ச்ட் 33, கப்டன் எட்வர்ட்ஸ் 38 ஓட்டங்கள் எடுத்து காப்பாற்ற போராடியும் பலனில்லை.    நம்பிக்கை நட்சத்திரம் பஸ் டீ லீடி 10  ஓட்டங்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். இறுதியில் நிதமனரு அதிரடியாக விளையாடி 41* ஓட்டங்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் உடனடியாகப்  பெவிலியன் திரும்பியதால் 37.2 ஓவர்களில் 179  ஓட்டங்கள் எடுத்தது நெதர்லாந்து.

மொய்ன் அலி , அடில் ரசித் ஆகிய ஸ்பின்னர்கள் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். இதனால் 6வது தோல்வியை பதிவு செய்த நெதர்லாந்து இந்த உலகக் கோப்பையிலிருந்து லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. மறுபுறம் 2வது வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து புள்ளி பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியதுடன் கடைசி போட்டியில் வென்றால் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெறலாம் என்ற நல்ல நிலைமைக்கு வந்து தங்களுடைய மானத்தை தக்க வைத்துள்ளது.

Friday, November 3, 2023

இங்கிலாந்தை வெளியேற்றிய ஆப்கானிஸ்தான்

 

இந்தியாவில் நடைபெறும் உலகக்கிண்ண  லீக் போட்டியில் நெத்ர்லாந்த 7 விக்கெட்களினால் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான், இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்பி உள்ளது.

தலைநகர் டெல்லியில் நடப்பு சம்பியன் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் முறையாக வெற்றியைப் பதிவு செய்த ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பையில் 14 தொடர்ச்சியான தோல்விகளை நிறுத்தி வெற்றி வாகை சூடியது.

 அதே வேகத்தில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பாகிஸ்தானையும் பந்தாடிய ஆப்கானிஸ்தான் 7 தொடர் தோல்விகளை நிறுத்தி வரலாற்றில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து மாபெரும் சரித்திரம் படைத்தது.

1996 உலக சாம்பியன் இலங்கையையும் தோற்கடித்த ஆப்கானிஸ்தான் தற்போது நெதர்லாந்தையும் வீழ்த்தி மொத்தம் 7 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் பாகிஸ்தானை முந்தி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் தங்களுடைய அடுத்த 2 போட்டிகளில் வென்றால் செமி ஃபைனல் செல்வதற்கான வாய்ப்பு ஆப்கானிஸ்தானுக்கு பிரகாசமாகியுள்ளது.

அடுத்ததாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 வலுவான அணிகளுக்கு எதிராக மோதுவதால் அது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. ஆனாலும் இதுவரை வெளிப்படுத்திய கடின உழைப்பால் கிடைத்த 4 வெற்றிகளால் ஆப்கானிஸ்தானுக்கு மற்றுமொரு பரிசு கிடைத்துள்ளது. அதாவது பாகிஸ்தானில் நடைபெறும் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தற்போது நடைபெறும் உலகக் கோப்பையின் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப் 7 இடங்களை பிடிக்கும் அணிகளே தேர்வு செய்யப்பட உள்ளன.

முதல் அணியாக தொடரை நடத்தும் பாகிஸ்தான் ஏற்கனவே தேர்வாகியுள்ளது. அதைத்தொடர்ந்து புள்ளி பட்டியலில் டாப் இடங்களில் இருக்கும் இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகளும் இப்போதே தேர்வாகியுள்ளன. குறிப்பாக அடுத்த 2 போட்டிகளில் தோற்றாலும் ஆப்கானிஸ்தான் டாப் 6 இடத்திற்கு கீழே செல்லாது என்பதால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக் இப்போதே தகுதி பெற்றுள்ளது.

\வரலாற்றிலேயே சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ஆப்கானிஸ்தான் தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். அப்படி புதிய வரலாற்றை எழுதி ஆப்கானிஸ்தான் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துக்கு டாட்டா காட்டி பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இன்னும் 2 இடங்கள் தகுதி பெறுவதற்கு காலியாக இருக்கும் நிலையில் புள்ளிப்பட்டியில் கடைசி இடத்தில் தவிக்கும் இங்கிலாந்து கடைசி 2 போட்டியில் வென்றால் மட்டுமே சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Thursday, October 19, 2023

சரித்திர சாதனை படைத்த நெதர்லாந்து


 இங்கிலாந்தை ஆப்கானிச்தான் வீழ்த்திய அதிர்ச்சி பற்றிய விவாதம்  ஓய்வதற்கு முன்னர்  பலம் வாய்ந்த தென். ஆபிரிக்காவை நெதர்லாந்து  தோற்கடித்து  புதிய சரித்திரம் படைத்துள்ளது. தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில்நெதர்லாந்து 38  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

43 ஓவர்களில்  நெதர்லாந்து  8 விக்கெற்களை இழந்து 245  ஓட்டங்கள் எடுத்தது.   42.5 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த தென்.  ஆபிரிக்கா  207  ஓட்டங்கள் எடுத்தது. 38 ஓட்டங்களால் தோல்வியடைந்த தென். ஆபிரிக்கா 32  உதிரிகளை விட்டுக் கொடுத்தது.

நாணயச் சுழற்சியில் வெற்ரி பெற்ற தென்.ஆபிரிக்கா  பந்து வீச்சைத் தேர்வு செய்தது.மழை காரணமாக  தாமதமாக  போட்டி ஆரம்பித்ததால் 43  ஓவர்களாகக்  குறைக்கப்பட்டது. 20.2 ஓவர்களில்5 விக்கெற்களை இழந்த நெதர்லாந்து  82  ஓட்டங்கள் எடுத்தது. நெதர்லாந்தின் கதை முடிந்ததென நினைத்திருந்த வேலையில்  கடைசி 9 ஓவர்களில்  109 ஓட்டங்கள் குவித்து தென். ஆபிரிக்காவைத் திணறடித்தது.

  வேன் பீக்   10 (17) ஓட்டங்கள்,   வேன் டெர் மெர்வி அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 (19) ஓட்டங்கள்,   ஆரியான தத் 3 சிக்சருடன் 23* (8) ஓட்டங் அடித்தனர்.  எட்வர்ட்ஸ் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 78* (69) ஓட்டங்கள் எடுத்ததால் 43 ஓவர்களில்  நெதர்லாந்து  8 விக்கெற்களை இழந்து 245  ஓட்டங்கள் எடுத்தது.

246   எனும் வெற்ரி இலக்குடன் களம்  இறங்கிய தென். ஆபிரிக்காவை நெதர்லாந்து  பந்து வீச்சிலும் திணறடித்தது. குயிண்டன் டீ காக் 20,  தெம்பா பவுமா 16 , வேன் டெர் டுஷன் 4, ஐடன் மார்க்கம் 1, ஹென்றிச் க்ளாஸென் 28 என 3 முக்கிய வீரர்கள் அடுத்த சில ஓவர்களில் சீரான இடைவெளிகளில் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால்  தென். ஆபிரிக்கா 18.5  ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து  89 00ட்டங்கள் எடுத்தது. டேவிட் மில்லர்  அதிக பட்சமாக 43 ஓட்டங்கள் எடுத்தார்.  ஜெரால்ட் கோட்சி 22 , ரபாடா 9 , கேசவ் மகாராஜ் 40  ஓட்டங்கள் எடுத்தனர். 42.5 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த தென்.  ஆபிரிக்கா  207  ஓட்டங்கள் எடுத்தது.

2003 ஆம் ஆண்டு நமீபியா, 2007 ஆம் ஆண்டு இல் ஸ்காட்லாந்து ஆகியவற்றைத் தோர்கடித்த நெதர்லாந்து 16 வருடங்கள் கழித்து உலகக் கிண்ணப் போட்டியில்    பெற்றுள்ளது.  2022 ஆன் ஆண்டு ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தென். ஆபிரிக்காவைத் தோர்கடித்த நெதர்லாந்து அதன் அரை இருதி வாய்ப்பை நொருக்கியது.

7வது இடத்தில் களமிறங்கிய ஸ்காட் எட்வார்டஸ்நங்கூரமாகவும் அதிரடியாகவும் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 78* (69)ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற உதவினார்.  உலகக்கிண்ண வரலாற்றில் 7வது இடத்தில் களமிறங்கி    இந்திக கப்டன்  கபில் தேவின்  36 வருட சாதனையை சாதனையை அவர் முந்தினார்.

1. ஸ்காட் எட்வார்டஸ் : 78*, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2023*

2. கபில் தேவ் : 72*, நியூசிலாந்துக்கு எதிராக, 1987

3. ஹெத் ஸ்ட்ரீக் : 72*, நியூசிலாந்துக்கு எதிராக, 2003

4. தசுன் சனக்க : 68, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக , 2023

கிறிக்கெற் விளையாடும் சந்தர்ப்பன் நெதர்லாந்தில் அதிகளவு இல்லை. நெதர்லாந்து அணியில் உள்ள வீரர்கள்  வேலை செது கொண்டு பகுதி நேரமாக கிரிக்கெற்  விளையாடுகிறார்கள். மூன்ரு மாதங்களுக்கு  முன்  உணவு  டெலிவரி செய்த  பால் மேக்கிரீன் 9 ஓவர்கள் வீசி 40 ஓட்டங்களை விக்குக் கொடுத்து    இரண்டு முக்கிய விக்கெட்களை   வீழ்த்தினார்.

நெதர்லாந்தின் சில  ள் சில வீரர்கள் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடி தங்களது வாழ்க்கையில் நடத்தி வருகின்றனர்.  2020 ஆம் ஆண்டு கொரோனா இந்த உலகத்தையே தலை கீழ் புரட்டிப் போட்டது. இதில் விளையாட்டு உலகமும் வெகுவாக பாதிக்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில், கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட சென்ற நெதர்லாந்து வீரர் பால் வான் மேக்கிரீன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் வாழ்க்கையைக் காப்பாற்ற  அங்கு உணவு டெலிவரி செய்யும் வேலை கிடைத்தது.   கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் பணம் தேவை என்பதற்காக அந்தப் பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது ரி20  வுலகக்கிண்ண  கிரிக்கெட் போட்டி நடந்திருக்க வேண்டிய தினம் இது என சமூக வலைத்தளத்தில் செய்தி ஒன்று போடப்பட்டிருந்தது. அதை மேற்கோள் காட்டிய பால் மேக்கிரீன் இந்நேரம் நான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பேன்.

ஆனால் விதி என்னை உணவு டெலிவரி செய்யும் வேலையை பார்க்க வைத்திருக்கிறது. எனினும் கவலைப்படாதீர்கள் மக்களே. மகிழ்ச்சியாக இருங்கள் என்று அவர் டிவீட் போட்டு இருந்தார். தற்போது மூன்று ஆண்டுகள் கடந்து  உலகக்கிண்ணப் போட்டியில் சாதித்துள்ளார்.

 ரமணி

Friday, November 19, 2021

கட்டாருக்கு நேரடியாகச் செல்கிறது நெதர்லாந்து


 

ஐரோப்பா கண்டத்தில் நடைபெற்ற உலகக்கிண்ண தகுதிகாண்  போட்டியில் நோர்வேயை வெற்றி கொண்ட நெதர்லாந்து கட்டாரில் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

போட்கோரிகாவில் மான்டினீக்ரோவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றதுருக்கியும்,  பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில்  1-1 என்ற  கோல் கணக்கில் சமன் செய்த வேல்ஸும்  பிளே ஃஓவ் சுற்றில் விளையாடக் காத்திருக்கின்றன.

ரசிகர்கள்  இல்லாத டி குயிப் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நோர்வேக்கு எதிரான  போட்டியில்  2-0 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்ற நெதர்லாந்து   அடுத்த ஆண்டு  நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

நெதர்லாந்து பயிற்சியாளர் லூயிஸ் வான் கால், ஞாயிற்றுக்கிழமை  விபத்தில்  இடுப்பில் எலும்பை உடைத்தபின், மைதானத்தில் ஸ்கை பாக்ஸில் இருந்து போட்டியைப் பார்த்தார். டக்அவுட்டில் உள்ள அவரது உதவியாளர்களான ஹென்க் ஃப்ரேசர் மற்றும் டேனி பிளைண்ட் ஆகியோருக்கு செய்திகளை அனுப்பினார்.

ஸ்டார் ஸ்டிரைக்கர் எர்லிங் ஹாலந்தும் காயத்துடன் வெளியேறியதால்  நோர்வே பெரும்பாலும் தாக்குதல் உத்வேகத்தைக் கொண்டிருக்கவில்லை. ரஷ்யாவில் 2018 உலகக்கிண்ணப் போட்டிக்கு நெதர்லாந்து தகுதி பெறவில்லை .

செவ்வாயன்று நடைபெற்ற பெல்ஜியத்திற்கு எதிரான போட்டி   1-1 என்ற கோல் கணக்கில் முடிந்ததால் வேல்ஸ் அணியின் உலகக்கிண்ணப் பயனம் தாமதமாகியது. கடந்த மார்ச் மாதம் உலகக்  கிண்ண  பிளேஓஃப் இடத்தை உறுதி செய்தது வேல்ஸ். ஆனால் குழு E இல் இரண்டாவது இடத்தைப் பிடித்தால், அவர்கள் பிளே-ஆஃப் அரையிறுதியில் இத்தாலி , போர்ச்சுகல் போன்ற பலமான அணியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

 ஆனால், ஆஸ்திரியா, வடக்கு மாசிடோனியா, போலந்து, உக்ரைன், துருக்கி அல்லது செக் குடியரசு ஆகிய நாடுகளில் ஒன்றுடன் வேல்ஸ் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது.