Tuesday, February 28, 2023

`ஓராண்டைக் கடந்தும் ஓயாத உக்ரைன் - ரஷ்ய போர்!'

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயானப் போர் ஓராண்டைக் கடந்துவிட்டது. இருதரப்பிலும் லட்சக்கணக்கில் உயிர் பலிகள், மீட்டுருவாக்கம் செய்யமுடியாத உடமை சேதங்கள், பில்லியன் கணக்கில் பொருளாதாரச் சரிவுகள் என அனைத்து வகையான பேரிழப்புளைச் சந்தித்தபின்னும் போரை முடிவுக்கு கொண்டுவராமல் இருநாடுகளும் உக்கிரமாய் தங்கள் சண்டையைத் தீவிரப்படுத்திக்கொண்டிருக்கின்றன.   உலக நாடுகள் சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என கேட்டுக்கொண்டாலும் அவற்றையெல்லாம் மதிக்காமல் விடாப்பிடியாக போரைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. ஐ.நா-வும் வழக்கம்போல `போரை நிறுத்துங்கள்' என கண்துடைப்பு அறிக்கைகளையே ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

உக்ரைன் - ரஷ்யா போர் தாக்கத்தால் அந்த இரு நாடுகள் மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம் என அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்றன  

குறிப்பாக, ரஷ்ய எல்லையை ஒட்டிய கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் வாழும் உக்ரைன் மக்கள்(ரஷ்ய மொழி பேசுபவர்கள்) பொதுவாக ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டுடனும், மேற்குப்பகுதியை ஒட்டிய உக்ரைன் மக்கள் ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு நிலைப்பாட்டுடனும் இருக்கின்றனர். உக்ரைன் மக்களின் இந்த அடிப்படை உளவியலை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தங்கள்பக்கம் இழுத்துக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யாவும் போட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன.

இதற்கு முக்கிய காரணம், உக்ரைன் ரஷ்யாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடைப்பட்ட எல்லையில் அமைந்திருக்கிறது. எனவே, கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த உக்ரைனை சரியான களமாக தேர்வுசெய்திருக்கும் அமெரிக்க, ஐரோப்பிய கூட்டு நாடுகள், உக்ரைனை தங்களின் நேட்டோ கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள ஆதரவு தெரிவித்தன. வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டுசேர ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துவந்த உக்ரைன், நேட்டோ ( NATO- அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளோடு 28 ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஏற்படுத்தப்பட்ட அமைப்பு) கூட்டமைப்பில் இணையவும் ஆர்வம் 


உலகமே 2022-ம் ஆண்டை கொண்டாட்டங்களுடன் வரவேற்றுக்கொண்டிருந்தபோது, உக்ரைன்-ரஷ்யா நாடுகள் மட்டும் மிகுந்த பதற்றத்துடனே காணப்பட்டன. 2021 நவம்பர் மாதம் தொடங்கிய அந்தப் போர்ப் பதற்றம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கணக்காக நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருந்தது. அதற்கேற்றார்போல அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``உக்ரைனைத் தாக்கினால் சும்மா இருக்க மாட்டோம்" என உக்ரைனை ரஷ்யாவுக்கு எதிராக உசுப்பிக்கொண்டிருந்தார்.

உக்ரைன் எல்லையைச் சுற்றி சுமார் 1 லட்சம் ரஷ்யப் படைவீரர்கள் குவிக்கப்பட்டனர். கருங்கடல் பகுதியில் ரஷ்ய போர்க்கப்பல்கள் நங்கூரமிட்டன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது நாட்டுப் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும்கூட ஆயுதப்பயிற்சி வழங்க உத்தரவிட்டார். ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அனுப்பிவைத்தது அமெரிக்கா. அதேசமயம், நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதற்குள் `அமெரிக்கர்களே உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்' என அவசர அறிவிப்பையும் அமெரிக்கா வெளியிட்டது. அதைத்தொடர்ந்து அப்போதைய இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும், ``ரஷ்யாவிடம் போர்த் திட்டங்கள் தயாராக இருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை(Kyiv) முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த தீர்மானித்திருக்கிறது. இதன்மூலம், 1945-ம் ஆண்டுக்குப் பிறகு, ஐரோப்பாவில் ஒரு மிகப்பெரிய போரை நடத்துவதற்கு ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது" என வலுவான எச்சரிக்கை விடுத்தார். 

2022, ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி  எதிர்பார்த்தபடியே ரஷ்ய ஜனாதிபதி  புதின், உக்ரைன் மீது போர்த்தொடுக்க தனது நாட்டு ராணுவத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டார். அடுத்த கணமே, உக்ரைன் மீது வான்வழியாகக் குண்டுமழை பொழிந்தது ரஷ்ய விமானப்படை. இதனை சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே ரஷ்யா சொல்லியது. அதேபோல, தரைவழித் தாக்குதல்களையும் தொடங்கியபடி உக்ரைன் எல்லைக்குள் நுழைந்தது ரஷ்ய ராணுவம். ``ரஷ்யா படையெடுத்து வந்த முதல் நாளில் உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என சுமார் 130 பேர் பலியாகிவிட்டனர். கிட்டத்தட்ட 316 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்

  `` விதிமுறைகளை மீறிக் குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்யா தாக்குதல்களை நடத்திவருகிறது. ரஷ்யத் தாக்குதல்களை உலக நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. எந்த நாடும் எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. நேட்டோ படைகளையும் காணவில்லை. இரண்டாவது நாளாகத் தனியாகப் போராடிக்கொண்டிருக்கிறோம். தயவுசெய்து உலக நாடுக உதவி செய்யவேண்டும்" என  உக்ரைன் ஜனாதிபதி வேதனையோடு கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, ரஷ்யா போர்த்தொடுத்தால் அமெரிக்காவும் நேட்டோ படைகளும் தங்களது நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் என்ற தைரியத்தில் தன்னைவிட ராணுவபலத்தில் மிகப்பெரிய நாடான ரஷ்யாவுக்கு எதிராகச் சவால்விட்டு வந்தார் உக்ரைன்  ஜனாதிபதி ஜெலன்ஸ்கி. ஆனால், ``உக்ரைன் எங்களது நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடு அல்ல; அதனால் எங்கள் படைகளை உக்ரைனுக்குள் அனுப்ப முடியாது. எங்களது உறுப்பு நாடுகளான போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள்மீது ரஷ்யா கைவைத்தால், திருப்பி அடிக்கத் தயங்கமாட்டோம்'' என கைவிரித்தது நேட்டோ.

அமெரிக்காவோ, `எவ்வளவுவேண்டுமானாலும் ஆயுதங்களை அனுப்புகிறோம், ஆனால் தங்கள் நாட்டு ராணுவத்தினரை போருக்கு அனுப்பிவைக்க வாய்ப்பில்லை' என திட்டவட்டமாகத் தெரிவித்தது. அதன்பிறகு, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளிடமிருந்து கிடைக்கின்ற அதிநவீன ஆயுதங்களை வைத்து ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்கத் தொடங்கியது உக்ரைன். மேலும், உக்ரைன்மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாமீது, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், ரஷ்யாவின் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவு பாதிக்கப்பட்டது.  

எத்தனைத் தடைகளை விதித்தாலும், ``மேற்குலக நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை எங்களின் போர் தொடரும்'' என ரஷ்யப் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அதிரடியாகத் தெரிவித்தது. ரஷ்யாவின் விடாப்பிடியான தாக்குதலால், உக்ரைனின் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் என அத்தனைக் கட்டடங்களும் பாரபட்சமின்றி தகர்க்கப்பட்டன. ஏராளமான உயிரிழப்புக்கு மத்தியில், கோடிக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டைநாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர்.

குறிப்பாக, இந்தப் போர் தொடங்கிய சில மாதங்களிலேயே சுமார் 1 கோடியே 20 லட்சம் உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அதிகபட்சமாக, போலந்து நாட்டில் மட்டும் 36 லட்சம் பேர் குடியேறியிருப்பதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பா கண்டத்தில் நிகழ்ந்திருக்கும் மிகப்பெரிய அகதிகள் இடப்பெயர்வாக இந்த நிகழ்வு வரலாற்றில் இடம்பெற்றது. ட்டம்

போரால் உக்ரேனிய மக்கள் மட்டுமல்லாமல், உக்ரைனில் தங்கியிருக்கும் பிறநாட்டு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்புகளுக்காக உக்ரைன் நாட்டுக்குச் சென்ற வர்கள்  பாதிக்கப்பட்டனர்.

உலகின் மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்றான ரஷ்ய ராணுவம், உக்ரைனை முழுவதுமாகக் கைப்பற்ற ஒரு சில மாதங்களே போதும் என சொல்லப்பட்டுவந்த நிலையில், தனது தலைநகர் கீவை நெருங்க முடியாதபடி ரஷ்யாவுக்கு மிகப்பெரிய டஃப் கொடுத்தது உக்ரைன் ராணுவம். போர்த்தொடுத்தது ரஷ்யாதான் என்றாலும்கூட, ரஷ்ய தரப்பிலும் மிகக்கடுமையான பாதிப்புகளை உக்ரைன் ராணுவம் ஏற்படுத்தியது. அதாவது, போர் நடைபெற்ற மூன்று மாதத்தில் சுமார் 25,000 ரஷ்யப் படைவீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்தது.

``ரஷ்யாவுக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறோம். போரில் இதுவரை 24,900 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர். மேலும், 1,110 பீரங்கிகள், 199 விமானங்கள், 155 ஹெலிகாப்டர்கள், 1,900 வாகனங்கள், 2,686 கவச வாகனங்கள், 502 வெடிகுண்டு வீசும் சாதனங்கள், எரிபொருள் டேங்குகள் என பெரிய அளவிலான ரஷ்யாவின் போர்த் தளவாடங்களை உருத்தெரியாமல் அழித்திருக்கிறோம்" என அப்போதே உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் துணிச்சலாகக் கூறியது. தற்போதைய நிலவரப்படி, ரஷ்யாவுக்குச் சொந்தமான 3,121 பீரங்கிகள் மற்றும் 4,877 வாகனங்கள் மற்றும் எரிபொருள் பீரங்கிகள், 2,104 பீரங்கி அமைப்புகள் அழிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறது

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியபோதே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 100 டாலருக்கும் அதிமாக உயர்ந்தது. அதேபோல, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்தது. காரணம், உலக அளவில் கோதுமை, பார்லி, சோளம், சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யாவும் உக்ரைனும்தான் முக்கியப் பங்காற்றி வந்தன. இந்தநிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட உலக நாடுகள் சேர்ந்து சுமார் 5,831 தடைகளை விதித்ததால் ரஷ்யாவின் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவு பாதிக்கப்பட்டது. அதேபோல, போர்தாக்கத்தால் உக்ரைனிலும் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த இரு நாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதியை நம்பியிருக்கும் உலக நாடுகள் அத்தியாவசியப் பொருள்களுக்காக தட்டுப்பட்டை எதிர்கொண்டன. குறிப்பாக, ஆப்பிரிக்க நாடுகள் பெருமளவில் உணவுத்தட்டுப்பாட்டை எதிர்கொண்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்றவையே சர்வதேச அளவில் பணவீக்கத்துக்கான முக்கியக் காரணமாக அமைந்தது.

இதுகுறித்துப் பேசிய ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ``'உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளும் கோதுமை, பார்லியை 30 சதவிகிதம் உற்பத்தி செய்கின்றன. குறைந்த அளவில் வளர்ச்சியடைந்த 45 நாடுகள் மூன்றில் ஒரு பங்கு கோதுமையை ரஷ்யா மற்றும் உக்ரைனிடமிருந்து இறக்குமதி செய்து கொள்கின்றன. 2022-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, கோதுமை மற்றும் சோளத்தின் விலை 30 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 60 சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் எரிவாயு மற்றும் உரங்களின் விலைகள் இருமடங்காக உயர்ந்துள்ளன. எனவே, ரஷ்யா-உக்ரைன் போரால் உலக அளவில் சுமார் 170 கோடி மக்கள் பசி, பட்டினி போன்ற வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்!" என கவலை தெரிவித்தார்.

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி -58 

  

தமிழ் சினிமாவில் வாய்ப்புத்தேடி அலைந்த வாலிகளைத்துப்போனார்.  கவிஞர் கண்னதாசனையே திரை உலகினர்  பெரிதும் நம்பினார்கள். அவர் பாடல்கள்  கொடுக்கத் தாமதமானாலும் காத்திருந்து பாடல்களைப் பெற்றனர். எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதிய பாடல்கள்  பட்டி  தொட்டி என்க்கும் ஒலித்தன.  வாய்ப்புத் தேடித் தவமிருந்த வாலி தனக்குக் கிடைத்த சின்னச் சின வாய்ப்புகளைப் பயன் படுத்தி தனது திறமையை  வெளிப்படுத்தினார்.

எம்.ஜி.ஆருக்காக தெய்வத்தாய், படகோட்டி ஆகிய படங்களுக்கு வாலி பாடல்கள் எழுதினார்.  அந்த இரண்டு படங்களின் பாடல்களும்  மக்களுக்குப் பிடித்து விட்டதால் எம்.ஜி.ஆரின் மனதில் வாலி இடம் பிடித்தார்.

எம்ஜிஆர் -கண்ணதாசன் என்ற  வெற்றிக் கூட்டணிக்குள்  வாலியும் இணைந்தார்.  எம்.ஜி.ஆர்,  வாலி கூட்டனியிலும்  பாடல்கள்  பிரமாதமாக  இருந்தன.  58ம் ஆண்டு ‘அழகர்மலைக் கள்வன்’ என்ற படத்தில் பாட்டெழுதத் தொடங்கினார் கவிஞர் வாலி. படத்துக்கு ஒரு பாடல் எழுதி வந்தார். அந்தப் படமும் ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒருமுறை கிடைத்து வந்தது. 61ம் ஆண்டு, எம்ஜிஆர் நடித்து, அறிஞர் அண்ணாவின் வசனத்தில் வந்த ‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் ஒரு பாடல் எழுதினார். பாட்டு ஹிட்டானது என்றாலும் கண்ணதாசன் - எம்ஜிஆர் கூட்டணி வலுவாக இருந்த காலம் அது.


முக்தா சீனிவாசனின் இயக்கத்தில், ஜெமினி கணேசன் நடித்த ‘இதயத்தில் நீ’ படத்தில் கண்ணதாசனும் மாயவநாதனும் வாலியும் எழுதியிருந்தார்கள். மாயவநாதனும் மிகச்சிறந்த பாடலாசிரியர்தான். சொல்லப்போனால், மாயவநாதன் எழுதிய பல பாடல்கள், கண்ணதாசன் எழுதிய பாடல்கள் என்று கொண்டாடப்பட்டன. அந்த அளவுக்கு மாயவநாதன் பாடல்கள் எழுதி பிரபலமாகியிருந்தார். பின்னாளில், வாலியின் பாடல்களைக் கேட்டுவிட்டு, கண்ணதாசன் பாடல்கள் என்று பலரும் கொண்டாடினார்கள். இன்றைக்கும் கண்ணதாசன் பாட்டு என்று பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

‘இதயத்தில் நீ’ படத்தில் வாலி எழுதிய பல பாடல்கள், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. 63ம் ஆண்டு இந்தப் படம் வெளியான அதே காலகட்டத்தில், இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், ‘கற்பகம்’ படம் வெளியானது. இந்தப் படத்தில் முதன்முதலாக எல்லாப் பாடல்களையும் எழுதினார் வாலி. பெண் குரல் கொண்ட எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

இதே சமயத்தில், பாலசந்தரின் கதை, வசனத்தில் , கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் வெளியான ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் ‘அவளுக்கென்ன’ பாடலை எழுதினார். இன்று வரைக்கும் அந்தப் பாடல் ஹிட் லிஸ்ட் வரிசையில் இருக்கிறது. 64ம் ஆண்டில், எம்ஜிஆர் நடித்த ‘தாயின் மடியில்’ படத்துக்கு வாலியும் பாட்டு எழுதினார்.இந்த வருடம்தான் ‘தெய்வத்தாய்’ படம் வெளிவந்தது

’இந்தப் புன்னகை விலை’ என்ற பாடல், ’வண்ணக்கிளி சொன்னமொழி என்ன மொழியோ?’, என்ற பாடல், ’ஒருபெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்’ என்ற பாடல் என எல்லாப்பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. எல்லாப் பாடல்களையும் வாலி எழுதினார். இந்தப் படத்தில் இன்னொரு பாடலும் உண்டு. அது எம்ஜிஆரின் திரைப் பயணத்தில் டாப் கியர் எடுப்பதற்கும் அரசியல் வாழ்வில் பல படிகள் முன்னேறுவதற்கும் காரணமாக அமைந்தது. அந்தப் பாடல்... ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்’. இந்தப் பாடல், எம்ஜிஆரை மிகப்பெரிய உயரத்தில் இருந்து உச்சத்துக்குக் கொண்டு சென்றது. வாலியை உயரத்துக்குக் கொண்டு சென்றது.

இதையடுத்து, இதே 64ம் ஆண்டில், ஜி.என்.வேலுமணி தயாரிப்பில், டி.பிரகாஷ்ராவ் இயக்கத்தில், மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், எம்ஜிஆர், சரோஜாதேவி, நம்பியார், நாகேஷ், மனோரமா நடிப்பில் வெளியானது ‘படகோட்டி’.

இந்தப் படத்தில், ஒரேயொரு பாட்டெழுதத்தான் வாலியை அழைத்தார்கள் என்றும் அந்தப் பாட்டு எம்ஜிஆருக்கு ரொம்பவே பிடித்துப் போனதால் எல்லாப் பாடல்களையும் வாலியைக் கொண்டே எழுதவைத்தார் என்றும் சொல்லுவார்கள்.

எம்ஜிஆர் படத்துக்கு எல்லாப் பாடல்களுமே வாலி எழுதியது ‘தெய்வத்தாய்’ படத்தில்தான். இதன் பின்னர் ‘படகோட்டி’ படத்தில் எல்லாப் பாடல்களும் எழுதினார்.

‘அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்’ என்றொரு பாடல். ’என்னை எடுத்து தன்னைக் கொடுத்து’, என்றொரு பாடல். ’கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு’, ‘தொட்டால் பூமலரும்’, ’பாட்டுக்குப் பாட்டெடுத்து‘ என்ற பாடலும் ‘நானொரு குழந்தை நீயொரு குழந்தை’ என்ற பாடல்கள் அனைத்துமே அப்படியொரு ஹிட்டைப் பெற்றன.

மீனவர்களின் வாழ்க்கையை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தில், இன்னும் இரண்டு பாடல்கள் எழுதியிருந்தார் வாலி. ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்’ என்ற பாடலும் ‘தரைமேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்’ என்ற பாடலும் அடைந்த வெற்றிக்கு அந்தக் கடல்தான் எல்லை.

மீனவக் குடும்பங்களில் என்றில்லாமல், ஒட்டுமொத்த தமிழகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்தப் பாடல்களும் டி.எம்.எஸ்., சுசீலாவின் குரலும் இன்னும் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ’ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்’ என்பன போன்ற வரிகள், கடலில் கால் வைக்காதவர்களின் மனங்களையும் அசைத்து உலுக்கியது.

எம்ஜிஆரின் மறக்கமுடியாத பட வரிசையில் ‘படகோட்டி’க்கு இடம் உண்டு. கவிஞர் வாலியின் திரை வாழ்வில் ‘படகோட்டி’க்கு இடமுண்டு. 1964ம் ஆண்டு, நவம்பர் 3ம் தேதி வெளியான ‘படகோட்டி’ படம் வெளியானது. 56 ஆண்டுகளானாலும் ‘தொட்டால் பூமலரும்’, ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’, ‘தரைமேல் பிறக்கவைத்தான்’ முதலான பாடல்களை மறக்கவே முடியாது!

’கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’, ‘தரைமேல் பிறக்கவைத்தான்’, ‘தொட்டால் பூ மலரும்’, ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து’... எம்ஜிஆர் - வாலி கூட்டணியின் 2வது மெகா ஹிட் பாடல்கள்!

உக்ரைனில் அமெரிக்க ஜனாதிபதி அதிர்ச்சியில் ரஷ்யா

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு வருடம்  முழுமையாக  முடிந்து விட்டது. கடந்த ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீது   ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. இந்த ஆண்டு பெப்ரவரி 23 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  மிகவும்  இரகசியமான முறையில் உக்ரைனுக்குச் சென்றார்.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன்  ஜோ பைடன்  வீதியில் நடந்து செல்லும்  புகைப்படங்கள் ரஷ்யாவுக்கு விடப்படும் எச்சரிக்கையாகப் பார்க்கப்பாடுகிறது.  உக்ரைனில்  அகதிகள் இருக்கும் சாலைகள் வழியாக இவர்கள்  இருவரும் சாதாரண மக்கள் போல நடந்து சென்றனர். ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் போர்க்களத்தில் இருக்கிறது. சீனா, வட கொரியா ஆகியனவும்  ரஷ்யாவின்  பக்கம்  உள்ளன.  ஏனைய நாடுகள் தேவையான  போர்த்தளபாடங்களையும் வேறு பல  உதவிகளையும் உக்ரைனுக்கு வழங்குகின்றன.

உக்ரைனின் கதையை சுலபமாக  முடித்து விடலாம் என இறுமாப்படைந்த  ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அதிர்ச்சியடைந்துள்ளார். ரஷ்யப் படைகள் கைப்பற்றிய இடங்களை  உக்ரைன்படைகள் மீண்டும் பறித்தெடுத்தன.இப்படி  ஒரு சம்பவம் நடக்கும் என  புட்டின் கனவிலும் எதிர்பர்த்திருக்க மாட்டார்.

கடந்த வருடம் பெப்ரவரி  மாதத்தில் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தொடங்கியது. நேட்டோ படையில் உக்ரைன் இணைவதை தடுக்கும் வகையிலும், உக்ரைனில் அமெரிக்க ராணுவ தளவாடங்கள் அமைக்கப்படுவதை எதிர்க்கும் வகையிலும் ரஷ்யா திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்தது. முதல் 3 மாதங்கள் தீவிரமாக நடந்த போர் தற்போது விட்டு விட்டு நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு நாடுகளுமே போரில் பெரிய அளவில் முன்னேற்றம் அடையவில்லை. ரஷ்யா பெரிதாக உக்ரைன் நாட்டு நகரங்கள் எதையும் கைப்பற்றவில்லை. அப்படியே ரஷ்யா கைப்பற்றிய நகரங்களையும் கடந்த இரண்டு மாதங்களில் பெரிய அளவில் இழந்துவிட்டது. இந்த போர் ஆப்கான் தாலிபான் போர் போல ஒரு முடிவில்லா போராக மாறிவிட்டது.

அமெரிக்க ஜனாதிபதி பைடன்   திடீரென உக்ரைன் சென்றது உலக அரசியலில் பெருமளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த பயணத்தை பைடன் மிகவும் இரகசியமாகத்   திட்டமிட்டதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க நேரடிப்படி அதிகாலை 4 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி பைடன்  ஏர் போர்ஸ் 757 விமானத்தில் ஏறி இருக்கிறார். இந்த விமானம் சி 32 என்றும் அழைக்கப்படும்.

அமெரிக்க ஜனாதிபதி  எப்போதும் வெளிநாட்டு பயணத்தில் பயன்படுத்தும் விமானங்களை விட இது கொஞ்சம் சிறிய விமானம். அதோடு விமானத்தின் அனைத்து ஜன்னல்களும் இறுக்கமாக மூடப்பட்டு கறுப்பாக காட்சி அளித்தது. உக்ரைன் அதிபரை தவிர  உலக நாடுகள் எதற்கும்     தகவல் தெரிவிக்காமல் பைடன் பறந்துள்ளார். இதனால் உக்ரைனுக்கு பைடன் செல்வது பற்றிய சின்ன க்ளூ கூட  ரஷ்யாவுக்குக் கிடைக்கவில்லை.  பைடனுடன் சிறிய இரானுவக்குழு, , ஒரு மருத்துவக்குழு ,இரண்டு செய்தியாளர்கள்,  இரண்டு ஆலோசகர்கள் மட்டும் சென்றுள்ளனர். இந்த இரண்டு செய்தியாளர்களும் ரகசிய காப்பு ஒப்பந்தத்திலும் கையெழுத்து போட்டனர். பைடனுக்கு எதுவும் ஆகும் பட்சத்தில் அதை செய்தியாக, நம்பகத்தன்மையுடன் வெளியிட இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த விமானம்  இவர்கள் அமெரிக்காவின் வாஷிங்டன் ராணுவ தளத்தில் இருந்து ஜேர்மனிக்குச் சென்றது. 'கோல்ஃப் போட்டிக்கான வருகைக்கான வழிமுறைகளை' என்ற இரகசிய வரிகளுடன் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டது. ஏர்ஃபோர்ஸ் ஒன் ஜேர்மனியில் உள்ள ராம்ஸ்டீன் விமான தளத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 5.13 மணிக்கு (இங்கிலாந்து நேரப்படி மாலை 4.13 மணி) ஞாயிற்றுக்கிழமை சிறிது மேகமூட்டமான வானத்தின் கீழ் ஏறக்குறைய ஏழு மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு எரிபொருள் நிரப்புவதற்காக இறங்கியது  உள்ளே இருந்து வெளியே யாரும் அந்த நேரத்தில் செல்லவில்லை. அதன்பின் போலந்தில் தரை இறங்கியது. . அங்கே இருந்து பின்னர் இவர்கள் உக்ரைனுக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இதற்காக அந்த விமான நிலையத்தில் இருந்து எஸ்யுவி கார்களில் இவர்களில் பயணம் மேற்கொண்டு உள்ளனர். சைரன் இல்லாமல், அமைதியாக காரில் சென்று ரயில் நிலையத்தை அடைந்தனர். போலந்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் இருந்து ரயிலில் உக்ரைன் எல்லைக்குச்  சென்று அங்கிருந்து பின்னர் மீண்டும் காரில் சென்றுள்ளனர்.

உக்ரைன் அகதிகள் இருக்கும் சாலைகள் வழியாக இவர்கள் சாதாரண மக்கள் போல நடந்து  சென்றனர். ஆனால் மக்களோடு மக்களாக அமெரிக்காவின் பாதுகாப்பு படை வீரர்களும் மப்டியில் இருந்துள்ளனர். இந்த கார் பயணம் வழியாக அவர்கள் உக்ரைன் தலைநகரை அடைந்து உள்ளார். 10 மணி நேரம் ரயில் பயணத்தை பிடன் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இரவில் ரயில் ஏறியவர்கள் திங்கள் கிழமை அதிகாலைதான் உக்ரைனுக்குச் சென்றனர். அதன்பின் போர் பாதிக்கப்பட்ட பகுதி வழியாக காரில் சென்று கீவ் பகுதியை அடைந்தனர். இதன்பின்பே 9 மணி அளவில்   செலன்ஸ்கியை ஜோ பைடன்  சந்தித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிக்கெற்றில் கலக்கும் நடிகர்கள்

 தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 8 மாநில திரைப்பட துறையில் உள்ள நடிகர்கள் பங்கேற்கும் ‘செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்’ என்ற கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. ஹைதராபாத், ராய்ப்பூர், பெங்களூர், திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், ஜோத்பூர் ஆகிய 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது.

தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணியின் க‌ப்டனாக ஆர்யா உள்ளார். இந்த அணியில் ஜீவா, விஷ்ணு விஷால், பரத், விக்ராந்த், ஆதவ் கண்ணதாசன், சாந்தனு, பிருத்வி ஆகியோர் விளையாடுகின்றனர். தெலுங்கு வாரியர்ஸ் அணி க‌ப்டனாக நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான அகில் அக்கினேனி உள்ளார்.

தனது தரமான பேட்டிங் ஃபார்மைத் தொடர்ந்த அகில் அக்கினேனி 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.

கேரள ஸ்டிரைக்கஸ் அணியின் க‌ப்டனாக குஞ்சாக்கோ போபனும், கர்நாடகா புல்டோசர்ஸ் க‌ப்டனாக சுதீப்பும், பஞ்சாப் தி ஷேர் அணி க‌ப்டனாக சோனுசூட்டும், பெங்கால் டைகர்ஸ் அணி க‌ப்டனாக கிசுசென் குப்தாவும், போஜ்புரி தபாங்ஸ் அணி க‌ப்டனாக மனோஜ் திவாரியும் விளையாடுகின்றனர்.

கழந்த  ஞாயிற்றுக்குழமை  நடந்த ஆட்டத்தில் தெலுங்கு வாரியர்ஸ் பெங்கால் டைகர்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய  தெலுங்கு வாரியர்ஸ் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய க‌ப்டன் அகில் அக்கினேனி பவுண்டரி, சிக்ஸர்களை பறக்கவிட்டார். மேலும், தொடரில் தனது 3 அரைசதத்தையும் பதிவு செய்தார். கடைசி வரை களத்தில் அகில் 26 பந்துகளில் 57 ஓட்டங்ன்களும், அஷ்வின் 17 பந்துகளில் 43 ஓட்டங்ன்களும் எடுத்தனர். இந்த ஆட்டத்தில் பெங்கால் டைகர்ஸ் அணியை தெலுங்கு வாரியர்ஸ் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், தெலுங்கு வாரியர்ஸ் அணி க‌ப்டன் அகில் அக்கினேனியை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தனது தரமான பேட்டிங் ஃபார்மைத் தொடர்ந்த அவர் 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். தொடர்ச்சியாக 3வது சதத்தையும் விளாசி மிரட்டினார். இதனால், அகில் சினிமா நட்சத்திரமா? அல்லது கிரிக்கெட் நட்சத்திரமா? என்று வியந்து அவரை பாராட்டி வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் அவர் பற்றி பதிவுகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றது.

புதிய கப்டன்களுடன் ஐ.பி.எல் அணிகள்

 இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) தொடரின் 16வது சீசன் மார்ச் 31ம் திதி தொடங்குகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் க‌ப்டன்களின் பெயர்களை வெளியிட்டன. எட்டு  அணிகளின் க‌ப்டன்களை ஏற்கனவே தெரிந்தநிலையில்,   சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் தங்களது க‌ப்டன்களை அறிவித்தனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 6 ஆண்டுகளுக்கு பிறகு 3 வெளிநாட்டு க‌ப்டன்கள் ஐபிஎல் அணிகளை வழிநடத்தப் போகிறார்கள்.

கடந்த டிசம்பர் மாதம் விபத்தில் காயமடைந்த ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய அக்ப்டனமாக நியமிக்கப்பட்டார்.  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய க‌ப்டனாக தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரமை நியமித்தது. 2022ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டு பிளெசிஸை க‌ப்டனாக நியமித்தது. இந்த 3 அணிகளில் மட்டுமே தற்போது வெளிநாட்டு க‌ப்டன்கள் உள்ளனர். மீதமுள்ள 7 அணிகளிலும் இந்திய கேப்டன்கள் மட்டுமே உள்ளனர். 6 ஆண்டுகளுக்குப் பிறகு 3 வெளிநாட்டு கேப்டன்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷேன் வார்னே தலைமையின் கீழ் கோப்பை வென்றது. அடம் கில்கிறிஸ்ட் 2009 இல் டெக்கான் சார்ஜர்ஸ், 2016 இல் டேவிட் வார்னர் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும்  சம்பியனாகி உள்ளன. இந்த 3 வெளிநாட்டு க‌ப்டன்கள் தவிர 12 முறை இந்திய க‌ப்டன்கள் தலைமையில்  அணிகள்  வெற்றி பெற்றன.

ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி 5 முறையும், டோனி தலைமையில் சென்னை அணி 4 முறையும் வென்றுள்ளனர். அதேபோல், கௌதம் காம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி இரு முறையும், கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் அணி கோப்பையை வென்றது.

அணிகளும் -கப்டன்களும்:

 சென்னை சூப்பர் கிங்ஸ் -  மகேந்திர சிங் டோனி

டெல்லி கேப்பிடல்ஸ் - டேவிட் வார்னர்

குஜராத் டைட்டன்ஸ்-ஹர்திக் பாண்டியா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஷ்ரேயாஸ் ஐயர்

லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் - கே.எல்.ராகுல்

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா

பஞ்சாப் கிங்ஸ் - ஷிகர் தவான்

ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டு பிளெசிஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - எய்டன் மார்க்ரம்

Monday, February 27, 2023

ரணிலின் தந்திரமா குள்ள நரியின் தந்திரமா


 உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுமா  இல்லையா என்ற கேள்விக்கு ஜனாதிபதி ரணில் விகிரமசிங்க தெள்ளத் தெளிவாகப் பதிலளித்துள்ளார்.  உளூராட்சித் தேர்தலில் தமது பலத்தைக் காட்டலாம் எனக் காத்திருந்த அரசியல் தலைவர்கள்  கொதித்துப் போயுள்ளனர். தேர்தலைச் சந்திக்காமல் ஜனாதிபதியானவரிடம்  ஜனநாயகத்தை எதிர்பார்ப்பது       முட்டாள்தனமானது.

 தேர்தல் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசினார். தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. அது ஒத்திவைக்கப்படுவதற்கு முதலில் தேர்தல் இல்லை. தமக்குத் தெரிந்தபடி இதுவரை தேர்தலுக்கான நிலையான திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் எனவே தேர்தலை நடத்துவது குறித்து சட்டப்படியான முடிவு எடுக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி கூறினார். தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டுமே தேர்தலை நடத்த முடிவு செய்ததாகவும், மற்றவர்கள் வாக்கெடுப்பில் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். க, தேர்தல் தொடர்பான தீர்மானத்தை தலைவர் நிமல் புஞ்சிஹேவா மற்றும் உறுப்பினர் எம்.எம். மொஹமட் மட்டும் எடுத்ததாகவும், மீதமுள்ள மூன்று உறுப்பினர்களின் ஒப்புதல் மட்டுமே ஜூம் மூலம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

“தேர்தல் நடத்துவதற்கான முடிவு தலைவர் மற்றும் எம்.எம். முகமது ஆகியோரால் எடுக்கப்பட்டது என்பதே இதன் பொருள். பின்னர் அவர் (புஞ்சிஹேவா) மற்றவர்கள் தொடர்பு கொண்டு பின்னர் அவர்களின் சம்மதம் பெறப்பட்டதாக கூறுகிறார். மற்ற மூவரிடமும் கேட்டால் அவர்களின் நிலைப்பாடு இதுவாக இருக்காது. அதற்கான ஆதாரத்தையும் என்னால் வழங்க முடியும். பின்னர் தேர்தலை நடத்துவது குறித்து உத்தியோகபூர்வ முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை” என்று அவர் மேலும் கூறினார். 

ஜனாதிபதியின்  அறிவிப்பு குழப்பமாகவே  உள்ளது. தேர்தலை நடத்தவிடது தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்பட்டன.  ஆனால், தேர்தல் நடத்துவதற்கான  பூர்வாங்க வேலைகள்  முன்னெடுக்கப்பட்டன.  ஜனாதிபதி ஒரு பாதையிலும், தேர்தல்கள் ஆணையம்  இன்னொரு பாதையிலும்  பயணம் செய்தன.உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற பட்டி மன்றம் ஒரு புரம்  இருக்க எல்லாக் கட்சிகளைப் போன்றே ஐக்கிய தேசியக் கட்சியும் உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்காக பணத்தைக் கட்டியது.

 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிவ  பெயர் கொடுத்த அரச  ஊழியர்கள்  மூன்று மாத சம்பளமற்ற விடுமுறை எடுத்துள்ளார்கள். தேர்தல் நடைபெற வில்லை என்றால் அவர்களின் நிலை என்ன என்பதர்கான  உத்தரவாதம் எதுவும்  இல்லை. நாடு இருக்கிர நிலமையில் தேர்தலை நடத்த பணம்  இல்லை  எனக் கைவிரிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பாராளுமன்றத்திலு, வெளியேயும்  பலத்த எதிர்ப்பு காட்டப்படுகிறது.  ஆளும் கட்சியும், எதிர்க் கட்சிகளும் தமது அரசியல் நலனுக்காகவே  போராட்டங்களை நடத்துகின்றன. ஜனாதிபதியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு தேர்தல் செயற்பாடுகள் அடிபணிவது இலங்கை ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ள ஒரு முடமான நோயின் அறிகுறியாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது, புற்று நோயைப் போன்று, சட்டமியற்றும் சபை உட்பட ஏனைய அனைத்து முக்கிய அரச நிறுவனங்களின் உயிர்ச்சக்திகளையும் தின்று, அவற்றை பலவீனப்படுத்தியுள்ளது. 21வது திருத்தம் சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்துவதற்கும் அரச சேவையை அரசியலற்றதாக்குவதற்கும் உதவும் ஒரு முற்போக்கான சட்டமாகப் பாராட்டப்பட்டது. ஆனால்,தன்னிச்சையாகச் செயற்கட வேண்டிய தேர்தல் ஆணையம் ஜனாதிபதியின் காலடியில்  கிடக்கிறது.

அரசாங்க அச்சகம் ஜனாதிபதி சொல்வதைச் செய்யும்  நிலையமாக மரி உள்ளது.  தேசிய பொலிஸ் ஆணைக்குழு  , சட்டமா அதிபர் திணைக்களம் என்பன  ஏதோ ஒரு அரசியல் பாதியில் இயங்குகின்ரன.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன, அரசாங்க அச்சுப்பொறியாளர் கங்கானி லியனகே ,நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன போன்ற அரச அதிகாரிகளே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்க முயற்சித்ததாகக் குற்றம்  சுமத்தப்பட்டது.  அவர்கள் வெரும் கைப்பாவைகள் என்பது இப்போது புரிந்துள்ளது.  இலங்கையின்  பொருளாதார நிலையை  ஜனதி பதி  முன்னிறுத்துகிறார். நாட்டின் பொருளாதார நெருக்கடிகளைப் பயன்படுத்தி அரசாங்கம் அனைத்துத் தேர்தல்களையும் காலவரையின்றி ஒத்திவைக்கும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது. ஜனாதிபதி எதிர்பார்க்கும் கடன்  கிடைக்கும் வரை எந்த  ஒரு தேர்தலும் நடப்பதர்கு வாய்ப்பு இல்லை.

அரசாங்கத்துக்கு எதிராக வலுப் பெறும் போராட்டங்கள்


 மக்களால் தெரிவு செய்யப்படும் அரசாங்கம் காலபோக்கில் மக்களால் நிராகரிக்கப்படுவது  வழமையானது,  மக்கள் மனம் கவரும் வாக்குறுதிகளுடன் ஆட்சி பீடம் ஏறுபவர்கள் காலப் போக்கில்  வாக்குறுதிகளை மறந்து விடுகின்றனர்.  மக்கள் மறப்பதில்லை.

பெப்ரவரி 22 ஆம் திகதி கொழும்பு கோட்டை பகுதியில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடக்த்த தடிவிதிக்க முயற்சி செய்யப்பட்டது. கொழும்பு கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொது அமைதியின்மை மற்றும் சேதத்தை ஏற்படுத்துவதை தவிர்க்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 ஆர்ப்பாட்டm seypavarkaL  ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடலுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறும் , பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 அரசுக்கு  எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்   தேசிய எதிர்ப்புத் தினம் எனப் பெயரிட்டுள்ளனர்.  கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்திய சுமார் 40 துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 100 தொழிற்சங்கங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம்வரிக் கொள்கைகளை திரும்பப் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தன.  சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிக்கொளகை பலரை பாதித்துள்ளது.

 ஆர்ப்பாட்டம் செய்பவர்கள்  ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடலுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறும் , பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக துறைமுகம், மின்சாரம், பெட்ரோலியம், வங்கி மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள்  போராட்டத்தில் கலந்துகொண்டன.

பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணைந்து ஹோமாகமவில்  அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்துடன்  நடத்திய கூட்டுப் போராட்டம், கூட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.  அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்குமாறு பௌத்த மத குருமார்கள் கோரிக்கை விடுத்துள்ளன.  பாலி மற்றும் புத்த பல்கலைக்கழகம் பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் புதிய மாணவர்களை கொடுமைப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் வெளிவந்ததை அடுத்து முக்கிய இடத்தைப் பிடித்தது.  பல்கலைக்கழக நிர்வாகம் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ரத்து செய்தது மற்றும் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களை விடுதி வளாகத்தை காலி செய்யும்படி அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது   பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்  கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த அண்மையில் விடுதலை செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலைவர்களான வசந்த முதலிகே மற்றும் வென் சிறிதம்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி    வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் மேற்கொண்ட பணி பகிஸ்கரிப்பு மற்றும் போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் பணிகள் பாதிப்படைந்துள்ளன. சுகாதார ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு குறைப்பு உட்பட 09 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.சுகாதார ஊழியர்கள் போராட்டம் காரணமாக வைத்தியசாலையின் கிளினிக் சேவைகள், ஆரம்ப சுகாதார பிரிவு சேவைகள், வெளிநோயாளர் பிரிவு என்பன பாதிக்கப்பட்டதுடன் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.வைத்தியசாலைகளில் மருந்துகள், உபகரணங்களின் பற்றாக்குறையை நிலவுகிறது.  அதிகரித்த வரியை,, மேலதிக கொடுப்பனவி முறைப்பு  போன்றவற்றால்  நாடு முழுவதும் போராட்டங்கள் நடை பெற்றன.

கோத்தா ஜனாதிபதியாக  இருந்தபோது தொடர் போராட்டங்கள் நடை பெற்றன.  இன்றும் போராட்டங்கள் நடை பெறுகின்றன. ஆனால்,  முன்னைரைப் போன்று வலுவான  பொராட்டங்களாக  எவையும்  பரிணமிக்கவில்லை.

ஆங்காங்கே நடைபெறும் போரட்டங்கள் ஒருமுகப்படுத்தப்படும்போது அதனை எதிர் கொள்வதர்குரிய சக்தி  அரசுக்கு இருக்காது.

கப்டன் வீட்டில் ஒன்று கூடிய 1983 உலகக் கிண்ண வீரர்கள்


 பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வர்ணனையாளராக இருந்து வரும் ரவி சாஸ்த்ரி, சுனில் கவாஸ்கர் ஆகியோர் டெல்லியில் உள்ள கபில்தேவ் வீட்டுக்கு சென்று நேரத்தை செலவிட்டுள்ளனார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் மூன்று நாளிலேயே முடிவுற்ற நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த சந்திப்பின் புகைப்படங்களை சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்த்ரி ஆகியோர் தங்களது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளனர். இவர்களுடன் மதன் லால், கிருதி அசாத், சுனில் வல்சான் ஆகிய முன்னாள் வீரர்களும் சென்றுள்ளனர்.

"83 உலகக் கிண்ண  இந்திய  அணி கப்டன் கபில் தேவ் வீட்டில் இந்த அற்புதமான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. டெல்லி டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி சிறப்பான டின்னர், உரையாடல்கள் மூலம் கொண்டாடப்பட்டது. சிறப்பான மாலை பொழுதாக அமைந்தது." என்று இந்த சந்திப்பு குறித்து கவால்கர் தனது இன்ஸ்டா பதிவில் தெரிவித்துள்ளார்.

1983 உலகக்  கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியானது கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பு வாய்ந்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. 183 ஓட்டங்கள் என மிகவும் குறைவான ஸ்கோர் எடுத்திருந்தபோதிலும், ஜாம்பவான் வீரர்களுடன், பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா.

அந்த உலகக் கோப்பை வெற்றியானது முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி இல்லாமல், வேறொரு அணி பெற்ற முதல் வெற்றியாக அமைந்தது.

அந்த அணியில் இடம்பெற்ற வீரர்களில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்திய அணி தேர்வுக்குழு தலைவாராக இருந்தார். அவர் தலைமையில் தேர்வு செய்யப்பட்ட அணிதான் மீண்டும் 2011ஆம் ஆண்டில் உலகக் கோப்பை வென்றது. ரவி சாஸ்த்ரி இந்திய அணி பயிற்சியாளராகவும், புகழ் பெற்ற வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார். கவாஸ்கர் வர்ணனையாளராக இருக்கிறார்.

அணியின் கப்டனாக இருந்த கபில்தேவ்வும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். இதே போல் மோனிந்தர் அமர்நாத், மதன்லால், சையத் கிர்மானி உள்ளிட்டோரும் பிசிசிஐ முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளனர்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் இந்திய கிரிக்கெட்டுக்கு தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் இவர்களின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைராகியுள்ளது.

சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்த பென் ஸ்டோக்ஸ்

 

 சின்னை சூப்பர் கிங்ஸ் வீரரான   பென் ஸ்டோக்ஸ் அனைத்து ஐபிஎல் கிரிக்கெட்  போட்டிகளிலும்  இடம் பெறமாட்டார் என்ற அறிவிப்பு சென்னை ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

 ஐபிஎல் நடப்பு சீசன் தொடர் மார்ச் 31ஆம் திகதி தொடங்கி மே 28ஆம் திகதி வரையில் நடைபெறுகிறது. இந்த முறையும் சென்னை அணிக்கு மகேந்திர சிங் டோனி கப்டனாக செயல்படவுள்ளார். இந்த போட்டியுடன், டோனி ஐபிஎல் போடிகளில் இருந்து விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 14 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம்தான் தோனி விளையாடும் கடைசி ஆட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நடந்த முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை அணி நிர்வாகம் ரூ. 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. டோனிக்கு பின்னர் கப்டன் பொறுப்பு ஸ்டோக்சிற்கு வழங்கப்படலாம் என்று ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி பகுதியில் பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அயர்லாந்து , அவுஸ்திரேலியா ஆகிய   அணிகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூன் மாதத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்கான பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளதால், பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல்லின் கடைசி சில ஆட்டங்களில் இடம்பெற மாட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Saturday, February 25, 2023

சன்ரைசர்ஸ் அணிக்கு புதிய கப்டன் நியமனம்ஐ.பி.எல்., 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கப்டனாக தென்னாப்பிரிக்க அணியின் வீரர் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று வியாழக்கிழமை று வெளியாகியுள்ளது. 28 வயதான மார்க்ரம், தென்னாப்பிரிக்க அணிக்காக 33 டெஸ்ட், 47 ஒருநாள், 31 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்கா ரி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத் கப்டனாக இருந்தவர் மார்க்ரம். இதன் காரணமாக ஐ.பி.எல் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணியின் கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் மிக மோசமாக விளையாடியது என்ற விமர்சனம் தொடர்ந்து எழுந்து வந்தது. 2021 ஐபிஎல் தொடரில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 2022-ல் 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தையே பிடித்தது.

கடந்த இரண்டு ஐபிஎல் சீசனில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என பலவீனமான அணியாகவே அந்த அணி கருதப்பட்டது. இதையடுத்து சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி வெளியேறினார். அதன் பிறகு, பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் கப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் இந்த ஆண்டு குஜராத் அணியில் விளையாடவுள்ளார்.

உலகக்கிண்ணப் போட்டிக்கு போத்துகலும் ஹெய்ட்டியும் தகுதி பெற்றன


 நியூஸிலாந்தில் நடைபெற்ற  பிளேஃஓவ்  போட்டிகளில் வெற்றி பெற்ற  போத்துகலும், ஹெய்ட்டியும்  முதன் முதலாக  மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.

புதன்கிழமை நடைபெற்ற பிளே-ஆஃப் வெற்றிக்குப் பிறகு போத்துகல் , ஹெய்ட்டி ஆகியன    அவுஸ்திரேலியா , நியூஸிலாந்து ஆகியன  இணைந்து நடத்தும் மகளில்  உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.

ஆக்லாந்தில் நடைபெற்ற பிளே-ஓஃப் போட்டியின் குரூப் பி பைனலில் சிலியை 2 ௧ என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்ற ஹெய்ட்டி முதல் முறையாக எலைட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதற்கிடையில், ஹமில்டனில் நடந்த மகளிர் உலகக் கோப்பை பிளே-ஓஃப்  போட்டியில் போத்துகல் 2  -1 என்ற கோல் கணக்கில் கமரூனை வீழ்த்தியது.

  இங்கிலாந்து, டென்மார்க் மற்றும் சீனாவுடன்  குழுயில் D இல் ஹெட்டி இடம் பெறும்.

 அமெரிக்கா, வியட்நாம் மற்றும் நெதர்லாந்துடன் குழு  A  இல்  போத்துகல்    இருக்கும்.   ஜூலை 20 முதல் ஓகஸ்ட் 20 வரை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகலில்  உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறும். 

ஹாமில்டனில் நடைபெறும் சி குரூப்  போட்டியில் பராகுவே பனாமாவை எதிர்கொள்ளும் போது போட்டியின் மற்றொரு இடம்  இன்று  வெளிக்கிழமை  தீர்மானிக்கப்படுகிறது.

தலைமைப் போட்டியில் முந்திய எடப்பாடி சறுக்கிய பன்னீர்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நடந்த தலைமைப் பதவிக்கான  போட்டியில் எடப்பாடி வெற்றி பெற்றுள்ளார். இந்த  வெற்றி நிரந்தரமானதில்லை என பன்னீரின் பின்னால் நிர்பவர்கள்  கூறுகின்றனர்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் டெல்லி உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கி உள்ளது.   ஜூலை 11ம் திகதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலோட்டமாகப் பார்த்தால் எடப்பாடி தரப்புக்கு சாதகமாக  உள்ளது. பொதுக்குழு செல்லும். பொதுக்குழுவின் தீர்மானங்கள் பற்றி  நீதிமன்றம் முடிவெதனையும் சொல்லவில்லை. சிவில் கோட்டில் அல்லது தேர்தல் ஆணையகத்தில்  முடிவைக் காணும்படி  நீதிமன்ரம் சொல்லியுள்ளது.நீதிமன்ரத் தீர்ப்புக்கு எதிராக  சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக  பன்னீர் தரப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கடந்த வருடம் ஜூலை 11ம் திகதி கூடியது. ஜூலை 11ம் திகதி நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டன. அதோடு இந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதை எதிர்த்து அதிமுக சார்பாக அவைத்தலைவர் தமிழ் மகன், தனியாக எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வழக்கு தொடுத்தனர்.

நீதுமன்றத் தீர்ப்பல் எடப்பாடி உற்சாகமடைந்துள்ளார். பன்னீருக்கு இது  பின்னடைவுதான். ஈரோடு இடைத் தேர்தல் திங்கட்கிழமை நடை பெற உள்ள நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சாதகமானதாக அமைந்துள்ளதுஅண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தினுள்  கடந்த எட்டு மாதங்களாக நிலவிய  பூசல்  ஈரோடு இடைத் தேர்த்ல் சமயத்தில்   முடிவுக்கு வந்ததும்  ஒரு  அரசியல்தான்பன்னீரிடம்  இருந்த  இரட்டை இலையை  எடப்பாடியிடம் கொடுத்த நீதிமன்றம் கட்சியையும் அவரிடம் ஒப்படைத்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கைகு வந்த  இரண்டு நாட்களுக்கிடையில் எடப்பாடிக்கு அக்கினிப் பரீட்சை காத்திருக்கிறது. இரட்டை இலை, கட்சி ஆகிய  இரண்டும்  கையில் இருப்பதால்  ஈரோடு இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற வேண்டிய கட்டாயம்  உள்ளது. ஈரோடு  கிழக்கு தேர்தலில் முன்னதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்  யுவராஜா இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டார்.இடைத் தேர்த்லில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறது.கடந்த தேர்தலில்  யுவராஜ்  ஒன்பதாயிரம் வாக்குகளால்  தோல்வியடைந்தார்இந்த  இடைத் தேர்தலில்  யுஅராஜ் வாங்கிய வாக்குகளுக்கு  அதிகமான வாக்குகளை  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் பெற வேண்டும்.அவர்  தோல்வியடைந்தால்  ஒன்பதாயிரம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெற  வேண்டும்.

நீதிமன்றம்  கொடுத்த வெற்றியை ஈரோடு இடைத்தேர்தல் தட்டிப் பறித்து விடுமோ என்ற அச்சம் ஒரு  புறம்  உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பக்க பலமாக பாரதீய ஜனதாக் கட்சி மட்டும் உள்ளது. ஆனால்பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும்  ஒரே  மேடையில் ஏறவில்லை. அண்ணாமலை மட்டும் தான்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக தேர்தல் பரப்புரை செய்தார். பாரதீய ஜனதாவை எடப்பாடி  எட்டத்திலே  வைத்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  அடிமட்டத் தொண்டரில் இருந்து  முதலமைச்சராக  படிப்படியாக  உயர்ந்தவர் . பன்னீர்ச்செல்வம்ஜெயலலிதாவின்  நம்பிக்கைக்குப்  பாத்திரமானவர் பன்னீர்ச்செல்வம்பதவி ஆசை பிடித்தவர்களால்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்தொண்டர்களையும்,

 நிர்வாகிகளையும்  பனீர் நம்பவில்லை. பாரதீய ஜனதாக் கட்சி  தன்னைக் காப்பாற்றும் என பன்னீர் நம்பி இருந்தார்கடைசியில் பாரதீய ஜனதாத்   தலைவர்கள் அவரைக் கைவிட்டுவிட்டார்கள்.

அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த பன்னீர் செல்வம் 3 முறை முதல்வராக இருந்தார். ஜெயலலிதா சிறை சென்ற போதெல்லாம் பன்னீர் செல்வத்திடம் மட்டுமே முதல்வர் பதவியை ஒப்படைத்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்த நிலையில் தான் தற்போது அவருக்கும், அதிமுகவுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது பன்னீர் செல்வத்தின் 33 ஆண்டுகளுக்கு மேலான அதிமுக பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சசிகலா தான் காரணமாம் அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை முதல்வர் பதவியில் அமர்ந்து, செல்வாக்கு மிக்க தலைவராக பன்னீர் செல்வம் வலம் வந்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற தலைவர்கள் முதல் ஆளாக பன்னீர் செல்வத்தின் பெயர் இருந்தாலே இக்கட்டான காலத்தில் முதல்வர் பதவியை ஜெயலலிதா பன்னீர் செல்வத்துக்கே வழங்கி வந்தார். இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின்படி தற்போது பன்னீர் செல்வம் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. இதன்மூலம் அதிமுகவில் கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலான அவரது அரசியல் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த முற்றுப்புள்ளிக்கு காரணம் என்பது சசிகலா என்றே கூறப்படுகிறது. அதாவது அதிமுகவில் சசிகலாவால் வளர்ந்து உச்சம் தொட்ட ஓபிஎஸ் இப்போது அவராலே ஒன்றும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கட்சிக்காக  தனது  பதவிகள் அனைத்தையும் விட்டுக்கொடுத்த  பன்னீர் இன்று கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்.