Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

Sunday, January 12, 2025

தமிழக ஆளுநர் ரவி வந்தார் சென்றார்


தமிழக ஆளுநர் ரவி  வந்தார் சென்றார்

மூன்றாவது ஆண்டாக தொடர்கிறது புறக்கணிப்பு

தமிழக சட்ட சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது கூட்டத் தொடர் ஆரம்பமாகும் திகதி அறிவிக்கப்பட்ட போதே  பூகம்பம்  வெடிக்கும் என்ற எதிர்பார்ப்பு  நிலவியது.

தமிழக முதல்வராக ஸ்டாலின்  பொறுப்பேற்ற முதல் இரண்டு கூட்டத் தொடர்களிலும்  பெரும் பிரளயம் வெடித்தது. அதற்குச் சற்றும் குறையாத சம்பவம் இந்த ஆண்டும் நடைபெற்றது.

முதல் கூட்டத்தொடரில் மாநில சட்ட சபையின் சாதனைகள் பட்டியலிடப்படும் தன் முழு அரிக்கையும் முதலிலேயே ஆளுநரிட கொடுக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும். அந்த அரிக்கையை மாற்றாமல் வாசிப்பதுதான் ஆளுநரின் கடமை. ஆனால், தமிழக ஆளுநர் அர். ரவி, கடந்த முறை தமிழக அரசின் சதனைகளை வசிக்கவில்லை. மஹிய அரசைன் மீதான குற்றச் சாட்டுகளித் த்விர்த்து தனது கருத்துகளைப் புகுத்தினார்.உடனடியாகச் அன்று ஸ்டாஇன் செயற்பட்டு ஆளுநரின் உரையை சபைக்குறிப்பில் இருந்து நீக்கத் தீர்மானம் கொண்டு வந்தார். அதனால், அன்று ஆளுநர் தெறித்து ஓடினார்.

2025 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில் கூட்டம் தொடங்கியதுமே அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  உறுப்பினர்கள்  அமளியில் இறங்கினர். இந்த நிலையில் ஆளுநர் ஆர். என். ரவியும், ஆளுநர் உரையை வாசிக்காமலேயே வெளியேறிச் சென்றார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் உரையுடன் தான் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதற்காக சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தலைமை செயலகத்தில் காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது அதன் பிறகு அவருக்குப் பொன்னாடை அளித்து வரவேற்ற சபாநாயகர் அப்பாவு  சட்டப்பேரவை வளாகத்திற்குள் அழைத்துச் சென்றார்.

அதன் பின்னர் கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டசபை மரபுப்படி, முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதையடுத்து ஆளுநர் உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ஆர். என். வெளியேறினார்.தேசியகீதம் பாடாததால் வெளியேறியதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆளுநரை வரவேற்கும் போது தேசியகீதம் இசைக்கப்படும்  கூட்டத்தொடர்  ஆரம்பமாகும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். கூட்டம் முடியும்  போது தேசிய கீதம் இசைக்கப்படும் இது தான் தமிழக சட்ட சபையின் மரபு  இந்த மரபுபற்றி  ஆளுநருக்கு  தெரியும். ஆனாலும் அதனை மீறும்படி ஆளுநர் கூறியதை தமிழக அரசி ஏற்றுக்கொள்ளவில்லை.

அண்ணா  பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அதிமுகவினர் முழக்கமிட்டனர். பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் கோஷமிட்டதால் சபையில் பெரும் அமளியாக இருந்தது.

இதையடுத்து அவர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். அதன் பின்னர் அதிமுகவினர் வெளியேறினர். இதைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

 தொடர்ச்சியாக 3வது ஆண்டாக ஆளுநர் உரை தொடர்பான சர்ச்சை நீடிப்பது சலசலப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் ஆர். என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து பூசல் நிலவி வருகிறது. அவ்வப்போது அடங்குவது போல தெரிந்தாலும் கூட, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இது பெரிதாக வெடித்துச் சிதறுகிறது.  குறிப்பாக ஆளுநர் உரை தொடர்பாக கடந்த 3 வருடமாக சர்ச்சை நிலவி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு முதல் முறையாக பெரிய சர்ச்சை வெடித்தது.

2023ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதிக‌ சட்டசபை கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குவதாக திட்டம். ஆளுநர் ஆர். என். ரவியும் சட்டசபைக்கு வந்தார். ஆளுநர் உரையை வாசிக்க ஆரம்பித்த அவர் அதில் இடம் பெற்றிருந்த சில வரிகளைத் தவிர்த்து விட்டு வாசித்தார். மேலும் புதிதாக சில வாசகங்களையும் அவர் சேர்த்துப் படித்தார்.

அதன் பின்னர் எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக படிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் ஆளுநர் அவராக சேர்த்து வாசித்த வாசகங்கள் அவைக் குறிப்பில் இடம் பெறாது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் வாசிக்கப்பட்டபோது ஆளுநர் ஆர். என். ரவி. அவையிலிருந்து வெளியேறிச் சென்றார்.

இதைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு பிப்ரவரி 12ம் திக‌தி சட்டசபை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வழக்கம் போல கூட்டத் தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியபோது முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். அதன் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை  என்றார். மேலும் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ள சில பகுதிகளை தன்னால் ஏற்க முடியாது என்று கூறி உரையை வாசிக்க மறுத்து அமர்ந்து விட்டார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு உரையை வாசித்தார்.

அதன் பின்னர் ஆளுநரின் செயல்பாடு குறித்து அப்பாவு சில கருத்துக்களைக் கூறினார். அவர் சொல்லி முடித்த அடுத்த நிமிடமே ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். அவர் வெளியேறிய பின்னர் ஆளுநர் உரை சட்டசபையில் சமர்ப்பிக்கப்பபடியே அவைக் குறிப்பில் பதிவேற வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டும் தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டதால் அதிருப்தி அடைந்து ஆளுநர் வெளியேறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 தமிழ்த் தாய் வாழ்த்து மீது அதிக மரியாதை வைத்துள்ளேன். அதை அனைத்து தளங்களிலும் உரிய மரியாதையுடன் பாடியுள்ளேன். அதை அவமதிக்கும் எண்ணம் ஒரு போதும் இருந்ததில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை கொடுக்காத ஆளுநரை உடனடியாக மாற்ற வேண்டும் என தமிழகத்தின் பல‌ தலைவர்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.  ஆளுநரின்  முலம் தமிழக அரசுகுக் குடைச்சல் கொடுக்க வேண்டும் என்று மோடி அரசு விரும்புகிறது. அதனை ஆளுநர் ரவி கனகச்சிதமாகச் செயற்படுத்துகிறார். ஆகையால் அவரை  இப்போதைக்கு அசைக்கமுடியாது.

ரமணி

12/1/25

Tuesday, May 9, 2023

தெரிந்தசினிமா தெரியாத சங்கதி


   ‘மோகமுள்’, ‘முகம்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘ராமானுஜன்’ போன்ற  படங்களின் முலம் ரசிகர்களின் மனதில்  இடம்  பிடித்தவர்  இயகுநர் ஞான சேகரன்.   பயோபிக் படங்களான ‘பாரதி’, ‘பெரியார்’, ‘ராமானுஜன்’ படங்கள் அவருக்குப் புகழ் சேர்த்தவை.

குட்வில் ஹன்டிங் (Goodwill Hunting) என்ற ஹாலிவுட் படம் பார்த்தேன். அந்தப் படத்துல ஒரு கதாபாத்திரம், இன்னொரு கதாபாத்திரம் கிட்ட “நீ என்ன பெரிய ராமானுஜன்னு நினைப்பா?”ன்னு சொல்லுது. “உனக்கு என்ன பெரிய ஜீனியஸ்னு நினைப்பா..” அப்படிங்கிறதுக்குப் பதிலா “நீ என்ன பெரிய ராமானுஜன்னு நினைப்பா?”ன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டுல பிறந்த ஒருத்தனைப் பத்தி ஹாலிவுட்ல வசனம் இருக்கு. ராமானுஜன் பற்றி அமெரிக்காவுல ஒரு புத்தகம் வெளியாச்சு. அதோட 15-வது பதிப்பு இப்போ வித்துகிட்டு இருக்கு. துதான்  ராமானுஜர் படம் எடுக்க காரணமானது எனச் சொன்னார்  ஞான சேகரன்

அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான கலைத்தன்மை கொண்டதாக இருந்தது. ஒவ்வொரு மாறுபட்ட விஷயத்தைப் பேசுவதாகவும் இருந்தது. அதன் உருவாக்கமும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டிருந்தது. சென்னையில் மத்திய அரசின் சார்பில் தணிக்கை அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்திலிருந்து, தான் இயக்கிய எல்லாப் படங்களையுமே தணிக்கை விதிகளை மீறாதவாறு எச்சரிக்கையோடு உருவாக்கினார்.

அதேபோல ஒரு தணிக்கை அதிகாரியாக அவரது அனுபவங்கள் சுவாரஸ்யம் நிறைந்தவை. அப்போதெல்லாம் தமிழில் ஆண்டுக்கு 300 படங்களுக்குக் குறையாமல் வெளிவரும். அதனால் ஒரு தணிக்கை அதிகாரியாக ஞான ராஜசேகரன் நிறையப் படங்களைப் பார்க்க வேண்டி இருந்தது. இயக்குநர் மணி ரத்னம், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என பலருடன்   முரண்பட வென்டிய நிலை ஏற்பட்டது.

 சினிமாவின்  மீது ஆர்வம் கொண்ட ஞான சேகரன் திரைப்பட இயக்குநராக வரவேண்டும் என்று இளம் வயதிலேயே கனவு கண்டவர்.அதற்காகவே அவர் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்ததுபோல  திரைப்படக் கல்லூரிப் பாடங்கள் இல்லாததால் ஏமாற்றமடைந்தார்.

 அப்பாவின் விருப்பத்திற்கிணங்க எம்.எஸ்சி., படித்து ஐஏ எஸ் ஆனார். கேரளத்தின் பணிச் சூழல் அவரது சினிமா ஆசைக்கு உரம் இட்டது. அவரது சினிமா குறித்தான புரிதலுக்கு கேரள மாநிலத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பதவி அவரைத் தேடி வந்தது. அவர் கேரள மாநிலத்தில் பணி புரிந்தார். திருச்சூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஞான ராஜசேகரன், கேரளத்தின் பல்வேறு துறைகளில் இயக்குநர் மற்றும் செயலாளர் பதவிகளில் இருந்தவர். மத்திய அரசின் சார்பில் சென்னைத் திரைப்படத் தணிக்கை அதிகாரியாகவும் பணிபுரிந்திருக்கிறார்

ஒரு திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தபோது அவருக்குத் தனது ஆட்சிப் பணியிலிருந்து விடுப்பு எடுக்க வேண்டியதிருந்தது. பொதுவாக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இதுபோன்ற விடுப்புகள் வழக்கத்தில் இல்லை. ஆனாலும் அவரது கலை ஆர்வத்தைக் கணக்கில் கொண்டு அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டது. கேரளாவாக இருந்ததால் அது சாத்தியமானது.

ஞான ராஜசேகரனின் தலைமையிலான தணிக்கைக் குழு கமலின் ‘ஹே ராம்’ பட தணிக்கையின்போது பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டியது. இதனால் கமல் கடும் கோபமடைந்தார்.   

‘ஹே ராம்’ படத்தின் இறுதியில் மகாத்மா காந்தி கோட்சேயால் சுடப்படும் காட்சியில் காந்தி சுடப்பட்டதும் தரையிலிருந்து உயர எறியப்பட்டு கீழே போய் விழுவார். “என்ன இது... தேசப்பிதாவை இப்படியா காட்டுவது?” என்று தணிக்கைக் குழுவிலிருந்த ஒரு காங்கிரஸ்காரர் கேட்டார். “ஆட்டன்பரோ தனது ’காந்தி’ படத்தில் இதே காட்சியை எவ்வளவோ மேன்மையாகக் காட்டியிருக்கிறார். இதிலோ ஏதோவொரு மிருகத்தைச் சுடுவதுபோலக் கேவலமாகக் காட்டியிருக்கிறார்” என்று அவர் வேதனை தெரிவித்தார். ஆனால், “அந்தக் காட்சியை தணிக்கைக் குழு வெட்டச்சொல்ல முடியாது” என்று ஞான ராஜசேகரன் கூறினார்.

இந்த விவாதத்திற்கு பதில் சொன்ன கமல், "கோட்சே உயயோகித்த அதே போர் (Bore) உள்ள துப்பாக்கியைப் பல இடங்களில் தேடியலைந்து லண்டனில்தான் என்னால் வாங்க முடிந்தது. அந்தத் துப்பாக்கியால் ஷூட் செய்தால் நான் படத்தில் காட்டியபடிதான் சுடப்பட்டவர் உயரச்சென்று விழுவார். அதை யதார்த்தமாகக் காட்டியிருக்கிறேன்" என்றார். இயக்குநரின் விருப்ப உரிமை தொடர்பானது என்று கருதி அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஞான ராஜசேகரன்.

தணிக்கை செய்யும் படம் பற்றிய விபரம்  அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. தணிக்கை அதிகாரிகள் வந்து விட்டார்கள். தலைவர் ஞான சேகரன் வந்ததும் ஒரு சிலர் அவரிடம் சென்று  " தனது படம் சென்சார் ஆகும்போது படக்காட்சி தொடங்குவதற்கு முன்னால் தணிக்கை அதிகாரியையும் குழுவினரையும் நேரில் பார்த்து வணக்கம் சொல்லிவிட்டுச் செல்வது  ரஜினியின்  வழக்கம். இப்போது ரஜினி சார் வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டார். கொஞ்சம் காத்திருந்தால் வந்துவிடுவார்" என்றார்.

அதனைக் கேட்ட  ஞான சேகரன்  “தயவுசெய்து இங்கே வரவேண்டாம் என்று ரஜினிகாந்த் அவர்களிடம் சொல்லிவிடுங்கள். இதுவொரு தவறான அணுகுமுறையாகும். இதேபோல மற்ற நடிகர்களுக்கு நாங்கள் வாய்ப்பளிப்பதில்லை. நாங்கள் படத்தைப் பார்த்த பிறகு அவர் வந்து தாராளமாக

அன்று  "பாட்ஷா" படத்தை தணிக்கைக்காகப் பார்த்தார்கள். நடந்தது எதுவும் தெரியாமல் ரஜினி ச்ங்கு சென்றார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும், எதுவும்  பேசாமல் சென்றுவிட்டார்.  படம்  முடியும் தறுவாயில் சென்று தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு வணக்கம் சொன்னார்.   ‘முத்து’, ‘அருணாசலம்’, ’படையப்பா’ ஆகிய படங்களை ஞான ராஜசேகரனின் குழு  பார்த்தபோது ரஜினி அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அதுமட்டுமா? "இந்த அதிகாரி இருக்கும்வரை அவர் கொடுக்கும் ‘கட்’களை தட்டாமல் ஏற்றுக்கொள்ளுங்கள்; அப்பீலுக்குப் போகாதீர்கள்" என்று சொல்லிவிட்டார். எங்களைச் சந்திக்கலாம். அது அவரது உரிமையும்கூட” என்றார்.

 

Sunday, March 5, 2023

ஈரோட்டில் காங்கிரஸுக்குக் கைகொடுத்த தி.மு.க


 ஈரோடு கிழ‌க்கு இடைத் தேர்தலில்  போட்டியிட்ட  காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிரமாண்டமான வெற்றி பெற்று புதிய வரலாறு  படைத்துள்ளார். ஈரோடு இடைத் தேர்தலில்  காங்கிரஸ் கட்சியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்  நேருக்கு நேர் போட்டியிட்டன.

  கூட்டணிக் கட்சியான  காங்கிரஸின் வெற்றி தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எடை போடும் தேர்தலாகப் பார்க்கப்பட்டது.  மறு புறத்தில் எடப்பாடியின் தலைமையை அங்கீகரிக்கும் தேர்தலாகவும்  நோக்கப்பட்டது. இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின்  வெற்றி தவிர்க்க முடியாதது. ஆனால் , காங்கிரஸின்  வெற்றிக்குப் பின்னால் திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தது.

கடந்த 27ம் திக‌தி நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 15 சுற்றுகள் நடைபெற்றன. ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்த ஈவிகேஎஸ், அதிமுக வேட்பாளரை விட 66,575 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றார்.அதிமுக வேட்பாளர் தென்னரசு, 41,357 வாக்குகள் பெற்று கட்டுப் பண‌த்தைத் தக்கவைத்தார். ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் கட்டுப் பண‌த்தை இழந்தனர்.  காங்கிரஸ் - 1,10,039; அதிமுக - 43,981; நாம் தமிழர் - 10,804; தேமுதிக - 1,114   வாக்குகள்  பெற்றன. 

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான  கொங்கு மண்டலத்தில் திராவிட முன்னேற்றக் கொடி பறக்கிறது. கருணாநிதியால் செய்யமுடியாததை அவரது மகன் ஸ்டாலின் செய்து காட்டியுள்ளார்.  அண்ணா திராவிட முன்னேற்ரக் கழக்த்தின் தோல்விக்கு எடப்பாடியின் பதவி ஆசைதான்  பிரதானகாரணம். இரட்டை இலை கிடைத்துவிட்டால் வெற்றி பெறலாம் என எடப்பாடி கண‌க்குப் போட்டார். இரட்டை இலை,  கிடைத்தும் படு தோல்வியைச் சந்தித்துள்ளார்.எடப்பாடி ஆட்சியில் இருந்த போது கிடைத்த வெற்றிகலுக்கு  ஓ.பன்னீர்ச்செல்வத்தின் பங்கும்  இருந்தது.பன்னீர்ச்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரை வெளியேற்றி விட்டு  ஒற்றைத் தலைமையில் கட்சியைக் கைப்பற்றலாம் என எடப்பாடி கண்ட கனவு கலைந்துவிட்டது.

 பெரும் பான்மை தன்னிடம்  இருப்பதகச் சொல்லிய எடப்பாடிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களே வாக்களிக்கவில்லை.

ஈரோட்டில் வெற்றி பெற முடியாது என்ற  உண்மை தெரிந்துதான் வேட்பாலர் தென்னரசை பலிகொடுத்தார் எடப்பாடி.கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாள‌ர் ஒன்பதாயிரம் வாக்குகளால் தோல்வியடைந்தார். மிக நெருக்கமான தோல்வி  கடந்த தேர்தலை விட அதிகப்படியான வாக்குகள்  பெற்றல் ஒற்றைத் தலைமை உறுதியாகும் என எடப்பாடி  மனக் கணக்குப் போட்டார்.முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் நான்குமணி வரை கட்டுப் பணம்  கிடைக்குமா என சந்தேகமாக  இருந்தது. தமிழகத்தில் தாமரை மலரும் என சபதம்  செய்த அண்ணாமலையின்  பிரசாரம் கூட கைகொடுக்கவில்லை.

கடந்த  தேர்தலைவிட 12 சதவீத வாக்குகள் காங்கிரஸுக்குக் கூடுதலாகக் கிடைத்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 10 சதவீதம்  குறைவாகப் பெற்றுள்ளது.

 எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த 8வது தோல்வி இதுவாகும்.  அதாவது, 2017-ல் தமிழக முதல்வராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. அப்போது முதலே இந்த தொடர் சறுக்கல் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள்..  1. 2017 ஆர்கேநகர் இடைத் தேர்தல். 2. 2019 பாராளுமன்ற தேர்தல். 3. 22 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தல். 4. ஊரக உள்ளாட்சி தேர்தல். 5. 2021 சட்டமன்ற தேர்தல். 6. ஒன்பது  மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல். 7. நகர்புற உள்ளாட்சி தேர்தல். 8. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.

தொடர்ச்சியாக எட்டுத் தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்திருப்பது ரத்தத்தின் ரத்தங்களுக்கு மிகப்பெரிய சோர்வை தந்துள்ளது.. ஏற்கனவே கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், எடப்பாடியின் பிடிவாதத்தினால், ஒருங்கிணைந்த அதிமுக என்பதே காணாமல் போனதை தொண்டர்களால் ஏற்க முடியாமல் உள்ளனர்.. இதுவே அதிமுக ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால், திமுகவுக்கு செக் வைப்பதுபோல, வாக்கு வங்கியை உயர்த்தியிருக்கலாமே என்பதே அவர்களின் ஏக்கமாக உள்ளது.  சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டபேரவைக்குள் நுழைகிறார் ஈவிகேஎஸ். இளங்கோவன் பேரறிஞர் அண்ணா, திராவிடர் கழகத்தை விட்டு விலகி திமுகவை தொடங்கியபோது ஈவிகே சம்பத் அவருடன் இணைந்து பயணித்தார். பின்னர் ஈவிகே.சம்பத் காங்கிரஸில் சேர்ந்தார்.

தந்தையுடன், இளங்கோவனும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆனார். அடிப்படையில் நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகரான இளங்கோவன், தனது அரசியல் குருவாகவும் சிவாஜி கணேசனையே ஏற்றிருந்தார். அந்த அடிப்படையில், 1984ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் சத்தியமங்கலம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக வேட்பாளரைவிட இருமடங்கு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

இளங்கோவனும் அவரது தந்தையும் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்க, அவரது தாயார் சுலோச்சனா சம்பத், அதிமுகவின் அமைப்பு செயலாளராக இருந்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவராகவும் சுலோச்சனா விளங்கினார். காங்கிரஸ் கட்சியின் இளம் உறுப்பினர்களால், அப்பா என்றும் தன்மான தலைவர் என்றும் அழைக்கப்படும் ஈவிகேஎஸ், எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு சோதனை வருகிறதோ அப்போதெல்லாம் அதனை தாங்கி பிடித்தவர்.

அதிமுகவுடனான கூட்டணியை எதிர்த்து 1996ஆம் ஆண்டு ஜி.கே. மூப்பனார் தனிக்கட்சியை தொடங்கிய போது, காங்கிரஸ் கட்சியிலேயே இருந்த மிக சில சீனியர்களில் ஈவிகேஎஸ்-ம் ஒருவர். பின்னர் 2000ஆம் ஆண்டில், முதல்முறையாக காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டார். 2001ல் மூப்பனாரின் மறைவுக்கு பின்னர், அவரது மகன் ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்பியதற்கு இளங்கோவனின் முயற்சிகளே காரணம்.

 ஈரோடு இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி என்று எதிர்பார்த்திருந்த வேளையில் திராவிட முன்னேற்றக் கழக  கேட்டணிக் கட்சி மட்டும்  வாக்கு வேட்டையை நடத்தியது. வாக்கு எண்ணும் நிலையத்துக்கு  அண்னா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் யாரும் செல்லவில்லை. வேட்பாலர் தென்னரசு மட்டும் தனியாக நின்றார். தோல்வி உறுதியானதும்  பணநாயகம் வெற்றி பெற்றது எனச் சொல்லிவிட்டுச் சென்றார்.

திராவிட முன்னேற்ற‌க் கழகத்தின் ஆட்சியை   மக்கள் விரும்புகிறார்கள். எடப்பாடி விட்ட தவறுக்குப் பிராயச் சித்தம் செய்ய வேண்டும் என்பதையே  ஈரோடு  கிழக்கு  இடைத் தேர்த்ல்  முடிவு சொல்கிற‌து.