Showing posts with label சீமான். Show all posts
Showing posts with label சீமான். Show all posts

Wednesday, April 9, 2025

எடப்பாடியை நெருங்கும் அமித்ஷா உறுதியானது கூட்டணி


  தமிழகத்தில் நடைபெற்ற 11 தேர்தல்க்ளில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி  படு தோல்வியைச் சந்தித்தது. தனது  தலமையிலான ண்அணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தோல்விகளுக்கு பாரதீய ஜனதா தான் காரணம் எனக் கண்டு பிடித்த எடப்பாடி  பாரதீய ஜனதாவுடனான கூட்டணியைத் துறந்தார்.

 மோடி, அமித் ஷா ஆகியோர் அழைப்பு விடுத்தும் எடப்பாடி இறங்கிவரவில்லை.கடந்தவாரம் ஒரு நாள் திடுதிப்பென டெல்லிக்குப் பறந்த எடப்பாடி அமித்ஷாவை இரகசியமாக‌ச் சந்தித்தார்.

அதிமுக  தலைவர்களுக்குக் கூடத் தெரியாமல் எடப்பாடி டெல்லி சென்றது  கழகத்துக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்பொழுதே கூட்டணி உறுதி எனத்  தகவல்கள் வெளியாகின. டெல்லியில் அதிமுக அலுவலகத்தைப் பார்க்கச் சென்றதாககூறிய எடப்பாடி  அமித்ஷாவைச் சந்தித்ததை  மழுப்பினார்.எடப்பாடியின் மகனுடைய தில்லு முல்ல்லு  ஆவணங்கள் அமித்ஷாவின் கையில் இருப்பதால் எடப்பாடி  இறங்கி வந்த்தாகவும் செய்திகள் பரவின.

தமிழகத்தில் மீண்டும் பாஜக - அதிமுக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்ற பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது.  அண்ணாமலைஒயும்  இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.இதற்கிடையே தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்கிறார். நாளை இரவு எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக தலைவர்கள் அமித்ஷாவை சென்னையில்  சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

2021 சட்டசபை தேர்தலின்போது அதிமுகவும், பாஜகவும் கூட்டணியாக போட்டியிட்டன. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதன்பிறகு கடந்த 2022ம் ஆண்டில் இந்த கூட்டணி முறிந்தது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் உள்ளிட்டவற்றில் பாஜகவும், அதிமுகவும் வெவ்வேறு கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அந்த தேர்தல்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் தான் அமோக வெற்றி பெற்றன.

 சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தங்கும் அமித்ஷாவை நள்ளிரவில் மூத்த அதிமுக தலைவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின்போது அதிமுக - பாஜக கூட்டணி பற்றி இருதரப்பும் விவாதிக்க உள்ளதாகவும், அதன்பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றிய பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமித்ஷா தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் போது  சீமானை சந்திக்கப்போவதாகவும் தகவல் பரவி உள்ளது.  அண்மையில் ஒரு கல்லூரி விழாவில்  சீமானும், அண்ணாமலையும் ஒரே மேடையில் தோன்றினார்கள். சீமான் மோடியைப் புகழ்ந்து பேசிஒனார்,அண்ணாமலை,  சீமானை வானளாவக் பாராட்டினார். அப்போதே விமர்சகர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாட்டு  விஜயத்தை முன்னிட்டு முக்கியமான உத்தரவு ஒன்றை நிர்வாகிகளுக்குஎடப்பாடி  பிறப்பித்து உள்ளார்.   5 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டுள்ள போதும்.. அதனால் யாரும் வீட்டிற்கு போக வேண்டாம்.. சொந்த ஊருக்கு செல்ல வேண்டாம்.. எல்லோரும் சென்னையிலேயே இருக்குமாறு முக்கிய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். முக்கியமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சென்னையிலேயே இருக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாம். ஆனால் செங்கோட்டையனுக்கு இந்த அறிவிப்பு செல்லவில்லை. அவர் சென்னையில்தான் இருக்கிறார். ஆனாலும் அவருக்கு அறிவிப்பு செல்லவில்லை. அதேபோல் தங்கமணி சென்னையில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக - காங்கிரசின் இந்தியா கூட்டணி. அதிமுக - பாஜகவின் என்டிஏ கூட்டணி. கடைசியாக தமிழக வெற்றிக் கழகம். இதில் தமிழக வெற்றிக்கழகம்.. திமுகவை அரசியல் எதிரி என்று கூறிவிட்டது. பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிவிட்டது. இதனால் அவர்கள் இருவருடனும் திமுக சேரவே வாய்ப்பு இல்லை. எனவே தமிழக வெற்றிக் கழகம் 3வது அணியாக உருவெடுத்து இருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அப்படி இருக்க மிச்சம் இருப்பது நாம் தமிழர்தான்.

 விஜய் - சீமான் கூட்டணி கணிசமான வாக்குகளை பெற்று... தேமுதிக 2011ல் திமுகவை எதிர்க்கட்சி சீட்டில் இருந்து அகற்றியது போல.. அதிமுகவை எதிர்க்கட்சி கூட ஆக விடாமல் செய்ய முடியும். சீமான் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்தே களம் மாறுபடும். பெரியார் விவகாரம், பெண் பலாத்கார வழக்கு காரணமாக தற்போது முடங்கி உள்ள சீமான் மீண்டும் களமாடும் போது  அது பெரிய வாக்கு வங்கி மாற்றங்களை ஏற்படுத்தலாம். 

Friday, January 17, 2025

இடைத்தேர்தலைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு முன்பே வெற்றி பெற்ற திமுக‌

ஈரோடு கிழக்கு தொகுதியின் உறுப்பினரான கே.வி.எஸ்.இளங்கோவன் மரணமானதால்  பெப்ரவரி 05ம்  திகதி  இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தலில் ஆளும் கட்சியே வெற்றி பெறுவது என்பது எழுதப்படாத  சட்டமாக  உள்ளது. ஆளும் கட்சியின் மீது வெறுப்பு இருக்கும் சில சந்தர்ப்பங்களில் எதிர்க் கட்சி வெற்றி பெற்ற வரலாறும் உள்ளது.

இடைத் தேர்தலில் ஆளும் கட்சியை எடை போட சந்தர்ப்பம் கிடைக்கும். கடந்த தேர்தலில் ஆளும் கட்சி பெற்ற  வாக்கு, சதவீதம் குறைவடைந்தால் எதிர்க் கட்சிகள்  சற்று உசாராகி விடும். தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்,தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சி என்ற நினைப்பில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சியும்  ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

தமிழக சட்ட  மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு  ஒரு வருட காலமே இருப்பதனால்  திராவிட முன்னேற்றக் கழகத்தை எடை பார்க்கும் சந்தர்ப்பம் நழுவிவிட்டது. இடைத்தேர்தலைப் புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

ஈரோடு கிழக்கு தொகுதியின் உறுப்பினரான கே.வி.எஸ்.இளங்கோவன் மரணமானதால்  பெப்ரவரி 05ம்  திகதி  இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்த ஈரோடு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் களம் இறங்க உள்ளது.தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு இன்னமும்  ஒரு வருடமே உள்ளநிலையில் அங்கு போட்டியிடுவதை காங்கிரஸ் தவிர்த்துள்ளது.

 தமிழக மக்களிடம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருக்கும் செல்வாக்கை ஈரோடு இடைத் தேர்தல் வெளிப்படுத்த உள்ளது. அரசாங்கத்தின் எதிர்ப்பு வாக்குகளை அருவடை செய்யும் வாய்ப்பை எதிர்க் கட்சிகள் இழந்துள்ளன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதாக் கட்சி,  விஜயகாந்தின் கட்சி ஆகியன தேர்தலிப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட விரும்பவில்லை. 2026 என்ற தொலைதூர இலக்குடன் விஜய் அமைதியாக இருக்கிறார். 

வி.சி.சந்திரகுமாரை வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. நாம் தமிழர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தையும் அறுவடை செய்யும் தகுதி சீமானுக்கு இல்லை. தனது கட்சி வேட்பாளரை பொது வேட்பாளராக்க சீமான் முயற்சி செய்கிறார். எடப்பாடி,ராமதாஸ்,அண்ணாமலை ஆகியோர் சீமானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கமாட்டார்கள்.

அண்ணா பல்கலைகழக விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் ஸ்டாலினையும் திராவிட முன்னேற்றக் கழக அரசையும் கடுமையாக விமர்சனம்ச் எய்யும் அண்ணாமலை தேர்தல் என்றால் பம்முவது வழமையான செய்திதான்.திராவிட முன்னேற்றக் கழக அரசை அகற்றும் வரை செருப்பு அணியமாட்டேன் எனச் சபதம் செய்த அண்ணாமலை அதற்குரிய சந்தர்ப்பம் இருக்குமா என ஆராயும் சந்தர்ப்பத்தைத் தவற விட்டுள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  முதலில் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தது. இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் கூட கொங்கு மண்டலத்தில் தங்களுக்குப் பலம் உள்ளதாக   கூறி வரும் நிலையில் அங்கு நடைபெறும் இடைத் தேர்தலை புறக்கணித்தது ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. இப்படித்தான் விக்கிரவாண்டி இடைத் தேர்தலையும் அதிமுக புறக்கணித்திருந்தது.

அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தது.  விக்கிரவாண்டி தேர்தலையும் தேமுதிக புறக்கணித்திருந்தது.

  அதேசமயம், பாஜக இத்தேர்தலில் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. திமுகவுடன் போட்டியிட்டு 2வது இடத்தைப் பிடித்து தனது நிலையை ஸ்திரப்படுத்த முயலும் என்றும் பரவலாக பேசப்பட்டது. ஆனால் பாஜகவும் தற்போது தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ளது. தமிழகத்தின் எதிர்க் கட்சி எனக்கூறிக்கொள்ளும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழகத்தில்  தேர்தல் என்றால் அச்சம் ஏற்ப‌டுவது  வழமையே. 

கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது எனக்கூறும் அண்ணாமலை அது உண்மை எகக்கூறும் வாய்ப்பைத்தவறவிட்டுள்ளார்.

 ஜனநாயகக் கூட்டணியும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே பிரதான கட்சிகளாக போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. திமுகவுக்கு நாம் தமிழர் கட்சி நெருக்கடி தருமா என்பது சந்தேகம்தான். அதேசமயம், பெரியாரை கடுமையாக சீமான் விமர்சித்து வரும் சூழலில் அவர் பிறந்த ஈரோட்டில் நடைபெறும் இடைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற நாம் தமிழர் கட்சி முயலக் கூடும்.

பெரிய கட்சிகள் அனைத்தும் தேர்தலைப் புறக்கணித்து விட்டதால் ஈரோடு கிழக்கு தொகுதியிலும், விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் போல மிகப் பெரிய வெற்றியை திமுக பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், பிரதான கட்சிகள் இப்படி தேர்தலை புறக்கணிப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்ற கருத்தும் எழுந்துள்ளது.

 

 ரமணி

19/1/25

Tuesday, December 31, 2024

இடைத் தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்

திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது மக்கள் வெறுப்டைந்துள்ளனர். பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என எதிர்க் கட்சிகள்  குற்றம் சாட்டுகின்றன. அவை உண்மையா,  பொய்யா என அரிவதற்குரிய சந்தர்ப்பம் ஒன்று  உருவாகி உள்ளது. கிழக்கு  ஈரோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுள்ளது.

கிழக்கு  ஈரோடு தொகுதியில் அண்ணா திராவிட முன்னாற்றக் கழகம், பாரதீய ஜனதா ஆகியவை போட்டியிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் ஒரு இடைத் தேர்தலைச் சந்திக்க உள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த ஒரு ஆண்டுக்குள் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை இழந்திருக்கிறது. மூன்றாஅவ்து முறை தேர்தலுக்குத் தயாராகி உள்ளது.

 2021 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக இளங்கோவனின் திருமகன் ஈவெரா போட்டியிட்டு   67,300 வாக்குகளைப் பெற்றார். அப்போது அவரை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா  போட்டியிட்டு  58,396 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். 

  திருமகன் மறைவுக்குப் பின்னர் அந்தத் தொகுதியில்திரவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்ற எதிர் பார்ப்பு எழுந்தது. ஆனால்,  ஈரோடு கிழக்குத் தொகுதியை விட்டுக் கொடுக்க கங்கிரஸ் தயாராக  இல்லை. வேட்பாளர் தெரிவுக்காக காங்கிரஸில் குடுமிப் பிடிச் சண்டை நடந்தது.

காங்கிரஸ் கட்சியே எதிர் பார்க்காத நிலையில் ஸ்டாலின்  முடிவு எடுத்தார்.   திருமகனின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக  ஸ்டாலின் அறிவித்தார். அதைக் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல; இளங்கோவனே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அவர்  கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு  அப்போதுதான் சுகமடைந்தார்.  அவரை தேர்தல் பிரச்சார களத்தில் இறங்கிவிடுவது சரியாக இருக்குமா என பலரும் நினைத்தனர்.  ஒரு பக்கம் மகனின் இழப்பு மற்றொரு பக்கம் உடல்நிலை என அவர் பல துன்பங்களை அனுபவித்து வந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் களம் கண்டார் இளங்கோவன்.

ஈரோடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. தேர்தல் பிரசாரத்தை திராவிட முன்னேற்றக் கழகம் கையில் எடுத்தது.

 'ஈரோடு கிழக்கு' என்ற புதிய ஃபார்முலாவை திராவிட முன்னேற்றக் கழகம்  அறிமுகம் செய்தது. அதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அதனைச் சுட்டிக் காட்டி  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், விஜயகாந்தின் கட்சியும் இடைத் தேர்தலைப் புறக் கணித்தன.

  அமைச்சர் செந்தில் பாலாஜியின் கையில் தொகுதி தேர்தல் பணிகளை ஒப்படைத்தது திராவிட முன்னேற்றக்கழகம்.   1,10,556 வாக்குகளைப் பெற்று இளங்கோவன் அமோக வெற்றியைப் பெற்றார்.   இளங்கோவனின் திடீர் மறைவை அடுத்து விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த முறையும்  திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் இறங்கக் கூடும் என சிலர் கருதிய நிலையில் 'ஈரோடு   'திமுக கூட்டணி வசமாகும்' என்று  ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.  அந்த இடைவெளியில்  கூடுதலாக ஒரு எம்.எல்.ஏவை பெறுவதால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  இலாபமும் கிடைக்கப் போவதில்லை. எனவே தேவையற்ற ரிஸ்க்கை  திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்காது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பெப்ரவரியில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனுடன் சேர்த்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படலாம். இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் வழமைபோல் அடிபிடி ஏற்பட்டுள்ளது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் இடையே தீவிரமான போட்டி நிலவி வருகிறது. திருமகன் ஈ.வே.ரா மறைவுக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட முதலில் சஞ்சய் சம்பத்திடம்தான் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை.  இளங்கோவன்  போட்டியிடுவதை அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பியது.   இந்த முறை தேர்தலில் போட்டியிட சஞ்சய் சம்பத் விரும்புகிறார். டெல்லி தலைமையிடமும் இளங்கோவனின் ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் சிபார்சில்    ராஜன்  முயற்சி செய்கிறார்.. இவர் கடந்த சட்டமன்றத் தேர்தல், பிறகு நடந்த இடைத்தேர்தலின் போதும் சீட் பெறுவதற்குத் தீவிரம் காட்டினார். ஆனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு டெல்லியிலிருந்த செல்வாக்கால் அமைதியானார்.

  இளங்கோவனின் தீவிர ஆதரவாளராக இருந்து பின்னாளில் அவரிடமிருந்து விலகிய முன்னாள் மாவட்ட தலைவர் ஈபி ரவியும் முயன்று வருகிறார். இதற்கிடையில் முன்னாள் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ஆதரவாளரை களமிறக்க தீவிரம் காட்டி வருகிறார்.

ஒரு வருடப் பதவிக்காக தேர்தலில் கோடிக்கணக்காகச் செலவளிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் மட்டத் தலைவர்களும்   கிழக்கு ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக  இருக்கின்றனர்.

ஈரோடு கிழக்கு இடத் தேர்தல்  எடப்பாடிக்கு திரிசங்கு சொர்க்கமாக  உள்ளது.இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   நிச்சயம் தோல்வியடையும். எடப்பாடியின் தேர்தல் தோல்விப் பட்டியலில் ஒரு  எண்ணிக்கை கூடி அவருக்கு அவப் பெயரைத் கொடுக்கும். தொடர்ச்சியாக 10  தேர்தல்களில்  தோல்வியடைந்த எடப்பாடி  காட்டமான ஒரு அறிக்கையுடன் தேர்தலைப் புறக்கணிப்பார். 

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும், விஜயகாந்தின் கட்சியும் புறக்கணித்தன.

 2026 தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கும் நிலையில், இந்த ஒரு தொகுதியில் மீண்டும் வாய்ப்பை இழந்து நிற்க எடப்பாடி  தயாராக இல்லை என்பதே கள நிலவரமாக உள்ளது.

தனது இலக்கு எது என்பதை  என்பதை விஜய் உறுதிசெய்துவிட்டார். அவரது வேலைத் திட்டத்தில்  ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் இடம்பெறப்போவதில்லை.   கூட்டணிக்கு அழைப்பு விடுத்துக் காத்திருக்கிறார்.

சீமான் சீறிக்கொண்டு வருவது உறுதி. எந்தத் தேர்தலையும் விடக்கூடாது என்பதே சீமானின் கொள்கை. தோல்வியைப் பற்ரி அவர் கவலைப்படுவது இல்லை.

தமிழகத்தில் பாரதீய ஜனதா வளர்ந்து விட்டதாக அறிக்கை விடும்  அண்ணாமலை என்ன செய்யப்போகிறார் எனத் தெரியவில்லை. எடப்பாடிக்குப் போட்டியாத தேர்தல்களில்  தொடர்ந்து தோல்வியடையும் அண்ணாமலை அறிக்கையுடன் நின்றுவிடும் நிலைதான் உள்ளது.    விக்கிரவாண்டியைப் போல கூட்டணிக் கட்சிக்கு கிழக்கு ஈரோடைத் தாரை வார்க்கும் நிலையும் ஏற்படலாம்.

  இடைத் தேர்தல் ஆளும் கட்சிக்குச் சாதகமானது என்ற ஒரு நம்பிக்கையை இந்த ஈரோடு மீண்டும் உறுதிசெய்யும்.

ரமணி

29/12/24

தமிழன்,தம்ழிழகம்,ஸ்டாலின்,சீமான்,எடப்பாடி,மோடி

Friday, June 14, 2024

விஜய்க்கு ஆதரவாக சீமான் தடம் மாறும் தமிழக அரசியல்களம்

  தமிழக அரசியலில் அசைக்க முடியாத தலைவராக மிளிர்கிறார் ஸ்டாலின்.  ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனபலரும் விமர்சித்தனர்.  அந்த விமர்சன ஜாம்பவான்களின் முகத்தில் கரியைப் பூசி தன்னிகரில்லாத் தலைவன் என ஸ்டாலின் நிரூபித்துள்ளார்.

வலுவான கூட்டணி அமைப்பதே  இன்றைய இந்திய அரசியல்கள நிலையாகும். நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் ஸ்டாலினின் தலமிமையிலான  கூட்டணி 100 சத வீத வெற்றியைப் பெற்று  எதிர்க் கட்சிகளை சிதறடித்துள்ளது. மத்தியில் 10 வருடங்கள் ஆட்சி  செய்த மோடியின் தலைமையிலான பாஜக அருதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை.

ஸ்டலினின் தலைமையைக்கு ஆப்பு வைப்பதர்கு பலர்  முயன்றனர். எந்த முயற்சியும் கைகூடவில்லை.  ரஜினி வந்தால் தமிழக அரசியலில் கோலோச்சுவார் எனக் கூறப்பட்டது. அறிக்கை அரசியலுடன் ரஜினி ஆன்மீகப்பயணம் சென்றுவிட்டார். மோடியும், அமித்ஷாவும் ரஜினிக்குத் தூது விட்டார்கள். யாரிடமும்  பிடிபடாமல் ரஜினி நழுவிவிட்டார்.

 ஜெயலலித ஆட்சியில் இருக்கும் போது நடிகர் கமல், விஜய் ஆகியோரின் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. விஜயின் படங்களில்  இருந்த அரசியல் வச்னங்களும், பஞ்ச் டயலக்குகளும் ஜெயலலிதவுக்கு எச்சரிக்கை விடுத்தன. தீவிர அமைகாத்த விஜய் ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தினார். விஜயின் ரசிகர்கள்  உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு  வெற்றி பெற்றனர். நடிகர் என்றபோர்வையைத் தூக்கி எறிந்து விட்டு அரசியல்வாதி உடை அணிந்தார் விஜய். விஜய் ஆரம்பித்த அரசியல் கட்சி தமிழகத்தில் பேசு பொருளாகியது.

 நாடளுமன்றத் தேர்தலில் விஜயின் கட்சி போட்டியிடும் என அனைவரும்  எதிர்பார்த்தபோது 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என விஜய்  அறிவித்தார்.விஜயை வளைப்பதற்கு பாஜக  மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. வருமான வரிச் சோதனைகளால் விஜய்க்கு தொல்லை கொடுக்கப்பட்டது.  அதற்கும் விஜய் அமைதி காத்தார்.

விஜய் அரசியல் கட்சி அரம்பித்த போது  பலத்த வரவேற்பளித்தவர் சீமான்.வெளிநாட்டுக்கார்  இறக்குமதி, லியோ பட சார்ச்சைகளின்  போது விஜய்க்கு ஆதரவாக சீமான் குரல் கொடுத்தார்.   2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது  விஜயும், சீமானும் இணயப் போவதாக செய்திகள்  வெளியாகி உள்ளன.

நாம் தமிழர் கட்சியும், விஜயின் தமிழக வெற்றி கழகமும் , சீமானின் நாம் தமிழர் கட்சியும் இணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று இணையத்தில் பறந்து கொண்டிருக்கிறது.  சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.  ஆனால், களத்தில் நிற்பது பெரும்பாலும் இளைஞர்கள், அதிலும் புதியவர்களாக உள்ளனர். எனவே, அனுபவம் வாய்ந்த பலரையும் தன்னுடைய அரசியல் பயணத்துக்கு துணையாக சேர்த்து கொள்ளலாம் என்று விஜய் தரப்பில் யோசனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறதாம்.  விஜயின் அரசியல் கட்சியில் சேர்வதற்கு  பல நடிகர்களும், அரசியல்வாதிகளும்  தயாராக  இருக்கிறார்கள்.யாரச் சேர்ப்பது, யாரைத் தவிர்ப்பது என்ற ஆலோசனை விஜய் தரப்பில் நடைபெறுகிறது.

 சீமான் போன்ற சீனியர்களை பக்கத்தில்   வைத்து கொண்டால், கட்சிக்கு பலமாக இருக்கும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டு வருகிறதாம். சீமானிடம் ஏற்கனவே 8 சதவீத வாக்குகள் உள்ளன.. இதில் விஜய்யின் புதிய வாக்காளர்கள் இணையும்போது, தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த மாற்றம்   திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக அமையும் என்றும் கணக்கு போடுகிறார்களாம்.

  சீமான் ,விஜய் இருவருமே வலிமை நிறைந்தவர்கள் என்பதால், எப்படியும் 25 சதவிதத்துக்கு மேல் வாக்குகளை பெறமுடியும் என்று நினைக்கிறார்களாம். ஆனால், இதற்கெல்லாம் சீமான் ஒப்புக் கொள்வாரா என்று தெரியாது. ஒவ்வொருமுறையும் தேர்தலின்போதும், சீமான் இந்த முறை கூட்டணி வைக்கக்கூடும் என்பார்கள்,.. ஆனால், கடைசி நேரத்தில் "சிங்கம் சிங்கிளாகத்தான் வரும்" என்று அறிவித்துவிட்டு போய்விடுவார் சீமான்.

 2019 தேர்தலின்போதும் இப்படித்தான் மக்கள் நீதி மய்யம் கமலுடன் இணைந்து சீமான் தேர்தலை சந்திப்பார் என்றெல்லாம் சலசலப்பு ஓடியது..கமல் மீது சீமான் மிகுந்த மதிப்பு வைத்திருப்பதால், எப்படியும் அவருடன் இணைந்து தேர்தலை சந்திக்க விருப்பம் தெரிவிப்பார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் வழக்கம்போல், தனித்து போட்டி என்று அறிவித்தார் சீமான். எத்தனை முறை தேர்தலில் போட்டியிட்டு மண்ணை கவ்வினாலும், தனித்து போட்டி என்பதிலேயே   சீமான் உறுதியாக இருப்பதை கவனிக்க முடிகிறது.. அப்படியிருக்கும்போது, விஜய்யுடன் இணைவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  ஆனால், திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று விஜய் ஏற்கனவே தெரிவித்திருப்பதால், நிச்சயம் சீமானுடன் இணைவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

  ஒருமுறை செய்தியாளர்கள் சீமானிடம், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து கேட்டிருந்தார்கள்.

 அதற்கு சீமான், "எம்ஜிஆரே கட்சி தொடங்க பயந்தார். திமுகவில் இருந்து விலகிவிட்டு என்ன செய்வதென்று அவருக்கு தெரியல.. அதுக்கப்பறம் சரி, நடத்திதான் பார்ப்போமே என்று கட்சி தொடங்கிவிட்டார். உடனே எம்ஜிஆரை பார்த்து என்டிஆர் ஆரம்பித்தார். ஆனால் சிரஞ்சீவி, பவன் ஆனால் சிரஞ்சீவி, பவன் கல்யாணால் அது முடியவில்லை.  நின்று சண்டை செய்ய வேண்டும். தம்பி விஜய்யின் கனவு வெல்ல வாழ்த்துகிறேன். என் அன்பிற்குரிய தம்பி என்பதால் ஒரு அளவுக்கு மேல் என்னால் பேச முடியாது" என்றார் சீமான்.

 அப்படியானால், பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை விஜய் எடுத்தால் நீங்கள் ஆதரவு தருவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.. அதற்கு சீமான், "தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் நன்றாக இருக்கிறது. வரவேற்கிறேன். கட்சி பெயரில் திராவிடம் என்று இல்லாததே பெரிய மாறுதல் தானே? பாஜகவை ஆதரிக்கும் முடிவை விஜய் எடுக்கமாட்டார்" என்று பதிலளித்திருந்தார் சீமான்.

2026ல் தளபதியின் வருகையால் கொடியும் கோட்டையும் நொடியில் மாறும் என்று மதுரை விஜய் ரசிகர்கள் கலக்கல்  போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

  2024ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்க தமிழக வெற்றிக்  கழகம் சார்பில் நடிகர் விஜய் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டில் மாணவிகள் அதிக நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவானது. இதனை தவிர்க்க இந்த ஆண்டு பரிசு வழங்கும் விழாவை இரண்டு கட்டங்களாக நடத்த தமிழக வெற்றி கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

முதல் கட்ட பரிசு வழங்கும் விழா வரும் ஜூன் 28ஆம் திகதி 21 மாவட்ட மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதனை அடுத்து இரண்டாம் கட்டமாக ஜூன் மூன்றாம் திகதி 19 மாவட்ட மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக வெற்றிக்கழக வெளியிட்டுள்ளது.

 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22ம்திகதி.இது விஜய்யின் 50வது பிறந்த நாள் ஆகும். இந்த நாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் விஜய் ரசிகர்கள் பலவிதமான போஸ்டர்களை அடித்து ஒட்டி, தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஓட்டியுள்ளனர். அதில், 2026ல் தளபதியின் வருகையால் கொடியும், கோட்டையும் நொடியில் மாறும் என்ற வாசகம் அடங்கிய போஸ்டரில் தந்தை சந்திரசேகருடன் இணைந்து நடந்து வருவது போன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த  போஸ்டர் மதுரை மாவட்ட தளபதி ரசிகர்கள் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது. இந்தப்  போஸ்டர்   மதுரையைக் கலக்கி உள்லது.

தமிழக அரசியலில் பலமான கூட்டணி தேவை தனித்துப் போட்டியிடும் சீமானிக் கட்சி எதிரணிக் கட்சிகளின்  வாக்கு வங்கியைச் சிதறடிக்கிறது. இது வரை நடந்த  தேர்தல்களில் சீமானின் கட்சி  வேட்பாளர்கள்  கட்டுப் பணத்தை இழந்து நான்காம், ஐந்தாம் இடங்களுக்குத் தள்ளப்பட்டனர்.  தோல்வியைப் பற்றி சீமான் கவலைப் படுவதில்லை.

 ஆனால், விஜயின் நிலை அப்படிப்பட்டதல்ல. களத்தில் இறங்கினால் வெற்றி பெற வேண்டும். விஜய் தோல்வியடைந்தால் கலாய்ப்பதற்கு பலர் காத்திருக்கின்றனர்.

 தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கு இன்னமும்  இரண்டு வருடங்கள்  இருக்கின்றன. அதுவரை இது போன்ற பரபரப்பான செய்திகள்  பஞ்சமில்லாமல்   வெளியாவதைத் தடுக்க முடியாது.