Showing posts with label பன்னீர்ச்செல்வம். Show all posts
Showing posts with label பன்னீர்ச்செல்வம். Show all posts

Saturday, February 21, 2026

அறிவாலயத்தில் பிரேமலதா ராகுலுக்கு செக் வைத்த ஸ்டாலின்


 

 

கருணாநிதி காலத்தில் நழுவிய பழம் ஸ்டாலினின் கையில் விழுந்தது.

பனையூர் பக்கம் யாரும் செல்லாததால் தனிமரமான விஜய்

வாக்கு வங்கி இல்லாத கட்சிகளுக்கு தூண்டில் போடும் தலைவர்கள்.

காங்கிரஸின் முடிவுக்காக  ஆவலுடன் காத்திருக்கும் தவெக 

 

தமிழக அரசியல் களம் திடீரென பரபரப்பாகி உள்ளது.  எந்தப் பக்கம் சிக்னல் போடுவதென முடிவெடுக்காது காலத்தைக் கடத்தி வந்த பிரேமலதா அறிவாலயத்தில் தஞ்சமடைந்துள்ளார். எடப்பாடியுடனும், விஜயுடனும் பகிரங்கமாக டீல் பேசிய பிரேமலதா டெல்லியில் பாரதீய ஜனதாவுடனும் தொடர்பில் இருப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். நல்ல காலம் பிறக்கும், நல்ல காலம் பிறக்கும் என குடுகுடுப்பைக் காரன் போல டம்பம் அடித்த பிரேமலதாவை திமுக எப்படி வளைத்தது எனத் தெரியாமல் விமர்சகர்கள்   அதிர்ச்சிய்ல் உறைந்துள்ளனர்.

விஜயகாந்த் காலத்தில் 8 சத வீத வாக்கு வங்கியுடன் அச்சுறுத்திய கட்சி இன்றுஒரு சத வீதத்தைத் தாண்டுமா என சந்தேகமாக  உள்ளது. ஆனாலும், அந்தக் கட்சுக்கு மவுசு கூடிக்கொண்டே சென்றது.

முதல்வர் பதவியை கருணாநிதி தக்கவைக்க போராடிய தேர்தல். கருணாநிதியுடம்  இருந்து முதல்வர் பதவியைப் பறிக்க போராடிய தேர்தல். விஜயகாந்துடன்  பேச்சுவார்த்தை வெற்ரி பெற்றதால் பழம் நழுவி பாலில் விழும் என பூடகமாக அரி வெளியிட்டன் கருணாநிதி நிம்மதியாக  உறங்கினார். ஆனால், வைகோவும் வேறு சில தலவர்களும் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாலராக்கி மூன்றாவது அணியை அறிவித்தனர்.அதனால் 1 .1 சதவீத வாக்குகளால் திகும தோல்வியடைந்தது. அப்படி ஒரு நிலை வரக்கூடாது எகக் கணக்கும் போட்ட ஸ்டாலின் கச்சிதமாகக் கணக்குப் போட்டு பிரேமலதாவை அறிவாலயத்துக்கு  வரவழைத்தார். 

 திமுவுடன்   தேமுதிக இணைந்துள்ளதன் மூலம் திமுக கூட்டணி வலுப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலுமே சொல்லிக்கொள்ளும்படியான வாக்கு வங்கி வைத்துள்ள தேமுதிக, பல தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும், என்பதை உணர்ந்தே கூட்டணியில் தேமுதிகவை ஸ்டாலின் சேர்த்துள்ளார்.  கடந்த 2021  ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 39 தொகுதிகளில் 5,000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் வென்றது திமுக. அதேபோல, குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே 17 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது. தேமுதிகவின் வருகையால் இதுபோன்ற மிக சொற்ப எண்ணிக்கையிலான தோல்வியை தவிர்க்க முடியும் என திமுக கணக்கு போட்டுள்ளதாகத் தெரிகிறது.

 தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை பெறக்கூடிய ஒவ்வொரு வாக்கும் முக்கியம். அதேபோல, எதிர்க்கட்சிக்குச் செல்ல வாய்ப்புள்ள ஒவ்வொரு வாக்கையும் தடுப்பதும் முக்கியம். தமது கட்சிக்கு கிடைக்க வேண்டிய  வாக்கு , எதிர்க்கட்சிக்கு சென்றால், அந்தக் கட்சிக்கும் தமக்குமான வாக்கு வித்தியாசம் 2 ஆகிவிடும். அதனால் தான் தேர்தல் சமயத்தில் சிறு சிறு   கட்சிகளைக் கூட பொருட்படுத்தி ஆதரவை திரட்டி வருகின்றன அரசியல் கட்சிகள். திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், கொமதேக என பல கட்சிகள் இருக்கும் நிலையிலும் அக்கட்சி தமது கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.  மிகக் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களில் துரைமுருகனும் ஒருவர். குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றவர்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசனும்  ஒருவர்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மற்றும் மரியாதை மிக்க நட்சத்திரமாக இருந்த விஜயகாந்த், கடந்த 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியை தொடங்கினார். மாநிலம் முழுவதும் சூறாவளி பயணத்தை மேற்கொண்ட அவர், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும்  க‌டுமையாக விமர்சித்து பேசினார். 2006 தேர்தலில் நிலவிய மும்முனைப் போட்டியில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 232 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கினார். ஆனால், விஜயகாந்த் மட்டுமே விருதாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றார். அதேநேரம், 8.38 சதவிகித வாக்குகளை பெற்று கவனத்தை ஈர்த்தார். அந்த தேர்தலில் 39.91 சதவிகித வாக்குகளை பெற்ற அதிமுக வெறும் 4.84 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது அந்த தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் தான், வெற்றி தோல்வியையே தீர்மானித்தது.

கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 39 மக்களவை தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், 10.3 சதவிகித வாக்குகளை பெற்று திமுக, அதிமுமவிற்கு சவால் விடுக்கும் வகையிலான வலுவான தலைவராக விஜயகாந்த் உருவெடுத்தார். அடுத்த தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக அவர் இருப்பார் என்ற கருத்தும் மாநிலம் முழுவதும் பேசுபொருளானது.

விஜயகாந்தின் பலத்தை உணர்ந்த ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற தீர்மானத்துடன் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தார். அந்த தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி, 29 இடங்களில் வென்றது. திமுகவின் படுதோல்வியால் தேமுதிகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைத்தது. அந்த மிகப்பெரும் வெற்றியே தேமுதிகவின் சரிவின் தொடக்கமாகவும் அமைந்தது. சட்டமன்றத்திலேயே அதிமுகவுடன் கருத்து மோதலில் ஈடுபட்டு, கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

தனித்து போட்டியிட்ட வரை சுமார் 10 சதவிகித வாக்குகளை பெற்று வந்த தேமுதிக, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் ஒரே அடியாக கட்சியின் வாக்கு சதவிகிதம் சுமார் 5 சதவிகிதமாக வீழ்ச்சி கண்டது.  போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட விஜயகாந்த் கட்சியால் வெற்றி பெறமுடியவில்லை

கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருந்த கருணாநிதி, பழம் நழுவி (தேமுதிக) பாலில் விழும் (திமுக கூட்டணி) என நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக மதிமுக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் விசிக போன்ற கட்சிகளுடன் சேர்ந்து விஜயகாந்த் மக்கள் நல கூட்டணி என்பதை அமைத்தார். பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜயகாந்திற்கே டெபாசிட் கூட கிடைக்கவில்லை. தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் வெறும் 2.4 சதவிகிதமாக பாதாளத்திற்கு சென்றது. ஆனால் இந்த கூட்டணி பிரித்த வாக்ககுகள் மூலம் அதிமுக மீண்டும் வென்று ஆட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்தின்  உடல் நிலை மோசமடைந்ததால் மனைவி பிரேமலதாவின் பிடிக்குள் கட்சி சென்றது. அவரின் கடுமையான நடவடிக்ககளும், பெருத்த  எதிர்பார்ப்பும் கட்சியைச்  சீரழித்தது. ஆனாலும், விஜயகாந்தின் ரசிகர்களான தொண்டர்கள்  இன்றும் முனைப்புடன் இருக்கிறார்கள்.  அடுத்த தேர்தலில் அவர்கள் மாற்றாத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை பிரேமலதாவிடம் உள்ளது.

  திமுக - தேமுதிக கூட்டணியால் திமுகவில் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு வரும் பல முக்கியமான முன்னாள் தேமுதிக புள்ளிகள் கலவரமடைந்துள்ளார்களாம். கட்சியில் தங்களுக்கு இருந்து வரும் முக்கியத்துவம் குறையும் அல்லது பறிபோகும் என்ற அச்சம் அவர்களுக்கு எழுந்துள்ளதாம்.

ஜெயலலிதா - விஜயகாந்த் இடையே மோதல் ஏற்பட்டு அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக பிரிந்த பின்னர் தேமுதிகவில் எம்எல்ஏக்களாக இருந்த பலர் அங்கிருந்து விலகி அதிமுக பக்கம் போனார்கள். அதன் பின்னர் பல முக்கியத் தலைவர்கள் படிப்படியாக விலகிச் சென்றார்கள். விஜயகாந்த்துக்கு நிழலாக இருந்த பலரும் அப்படி விலகிப் போனார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் வி.சி. சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன் ஆகியோர் தற்போது திமுகவில் உள்ளனர்.

இந்த இருவரில் வி.சி. சந்திரகுமார் ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். எஸ்.ஆர். பார்த்திபன் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு திமுக எம்.பியாக இருந்தவர். இவர்கள் தவிர வேறு சிலரும் கூட தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில் தற்போது தேமுதிகவே திமுக கூட்டணிக்கு வந்திருப்பதால் இவர்களுக்கு திமுகவில் முக்கியத்துவம் குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேமுதிகவை விட்டு வெளியேறி திமுகவில் இணைந்தவர்களை, அக்கட்சியின் தொண்டர்கள் துரோகிகள் என்று விமர்சிப்பது வழக்கம். பிரேமலதா விஜயகாந்த்தும் கூட அப்படித்தான் விமர்சிப்பார். இப்போது இரு கட்சிகளும் ஒரே மேடையில் அமரும்போது, மேடையில் பழைய தோழர்களுடன் கைகுலுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது உள்ளூர் மட்டத்திலான அரசியலில் அவர்களுக்கு ஒருவித நெருக்கடியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், தற்போது திமுக வலுவாக உள்ள சட்டசபைத் தொகுதிகளை நிச்சயம் தேமுதிகவுக்குத் தராது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் விஜயகாந்த் போட்டியிட்டு வென்ற விருத்தாச்சலம், ரிஷிவந்தியம் உள்பட ஒற்றை இலக்கத்தில்தான் தேமுதிகவுக்கு திமுக சீட்டுகளை ஒதுக்கக் கூடும் என்பதால் ஈரோட்டைச் சேர்ந்த சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன் போன்றோருக்குப் பிரச்சினை வர வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

தலைவர்கள் மட்டத்தில் கூட்டணி ஏற்பட்டாலும், அடிமட்டத் தொண்டர்களிடையே ஒற்றுமை ஏற்படுவது சவாலான காரியம். காரணம், மறைந்த கலைஞர் உயிருடன் இருந்தபோது விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்தபோது நடிகர் வடிவேலு, திமுக மேடையில் விஜயகாந்த்தை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியதை இன்று வரை தேமுதிகவினர் மறக்கவில்லை. விஜயகாந்த்தை குடிகாரன் என்றெல்லாம் கடுமையாக  பேசியிருந்தார் வடிவேலு. அந்தத் தேர்தலில்தான் எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த்.

திமுக - தேமுதிக இடையிலான மோதல் நாடறிந்தது. மிகக் கடுமையான சொல்லாடல்களை இரு தரப்புமே பரஸ்பரம் பரிமாறிக் கொண்டுள்ளன. தனது கல்யாண மண்டபத்தை இடித்தது திமுக தான் என்று கடுமையாக குற்றம் சாட்டிப் பேசியவர் விஜயகாந்த். இந்த நிலையில் இரு கட்சிகளும் கூட்டணியாக இணைந்திருப்பது சில காலத்திற்கு உறுத்தலாகத்தான் இருக்கும். ஆனால் அரசியலில் எல்லாமே சகஜம் என்பதற்கேற்ப இந்தக் கூட்டணியும் போகப் போக இயல்பாகி விடும் என்று எதிர்பார்க்கலாம்.

திமுகவின் பாசறையில் தேமுதிக  இணிஅந்ததால் காங்கிரஸின் குரலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.   விருதுநகர் மாவட்டம் சிவகாசியில்  மாணிக்கம் தாகூர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர்பதிலளித்தார். அப்போது, ‛‛திமுக கூட்டணியில் தேமுதிக வந்து சேர்ந்துள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மாணிக்கம் தாகூர், ‛‛மகிழ்ச்சியான செய்தி.. எந்தவொரு கட்சி கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் சரி.. அது மகிழ்ச்சியாக தான் இருக்கும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அதனை வரவேற்றுள்ளார். தமிழக காங்கிரஸ் சார்பில் நானும் அதனை வரவேற்கிறேன்'' என்றார் இதையடுத்து, ‛‛திமுக கூட்டணியில் தேமுதிக உள்ளே வந்ததால் காங்கிரஸ் வெளியே போய்விடும் என்ற கருத்து இருக்கிறதே'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணிக்கம் தாகூர், ‛‛இது பொய்யான கருத்து என்று நினைக்கிறேன் என்றார்.

ஆட்சியில் பங்கு  வேண்டும் எனக் கடுமையாகக்குரல் எழுப்பிய மாணிக்கம் தாகூர்ரின் குரல் அடங்கி விட்டது. காங்கிரஸின்  மிரட்டலுக்குப் பதிலளிக்காது மெளனமாக இருந்த ஸ்டாலின்  நகர்த்தியகாய் காங்கிரஸின்  வாயை அடைத்து விட்டது.

பிரேமலதாவின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழக பாரதீய ஜனதா கலவரமடைந்துள்ளது. திமுகவுடன் கேப்டன் உருவாக்கிய தேமுதிக இணைந்ததை ஒருபோதும் கேப்டன் விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது என்று தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது.

தேமுதிக கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள முடிவை விமர்சித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சி இன்று அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மறைந்த தலைவர் விஜயகாந்தின் கொள்கைகளுக்கு மாறாக தேமுதிக செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து பாஜக வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், 'தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் விஜயகாந்த். அதனால், விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது' என்ற பதிவை வெளியிட்டுள்ளது. 

திமுக மற்றும் தேமுதிக இடையிலான இந்தக் கூட்டணி, தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜகவின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் மேலும் சூட்டைக் கிளப்பியுள்ளது.

அதிமுகவில் இருந்து பலர் வருகிறார்கள். பன்னீர் வருகிறார், தினகரன் வருகிறேர், பிரேமலதா வருகிறார்  என விஜயை  சிலர் உசுப்பினார்கள். எந்த  ஒரு அரசியல் தலைவரும்  விஜயை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.  பனையூர் கூடாரம் தர்போதைக்கு காலியாவே உள்ளது.    பிரேமலதவின் வண்டு அரிவாலய்த்தில் தஞ்சமடைந்துள்ளது. காங்கிரஸ் வருகிறது  என்ற பூச்சாண்டியும் பலிக்கவில்லை.

தலைவர்களின் அலப்பறைகள் தேர்தல் முடிவில் வெட்ட வெளிச்ச்மாகி விடும்.

 

ரமணி

22/2/26

  

Sunday, February 16, 2025

எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி


 

  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் எடப்பாடி. ஓ.பன்னீர்ச்செல்வம்,சசிகலா,தினகரன் ஆகியோரை மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தி சேர்க்க வேண்டும் என்ற குரலை எடப்பாடி அடக்கி ஒடுக்கிவிட்டார். எடப்பாடி சொல்வது தான்  பொதுச் சபையில் நிறவேறும் என்ற எழுதப்படாத விதியை அமுல் படுத்தியுள்ளார். எடப்பாடிக்கு  எதிரானவர்களும், பாரதீய ஜனதாவுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  இணைக்கப்பட வேண்டும் என நினைக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்  பேசாமடைந்தைகளாக  இருக்கிறார்கள்.

  எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல் தலைவரான செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்துள. எடப்பாடி பழனிசாமியையே அரசியலுக்கு கொண்டு வந்த குருநாதர்தான் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலத்திலேயே மாவட்ட செயலாளர். எம்.எல்.ஏ. என பதவி வகித்தவர்; ஒரு கால கட்டம் வரை ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர்; அவரது வாழ்க்கையில் சறுக்கல் ஏற்பட ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார்; ஆனால் சசிகலா குடும்பம், அதிதீவிர உண்மையான விசுவாசி செங்கோட்டையனை இன்று வரை கைவிடவில்லை. இத்தனை ஆண்டுகள் கனத்த அமைதி காத்த செங்கோட்டையன் இப்போது திடீரென கலகக் குரல் எழுப்பி இருப்பது மிக சாதாரணமாக கடந்து போய்விடக் கூடியது அல்ல என்பதுதான் அனைத்து அரசியல் பார்வையாளர்களின் கருத்து.   அண்ணா திராவிட முன்னேற்ற்க் கழகதில் போர்க்கொடி எழுப்பியவர்கள் தூக்கி எறியப்பட்டனர்.  செங்கோட்டையன் கலகக் குரல் எழுப்பியதுமே 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் பலரும் அவரை தொடர்பு கொண்டு  ஆதரவு தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில்பாரதீய ஜனதா,பாட்டாளி  மக்கள் கட்சி, தேசிய முன்னேற்ற திராவிடக் கட்சி,தமிழ்  மாநிலக் கட்சி ஆகியவைஒன்றிணைந்து  மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே டெல்லியின் கணக்காகும். 

டெல்லியின் கனவுக்கு எடப்பாடி முட்டிக்கட்டை போடுகிறார்.செங்கோட்டையனின் போர்க்கொடிகுப் பின்னால் சசிகலா  இருப்பதாகக் கருதப்படுகிறது. எடப்பாடிக்கு ஆதர்வானவர்களின் வீடுகளிலும் நிறுவனங்களிலும்  வருமான வரித்துறை திடீர் தேடுதல் நடத்தியும் அவர் அசரவில்லை.அதனால்தான் செங்கோட்டையன் உசுப்பிவிடப்பட்டுள்ளார்.

  செங்கோட்டையன் விவகாரத்தை முன்வைத்து மீண்டும் எடப்பாடி பழனிசாமியை காட்டமாக விமர்சித்து வருகிறார் டிடிவி தினகரன்.  ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்டு ஏறத்தாழ அரசியல் அத்தியாயத்தின் இறுதி கட்டத்தில் இருந்தவர்தான் செங்கோட்டையன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மீண்டும் உயிர் பெற்றது செங்கோட்டையன் அத்தியாயம். சசிகலா குடும்பத்தின் மீதான 'மாறாத' விசுவாசம்  இன்றும் தொடர்கிறது.

 சசிகலா சிறைக்குப் போகும் நிலையில் கூவத்தூரில் செங்கோட்டையனை முதல்வராக்க அவரது குடும்பம் தீவிரமாக முயன்றது.காலமும் நேரமும் எடப்பாடிக்கு ஆதர்வாக நின்றதால் அவர் முதலமைச்சரானார்.

 சசிகலா குடும்பத்தின் நெருக்கடியால் தனது குருநாதரான செங்கோட்டையனை வேண்டா வெறுப்பாக அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் எடப்பாடி   எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு எதிரியாகிவிட்டார்; ஆனால் செங்கோட்டையனோ சசிகலா குடும்பத்திடம் இருந்து இம்மியளவும் விலகாமல் இன்று வரை தொடர்பில்தான் இருந்து வருகிறார்.

கோவை அன்னூர் அருகே அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக   பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர். இந்த விழாவை மேற்கு மண்டல சீனியரான முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் புறக்கணித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், எங்களை வளர்த்து அடையாளம் காட்டியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. இந்த இருவரது படமுமே எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழா நிகழ்வுகளில் இடம் பெறவில்லை. இத்தனைக்கும் அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தவர் ஜெயலலிதா. இதனை எப்படி எங்களால் ஏற்க முடியும்? என்றார். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமாரோ, எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தியது அதிமுக அல்ல; விவசாயிகள் அமைப்புதான் என மழுப்பலாக மட்டுமே பதிலளித்துள்ளார். செங்கோட்டையனின் போர்க்கொடுக்கு இதுதான் முக்கிய காரணம்.

   கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அவரின் ஆதரவாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அவருக்கு துப்பாக்கி ஏந்தியபொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது  கழகத்தினுள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தினால்  கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்து வேறு அனைவரின் பெயர்களையும் கூறினார்.

டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  அலுவலகத்தை, சென்னை ராயப்பேட்டையிலுள்ள   தலைமை நிலைய அலுவலகத்தில் இருந்தபடி, காணொளி வாயிலாக பழனிசாமி திங்கள்கிழமை காலையில் திறந்து வைத்தார்.  மூத்த தலைவர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றனர் யில், செங்கோட்டையன் அதிலும் பங்கேற்கவில்லை.  கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் செங்கோட்டையன் பரிந்துரைத்த சிலரை, எடப்பாடி பழனிசாமி போடாததும், புதிய நிர்வாகிகள் நியமனத்தில் அவரிடம் கலந்து பேசாததுமே அதிருப்திக்கு காரணமென்று தெரிகிறது.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், கட்சியை ஒன்றிணைக்கும் வேலையில் ஆறு  தலைவர்கள் ஈடுபட்டதாக செய்தி ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அடங்குவர். இவர்கள் கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கட்சியை ஒன்றுபடுத்தாவிட்டால் வருங்காலத்தில் பெரிய தோல்விகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.இப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். எனவே இந்த ஆறுபேர் மட்டுமின்றி, கட்சியின் பல்வேறு தலைவர்களும் எடப்பாடி மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.  செங்கோட்டையன் தற்போது அளித்துள்ள விளக்கம் என்பது அதிருப்தியின் நீட்சி தான்.

எடப்பாடியின் தலைமையில் 10 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைததால் அடுத்த கட்டத்த் த‌லைவர்கள்  நொந்து போயுள்ளனர்.  செங்கோட்டியன் பூனைக்கு மணி கட்டியுள்ளார்.

 

ரமணி

16/2/25    

Saturday, April 13, 2024

ஸ்டாலினா மோடியா சூடாகும் இந்தியத் தேர்தல்களம்



 


இந்தியாவை அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆளப்போவது யார் என்ற கேள்விக்கு தேர்தல் மூலம் விடை கிடைத்துவிடும். "இந்தியா என்ற பெயரிலான  கூட்டணி, மோடி அரசுக்கு எதிராகக் களம் இறங்கி உள்ளது.

இந்தியக் கூட்டணியின்  பிரதமர் யார் என்று அறிவிக்காமல் தேர்தலில்  களப்பணியாற்றுகிறது. இந்தியக் கூட்டணி ஆரம்பமான  போது  பல முரண்பாடுகளும் தோன்றின. மோடி எதிர்ப்பு என்ற  ஒரே  ஒரு கொள்கையினால் இந்தியக் கூட்டணி ஒற்றுமையாக  உள்ளது.

பாரதீய ஜனதாவின் தலைமையில் 28 கட்சிகள்  இணைந்துள்ளன. மோடியை மட்டும் முன்னுக்கு நிறுத்தி தேர்தல்  பிரசாரங்கள் நடைபெறுகின்றன.

தமிழக தேர்தல்களம் திசை மாற்றப்பட்டுவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகமா? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமா? என்ற நிலை மாறி  ஸ்டாலினா? மோடியா என்ற வினா முன்னுக்கு எழுந்துள்ளது. மோடியா?, லேடியா? என ஜெயலலிதா  அன்று கேட்டார்.  இன்று ஸ்டாலின் கை காட்டுபவர்தான் பிரதமர் என  திராவிட முன்னேற்றக் கழகத்தினர்  பிரசாரம் செய்கின்றனர்.

அதற்கு ஏற்றால்போல்  மோடி எதிர்ப்புப் பிரசாரத்தை ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். பாரதீய ஜனதாக் கட்சியினரும் ஸ்டாலினையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எதிர்ப்பதில்  அதிதீவிரம் காட்டுகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டும் எடப்பாடி எதிர்க்கிறார். மோடியைப் பற்றி எந்த விமர்சனத்தையும்  எடப்பாடி முன் வைக்கவில்லை. இந்த  மென்மையான  போக்கு அரசியலில் அவரின் நிலைப்பாடு தெளிவற்று  இருப்பதையே கோடிட்டுக் காட்டுகிறது.

மோடி எதிர்ப்பு அலை தமிழகத்தில் மேலோங்கி இருக்கிறது. அண்ணா   பாரதீய ஜனதாவுடன் திராவிட முன்னேற்றக் கழகம்,  கூட்டணி  சேர்ந்து தேர்தலைச் சந்தித்தபோது   விளம்பரங்களில்  மோடியின் படத்தை வெளிப்படுத்தவில்லை.எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும்  போற்றிப் புகழ்ந்து  பாரதீய ஜனதாவின  வாக்குக் கேட்கின்றனர். அண்ணாவையும்,  ஜெயலலிதாவையும் மிகக் கேவலமாகப் பேசியஅண்ணாமலை தமிழக பாரதீய ஜனதாவின் தலைவராக  இருக்கிறார்.

தமிழகத்தில் பாரதீய ஜனதா வளர்ந்து விட்டது என்பதை நிரூபிக்க வேன்டிய நிலையில் அண்ணாமலை  இருக்கிறார். அண்ணாமலையின் பேச்சால்தான் பாரதீய ஜனதா எடப்பாடையை  ஒதுக்கியது. மறு புறத்தில் இரட்டைத் தலைமையைத் தூக்கி எறிந்த எடப்பாடி தனது தலைமைத்துவத்தை உறுதிப் படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். வாரிசு அரசியல், ஊழல் அரசு என மோடியும், டப்பாடியும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கின்றனர். இந்த  இரண்டு குற்றச் சாட்டுகலும் அவர்களின் தலைமையிலான கட்சிகளில் இருப்பதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

                   காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் கட்சி  வெளியிட்ட தேர்தல் அறிக்கை,  மாநிலக் கட்சிகளுக்கு நம்பிக்கையளித்துள்ளது.நீட் தேர்வு மாநில அரசுகளின் உரிமைக்கு விடப்படும். அவர்கள் விரும்பினால் நடத்தலாம், இல்லாவிட்டால் விலக்கு பெறலாம். ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டு புதிய வரி விகிதம் அமுல்படுத்தப்படும். அக்னிபாத் திட்டம் கைவிடப்படும். மக்கள் விரோத சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளுடன் கூடிய காங்கிரஸ் தேர்தல் அறிக்கை   வெளியிடப்பட்டது.

- ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு முழு மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும்.

- தேர்தல் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரப் பயன்பாடு மேம்படுத்தப்படும். வாக்களிப்பதில் ஒளிவுமறைவு இல்லாத நிலை உறுதிப்படுத்தப்படும்.

- தனி நபர்களின் உணவு மற்றும் உடை சுதந்திரத்தில் அரசு தலையிடாது. ஒருவரது திருமண உரிமையில் அரசு தலையிடாது. நாட்டின் எந்தப் பகுதியிலும் யாரும் பயணிக்கலாம், வசிக்கலாம். அந்த சுதந்திரம் உறுதி செய்யப்படும்.  மக்களின் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

- பாஜக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் திருத்தப்படும்.

- ஏழைப் பெண்களுக்கு வருடத்திற்கு ரூ. 1 லட்சம்  வழங்கும் மகாலட்சுமி திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

- நாடு முழுவதும் சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

- தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி (எம்பி, எம்எல்ஏக்கள்) தான் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியை விட்டு விலகி வேறு கட்சியில் சேர்ந்தால் அவரது பதவி தானாகவே பறி போகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

- பாஜகவில் சேர்ந்த பிறகு யார் மீதான வழக்குகள் எல்லாம் கைவிடப்பட்டதோ அவையெல்லாம் மீண்டும் விசாரிக்கப்பட்டு தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- பாஜக அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி சட்டம் நீக்கப்படும். புதிய ஜிஎஸ்டி சட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் ஏழை மக்கள் மீது விழுந்துள்ள வரிச் சுமை சரி செய்யப்படும்.

- பாஜக அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை, மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து திருத்தப்படும்.

- தேர்தல் பத்திர முறைகேடு, பிஎம் கேர்ஸ் உள்ளிட்டவை குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.

- தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைகளைத் தொடுக்க ரோஹித் வெமுலா பெயரில் சட்டம் கொண்டு வரப்படும்.

- அடுத்த 10 ஆண்டுகளில் ஜிடிபியை இரட்டிப்பாக்கும் வகையில் காங்கிரஸ் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படும்.

 - பாஜக அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டம் முழுமையாக கைவிடப்படும்.

 

- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முழுமையாக கைவிடுவோம்.

- சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அனைத்து விசாரணை அமைப்புகளையும் நாடாளுமன்ற, சட்டமன்ற கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மொத்தம் 25 உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டுள்ளன.  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையானது மகளிர், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஐந்து பிரிவினரின் வளர்ச்சி மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மக்களை  இலகுவாகக் கவர்ந்துள்ளது.

                   பாரதீய ஜனதாவுக்கு எதிரான  போராட்டங்கள்

மூன்றாவது முறையாகப் பிரதமராகும் கனவில் இருக்கும் மோடிக்கு எதிராக கர்நாடக  லிங்காய வீர சைவர்களும் ,குஜராத்தில் ராஜபுத்திரர்களும் களம் இறங்கி உள்ளனர்.  கர்நாடகத்திலும், குஜராத்திலும் தேர்தல் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி உள்ளவர்கள் பாரதீய ஜனதாவுக்கு எதிராகக் களம்  இறங்கி உள்ளனர்.

 கர்நாடகாவில் பாரதீய ஜனதா  வேட்பாளராக களமிறங்கும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை எதிர்த்து லிங்காயத் மடாதிபதி திங்கலேஸ்வர சுவாமி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தேர்தல் வரும் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 7ஆம் திகதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் ஒன்று தார்வாட் தொகுதி. இங்கு பாரதீய ஜனதா சார்பில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி போட்டியிடுகிறார்.

 மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி போட்டியிடும் தார்வாட் தொகுதியில் அவரை எதிர்த்து களமிறங்குகிறார் லிங்காயத் மடாதிபதியான திங்களேஸ்வர சுவாமி. கர்நாடக மாநிலத்தின் ஷிரஹட்டி பக்கிரேஷ்வர் மடத்தின் தலைவராக இருப்பவர் பகிரா திங்கலேஸ்வர் ஸ்வாமி. வீரசைவ லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பிரபல சாமியாரான இவர், வரும் பாராளுமன்றத் தேர்தலில், தார்வாட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

தார்வாட் தொகுதியின்  வேட்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகலாத் ஜோஷியை கடுமையாக விமர்சித்துள்ள திங்களேஸ்வர சுவாமி, வீர சைவ லிங்காயத் மற்றும் பிற சமூகங்களை பிரகலாத் ஜோஷி ஒடுக்குவதாகவும், லிங்காயத் மடங்களை தவறாகப் பயன்படுத்தி அவமரியாதையை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.  சாதிகளுக்கு இடையே பாரதீய ஜனதா  பாகுபாடு காட்டுவதாகவும், சுயமரியாதையை காப்பாற்றுவதற்காக தான் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கூறியுள்ளார் லிங்காயத் மடாதிபதி திங்கலேஸ்வர் சுவாமி. இதனால், கர்நாடகாவில் மத்திய அரசுக்கு  புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. தார்வாட் பகுதியைச் சேர்ந்த சில சாமியார்கள், குறிப்பாக லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த சாமியார்கள் கடந்த மாதம் 27ஆம் திகதி திங்கலேஷ்வர் ஸ்வாமி தலைமையில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அப்போது, தார்வாட் மக்களவை தொகுதியில்  வேட்பாளர் பிரகலாத் ஜோஷியை மாற்றவேண்டும் என  வலியுறுத்தினர். பாரதீய ஜனதவின்   தலைமை இதனை கண்டுகொள்ளாத நிலையில், பிரகலாத் ஜோஷியை எதிர்த்து தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் திங்களேஸ்வர் சுவாமி. கர்நாடகாவில் பல தொகுதிகளில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்  பாரதீய ஜனதாவுக்கு  எதிராக களமிறங்கியுள்ளதால் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் மட்டுமல்லாது கர்நாடகத் தேர்தலிலே  பெரும்  பாதிப்பை ஏற்படுத்தும்.

ராஜபுத்திரப் பெண்களை  இழிவாகப் பேசியதால் குஜராத்தில் மத்திய  அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குஜராத்தின் 11 கிராமங்களில்  பாரதீய ஜனதாக் கட்சியினர் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக  உட்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஹரியானா ஆகிய மாநிலங்களிலும்  எதிர்ப்பு  எழுந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள  26  தொகுதிகளுக்கும் வரும் மே 7ம் திகதி  ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் ராஜோட் தொகுதி வேட்பாளராக மத்திய  அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா போட்டியிடுகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன், ‘ராஜ்புத் சமூக மக்கள் ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் நெருக்கமாக இருந்தனர்என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இவரது பேச்சுக்கு குஜராத், ராஜஸ்தான், ரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் வசிக்கும் ராஜ்புத் சமூக மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இவ்விவகாரத்தில் அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா மன்னிப்பு கேட்ட பின்னரும், அதனை ஏற்க மறுத்துள்ள ராஜபுத்திர மக்கள், அவர் ராஜ்கோட் தொகுதியில்   வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கொடுக்க கூடாது என்றும், வேட்பாளரை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக  இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகினர். இதையடுத்து அவர்களுக்கு பதிலாக வேறு வேட்பாளர்களை பாரதீய ஜனதா அறிவித்தது. இந்நிலையில் மேற்கு உத்தரபிரதேசத்தில் அதிகளவில் வசிக்கும் ராஜ்புத் மக்கள், பாஜக வேட்பாளருக்கு எதிராக வேலை செய்ய தொடங்கி உள்ளனர். அவர்கள் பாரதீய ஜனதா  வேட்பாளருக்கு எதிராக போட்டியிடும் வலுவான வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக முடிவு செய்துள்ளனர். குஜராத்தில் ரூபாலாவுக்கு சத்திரிய சமூகத்தின் சார்பிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆரவல்லி மாவட்டத்தில் சத்திரிய சமூகத்தின் சார்பில் போராட்டங்கள் நடக்கின்றன.

  மற்ற சமூகத்தினரும் சத்திரிய சமூகத்துடன் இணைந்து ரூபாலாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். துவாரகா மாவட்டத்தில் ரூபாலாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் ரூபாலாவின் வேட்புமனுவை இரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவரது வேட்பு மனுவை இரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கிராம மக்கள் எச்சரிக்கை  விடுத்துள்ளனர்.

வட  இந்தியாவில்  பரதீய ஜனதா செல்வாக்குள்ள மாநிலங்களில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால் தலைவர்கள் கதிகலங்கிப் போயுள்ளனர்.


தேர்தல் களத்தில் சினிமா பிரபலங்கள்

பாராளுமன்ற தேர்தலில் திரை உலக பிரபலங்கள் பலர் போட்டியிடுவதுடன் பிரச்சாரமும் செய்கிறார்கள்.தமிழக அரசியலையும் தமிழ் சினிமாவையும்  பிரித்துப் பார்க்க முடியாது. ராதிகா,தங்கர் பச்சன், விஜய் வசந்த், விஜய பிரபாகரன் ஆகிய சினிமா நட்சத்திரங்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

நடிகை ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவில் பணியாற்றிவரும் மிக பெரிய புகழ் அடைந்த நடிகை ஆவார். இவர் தமிழ் சினிமா நடிகரான எம் ஆர் ராதாவின் மகளும், நடிகர் சரத்குமாரின் மனைவியும் ஆவார். ராதிகா சரத்குமார்  விருதுநகர் தொகுதியில் பாரதீய ஜனதாக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.


மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் இளம் நடிகர்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடன்  கூட்டனி வைத்து தகப்பனின் கட்சி சர்பில் சொந்த தொகுதியான விருதுநகரில் போட்டியிடுகிறார்.


  மறைந்த தொழிலதிபர் வசந்த் & கோ உரிமையாளர் வசந்த்தின் மகனான விஜய் வசந்து  ஒரு நடிகர்தான். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கன்னியகுமரியில் போட்டியிடுகிறார். தகப்பனின் மறைவுகுப் பின்னர்  இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.


   - தமிழ் சினிமா இயக்குநரான தங்கர் பச்சன்   பல நல்ல படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பள்ளிக்கூடம், அழகி, ஒன்பது ரூபாய் நோட்டு என பல படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர், தங்கர் பச்சன்.   தங்கர் பச்சன்  விருத்தாசலம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியில் சார்பில்  பாரதீய ஜனதாவுடன் கூட்டனி சேர்ந்து போட்டியிடுகிறார்

 இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி தொகுதியில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார்.

  நடிகைகள் ஹேமமாலினி, நக்மா, கிரண் கேர், நடிகர் ஜாவித் ஜாப்ரி உள்ளிட்டோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

  நக்மா நடிகை நக்மா உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராகக் களம் இறங்கி உள்ளார்.

  ஆம் ஆத்மி கட்சி சார்பில் சண்டிகரில் முன்னாள் இந்திய அழகியும், நடிகையுமான குல் பனாக் போட்டியிடுகிறார்.  இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ராஷ்ட்ரிய ஆம் ஆத்மி கட்சியை துவங்கி  பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிடுகிறார்.   நடிகை ஸ்ரீதேவி தனது கணவரும், பட தயாரிப்பாளருமான போனி கபூருடன் சேர்ந்து ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி வேட்பாளர் அமர் சிங்கிற்கு ஆதராவக பத்தேஹ்பூர்சிக்ரியில் பிரச்சாரம் செய்தார். அனில் கபூர் இந்தி நடிகர் அனில் கபூர் சண்டிகரில் போட்டியிடும் பாரதீய ஜனதா  வேட்பாளரான நடிகை கிரண் கேருக்கு வாக்கு சேகரித்தார்.

 நடிகர் விவேக் ஓபராய் பாரதீய ஜனதா  வேட்பாளர் நிதின் கட்காரிக்கு ஆதரவாக நாக்பூரில் திறந்த ஜீப்பில் பிரச்சாரம் செய்தார்.

 உத்தர பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராகநடிகை ஹேமமாலினி போட்டியிடுகிறார்.   குஜராத் மாநிலம் அகமதாபாத் தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடும் இந்தி நடிகர் பாரேஷ் ராவல் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார்.  தேர்தலில் போட்டியிடும் நடிகர் சத்ருகன் சின்ஹா தனது மனைவியுடன் பாட்னாவில் பிரச்சாரம் செய்தார். ரதி நடிகைகள் ரதி , பாக்யஸ்ரீ ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சாகர் மெகேவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தனர்.

அரசியல்வாதிகள் தங்களை நம்பாது சினிமாப் பிரபலங்களை நம்பத் தொடங்கி விட்டனர்.