Monday, July 15, 2013

தாலியை சுற்றிப்பின்னப்படும் கதைகள் வெற்றிபெறுகின்றன


தமிழ் சினிமாவில் ரசிகர்களைக்கவர்வதற்கு இரண்டு கருக்கள் உள்ளன.ஒன்று சகோதரபாசம். பாசமலருக்கு இணையாக எந்தப்படமும் இது வரை இல்லை.இரண்டு தாலியைச்சுற்றிப்பின்னப்படும் கதை.தாலி கட்டிய கடமைக்காக கணவனைக்காப்பாற்றும் பெண் பாத்திரங்கள் பல உண்டு. தாலிக்கு மதிப்புக்கொடுக்க வேண்டும் என்பதற்காக குடிகாரக்கணவனுடனும் கண்ணீருடனும்  வாழும் பெண் பாத்திரங்கள் தாய்க்குலத்தின் மனதில் எவ்விதத்தடையும் இன்றிஇடம்பிடித்து விடுகின்றன.  அதிகமான கதைகள் தாலியைப்பின்னணியாகக்கொண்டே பின்னப்படுகின்றன.
 குடிகாரக்கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு அல்லது இன்னொரு பெண்ணுடன் கணவன் கொண்டதொடர்பால் மனம் வெதும்பி பிறந்த வீட்டை நோக்கி பெட்டியுடன்  வரும் பெண்ணை வாசலிலே நிறுத்தி
"அவன் ஆம்பளை எதையும் செய்வான். நீதான் அனுசரிச்சுப்போகணும்." என்று   தகப்பன்,தாய் அல்லது சகோதரன்புத்தி மதி கூறுவார்கள்.அடுத்த காட்சியில் இந்தமூவரில் ஒருவர் வீட்டுக்கு வந்த பெண்ணை கணவனின் வீட்டிலே கொண்டுபோய் விட்டு விடுவார்கள்.

"மாப்பிளை, தெரியாத்தனமாச்செய்திட்டாள். புத்திசொல்லி கூட்டியாந்தேன். இனி இப்பிடித்தவறு நடக்காது". என்று மன்னிப்புக்கேட்பார்கள். பெரும்பாலான‌ மாப்பிளைகள் பெண்ணை ஏற்றுக்கொள்வார்கள்.ஏற்றுக்கொள்ளாத சில கணவனும், திருப்பி அனுப்பவேண்டாம் என்கிற சிலபெற்றோரும் சகோதரிகளும் சில கதைகளில் வருவார்கள்.
 இவை எல்லாம் பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு என சிலர் புலம்பினாலும் இப்படிப்பட்ட படங்கள் அமோகமாக ஓடி வசூலில் சாதனைசெய்வதால் அப்படிப்பட்டபடங்களைத்தொடர்ந்தும் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.
"எங்க வீட்டு வேலன்" படத்தில் பொறுமையின் சின்னமாக ரேகா.தாய் ரேகாவின் கண்ணீரைத்துடைக்கும் சிலம்பரசனின் வயதுக்கு மீறிய நடிப்பு தாய்க்குலத்தை அலைமோத வைத்தது.
  இந்தியாவிலும் இலங்கையிலு தாறுமாறாக ஓடி வசூலில் சாதனை செய்தபடம்"சின்னத்தம்பி".வெகுளித்தனமான பிரபு. உலகம் தெரியாத குஷ்பு."இந்தக்கயிற்றை என் கழுத்தில் கட்டி மூண்டு முடிச்சுப்போட்டா என் மூண்டு அண்ணன்மாரும் உனக்கு அடிக்க மாட்டங்க" என்று குஷ்பு சொன்னதை நம்பி குஷ்புவின் கழுத்தில் மூன்று முடிச்சுப்போடும் பிரபு.தங்கை குஷ்புவின் கழுத்தில் தாலி கட்டிய பிரபு இருக்கும் இடத்தை அறிவதற்காக விதவைத்தாய்மனோரமாவைக்கொடுமைப்படுத்தும் தாரவி.இந்தக்காட்சிகள் ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் சின்னத்தம்பியின் வெற்றி சரித்திரமானது.
  அந்த ஏழு நாட்கள் படத்தில் பாக்கியராஜை ஓடி ஓடிக்காதலிக்கும் அம்பிகா, சந்தர்ப்பவசத்தால் ராஜேஸுக்கு மனைவியாகிறார். அம்பிகாவின் காதலைத்தெரிந்த ராஜேஸ், காதலரைச்சேர்த்துவைக்க முயற்சிக்கிறார். முடிவு எப்படி இருக்கும் என ரசிகர்கள் பதறியபோது தாலிசென்றிமென்ற் அம்பிகாவைத்தடுக்கிறது.
 "அவர்கள்" படத்தில் கொடுமைக்கார ரஜினியின் மனைவி‌சுஜாதா. விவாகரத்தின் பின்னர் "நானே வேண்டானப்புறம் நான் கட்டிய தாலி மட்டும் உனக்கெதுக்கு" என்று ரஜினி கேட்க "கழற்றி எறிஞ்சிடுவேன். ஆனா, இது எங்கப்பா செய்து போட்டது" என்று சொன்னபடி வெளியேறுவார் சுஜாதா.
 "என் கையில் துப்பாக்கி" என்பான் கலங்கரை விளக்கம் படத்தின் வில்லன்."இதோ துப்பாக்கியை விட சக்தி வாய்ந்த ஆயுதம். உன்னால் என்னை ஒன்றும் செய்து விடமுடியாது" எனத்தாலியைக்காட்டுவாள் கதாநாயகி.

 நானும் ஒருபெண்,விஜயகுமாரி‍- காவியத்தலைவி,செளகார் ஜானகி‍‍ -விதி,பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் பெண்ரசிகைகளை மட்டுமன்றி ஆண்ரசிகர்களையும் கவர்ந்தவர்கள்.கணீரென்றகுரலில் மனதில் இடம் பிடித்தவர் கண்ணாம்பா."பொறுத்ததுபோதும் மகனே மனோகரா பொங்கி எழு"என்ற கட்டளையை  என்றைக்குமே மறக்கமுடியாதது.
 பானுமதி,பத்மினி,சாவித்திரி,கே.ஆர்.விஜயா,சுஜாதா,பண்டரிபாய்,எம்.என்.ராஜம்,டி..மதுரம்,மனோரமா,சரோஜாதேவி,தேவிகா ஆகியோரும் தமது பாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தனர்.
வந்தாளே மகராசி படத்தில் ஜெயலலிதா இரட்டை வேடமேற்று நடித்திருந்தார்.அப்பாவி ஜெயலலிதாவை துன்புறுத்துவதைக்கண்ட துணிச்சல் மிக்க ஜெயலலிதா இடம் மாறி பழிவாங்குவதை தியேட்டரில் ஒலித்த ஆரவாரத்தின் மூலம் சிகர்களின் விருப்பத்தை அறிய முடிந்தது. ஜக்கம்மா, ரிவால்வர் ரீட்டா,கன்ஃபைட் காஞ்சனா போன்ற குதிரையில் துப்பாக்கியுடன் வந்த நாயகிகளும் மனதில் இடம் பிடித்தனர்.
 ரசிகர்களைக்கவர்வதற்காகவே தாய்க்குப்பின் தாரம் ,தாயைக்காத்த தனயன்  போன்ற பெயரில் படங்கள் வெளிவந்தன.எம்.ஜி.ஆரின் படங்களில் தாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கபபடும். கதாநாயகிகள் அவரை கனவில் காதலிப்பார்கள்.ஆபத்தான் வேளையில் கதாநாயகியைக்காப்பாற்றும் கதாநாயகன் எம்.ஜி.ஆர்.
 சிவாஜிகணேசனின் அதிகமானங்களில் இரண்டு தாநாயகிகள் ருவார்கள்.ஒருவரைக்காதலித்து இன்னொருவரைத்திருமம் செய்வார் அல்லது இரண்டு பேரையும் திருமம் செய்வார்.சிக்கலானகதை அமைப்பைக்கொண்டசிவாஜியின் ங்களைப்பார்ப்பற்கு சிகர்கள் அலைமோதுவார்கள்.முறியடிக்கப்படாதசாதனைகளின் சொந்தக்காரன் சிவாஜிகணேசன்.
 பெண்களைச்சுற்றியே தை இருந்தனால் சாரதா,குலள் ராதை,மிஸ்ஸியம்மா,அமுதா,வாயாடி,மேயர் மீனாட்சி,ந்தாளே ராசி என்ற‌ பெண் தாபாத்திரங்களை முன்னிலைப்படுத்தி த்தின் பெயரும் இருந்தது.
  ஸ்ரீர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.பாலந்தர், வி.சி.குகநாதன், விசு,பாக்கியராஜ் போன்றர்கள் பெண்கதாபாத்திரங்களைச்சுற்றி தை அமைப்பதில் ல்ர்கள்.
 இன்றையதாநாயகிகள் தொடையையும் இடுப்பையும் காட்டி தொப்புளில் ம்பம் விடுவதிலும் ஆம்லெட் போடுவதிலும் அக்றை காட்டியதால் ஓரிரு ங்களுடன் காணாமல் போய்விடுகிறார்கள்.
 பிரமாண்டமானந்திரலேகா இன்றும்பேசப்படுகிறது.சனங்கள் குறைவாகவும் அதிகமானபாடல்களுடனும் வெளிவந்த‌  சிந்தாமணி பெருவெற்றி பெற்றது.சிந்தாமணி நாயகி ருக்குமணி யைக்காண்பற்காகஇலங்கைசிகர்கள்ப்பலில்இந்தியாவுக்குச்சென்றார்கள்.கே.பி.சுந்தராம்பாளின் டிப்பில் வெளியானஒளவையார் சாதனை புரிந்த‌து.
ணி
 தினக்குரல் 11/10/1998

Friday, July 12, 2013

இலங்கையின் சிறுசஞ்சிகைகளின் எழுச்சியும்,வீழ்ச்சியும்.


   
       இலங்கையிலிருந்து வெளிவரும் சிற்றிதழ்களின் ஆயுள் மிகக் குறைவு என்பது கசப்பானஉண்மையே.திட்டமிடப்படாமையினாலும், நிறுவனமயப்படுத்தாமையினாலும் இலங்கையில்சிற்றிதழ்களினால் நீண்ட தூரம் பயணிக்கமுடியவில்லை.பிரபல்யமான சில நிறுவனங்கள்அவ்வவ்போது சில சிற்றிதழ்களை வெளியிட்டன.தகுதியான ஆசிரியரும்,ஆசிரியபீடமும்,இல்லாமையால் அவையும் கால ஓட்டத்தில் மறைந்து போயின.இதே வேளை பிரபல எழுத்தாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டசிற்றிதழ்களும் கால ஓட்டத்தில் மூழ்கிவிட்டன.
         உதயதாரகையுடன் 1841ஆம் ஆண்டு இலங்கையின் பத்திரிகைத் துறை ஆரம்பமானது.கலை,இலக்கியம்,சமூகம்,மருத்துவம்,விஞ்ஞானம்,அரசியல், நகைச்சுவை,இசை, விவசாயம்,சிறுவர்,வானொலி ஆகிய துறைகளை முன்னிலைப்படுத்தி பல சஞ்சிகைகள் வெளிவந்தன.இன்றும் சுமார் 15 சஞ்சிகைகள் வெளிவருகின்றன.48 வருட காலம் தனி நபர் சாதனையாக வெளிவந்த மல்லிகை தடுமாறிக் கொண்டிருக்கிறது.தாயகம், ஞானம்,ஜீவநதி ஆகியன இன்று வெளிவருகின்றன.யாத்ரா, நீங்களும் எழுதலாம் ஆகிய  சஞ்சிகைகள் கவிஞர்களின் அபிலாஷையைப் பூர்த்தி செய்கின்றன.

         மறுமலர்ச்சி,கலைச்செல்வி,மல்லிகை,,சிரித்திரன்,,சுடர் ஆகிய சிற்றிதழ்கள் பல எழுத்தாளர்களை இனம் கண்டு வளர்த்ததோடு புதிய சகாப்தத்தையும் உருவாக்கின.இதே பாணியை ஞானம்,ஜீவநதி ஆகியன முன்னெடுக்கின்றன.
         சிரித்திரனின் வரவு தமிழ் வாசகர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. சவாரித்தம்பர்.   மிஸ்டர் அன்ட் மிஸிஸ் டாமோ டிரன் போன்ற பாத்திரங்கள் இன்று நினைத்தாலும் சிரிப்பை வரவழைக்கின்றன,மகுடி கேள்வி பதில்கள். சிந்திக்கவும் சிரிக்கவும் தூண்டின. கொத்தியின் ,காதல்,ஆச்சி பயணம் போகிறாள் போன்ற‌ த‌ர‌மான‌ தொட‌ர்க‌ளையும் த‌ந்த‌து.
சிரித்திரனின் பாதிப்பினால் கலகலப்பு,கிறுக்கன்,சுவைத்திரள் போன்ற நகைச்சுவச்சிற்றிதழ்கள் வெளிவந்தன.என்றாலும் சிரித்திரனைப்போன்று வாசகர்களிடம் அவை வரவேற்பைப்பெறவில்லை.

 இலங்கையில் விவசாயம் உச்சக்கட்டமாக இருந்த காலத்தில் கமத்தொழில் விளக்கம் எனும் சஞ்சிகையை கமத்தொழில் திணைக்களம் வெளியிட்டது.பல ஆக்கபூர்வமான அறிவுரைகளையும் வழிகாட்டல்களையும் இது வழங்கியது.பாடசாலையில் விவசாயம் ஒருபாடமாக இருந்த‌தனால் மாணவர்களும் இச்சஞ்சிகையினால் பயனடைந்தனர்.

  சமூகஜோதி நா.முத்தையாவினால் வெளியிடப்பட்ட ஆத்மஜோதி,சிவத்தொண்டன் நிலையம் வெளியிட்ட சிவத்தொண்டன் ஆகியவை ஆன்மீகக்கருத்துக்களை முன்னிறுத்தி வெளிவந்த சஞ்சிகைகளாகும்.செல்வச்சன்னதி ஆலய மடத்தினால் வெளியிடப்படும் சஞ்சிகை ஆன்மீகக்கருத்துக்களை முன்னிறுத்தி வெளிவருகின்றது.

 மில்க்வைற் ச‌வ‌ர்க்கார‌ நிறுவ‌ன‌த்தினால் வெளியிட‌ப்ப‌ட்ட‌ மில்க்வை‌ற் செய்தி எனும் ச‌ஞ்சிகை ப‌ல்துறை ஆக்க‌ங்க‌ளைக்கொண்டு வெளிவ‌ந்த‌து.க‌.சி. குல‌ர‌த்தின‌த்தை ஆசிரிய‌ராக‌க்கொண்டு வெளிவ‌ந்த‌ இச்ச‌ஞ்சிகை வாச‌க‌ர்க‌ளிட‌ம் பெரு வ‌ர‌வேற்பைப்பெற்ற‌து
 1992 ஐப்பசி,மார்கழி முதல் காலாண்டிதழாக மாற்றம் எனும் சஞ்சிகை மலர்ந்தது.1995 ஆம்ஆண்டு ஜூன் மாதம் இது முடக்கப்பட்டது.மார்க்கின் கை வண்ணத்தில் அட்டைப்படங்கள்அதிசயிக்கவைத்தன.நவீன தொழில்நுட்பம் அறிமுகமாகாதகாலத்தில் மாற்றத்தின் அட்டைப்படவடிவமைப்பு சிலாகிக்கப்பட்டது.ஆண்டுதோறும் ஆளுமைமிக்க ஒருவரைத்தேர்வுசெய்துதேசாபிமானி பட்டம் வழங்கிக்கெளரவித்தது. பல போட்டிகள் மூலம் வாசகர்களுக்குப்பலபரிசுகளை வழங்கியது.1995 ஆம் ஆண்டு கணனியைப்பற்றி அதிகமானோர்அறிந்திராதவேளையில் ஆசிரியர் வே. நவமோகனின் முயற்சியினால் கணனிச்சிறப்பிதழ்வெளியானது.

  வே.நவமோகனை ஆசிரியராகக்கொண்டு 2000 ஆம் ஆண்டு கொம்பியூட்டர் ருடேவெளியானது.கொம்பியூட்டரைப்பற்றி தமிழில் அறிவதற்கு ஆர்வமுள்ளவர்களின்ஆவலைப்பூர்த்தி செய்தது.கொம்புயூட்டர் ருடே என்றபெயர்  பலரிடம் கைமாறி இன்றும்வெளிவந்து கொண்டிருக்கிறது.கொம்பியூட்டர் துறையில் ஆர்வமுள்ள நவமோகன்கொம்பியூட்டர் ரைம்ஸ் எனும் சஞ்சிகையை வெளியிட்டார்.சிறிதுகாலத்தில் அது நின்றுவிட்டது.இதேகாலகட்டத்தில் வெளிச்சம்,நங்கூரம்,அறிவுக்களஞ்சியம்,சாளரம் ஆகியன தோன்றிமறைந்துவிட்டன.

  இளையதம்பி தயானந்தாவை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த இருக்கிறம் எனும் சஞ்சிகைபுதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.அவர் நாட்டைவிட்டுவெளியேறியபின் னர் புதியவர்கள் பொறுப்பேற்றனர்.நிதி நிலைமையால் தள்ளாடிய இருக்கிறம்சஞ்சிகையின் வினியோகப்பொறுப்பை மிகப்பெரிய நிறுவனம் பொறுப்பேற்றது.சர்ச்சைக்குரியபேட்டி பிரசுரமானதால் விற்பனைக்கு விடப்பட்ட பிரதிகள்  மீளப்பெறப்பட்டன.காலவெள்ளத்தில்இருக்கிறம் மூழ்கிவிட்டது.

குமுதம் சஞ்சிகையை நினைவூட்டும்விதமாக வெளிவந்த அமுதம்,ஆனந்த விகடனை ஒத்தஇலங்கை விகடன் ஆகியவையும் காணாமல் போய்விட்டன.சிறுவர்களுக்காக உதயன்வெளியிட்ட அர்ஜுணா,மாணவர்களுக்காக வீரகேசரி வெளியிட்ட புது யுகம் ஆகியனஅமுங்கிவிட்டன.

  கலைக்கேசரி,சமகாலம்,ஆனந்தம் ஆகியன உயர்தர கடதாசியில் அழகிய படங்களுடன்வெளிவருகின்றன.இவற்றின் விலை காரணமாக வாசகர்களினால் நெருங்கமுடியாத நிலைஉள்ளது. செங்கதிர்,கொளுந்து,சுகவாழ்வு, காயத்திரி சித்தம்,தின மகுடி ஆகிய சஞ்சிகைகள்தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.இந்தியச்சோதிடர்களையும்,இந்தியஆலயங்களையும் முதன்மைப்படுத்தி சோதிடகேசரி வெளிவருகின்றது.

 இவை தவிர ஒருசில இலவச்சிற்றிதழ்களும் சத்தமில்லாமல் வருகின்றன.உயர்தர கடதாசியில்அழகியவண்ணப் படங்களுடன்  விளம்பரங்களை இலக்காகக்கொண்டு அருள்,,ஃபிளட்ஸ்கைட்ஸ்,,கொட்டாஞ்சேனை அன்ட் யுனைட்,,அலை ஓசை,வெள்ளவத்தை கைட் ஆகியனவெளிவருகின்றன.பிரபல வியாபார நிலையங்களிலும்,விமானங்களிலும்,விமானநிலையத்திலும் இவை இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.

 தினபதி,சிந்தாமணி,தினகரன்,வீரகேசரி ஆகியபத்திரிகை நிறுவனங்கள் சிறுசஞ்சிகைகளைவெளியிட்டுத்தோல்வியடைந்தன. வீரகேசரி பத்திரிகை நிறுவனம் சலிக்காதுசிறுசஞ்சிகைகளைத்தொடர்ந்தும் வெளியிட்டு வருகிறது.

 மாணவர்களைக்குறிவைத்து பல சஞ்சிகைகள் வெளிவருகின்றன.ஐந்தாம் ஆண்டுபுலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களுக்காக பிரபலஆசிரியர்களும்,நிறுவனங்களும் பரீட்சை வழிகாட்டி என்றபெயரில்  சஞ்சிகைகளைவெளியிடுகின்றன.மூன்றாம்,நான்காம் வகுப்பு மாணவர்களைக்குறிவைத்தும் இப்படியானசஞ்சிகைகள் வெளிவருகின்றன.இவற்றுக்கு வெளிநாட்டில் நல்ல கிராக்கி உள்ளது.


 பல்கலைக்கழகங்கள்,உயர்கல்விப்பீடங்கள்,பாடசாலைகள்,சனசமூகநிலையங்கள்,ஆலயங்கள்ஆகியன ஆன்டுதோறும் சஞ்சிகையை வெளியிடுகின்றன.அவை கடைகளில் விற்பனைசெய்யப்படுவதில்லை என்றாலும் அவற்றையும் சிற்றிதழ்களுக்குள் அடக்கலாம்.

இலங்கையில் இருந்து வெளிவரும் சிற்றிதழ்கள் சந்தாக்காரர்களையும்,இலக்கியஆர்வலர்களையும் நம்பியே உள்ளன. பிரதான தொழில் உள்ளவர்களே சிற்றிதழ்களைவெளியிடுகின்றனர். மல்லிகை ஆசிரியர் மட்டும் மல்லிகையின் வருமானத்தையே அதிகமாகநம்பினார்.மிகக்குறைந்தளவு பிரதிகளே அச்சிடப்படுகின்றன.சிற்றிதழ்களின் விற்பனையைஅதிகரிப்பதற்குரிய கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும்.

ஆனந்தவிகடன்,குமுதம்,கல்கி,அவள்விகடன்,பக்தி,சக்தி ஆகிய சஞ்சிகைகளில் இலங்கைவாசகர்களின் ரசனை கட்டுண்டு கிடப்பதனால் அதனை உடைத்து வெளிவரும் சூழ்நிலையைஇலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளினால் உருவாக்க முடியவில்லை.

 நன்றி; காற்றுவெளி இணையசஞ்சிகை