Sunday, September 27, 2009

ஜெயலலிதாவின் போராட்டத்துக்குவழிவகுத்த தமிழக அரசாங்கம்


தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக பெரு வளர்ச்சி அடைந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையையும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர் என்ற விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளார் ஜெயலலிதா.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கையில் எடுத்த ஜெயலலிதா, தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் இலங்கைத் தமிழர் பிரச்சினையை மறந்து விட்டார். தமிழக இடைத் தேர்தலைப் புறக்கணித்ததன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் இருப்பதை வெளிப்படுத்தினார்.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா அதிக அக்கறை காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நடப்பதை அறிவதற்காக தமிழக நாடாளுமன்றக் குழு ஒன்றை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்தம் முடிவுற்று நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் தமிழக மீனவர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை.
தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று கூறப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன. தம் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை நிறுத்த இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காத நிலையில் ராமேஸ்வர மீனவர்களுக்காக ஜெயலலிதா குரல் கொடுத்துள்ளார். தமிழக அரசாங்கத்தை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் அனைத்தும் பிசுபிசுத்துப் போனதால் இராமேஸ்வர மீனவர்களுடன் கை கோர்த்துக் கொண்டு புதியதொரு வியூகத்தை வகுத்துள்ளம்ர் ஜெயலலிதா.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தோல்வி, தமிழக இடைத் தேர்தலைப் புறக்கணித்தமை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து சில முக்கிய பிரமுகர்கள் வெளியேறியமை, ஒரு சில முக்கிய பிரமுகர்கள் தற்போது ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டமை ஆகியவற்றினால் சோர்வடைந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் தற்போது சுறுசுறுப்படைந்துள்ளனர்.
அரசியலில் சற்று சோர்வடைந்திருந்த ஜெயலலிதா தற்போது உற்சாகத்துடன் போராடுவதற்கான புதிய கதவை தமிழக அரசும் மத்திய அரசும் சேர்ந்து திறந்துள்ளன.
தமிழகத்துக்கு விஜயம் செய்த ராகுல் காந்தி, காங்கிரஸில் இணையுமாறு ரஜினிக்கும் விஜய்க்கும் அழைப்பு விடுத்தார். அவர்கள் இருவரும் அதனை நாசூக்காக மறுத்து விட்டனர். அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் ரஜினியிடமும் விஜயிடமும் உள்ளது. அதற்குரிய சந்தர்ப்பம் அமையாததனால் இருவரும் தமது அரசியல் ஆசைகளை மூட்டை கட்டி வைத்துள்ளனர்.
ரஜினிக்கும் விஜய்க்கும் ராகுல் காந்தி அழைப்பு விடுத்தபோது அமைதியாக இருந்த இளங்கோவன் பின்னர் சினிமா கவர்ச்சியை காங்கிரஸ் கட்சி நம்பவில்லை என்று கூறியதால் ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் விசனமடைந்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து இருக்கின்றனர். அரசியலின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்தான் உள்ளது என்பதை அனுபவ மூலம் கண்டறிந்த ராகுல் காந்தி, தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். தமிழக இளைஞர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி அவர்களது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்டு இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
சினிமாக் கவர்ச்சியை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என்ற இளங்கோவனின் கூற்று ரஜினியையும் விஜயையும் மறைமுகமாகத் தாக்கியதால் தமிழக காங்கிரஸில் உள்ள விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தனது அபிமான நடிகரா? அரசியல் கட்சியா? என்ற கேள்வி எழும்போது அதிகமான இளைஞர்கள் தனது அபிமான நடிகரின் பக்கமே செல்வார்கள்.
இளங்கோவனின் பேச்சு தமிழக காங்கிரஸுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக காங்கிரஸில் உள்ள விஜய் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இளங்கோவனின் காட்டமான அறிக்கையினால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்சியா? நடிகனா? எனும் முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு அவர்களை இளங்கோவன் தள்ளியுள்ளார். தமிழக இளைஞர்களின் எதிர்ப்பை எதிர்நோக்கியுள்ள இளங்கோவன், கட்சியை வளர்ப்பதற்குரிய ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதனையும் கூறவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது.
வர்மா
வீரகேசரிவாரமலர்27/09/09

Thursday, September 24, 2009

மிரட்டியது மேற்கிந்தியத்தீவுபோராடி வென்றது பாகிஸ்தான்


தென்னாபிரிக்காவில் நடைபெறும் மினி உலகக் கிண்ணப் போட்டியில் அனுபவம் இல்லாத மேற்கிந்தியத் தீவுகளை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் அணி மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஐந்து விக்கட்களினால் வெற்றி பெற்றது.
சம்பளப் பிரச்சினை காரணமாக மேற்கிந்தியத் தீவுகளின் முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. மினி உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் எட்டு அணிகளில் மிகப் பலம் குறைந்த அணியாக மேற்கிந்தியத் தீவுகள் உள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 34.3 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தன.
முதலாவது ஓவரில் மேற்கிந்திய அணியின் சரிவு ஆரம்பமாகியது. ஒரு ஓட்டம் எடுத்த ரிச்சர்ட்ஸ் மொஹமட் அமீரின் பந்தில் ஆட்டமிழந்தார். நவீட் உல் ஹசனின் பந்தை இம்ரான் நஸீரிடம் பிடி கொடுத்த பிளெட்சர் ஏழு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். ஏழு விக்கட்டுகளை இழந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 47 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியபோது எட்டாவது விக்கட்டில் இணைந்த சமி, மில்லர் ஜோடி 38 ஓட்டங்கள் எடுத்தது. மில்லருடன் இணைந்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய சமி 25 ஓட்டங்களில் சயீட் அஜ்மலின் பந்தில் விக்கட்டைப் பறி கொடுத்தார். அடுத்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேற தனி ஆளாக நின்று போராடிய மில்லர் தனது முதலாவது அரைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். 57 பந்துகளுக்கு முகம் கொடுத்த மில்லர் ஒரு சிக்சர் ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்கள் எடுத்தார்.
மொஹமட் அமீர், உமர் குல் ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளையும் சயீட் அஜ்மல் இரண்டு விக்கட்டுகளையும் நவீட் உல் ஹசன், சயீட் அப்ரிடி ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
134 என்ற இலகுவான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் மேற்கிந்திய அணி வீரர்களின் பந்துவீச்சில் தடுமாறி 30.3 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 134 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் தலைவர் யூனுஸ்கான் காயம் காரணமாக விளையாடததால் உப தலைவரான அப்ரிடி பாகிஸ்தான் அணியை வழி நடத்தினார்.
கெவின் டாங்கின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத பாகிஸ்தானின் வீரர்கள் ஆட்டமிழந்தனர். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான இம்ரான் நஸீர், கம்ரன் அக்மல் ஆகிய இருவரும் தலா ஐந்து ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சொஹைப் மலிக், முஹமட் யூசுப் ஆகிய இருவரும் தலா 23 ஓட்டங்களுடன் வெளியேறினர். மிஸ்பா உல் ஹக் ஆறு ஓட்டங்கள் எடுத்த வேளை பெர்னாட்டின் பந்தை வட்சனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
பாகிஸ்தான் அணி ஐந்து விக்கட்களை இழந்து 76 ஓட்டங்கள் எடுத்திருந்த வேளை ஜோடி சேர்ந்த உமர் அக்மல், சயீட் அப்ரிடி ஆகிய இருவரும் இணைந்து பாகிஸ்தானை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
உமர் அக்மல் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும் சயீட் அப்ரிடி ஆட்டமிழக்காது 17 ஓட்டங்களும் எடுத்தனர். 30.3 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்த பாகிஸ்தான் 134 ஓட்டங்கள் எடுத்து ஐந்து விக்கட்டுகளினால் வெற்றி பெற்றது.
கொலிங்டாங் நான்கு விக்கட்டுகளையும் பெர்னாட் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். உமர் அக்மல் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
ரமணி

Wednesday, September 23, 2009

55 ஓட்டங்களால் இலங்கை வெற்றி


தென்னாபிரிக்காவில் நடைபெறும் மினி உலகக் கிண்ண தொடரில் முதலாவது போட்டியில் ஒருநாள் போட்டியின் முதல்வனான தென்னாபிரிக்காவை டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 55 ஓட்டங்களினால் வீழ்த்திய இலங்கை முதலாவது வெற்றியைப் பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் எட்டு விக்கட்டுகளை இழந்து 319 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சனத் ஜயசூரிய, டில்ஷான் ஜோடி களமிறங்கியது. ஸ்டைனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத சனத் ஜயசூரிய எல்.பி.டபிள்யூ முறையில் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
டில்ஷானுடன் அணித் தலைவர் சங்ககார இணைந்தார். இவர்கள் இருவரும் இணைந்து தென்னாபிரிக்க வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்தனர். இவர்கள் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய தென்னாபிரிக்க வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாயின. தென்னாபிரிக்க அணிக்கு அச்சுறுத்தலைக் கொடுத்த ஜோடியை டுமினி பிரித்தார். டுமினியின் பந்தில் 54 ஓட்டங்கள் எடுத்த சங்ககார ஆட்டமிழந்தார். டில்ஷான், சங்ககார ஜோடி 158 ஓட்டங்கள் எடுத்தது.
தென்னாபிரிக்க அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த டில்ஷான் ஸ்ரெயினின் பந்தை மோர்கலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 92 பந்துகளுக்கு முகம் கொடுத்த டில்ஷான் 16 பௌண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கலாக 106 ஓட்டங்களை எடுத்தார். ஒருநாள் அரங்கில் மூன்றாவது சதத்தை எட்டினார் டில்ஷான்.
அடுத்து களமிறங்கிய மஹேல, சமரவீர ஜோடியும் தம் பங்குக்கு தென்னாபிரிக்க வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. இந்த ஜோடியை பானல் பிரித்தார். பொறுப்புடன் விளையாடிய மஹேல பானலின் பந்தை டுமினியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
61 பந்துகளுக்கு முகம் கொடுத்த மஹேல எட்டு பௌண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கலாக 77 ஓட்டங்களை எடுத்தார். இவர்கள் இருவரும் இணைந்து 116 ஓட்டங்கள் எடுத்தனர். மஹேலவுடன் இணைந்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய சமரவீர 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்தியூஸும் கண்டம்பியும் ஏமாற்றி விட்டனர். மத்தியூஸ் 15, கண்டம்பி 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஸ்டெயின், பானல் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளையும் டுமினி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
320 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா 37.4 ஓவர்களில் ஏழு விக்கட்களை இழந்து 206 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டு டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 55 ஓட்டங்களினால் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அம்லா இரண்டு ஓட்டங்களுடன் மென்டிஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தலைவர் ஸ்மித் மிகுந்த போராட்டத்தின் பின்னர் 58 ஓட்டங்களில் மென்டிஸின் பந்து வீச்சில் வெளியேறினார். தென்னாபிரிக்காவின் வெற்றிக்காக
போராடிய கலிஸ், மெண்டிஸின் பந்தை மத்தியூசிடம் பிடிகொடுத்து 41 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பௌச்சர் 26 ஓட்டங்கள் எடுத்தார். மோர்க்கல் ஆட்டமிழக்காது 29 ஓட்டங்கள் எடுத்தார்.
மென்டிஸ் மூன்று விக்கட்டுகளையும் மலிங்க, மத்தியூஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார்.
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற
உலகக் கிண்ணம், ஐ.சி.சி. டுவென்ரி 20 ஆகிய போட்டிகளில் தென்னாபிரிக்கா இதுவரை கிண்ணத்தைக் கைப்பற்றவில்லை.

Monday, September 21, 2009

மினி உலகக் கிண்ணத் திருவிழா

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சம்பியன் ட்ரபி எனப்படும் மினி உலகக் கிண்ணப் போட்டி நாளை தென் ஆபிரிக்காவில் ஆரம்பமாகிறது. வில்ஸ் சர்வதேசக் கிண்ணம் என்ற பெயரில்இப்போட்டி 1998ஆம் ஆண்டு ஆரம்பமானது. உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இப்போட்டியை நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.
இரண்டாவது போட்டி நொக் அவுட் முறையில் நடத்தப்பட்டது. இப்போது இது ஐ.சி.சி. சாம்பியன் ட்ரபி என்ற பெயரில் நடைபெறுகிறது. முன்னர் நடைபெற்ற மினி உலகக் கிண்ணப் போட்டிகளில் வலிமையான அணிகளும் வலிமை குறைந்த அணிகளும் கலந்து கொண்டன. நாளை ஆரம்பமாகும் போட்டியில் தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பெற்ற அணிகள் மட்டும் தமது பலத்தைக் காட்ட களத்தில் இறங்கி உள்ளன.
இதுவரை ஐந்து மினி உலகக் கிண்ணப் போட்டிகள் நடந்துள்ளன. ஆறாவது போட்டி பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடைபெற தீர்மானிக்கப்பட்டது. பாகிஸ்தானில் பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக நடைபெறவில்லை. இப்போட்டியை அல்லது மத்
திய கிழக்கு நாöடான்றில் நடத்துவதற்கு பாகிஸ்தான் பகீரதப் பிரயத்தனம் செய்தது. பாதுகாப்பு மிக முக்கியம் என்பதனால் தென் ஆபிரிக்காவில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. "ஏ' பிரிவில் அவுஸ்தி÷ரலியாஇ இந்தியாஇ பாகிஸ்தான்இ மேற்கு இந்தியத் தீவுகள் உள்ளன. "பீ' பிரிவில் தென் ஆபிரிக்காஇ இலங்கைஇ இங்கிலாந்துஇ நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
ஒவ்வொரு நாடும் தலா மூன்று போட்டிகளில் விளையாட வேண்டும். இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறலாம்.
அவுஸ்திரேலியாஇ தென் ஆபிரிக்காஇ இந்தியா ஆகியவற்றின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அண்மையில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இந்த மூன்று அணிகளும் வெற்றி பெற்றுள்ளன.
"ஏ' பிரிவில் மேற்கு இந்தியத்
தீவுகள் அணி மிகவும் பலவீனமாக உள்ளது. நிர்வாகத்துக்கும் வீரர்களுக்கும் இடையிலான சம்பள
விவகாரத்தினால் கைல்ஸ்இ சந்தர் போல்இ பிராவோஇ சர்வான் ஆகிய முன்னணி வீரர்கள் விளையாடவில்லை. பங்களாதேஷûடனான ஒருநாள் போட்டித் தொடரில் பரிதாபமாகத் தோல்வியடைந்த மேற்கு இந்தியத் தீவின் அணியே களமிறக்குகிறது.
அவுஸ்திரேலியா அணி வழக்கம் போல் உறுதியாக உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை இழந்தாலும் ஒருநாள் போட்டியில் தனது ஆதிக்கம் குறையவில்லை என்பதை நிரூபித்துள்ளது அவுஸ்திரேலியா. இந்திய அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான
ஷெவாக்இ வேகப்பந்து வீச்சாளரான சஹீர்கான் ஆகியோர் இல்லாதது பெரும் குறைதான். இலங்கையில் நடைபெற்ற முக்கோணத் தொடரில் சச்சினின் விளையாட்டு நம்பிக்கை கொடுத்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இறுதிப் போட்டியின் மிக நீண்ட நாட்களின் பின்னர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ஜோடி சேர்ந்த சச்சினும்இ ட்ராவிட்டும் தமது திறமை குறையவில்லை என்பதை நிரூபித்தனர். பலமான துடுப்பாட்ட வரிசையைக் கொண்டுள்ள இந்திய அணியின் பந்து வீச்சு எதிரணிக்கு அச்சுறுத்தலாக இல்லாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.
டுவன்டி 20 கிண்ணச் சம்பியனான
பாகிஸ்தான் சாம்பியன் கிண்ணத்தையும் கைப்பற்ற உறுதி பூண்டுள்ளது.
பீ பிரிவில் தென் ஆபிரிக்காவும்இ
இலங்கையும் பலமான நிலையில் உள்ளன. இங்கிலாந்தும்இ நியூசிலாந்தும் மிகப்பலவீனமாக உள்ளன.
டுவன்டி 20 கிண்ணத்தை
பாகிஸ்தானிடம் பறிகொடுத்த
இலங்கை சம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்லும் எண்ணத்தில் உள்ளது.

Sunday, September 20, 2009

சர்ச்சைகளை ஏற்படுத்தியராகுலின் தமிழக விஜயம்



ராகுல் காந்தியின் தமிழக விஜயம் தமிழகக் காங்கிரஸ் கட்சியினுள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள அதேசமயம் ஒரு சிலரிடம் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் அணுகு முறை வட மாநிலங்களில் பெரும் வெற்றியைக் கொடுத்துள்ளதுடன் முதுபெரும் அரசியல் தலைவர்களையும் குப்புற வீழ்த்தியுள்ளது. அதே அணுகு முறையை தமிழகத்திலும் பரீட்சித்துப் பார்க்க ராகுல் முயற்சி செய்தார். அந்த முயற்சி எதிர்மாறான கருத்தை விதைத்துள்ளது.
குற்றப் பின்னணி இல்லாதவர்களும் ஊழல் செய்யாதவர்களும் காங்கிரஸில் இணையலாம் என்ற ராகுல் காந்தியின் அழைப்பு தமிழக அரசியல் தலைவர்களை மறைமுகமாகச் சாடியது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைவர்கள் மீது ஏகப்பட்ட ஊழல் வழக்குகள் உள்ளன. ஒரு சில தலைவர்கள் குற்றப் பின்னணியில் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஈடுபட்டதாக விசாரணையை எதிர்நோக்கி உள்ளனர்.
குற்றப் பின்னணி இல்லாதவர்களும் ஊழல் செய்யாதவர்களும் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை ராகுல் காந்தியின் பேச்சு ஏற்படுத்தி உள்ளது. தமிழக காங்கிரஸின் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துவதில் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் நியமனம், நாடாளுமன்ற, தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் தெரிவு போன்ற முக்கியமான நேரங்களில் காங்கிரஸ் தலைவர்கள் தமக்குத் தேவையானவர்களின் பெயர்ப் பட்டியலுடன் டில்லியில் முகாமிடுவது வழமை.
தங்கபாலு, இளங்கோவன், ஜி.கே. வாசன், ப. சிதம்பரம் போன்ற தலைவர்கள் டில்லியில் முகாமிட்டு தமக்கு விருப்பமானவர்களைத் தெரிவு செய்வதற்கு முயற்சிப்பார்கள். விருப்பம் நிறைவேறாத பட்சத்தில் அன்னை சோனியாவின் முடிவுக்கு கட்டுப்படுகிறோம் என்று பின் வாங்கி விடுவார்கள். தான் பிரதமராகும் போது அப்படி ஒரு நிலை தனக்கு வரக் கூடாது என்பதில் ராகுல் உறுதியாக இருக்கிறார். வடமாநிலங்களில் அவரது எதிர்பார்ப்பு ஓரளவு பூர்த்தியாகி உள்ளது. தமிழகத்திலும் அப்படி ஒரு நிலையை உருவாக்குவதற்கு ராகுல் முயற்சி செய்கிறார். தமிழக காங்கிரஸை பலப்படுத்தி தனக்கு இசைவானவர்களை அடையாளம் காண்பதற்கு ராகுல் காந்தி மேற்கொண்ட முயற்சி ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.
தமிழக காங்கிரஸில் கவர்ச்சிகரமான இளைஞர்கள் இல்லை என்பதனால் நடிகர் விஜய் இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்ற கருத்து நிலவியது. டில்லியில் ராகுல் காந்தியை விஜய் சந்தித்துப் பேசியதால் விஜயை எதிர்பார்த்திருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தியின் பேச்சு அதிர்ச்சியை கொடுத்தது. 35 வயதுக்குட்பட்டவர்கள்தான் இளைஞர் காங்கிரஸில் சேலாம். ஏனையவர்கள் காங்கிரஸ் தொண்டர்களாக இருக்கலாம் என்ற ராகுலின் பேச்சு காங்கிரஸ் தொண்டர்களையும் விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ரஜினியைப் பற்றிய கேள்விக்கு குற்றப் பின்னணி இல்லாதவர்களும், ஊழல் செய்யாதவர்களும் சேரலாம் என்று மறைமுகமாக பதில் கூறியதால் ரஜினி ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
ராகுல் காந்தியின் தமிழக விஜயம் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ள அதேசமயம் கட்சிக்கு வெளியே பல எதிர்ப்புக்களை உருவாக்கி உள்ளது. தமிழகத்துக்கு விஜயம் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர் கருணம்நிதியை சந்திப்பது வழமையான நிகழ்ச்சிகளில் ஓர் அங்கம். ராகுல்காந்தி முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காததனால் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கோபத்தில் உள்ளனர். திராவிடக் கட்சிகளின் தயவுகளின்றி தமிழகத்தில் காங்கிரஸை கட்டி எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் இருப்பதனால் முதல்வர் கருணாநிதியைச் சந்திப்பதை ராகுல்காந்தி தவிர்த்தார்.
திராவிடக் கழகங்களின் துணை இன்றி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். திராவிடக் கட்சிகளின் ஆதரவு இன்றி தமிழகத்தில் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற யதார்த்தத்தை ராகுல்காந்தி மறந்து விட்டார்.
திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து விஜயகாந்துடன் இணைந்து தமிழகத்தில் ஆட்சி அமைக்கலாம் என்று ராகுல் காந்தி திட்டமிடுகிறார். விஜயகாந்துடன் இணைந்து ஆட்சியைப் பிடிப்பது சற்று சிரமமான காரியம். அப்படி ஒரு ஆட்சி அமைந்தாலும் அது விஜயகாந்தின் ஆட்சியாக இருக்குமே தவிர காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்க்கும் காமராஜர் ஆட்சியாக இருக்காது.
இதேவேளை, கொடா நாட்டில் ஓய்வில் இருந்து கொண்டு அரசியல் நடத்தும் ஜெயலலிதா, தமிழகத்தில் எம். ஜி.ஆர். ஆட்சி மலரும் என்று சூளுரைத்துள்ளார். எம்.ஜி.ஆரின் விசுவாசிகளை ஓரம் கட்டி தனக்குத் தேவையானவர்களுக்கு பதவி கொடுத்து அழகுபார்த்த ஜெயலலிதா திடீரென எம். ஜி. ஆரின் மீது பற்று வைத்து அறிக்கை விட்டுள்ளம்ர்.
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழம் நிறைவை தமிழகத் தலைவர்கள் கொண்டாடி வரும் வேளையில் எம். ஜி. ஆரின் பெயரை ஜெயலலிதா நீண்ட நாட்களின் பின்னர் உச்சரித்தது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்த அவர் முயற்சி செய்வதை எடுத்துக் காட்டியுள்ளது.
அண்ணாவின் கொள்கைகள் என்று திராவிட முன்னேற்றக் கழகமும், காமராஜர் ஆட்சி என்று காங்கிரஸ் கட்சியும் போட்டி போட்டு பிரசாரம் செய்யும் வேளையில் எம்.ஜி.ஆரின் ஆட்சி என்று அவர் கூறியது எம்.ஜி.ஆரின் விசுவாசிகளை தன் பக்கம் இழுப்பதற்கான முயற்சி என்பது வெளிப்படை. எம். ஜி. ஆரின் விசுவாசிகளை விஜயகாந்த் ஓரளவு கவர்ந்துள்ளார். எஞ்சி இருப்பவர்களும் விஜயகாந்தின் பக்கம் சாயாமல் இருப்பதற்காக ஜெயலலிதா பெருமுயற்சி செய்கிறார்.
அண்ணாவின் கொள்கைகளை காமராஜரின் ஆட்சி, எம்.ஜி.ஆரின் ஆட்சி என்ற தமிழகத் தலைவர்கள் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினாலும் ஊழலற்ற ஆட்சியையே தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
வர்மா
வீரகேசரிவாரமலர் 20/09/09

Tuesday, September 15, 2009

கிண்ணம் வென்றது இந்தியா



ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற கொம்பக் கிண்ண பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி 46 ஓட்டங்களினால் வெற்றி பெற்று கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை, நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையே நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியாவும், இலங்கையும் இறுதிப்போட்டியில் மோதின.
இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்திய இலங்கை அணி நம்பிக்கையுடன் இறுதிப்போட்டியை எதிர்கொண்டது. நியூசிலாந்தை தோற்கடித்து இலங்கையிடம் தோல்வியடைந்த நிலையில் டோனி தலைமையில் சாதனைபடைக்கும் நோக்குடன் களமிறங்கிய இந்திய அணி இலங்கை மண்ணில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்து 319 ஓட்டங்களை எடுத்தது. மிக நீண்ட நாட்களின் பின் சச்சினும், ட்ராவிட்டும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர். ஷேவாக், கம்பீர் ஆகிய இருவரும் இல்லாத குறையை சச்சினும் ட்ராவிட்டும் நிவர்த்தி செய்தனர்.
ட்ராவிட் நிதானமாக விளையாட சச்சினும் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தார். 10 ஓவர்களில் இந்திய அணி 50 ஓட்டங்களை எட்டியது, 24, 27, 32 ஓட்டங்கள் எடுக்கும்போது ட்ராவிட்டை ஆட்டமிழக்கச் செய்யும் வாய்ப்பை இலங்கை அணி தவறவிட்டது. 17.2 ஓவர்களில் இந்திய அணி 95 ஓட்டங்கள் எடுக்கும்போது முதலாவது விக்கெட்டை இழந்தது.
56 பந்துகளுக்கு முகம்கொடுத்து 39 ஓட்டங்கள் எடுத்த ட்ராவிட், ஜயசூரியவின் பந்தை டில்ஷானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ட்ராவிட் வெளியேறியதும் அணித்தலைவர் டோனி களம் புகுந்தார் இந்த ஜோடி களத்தில் நின்றபோது இந்திய அணியின் ஓட்ட வீதம் ஒரு ஓவருக்கு ஆறு ஓட்டங்களாக இருந்தது. ஒவ்வொரு பந்தையும் ஒன்று, இரண்டு ஒட்டங்களாகவும் வசதி ஏற்பட்டபோது பவுண்டறிக்கு அடித்தும் இருவரும் ஒட்டங்களைக் குவித்தனர்.
இவர்கள் இருவரும் 50 பந்துகளில் 50 ஓட்டங்களையும் 105 பந்துகளில் 100 ஓட்டங்களையும் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
சச்சின், டோனி இணைந்து 110 ஓட் டங்கள் எடுத்தனர். இந்திய அணியின் இரண்டாவது விக்கட் 36.3 ஓவர்களில் 205 ஓட்டங்கள் எடுத்த போது வீழ்ந்தது. 62 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்த டோனி மலிங்கவின் பந்தை கண்டம்பே யிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய டென்டுல்கர் ஒரு நாள் போட்டியில் 44 ஆவது சதமடித்தார். 133 பந்துகளில் 138 ஓட்டங்கள் எடுத்த டென்டுல்கர் மென்டிஸின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பதான் ஓட்டமெதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதிரடியில் கலக்கிய யுவராஜ் சிங் ஆட்டமிழக்காது 41 பந்துகளில் 56 ஓட் டங்கள் எடுத்தார். டோனி 52 ஆவது சதத் தையும் யுவராஜ் 41 ஆவது சதத்தையும் பூர்த்தி செய்தனர்.
துஷார இரண்டு விக்கட்டுக்களையும் மலிங்க, மென்டிஸ், ஜயசூரிய ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். 320 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை வீரர்கள் இந்திய அணியை மிரட்டின. இலங்கை வீரர்களின் அதிரடி இந்தியாவின் வெற்றியை தடுத்து விடுமா என்று இந்திய ரசிகர்கள் தடுமாறினர்.
டில்சானின் அதிரடி, இந்திய பந்து வீச்சாளர்களை நிலை குலைய வைத்தது. 39 பந்துகளில் இலங்கை அணி 50 ஓட்டங்கள் குவித்தது. டில்சானின் அதிரடியில் கலங்கிய டோனி எட்டாவது ஓவரை வீச ஹர்பஜனை அழைத்தார். டில்ஷானை வெளிறேற்றி தலைவனின் ஆசையை பூர்த்தி செய்தார் ஹர்பஜன். 29 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்த டில்சான் ஹர்பஜனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
29 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்து ஜயசூரியா ஆட்டமிழந்தார். மஹேல ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். சங்கக்கார, துஷார, மத்தியூஸ் ஆகி யோர் இந்திய வீரர்களை திக்குமுக்காட வைத்தனர். ஹிட் விக்கெட் முறையில் 33 ஓட்டங்கள் எடுத்த சங்கக்கார பரிதாபமாக ஆட்டமிழந்தார்.
இந்தியாவை மிரட்டிய கண்டம்பேயை ஹர்பஜன் ஆட்டமிழக்கச் செய்ததும் இலங்கையர் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
கண்டம்பே ஆட்டமிழக்காது 66 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்கள் எடுத்தது. ஹர்பஜன் ஐந்து விக்கெட்டுக்களையும் இஷாந்த் சர்மா, ஆர்.பி. சிங், இர்பான் பத்தான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாகவும் ஆட்டத் தொடர் நாயகனாகவும் டெண்டுல்கர் தெரிவு செய்யப்பட்டார்.

Monday, September 14, 2009

ராகுல்காந்தியின் தமிழக விஜயம்ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா?






காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தியின் தமிழக விஜயத்தினால் காங்கிரஸைச் சேர்ந்த இளைஞர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் ராகுல் காந்தியின் தமிழக விஜயத்தை எச்சரிக்கையுடன் அவதானித்தனர். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை நிறுவுவோம் என்று தேர்தல் காலங்களில் வாக்குறுதி அளிக்கும் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள், தமக்கென ஒரு கோஷ்டி அமைத்துச் செயற்படுவதனால் தமிழகத்தில் காங்கிரஸின் வளர்ச்சி குன்றியுள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பதால்தான் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தேர்தலில் வெற்றி பெறுவதை ராகுல்காந்தி தமிழக இளைஞர்களுக்கு விளக்கியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை இளைஞர்களின் கையில் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு வட இந்திய மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸை கட்டி எழுப்பியதால் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இளைஞர்களின் எழுச்சியில் வட இந்தியாவில் உள்ள மூத்த அரசியல் தலைவர்கள் படுதோல்வி அடைந்தனர். தமிழகக் காங்கிரஸையும் இளைஞர்களின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற ராகுலின் விருப்பத்துக்கு உரிய பலன் கிடைத்துள்ளது. ராகுல் வீதி ஓரத்தில் திரண்டிருந்த மக்களுடன் கை கொடுத்து சிரித்துப் பேசியதும் சிறுவர்களுடன் அளவளாவியதும் இளைஞர்களும் ஆலோசனை செய்ததும் காங்கிரஸ் கட்சிக்கு புதுத் தெம்பைக் கொடுத்துள்ளது.
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்ற பழமொழியை நடைமுறைப்படுத்த விரும்பும் ராகுல் காந்திக்கு தமிழகக் காங்கிரஸ் இளைஞர்கள் தமது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி மோதலுக்கு முடிவு கட்டுவதே ராகுல் காந்தியின் முதல் பணியாக இருக்கும். கோஷ்டி மோதல் பற்றி இளைஞர்களுடன் வெளிப்படையாகப் பேசிய ராகுல்காந்தி, தமிழகக் காங்கிரஸ் தலைவர்களுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உட்கட்சித் தேர்தல் மூலம் மாவட்டம் தோறும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்ய மாவட்டம் தோறும் இளைஞர் குழுவை அமைக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். ராகுல்காந்தியின் இந்தக் கூற்று தமிழகக் காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக யார் தெரிவு செய்யப்பட்டாலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டித் தலைவர்களை அனுசரித்து போக வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையேல் அவரது பதவி பறிப்புக்கு யாரோ ஒரு தலைவர் காரணமாகி விடுவார். யாருக்கும் கட்டுப்படாத சுயமாக சிந்தித்து, கட்சி நலனில் அக்கறை கொண்டு முடிவெடுக்கக் கூடிய இளைஞர் தலைவர் ஒருவரையே ராகுல்காந்தி விரும்புகிறார்.
தமிழக இளைஞர் கழகத் தலைவராக வேண்டும் என்ற ஆசை தமிழகக் காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுகளிடம் உள்ளது. தமிழகக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரின் மகன் இளைஞர் காங்கிரஸ் தலைவராக முடியாத சூழ்நிலை உள்ளது. அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவரானால் ப.சிதம்பரத்தை எதிர்க்கும் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் அதனை விரும்ப மாட்டார்கள். ஆகையினால் தான் கோஷ்டிகளுக்கு அப்பால் உள்ள ஒருவரை இளைஞர் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார்.
தமிழகக் காங்கிரஸ் கட்சி பல கோஷ்டியாகப் பிளவுபட்டிருப்பதையே திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் விரும்புகின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்ற ராகுல் காந்தியின் பேச்சை திராவிட முன்னேற்றக் கழகம் இரசிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பத்துக்கு ராகுல்காந்தியின் பேச்சு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
தமிழகக் காங்கிரஸ் பலமானால் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் கூட்டணி சேர வேண்டிய அவசியம் இல்லை என்பதை மறைமுகமாக விளக்கி உள்ளார் ராகுல் காந்தி. மத்திய அரசில் வேண்டிய அமைச்சுகளைத் தேர்ந்தெடுக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பெற வேண்டும் என்று பலமுறை இரந்து கேட்டும் இவ்விடயம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் கவனிக்கப்படாமல் இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டால் அமைச்சர் பதவிகளுக்கு இன்னொரு கட்சியிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் இருக்காது என்பதை ராகுல் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
ராகுல் காந்தியை டில்லியில் சந்தித்து தனது அரசியல் பிரவேசம் பற்றிய செய்தியை கசிய விட்ட நடிகர் விஜய் வழமை போன்று அமைதியாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய் சேர்வதை தமிழக அரசியல் வட்டாரமும், தமிழ் சினிமாவும் விரும்பவில்லை. விஜயின் அரசியல் பிரவேசத்தை தமிழகக் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களில் சிலர் விரும்பவில்லை. விஜய்க்குப் பின்னால் உள்ள ரசிகர்கள் காங்கிரஸில் நுழைந்தால் தமது செல்வாக்கு குறைந்து விடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள்.
விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த மூன்று படங்களும் தோல்வி அடைந்ததால் தீபாவளிக்கு வெளிவரும் வேட்டைக்காரன் படத்தையே அவர் பெரிதும் நம்பி இருக்கிறார். வேட்டைக்காரன் படத்தின் விநியோக உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. சன் தொலைக்காட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றாகக் கைகோர்த்துள்ளன. வேட்டைக்காரன் படத்தின் விநியோகத்தில் குளறுபடி ஏற்பட்டால் விஜயின் செல்வாக்குப் பலத்த அடி விழும் என்பது வெளிப்படை. விஜயின் படத்தைத் தயாரிக்க ஆவலாக இருந்த ஒஸ்கார் நிறுவனம் அதனை கைவிட முடிவு செய்துள்ளது. விஜய் அரசியலில் குதிக்கப் போகிறார் என்ற செய்தியில் விஜய் சந்தித்த பெரிய இழப்பு இது.
விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி பல செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது. விஜய் வழமைபோல் மௌனமாக இருக்கிறார். நான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறினால் இவரைப் பற்றிய அரசியல் வதந்திகள் முற்றுப் பெற்று விடும். இதுபற்றி விஜய் வாய்திறக்காமல் இருப்பதனால் வதந்திகள் உண்மையாகி விடும் நிலை உள்ளது. அரசியலில் இறங்கும் முடிவை விஜய் ஒத்தி வைத்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, விஜயசாந்தி ஆகியோரைக் காண்பதற்கு முன்பு அடிக்கும் தொண்டர்களைக் கண்டு திகைத்த காங்கிரஸ் கட்சி, ராகுலைக் காண திரண்ட மக்கள் வெள்ளத்தைப் பார்த்து வியந்து போயுள்ளது. 15 இலட்சம் இளைஞர்களை காங்கிரஸில் சேர்க்க வேண்டும் என்பது ராகுல் காந்தியின் திட்டம். ராகுல் காந்தியைக் காண்பதற்கு கூடிய பெரும் கூட்டத்தைப் பார்த்தார். அவர் எதிர்பார்த்த 15 இலட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்வார்கள் போல் தோன்றுகிறது.
இது ராகுல் காந்தியின் கொள்கையினால் கவரப்பட்டு சேர்ந்த கூட்டமா? அவரைக் காண்பதற்காகச் சேர்ந்த கூட்டமா? என்பது தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது புரிந்து விடும்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 13/09/09

Wednesday, September 9, 2009

முதல் போட்டியில் இலங்கை வெற்றி


மூன்று நாடுகள் பங்குபற்றும் முதலாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராகக் களமிறங்கிய இலங்கை அணி 97 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்தியாஇ நியூசிலாந்துஇ இலங்கை ஆகியவற்றுக்கிடையே ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறும் முக்கோண தொடரின் முதலாவது போட்டியில் சமரவீர, மத்தியூஸ் ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தினாலும் மலிங்கவின் பந்து வீச்சினாலும் இலங்கை அணி இலகுவான வெற்றியைப் பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை ரசிகர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான டில்ஷான் ஒரே ஒரு பவுண்டரியை அடித்து ரப்பின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பொண்டின் பந்தை தவ்ல‌ரிடம் பிடிகொடுத்த மஹேல ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். ஏழு ஓட்டங்கள் எடுத்த ஜயசூரிய பொண்டின் பந்தை பட்லரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சங்கக்கார 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பட்லரின் பந்தை ஒராமிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 15 ஓட்டங்கள் எடுத்த கண்டம்பே வெட்டோரியின் பந்தை தவ்லரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 69 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தவித்தது.
அதிரடி ஆட்ட வீரர்கள் ஆட்டமிழந்ததும் நியூசிலாந்தின் கை ஓங்கியது. ஆறாவது விக்கெட்டுக் காக ஜோடி சேர்ந்த சமரவீர, மத்தியூஸ் ஆகிய இருவரும் நியூசிலாந்தின் கையில் இருந்த வெற்றியை இலங்கையின் பக்கம் நகர்த்தினார்கள்.
இவர்கள் இருவரும் இணைந்து அடித்து ஆடியதால் நியூசிலாந்து வீரர்கள் நிலை தடுமாறினார்கள். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சும் களத்தடுப்பும் சிறப்பாக இருந்ததனால் மூன்றாவது ஓவரில் இருந்து 26 ஆவது ஓவர்வரை இலங்கை வீரர்கள் பௌண்டரி அடிக்கவில்லை.
இலங்கை அணியின் இக்கட்டான நிலையை உணர்ந்த சமரவீரவும் மத்தியூஸ{ம் துடுப்பெடுத்தாடினர். இவர்கள் இருவரும் இணைந்து 127 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணிக்கு தெம்பையூட்டினர். 51 ஓட்டங்கள் எடுத்த மத்தியூஸ் பொண்டின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டியில் முதல் சதத்தை அடித்த சமரவீர 104 ஓட்டங்களில் பட்லரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பொண்ட் மூன்று விக்கெட்டுகளையும் பட்லர் இரண்டு விக்கெட்டுகளையும் டப்பி, வெட்டோரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலங்கை அணி 216 ஓட்டங்கள் எடுத்ததால் 217 ஓட்டம் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 36.1 ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்கள மட்டும் எடுத்தது. எலியொட் அதிகபட்சமாக 41 ஓட்டங்கள் அடித்தார். பட்லர் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
ஏனைய வீரர்கள் இலங்கை வீரர்களின் பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாது குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
மலிங்க நான்கு விக்கட்டுகளையும் விக்கெட்டுகளையும் ஜயசூரிய, குலசேகர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் துஷார ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக சமரவீர தேர்வு செய்யப்பட்டார். இலங்கை அணி ஐந்து புள்ளிகளைப் பெற்றது.
நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

Sunday, September 6, 2009

நடிகர்களுக்காக காத்திருக்கும்தமிழக காங்கிரஸ் கட்சிகள்


காங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய் சேரப்போகிறார் என்ற தகவல் கடந்த வாரம் தமிழக அரசியலை பரபரப்பாக்கியது. சிதம்பரம், இ.கே.வாசன், இளங்கோவன், தங்கபாலு ஆகிய தமிழக காங்கிரஸ் தலைவர்களின் பின்னால் குழுவாக பலர் நின்று காங்கிரஸ் கட்சியை வழி நடத்துகின்றனர். இளைஞர்களைக் கவரக்கூடிய தலைவர்கள் காங்கிரஸில் இல்லாதது பெருங்குறையாக உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக இளைஞர்கள் துணை முதல்வர் ஸ்டாலினின் பின்னால் உறுதியாக உள்ளனர். இளைஞர் அணித் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து கட்டுக்கோப்பான இளைஞர் படையை அவர் உருவாக்கினார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய வெற்றிக்கு இளைஞர் அணியும் காரணம்
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் தமிழக இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றுக்கு விஜயகாந்த் சவாலாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பில் இளைஞர்கள் அவரின் பின்னால் அணி திரண்டுள்ளனர். விஜயகாந்தின் ரசிகர் மன்ற இளைஞர்களும் அவருக்கு பக்கபலமாக உள்ளனர். இந்த இளைஞர் படையால் விஜயகாந்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்க முடியவில்லை.
இளைஞர்களை முன்னிறுத்தி வேலைத் திட்டங்களை உருவாக்கி வரும் ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரளிக்க விரும்புகிறார். அவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சகல திறமையும் விஜய்க்கு இருப்பதால் விஜய் பற்றி அவருக்கு கூறப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் இருந்தாலும் இரண்டு கட்சிகளுக்குமிடையே அவ்வப்போது சிறுசிறு உரசல்கள் உண்டாவதும் அவை தீர்க்கப்படுவதும் வெளியே தெரியாத இரகசியம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு இல்லாமல் தேர்தலில் வெற்றி பெறமுடியாது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் நம்புகின்றார்கள்.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறவைத் துண்டித்து அதன் வளர்ச்சியைத் தடுக்கவேண்டும் என்று சில தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள்.
அவர்களின் ஆலோசனையின் பிரகாரமே ராகுல் காந்தி விஜய் சந்திப்பு நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவைத் துண்டித்து அக்கட்சியைத் தோற்கடிக்கவேண்டும் என்று எண்ணுபவர்களில் முதன்மையானவர் இளங்கோவன். ராகுல் விஜய் சந்திப்பின் பின்னணியில் இளங்கோவன் இருப்பதாகக் கருதப்படுகிறது.
விஜயகாந்துடன் கூட்டணி சேரவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர்

விரும்புகின்றனர். யாருடனும் கூட்டணி சேருவதில்லை என்று உறுதியாகக் கூறிவந்த விஜயகாந்த் அன்று மனமிரங்கி அறிக்கைவிட்டார். கூட்டணி பற்றி யாராவது பேசினால் பேசுவதற்கு தயார் என்று விஜயகாந்த் அறிவித்தார். விஜயகாந்தின் அறிக்கை வெளியானதும் காங்கிரஸுடன் விஜயகாந்த் சேர்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், விஜயகாந்தை முந்திக்கொண்டு விஜய் ராகுல் சந்திப்பு நடந்து முடிந்து விட்டது.
விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு மக்கள் நற்பணி மன்றத்தின் மூலம் இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் உதவி செய்கிறார் விஜய். விஜயின் ரசிகர் மன்றத்தின் ஆதரவு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க உதவும் என்று எண்ணத்தில் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அரசியல் கட்சி ஆரம்பித்த நடிகர்களில் எம்.ஜி.ஆரை மட்டும்தான் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஏனையோர் தேர்தலில் படுதோல்வி அடைந்தனர். ஆகையினால் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு பலமான கட்சியின் பின்னணி வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார்.
விஜய் ரசிகர்களும் காங்கிரஸ் கட்சியினரும் மகிழ்ந்திருந்த வேளையில் கனடாவில் இருந்து விஜய்க்கு எதிரான குரல் முதலில் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் விஜய் சேர்ந்தால் அவருடைய படங்களைப் பகிஷ்கரிப்போம் என்று அக்குரல் உலகெங்கும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது. இந்த எதிர்ப்புக்குரலை முறியடிப்பது எப்படி என்று விஜய் தரப்பில் ஆராயப்பட்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் துணை இன்றி தமிழகத்தில் வலுப்பெறவேண்டும் என்ற ஆசை காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி இணைவற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. இன்றைய நிலையில் திராவிட முன்னேற்றக்கழகத்தை கைவிட்டால் அது காங்கிரஸுக்கு பெரிய தாக்கமாக அமையும்.
அதற்கு மாற்றீடாக விஜயகாந்தையும், விஜயையும் காங்கிரஸுக்குள் இழுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சியுடன் விஜய் இணைந்தால் அவருக்கு எதிராக வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் குரல் ஒலிக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் மீது அதிக அக்கறை கொண்டிருக்கும் விஜயகாந்த் தனது அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் கட்சியில் இணைய மாட்டார் என்ற கருத்து உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் உள்ளது.
நடிகர் பிரபுவுக்கும் காங்கிரஸ் தரப்பில் இருந்து தூதுவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு பாடுபட்டவர்களில் சிவாஜிகணேசனும் ஒருவர். பெருந்தலைவர் காமராஜரின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த சிவாஜி கணேசனை காங்கிரஸ் கட்சி தூக்கி எறிந்ததால் அரசியலில் இருந்து ஒதுங்கினார் சிவாஜிகணேசன். அவருடைய பெருமைகளைக் கூறி மகன் பிரபுவுக்கு தூது விட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
ரஜினியின் ரசிகர்கள் அரசியல் அனாதைகள் என்று ப. சிதம்பரத்தின் மகன் கூறியதால் தமது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் ரஜினிக்கு நெருக்குதல் கொடுக்கின்றனர். ரஜினி அரசியலில் இறங்கினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியில் முட்டுக்கட்டை ஏற்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். அதனால் தான் ரஜினி ரசிகர்களை தூண்டிவிட்டுள்ளனர்.
வெள்ளையரை எதிர்த்து போராடிய காங்கிரஸ் கட்சி, சினிமாப் புள்ளிகளை எதிர்பார்த்து கதவைத் திறந்து வைத்துள்ளது.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 06/09/09

Friday, September 4, 2009

திரைக்குவராதசங்கதி 15


மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்என்ற படத்தின் படப்பிடிப்பு ஜெய்பூரில்உள்ள மாளிகை ஒன்றில் நடந்தது. அப்படத்தை மக்கள் திலகம் இயக்கினார்.அன்று படமாக்க வேண்டிய காட்சி பற்றிகதாநாயகியான லதாவுக்கு விளக்கினார்மக்கள் திலகம்.மக்கள் திலகத்தின் முன்னால் சுமார்இரண்டு அடி தூரத்தில் கதிரையில் அமர்ந்வாறு அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார் லதா. மக்கள் திலகம்காட்சியைப் பற்றி விபரித்துக் கொண்டிருந்த போது படப்பிடிப்புக் குழுவினரும்அதனை அவதானமாக செவிமடுத்தனர்.திடீரென ஏதோ நினைத்தவராய் ""லதாஎன் அருகே வா'' என மக்கள் திலகம்அழைத்தார்.
மக்கள் திலகம் ஏன் அழைக்கிறார்என்று தெரியாத லதா எழுந்து அவரின்அருகே சென்றார். லதா மக்கள் திலகத்துக்குஅருகில் சென்ற அதேவேளை "டமால்' என்ற சத்தம்.அந்த அறையின் அமைதியைக்குலைத்தது. லதா இருந்த இடத்தின்மேலே தொங்கிக் கொண்டிருந்த அலங்கார விளக்கு அறுந்து விழுந்தது. லதாஅந்த இடத்தில் இருந்திருந்தால் அன்றேஅவரின் கதை முடிந்திருக்கும்.மக்கள் திலகம், லதா, படப்பிடிப்புக்குழுவில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அதிர்ச்சியில் இருந்துஅவர்கள் விடுபட சில நிமிடங்கள் சென்றது.
மக்கள் திலகத்தின் உள்ளுணர்வு பலவேளைகளில் அவருக்கு கைகொடுத்துள்ளது.அன்றும் அப்படித்தான். உள்ளுணர்வு கூறியதால்தான் லதாவை அழைத்தார். தமிழகத்தின் முன்னாள் உளவுத்துறைஅதிகாரியும் மக்கள் திலகத்துடன்நெருங்கிப் பழகியவருமான எம். மோகன்தாஸ், எம்.ஜி.ஆர். நிழலும், நிஜமும்என்ற புத்தகத்தில் மக்கள் திலகத்தின்உள்ளுணர்வு பற்றி எழுதியுள்ளார். அவர்திடீர் என முடிவு எடுப்பார். அந்த முடிவுஎப்பவும் சரியானதாக இருக்கும் என்றுஎம். மோகன்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.லண்டன், பிரான்ஸ், ரஷ்யா, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் மக்கள் திலகம்நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரையிடப்பட்டது. உலகம் சுற்றும் வாலிபன்திரையிடப்பட்ட நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மக்கள் திலகம், ப.நீலகண்டன், சித்ரா லட்சுமணன், லதாஆகியோர் கலை நிகழ்ச்சியைப் பார்க்கஅங்கு சென்றனர்.வெளிநாடுகளில் இந்திய உணவு வகைகள்கிடைப்பது அதிசயம். ரஷ்யாவில்உள்ள சாப்பாட்டை லதாவால் சாப்பிடமுடியவில்லை. எனக்கு நல்ல சாப்பாடுதாருங்கள் அல்லது என்னை இந்தியாவுக்குஅனுப்பி விடுங்கள் என்று மக்கள்திலகத்திடம் கூறினார் லதாஉன்னை விட எனக்கு ரொம்ப கஸ்டாஇருக்கு நீ வெளியே சொல்லி விட்டாய்நான் யாரிடம் சொல்வது என லதாவுக்குஆறுதல் கூறினார். லண்டனுக்குச் சென்றபோது போதும் போதும் என லதாசொல்லும்படி நல்ல இந்திய உணவுகளை வாங்கிக் கொடுத்தார் மக்கள் தில
கம்.
சுவிட்ஸர்லாந்தில் உள்ள பனிமலையைப் பார்க்கச் சென்றபோது லதா புடவையும் செருப்பும் அணிந்துகொண்டு சென்றார். சிறிது தூரம் சென்ற பின்ன
ர்தான் சப்பாத்து இல்லாமல் பனி மலையை சுற்றிப் பார்க்க முடியாதுஎன்று லதா உணர்ந்தார். குளிர்தாங்க முடியாத லதா நடுங்கினார். மக்கள் திலகம் தான் போட்டிருந்தகோட்டைக் கழற்றிக்கொடுத்தார். அப்படியும் குளிர்லதாவை வாட்டியது. மரப் பலகைஒன்றை எடுத்துப் போட்டு அதில்நடக்கும்படி கூறினார் மக்கள் திலகம்.சிறிது தூரம் நடந்த லதா என்னால் முடியாது என்று கூறிவிட்டார்.இனி என்ன செய்வது என அனைவரும் திகைத்து நின்ற போது லதாவின்அருகில் சென்ற மக்கள் திலகம் அவரை தனது இரு கைகளாலும் தூக்கினார். பனிக் குளிரில் சுமார் அரைமணி நேரம் லதாவைத் தூக்கிச்சென்று காரில் இருத்தினார்.
தமிழக முதல்வரான பின்னர்சுகயீனம் காரணமாக எம்.ஜி.ஆர்.அமெரிக்காவில் சிகிச்சைபெற்றார். அதேவேளை லதாவின்தாயார் சுகயீனம் காரணமாக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்காவில்இருந்து திரும்பிய முதல்வர் எம்.ஜி.ஆர். வைத்தியசாலைக்குச் சென்று லதாவின்தாயாரின் உடல் நிலை பற்றி விசாரித்தார்.அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததைஎங்கிட்ட ஏன் சொல்லவில்லை என்றுகோபத்துடன் கேட்டார்.நான் யாருக்கும் சொல்லவில்லை எனலதா கூறிய போது "யாருக்கும் சொல்லாவிட்டால் என்ன எனக்குக் சொல்ல வேண்டாமா?' எனப் பாசத்துடன் கேட்டார்.