Showing posts with label பாண். Show all posts
Showing posts with label பாண். Show all posts

Friday, May 22, 2020

வியட்டநாமில் வலம் வரும் பிரமாண்டமான பாண்


  
கொரோனா தாக்கம் வியட்நாமில் அதிகம் இல்லை என்பதால் அங்கு பொதுமக்கள் வாழ்க்கை இயல்பிலிருந்து மாறவில்லை. அன் ஷியாங் மாகாணத்தின் விசேஷமான மிக நீளமான பாண் விற்பனையாகிறது.   சமூக இடைவெளி முக கவசம் என்ற எந்த தொந்தரவும் அங்கு கிடையாது.
 தென் கிழக்காசிய நாடான வியாட்நாமில்  ஒவ்வொரு பகுதியிலும் ஏதாவது ஒரு உணவு பொருள் பிரபலமாக உள்ளது. இங்குள்ள அன் ஷியாங் என்ற மாகாணத்தில் பிரமாண்டமான  பாண்  மிகவும் பிரபலம்.இந்த மாகாணத்தின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே கடை, சைக்கிள் மற்றும் சாலையோரங்களில் இந்த பாண்  வகைகள் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுகின்றன.
 ஒரு மீற்றர்  நீளமும்  மூன்று  கிலோ எடையும் உள்ளன. இதை முழுவதுமாக வைக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் பை கிடைக்காததால் பாணின்  அடிப்பகுதியை மட்டும் 'கவர்' செய்யும் விதமாக பிளாஸ்டிக் பேக் தயார் செய்து அவற்றில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
வெண்ணெய், நல்லெண்ணெய், மைதா ஆகிவற்றில் இந்த பாண் தயாரிக்கப்படுகிறது.  நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதாக சாப்பிட்டு விட முடியாது. கவனமாக சாப்பிடாவிட்டால் பல் உடைந்து விடும்; அவ்வளவு கடினமாக இருக்கும்.

'உலகின் மிக கடினமான உணவுப் பொருள்' என்ற பெருமையும் இதற்கு உண்டு. ஆனால் அன் ஷியாங் மாகாண மக்கள் மட்டும் அல்வா சாப்பிடுவது போல் லாவகமாக சாப்பிடுகின்றனர். வியாட்நாமின் அன் ஷியாங் மாகாணம் சுற்றுலா முக்கியத்துவம் இல்லாத பகுதி. அதனால்  பானின் பெருமை நீண்ட காலமாக வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தது.
  சமூக வலைதளங்கள் மூலமாக இந்த  பாண் பற்றிய விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.