Thursday, July 19, 2018

அரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்


தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கு பாரதீய ஜனதாக் கட்சி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் ஏறிய பாரதீய ஜனதாக் கட்சி  தமிழகத்தில் கால் பதித்தது.

அறுதிப் பெரும்பான்மை இல்லாது ஈடாடிக்கொண்டிருக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை பாரதீய ஜனதா தாங்கிப் பிடிக்கிறது. ஆட்சியைத் தக்க வைப்பதற்காக ஜெயலலிதா நிராகரித்த திட்டங்களுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு ஒப்புதல் அளித்தது. பாரதீய ஜனதாவின் மீதான மக்களின் கோபம் தம் மீது மீதுபடிவதை உணர்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மத்திய அரசுக்கெதிராகக் காய் நகர்த்தத் தொடங்கியது.  அணைக் கட்டு மசோதா,  பல்கலைக் கழக மானியக் குழு  ஆகியவற்றுக்கு  எடப்பாடி பழனிச்சாமி தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் பாதை மாறுவதை உணர்ந்த பாரதீய ஜனதா வருமான வரி என்னும் ஆயுதத்தைக் கையில் எடுத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டத் தொடங்கியுள்ளது. மத்திய அரசுக்கு அடிபணியாத மாநிலத் தலைவர்களை அடக்கும் ஆயுதமாக வருமான வரிச் சோதனை, ஊழல்,சிபிஐ விசாரணை போன்றவற்றை மத்திய அரசு கையில் எடுத்து மிரட்டுவது அன்று முதல் இன்றுவரை நடைபெறும் சர்வ சாதாரண நிகழ்ச்சியாகும்.

நரேந்திர மோடியுடன் இணைந்து பாரதீய ஜனதாவை இயக்கும்  அமித் ஷா தமிழகத்துக்கு விஜயம் செய்தபோது இந்தியாவில் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது என்றார். அந்தச் செய்தியின் பரபரப்பு அடங்குவதற்கிடையில்  எடப்பாடி பழனிச்சாமி,ஓ.பன்னீர்ச்செல்வம் ஆகியவர்களுடன் நெருக்கமான இரண்டு நிறுவனங்களின் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தி கணக்கில் இல்லாத பலகோடி ரூபா பணம், கிலோக் கணக்கில் தங்கம், பல கோடி ரூபா மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் என்பனவற்றை கைப்பற்றியுள்ளனர்.   

       
தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்ரி நிறுவனத்துடன் தொடர்புடைய  அலுவலகங்கள், வீடுகள் உட்பட 176 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை சோதனை செய்தனர். தமிழகம் ,கர்நாடகம் ஆகிய  மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில் 17 கோடி ரூபா பணம்,10 கிலோ தங்கம், ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன. கிறிஸ்ரி நிறுவன மில் காசாளர் கார்த்திகேயன், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார். காயமடைந்த் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

எடப்பாடியின் கையில் இருக்கும் நெடுஞ்சாலை ஒப்பந்தகாரர் செய்யாத்துரையின் மீது வருமான வரித்துறையின் பார்வை விழுந்துள்ளது. ஓ.பன்னீர்ச்செல்வத்தின் பிடியில் நெடுஞ்சாலை இருந்தபோது அவருடன் நெருக்கமாக இருந்த செய்யாத்துரை, நெடுஞ்சாலை இடம்மாறி எடப்பாடியிடம் போனபோது  அவரும் இடம் மாறினார்.

மணல்குவாரி என்றால் சேகர் ரெட்டி போல நெடுஞ்சாலை என்றால் செய்யாத்துரை என்பது தமிழக அரசின் எழுதப்படாத சட்டம். ஆட்டு வியாபாரம் செய்து வந்த செய்யாத்துரையும் அவரது மகன்களும் அன்வர் பாய் என்பவருடன் ஏற்பட்ட தொடர்பினால் தமிழக அரசின் சாலை ஒப்பந்தங்களைப் பொறுப்பேற்றனர்.  செய்யாத்துரை குழுமம் எஸ்பிகே குழுமமாகியதும் தமிழக நெடுஞ்சாலைகள் அனைத்தையும் கைப்பற்றியது. தமிழ்கட்தின் நெடுஞ்சாலைப் பொறியியலாளர்களும் எஸ்பிகே நிறுவனத்தைத் தட்டிக் கேட்க முடியாதநிலை ஏற்பட்டது.

தமிழக முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் மிக நெருங்கிய புள்ளியின் மீது மத்திய அரசின் பார்வை விழுந்துள்ளது.  செய்யாத்துரையுடன் தொடர்புடைய நிறுவனங்கள்,அலுவலகங்கள் ,வீடுகள் என்பனவற்றின் மீது  வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை  இந்தியாவையே திரும்பிப் பார்க்க  வைத்தது. புதையல் போல அள்ள அள்ள பணமும் தங்கக் கட்டிகளும் கிடைத்தன.  சுவர்களிலும் கார்களிலும் பதுக்கி வைக்கப்பட்ட பனம், தங்கக் கட்டிகள் என்பன மீட்கப்பட்டன.வருமான வரித்துறையின் சோதனையின் முடிவில் 610  கோடி ரூபா பணாம்,310  கிலோ தங்கம். 300க்கும் அதிகமான சொத்துப் பத்திரங்கள். 250 பென் ட்ரைவ்கள், 56 ஹாட்டிஸ்கள், பினாமிகளின் பெயரிலான் ஆவணங்கள் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிக் கணக்கு முறையாகக் காட்டப்படாவிட்டால், கனக்கில் இல்லாத பணம்,தங்கம்,சொத்து என்பனவற்றைப் பதுக்கி வைத்தால் சட்டம் பாயும் என்பதைத் தெரிந்துகொண்டும் இவற்றை ஒருவர் பதுக்கி வைக்கிறார் என்றால் அவருக்குப் பலமான பின்னணி இருப்பது ஒன்ரும் ரகசியமல்ல.

நெடுஞ்சாலை ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதா ஊழல் ஒழிப்புக் குழுவுக்கு திராவிட முன்னேற்றாக் கழகம்  கொடுத்த புகாரைத் தொடர்ந்து செய்யாத்துரையின்  மீது வருமான வரிஅதிகாரிகளின் பார்வை திரும்பியது. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கு பண உதவி செய்பவர்களின் மீது மத்ஹ்டிய அரசின் பார்வை விழுந்தது. அன்புநாதன்,சேகர் ரெட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர்,அப்போதைய  தலமைச் செயலர் ராம மோகன ராவ், சசிகலாவின் உறவினர்களின்  வீடுகள் அலுவலகங்கள் மீது மத்திய அரசின் ஆயுதம் பாய்ந்தது. அப்போது கோடிகோடியாகப் பணம், கிலோக் கனக்கில் தங்கம், ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.  தவிர கொண்டெய்னர்களில் கைப்பற்றப் பட்ட கோடிக்கனக்கான பணம் என்பனவற்றுக்கு என்ன நடந்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது. இதுவும் அதுபோல் கடந்து போகுமா என்ற கேள்விக்கு எதிர்காலம் பதில் சொல்லும். 

Monday, July 16, 2018

சம்பியனானது பிரான்ஸ் ரசிகர்கள் குதூகலம்


ரஷ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதிப்  போட்டியில் குரோஷியாவை எதிர்த்துவிளையாடிய பிரான்ஸ் 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சம்பியனாகியது.

21 ஆவது ஃபிபா உலகக்கிண்ண உதைப்ந்தாட்டத்தொடர் ரஷ்யாவில் ஒருமாதமாக நடைபெற்றது. 32 நாடுகள் போட்டியிட்ட  இந்த உதைபந்தாட்டத் திருவிழாவின் இறுதிப் போட்டி மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக் மைதானத்தில் 80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
ரஷ்ய  ஜனாதிபதி புடின்,  பிரான்ஸ் ஜனாதிபதி  குரோஷிய ஜனாதிபதி ஆகியோர் இறுதிப் போட்டியை நேரடியாகக் கண்டு ரசித்தனர். உலகக்கிண்ண சம்பியனாகும் என எதிர்பார்க்கப்பட்ட பிறேஸில்,ஜேர்மனி,ஆர்ஜென்ரீனா ஆகியவை ரசிகர்களை ஏமாற்றிவிட்டன. நெய்மர்,மெஸ்ஸி,ரொனால்டோ ஆகியோரின் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு எல்லாம் ஏமாற்றமாகின.

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு கிடைத்த 'கார்னர்' வாய்ப்பில் கப்டன் லுகா மாட்ரிச் துாக்கி அடித்த பந்தை பிரான்ஸின் பவார்டு தலையால் முட்டி தடுத்தார். இந்நிலையில் 18வது நிமிடத்தில் கிரீஸ்மேனை குரோஷியாவின் மார்சிலோ புரோஜோவிச் 'பவுல்' செய்ய பிரான்ஸ் அணிக்கு 'பிரீ கிக்' வழங்கப்பட்டது. இதில் கிரீஸ்மேன் துாக்கி அடித்த பந்து குரோஷியாவின் மரியோ மாண்ட்ஜூகிச் தலையில் பட்டு 'சேம்சைடு' கோலானது. அப்போது மைதானத்தில் இருந்த குரோஷிய வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.


 21வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு கிடைத்த 'பிரீ கிக்' வாய்ப்பில் மாட்ரிச் அடித்த பந்தை விடா 'கோல்போஸ்ட்டுக்கு' மேலே அனுப்பி வீணடித்தார். ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் கிடைத்த 'பிரீ கிக்' வாய்ப்பில் மாண்ட்ஜூகிச் அடித்த பந்தை பெற்ற விடா, இவான் பெரிசிச்சிடம் 'பாஸ்' செய்தார். சிறிதும் தாமதிக்காத பெரிசிச் பந்தை கோலாக மாற்றிஇ 1-1 என சமநிலை பெறச் செய்தார்

ஆனால் இது நிலைக்கவில்லை. ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு கிடைத்த 'கார்னர்' வாய்ப்பில் கிரீஸ்மேன் துாக்கி அடித்த பந்தை குரோஷியாவின் பெரிசிச் கையால் தடுத்து வெளியே அனுப்பினார். இதற்கு பிரான்ஸ் வீரர்கள் 'மேட்ச் ரெப்ரியிடம்' முறையிட்டனர். அவர், உடனடியாக 'வி.ஏ.ஆர்.' தொழில்நுட்ப உதவியை நாடினார். இதில் 'ரெப்ரி', நடந்த சம்பவத்தை 'ரீப்ளே'யில் பார்த்து முடிவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 'ரீப்ளே'யில் பந்து கையில் பட்டுச் சென்றதை உறுதி செய்த 'ரெப்ரி' பிரான்ஸ் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு வழங்கினார். இதில் கிரீஸ்மேன் (38வது நிமிடம்) ஒரு கோலடித்தார்.


முதல் பாதி முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என முன்னிலை வகித்திருந்தது.
இரண்டாவது பாதியின் 48வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு அடுத்தடுத்து கிடைத்த 3 'கார்னர்' வாய்ப்புகளில் கோலடிக்கவிடாமல் பிரான்ஸ் அணியினர் சாமர்த்தியமாக செயல்பட்டனர். ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் கிரீஸ்மேன் 'பாஸ்' செய்த பந்தை பால் போக்பா கோலாக்க முயற்சித்தார். அதனை குரோஷியாவின் விடா தடுத்தார். அப்போது திரும்பி வந்த பந்தை போக்பா கோலாக்கினார். தொடர்ந்து அசத்திய பிரான்ஸ் அணிக்கு 65வது நிமிடத்தில் ஹெர்ணான்டஸ் 'பாஸ்' செய்த பந்தில் கிலியன் எம்பாப்பே ஒரு கோலடித்து 4-1 என முன்னிலை பெற்றுத் தந்தார். இந்நிலையில் 69வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பர் ஹியுகோ லோரிஸ் பந்தை உம்டிடியிடம் 'பாஸ்' செய்ய முயற்சித்தார். அப்போது அருகில் இருந்த குரோஷியாவின் மாண்ட்ஜூகிச் பந்தை தடுத்து கோலாக்கினார். தொடர்ந்து போராடிய குரோஷிய அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுஇ 2வது முறையாக (1998, 2018) கோப்பை வென்றது.


போட்டி துவங்குவதற்கு முன்இ கடந்த 2014ல் கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு கேப்டனாக இருந்த பிலிப் லாம்  சாம்பியன் கோப்பையை மைதானத்திற்குள் கொண்டு வந்தார்.
குரோஷியாவுக்கு எதிராக பிரான்ஸ் அணி 4 கோல் அடித்தது. இதன்மூலம் உலக கோப்பை கால்பந்து பைனலில்இ 48 ஆண்டுகளுக்கு பின்இ ஒரு அணி 4 கோல் அடித்துள்ளது. கடைசியாக கடந்த 1970ல் மெக்சிகோவில் நடந்த தொடரின் பைனலில் பிரேசில் அணி 4-1 எனஇ இத்தாலியை வென்றது.

பிரான்ஸ் அணிக்கு வழங்கப்பட்ட 'பெனால்டி' வாய்ப்புஇ உலக கோப்பை பைனலில் ஒரு அணிக்கு கிடைத்த 6வது 'பெனால்டி'. கடந்த 2006ல் இத்தாலிக்கு எதிரான பைனலில் பிரான்சின் ஜிடேன்இ 'பெனால்டி' மூலம் கோலடித்திருந்தார்.
உலக கோப்பை பைனலில் 'சேம்சைடு' கோலடித்த முதல் வீரரானார் குரோஷியாவின் மரியோ மாண்ட்ஜூகிச்.


Friday, July 13, 2018

குதூகலிக்கும் குரோஷியா இடிந்துபோன இங்கிலாந்து



ரஷ்யாவின் லூஸ்னிகி மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற உலகக்கிண்ண இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா இருதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. இங்கிலந்தின் வெற்றியைக் கடைசி நேரத்தில் தட்டிப் பறித்தது குரோஷியா

நட்சத்திர வீரர்கள், உலகக்கிண்ண வரலாற்று சாதனைப் பட்டியல் அச்சுறுத்தும் வீரர்கள் போன்ர எஅவையும் இல்லாத குரோஷியா உலகக்கிண்ன வரலாற்றில் சரித்திரம் படைத்தது. குரோஷிய வீரர்களில் சிலர் ஐரோப்பிய கிளப்களில் விளையாடுகிறார்கள். ஆனால், அவர்களுடைய சாதனைப் பட்டியலை பிரமிப்புடன் பட்டியலிட்டு யாரும் மிரட்டவில்லை. குரோஷிய வீரர்களைத் தமது கிளப்பில் இணைக்க வேண்டும் என சில கிளப் நிர்வாகங்கள் முடிவெடுத்திருந்தால் அது ஆச்சரியமான செய்தியல்ல


உதைபந்தாட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சிதறடித்து அதிர்ச்சியான முடிவுகள் பல இந்த உலகக்கிண்ணப் போட்டியில் அரங்கேறியுள்ளன. 28 வருடங்களுக்குப் பின்னர் இங்கிலாந்தும் 20 வருடங்களுக்குப் பின்னர் குரோஷியாவும் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. 1998 ஆம் ஆண்டு அரையிறுதிக்கு முன்னேறிய குரோஷியா, பிரான்ஸிடம் தோல்வியடைந்தது நெதர்லாந்தைத் தோற்கடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 333 ஆண்டுகளின் பின்னர் சம்பியனாகும் கனவுடன் இங்கிலாந்து குரோஷியா

வை எதிர்கொண்டது. முதலாவது சம்பியன் கனவை நிஜமாக்க குரோஷியா களம் இறங்கியது
போட்டி ஆரம்பிப்பதற்கான விசில் ஊதப்பட்டதும் இங்கிலாந்து வீரர்கள் குரோஷியாவின் பகுதியை ஆக்கிரமித்தனர். குரோஷிய வீரர்கள் பதிலடி கொடுத்து விளையாடினர். 5 ஆவது நிமிடத்தில் கிடைத்த 'பிரீ கிக்'கை இங்கிலாந்தின் டிரிப்பியர் அடித்தார். அந்தரத்தில் பறந்த பந்துகுரோஷியாவின் கோல் கம்பத்துள் புகுந்தது. இங்கிலாந்து ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு விண்ணைத் தொட்டது. பதில் கோல் அடித்து சமப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் விரயமாகின.


உலகக்கிண்ண நொக் அவுட் தொடரில் டேவிட் பெக்காமிற்கு (2006) பிறகு 'பிரீ கிக்கில்' கோல் அடித்த இங்கிலாந்து வீரர் ஆனார் டிரிப்பியர். 14வது நிமிடம் கோர்னர் வாய்ப்பில் மாகுய்ரே தலையால் முட்டிய பந்து கோல் போஸ்ட்டுக்கு சற்று வெளியே சென்றது. 19, 32வது நிமிடங்களில் பெரிசிச், ரெபிச் எடுத்த கோல் முயற்சிகள் வீணாக முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.


இரண்டாவது பாதியில் குரோஷிய வீரர்கள் எழுச்சி பெற்றனர். எப்படியும் சமன் செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அடுத்தடுத்து கோல் ஏரியாவை முற்றுகையிட்டனர். போட்டியின் 63 ஆவது நிமிடம் பெரிசிச் அடித்த பந்தை இங்கிலாந்தின் வாக்கர் தலையால் முட்டி வெளியே தள்ளினார். 68 ஆவது நிமிடத்தில் வஜல்ஸ்கோ அடித்த பந்தை பெற்ற பெரிசிச் முன்னால் இருந்த இங்கிலாந்து வீரரின் தலைக்கு மேலாக இடது காலை நீட்டி பந்தை உதைத்து கோல் அடிக்க 1-1 என சமன் ஆனது.


72வது நிமிடம் பெரிசிச் அடித்த பந்து கோல் போஸ்ட்டில் பட்டு திரும்பஇ இங்கிலாந்து கண்டம் தப்பியது. இருப்பினும் மீண்டும் முன்னிலை பெற இங்கிலாந்து வீரர்கள் எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. இதனால் போட்டி 1-1 என சமனில் முடிந்தது.

வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி கூடுதல் நேரத்துக்கு (30 நிமிடம்) சென்றது. இதன் முதல் பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (105+ 2வது நிமிடம்) பெர்சிச் கொடுத்த 'பாசை' பெற்ற மாண்ட்ஜூகிச் கோல் அடிக்க முயன்றார். இங்கிலாந்து கோல்கீப்பர் பிக்போர்டு காலால் தடுக்க மீண்டும் தப்பியது இங்கிலாந்து. கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதியில் மீண்டும் மிரட்டியது பெரிசிச், மாண்ட்ஜூகிச் ஜோடி. இம்முறை 'ரிவர்ஸ் ஹெட்' முறையில் பெரிசிச் தலையால் முட்டிய பந்தை வாங்கிய மாண்ட்ஜூகிச் கோல் அடித்து மிரட்ட இங்கிலாந்து மீள முடியாத சோகத்துக்கு சென்றது. முடிவில் குரோஷிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக்கிண்ண வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.


ஒரு கோல் அடித்த இங்கிலாந்து வீரர்கள் தடுப்பாட்டத்திலும் நேரத்தைக் கடத்துவதிலும் நேரத்தைச் செலவிட்டனர். குஷோஷிய வீரர்கள் வெற்றி பெற வேண்டும் எனும் ஓர்மத்தில் விளையாடினர். அவர்களின் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது.கூடுதல் நேரத்ஹ்டில் இரண்டாவது பாதி ஆட்டத்தில் குரோஷிய வீரர்களின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாது இங்கிலாந்து வீரர்கள் திணறினார்கள்.


மூன்றுநொக் அவுட் போட்டிகளிலும் குரோஷியாவின் விளையாட்டு ஆச்சரியமளித்தது. குரோஷியாவுடன் மல்லுக்கட்ட வேண்டிய நிலைக்கு பிரான்ஸ் தள்ளப்பட்டுள்ளது. உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தில் 'ரவுண்டு-16' (0-1), காலிறுதி (0-1),அரையிறுதி (0-1) என மூன்று நொக் அவுட்' போட்டிகளிலும் முதலில் பின் தங்கி இருந்து பிறகு மீண்டு வந்து வெற்றி பெற்ற முதல் அணியானது குரோஷியா.


தவிர உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு அணிகளின் வரிசையில் 13வதாக இணைந்தது குரோஷியா. உலககிண்ண அரையிறுதி போட்டியில் 1-0 என முன்னிலையில் இருந்த 17 அணிகள் வெற்றி பெற்றன. இத்தாலி மட்டும் 1990ல் ஆர்ஜென்டினாவிடம் 'பெனால்டியில்' தோற்றது. தற்போது இங்கிலாந்து அணி இரண்டாவதாக இணைந்தது.


இங்கிலாந்து (1990), பெல்ஜியம் (1986) அணிகளுக்குப் பிறகு ஒரே உலககிண்ணத் தொடரில் 3 போட்டிகளில் கூடுதல் நேரத்தில் விளையாடிய அணியானது குரோஷியா அரையிறுதியில் கூடுதல் நேரத்தில் வெற்றி பெற்ற நான்காவது அணியானது குரோஷியா. இதற்கு முன் ஹங்கேரி (1954, உருகுவே), இத்தாலி (1970-மேற்கு ஜெர்மனி, 2006-ஜெர்மனி) அணிகள் இப்படி வென்றன. தவிர அரையிறுதியில் பின் தங்கி இருந்து பிறகு வெற்றி பெற்ற 7வது அணி என்ற பெருமையும் பெற்றது. இங்கிலாந்து அணி 1968, 1996 (யூரோ), 196, 1990, 2018 (உலக கோப்பை) என முக்கிய தொடர்களில் 5 முறை அரையிறுதியில் பங்கேற்றது. இதில் 1966 தவிர மற்ற நான்கிலும் தோற்றது. 1998 ஆம் ஆண்டு உலகக்கிண்ண அரையிறுதியில் குரோஷிய அணி பிரான்சிடம் 1--2 என வீழ்ந்தது. 20 ஆண்டுகள் கழித்து இம்முறை இரு அணிகளும் வரும் 15ம் திகதி இறுதிப் போட்டியில் மோதுகின்றன. பிரான்ஸ் (1998), ஸ்பெயின் (2010) அணிகள் முதன் முறையாக இறுதிப் போட்டியில் விஐயாடி சம்பியனாகின இந்த வரிசையில் குரோஷியாவும் (2018) சாதிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது
.


விரல்கள் மீட்டிடும் வேளையில்....


மனித வாழ்வுடன் இரண்டறப்பிணைந்திருப்பது இசை. தாலாட்டில் ஆரம்பித்து ஒப்பாரியில் முடியும் மனித வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களின் மனித வாழ்வை வளப்படுத்தும் காரணியாக இசை இருக்கிறது. கோயில் திருவிழாக்கள் மூலம் நாதஸ்வரம்,தவில்,உடுக்கு,பறை போன்றவற்றை ரசிக்க நாம் பழகிவிட்டோம். இசைக்கச்சேரிகள் வாயிலாக வயலின்,மத்தளம்,கடம்,கெஞ்சிரா போன்றவற்றையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டோம்.

வீணை என்னும் அற்புதமான இசைக்கருவியின் ரசனை எமக்கு எட்டாத்தூரத்திலேயே இருந்தது. வீணை பாலசந்தர், சிட்டி பாபு போன்றவர்களின் வீணாகானத்தை இசையை பற்றித் தெரிந்தவர்கள் மட்டும் தான் ரசித்தார்கள். பக்திப் பாடல்களும் சினிமாப் பாடல்களும் வீணை இசையை நமது அருகில் கொண்டுவந்தன. ராஜேஸ் வைத்யா என்ற அற்புதமான கலைஞனின் கையில் வீணை  சென்ற பின்னர் தான், அதற்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.

வதிரி சைவசமய பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் வதிரி டைமன் மைதானத்தில் ராஜேஸ் வைத்யாவின் “வீணையின் ராகங்கள்” எனும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. வீணையின் இசையை ரசிக்க அதிகமானவர்கள் வருவார்களா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் பலருடைய மனதிலும் ஏற்பட்டது. நிகழ்ச்சி ஆரம்பமாகி முடியும்வரை வீணையின் லயத்தில் மூழ்கிக் கிடந்த ரசிகர்களின் அங்கீகாரம்  அதனை சிதறடித்தது.

  வாதாபி கணபதி எனும் விநாயக வணக்கத்துடன் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது.  வாதாபி கணபதி எனச்சொல்லிவிட்டுத்தான் நிகழ்ச்சியை ஆரம்பித்தார். அடுத்து என்ன பாடல் எனச்சொல்லமாட்டேன் நீங்களே கண்டு பிடியுங்கள் என ரசிகர்களுக்கு சவால் விட்டார். இரண்டாவது பாடலுக்காக வீணையில் அவரது கரங்கள் நர்த்தனமாடியபோது, ”ஜனனி ஜனனி ஜகம் நீ” என ரசிகர்களின் வாய் முணுமுணுத்தது.  ”கல்லானாலும் திருச்செந்தூரின் கல்லாவேன்” அது ரிஎம் எஸ்ஸின் குரல் போலவே ஒலித்தது. “சின்னஞ்சிறு பெண்போல” சீர்காழியில் குரல்   நெஞ்சை வருடியது.   இடையில் உள்ள வரியில் இருந்துதான் பாடல் ஒலிக்க்கும். ரசிகர்கள் உடனே கண்டுபிடித்துவிடுவார்கள்.

” என் மனவானில் சிறகை விரிக்கும்.......” எனும் பாடலுடன் சினிமாப் பாடல்கள் ஆரம்பமானது. அந்தக் கிறக்கத்தில் இருந்து மீழ்வதற்கிடையில் “அத்தான்ன்ன் என் அத்தாதாதான்......”  ஒரு இளம் பெண் தன்னுடைய காதலனைக் கூவி அழைப்பதைப்போல இருந்தது.  அந்தக்காதல் போதையில் இருக்கும்போதே “சித்திரம் பேசுதடி என் ....”  என ரசிகர்களின் சிந்தனையைத் திருப்பினார் ராஜேஸ் வைத்யா.  சிந்தை சிதறிய வேளையில் “உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல....”  என யாரையோ தேட வைத்தார். பழைய பாடல்கள் அனைத்தையும் சிறுவர்களும் முணுமுணுத்தனர்.

தென்றல் வந்து தீண்டும் போது.... அந்தத் தென்றலே ஒரு கணம் நின்று ரசித்தது. “மலரே மெளனமா......  வை மெளனமாக ரசித்துக்கொண்டிருக்கும் வேளையில்  திடீரென அதற்குள்  “முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்  எனும்  பாடலைப் புகுத்தினார். “வெண்ணிலவே வெண்ணிலவே யன்னல் தாண்டி .,,........சபையைக் கட்டிப்போட்டது.

கண்ணுக்குமை எழுது,சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி,ராஜ ராஜ சோழன் நான், சுந்தரி கண்ணால் ஒரு சேதி,வெள்ளைப்புறா ஒன்று ஆகிய பாடல்கள் ராஜேஸ் வைத்யாவின் விரல்களால் தேனருவியாகப் பாய்ந்தது.

மண்ணில் இந்த காதலன்றி, ஓ ரசிக்கும் சீமானே, பார்த்த ஞாபகம் இல்லையோ, நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான், செந்தமிழ் தேன் மொழியாள் ஆகிய பாடல்களைத்  தொடர்ந்து இடை விடாது மீட்டி ரசிகர்களைப் பரவசப் படுத்தினார்.

ராஜேஸ் வைத்யாவுடன் இணைந்த பக்க வாத்தியக் கலைஞர்களும் அவருக்கு ஈடுகொடுத்து இசை நிகழ்ச்சியை உச்சத்துக்குக்கொண்டு போனார்கள்.மிருதங்கம் மோகனராமன்,தபேலா சந்திரஜித், கடம் சாய்ஹரி,ஓகன் விஜயன்,சிறப்பு சப்தம் சுப்பிரமணியம் ஆகியோர் இசையாலும் உடல் மொழியாலும் ரசிகர்களைக் கிறங்க வைத்தனர்.
 37 பாடல்கள் ராஜேஸ் வைத்யாவின் விரல்களில் இருந்து ஒலித்தன. சுமார் மூன்றரை மணித்தியாலம் போனதே தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் நீடித்திருக்கலாம் என்ற  எண்ணத்துடன் மனமில்லாமல் ரசிகர்கள் மெதுவாகக் கலைந்தனர்.

 டைமன் மைதானத்தில்  உள்ளக அரங்கைப் போன்று கனகச்சிதமாக அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. ஒலி,ஒளி என்பன மெருகூட்டின. ராஜேஸ் வைத்யாவுக்கான பிரத்தியேக வரவேற்புப்பாடல், அதற்கான நடனம் என்பனவற்றுடன் இசை நிகழ்ச்சி அமர்க்களமாக ஆரம்பமானது.
நாட்கள்,மாதங்கள், வருடங்கள் பல கடந்தாலும் வீணையின் ராகங்கள் மனதை விட்டு அகலாது.
ரமணி
ஞாயிறு தினக்குரல்
10/ ஜூன்/ 2018

Wednesday, July 11, 2018

மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது பிரான்ஸ்


ரஷ்யாவின் சென்[பீற்றர் பாக்கில் நடைபெற்ற   உலகக்கிண்ண உதைபந்தாட்ட முதலாவது அரை இறுதிப்  போட்டியில் பெ;ல்ஜியத்துடன் மோதிய பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. 1998, 2006 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் விளையாடிய பிரான்ஸ் 1998 ஆம் ஆண்டு  சம்பியனாகியது. 20 வருடங்களின் பின்னர் பிரான்ஸ் சம்பியனாகும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  1998 ஆம் ஆண்டு தாய்நாட்டில் நடைபெற்ற  உலகக்கிண்ணப்போட்டியில் பிறேஸிலை 3-0 என்ற கோல் கணக்கில்  வென்ற  பிரான்ஸ் சம்பியனாகியது.  2006 ஆம் ஆண்டு    ஜேர்ர்மனி    நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெனால்ரியில் இத்தாலியிடம் தோல்வியடைந்தது ஐரோப்பியக் கண்டம் பிரான்ஸுக்க்  வெற்றியைப் பெற்றுக்கொடுக்கும் என்ற ரசிகர்களிடம்  உள்ளது. பிரான்ஸை எதிர்த்து விளையாடப் போவதும் ஐரோப்பிய நாடுதான் என்றமும் ரசிகர்களிடன் இருக்கிரது. முன்னதாக ஐரோப்பிய நாட்டிடம் தான்  இறுதிப் போட்டியில் பிரான்ஸ் தோல்வியடைந்தது.

 பிரான்ஸ் , பெல்ஜியம் ஆகியவற்றுக்கு இடையே நடைபெறப்போகும் போட்டியில் பெல்ஜியம் வெற்ரி பெறும் என்றே ரசிகர்கள் பதிவிட்டனர். போட்டி நடைபெறுவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் 50க்கு 50 வெற்றி என  ஃபீபாவில் ரசிகர்கள் கருத்திட்டனர். முடிவை அரிவதற்கு பெலான்ரிவரை காத்திருக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

பெல்ஜியத்தின் தாக்குதலும் தற்பாதுகாப்பும் எதிரனிக்கு அச்சுறுத்தலக் கொடுக்ககூடியவை. பிரான்ஸும் அதேபோன்றுதான்.  பிரான்ஸ் ஒரு கோல் அடித்துவிட்டால் தற்பாதுகாப்பில் அதிக  கவனம் செலுத்தும். சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னொரு கோல் அடித்துவிடும். முன்கள, பின்கள, நடுக்கள வீரர்கள் ஆக்ரோஷமாக ஓடி விளையாடினாலும் இரண்டு கோல் கீப்பர்களின் வேகம்,விவேகம், துடிப்பு ஆகியன கோல் இல்லாமல் தவிர்த்தன. பிரான்ஸ் கோல் கீப்பர் ஹூகோ லோரிஸ், பெல்ஜியம் கோல் கீப்பர் கோட்வா  இந்தப் போட்டியின் ஹீரோக்கள். போட்டி ஆரம்பமான 10 நிமிடங்களில் கோல் அடிக்கும் சந்தர்ப்பங்களை  பிரான்ஸ் வீரர்கள் தவறவிட்டனர்.  இதே போன்று பெல்ஜியம் வீரர்களின் முயற்சிகளும் கோலாகவில்லை.

முதலாம் நிமிடத்திலேயே கிலியான் பாப்பே  மிரட்டினார்.
 4 ஆவது நிமிடத்தில் டிபுருய்ன் அடித்த ஷாட் ஒன்று கோலிலிருந்து 6 அடியிலிருந்த ‘ப-வுக்குள் செல்ல பவார்ட் அதனை அபாய இடத்திலிருந்து நகர்த்தினார்.

6 ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்தின் ஹசார்ட் அடித்த பந்தை பிரான்ஸின் டீட்டி தடுத்ததால் கோனர் கிடைத்தது.

 15 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரரிடமிருந்து பந்தைப் பறித்த விட்செல் பந்தை டிபுருய்னுக்கு அனுப்ப காண்ட்டேயைத் தாண்டி லுகாகுவுக்கு கொடுத்தார். பந்து சென்ற இடத்தில் லுகாலு இல்லை.
19 ஆவது நிமிடத்தில் மீண்டும் பெல்ஜியம்  


21 ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்தின் டிபுருன்ய் கோல் கம்பத்தை நோக்கி அடித்த பந்து கோனராகியது.   அடிக்கப்பட்ட கோனர் ஆல்டர்வெரியெல்டுக்கு பின்னால் விழ அவர் திரும்பி 14 அடியிலிருந்து கோல்கம்பத்தை  நோக்கி அடித்தார்.  பெல்ஜிய ரசிகர்கள் உற்சாகமாக எழுந்து கோலை எதிர் பார்த்து ஆர்ப்பரித்தனர். ஆனால் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அதனை அபாரமாகத் தடுத்தார். பெல்ஜிய ரசிகர்கள் ஏமாற்றமடைந்த
னர். இது பெல்ஜியத்துக்கு பறிபோன முதல் கோல் சந்தர்ப்பமாகும்.
28 ஆவது நிமிடத்தில் பெல்ஜியத்தின்  ஸ்டார் டிபுருய்ன் கோல் நோக்கி அடித்தார்  ஆனால் டீட்டி அதனை தடுத்து விட்டார்.

ஒவ்வொரு நிமிடமும் பதற்றமானது. இரண்டாம் பாதி ஆட்டத்தின் 51 ஆவது நிமிடம் பிரான்ஸுக்கு கோனர் வாய்ப்பு வந்தது. கிரீஸ்மேன் கோனரை அடித்தார். மேலே எழும்பிவந்த பந்தை நோக்கி இரண்டு அணி வீரர்களும் பாய்ந்து  எழும்பினர். ஃபெல்லானியின் தலையில் பட்ட பந்து கோல் வலையில் முட்டியது. பிரான்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.1-0. என பிரான்ஸ்  முன்னிலையானது.

 போட்டி முடியும் வரை இரண்டு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சி செய்தனர். எவையும் பலனளிக்கவில்லை. பதற்றத்தில் இரண்டு வீரர்களும் செய்த தவறுகளால் கோல் அடிக்கும் சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டன.
  60% சதவிகித பொசஷன், 594 பாஸ்கள், 5 கோனர்,  கோலை நோக்கி அடித்த 9 ஷொட்களில் 3 ஒன்  டார்கெட் ஷாட்கள், 91% பாஸ் அக்யூரசி என ஆட்டத்தில் பெல்ஜியம் ஜொலித்தது


40% சதவிகித பொசஷன்,324 பாஸ்கள், 4 கோனர்,  கோலை நோக்கி அடித்த 19 ஷொட்களில் 5ஒன்  டார்கெட் ஷாட்கள், 86% பாஸ் அக்யூரசி என ஆட்டத்தில் பிரான்ஸ் பின்னிலையில் இருந்தாலும் வெற்றிபெற்றது என்னவோ பிரான்ஸ்தான்.

2016 யூரோ கிண்ண இறுதிப் போட்டியில் சொந்த மண்ணில் தோல்வியடைந்த பிரான்ஸ், அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகக்கிண்ண  இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இரண்டு ஆண்டு இடைவெளியில் ஃபீபா   இரண்டு பெரிய போட்டிகளின்  இறுதிப் போட்டியில் முன்னேறுவது என்பது  உதைபந்தாட்ட வரலாற்றில் சாதாரண சம்பவமல்ல. இதே சாதனையுடன் அடுத்த சாதனைக்கு தயாராக காத்திருக்கிறது பிரான்ஸ்.

Saturday, July 7, 2018

வெளியேறியது பிறேஸில் அரை இறுதியில் பெல்ஜியம்



உதைபந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்க்காத சம்பவம் கண்ணைமூடித் திறப்பதற்குள் நடந்து முடிந்து விட்டது. சம்பியனாகும் என எதிர்பார்த்த நாடுகள் ஒவ்வொன்றாக வெளியேற  பிறேஸில் இருக்கிறதே என ரசிகர்கள் கொண்டாடினார்கள். கஸான் ஸ்டேடியத்ஹ்டில் நடைபெற்ற  பெல்ஜியத்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 2-1 என்றகோல் கணக்கில் தோல்வியடைந்த பிறேஸில்  உலகக்கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறியது.

பிறேஸில் ,பெல்ஜியம் ஆகியன மோதிய இந்தப்போட்டி உலகக்கிண்ண வரலாற்றில் பேசப்படும்   போட்டியாக இருக்கப்போகிறது. உதை பந்தாட்ட அணிக்குத் தேவையான சகலதையும் நேர்த்தியாகக் கொண்டிருக்கும் பிறேஸிலின்  தோல்விக்கு பெல்ஜியத்தின் கோல்கீப்பர் கோர்ட்வா  மிக முக்கியமானவராக இருக்கிறார். அவரது கைகள் மந்திரக்கைகளா, ,மாயக்கைகளா அதிர்ஷ்டக் கைகளா எனத்  தெரியவில்லை. அவர் துடிப்பாகவும் வேகமாகவும் விவேகமாகவும் செயற்பட்டமையால் உலகக்கிண்ணத் தொடரில் அதிக கோல்கள் வாங்கிய அணியாக பெல்ஜியம் விளங்கி இருக்கும்.


இந்த உலகக்கிண்ணத் தொடரில் விளையடிய அனைத்துப் போட்டிகளிலும் பெல்ஜியம் வெற்றி பெற்றுள்ளது. பெல்ஜியத்தின் லுகாகு 4 கோல்களுடன் அதிக கோலடித்தோரில் 2வது இடத்தில் உள்ளார் ஜப்பானுக்கு எதிரான போட்டியில்  2-0 என பின்தங்கிருந்த நிலையில் இருந்து தொடர்ந்து மூன்று கோல்களை அடித்து அபாரமாக வென்றது பெல்ஜியம். ஆனால்,பிறேஸிலுக்கு எதிரான போட்டியில் அப்படியான  ஒரு வெற்றியைப் பெற முடியாது

போட்டி ஆரம்பித்ததும் இரண்டு நாடுகளின் ரசிகர்களும் உற்சாகமாகினர். கோல் அடிக்கும்  முனைப்பில் இரண்டு அணி வீரர்களும் பந்தைக் கடத்திச் சென்றனர். அவர்கள் கோல் அடிக்க செய்த முயற்சிகள் எவையும் வெற்றியளிக்கவில்லை.

பிறேஸில் வீரர்களான நெய்மர்,  மார்செலோ, தியாகோ சில்வா, வில்லியன், கொடினியோ  ஆகியோரின் பலமான ஷொட்கள் அவையும் கோலாகவில்லை. அவர்கள் அடித்த 10 ஷொட்கள் மிகவும் அபாரமானவை அவற்றை பெல்ஜியத்தின் கோல் கீப்பரான கோர்ட்வா,  பிடித்தும் தட்டியும் விட்டதால் பெல்ஜியம் வெற்றி பெற்றது.  பெல்ஜியத்தில் லுகாலு தன் பங்குக்கு பிறேஸிலின் பின் கள வீரர்களைத் திணறடித்தார்.
போட்டி தொடங்கிய  தொடங்கிய முதல் நிமிடத்திலிருந்தே பெல்ஜியத்தின் பொக்ஸ் பகுதியை பிறேஸில் வீரர்கள் முற்றுகையிடத் தொடங்கினர்.

. 8-வது நெய்மர் அடித்த கோர்னர் கிக்கை கோலாக தியாகோசில்வா முயற்சிக்க அது போடில் பட்டுத் திரும்பியது. அந்த அதிர்ச்சியில் இருந்து சில்வா மீள்வதற்கிடையில்   கோல்கீப்பர் பந்தைத்தட்டிவிட்டார்.

 13 ஆவது  நிமிடத்தில் பெல்ஜிய வீரர்  சாட்லி அடித்த பந்தைத் தடுக்க   பிறேஸில் வீரர் ஃபெர்னான்டினியோ முயற்சி செய்தபோது பந்து கோலானது. ஃபெர்னாண்டினியோவின் அந்த  ஓன் கோல்தான் பிறேஸிலின் தோல்விக்குக் காரணம் என்பதை யாரும் அப்போது உணரவில்லை


31  ஆவது   நிமிடத்தில் லுகாலு கொடுத்த பந்தை டி புருனே கோலாக்க  2-0  என பெல்ஜியம் முன்னில  பெற்றது.

36-வது நிமிடத்தில் பிறேஸிலின் மார்செலோ கொடுத்த பந்தை கெப்ரியல் ஜீஸஸ் அடித்த போது அது வெளியா போனது.  மார்செலோ தனக்குக் கிடைத்த பந்தை கொடினியோவிடன் அனுப்பினார் கொடினியோ அதை கோல் கம்பத்தை நோக்கி அடித்தார் கோல் கீப்பர் விரைந்து சென்று அதனைத் தடுத்தார்.

   76 ஆவது நிமிடத்தில் நெய்மர் கொடுத்த பந்தைப் பெற்ற  மாற்று வீரராகக் களம் இறங்கிய அகஸ்டோ ஹெட்டர் கோலாக்கினார். 2- 1என பிறேஸில் நெருங்கியது. போட்டி முடிவதற்கிடையில் இன்னும் ஒரு கோல் அடித்து விடலாம் என  பிறேஸில் வீரர்கள் முயற்சி செய்தனர்.
 91வது நிமிடத்தில் நெய்மரைத் துரத்திச்சென்ற மியூனியர் அவரின் கண்ணை மறைத்துத் தள்ளினார். பிறேஸில் வீரர்கள் பெனால்ரி   
94வது நிமிடத்தில் டக்ளஸ் கோஸ்டா வலது புறத்திலிருந்து வெட்டி உள்ளே கொண்டு வந்து நெய்மருக்கு பந்தை அனுப்  கோலின் வலது மூலையைக் குறிவைத்து அவர் அடித்த ஷாட்டை கோல் கீப்பர் கோர்ட்வா முழுதும் எம்பி விரல் நுனியால் தட்டி விட்டார்.


    2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பெல்ஜியம்,   1986-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அரை இறுதிக்குத் தகுதிபெற்றது பெல்ஜியம்
பெல்ஜியம் ரசிகர்களுக்கு இந்த உலகக்கிண்ணத் தொடரை மறக்க முடியாது. 2014-ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியிலும்  2016-ம் ஆண்டு யுரோ தொடரிலும்  பெல்ஜியம் காலிறுதியில் தோல்வியடைந்தது. ப். இந்த உலககிண்ணப் போட்டியில் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பெல்ஜியம் பதிவு செய்திருக்கிறது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக அரை இறுதியில்  பிறேஸில், ஆர்ஜென்ரீனா,ஜேர்மனி ஆகிய நாடுகள் இல்லாத முதலாவது அரை இறுதிப் போட்டி.

 பிறேஸில் வீரர் பெர்னாண்டோ 'சேம் சைட்' கோல் அடித்தார். இது  இத்தொடரில் 11வது 'சேம் சைட்' கோலாக அமைந்தது. இதன்மூலம்  அதிக 'சேம்சைடு' கோல் பதிவான தொடர்களின் வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.  பெனார்ண்டோ உலகக்கிண்ணப்போட்டியில் 100 ஆவது சேம் சைட்  கோலடித்த வீரராவார். இதுவரை 116 சேம் சைட் கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.
உலக கோப்பை தொடரில் 'சேம் சைட்' அடித்த 2வது பிறேஸில் வீரரானார் பெர்னாண்டோ. இதற்கு முன்  2014ல் மார்செலோ இந்த முறையில் கோல் அடித்திருந்தார்.

இதே மைதானத்தில்    ஜேர்மனி  , ஆர்ஜென்ரீனா,ஆகிய நாடுகல் தோல்வியடைந்து வெளியேறின.  இப்போது பிறேஸில் வெளியேறியுள்ளது.   பெரிய பெரிய அணிகளை குழிதோண்டிப் புதைக்கும் இடுகாடோ இந்த மைதானம்?உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் தொட்ர்ச்சியாக ஏழாவது முறையாக காலிறுதியில் விளையாடிய பிறேஸில் 2006, 2010 ஆம் ஆண்டுகளில்  காலிறுதியில் வெளியேறியது போன்று இம்முறையும்  காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது   சகல காலிறுதிப் போட்டிகளிலும் ஐரோப்பிய நாடுகளே பிறேஸிலை வெளியேற்றின.

பந்தைக் குறைந்த நேரம் வைத்திருந்த நாடுகளே  இந்த உலகக்கிண்னத் தொடரில் வெற்றி பெற்றுள்ளன. பிறேஸில் 24 முறையும் பெல்ஜியம் 11 முறையும் கோல் அடிக்க முயற்சி செய்தன. அவற்ரில் பிறேஸிலின் 10 முயற்சிகலையும் பெல்ஜியத்தின் 4 முயற்சிகளையும் கோல்கீப்பர்கள் தடுத்து விட்டனர்.