செüதாம்டண் நகரில்
சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில்
துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 8 விக்கெற்களை
இழந்து 224 ஓட்டங்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் அனைத்து
விக்கெற்களையு இழந்து 213 ஓட்டங்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தானை எளிதாக தோற்கடிக்கலாம் என களம் இறங்கிய இந்தியா தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தானின்
போராட்டம் கிரிக்கெற் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
இரு
அணிகளின் பிளேயிங் லெவனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணியில் காயமடைந்த
புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக முகமது ஷமி களமிறக்கப்பட்டார். ஆப்கானிஸ்தான் அணியில்,
நூர் அலி ஜத்ரான், தெளலத் ஜத்ரான் ஆகியோருக்குப் பதிலாக ஹஸ்ரத்துல்லா ஜஜாய், அஃப்தாப்
ஆலம் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்
லோகேஷ்
ராகுல்,ரோஹித் சர்மா ஆகிய வீரர்கள் களம் இறங்கினர். 5-ஆவது ஓவரில் ஒரு ஓட்டத்துடன் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார் ராகுலுடன் கோலி ஜோடி சேர்ந்தார் இந்த ஜோடி இந்திய
அணியை மீட்கும் என அநஎதிரபார்க்கப்பட்ட போதுப
30 ஓட்டங்களில் ராகுல் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் களம்
புக, மறுமுனையில் அரைசதம் கடந்தார் கோலி. இந்தக் கூட்டணி விக்கெட் சரிவை தடுத்தாலும்
ஓட்டங்களை விரைவாகச் சேர்ப்பதற்கு தடுமாறியது.29 ஒட்டங்களில் விஜய் சங்கர் ஆட்டமிழந்தார்.
31-ஆவது
ஓவரில்67 ஓட்டங்கள் எடுத்த கோலி ஆட்டமிழந்தார். டோனியுடன் கேதார் ஜாதவ் இணைந்தார்.
அடுத்து வந்த கேதார் ஜாதவ் சற்று நிலைத்து அரைசதம் கடந்தார். மறுமுனையில் 3 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்கள் அடித்த டோனி ஆட்டமிழந்தார். ஹார்திக் பாண்டியா
7, முகமது ஷமி 1 ஓட்டங்களில் ஆட்டமிழக்க ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக கேதார் ஜாதவ்
3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 52 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெற் இழப்புக்கு 224
ஓட்டங்கள் எடுத்தது இந்தியா. குல்தீப் யாதவ்,
ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தலா ஒரு ஓட்டத்துடன்
ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில்
முகமது நபி , குல்பதின் நயீப் ஆகியோர் இரண்டு விக்கெற்களையும் முஜீப் உர் ரஹ்மான், அஃப்தாப் ஆலம், ரஷீத் கான்,
ரஹ்மத் ஷா ஆகியோர் தலா ஒரு விக்கெற்றை வீழ்த்தினர்.
225
எனும் இலகுவான இலக்கை எதிர்கொண்டு துடுப்பெடுத்தாடிய
ஆப்கான் வீரர்கள் நிதானமக விளையாடினார்கள். இந்திய வீரர்கள் துல்லியமாக பந்து வீசி
கடும் நெருக்கடி கொடுத்தனர்.ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களானஹஸ்ரத்துல்லா 10 ஓட்டங்களிலும்,
கப்டன் குல்படின் நைப் 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.3-வது விக்கெற்றில் இணைந்த
ரமத் ஷாவும், ஹஸ்மத்துல்லா ஷகிடியும் கைகோர்த்து தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
26.3 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 100 ஓட்டங்களை எட்டியது. இந்த ஜோடி இந்தியாவை கலங்கடித்தது. ஜஸ்பிரித்
பும்ரா இந்த ஜோடியை வெளியேற்றினார். ஒரே ஓவரில் ரமத் ஷா 36 ஓட்டங்களுடனும், ஹஸ்மத்துல்லா
21ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.ஆப்கானீஸ்தானின் விக்கெற்கள் சீரான் இடைவெளியில் வீழ்ந்துகொண்டிருக்க
முகமது நபி அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அச்சுறுத்தினார்.
கடைசி
3 ஓவர்களில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 24ஓட்டங்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரில் முகமது
ஷமி 3 ஓட்டங்களும், 49-வது ஓவரில் பும்ரா 5 ஓட்டங்களும் விட்டுக்கொடுத்து கட்டுப்படுத்தினர்.
இதனால் கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பரபரப்பான
இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசினார். புல்டாசாக வந்த முதல் பந்தை
முகமது நபி பவுண்டரி அடித்து இந்திய ரசிகர்களை திகிலடையச் செய்தார். அடுத்த பந்தில்
ஒரு ஓட்டம் எடுக்கும் நிலை ஏற்பட்டது, ஆனால்
முகமது நபி ஓடவில்லை. 55 பந்துகளில் 55 ஓட்டங்கள்
எடுத்த முகமது நபி மூன் றாவது பந்தை
நபி தூக்கி அடிக்க பவுண்டரில் எல்லையில் நின்ற பும்ரா பிடித்து ஆட்டமிழக்கச்செய்தார்.முகமது
நபி ஆட்டமிழந்ததும் இந்தியாவின் வெற்றி உறுதியானது.
அப்தாப்
ஆலம், முஜீப் ரகுமான் இருவரும் முகமது ஷமியின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெற்களை
இழக்க முகமது ஷமியின் ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாதனையோடு இந்திய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
திரில் வெற்றியை பெற்றது. ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து
213 ஓட்டங்கள் எடுத்தது.5-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணிக்கு இது 4-வது வெற்றியாகும்.
ஆப்கானிஸ்தான் சந்தித்த 6-வது தோல்வியாகும். பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மொத்தம்
152 பந்துகளில் இந்திய வீரர்கள் ஓட்டமெடுக்கவில்லை. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில்
முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களை முழுமையாக ஆடிய ஆட்டங்களில் 2010-ம் ஆண்டுக்கு
பிறகு இந்தியாவின் குறைந்த ஒட்ட எண்ணிக்கை இதுதான்.
பொதுவாக இங்கிலாந்து மீடியம் பாஸ்ட் பவுலர்களுக்கு
ஏற்ற பிட்சுக்கள் கொண்டது. இதில் சில பிட்க்கள் முழுக்க முழுக்க பந்துவீச்சுக்கு சாதகமாக
இருக்கும். சில பிட்சுக்கள் ஸ்லோ பால் பிட்சுக்கள் ஆகும். இந்தியா ஆப்கானிஸ்தான் விளையாடிய
ரோஸ் பவுல் மைதானம் அப்படிப்பட்ட ஸ்லோ பால் பிட்சுகளை கொண்டதுதான். இந்த பிட்சுக்கள்
ஸ்பின் பவுலிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்துகளை இங்கு கணித்து விளையாடுவது கடினம். மிக
தாமதமாக பந்து ஸ்விங் ஆகும். இந்த பிட்சில் அதிரடியாக ஆடுவது என்பது மிக மிக கடினம்.
இதனால்தான் கோலியும், ரோஹித் சர்மாவும் கூட ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சில் தடுமாறினார்கள்.
அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைச் சமாளித்தவர்கள் கூட இவர்களிடம் மண்டியிட
இது முக்கியமான காரணம் ஆகும்.
இதற்கு
முன் டோனி ஒரே ஒருமுறைதான் இப்படி ஸ்டம்பிட் ஆகி இருக்கிறார். 2011 உலகக் கிண்ணப் போட்டியில்
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இப்படி அவர் அவுட்டானார். மொத்தம்
293 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள டோனி இரண்டு முறை மட்டுமே இப்படி அவுட்டாகி
உள்ளார் என்பது ஆச்சர்யமான விஷயம்.
ஆப்கானிஸ்தானுக்கு
எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 'ஹாட்ரிக்'
சாதனை படைத்தார். இந்திய அணி, 11 ஒட்ட வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இப்போட்டியில் 50வது ஓவரை வீசிய இந்தியாவின் முகமது ஷமி, 3, 4, 5வது பந்தில் முறையே
ஆப்கானிஸ்தானின் முகமது நபி, அப்தாப் அலாம், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரை அடுத்தடுத்து
ஆட்டமிழக்கச்செய்தார்.. இது, இந்த சீசனில் பதிவான முதல் 'ஹாட்ரிக்' விக்கெட்.
*
தவிர 32 ஆண்டுகளுக்கு பின், உலகக் கிண்ணப்போட்டியில் இந்தியா சார்பில் 'ஹாட்ரிக்' சாதனை பதிவானது.
கடைசியாக 1987ல் இந்தியாவின் சேட்டன் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 'ஹாட்ரிக்'
விக்கெட் கைப்பற்றினார்.
*
தவிர இது, உலகக் கிண்ண அரங்கில், பதிவான 10வது 'ஹாட்ரிக்'. இதனை 9 பந்துவீச்சாளர்கள் நிகழ்த்தினர். இலங்கையின் மலிங்கா,
2 முறை (2007ல் எதிர்: தென் ஆப்ரிக்கா, 2011ல் எதிர்: கென்யா) இச்சாதனை படைத்தார்.
பாகிஸ்தானின்
சக்லைன் முஸ்தாக் (1999, எதிர்: ஜிம்பாப்வே), இலங்கையின் வாஸ் (2003, எதிர்: பங்களாதேஷ்),
அவுஸ்திரேலியாவின் பிரட் லீ (2003, எதிர்: கென்யா), வெஸ்ட் இண்டீசின் கீமர் ரோச்
(2011, எதிர்: நெதர்லாந்து), இங்கிலாந்தின் ஸ்டீவன் பின் (2015, எதிர்: ஆஸி.,), தென்
ஆப்ரிக்காவின் டுமினி (2015, எதிர்: இலங்கை), இந்தியாவின் ஷமி (2019, எதிர்: ஆப்கானிஸ்தான்)
தலா ஒரு முறை இச்சாதனையைப் படைத்தனர்.